Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, tree, plant, outdoor and nature

இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. 

Image may contain: plant, tree, outdoor and nature

அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம்.

Image may contain: sky, ocean, bridge, outdoor, water and nature

தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி.

Image may contain: sky, tree, plant, house, cloud, outdoor and nature

ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து  எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. 

Image may contain: sky, ocean, outdoor, nature and water

செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி..  ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. 

Image may contain: tree, plant, sky, outdoor, nature and water

யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.

Image may contain: sky, tree, outdoor and nature

தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை. 

Image may contain: sky, plant, tree, nature and outdoor

செம்பருத்தியின் அழகு. செவ்வரத்தை. 

Image may contain: sky, tree, outdoor and nature

தலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே.

Image may contain: one or more people, sky and outdoor

நல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு.  பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா.

Image may contain: one or more people and outdoor

அன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான்.

Image may contain: cloud, sky, outdoor and nature

பறவைகளின் உல்லாச புரி. பண்ணை.

Image may contain: sky, plant, tree, outdoor, nature and water

இன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள்.

Image may contain: ocean, sky, outdoor, water and nature

பண்ணையில் மீன்பிடி. மரபுவழியோ...?! 

Image may contain: tree, plant, outdoor, nature and water

வடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள்.

Image may contain: sky, outdoor, nature and water

அமைதியாக ஓடும் மாஒயா. 

Image may contain: plant, tree, sky, outdoor and nature

வெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

மூங்கில் உரசல்.

Image may contain: plant, tree, sky, outdoor and nature

மத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை. 

Image may contain: plant, tree, outdoor and nature

பலாக் காடு.

Image may contain: plant, nature and outdoor

தானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை. 

Image may contain: sky, grass, outdoor and nature

அழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப்பைக்கூடம். 

Image may contain: ocean, sky, outdoor, water and nature

நயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி. 

Image may contain: sky, cloud, ocean, outdoor, nature and water

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

Image may contain: plant, tree, sky, outdoor and nature

எங்கள் வீட்டு முற்றத்தில் பிள்ளைகளை பிரதிநிதித்துவம் செய்து வளரும் தென்னம்பிள்ளை. பின்னே உடைக்கப்பட்ட வீட்டின் கற்குவியல். அதற்குள் கதை அமைத்தால்..  ஆயிரம் திரைப்படங்கள் எடுக்கலாம். 

Image may contain: sky, tree, outdoor, nature and water

அழகிய பனங்கூடல். இதன் அருகே மிக ஆடம்பர சிங்கள இராணுவ வளாகம். பயிற்சிக் கூடங்கள்.. இயற்கையான தடாகங்கள் புடைசூழ.  ஆக்கிரமிப்பும் அழகு பார்க்கும். 

Image may contain: plant, outdoor and nature

கமுகம்பிள்ளை. தாரவங்களையும் பிள்ளைகளாகக் கருதிய உயிர்நேய சமூகம் தமிழ் சமூகம். இன்று.. வாள்வெட்டு.. போதையென்று.. சீரழியுது.

Image may contain: outdoor

No photo description available.

சேவலும் மயிலும்.. கதிரேசன் கோவில் செல்லப் பிராணிகள். (கொழும்பு 04)

Image may contain: sky, outdoor, nature and water

விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார்.

ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. 

Image may contain: ocean, sky, water, beach, cloud, outdoor and nature

பேரலையாக எழும் இந்து சமுத்திரம் - களுத்துறை - இங்கு விகாரையை விட மசூதி மின்னுகிறது மிகப் பெரிதாக. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

அழகிய குருணாகல்.

Image may contain: sky, cloud and outdoor

செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம்.

Image may contain: sky, twilight and outdoor

குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்)

Image may contain: sky, tree, plant, outdoor and nature

மாவும் தென்னையும்.

மிகுதி..பார்த்துத் தொடர்வம்.....................................

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தீவு எப்பவும் அழகுதான்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்கள் அதனூடே சிலவற்றில் உங்கள் ஆதங்கங்களையும் காண முடிகின்றது....தொடருங்கள் நெடுக்ஸ்........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

Image may contain: sky, cloud, tree, outdoor, nature and water

களுகங்கை - தெளிவான ஓட்டம்

Image may contain: sky and outdoor

Image may contain: sky and outdoor

Image may contain: sky and outdoor

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி இப்பவும் சிங்கள விமானப்படையின் தளமாக இயங்குகிறது. உலகில் ஒரு சிவில் விமானப் போக்குவரத்துக்குள் இராணுவ மற்றும் போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இந்த விமான நிலையம் மட்டுமே போரற்ற காலத்திலும் விளங்கக் கூடும். ஆனால் சர்வதேச சிவில் விமான பயண விதிசமைப்போரும் சரி.. சிவில் விமான நிலையங்களின் விதிசமைப்போரும் சரி.. இதுவிடயத்தில் மிகுந்த மெத்தனத்தையே கடைப்பிடிக்கின்றனர்.  அதுதான் புரியாத புதிராக உள்ளது. 

Image may contain: night

குருணா(கல்) புத்தர் முகப்பு.

Image may contain: one or more people, tree, sky, outdoor and nature

நயினாதீவு அம்மன்வேப்ப மரம். காதலர்களுக்கு நிழல் கொடுக்கிறது. கால்நடைகளுக்கும் கூட. 

Image may contain: cloud, sky, tree, outdoor, nature and water

சதுப்பு நிலம்... பறவைகளின் யாழ்ப்பாண வேடந்தாங்கல். (அராலி)

Image may contain: plant

பாம்புச் செட்டை. 

Image may contain: ocean, sky, outdoor, nature and water

வேலணை சாட்டி கடற்கரையில் காத்துக்கிடக்கும்.. நீரூந்துருளி.

Image may contain: ocean, sky, outdoor, nature and water

தெளிவான கடல். கரை வரை மீன்கள் வாழ்ந்து நிற்கும் மாசற்ற கடற்கரை. எனி என்னாகுமோ..?!

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில் ஊருக்கு போய் இருந்தீர்களா?...படங்களோட படங்களாய் உங்கட குடும்ப படத்தையும் போடுறது 😮 
 
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.

அழகான படங்கள்! 

அதற்கேற்ற வர்ணனைகள்!

னாங்கள் அங்கு வாழ்ந்த காலங்களில்...யமுனா ஏரி என்றார்கள்!

இப்ப அதையும் மாத்திட்டாங்கள் போல...!

என்னய்யா குருவிகள் ஒன்றைதானும் காணவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை, நாங்களும் ரசித்தோம்.
மக்கள் கூடும் இடங்களான... திருநெல்வேலி சந்தை, யாழ். நவீன சந்தை, பஸ்நிலையம் போன்ற இடங்களில்...
எடுத்த படங்கள் இருந்தால்...  இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்கள் ...தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அழகான படங்களை, நாங்களும் ரசித்தோம்.
மக்கள் கூடும் இடங்களான... திருநெல்வேலி சந்தை, யாழ். நவீன சந்தை, பஸ்நிலையம் போன்ற இடங்களில்...
எடுத்த படங்கள் இருந்தால்...  இணைத்து விடுங்கள்.

மக்கள் கூடும் இடங்களை எடுக்க தோனேல்ல. பெரிய மாற்றங்கள் அவற்றில் இல்லை. ஆரிய குளம் பகுதி மட்டும்.. விகாரை.. புத்த பிக்குகளுக்கு ஆடம்பர விடுதிகள் என்று மாறி இருக்குது. மற்றும்படி.. இன்னும் பல இடிபாடுகள் யாழ் நகரில்.  குறிப்பாக வெலிங்கடன் தியேட்டர் பகுதி அப்படியே கிடக்குது. 

அபிவிருத்தி அபிவிருத்தி என்றாங்கள்.. கோட்டையை சுற்றி சில மாற்றங்கள். மற்றும்படி.. அபிவிருத்தி என்றால்.. ரோட்டுப் போட்டிருக்குது. அதுவும் இராணுவம்.. கடற்படை.. விமானப்படை.. ஓடித்திரிய வசதியாப் போட்டிருக்குது. 

மக்களுக்கான அபிவிருத்தி... என்பது மக்களால்.. செய்யப்பட வேண்டிய நிலை.

அதிலும் ரோட்டுக் கூட.. அரசாங்கக் கட்சிக்கு அல்லது அதன் ஒட்டுக் கட்சிக்கு.. ஆதரவுன்னா தான் அபிவிருத்தி அடையும். இப்படி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். ஏனெனில்.. யாழ் பிறவுன் வீதி அபிவிருத்தியடையக் காணம். ஏனென்று விசாரித்த இடத்தில் அங்கு மக்கள் வீணைக்கோ... வெற்றிலைக்கோ ஆதரவில்லையாம். வீட்டுக்கு ஆதரவாம். அதனால் அபிவிருத்தி கட். இது ஓர் உதாரணம்.. மட்டுமே. இப்படிப் பல. 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: aeroplane, sky, cloud, nature and outdoor

வான் கடலில் ஓர் மிதப்பு.

Image may contain: food

Image may contain: food and text

Image may contain: food

ஊரில் பொங்கல்.. படையல்.

Image may contain: plant, flower and outdoor

இது சிறப்புப் பொங்கல் - உடைந்த வீட்டுக் கல்லெடுத்து.. ஏதோ கட்டின வீட்டின் முன் பொங்கல். ஈழத் தமிழர்களிடம் மட்டும் தான் இந்த அனுபவம் இருக்க முடியும். 

Image may contain: tree, plant, sky and outdoor

குலை குலையா செவ்விளநீர்.. ஆனா வீதியில் வாங்கினால் தான் குடிக்கலாம். அதுவும் ஒன்று நூறு ரூபா. 

Image may contain: sky, tree, cloud, plant, outdoor, nature and water

கழிமுகம் Estuary - இந்து சமுத்திரமும் களுகங்கையும் கலக்குமிடம். 

Image may contain: ocean, sky, outdoor, water and nature

அமைதியான நயினைக்கடல். இதுக்க தான் பல அம்மாமார்.. காதலிகள்.. குதிச்சு சாகப் போறம் என்று ஊரில வெருட்டிறது.

Image may contain: one or more people, sky, cloud, outdoor and nature

யாழ் இந்து மைதானத்தில்... கிரிக்கெட் அட்டம் ஒன்றை ரசித்த போது. மைதானம் பெரிதாகி இருக்குது.. ஆனால் இன்னும் நினைத்த ஓவல் சேப்பை எடுக்கல்ல. 

Image may contain: tree, sky, plant, outdoor and nature

சாட்டி வேலணை - ரில்கோவின் முதலீடு.. உல்லாச விடுதி.. பூங்கா.

Image may contain: sky, plant, outdoor, nature and water

சாட்டிக் கடல் கடற்தாவரம். நிறைய சிறிய வகை மீன்களின் வாழிடம்.

Image may contain: plant, flower, nature and outdoor

ஊரில் புல் பூண்டுக்கு மட்டுமல்ல.. பூக்களுக்கும் பஞ்சமில்லை.

Image may contain: tree, sky, plant, ocean, outdoor and nature

தென்னையும் பனையும் சேர்ந்து இருக்கும்  காட்சி.. அது யாழ்ப்பாணத்தில் தான் அதிகம். 

Image may contain: sky, ocean and nature

முகில்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட காலம் போய் முகில்கள் மேல் மிதந்த நேரத்தில்... 

காட்சிகள் முற்றும். 😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

அழகான படங்கள்! 

அதற்கேற்ற வர்ணனைகள்!

னாங்கள் அங்கு வாழ்ந்த காலங்களில்...யமுனா ஏரி என்றார்கள்!

இப்ப அதையும் மாத்திட்டாங்கள் போல...!

யமுனா ஏரி என்போரும் உண்டு.. யமுனா ஆறு என்போரும் உண்டு. ஏனெனில்.. இது ஒரு மழைகாலத்தில் ஒரு ஓடையாக ஆறு போல் ஓடுமாம். ஆனால்.. இது ஏரி போல் நிலையாக நிற்கவே தான் காணமுடிகிறது. யமுனா ஏரி கூடின திருத்தமாக இருக்கக் கூடும். 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2019 at 2:09 AM, ரதி said:

கிட்டடியில் ஊருக்கு போய் இருந்தீர்களா?...படங்களோட படங்களாய் உங்கட குடும்ப படத்தையும் போடுறது 😮 
 
அப்படி போட்டால் சொல்லுங்கள்  அடுத்த  வருடம் ஊருக்க வரும் போது ஆள .................சந்திப்பம்:)

21 hours ago, nedukkalapoovan said:

Image may contain: one or more people, sky, cloud, outdoor and nature

யாழ் இந்து மைதானத்தில்... கிரிக்கெட் அட்டம் ஒன்றை ரசித்த போது. மைதானம் பெரிதாகி இருக்குது.. ஆனால் இன்னும் நினைத்த ஓவல் சேப்பை எடுக்கல்ல. 

நெடுக்கர் அந்த சிறு கோவில் மூலை அருகில் தான் நம்ம சுவி அண்ணையின்ற வீடு நானும் சுவி அண்ணனும் இந்த கிறவுண்டலதான் சந்திச்ச நாங்கள் பள்ளிக்கு பக்கத்தில நீலாம்பரி உணவகத்தில் டீ குடிச்சம் என்றால் பாருங்களன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி போட்டால் சொல்லுங்கள்  அடுத்த  வருடம் ஊருக்க வரும் போது ஆள .................சந்திப்பம்:)

இம்முறையும் ஒரு சில வாரங்கள் தான். உறவுக்காரரிடமே போக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நிச்சயம்.. போதிய கால அவகாசம் இருப்பின் சந்திப்பதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை அற்றவர்களை சந்திப்பதில்.. பிரச்சனை என்ன இருக்குது. ☺️

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்கர் அந்த சிறு கோவில் மூலை அருகில் தான் நம்ம சுவி அண்ணையின்ற வீடு நானும் சுவி அண்ணனும் இந்த கிறவுண்டலதான் சந்திச்ச நாங்கள் பள்ளிக்கு பக்கத்தில நீலாம்பரி உணவகத்தில் டீ குடிச்சம் என்றால் பாருங்களன் 

பழைய மாணவன் என்ற ரீதியில் பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கப் போயிருந்த வேளையில்.. மச்சும் நடந்ததால்.. கிளிக் செய்யப்பட்ட படம் அது. சுவி அண்ணர் அதுக்குள்ள உள்ள ஆள் என்றால்.. ஆளைத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும். அப்படி என்றால் தெரிந்திருக்காது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படம் உங்கள் நினைவலைகளைக் கிளறி இருக்குது. 😊

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

இம்முறையும் ஒரு சில வாரங்கள் தான். உறவுக்காரரிடமே போக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நிச்சயம்.. போதிய கால அவகாசம் இருப்பின் சந்திப்பதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை அற்றவர்களை சந்திப்பதில்.. பிரச்சனை என்ன இருக்குது. ☺️

பழைய மாணவன் என்ற ரீதியில் பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கப் போயிருந்த வேளையில்.. மச்சும் நடந்ததால்.. கிளிக் செய்யப்பட்ட படம் அது. சுவி அண்ணர் அதுக்குள்ள உள்ள ஆள் என்றால்.. ஆளைத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும். அப்படி என்றால் தெரிந்திருக்காது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படம் உங்கள் நினைவலைகளைக் கிளறி இருக்குது. 😊

ம்ம் அவரோ அந்த மதிலால் பாஞ்சுதான் பள்ளிக்கு செல்பவர் என்றால் பாருங்கோவன் யாழ் இந்துக்கல்லூரிக்கு  தற்போது கமறாக்கள் அதிகம் பாடசாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் அவரோ அந்த மதிலால் பாஞ்சுதான் பள்ளிக்கு செல்பவர் என்றால் பாருங்கோவன் யாழ் இந்துக்கல்லூரிக்கு  தற்போது கமறாக்கள் அதிகம் பாடசாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது .

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

உங்கள் தனிப்பட்ட தகவல்களை சொல்ல கொஞ்ச நெருடல் கொடுத்தாலும் கோபித்து கொள்ள மாட்டியள் என்ற நம்பிக்கைதான் அண்ண நன்றி :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் தனிப்பட்ட தகவல்களை சொல்ல கொஞ்ச நெருடல் கொடுத்தாலும் கோபித்து கொள்ள மாட்டியள் என்ற நம்பிக்கைதான் அண்ண நன்றி :100_pray:

மடியில கனம் இருந்தால்தான் வழியில் பயம். டோன்ட் வொரி ...என்ஜோய் மரி .....!  😁 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/16/2019 at 10:16 AM, suvy said:

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

உங்களால் வேம்படி மதில் பாய முடியுமா? 😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உங்களால் வேம்படி மதில் பாய முடியுமா? 😄

இப்ப முடியாது என நான் நினக்கிறன் சில வேளைகளில் மீண்டும் காதல் வயப்பட்டால் ஆள் 16 அடி மதிலும் பாயும் இதுக்குள்ள வேம்படி மதில் எம்மாத்திரம் சாமி அண்ண

5 hours ago, suvy said:

மடியில கனம் இருந்தால்தான் வழியில் பயம். டோன்ட் வொரி ...என்ஜோய் மரி .....!  😁 

மிக்க நன்றி அண்ண

On 2/13/2019 at 8:52 PM, nedukkalapoovan said:

Image may contain: sky, cloud, ocean, outdoor, nature and water

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் 

நல்லாயிருக்குது தொடருங்கள் 

உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும்

பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் 

நல்லாயிருக்குது தொடருங்கள் 

உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும்

பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

அதுதான் கேள்விக்குறியுடன் விழிப்புக்குறியுடன்.. முடிக்கப்பட்டுள்ளது. மக்களை அறியாமையில் வைத்திருப்பதல்ல எங்கள் நோக்கம். அது உல்லாச விடுதியா அல்லது தேவாலயத்துடன் கூடிய உல்லாச விடுதியா அல்லது சும்மா தேவாலயமா.. என்பதை போய் தான் பார்த்தறிய வேண்டும். புத்த விகாரை இல்லாமல் இருப்பது திருப்தி.  😂

On 2/13/2019 at 10:22 AM, nedukkalapoovan said:

விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார்.

ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

அழகிய குருணாகல்.

Image may contain: sky, cloud and outdoor

செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம்.

Image may contain: sky, twilight and outdoor

குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்)

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

அந்த கோவில் பிள்ளையார் கோவில் இல்லை என நினைக்கின்றேன். நான் கடைசியாக (2000) போகும் போதும் அங்கு ஒரு முருகன் கோவில் மட்டுமே இருந்தது. அந்தக் கோவிலிற்கு ஒவ்வொரு வெள்ளியும் அம்மா அப்பாவுடன் போயிருக்கின்றேன்.

83 யூலை கலவரம் தொடங்க முன்  இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று இருந்தது. கணேவத்த எனும் ஊருக்கு ஒரு சிங்கள பொலிசின் உடல் வடக்கில் இருந்து வந்த போது ஆரம்பித்தது என நினைக்கின்றேன். அப்பா அரச அலுவலகர் என்பதால் இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடோன்றிற்கு எம்மை பாதுகாப்பாக அனுப்பி வைத்து இருந்தார்.

மீண்டும் நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

உங்கள் நினைவுகளை மீட்டிக்கொண்டமைக்கு நன்றி.

இப்போது அங்கு ஒரு விநாயகர் முன்னுக்கு இருக்கிறார்.  உண்மையில்..  அது முருகன் ஆலயமாக இருக்கக் கூடும். ஆனால் அழகிய வர்ணம் தீட்டப்பட்ட பிள்ளையார் முன்னுக்கு இருக்கக் கண்டேன். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.