Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு

Featured Replies

இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு

UK-heatwave-720x427.jpg

இங்கிலாந்தில் வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மிகக்கடுமையாக உள்ளது. வெள்ளிக்கிழமை லண்டனில் 33.C வெப்பநிலை பதிவாகியிருந்தது.  சனிக்கிழமை 29.C ஆகவும் நேற்றையதினம் 31.C ஆகவும் இன்று 33.C ஆகவும் வெப்பநிலை காணப்படுகின்றது.

நாளையதினம் 32.C ஆக  வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வாக இருப்பதனால் வீடுகளை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் சில வாரங்களாக நாடுமுழுவதும் அண்ணளவாக வெப்பநிலை 30.C ஆக காணப்பட்டது. இந்த அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் சகாரா பாலைவன வெப்பம் போர்த்துக்கல் வழியே இங்கிலாந்து நோக்கிவருவதாக கூறப்படுகின்றது.

இந்த உயர்ந்த வெப்பநிலையானது இன்னும் ஒரு மாதத்துக்கும் அதிகமான நாட்களுக்கு இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் ஒக்டோபர் மாதம் வரைக்கும்  வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/இங்கிலாந்தில்-வெப்பநிலை/

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கிரீஸில் கோடை விடுமுறையை படங்களாக முகப்புத்தகத்தில் போடுகிறார். இங்கு இன்று 33C . உள்ளூர் பார்க்கும் வீட்டு பின் வளவும் இப்ப பரவாயில்லை போல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலையும் பயங்கர வெக்கைதான்.......எல்லாரும் தண்ணியே தஞ்சமெண்டு திரியினம்.....

அரைக்களிசான்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு.....யூ நோ படு கிழவியை பாத்தாலும் ஒரு கிக்காய்த்தான் கிடக்கு....

அவ் :love:

  • கருத்துக்கள உறவுகள்

People in Helsinki, Finland took K-Supermarket up on their offer to allow customers to sleep in the aisles of their store which was furnished with cool refrigerators and air conditioning

K-Supermarket manager Marika Lindfors said the idea came from joking customers: 'We always try to respond to client feedback, so why not here, too?'

வெக்கை கூடி சனம் படுற பாடு ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

நண்பர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கிரீஸில் கோடை விடுமுறையை படங்களாக முகப்புத்தகத்தில் போடுகிறார். இங்கு இன்று 33C . உள்ளூர் பார்க்கும் வீட்டு பின் வளவும் இப்ப பரவாயில்லை போல. 

அகஸ்தியனுக்கு... விடுமுறைக்கு போக லீவு கிடைக்காமல்,
வயித்தெரிச்சலில் எழுதின மாதிரி இருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலையும் பயங்கர வெக்கைதான்.......எல்லாரும் தண்ணியே தஞ்சமெண்டு திரியினம்.....

அரைக்களிசான்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு.....யூ நோ படு கிழவியை பாத்தாலும் ஒரு கிக்காய்த்தான் கிடக்கு....

அவ் :love:

குமரியளை  விட... கிழவிகளின்  அட்டாகாசம் தாங்க ஏலாமல்  இருக்கப்பா..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

People in Helsinki, Finland took K-Supermarket up on their offer to allow customers to sleep in the aisles of their store which was furnished with cool refrigerators and air conditioning

K-Supermarket manager Marika Lindfors said the idea came from joking customers: 'We always try to respond to client feedback, so why not here, too?'

வெக்கை கூடி சனம் படுற பாடு ..

என்ன பெருமாள்.... கடைக்குள், படுத்து இருக்கின்றார்களா..... ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலையும் பயங்கர வெக்கைதான்.......எல்லாரும் தண்ணியே தஞ்சமெண்டு திரியினம்.....

அரைக்களிசான்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு.....யூ நோ படு கிழவியை பாத்தாலும் ஒரு கிக்காய்த்தான் கிடக்கு....

அவ் :love:

52 minutes ago, தமிழ் சிறி said:

குமரியளை  விட... கிழவிகளின்  அட்டாகாசம் தாங்க ஏலாமல்  இருக்கப்பா..... :grin:

படம் போட்டால்த் தான் நம்புவம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

படம் போட்டால்த் தான் நம்புவம்.

Bildergebnis für sommer mode frauen ab 60

ஈழப்பிரியன்  இந்தாங்கோ படம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

படம் போட்டால்த் தான் நம்புவம்.

190983d1357854744-dsc05100.jpg

190984d1357854751-dsc05098.jpg

ஜெர்மனியின் ஆறு குளம் எல்லாம் 
செந்தாமரைகள் மலர்ந்துகொண்டே 
இருப்பதாகத்தான் உலக செய்திகளும் சொல்கின்றன 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für sommer mode frauen ab 60

ஈழப்பிரியன்  இந்தாங்கோ படம்.  :grin:

தமிழ் சிறி அண்ணோய்.....!

எங்கட ஊரில .....சொப்பிங் எண்டால் அனேகமாக இப்படித் தான் இருக்கும்! இது மிகவும் சாதாரணம்!

உங்கட படங்களைப் பார்த்தால்... பனையைக் காணாதவன்....கித்துள் கள்ளைக் குடிக்கிற மாதிரிக் கிடக்குது!

நாங்கள் எதிர்பார்க்கிற படங்கள்.....பின்வரும் படங்களைப் போல...!

nzh_bikini_2-c1xxpjz9xx6x1q8lmm2_t460.JP

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சனம் ஊருக்கு படையெடுக்கிறார்கள் போல 

மருதர் மெனக்கட்டு எடுத்திருக்கிறார் இருந்தாலும் இந்த படத்தை 

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார் இன்றிருந்தால்.... பிறந்த இடத்தையும், கறந்த இடத்தையும் நாடுதே கண் என்று பாடியிருப்பார். ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

என்ன பெருமாள்.... கடைக்குள், படுத்து இருக்கின்றார்களா..... ?

அது சுப்பர்மார்க்கட் மனேஜரினால் பகிடிக்கு உயர்ந்து வரும் வெப்ப நிலையை எப்படி தங்கள் வாடிக்கையாளர் சமாளிப்பது என்பதுக்கு போடப்பட்டது ஆனால் உண்மையிலும் கொஞ்சம் வெக்கை கூடி கிறுக்கு பிடிச்சுக்கொண்டு திரியிதுகள் .

பின்லாந்து நாட்டில் எடுக்கபட்ட படம்கள் அவை .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 50சீ. நெருப்பு அனல் வீசும். 

ஆனால் எங்கட உடுப்ப அடிக்க ஏலாதுவா

Related image

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்  இந்தாங்கோ படம்.  :grin:

9 hours ago, Maruthankerny said:

ஜெர்மனியின் ஆறு குளம் எல்லாம் 
செந்தாமரைகள் மலர்ந்துகொண்டே 
இருப்பதாகத்தான் உலக செய்திகளும் சொல்கின்றன 

படங்கள் இணைப்புக்கு நன்றி.

எனக்கு கொழும்பான் இணைத்த படங்கள் தான் பிடித்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அகஸ்தியனுக்கு... விடுமுறைக்கு போக லீவு கிடைக்காமல்,
வயித்தெரிச்சலில் எழுதின மாதிரி இருக்கு. :grin:

தமிழ் சிறி, நாங்கள் அடுத்த கிழமை டென்மார்க் போகிறோம். அங்கேயும் இதே நிலைமைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

அதிலும் வேடிக்கை என்னவென்றால், அங்கே எண்ணை தடவி திரிந்த எனக்கிட சனம், இஞ்சை சன் கிறீமை அளவுக்கு அதிகமா தடவி, அதிலும் கான்செர் வருதென்று ஒரு சேதி. இதிலே வேறை, வெயிலிக்கை போனால் கறுத்தும் போய் விடுவினமாம்.:innocent:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

பொதுவாக இங்குள்ள வீடுகள் குளிரை தாக்கு பிடிப்பதுக்கு ஏற்றமாதிரி கட்டபட்டவை அதிலும் நம்ம சனம் வீட்டை வேண்டி போட்டு வீட்டுக்குள் வெப்பநிலையை சரிபடுத்தும் சிமிளியை இடம் வேணும் எனும் காரணத்துக்கு உடைத்து போட்டு விடுவினம் பிறகென்ன பாண் போறணை போல் வீட்டுக்குள் வெப்பநிலை இருக்கும் அதிலும் சில ஏரியா கள்ளர் பயம் காரணமாக யன்னல்கள் துறப்பது கிடையாது இந்த வெக்கையிலும் .

ஆனால் ஊர் வீடுகள் அப்படியா மலைப்பாம்பு நுழையும் அளவுக்கு ஓட்டைகள் வைத்து காத்தோட்டமாய் வீடுகள் இருக்கும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kadancha said:

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

பூர்வீகம் ஏனோ உண்மைதான்.....:grin:

ஆனால் மைனஸ் 20,30 பாகை குளிருக்குள் 6 மாதம் இருந்து விட்டு பிளஸ் 30,40ற்கு வரும் போது உடம்பு கொஞ்சம் ஜீரணிக்க மறுப்பது சாதாரணம் என நான் நினைக்கின்றேன். அத்துடன் பூர்வீக இலங்கையிலும் கடந்த 40வருடங்களை விட வெப்பம் அதிகமாகியுள்ளதாகவும் பலர் கூறுகின்றனர்.
பரம்பரையாக வாழும் வெள்ளையர்களும் இந்த வருட வெப்பம் கொஞ்சம் அதிகமாகிவிட்டதெனவும் தொடர்ந்து மழையில்லாமல் வெய்யிலாக இருக்கின்றது என புலம்புவதும் காதோரம் விழுகின்றது. சிறிய ஆறுகள் வரண்டு விட்டது. காடுகள் எரிகின்றது.....சில நகரங்களில் தண்ணீரை சேமிக்குமாறு வேண்டப்படுகின்றனர். பூமரங்களுக்கு தண்ணீர் ஊற்றவேண்டாம் என ஆலோசனை வழங்கப்படுகின்றது. ஒருசில மாதங்கள் வெய்யில் என்றாலே திக்குமுக்காடும் வெள்ளையர்கள் நிரந்தர வெய்யில் என்றால் சுருகி சுருங்கி விடுவார்கள். அவ்வப்போது வெய்யிலை ரசிக்கவும் அனுபவிக்கவும் தான் சரியானவர்கள்.☀️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.