Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

attack-720x450.png

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆராயும் வகையில், மத்திய அமைச்சரவை குழு அவசரமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வமா பகுதியில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர்.

இப்பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக குறித்த பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆராயும் வகையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

44 படை வீரர்களின் உயிரை காவுகொண்ட குறித்த பயங்கரவாதத் தாக்குதலை ஜெய்ஷ், முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதலுக்கு  இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர், புல்வமா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து  அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புல்வமா-தாக்குல்-விவகாரம/

  • கருத்துக்கள உறவுகள்

எம்பி தேர்தல் வருகுது .. தேசபக்தி வேற கிலோ கணக்கில் குறைந்து வருகுது .. பலியான அப்பாவிகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் ..

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

india-sri-lanka-300x200.jpgகாஷ்மீரில் நேற்று முன்தினம் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 வரையான துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு செயற்படும், ஜெய்ஷ் ஈ மொகமட் என்ற தீவிரவாத அமைப்பே என்று குற்றம்சாட்டியுள்ள இந்தியா, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் ஒரு நகர்வாக, புதுடெல்லியில் உள்ள 25 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா, ஜேர்மனி, தென்கொரியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், கனடா, பிரித்தானியா, ரஷ்யா, இஸ்ரேல், பூட்டான், சுவீடன், உள்ளிட்ட  25 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலர் நிலைமைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/02/16/news/36431

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

india-sri-lanka-300x200.jpg.

இந்த நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் ஒரு நகர்வாக, புதுடெல்லியில் உள்ள 25 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா, 

http://www.puthinappalakai.net/2019/02/16/news/36431

சிறிலங்காவிடமிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது என்பது இந்தியாவின் கனவு......

அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்பது இதுக்கு சரிவ‌ராது...கண்டியளோ:14_relaxed:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்து பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் பயணம் -10 பில்லியன் டாலர் நிதியுதவியும் வாரி வழங்குகிறார்..!

saudi-sultan.jpg

காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் செயலை கண்டித்து அந்நாட்டை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் 40 பேர் வீர மரணம் எய்த ரத்தம் காயும் முன்னே பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று பாகிஸ்தான் சென்றுள்ளார்.பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறும் வேளையில் அந்நாட்டுக்கு புத்துயிர் கொடுப்பதாகக் கூறி 10 பில்லியன் டாலர் நிதியையும் தாராளமாக வாரி வழங்குகிறார் சவூதி இளவரசர்.

சவூதி போன்று சீனாவும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thesubeditor.com/news/india/10825-saudi-crown-prince-sultan-tours-pakistan-today.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தோழர் இந்நேரத்தில் உங்களுக்கு இந்திராகாந்தி நினைவில் வருகிறாரா இல்லையா.....!  😐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஏன் தோழர் இந்நேரத்தில் உங்களுக்கு இந்திராகாந்தி நினைவில் வருகிறாரா இல்லையா.....!  😐

இந்திரா காந்தியே இருந்தாலும் இப்ப பூரிக்கு மாவுதான் பிசைய வேண்டும் . பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வென்றால் பட்டாசு கொளுத்துவார்கள் .. போக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போல அவையாளின்ர கட்சிகளும் அதிகம் .. மக்கள் தொகையும் அதிகம் "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் " அல்லோ அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகுது..☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சவூதி போன்று சீனாவும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு  தாராள உதவி செய்கின்றது தானே.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு  தாராள உதவி செய்கின்றது தானே.:rolleyes:

எங்கோ இருக்குற அமெரிக்காவை காட்டி தேச பக்தியை வளர்ப்பதை விட பக்கத்தில் இருக்குறவளை காட்டி சுலபமா வளர்க்கலாம் ..☺️

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத்தின் மீதான இந்தியர்களின் அபிமானம் எப்படியென்று எனக்குத் தெரியாது. ஆனால், திரைப்படங்களில் கட்டப்படும் தேசபக்தி மற்றும் ராணுவத்தின்மீதான அபிமானம் என்பவற்றைப் பார்க்கும்போது, தமிழர்கள் தேசபக்திகொண்டவர்கள்போலத்தான் உணர்கிறேன். இதைக் குறைகூறவும் முடியாது, ஏனென்றால், தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், பட்டாளத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிரைவிடுவதென்பது மிகவும் மகத்தான தியாகங்களில் ஒன்று.

ஆனால், காஷ்மீர் பிரச்சினைபற்றி தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி அறிய ஆவல், தோழர் தமிழ்த் தேசிகனின் கருத்து உற்பட. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கம்தான் என்று அவர்கள் நினைத்தால், இந்திய தேசியவாதத்தால் உந்தப்பட்டவர்கள் என்றுதான் பொருள்படும்.

 இந்திய ராணுவம் செய்தகொடுமைகளை ஈழத்தமிழர்கள் நன்கே அனுபவித்து அறிந்திருக்கிறார்கள். அதனால், இந்திய ராணுவம் மேலான ஈழத்தமிழர்களின் பார்வை மிகவும் வேறானது. 

என்னைப்பொறுத்தவரையில், மதத்தால் வேறுபட்டாலும்கூட, காஷ்மீர் முஸ்லீம்களும் ஈழத் தமிழர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் வேறுபட்டவை அல்ல. தொடர்ச்சியான ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும், திட்டமிட்ட இனவழிப்பிற்கும் உற்பட்டு வரும் இனங்கள் தான் இவை இரண்டும். அடக்குமுறையாளர்களுக்கெதிரான அம்மக்களின் போரட்டாம் பயங்கரவாதம் என்பது இந்திய தேசியவாதத்தின் கருத்து. அப்படியானால், ஈழத்தமிழரது போராட்டமும் பயங்கரவாதமாகப் பார்க்கப்படல் வேண்டும்.

கொல்லப்பட்ட 43 மத்திய பொலீஸ் படையினரும் அங்கே சுற்றுலா போகவில்லை. மாறாக காஷ்மீரிகளின் நிலத்தை ஆக்கிரமிக்கவே அங்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் சிவிலியன்களோ அல்லது தேவதூதர்களோ அல்ல. இலக்குவைக்கப்பட்டது சரியானதுதான். பலவீனமான மக்களின் பலமான ஆயுதம் தற்கொலைத் தாக்குதல்தான். 

43 படையினரைக் கொல்வது பயங்கரவாதம் என்றால், அப்பாவிகளைக்கொல்வது என்ன வாதம்? தேசியவாதமா?

ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு இரங்கலும், பண உதவியும் செய்யும் பிரபலங்களும், அரசியல்வாதிகளும், 1990 முதல் இன்றுவரை காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு கொடுத்திருக்கும் தீர்வு என்ன?? மேலும் மேலும் ராணுவ ஆக்கிரமிப்பும், கெடுபிடியும்தானே? 

உலகின் கண்ணை மறைத்துக்கொண்டு, கடுமையான செய்தித் தணிக்கையை அமுல்ப் படுத்திக்கொண்டு காஷ்மீரில் இந்திய செய்துவரும் மனிதவுரிமை மீறல்களை ஆமோதிப்பதன் இன்னொரு வடிவம்தான் கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு இரங்கலும், காஷ்மீரிகளுக்கெதிரான கண்டனமும். 

நடத்தப்பட்டது துல்லியமான, வெற்றிகரமான தாக்குதல். காஷ்மீர் போராளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீர் உண்மையில்...இந்தியாவுக்கு உரியதல்ல!

திருமதி மவுண்ட்பேட்டனுக்கும்....நேரு மாமாவுக்கும்....ஓடிப் பிடித்து விளையாட ஒரு பனி சறுக்கு மைதானம் அவசியமாகத் தேவைப்பட்டது!

இலங்கைச் சுதந்திரத்துக்கு மட்ட்டுமல்ல.....இந்தியச் சுதந்திரத்துக்காகப்...போராடியவர்களில் தமிழர்களே...முன்னோடிகளாக இருந்தார்கள்!

மகாத்மா காந்தியே....இதனை.....உறுதிப் படுத்தியிருக்கிறார்!

சுப்பிரமணிய பாரதியாரின்....கவிதைகளின் ஆவேசம் கூட .....இதற்குச் சாட்சியாகும்....!

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில், ஒரு இனம் தனியாக சுதந்திரமாக தன் மண்ணில் வாழ விரும்பினால் கொடுத்துவிடுவது சாலச் சிறந்தது. இவ்வளவு உயிரழப்புகளும், முறுகல்களும் அவசியமற்றவை.

காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையில் தலையிட, யாருக்கும் உரிமையில்லை.

இக்கருத்தை கூறியதால் அலுவலக குழுமத்தில் சக இந்திய தோழர்கள் என்னை விநோதமாக பார்த்தனர்..!

ஆனால் என் மனதில் மாற்றமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

இந்திய ராணுவத்தின் மீதான இந்தியர்களின் அபிமானம் எப்படியென்று எனக்குத் தெரியாது. ஆனால், திரைப்படங்களில் கட்டப்படும் தேசபக்தி மற்றும் ராணுவத்தின்மீதான அபிமானம் என்பவற்றைப் பார்க்கும்போது, தமிழர்கள் தேசபக்திகொண்டவர்கள்போலத்தான் உணர்கிறேன். இதைக் குறைகூறவும் முடியாது, ஏனென்றால், தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், பட்டாளத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிரைவிடுவதென்பது மிகவும் மகத்தான தியாகங்களில் ஒன்று.

ஆனால், காஷ்மீர் பிரச்சினைபற்றி தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி அறிய ஆவல், தோழர் தமிழ்த் தேசிகனின் கருத்து உற்பட. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கம்தான் என்று அவர்கள் நினைத்தால், இந்திய தேசியவாதத்தால் உந்தப்பட்டவர்கள் என்றுதான் பொருள்படும்.

 இந்திய ராணுவம் செய்தகொடுமைகளை ஈழத்தமிழர்கள் நன்கே அனுபவித்து அறிந்திருக்கிறார்கள். அதனால், இந்திய ராணுவம் மேலான ஈழத்தமிழர்களின் பார்வை மிகவும் வேறானது. 

என்னைப்பொறுத்தவரையில், மதத்தால் வேறுபட்டாலும்கூட, காஷ்மீர் முஸ்லீம்களும் ஈழத் தமிழர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் வேறுபட்டவை அல்ல. தொடர்ச்சியான ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும், திட்டமிட்ட இனவழிப்பிற்கும் உற்பட்டு வரும் இனங்கள் தான் இவை இரண்டும். அடக்குமுறையாளர்களுக்கெதிரான அம்மக்களின் போரட்டாம் பயங்கரவாதம் என்பது இந்திய தேசியவாதத்தின் கருத்து. அப்படியானால், ஈழத்தமிழரது போராட்டமும் பயங்கரவாதமாகப் பார்க்கப்படல் வேண்டும்.

கொல்லப்பட்ட 43 மத்திய பொலீஸ் படையினரும் அங்கே சுற்றுலா போகவில்லை. மாறாக காஷ்மீரிகளின் நிலத்தை ஆக்கிரமிக்கவே அங்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் சிவிலியன்களோ அல்லது தேவதூதர்களோ அல்ல. இலக்குவைக்கப்பட்டது சரியானதுதான். பலவீனமான மக்களின் பலமான ஆயுதம் தற்கொலைத் தாக்குதல்தான். 

43 படையினரைக் கொல்வது பயங்கரவாதம் என்றால், அப்பாவிகளைக்கொல்வது என்ன வாதம்? தேசியவாதமா?

ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு இரங்கலும், பண உதவியும் செய்யும் பிரபலங்களும், அரசியல்வாதிகளும், 1990 முதல் இன்றுவரை காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு கொடுத்திருக்கும் தீர்வு என்ன?? மேலும் மேலும் ராணுவ ஆக்கிரமிப்பும், கெடுபிடியும்தானே? 

உலகின் கண்ணை மறைத்துக்கொண்டு, கடுமையான செய்தித் தணிக்கையை அமுல்ப் படுத்திக்கொண்டு காஷ்மீரில் இந்திய செய்துவரும் மனிதவுரிமை மீறல்களை ஆமோதிப்பதன் இன்னொரு வடிவம்தான் கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு இரங்கலும், காஷ்மீரிகளுக்கெதிரான கண்டனமும். 

நடத்தப்பட்டது துல்லியமான, வெற்றிகரமான தாக்குதல். காஷ்மீர் போராளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் !!!!!

தோழர் முதலில் இந்தியா பற்றி நல்ல அபிமானம் எனக்கு கிடையாது .. ஐநா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் தள்ளி போடுவதில் இருந்தே நன்றாக விளங்கி கொண்டேன் . போக அது அவயல் பிரச்னை . யாரும் தேச பக்தி பொங்கி பீறிட்டு ராணுவத்தில் சேரவில்லை வேலை வாய்ப்பு இன்மை முக்கிய காரணம் .

முஸ்லீம்கள் பற்றியும் நல்ல அபிமானம் கிடையாது . காரணம் வேலூர் , ராமநாதபுரம் , செஞ்சி உட்பட பல தமிழகத்தின் தனி தீவுகளாக மாறி வருகிறது. ஏலவே திருப்பூர் கோவை ஆகியவை வடவர்களின் கையில் சென்று கொண்டுள்ளது ..ஈழத்தின் கிழக்கு மாகணம் போல் என்றைக்கு ஆப்பு வைக்க போகினம் எண்டு தெரியாது . அவையளின் பிள்ளை பேறு விகிதம் + " மத மாற்றம் " இதற்கு காரணமாக இருக்கலாம் .

18885834394_d3797e8bda_b.jpg

மேலும் பல சைவ கோவில்கள் அவயளால் வீழ்ந்தும் உள்ளன.

இதை கட்டு படுத்தாவிட்டால் மேலும் பல தொகுதிகள் அவயல் வசம் சென்றுவிடும் என்பதே நிதர்சனம் 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நாட்டின் வல்லரசு ??  ஆனால் கஷ்மீர் மக்களை கேட்டால் அவர்களும் அடக்கு முறைக்குள் சிக்கி தவிக்கும் ஓர் இனம் தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.