Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
01VJPAGEWIVES

மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்களிடம் பேசுகிறார் பாலாஜி. படம்: விஜயபாஸ்கர்

Published : 04 Oct 2018 18:04 IST
Updated : 04 Oct 2018 18:04 IST

ஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது.

தவறவிடாதீர்

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான கணவர்கள் அங்கு ஒன்றுகூடினர்.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், ஆசிரியர், விவசாயி, ரியல் எஸ்டேட் தரகர், முன்னாள் அரசு அதிகாரி, ரயில்வே ஊழியர் என்று கலவையான மனிதர்கள் அங்கு குழுமி இருந்தனர்.

தங்களின் மனைவிகளோடு ஏற்படும் பிணக்குகளையும், தங்களைக் கொடுமைப்படுத்த அவர்கள் சட்ட விதிகளைப் பயன்படுத்துவதையும் குறித்து அவர்கள் கவலையுடன் விவாதித்தனர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் நலச் சங்க ஹாலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் (Bharya Badhitula Sangham) இந்தக் கூட்டத்தை நடத்தினர்.

''பொதுவாக கணவர்களால் மனைவிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் கண்டிக்கிறோம். ஆனால் அதே நேரம் சில இடங்களில் மனைவிகள் அவர்களுக்குச் சாதகமாக சட்டத்தைப் பயன்படுத்தி, கணவன்களைத் துன்புறுத்துகின்றனர்'' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி.

தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துள்ள பாலகிருஷ்ணா, ''நான் இப்போது பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன்'' என்கிறார்.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், அங்கிருக்கும்போது தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகிறார். ''நான் இங்கே வந்தபோது என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. என்னுடைய மனைவி புகார் கொடுத்ததன் விளைவு இது.

நான் நீதிமன்றத்தின் மூலம் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்றாலும், என்னால் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரிய முடியவில்லை. இங்கு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதே இதற்குக் காரணம். நாங்கள் இரண்டு மாதங்களே இணைந்து வாழ்ந்தோம்'' என்கிறார்.

இந்த சந்திப்பில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் முதியவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்துப் பேசிய மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் ஜி.பாலாஜி, ''பொய்யான வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்பட வேண்டும். வருங்காலத்தில் எந்த அப்பாவி ஆணும் பிரிவு 498ஏ-வால் பாதிக்கப்படக் கூடாது'' என்கிறார்.

https://tamil.thehindu.com/india/article25123341.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

இதை  வாசிச்சு போட்டு யாழ் ஆண் சிங்கங்கள்  கமுக்கமாக போயிட்டினம் போல

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

இதை  வாசிச்சு போட்டு யாழ் ஆண் சிங்கங்கள்  கமுக்கமாக போயிட்டினம் போல

ஜெர்மன் பக்கம் இருந்து ஒருத்தர் இரவு வந்து இந்த செய்தியை பார்த்துவிட்டு  சன்னதம் ஆடுவார் பாருங்கள் .?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இதை  வாசிச்சு போட்டு யாழ் ஆண் சிங்கங்கள்  கமுக்கமாக போயிட்டினம் போல

யாரப்பா....அந்த நிழலிங்கிறது...????

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டையில் நல்லண்ணெய் தடவனும் அப்பத்தான் உறுமல் வரும் என்பது அந்த சிங்கத்துக்கு தெரியவில்லை போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, புங்கையூரன் said:

யாரப்பா....அந்த நிழலிங்கிறது...????

என்னப்பா இது.....ஓவர் தண்ணியிலை  கொமட்டை கட்டிப்புடிச்சு சத்தி எடுத்தமாதிரி ஒரு சவுண்டு.....:27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது.....ஓவர் தண்ணியிலை  கொமட்டை கட்டிப்புடிச்சு சத்தி எடுத்தமாதிரி ஒரு சவுண்டு.....:27_sunglasses:

மனைவியால் ...பாதிக்கப்பட்ட கணவர்களின்....சவுண்டு...வேற என்ன மாதிரி இருக்குமெண்டு...நீங்கள் நினைக்கிறீங்கள்?

உரக்க...சவுண்டு ...விட்டால்...நம்ம சமூகம்....இவன்...பாவமெண்டா சொல்லும்?

மனுசியை..அடக்கி வைச்சிருக்கத் தெரியாத 'விசரன்' எண்டு தானே சொல்லும்!

அதுக்காகத் தான்....அந்தச் சிங்கம்....அமத்தி வாசிக்குது போல...!?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, புங்கையூரன் said:

மனைவியால் ...பாதிக்கப்பட்ட கணவர்களின்....சவுண்டு...வேற என்ன மாதிரி இருக்குமெண்டு...நீங்கள் நினைக்கிறீங்கள்?

உரக்க...சவுண்டு ...விட்டால்...நம்ம சமூகம்....இவன்...பாவமெண்டா சொல்லும்?

மனுசியை..அடக்கி வைச்சிருக்கத் தெரியாத 'விசரன்' எண்டு தானே சொல்லும்!

அதுக்காகத் தான்....அந்தச் சிங்கம்....அமத்தி வாசிக்குது போல...!?

உதுக்கு கதை சொல்ல எனக்கு நேரமில்லை.......புட்டுக்கு மா அவிச்சுக்கொண்டிருக்கிறன்......ஆறக்குமுதல் அரிக்க வேணும்......

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இதை  வாசிச்சு போட்டு யாழ் ஆண் சிங்கங்கள்  கமுக்கமாக போயிட்டினம் போல

Image may contain: text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, புங்கையூரன் said:

யாரப்பா....அந்த நிழலிங்கிறது...????

32 minutes ago, பெருமாள் said:

தொண்டையில் நல்லண்ணெய் தடவனும் அப்பத்தான் உறுமல் வரும் என்பது அந்த சிங்கத்துக்கு தெரியவில்லை போல் உள்ளது .

23 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது.....ஓவர் தண்ணியிலை  கொமட்டை கட்டிப்புடிச்சு சத்தி எடுத்தமாதிரி ஒரு சவுண்டு.....:27_sunglasses:

Image may contain: text

சிங்கம்,  வேறை மூடில்  இருந்தால்... இப்படித்தான்,  சவுண்டு கொடுக்கும்.   :grin:  :grin:  ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

மனைவியால் ...பாதிக்கப்பட்ட கணவர்களின்....சவுண்டு...வேற என்ன மாதிரி இருக்குமெண்டு...நீங்கள் நினைக்கிறீங்கள்?

உரக்க...சவுண்டு ...விட்டால்...நம்ம சமூகம்....இவன்...பாவமெண்டா சொல்லும்?

மனுசியை..அடக்கி வைச்சிருக்கத் தெரியாத 'விசரன்' எண்டு தானே சொல்லும்!

அதுக்காகத் தான்....அந்தச் சிங்கம்....அமத்தி வாசிக்குது போல...!?

i

இது வெறும் பகிடி இல்லை 
மதுபான பாவிப்பு அதிகரிப்பதன் ஒரு காரணம் இதுதான் 

மது அருந்துபவர்கள் 
நிஜத்தை மறக்க எத்தனிப்பவர்கள்தான் 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதுக்கெல்லாம் முரண்டு பிடித்தால் உப்படித்தான் சங்கம் அமைத்து சலாப்ப வேண்டும்.....உருண்டு பிரண்டு உதவிகள் செய்ய வேண்டும்.ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கி போக வேண்டும். அதுதான் இல்லற வெற்றிக்கு வழி.....!  tw_blush:

 Image associée

12 hours ago, புங்கையூரன் said:

யாரப்பா....அந்த நிழலிங்கிறது...????

16 நாள் ஒன்றும் இல்லாமல் காஞ்சு போய் கிடந்த சிங்கம் இப்ப பம்மிக் கொண்டு நிற்குது..உதுக்குள்ள பெரிசா சவுண்டு விட்டு இன்னும் 10 நாள்கள் காய ரெடி இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/5/2018 at 1:02 AM, புங்கையூரன் said:

மனைவியால் ...பாதிக்கப்பட்ட கணவர்களின்....சவுண்டு...வேற என்ன மாதிரி இருக்குமெண்டு...நீங்கள் நினைக்கிறீங்கள்?

உரக்க...சவுண்டு ...விட்டால்...நம்ம சமூகம்....இவன்...பாவமெண்டா சொல்லும்?

மனுசியை..அடக்கி வைச்சிருக்கத் தெரியாத 'விசரன்' எண்டு தானே சொல்லும்!

அதுக்காகத் தான்....அந்தச் சிங்கம்....அமத்தி வாசிக்குது போல...!?

 கலியாணம் கட்டி பிள்ளை பெத்தவர் ஏன் என்னத்துக்கு  அரசமரத்துக்கு கீழையிருந்து ஞானியானார் எண்டு விளங்குதோ? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 கலியாணம் கட்டி பிள்ளை பெத்தவர் ஏன் என்னத்துக்கு  அரசமரத்துக்கு கீழையிருந்து ஞானியானார் எண்டு விளங்குதோ? :grin:

வாழ்க்கையின் ஒழுங்கு அது தானே, அண்ணை!

பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம். சன்னியாசம்....!?

  • கருத்துக்கள உறவுகள்

“அவளைத் தொடுவான் ஏன்ன்?

கவலைப் படுவான் ஏன்?

கச்சேரி முன் கைகட்டி நிற்பானேன்?”  என்று முன்னர் பல சொல்லிக் கேட்டிருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kavi arunasalam said:

“அவளைத் தொடுவான் ஏன்ன்?

கவலைப் படுவான் ஏன்?

கச்சேரி முன் கைகட்டி நிற்பானேன்?”  என்று முன்னர் பல சொல்லிக் கேட்டிருக்கிறேன்

01VJPAGEWIVES

இந்தக்  கூட்டத்தில், கலந்து கொண்டு உள்ளவர்களின்.. முகத்தில் எவ்வளவு கவலை அப்பியுள்ளது.
ஒருவரின் முகத்திலும், சிரிப்பை காணவில்லை.
அதிலும்.... முன் வரிசையிலுள்ள அந்தத் தடியனைப்  பார்க்க பாவாமாய் இருக்கு.
ஹ்ம்ம்... இந்த உடம்பை வைச்சிருந்தும், மனுசிக்கு  பயப்பட வேண்டி இருக்கு.  எல்லாம் விதி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த உடம்பை வைச்சிருந்தும், மனுசிக்கு  பயப்பட வேண்டி இருக்கு. 

இந்த உடம்பை வைச்சிருந்தால் மனுசியும் பயப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

நான்..  இந்த தலைப்பை மனுசிக்கு காட்டினன்.  மனுசி வழமையை விட அதிகமா சவுண்டு விட்டுக்கொண்டு போச்சு. நாங்க அசறல்ல. 

எங்கும் ஒரு பய பக்தி இருந்தா.. வெட்டி ஆடிடலாம்.

இல்லறம்.. என்பது ஒரு கலை. ஒழுங்கா கற்காட்டி.. கஸ்டம் தான். ?

ஆனால்... உண்மையில்.. பாதிக்கப்படும் ஆண்களுக்கு நீதி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த சங்கம் வளரனும்.. சட்டங்களில் உள்ள ஒரு பக்கச் சார்ப்புகள் நீக்கப்பட்டு.. பொதுமைப்பட வேண்டும்.. சட்டங்களும் பிரயோகங்களும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

On 10/4/2018 at 5:03 PM, பிழம்பு said:

இவர் ஏன் வாசலைப் பார்த்து கும்பிடுகிறார்..? 

ஒருவேளை அவரின் மனைவி அடித்துத் துவைத்து பெண்டு நிமித்த வந்துவிட்டாரோ..? ?

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dmFkaXZlbHUva292YWl

அதிக சேதாரம் இருந்தா போராட தானே வேணும்.. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் வாசலைப் பார்த்து கும்பிடுகிறார்..? 

ஒருவேளை அவரின் மனைவி அடித்துத் துவைத்து பெண்டு நிமித்த வந்துவிட்டாரோ..? ?

à®®à®à®¾ பிரப௠வநà¯à®¤à®¿à®à¯à®à¯à®à¯à®à®³à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்ன கவலையடைந்த ஆட்களைப்பார்க்க்க பாவமா இருக்கு கேட்டால் சிங்கம் என்று பீத்திக்கொள்வது  பொட்டிப்பாம்புகள் என்று கூறி :)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

01VJPAGEWIVES

இவர் ஏன் வாசலைப் பார்த்து கும்பிடுகிறார்..? 

ஒருவேளை அவரின் மனைவி அடித்துத் துவைத்து பெண்டு நிமித்த வந்துவிட்டாரோ..? ?

இவரின் மனைவி,  வாசலில் உள்ள... ஜன்னலுக்கு பக்கத்தில்....  
உட்கார்ந்து,  உன்னிப்பாக... பார்த்துக் ? கொண்டு   இருக்கிறார்.  கவனிக்கவில்லையா... வன்னியன்.  :grin:

ஆண்களுக்கான  கூட்டத்தில்...   உள்ளே நுழைந்த, பெண்களின்  வேவுப் படை  பெண்மணியை.. பாராட்டியே ஆக வேண்டும்.⛑️
அவரை... வெளியேற்றத்  தெரியாத ஆண்கள் எல்லாம்  ? 
அடுத்த முறை கூட்டத்துக்கு... ?  "சீலை"  ?  கட்டிக்  கொண்டு வாங்கப்பா.  :grin:  :grin:  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்து சொன்ன கவலையடைந்த ஆட்களைப்பார்க்க்க பாவமா இருக்கு கேட்டால் சிங்கம் என்று பீத்திக்கொள்வது  பொட்டிப்பாம்புகள் என்று கூறி :)

மகனே...!

கட்டமுதல் நாங்களும் உன்போல் அரிமாதான் 

கட்டியதும் கட்டி விட்டாள் கட்டிலில்தான்  

முட்டிப்பார்த்தும் முடியவில்லை பகலினில் 

கட்டியணைப்பில் கட்டுண்டோம் இரவினில்

கெட்டிமேளம் உனக்கும் கொட்டும் --- கை 

கொட்டி சிரிக்காதே காலம் உன்னையும் கட்டுங்கால் 

பெட்டிக்குள் சுருண்டு சிலிர்ப்பாய் பாம்பாய்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.