Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் தனிய வீட்டில நிம்மதியா இருக்கலாம் என்டு தனிய போட்டு வா என்றால் நீயும் வா என்று அடம் பிடிக்கிறது. பின்பு தனிய போக ஏலாமல் இருக்கு என்று புறுபறுக்கிறது.??

  • Replies 85
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலக்கட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரைத்தவிர மற்றைய பெண்கள் அனைவரும் தம் ஆளுயைுடன் மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கவும் செயற்படவும்  தம் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தம் பிள்ளைகளுக்கு நல்ல முன் உதாரணமாகத் திகழவும் செய்கிறார்கள். நாங்களாக சில பொறுப்புக்களை விரும்பி (உதாரணமாக என்னை எடுத்துக் கொண்டால் என் பேரக்கழந்தையை பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் விட மனம் ஒப்பாமல் நானாக என் வேலையிலிருந்து விலகி வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிக்கிறேன். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. எம் தாய்மை உணர்வு மட்டுமே) எம் மன விருப்பத்தின் படி நடக்க இந்த நாட்டில் போதிய வசதிகள் உண்டு. எம் பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு. நாம் வளர்ந்த முறை வேறு. மொத்தத்தில் பெண்கள் மிகவும் சிறந்த முறையில் தம் வாழ்க்கையை கொண்டு செல்ல இன்றைய ஆண்களு;ம் ஒத்துழைக்கிறார்கள். எம் நாட்டில் சுமே சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் இங்கு அது நடைமுறையில் இல்லை என்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஊர்ல இருக்கும் போதே அப்ப நாங்கள் சின்ன பிள்ளைகள். என்ட அம்மா சித்தியை வெளி நாட்டுக்கு அனுப்புவதற்காக எங்களை தனியே அப்பாவுடன் விட்டு, விட்டு சித்தியை கூட்டி கொண்டு கொழும்புக்கு போனவ...தனியே இரு பெண்கள் மாத்திரம் கொழும்பில் விடுதியில் தங்கி இருந்தார்கள்.

அப்பா தான் சமைத்து ,எங்களையும் பார்த்துக் கொண்டார்...அம்மா வந்த பின் அப்பாவின் சாப்பாடு அம்மான்ட சாப்பாடை விட டேஸ்ட் ஆக இருப்பதாக சொன்னோம்...அம்மாவிற்கு அதைக் கேட்டதும்  கோபம் வந்தது...அதனால் தான் தமிழினி போன்ற அம்மாமார் தகப்பன்களிடம் குழந்தைகளை விட்டு செல்ல பயப்பிடினமோ?

அந்த காலத்திலேயே பல பெண்கள் ஏஜென்சி மூலம் கணவரையும்,குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு வெ.நாடு வந்துள்ளார்கள்.

விடுமுறை என்று பார்த்தால் இங்கு கணவர் இல்லாமல் தனியே குழந்தைகளோடு இருக்கும் பெண்கள் விடுமுறைக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள் ....நான் நினைக்கிறேன் இந்தியாவிற்கு பெண்கள் தனியாய் போவது தான் ஆபத்து.

எத்தனையோ திருமணமான பெண்கள் தனிய நண்பிகளுடன் சேர்ந்து டூர் போய் இருக்கினம்...அவுசில் இருந்து ஜரோப்பா,லண்டன் டூர் அடித்த பெண்களும் இருக்கினம்.

டீசண்டான ஹொட்டலை புக் பண்ணி, எங்கட பாட்டில குடிக்காமல்,கும்மாளம் அடிக்காமல் ஊரை மட்டும் சுத்திப் பார்த்தால் ஒரு  பிரச்சனையும் இல்லை....அதையும் மீறி ஏதாவது நடந்தால் கொஞ்சசப் பேர் அதுவும் முக்கியமாய் பெண்கள் தான் தனியாய் போய் இவர்களுக்கு என்ன நடந்தது பார் எனக் கொசிப் கதைப்பார்கள் 

ஆண்களோட போவதில் ஒரு நன்மை என்ன எண்டால் அந்த ஆண்கள் கோழையாய் இருந்தால் கூட ஒருத்தரும் பயத்தில வாலாட்ட மாட்ட்டார்கள் என்று நினைப்பது தான் 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2018 at 8:53 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

முதலில்  நம்ம  மச்சானை  தனியாக  அனுப்புகிறீர்களா?

(என்  தங்கைக்கு  தனியாக போகும் ஆசை  வந்து  விட்டடது  சரி. அண்ணாக  அனுமதிக்கலாம்

அதற்கு  முன் ஒரு  கேள்வி உங்கள் பெண்  பிள்ளைகளை  இவ்வாறு  நீங்கள்  அனுமதிக்கின்றீர்களா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 3:32 PM, தமிழினி said:

வணக்கம் சுமே அக்கா.

நாம் என்ன தான் வெள்ளைகள் செய்கிறார்கள் என்று முயற்ச்சி செய்தாலும் நாம் நம் கலாச்சாரம் அன்பு பாசம் என்பது எம்மோடு கூடபிறந்தது. எம்மால் அவர்களை போல் குடும்பத்தை விட்டு விட்டு தனியா மகிழ்வாக இருக்க முடியல.
இனி போவதென்றால் பிள்ளைகள் 16 தாண்டியபின்பு தான் போவது என்று முடிவெடுத்து திரும்பிவந்தோம் :)

ஆனால் எனக்கு தெரிந்து பல வீடுகளில் பெண்கள் விரும்பினாலும் ஆண்கள் அனுமதிப்பதில்லை என்பது உண்மை. அதற்கு முதல் காரணம் எமது நாட்டு வளர்ப்பு முறை. சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு கொடுத்து வளர்ப்பதில்லை அதைப்பார்த்து வளரும் ஆண்கள் அதையே தமது திருமணத்தின் பின்பும் பின்பற்றுகின்றார்கள். ( நான் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை :) ).

நீங்கள் குறிப்பிடுவதுபோல் சிலர் சேர்ந்து போனாலும் எங்கள் மனம் விடுவதில்லைத்தான். ஆனாலும் நான் கூறுவது வளர்ந்த பிள்ளைகள் இருப்பவர்களைப்ற்றி. பல ஆண்கள் இன்னும் மாறாமலே இருக்கிறார்கள். சிலர் தன்னைப்போல் மனைவியையும் சுதந்திரமாக உணரவிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 4:57 PM, Maruthankerny said:

கேள்வி என்னமோ நியாமானது என்றாலும் ......
பதில் ஒரு வரியில் எழுத கூடியதில்லை.

எனக்கு பெண் சகோதரர்கள் இருக்கிறார்கள் 
ஒரு வீட்டிலேயே வளர்ந்தோம் ஒரே அப்பா ஒரே அம்மா 
நான் 15 வயதிலேயே வீட்டை  விட்டு வெளிக்கிட்டு விட்டேன் 
பின்பு வந்து வந்து போவது ..... போய் போய் வாறது 
என்ற மாதிரி இருக்கும்போது கூட என்னை அம்மாவோ அப்பாவோ 
எதுவும் கேட்பதில்லை.
பின்பு இந்திய இராணுவம் போர் தொடங்கியபின்பு ... நான் எங்காவது 
சென்றுவிட்டு திரும்பாது இருந்தால் ... அம்மா கொஞ்சம் பரபரப்பாக 
இருப்பதை அவதானிக்க தொடங்கினேன் ... அதன் பின்பு எங்கு போனாலும் 
இங்கு போகிறேன் எப்போது வருவேன் என்று சொல்லிவிட்டு போவதுண்டு.

இதே சுதந்திரம் எனது சகோதரர்களுக்கு இருந்ததா என்றால் இல்லை 
பள்ளி முடிந்து..... வந்தால் டியூசன்..... முடிந்து வந்தால் வீடு. இப்படித்தான் 
இருந்தார்கள். 

இரு வேறு பாரிய வேறுபாடு இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் யாரை கை நீட்டுவது என்பதில்தான் பிரச்சனை.

பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டும் எண்ணம் பெற்றோரிடம் இருக்கவில்லை 
வெளியில் திரிய வேண்டும் எனும் எண்ணம் பெண் பிள்ளைகளிடமும் இருக்கவில்லை 
அப்படி திரிந்தால் ........... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூகத்திடம் இருக்கவில்லை.
அதையும் மீறி திரிய போய் .... போனவராக திரும்பிய பெண்கள் யாரையும் எனக்கு தெரியாது.
ஒன்று காணவில்லை என்று இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .... அல்லது அப்பாவை 
தெரியாத பிள்ளைகளுடன் அல்லல் படுகிறார்கள். 

யார்? ஏன் ? எங்கு ? எப்போது ?
என்பதுதுக்கான விடையை தேடுதல்தான் புரிந்துணர்வுக்கும் பக்குவத்துக்கும் 
உள்பட்ட்து. ஆண்கள் திரிகிறார்கள் என்றால்.........  
என்றுவிட்டு திரிய வெளிக்கிட்ட மேலை நாடுகளில்தான் இன்று மீ டூ ( )
அமைப்பு முழு வீச்சாக எழும்புகிறது? 

ஒரு பெண் தாய் ஆகும்போது அவளுக்கு ஒரு ஆன் பிள்ளை பிறக்கும்போது 
ஒரு வேளை ..... தனது முன்னை நாள் ஆச பாசங்கள் அடக்கு முறைகளை சொல்லி வளர்த்தால் 
பின்னாளில் ஆண்கள் பக்குவ படுவார்களோ தெரியாது ....... 
நடைமுறையில் .... ஆண் பிள்ளைக்காகவே காத்தருந்த மாதிரி நேர் எதிராகவே பெண்கள் 
செயல்படுகிறார்கள்   ..... சீதன கொடுமையில் ... இன்னொரு பெண் மறுபக்கத்தில் இருக்கிறாள் 
என்று எண்ணும் தாய்மாரை காண்பது அரிதிலும் அரிது. 

பலவிதமான தீர்வுகளை பெண்களும் தேடி பார்த்து இறுதியில் 
பெண்ணை பெண்ணே திருமணம் செய்யும் நிலையில் கூட அவர்கள் 
சுதந்திரமாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் எமக்கு தெரிந்து ஒவ்வையார் பல ஆயிரம் ஆண்டு முன்பு கோவில் கோவிலாக 
தன்பாட்டுக்கு திரிந்து இருக்கிறார் ....... ஆண்களும் பெருமைப்படுகிறார்கள் 
ஆட்டகாறி என்று ஒவ்வையாரை திட்டுபவர்களை நான் காணவில்லை.

இதைத்தான் நான் முன்பே குறிப்பிடடேன் ...
யார்? ஏன் ? எங்கு? எப்போது? என்று 
காரணம் நான்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

விமான பணி பெண்கள் நாடு நாடாக திரிகிறார்கள் ....
இஸ்லாம் ... தொட்டு  பிராமண பெண்கள் வரை நாம் 
நாளும் விமானத்தில் சந்திக்கிறோம்தானே?  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருதங்கேணி. திருமணமாகாத இளம் வயதில் தாயகத்திலும் சரி இங்கும் சரி எமது தலைமுறைப் பெண்களும் அதற்குப் பின் வந்தவர்க்களும்சரி பெண்களாகச் சேர்ந்து போவதைச் சரி என்று நான் கூறமாட்டேன். ஆனால் திருமணமாகி குழந்தைகுட்டி பெற்று வளர்த்து  பிள்ளைகள் படித்து ஒரு வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் வரும் காலம் இருக்கிறதே அதுபற்றித்தான் குறிப்பிட்டேன்.

ஔவ்வை மன்னர்களுக்குப் பிடித்த ஒரு சிறந்த புலவராக இருந்ததனால் மற்றவர் தண்டனைக்குப் பயந்து அவர் பற்றிக் கதைக்காது விட்டிருக்கலாம். விமானப் பணிப்பெண்கள் நாடு நாடாகத் திரிவது வேறு. ஒன்று அது வேலையாகக் கருதப்படும். மற்றது சாதாரண பெண்கள் விமானப் பணிப்பெண்ணாகப் போவதில்லை.

விமானத்தில் சந்திக்கும் அனைவரும் தனியாகக் கணவன் பிள்ளைகளை விட்டுவிட்டு விடுமுறைக்குப் போவதில்லை.

On 5/15/2018 at 5:16 PM, Maruthankerny said:

ஆயிரம் வரையான விடீயோக்கள் இருக்கும்போது 
இதை ஏன் இணைத்தேன் என்றால் .........
இவர்கள் ஆண்களுக்கு நிகராக யுத்த களத்தில் போராடுபவர்கள் 
மனோ வலிமை ... உடல் வலிமை என்று சாதாரண பெண்களை விட கொஞ்சம் 
உயர்வானவர்கள் ... இவர்கள் நிலைமையே இப்படித்தான் இருக்கிறது. 

கணவர் உங்கள் மேல் உள்ள காதலால் கூட 
உங்களுக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்பதாலும் தடுக்கலாம் 
ஆணாதிக்க எண்ணத்தில் இருந்தும் தடுக்கலாம்.
ஆணாதிக்க எண்ணத்திலும் கொஞ்சம் பெண் ஆதிக்கம் இருக்கிறது. 
 
இபோதுதான் இந்த அமைப்பைப் பற்றி அறிகிறேன். இந்த வீடியோவை கொஞ்சம் முழுதும் பார்த்துவிட்டு கருத்தை எழுதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 5:20 PM, தனிக்காட்டு ராஜா said:

முள் மீது சேலை வீழ்ந்தாலும் சேலைக்குத்தான் சேதம் சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் சேதம் எங்கும் செல்லலாம் ஆனால் ஒரு கரப்பான் பூச்சிக்கு இருக்கும் பயம் வரும் பிரச்சினைகளையும் வென்று திரும்புவார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ஆனால் அப்படி நடப்பதில்லை 

எப்பவும் உதே வசனத்தைச் சொல்லி பெண்களைப் பயப்பிடுத்தி வைக்கிறதே இவையின்ர வேலையாப் போச்சு. சேலை கட்டினால்த்தானே சேலை சேதமாகும். டெனிம் போட்டால் ஒண்டும் ஆகாது?

On 5/15/2018 at 5:38 PM, Nathamuni said:

ஒரே பதில்..

அக்காவின் மகள் GCSE தாண்டினாப் பிறகு, நானோ இந்த மாதிரி கேள்வி கேட்டனான் எண்டப்போறியள்.

உங்கண்ட வளர்க்கப்பட்ட கதை வேற, இப்பத்தையான் பிள்ளவளர்புக்கதை வேற...

கண தாய்தகப்பன்மார் மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம திரியினம்.

உங்க ஒரு தாய் மனிசி, மகளுக்கு சமரில கல்யாணம். கொலிடே புக் பண்ணிப் போடாதீங்க எண்டு சொல்லிக் கொண்டு இருந்தவ.

மகள், தானே அரேஞ்ச் பண்ணிப் போட்டு, உங்கண்ட இரண்டு குடும்பம், அப்பாட இரண்டு குடும்பம் மட்டும் தான் வரலாம் எண்டு சொல்லிட்டா.

பின்ன, பண்ணிப் பாருங்கோவன்.

ஐயோ ஐயோ ... நான் எமது பிள்ளைகளின் தலைமுறை பற்றிப் பேசவில்லை. அவர்கள் கதையைத் தனியாகப் பார்க்கவேண்டும். இது எமதும் எமக்குப் பின்னதுகளின் கதை.

On 5/15/2018 at 5:15 AM, valavan said:

ஆண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தோஷமாக பார்க்கப்படுகிறது...பெண்கள் கூட்டமாக வெளியே சென்றால் சந்தேகமாக பார்க்கப்படுகிறது...

...இதை கல்யாணத்தின்போது தலையை குனிந்தபடி தாலியை நீயே கட்டு என்று கழுத்தை நீட்டியபோது,  நீ எதுக்கு தாலிகட்டி என்னை உன் பொறுப்பில் எடுக்கவேண்டும்?, நான்தான் தாலி கட்டுவேன் என்று புரட்சிகரமாக அப்போதே யோசித்திருக்கவேண்டும் ...

தாலி கட்டேக்குள்ள நாங்கள் இருபதுவயதுப் பிள்ளையள். அப்பா தலையை ஆட்டவும் குனியவும் மட்டும் தான் தெரியும். இப்ப முப்பது வருடங்கள் கழிந்தும் அதேபோல் இருக்கச் சொல்கிறீர்களா வளவன்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 5:48 PM, ஈழப்பிரியன் said:

நீங்கள் விரும்பும் முழு சுதந்திரம் தான் என்ன?

கொஞ்சம் பொறுங்கோ. இன்னும் கொஞ்சப்பேர் எழுதின பிறகு கட்டாயம் சொல்லுறன்.

On 5/15/2018 at 7:10 PM, Maruthankerny said:

இதை நான் சரி என்று கூறவோ வாதிடவோ இல்லை.

22 hours ago, கிருபன் said:

தாயகத்தில் அல்லது தமிழகத்தில் அதிகளவு சுதந்திரம் இல்லாவிட்டாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிப்பர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் உண்டு.  எனவே தனியே என்றாலும் நண்பிகளோடும் விடுமுறையில் தாராளமாகச் செல்லலாம். பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பொறுப்பாகப் பார்க்க கணவன்மார்கள் அல்லது உறவினர்களைக் கேட்கலாம்தானே.

ஆனால் பல பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன கதைப்பார்கள் என்று தாங்களாகவே வேலிகளையும், விலங்குகளையும் தங்களுக்குப் போட்டு புழுங்கிக்கொண்டிருப்பார்கள்.  இந்த நிலையும் மாறிக்கொண்டுதான் வருகின்றது. 

ஏன் ஆண்களின் அனுமதி வேண்டும் என்று பெண்கள் நினைக்கின்றார்கள்? இந்த அடிமைப் புத்தியை  பெண்கள் முதலில் விட்டுத்தள்ளவேண்டும். ஏதாவது அறிவுரை, விளக்கம் வேண்டுமென்றால் நெடுக்ஸை தனிமடலில் அணுகவும்? 

நான் கூற வந்த விடயம் உங்களுக்குத்தான் விளங்கியிருக்கு. ஆனாலும் உங்கள் மனைவியை நான் பிள்ளைகளை ஒருவாரம் பார்க்கிறேன். நீ உன் நண்பிகளுடன் போய் வா என்று உங்களால் அனுப்ப முடியுமா ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வல்வை சகாறா said:

நான் வசிக்கும் கனடாவில் இப்போது பெண்களுக்கு எந்தவிதத்தடையும் இல்லை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப தம்மை வடிவமைத்து வாழ்பவர்கள் பெண்களே. அதி உச்ச சுதந்திரத்தை இங்கு வாழ்பவர்களிடையே காணக்கூடியதாக இருக்கிறது. விலங்குகளாக பொறுப்புகளை மாட்டிக் கொண்டு இருப்பவர்கள் நாம்தான். சுமே ஆண்கள் கட்டுப்படுத்துகிறார்கள் அடக்குகிறார்கள் என்று பேசுவது என்னைப் பொறுத்தவரை நான் வாழும் கனடாவில் சுத்த முட்டாள்த்தனம். ஆண்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும் கோபக்காரர்கள் ஆக்குவதும் தற்போதைய நிலவரத்தின்படி பெண்களாகவே உணர்கிறேன். கலாச்சாரம் பண்பாடுகளைக்கடந்த எல்லையற்ற சுதந்திரம் இன்று பல பெண்களைத் தனிமரமாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,  அதி உச்ச விரக்தியுற்றவர்களாகவும் மாற்றிப்போட்டிருக்கிறது. இந்தத் தரவு உவகை மணமக்கள் இணைப்பின் வாயிலாக பெற்றவை. எல்லையற்ற சுதந்திரவெளியை அனுபவிக்கும் திறமை பெண்களிடம் கிடையாது. இத்தகைய சுதந்திரவெளியை நமது சமூகம் சார்ந்தவகையில் சில பெண்களாலேயே இயலும். எல்லையற்ற சுதந்திரம் என்பதும் துறவு என்பதும் ஒன்று. உறவுகளுக்குள் ஒட்டு இல்லாமல் பெண்களால் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது சாத்தியமற்றது. பெண்களுக்கு இயற்கை தந்த தாய்மை.,

அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். தன்னுடைய சந்ததியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை முதலில் தாயே ஏற்கிறாள். ஆக தாயிலிருந்தே பிள்ளைகளுக்கான கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கின்றன. தற்காலத்தில் சமூகவட்டம் சிதறிப்போயுள்ளது. யாரும் எப்படியும் வாழலாம் என்ற கோலம் பற்றற்ற வாழ்க்கையைத்தவிர எந்த ஒரு பெருமையையும் தரப்போவதில்லை.

சகாரா நான் இதில் பெண்கள் பெண்களுடன் கூடி விடுமுறைக்குச் செல்வது பற்றித்தானே கூறியிருக்கிறேன். நீங்களே இப்படிக் கூறுவது நம்பமுடியாமல் இருக்கிறது. ஒரு பெண் சிறிய குழந்தையைத் தனியே விட்டுவிட்டு கும்மாளம் போடவேண்டும் என்று நான் கூறவே இல்லையே. குடும்பத்துக்காக இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் உழைத்துக் களைத்தபின்னும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்துகொண்டு. வேலைக்குப் போகும் மகள் அல்லது மகன் குடும்பத்துக்குச் சமையல் செய்து பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு தனக்கென்று எந்தச் சொந்த ஆசையையும் வைத்துக்கொள்ளாது சமூகத்துக்குப் பயந்து போலி வாழ்க்கை  வாழ்வதுதான்  நல்லது , சிறந்த வாழ்வு என்கிறீர்களா?????

20 hours ago, குமாரசாமி said:

 அவசியம் என வரும்போது பல தடவைகள் சென்று வந்துள்ளார்.

நானும் என் நண்பர்களுடன் சென்று வந்துள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சுழல்கின்றீர்கள். வெளியில் வந்து பாருங்கள் ஒரு அழகான சமூகம் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது.

நீங்கள் சென்று வந்தது சரி. பல தடவை உங்கள் மனைவி ....... சரி நம்பவேண்டியதுதான். வேறு வழியே இல்லை எனக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

ஊர்ல இருந்து அப்படியே கிரேனால, அப்படியே தூக்கி வைத்த மாதிரி கொஞ்சப்பேர் தம்மை முன்னேற்ற முனையாமல் வாழ்கின்றனர். 

குறைந்தது ஆங்கில அறிவைக் கூட வளர்க்காத தம்மை பற்றி எந்த வித சுஜ மதிப்பு இன்றி, தாழ்வு மனப்பான்மையோடு வாழும் அவர்கள் குறித்தே இந்த திரி விவாதிக்கிறது என்றே நினைக்கின்றேன்.

அவர்கள் தான், தீடீரென தமக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள். இரண்டு சாரியும், ஒரு படமும் காட்டியவுடன்.... பழைய குருடி கதவை திறடி
கதை தான்...

புலம் பெயர்ந்து வந்து முப்பது ஆண்டுகள் கடந்தபின்னும் அப்படியே வாழ்பவர்கள் தான் எண்பதுவீதத் தமிழ்ப் பெண்  சமூகம்.  ஒரு சாறிக்கும் படத்துக்கும் வீழ்ந்து கிடப்பவர்கள் அல்லப் பெண்கள். இப்படி ஒரு முட்டாள் கணவன் இருக்கிறானே எனக்கு. எது சொல்லியும் அவனுக்குப் புரியப் போவதில்லை. ஏன் அவனின் மனதை வேதனைப்படுத்துவான். எனக்கு என்ன துன்பம் என்றாலும் நானே சகித்துக் கொள்ளுவோம் என்றுதான் பேசாமல் இருப்பது.

11 hours ago, சுவைப்பிரியன் said:

கொஞ்ச நேரம் தனிய வீட்டில நிம்மதியா இருக்கலாம் என்டு தனிய போட்டு வா என்றால் நீயும் வா என்று அடம் பிடிக்கிறது. பின்பு தனிய போக ஏலாமல் இருக்கு என்று புறுபறுக்கிறது.??

இளமையா இருக்கும்போது தனிய விடுவதில்லை. காணாத பெண்டிலைக் கண்டமாதிரி விழுந்து விழுந்து தானே செய்யிறமாதிரி செய்யிறது. ஓஞ்சுபோன பிறகு கலைக்கிறது.?

3 hours ago, Kavallur Kanmani said:

இன்றைய காலக்கட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரைத்தவிர மற்றைய பெண்கள் அனைவரும் தம் ஆளுயைுடன் மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கவும் செயற்படவும்  தம் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தம் பிள்ளைகளுக்கு நல்ல முன் உதாரணமாகத் திகழவும் செய்கிறார்கள். நாங்களாக சில பொறுப்புக்களை விரும்பி (உதாரணமாக என்னை எடுத்துக் கொண்டால் என் பேரக்கழந்தையை பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் விட மனம் ஒப்பாமல் நானாக என் வேலையிலிருந்து விலகி வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிக்கிறேன். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. எம் தாய்மை உணர்வு மட்டுமே) எம் மன விருப்பத்தின் படி நடக்க இந்த நாட்டில் போதிய வசதிகள் உண்டு. எம் பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு. நாம் வளர்ந்த முறை வேறு. மொத்தத்தில் பெண்கள் மிகவும் சிறந்த முறையில் தம் வாழ்க்கையை கொண்டு செல்ல இன்றைய ஆண்களு;ம் ஒத்துழைக்கிறார்கள். எம் நாட்டில் சுமே சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் இங்கு அது நடைமுறையில் இல்லை என்றே சொல்லலாம்.

நீங்களும் சகாராவும் கூறியதுபோல் கனடாப் பெண்கள் முன்னேறிவிட்டார்கள் போல் இருக்கே.

யேர்மன் சுவிஸ் பாரிஸ் போன்ற நாடுகளில் மிகச் சொற்பமானவர்களே அப்படி ஆளுமையுடன் இருக்கிறார்கள்.லண்டனில் கொஞ்சம் அதிகம். ஆனாலும் விடுமுறையில் தனியாகப் போவது குறைவுதான் அக்கா

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

1 hour ago, ரதி said:

நாங்கள் ஊர்ல இருக்கும் போதே அப்ப நாங்கள் சின்ன பிள்ளைகள். என்ட அம்மா சித்தியை வெளி நாட்டுக்கு அனுப்புவதற்காக எங்களை தனியே அப்பாவுடன் விட்டு, விட்டு சித்தியை கூட்டி கொண்டு கொழும்புக்கு போனவ...தனியே இரு பெண்கள் மாத்திரம் கொழும்பில் விடுதியில் தங்கி இருந்தார்கள்.

அப்பா தான் சமைத்து ,எங்களையும் பார்த்துக் கொண்டார்...அம்மா வந்த பின் அப்பாவின் சாப்பாடு அம்மான்ட சாப்பாடை விட டேஸ்ட் ஆக இருப்பதாக சொன்னோம்...அம்மாவிற்கு அதைக் கேட்டதும்  கோபம் வந்தது...அதனால் தான் தமிழினி போன்ற அம்மாமார் தகப்பன்களிடம் குழந்தைகளை விட்டு செல்ல பயப்பிடினமோ?

அந்த காலத்திலேயே பல பெண்கள் ஏஜென்சி மூலம் கணவரையும்,குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு வெ.நாடு வந்துள்ளார்கள்.

விடுமுறை என்று பார்த்தால் இங்கு கணவர் இல்லாமல் தனியே குழந்தைகளோடு இருக்கும் பெண்கள் விடுமுறைக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள் ....நான் நினைக்கிறேன் இந்தியாவிற்கு பெண்கள் தனியாய் போவது தான் ஆபத்து.

எத்தனையோ திருமணமான பெண்கள் தனிய நண்பிகளுடன் சேர்ந்து டூர் போய் இருக்கினம்...அவுசில் இருந்து ஜரோப்பா,லண்டன் டூர் அடித்த பெண்களும் இருக்கினம்.

டீசண்டான ஹொட்டலை புக் பண்ணி, எங்கட பாட்டில குடிக்காமல்,கும்மாளம் அடிக்காமல் ஊரை மட்டும் சுத்திப் பார்த்தால் ஒரு  பிரச்சனையும் இல்லை....அதையும் மீறி ஏதாவது நடந்தால் கொஞ்சசப் பேர் அதுவும் முக்கியமாய் பெண்கள் தான் தனியாய் போய் இவர்களுக்கு என்ன நடந்தது பார் எனக் கொசிப் கதைப்பார்கள் 

ஆண்களோட போவதில் ஒரு நன்மை என்ன எண்டால் அந்த ஆண்கள் கோழையாய் இருந்தால் கூட ஒருத்தரும் பயத்தில வாலாட்ட மாட்ட்டார்கள் என்று நினைப்பது தான் 

ரதி நான் எங்கு சொல்லியிருக்கிறேன் பயம் பற்றி.  ஒரு அம்மாவாக பிள்ளைகளை விட்டுவிட்டு  என்னாலோ என் நண்பிகளாளோ அந்த விடுமுறையில் மகிழ்வாக இருக்க முடியவில்லை என்று தானே சொல்லியுள்ளேன்.  அந்த மனநிலை எமக்கு வந்தது பாசத்தாலே ஒழிய பயத்தால் அல்ல!.

உங்கள் அம்மா உங்கள் சிறுவயதில் சென்றதாகக் கூறி இருக்கிறீர்கள். சிறுவர்களுக்கு அம்மா போனது தெரியுமே தவிர அவர்களுடன் வேறு உறவினரோ தெரிந்தவரோ போனது தெரியாதிருக்கலாம். அல்லது கொழும்பில் உதவுவதற்கு உறவினர்களோ நண்பர்களோகூட இருந்திருக்கலாம். மற்றும் அம்மா போனது விடுமுறைக்கு அல்ல வேறு வழியின்றி உங்கள் சித்திக்கு உதவும் கட்டாயம்.

நான் இங்கு கூறுவது பெரும்பான்மையானவர்களைப்பற்றியேயன்ரி சிறுபான்மையைப் பற்றி அல்ல.

நீங்கள் கூறுவதுபோல் பெண்கள் டீசன்டான இடங்களில் தங்கி நன்றாக மனதை லேசாக்கிக் கொண்டு வரலாம் தேவையற்றவற்றைத் தவிர்த்து. ஆண்களுடன் போவதுபற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்துச் சிரித்து விட்டேன். உண்மையும் அதுதான். என்றாலும் கணவனுடனோ சகோதரர்களுடனோ சீல்லும்போது நாம் நின்மதியாகவும் இருக்கலாம் எந்நேரமும் யாக்கிரதை உணர்வுடன் இருக்காது.

1 hour ago, விசுகு said:

முதலில்  நம்ம  மச்சானை  தனியாக  அனுப்புகிறீர்களா?

(என்  தங்கைக்கு  தனியாக போகும் ஆசை  வந்து  விட்டடது  சரி. அண்ணாக  அனுமதிக்கலாம்

அதற்கு  முன் ஒரு  கேள்வி உங்கள் பெண்  பிள்ளைகளை  இவ்வாறு  நீங்கள்  அனுமதிக்கின்றீர்களா??

மச்சானை அனுப்பினாலும் என்னை விட்டுவிட்டுப் போகிறார் இல்லை. தாய்நாட்டுக்கு மட்டும் நான் இன்றிப் பல தடவை போய்வந்திட்டார். அவருக்கு வாய்த்த நண்பர்களும் அப்பிடி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் சென்று வந்தது சரி. பல தடவை உங்கள் மனைவி ....... சரி நம்பவேண்டியதுதான். வேறு வழியே இல்லை எனக்கு.

உங்களுக்கு நம்பிற மனப்பான்மை இல்லையெண்டால் ஏன் என்னைப்பார்த்து அந்தக்கேள்வி கேட்டீர்கள்?
இந்த அருமையான திரி உங்கள் பதில் கருதுக்களால் சாம்பார் மாதிரி வந்திட்டுது! :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு நம்பிற மனப்பான்மை இல்லையெண்டால் ஏன் என்னைப்பார்த்து அந்தக்கேள்வி கேட்டீர்கள்?
இந்த அருமையான திரி உங்கள் பதில் கருதுக்களால் சாம்பார் மாதிரி வந்திட்டுது! :grin:

உங்கள் பதில் இதை விடக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தன். பரவாயில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

ரதி நான் எங்கு சொல்லியிருக்கிறேன் பயம் பற்றி.  ஒரு அம்மாவாக பிள்ளைகளை விட்டுவிட்டு  என்னாலோ என் நண்பிகளாளோ அந்த விடுமுறையில் மகிழ்வாக இருக்க முடியவில்லை என்று தானே சொல்லியுள்ளேன்.  அந்த மனநிலை எமக்கு வந்தது பாசத்தாலே ஒழிய பயத்தால் அல்ல!.

நான் அதை பகுடிக்கு தான் எழுதினேன் தமிழினி...எதற்கு கோபம் ..பிள்ளை மேல் உள்ள பாசத்தினால் எங்கே தன்னை விட தகப்பனின் மேல் அதிக பாசம் வைத்திடுவார் என்ட காரணமாகவும் இருக்கலாம்.தானே? 
 
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் அம்மா உங்கள் சிறுவயதில் சென்றதாகக் கூறி இருக்கிறீர்கள். சிறுவர்களுக்கு அம்மா போனது தெரியுமே தவிர அவர்களுடன் வேறு உறவினரோ தெரிந்தவரோ போனது தெரியாதிருக்கலாம். அல்லது கொழும்பில் உதவுவதற்கு உறவினர்களோ நண்பர்களோகூட இருந்திருக்கலாம். மற்றும் அம்மா போனது விடுமுறைக்கு அல்ல வேறு வழியின்றி உங்கள் சித்திக்கு உதவும் கட்டாயம்.

நான் இங்கு கூறுவது பெரும்பான்மையானவர்களைப்பற்றியேயன்ரி சிறுபான்மையைப் பற்றி அல்ல.

நீங்கள் கூறுவதுபோல் பெண்கள் டீசன்டான இடங்களில் தங்கி நன்றாக மனதை லேசாக்கிக் கொண்டு வரலாம் தேவையற்றவற்றைத் தவிர்த்து. ஆண்களுடன் போவதுபற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்துச் சிரித்து விட்டேன். உண்மையும் அதுதான். என்றாலும் கணவனுடனோ சகோதரர்களுடனோ சீல்லும்போது நாம் நின்மதியாகவும் இருக்கலாம் எந்நேரமும் யாக்கிரதை உணர்வுடன் இருக்காது.

சுமோ,பெண்கள் தனியே ஹொலிடே போகாததற்கு பெரும்பான்மை காரணம் அவர்களே அன்றி ஆண்கள் இல்லை.எங்கள் சமூகப் பெண்கள் எப்பவுமே குடும்பம்,கணவர், பிள்ளைகள் என்ற கடடமைப்பில் வாழ்ந்து பழகி விடடார்கள்.

கணவர்,பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் 
தாங்கள் இல்லா விடடால் கணவர்,பிள்ளைகள் தவிர்த்து போய் விடுவார்கள்
கணவர்,பிள்ளைகளை கவனமாய் பார்த்துக் கொள்வாரோ,சாப்பாடுகளை நேரத்திற்கு கொடுப்பாரா .....
 என்ட நினைப்பு எல்லாத் தாய்மார்களுக்கும் உண்டு 

ஆண்கள்,மனைவிமாரை தனியே விடாததற்கு காரணம்;
சமுதாயத்தில் மேல் உள்ள பயம்/மற்றாக்கள் என்ன கதைப்பினம்...
மனைவியால் தனியாய் போய் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறது .
பாசம்/ பிள்ளைகளும்  தாய்  மேல் உள்ள பாசத்தினால் பிரிந்திருக்க விரும்புவதில்லை 
கணவன்மாருக்கு பிள்ளைகளை பொறுப்பாய் பார்க்கத் தெரியாது.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

நான் அதை பகுடிக்கு தான் எழுதினேன் தமிழினி...எதற்கு கோபம் ..பிள்ளை மேல் உள்ள பாசத்தினால் எங்கே தன்னை விட தகப்பனின் மேல் அதிக பாசம் வைத்திடுவார் என்ட காரணமாகவும் இருக்கலாம்.தானே? 
 
சுமோ,பெண்கள் தனியே ஹொலிடே போகாததற்கு பெரும்பான்மை காரணம் அவர்களே அன்றி ஆண்கள் இல்லை.எங்கள் சமூகப் பெண்கள் எப்பவுமே குடும்பம்,கணவர், பிள்ளைகள் என்ற கடடமைப்பில் வாழ்ந்து பழகி விடடார்கள்.

கணவர்,பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் 
தாங்கள் இல்லா விடடால் கணவர்,பிள்ளைகள் தவிர்த்து போய் விடுவார்கள்
கணவர்,பிள்ளைகளை கவனமாய் பார்த்துக் கொள்வாரோ,சாப்பாடுகளை நேரத்திற்கு கொடுப்பாரா .....
 என்ட நினைப்பு எல்லாத் தாய்மார்களுக்கும் உண்டு 

ஆண்கள்,மனைவிமாரை தனியே விடாததற்கு காரணம்;
சமுதாயத்தில் மேல் உள்ள பயம்/மற்றாக்கள் என்ன கதைப்பினம்...
மனைவியால் தனியாய் போய் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறது .
பாசம்/ பிள்ளைகளும்  தாய்  மேல் உள்ள பாசத்தினால் பிரிந்திருக்க விரும்புவதில்லை 
கணவன்மாருக்கு பிள்ளைகளை பொறுப்பாய் பார்க்கத் தெரியாது.

.

நீங்கள் கூறுவது உண்மைதான் ரதி. கிருபன்  கூறியதுபோல் பெண்களுக்கும் ஒருவித் சமூகப்பயம் இருக்கவே செய்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் பதில் இதை விடக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தன். பரவாயில்லை?

அப்படியல்ல.. பெண் சுதந்திரத்திற்கு அப்பால்.....ஆண் பெண் இரு பாலரும் சேர்ந்ததுதான் வாழ்க்கை..... ரயில் தண்டவாளங்கள் மாதிரி ஆணுக்கு பெண்ணும்....பெண்ணுக்கு ஆணும் புரிந்துணர்வுடன் வாழ்வதுதான் வாழ்க்கை..
நீங்கள் கருதும் பெண் சுதந்திரம் கிடைக்க  அந்தந்த நாடுகளின் அரசியல் கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும். 

DdVlIrAUwAACNEk.jpg:large

தாங்குவது ஆண் என்றால்...
பிசகாமல் இருப்பது பெண்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்சம் பொறுங்கோ. இன்னும் கொஞ்சப்பேர் எழுதின பிறகு கட்டாயம் சொல்லுறன்.

இதை நான் சரி என்று கூறவோ வாதிடவோ இல்லை.

நான் கூற வந்த விடயம் உங்களுக்குத்தான் விளங்கியிருக்கு. ஆனாலும் உங்கள் மனைவியை நான் பிள்ளைகளை ஒருவாரம் பார்க்கிறேன். நீ உன் நண்பிகளுடன் போய் வா என்று உங்களால் அனுப்ப முடியுமா ?????

ஏற்கனவே முடிந்த விடயம்?

  • கருத்துக்கள உறவுகள்

  இங்கு அவுஸ்திரெலியாவில் பெரும்பாலானோர் கல்வி, தொழில்  காரணமாக (Skill migration)   புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.  பல பெண்கள் மருத்துவர்கள், பொறியியளாளர்கள், ச்ட்ட வல்லுனர்கள், கணக்காளர்கள், கணனி விற்பன்னர்களாக வேலை பார்க்கிறார்கள். பலர் அரசாங்க, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களில் சிலர் வேலை விடயமாக வேறு மானிலங்கள்,நாடுகளுக்கு வேறு ஆண்களுடன் பயணம் செய்கிறார்கள். சிலர் பெண்கள் வேறு நாடுகளில், இலங்கையில் சென்று மணமுடித்து கணவர்மார்களை அவுஸ்திரெலியாவுக்கு அழைத்திருக்கிறார்கள்.  இங்கு பல பெண்கள் வீட்டிலே கணவரைப் பிள்ளைகளைப் பார்க்கச் சொல்லிவிட்டு நண்பிகளுடன் சுற்றுலாக்கள் செல்வதுண்டு. அண்மையில் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகளின் 50 வது பிறந்தநாளுக்கு உலகில் பலநாடுகளில்  இருந்து சென்று சுற்றுலா சென்றிருக்கிறார்கள். சென்ற வருடம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரின் பழைய மாணவ, மாணவிகளின் 50 வது பிறந்தநாளுக்கு கம்போடியா, தாய்லாந்து, பாலித் தீவுகளுக்கு தங்களது துணைவி, துணைவர்கள் இல்லாமல் சென்று வந்திருக்கிறார்கள்.  சிட்னியில் ஒவ்வொருவருடம் அரங்கேற்றநிகழ்வுகள், கல்யாணம் என்பவற்றுக்காக பல பெண்கள் உடுப்புகள்,நகைகள் வாங்க தங்களது மகளுடன் ஆண்கள் இல்லாமல் இந்தியாவுக்கு செல்கிறார்கள். சாய் பாபா பக்தர்கள் பலர் புட்டபர்த்திக்கு  தங்களது துணைவர்களைப் பிள்ளைகளைப் பார்க்கச் சொல்லிவிட்டு செல்வது வழக்கம்.  சமாதான காலத்தில் வன்னிக்கு பல பெண் மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சென்று வந்திருக்கிறார்கள்.  சிட்னியில் இருக்கும் முதியோர் சங்கமொன்று வரும் மாதமொன்றில் கப்பலில்  5,6 நாள்கள் சுற்றுலா செல்லவுள்ளார்கள்.  இதில் சில வயோதிபர்கள் தங்களது துணைவர்கள் இல்லாமலே செல்லவுள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்பு பல வயோதிபப் பெண்கள் வட இந்தியா கோவில்களுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.  ஏன் கனடாவில் இருந்தும் பல வயோதிபர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

போகலாமே...."எனக்கு என சுதந்திரம் கேட்கும் வேலையில் பகுத்தறிகின்ற புத்தி வேண்டும்"யாரோ கவிதையில் எழுதியிருந்தவையள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அப்படியல்ல.. பெண் சுதந்திரத்திற்கு அப்பால்.....ஆண் பெண் இரு பாலரும் சேர்ந்ததுதான் வாழ்க்கை..... ரயில் தண்டவாளங்கள் மாதிரி ஆணுக்கு பெண்ணும்....பெண்ணுக்கு ஆணும் புரிந்துணர்வுடன் வாழ்வதுதான் வாழ்க்கை..
நீங்கள் கருதும் பெண் சுதந்திரம் கிடைக்க  அந்தந்த நாடுகளின் அரசியல் கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும். 

DdVlIrAUwAACNEk.jpg:large

தாங்குவது ஆண் என்றால்...
பிசகாமல் இருப்பது பெண்கள்... 

இதற்கு எதற்கு அரசியல் கட்டமைப்பு???? ஆண்கள் மனதிலும் பெண்கள் மனதிலும் தெளிவு வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

போகலாமே...."எனக்கு என சுதந்திரம் கேட்கும் வேலையில் பகுத்தறிகின்ற புத்தி வேண்டும்"யாரோ கவிதையில் எழுதியிருந்தவையள்

நல்ல கவிதை புத்தா

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தாலி கட்டேக்குள்ள நாங்கள் இருபதுவயதுப் பிள்ளையள். அப்பா தலையை ஆட்டவும் குனியவும் மட்டும் தான் தெரியும். இப்ப முப்பது வருடங்கள் கழிந்தும் அதேபோல் இருக்கச் சொல்கிறீர்களா வளவன்???

நீங்கள் இருபதுகளில் அனுபவிக்க தவறிய சுதந்திரத்தை, இருபதுகளில் இப்போது இருக்கும் உங்கள் வாரிசுகளுக்கு இப்போது வழங்கி கொண்டிருந்தால்...

நீங்களும் அந்த சுதந்திரத்தை  யாருக்கும் தயக்கமின்றி  யாரோடதும் அதுபற்றிய கருத்துக்கள் எதிர்பார்ப்பின்றி அனுபவிக்க உரித்துடையவரே....

எவரோட உதவியுமின்றி தானாக எழுந்து நடக்கும் சக்தியுள்ளவரை, ஒரு மனிதன்  தான் விரும்பிய முழு சுதந்திரத்தையும் அனுபவிக்க உரித்துடையவன்...வயது அதற்கு தடையல்ல, அதை விவாதிக்க ஒரு தலைப்பும் தேவையல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

நீங்கள் இருபதுகளில் அனுபவிக்க தவறிய சுதந்திரத்தை, இருபதுகளில் இப்போது இருக்கும் உங்கள் வாரிசுகளுக்கு இப்போது வழங்கி கொண்டிருந்தால்...

நீங்களும் அந்த சுதந்திரத்தை  யாருக்கும் தயக்கமின்றி  யாரோடதும் அதுபற்றிய கருத்துக்கள் எதிர்பார்ப்பின்றி அனுபவிக்க உரித்துடையவரே....

எவரோட உதவியுமின்றி தானாக எழுந்து நடக்கும் சக்தியுள்ளவரை, ஒரு மனிதன்  தான் விரும்பிய முழு சுதந்திரத்தையும் அனுபவிக்க உரித்துடையவன்...வயது அதற்கு தடையல்ல, அதை விவாதிக்க ஒரு தலைப்பும் தேவையல்ல.

ஏற்கனவே நான் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது எல்லார்க்குமான பதிவு. பொதுவாகக் கருத்துச் சொல்வதில் பயனில்லை. ஆண்களுக்கும் மற்றவர் தன்னைப்பற்றித் தவறாக எண்ணிவிடுவாரோ என்னும் பயம் நிறையவே இருக்கு வளவன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.