Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..

June 13, 2018

 

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக, காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

“வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரிடம் கல்வி கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு  உட்படுத்தப்படுகின்றனர் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதேச சிறுவர் அலுவலகர் தெரிவித்துள்ளார்.    இந்த நிலையில், சிறுவர் அலுவலகருடன் காவற்துறையினர்  இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை, மற்றும் சிறுமிகளை  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு  உட்படுத்தியமை உள்ளட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என  காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார். அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர். இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் காவற்துறையினர், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர். அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/83500/

 

மாடு திருடியவர்களை கோழி திருடியவர்களை கட்டி வைத்து படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆட்கள், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் இப்படிப்படட அயோக்கியர்களை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை.
போலீசார் கைது செய்தமையால் கைதானவரின் பெயரை கூடவா பிரசுரிக்க கூடாது ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மாடு திருடியவர்களை கோழி திருடியவர்களை கட்டி வைத்து படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆட்கள், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் இப்படிப்படட அயோக்கியர்களை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை.
போலீசார் கைது செய்தமையால் கைதானவரின் பெயரை கூடவா பிரசுரிக்க கூடாது ?

அவரது ரியுட்டரி தீக்கிறையாக்கப்பட்டுள்ளது செய்தி உண்மையானதால் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வாக்குள்ளவராக இருப்பார். பல இடங்களிலும் “அலுவல்” பார்த்து பெயரைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஆனாலும் இன்றைய சமூக ஊடக உலகில் குற்றங்களை மூடி மறைப்பது இலகுவாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto   Ãhnliches Foto

மிக மனவருத்தமான செய்தி. 
முன்பு... பாடசாலைக்கு செல்லும் சிறுமியை, ஆசிரியரே... வன்புணர்வு செய்ததாக... கேள்விப்  பட்டதேயில்லை. 
ஏன்.. இப்படி எல்லாம் செய்கிறார்கள் அயோக்கியர்கள்.
இப்படி செய்த  அவ(னை)ரை  பிடித்து, மனிதனின்  ஒன்பது துவாரங்களிலும் மிளகாய்த் தூள் தடவி,
அதை...  ஓட்ட,  வெட்டி விட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு யாழ் நாச்சிமார் கோவிலடியை அண்மித்த பெரியபுலம் ஆரம்பப்பாடசாலையில் ஒரு சிறுமியை இரண்டு ஆசிரியர்கள் பாலியல்ரீதியான தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளார்கள் இதனை அறிந்த அப்பாடசாலையின் சங்கீத ஆசிரியர் விடையத்தை வெளிக்கொணர்ந்து சட்டநடவடிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கினார் அதற்குப்பழிதீர்க்கும் விதமாக ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமும் சங்கீத ஆசிரியரை யாழ்குடாநாட்டுக்கு எக்காலத்திலும் மாற்றல்பெற்று வரமுடியாத இடமாற்றை உத்தரவை அப்போதைய யாழ் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த இராசா இரவீந்திரனது துணையுடன் கிளிநொச்சிக்கு மாற்றிவிட்டார்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியை வழ்க்குப்போட்டு ஆசிரியைக்குச் சாதகமாக வழக்கு வரப்போகுது என்றவுடன் இராசா இரவீந்திரன் மீண்டும் யாழ் குடாநாட்டுக்கு மாற்றல் கொடுத்துவிட்டார். 

சரி ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய இராசா ரவீந்திரனே இப்படியான திர்நடத்தையாளர்களுக்குத் துணைபோகிற காலம் எண்டால் பார்த்துக்கொள்ளுங்கோவன். இத்தனைக்கும் அவருக்கு பதிண்ம வயதில் பெண்பிள்ளை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் பெற்ரேரை விட ஆசிரியர்கள் மேல் நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

மாடு திருடியவர்களை கோழி திருடியவர்களை கட்டி வைத்து படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆட்கள், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் இப்படிப்படட அயோக்கியர்களை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை.
போலீசார் கைது செய்தமையால் கைதானவரின் பெயரை கூடவா பிரசுரிக்க கூடாது ?

உதயன் பத்திரிகை... உரிமையாளரும், பம்மாத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்,
சரவணபவன் என்கின்ற,   பாராளுமன்ற  உறுப்பினரிடம் கேட்க  வேண்டிய... கேள்வி இது.  ?️‍?️

Just now, தமிழ் சிறி said:

உதயன் பத்திரிகை... உரிமையாளரும், பம்மாத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்,
சரவணபவன் என்கின்ற,   பாராளுமன்ற  உறுப்பினரிடம் கேட்க  வேண்டிய... கேள்வி இது.  ?️‍?️

இச் செய்தி இணைக்கப்பட்டு இருப்பது உதயனில் இருந்து அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இச் செய்தி இணைக்கப்பட்டு இருப்பது உதயனில் இருந்து அல்ல. 

வட்டுக் கோட்டையில்... நடந்த,  செய்தியை... முதலில்  கொண்டு வந்திருக்க வேண்டியது, யார்?
வடமாகாணத்தில்... தலைமையாக  இயங்கிய பத்திரிகைகள் பல இருந்தாலும்,
எனக்கு தெரிந்த வரையில்....   குறிப்பிட்டு சொல்லக் கூடிய  பத்திரிகைகள் என்றால்....
ஈழநாடு, உதயன், வலம்புரி....போன்றவை மட்டுமே.

இப்போ..... யாழ்ப்பாணத்தில், உதயன்  "ஓனர்"   தான்....  கல்லா கட்டுகிறார்.
இதை... சொன்னால், என்னை.. பயித்தக்காரன் என்கிறார்கள்.
காரியமில்லை... ஒரு நாள், உண்மை வெளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு சென்று திரும்பும் சிறுமிகளை ஆசை ஆசையாய் ஆசிரியர் இன்று என்ன சொல்லி தந்தார் என்று கேட்ட ஒரு காலம் போய், ஆசிரியர் இன்று தப்பா ஏதும் நடந்துகொண்டாரா என்று பெற்றோர்கள் படபடப்புடன் கேட்கும் அவல நிலையான காலம் உருவாச்சு.

நவீன தொடர்பாடல் வளர்ச்சியில் கைபேசிகளிலும், கணனிகளிலும் ஆபாச படங்களை பார்த்துவிட்டு , தேங்கி கிடக்கும் தமது வக்கிரங்களை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அலையும் ஆபாச சாமிகளின் அதிகரிப்பிற்கு இணையமும் ஒரு  ஒரு காரணம். 

குற்றவாளியின் படத்துடன் அவர்களை சமூகத்தின்முன் அம்பலபடுத்தினாலேயொழிய இதேபோன்ற குற்றங்களை புரியும் மனநிலையில் உள்ளவர்களை தடுப்பது அல்லது குறைப்பது அரிது.

பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டு எக்காரணம் கொண்டும் மாணவ மாணவிகளை தொட்டு பேசகூடாது என்ற விதிமுறையும் உருவாக்கப்படவேண்டும், மீறினால் சக மாணவ மாணவிகளின் சாட்சியுடன் ஆசிரியர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படவேண்டும், ஆனால் இதெல்லாம் நடக்கிற விஷயமா?

நான் உனக்கு அப்பா மாதிரியம்மா, அங்கிள்மாதிரியம்மா என்று சொல்லி தப்பிவிடுவார்கள்,சமுதாயமும் சிலவேளை ஆசியர்கள் பக்கம்நின்று , கள்ளனுக்குத்தான் கள்ளக்குணம் என்ற தத்துவமெல்லாம் பேசி நீங்கள் எதுக்கு தப்பா நினைக்கிறீர்கள் எல்லாரும் அப்படியில்லையென்று குற்றவாளிகளுக்கே வக்காலத்து வாங்கிவிடும் ஒரு சமுதாய கட்டமைப்பு இன்னும் தாயகத்தில் வாழ்கிறது.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள் அதிகரித்து விட்டன

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto   Ãhnliches Foto

மிக மனவருத்தமான செய்தி. 
முன்பு... பாடசாலைக்கு செல்லும் சிறுமியை, ஆசிரியரே... வன்புணர்வு செய்ததாக... கேள்விப்  பட்டதேயில்லை. 
ஏன்.. இப்படி எல்லாம் செய்கிறார்கள் அயோக்கியர்கள்.
இப்படி செய்த  அவ(னை)ரை  பிடித்து, மனிதனின்  ஒன்பது துவாரங்களிலும் மிளகாய்த் தூள் தடவி,
அதை...  ஓட்ட,  வெட்டி விட வேண்டும். 

முன்பும் நடந்தது, மூடி மறைக்கப்பட்டது. நண்பன்  மகளுக்கு, கமலாவுக்கு பாடம் எடுக்க போனவர் தான் குடும்பஸ்தர், சில்லையூர் செல்வராஜா. 

5 hours ago, தமிழ் சிறி said:

வட்டுக் கோட்டையில்... நடந்த,  செய்தியை... முதலில்  கொண்டு வந்திருக்க வேண்டியது, யார்?
வடமாகாணத்தில்... தலைமையாக  இயங்கிய பத்திரிகைகள் பல இருந்தாலும்,
எனக்கு தெரிந்த வரையில்....   குறிப்பிட்டு சொல்லக் கூடிய  பத்திரிகைகள் என்றால்....
ஈழநாடு, உதயன், வலம்புரி....போன்றவை மட்டுமே.

இப்போ..... யாழ்ப்பாணத்தில், உதயன்  "ஓனர்"   தான்....  கல்லா கட்டுகிறார்.
இதை... சொன்னால், என்னை.. பயித்தக்காரன் என்கிறார்கள்.
காரியமில்லை... ஒரு நாள், உண்மை வெளிக்கும்.

100% உறுதியாகும் வரை செய்தி தராமை, மானநஸ்ட வழக்குகள் வரும் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

Edited by Nathamuni

7 hours ago, Nathamuni said:

முன்பும் நடந்தது, மூடி மறைக்கப்பட்டது. நண்பன்  மகளுக்கு, கமலாவுக்கு பாடம் எடுக்க போனவர் தான் குடும்பஸ்தர், சில்லையூர் செல்வராஜா. 

100% உறுதியாகும் வரை செய்தி தராமை, மானநஸ்ட வழக்குகள் வரும் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

ஆனால் இன்னாரை சந்தேகத்தின் பெயரால் பொலிசார் கைது செய்துள்ளார்கள் என செய்தி போட முடியும்.  நீதி மன்றத்தால் குற்றவாளி என உறுதியாகும் வரை, பெயர் குறிப்பிட்டு  குற்றம் சாட்டப்பட்டவர் என அழைக்க முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஆனால் இன்னாரை சந்தேகத்தின் பெயரால் பொலிசார் கைது செய்துள்ளார்கள் என செய்தி போட முடியும்.  நீதி மன்றத்தால் குற்றவாளி என உறுதியாகும் வரை, பெயர் குறிப்பிட்டு  குற்றம் சாட்டப்பட்டவர் என அழைக்க முடியும்.

இதைத்தான் நானும் நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

A8_E1_A2_AF-3171-4746-_A58_F-76_CA757_F8

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசற்படி மாதிரி நாட்டுக்கு நாடு ஆசிரியர்கள் விளயாட்டு நடந்தபடிதான் இருக்கிறது. வட்டுக்கோட்டை வாத்தியார் போல பல வாத்தியார்கள் இருக்கிறார்கள்.

 

நான் சொல்ல வருவது ஒரு விளையாட்டு ஆசிரியருடைய விளையாட்டைப்பற்றித்தான்.

ஆசிரியரின் பெயர் Andreas.  54 வயதுயேர்மனியில் ஒரு ஆரம்பப் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்சியாளர்.

1997இலிருந்து 2000 க்கு இடையில் பாலியல் ரீதியாக சிறார்களை துன்புறுத்தியது மற்றும் வன்புனர்வுக்கு அவர்களை ஆளாக்கியது போன்ற ஐந்து கடுமையான குற்றங்களுக்கான வழக்குகள் அவர் மீது விழுந்திருக்கின்றன.

Andreas க்கு இது முதல் வழக்கல்லஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்வழக்கை விசாரித்த நீதிபதி,“ஏதோ நடந்திருப்பது தெரிகிறது. ஆனாலும் போதிய ஆதாரம் மன்றில் தரப்படவில்லைகிடைத்த ஆதாரங்களும் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்குப் போதுமானவையல்லஆகவே தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் Andreas விடுதலை செய்கிறேன்” என அறிவித்து விட்டார்.

இப்பொழுது Andreasஇற்கு மீண்டும்சனி’ பிடித்துவிட்டது போல.  அதே நீதிபதியிடமே இப்போதைய ஐந்து வழக்குகளும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. 13.06.2018இல் வழக்கு ஆரம்பமானதுபோதுமான ஆதாரம் இல்லாததால் இந்தமுறையும் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தாரோ என்னவோ  Andreas சிரித்தபடியே மன்றில் அமர்ந்திருந்தார்

ஆனால் இந்தமுறை தப்பிப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காதுகாரணம் இருபது வருடங்களுக்கு முந்திய அவரது விளையாட்டு ஒன்று இப்பொழுது அவருக்கு வில்லங்கமாக வந்திருக்கிறது.

Nadineக்கு  வயது 31. வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவத் தாதியாக வேலை செய்கிறாள்தனக்குப் பதினொரு வயதாக இருக்கும் போது தனது பள்ளி ஆசிரியரான Andreasஆல் தான்  வன்புனர்வுக்கு  உட்படுத்தப்பட்டதாக இப்பொழுது அறிவிக்கிறாள்

Nadine இப்படிச் சொல்கிறாள்

“ஒரு ஆசிரியர், ஒரு சிறுமி மீதான வன்புனர்வு வழக்கில் இருந்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டதைப் பற்றி நான் வாசித்த பொழுது எனக்கு நினைவு வந்தது Andreas தான் . கொஞ்சம் சிரத்தை எடுத்துத் தேடியதில் அது அவர்தான் எனத் தெரிந்ததுஎன்னுடைய சிறுவயதில் என் மீது நடந்த பாலியல் கொடுமைகளை  கல்லறைக்குள் புதைத்து விட  சிலசமயங்களில் நான் முடிவு செய்தேன்ஆனால் அது என்னால் முடியாமல் போனது. Andreas வழக்கில் இருந்து விடுதலையை பெற்றதைப் படித்த போது, அவரால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிகள்தான் என் நினைவுக்கு வந்தார்கள்அவர்கள் எவ்வளவு வேதனைகளை வாழ்நாள் பூராவும் காவிச் செல்லப் போகிறார்கள் என்று எண்ணியபோது, அந்தசிறுமிகளுக்கு  நீதி வேண்டும்  அதேநேரம் Andreas ஆல் இன்னும் பல சிறார்கள் சீரழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற முடிவைத்தான் என்னால் எடுக்க முடிந்தது.  ஆகவே Andreasஆல் எனக்கு நடந்த கொடுமைகளை நான் நீதிமன்றில்ஒரு சாட்சியாக எடுத்துச் சொல்ல இருக்கிறேன்அத்தோடு எனது பங்கு இங்கு அவசியம்நான் மற்றைய பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்

“அந்தச் சிறார்கள் மேல் எனது கட்சிக்கார்ர் கொண்டிருந்தது ஒரு நட்புஅது ஒன்றும் பாலியல் தாக்குதல் இல்லை"  என்றுAndreas அவரது வக்கீல் மூலம் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் மறுத்திருக்கிறார்.

வழக்கு  ஜூன் 25க்கு தள்ளிப் போயிருக்கிறது. Andreas ஒரு வருடத்திற்கு பாடசாலையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அண்மையில் கனடாவில் சிறுவர்களுக்கு பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த தமிழர்கள்.

https://toronto.ctvnews.ca/80-year-old-tutor-charged-after-girl-12-reports-sex-assault-1.3829869

image.jpg

 

http://toronto.citynews.ca/2013/01/16/math-tutor-charged-with-sexually-assaulting-2-children/

Assault.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்திமாரின்ரை சொறிச்சேட்டை நான் படிக்கிற காலத்திலையே  இருந்தது தான்.

 **** நான் படிக்கிற காலத்திலை(கவனிக்கவேண்டி வசனம்) :cool:

வாத்தி தனக்கு பிடிச்ச இரண்டு பொம்புளைப்பிள்ளையளையும் தனக்கு கிட்ட வைச்சுத்தான் படிப்பிப்பார்.  அப்பப்ப தன்ரை காலாலை பிள்ளையளின்ரை காலை வருடுவார்.பிள்ளையார் சுழியும் போடுவார்....

வீட்டுக்கு பிள்ளையளின்ரை முறைப்பாடு போக......

அதுக்கு பிறகு............


ஒரு நாள் ஒரேயொரு இருட்டடி.


அதுக்குப்பிறகு அவர் தங்கப்பவுண் வாத்தியார்.
சனம் பொலிசுக்கும் போகேல்லை..
கோர்ட்டுக்கும் போகேல்லை..
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் கண்டியளோ..

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎14‎/‎2018 at 8:20 PM, கிருபன் said:

செல்வாக்குள்ளவராக இருப்பார். பல இடங்களிலும் “அலுவல்” பார்த்து பெயரைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஆனாலும் இன்றைய சமூக ஊடக உலகில் குற்றங்களை மூடி மறைப்பது இலகுவாக இருக்காது.

இன்றைய பண நாயக உலகில் குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்வது இலகுவானது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.