Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகேதீஸ்வரத்தில் பதட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது 

IMG-20190303-WA0002.jpg

அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு  பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி  புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள்  இன்றைய தினம் (03.03) ஈடுபட்டிருந்தார்கள்

அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன்  கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும்  அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர்

சம்பவம் பற்றி மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் ஒருவர் கூட சம்மந்தப்பட்ட இடத்திற்கு  செல்லவில்லை எனவும் இருசாரான்ருக்கும் இடையில் பிரச்சினை  நடப்பதற்கு சற்று நேரத்தின் முன் ஒருபாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்

IMG-20190303-WA0006.jpg

அதே நேரத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர் ஆனாலும்  எவரும் கைது செய்யப்படவில்லை என அறிய முடிகின்றது

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்த போது இந்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது இதில் வளைவுகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்றும் இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது பொலிஸ்' நிலையத்தில் முறைப்பாடு செய்து  சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனைவரையும் அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு கட்டளை இட்டனர்

இது சம்பந்தமாக கத்தோலிக்க மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த பாதை நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் கொங்ரீட் போட்டது தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள் 

IMG-20190303-WA0007.jpg

இது சம்பந்தமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கும் போது இந்த பாதைக்கு வழக்குகள் இல்லை பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வளைவு துருப்பிடித்ததால் புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது  இந்த செயலை செய்தார்கள் அடுத்தபடியாக இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கு  வீதி அபிவிருத்தி அதிகாரா சபையின் அனுமதிக்கடிதம் உள்ளதாக தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நாங்கள் கிறிஸ்தவர்களை மதிக்கின்றோம் 

அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் அதனால் அவர்கள் எங்கள் கடவுளின் வளைவுகளை பிடுங்கிய போதும் அமைதியாக நின்றோம்  

இனக்கலவரத்தால் நம் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவையும் அழிவையும் சந்தித்தது உறவுகளுக்கள்  மதக்கலவரத்தை நாம் விரும்பவில்லை என்று நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தார்கள் 

IMG-20190303-WA0011.jpg

இரண்டு பக்கமும் இல்லாமல் வேடிக்கை பார்த்த மக்களிடம் கருத்து கேட்ட போது நீதி மன்றத்தால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை  எந்த மதமாக இருந்தாலும் சரி நாளைய தினம் திருவிழா நடக்க இருக்கிறது நாளை ஒருநாள் பொறுமையாக  இருந்து  உடைப்பது எனில் திருவிழா முடிந்த பின் உடைத்திருக்கலாம்  நாம் இப்படி கலவரங்களில் ஈடுபடுவதால் பேரினவாதிகளுக்கு சந்தர்ப்பம் அமைந்து விடும் என்கிறார்கள்

மேலும் கவலைக்கு உரிய விடயம் என்ன எனில் அங்கு  நின்ற பங்கு தந்தையர்களும் இவ்வாறான சமயங்களில் நடு நிலமையாக செயற்படாமல் ஒரு சார்பானவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடதக்கது

http://www.virakesari.lk/article/51092

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் அனைவரும் தமிழர்களே, ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் அல்ல, அதுவும் சைவத் தமிழர் வழிவந்து பிறந்து மதம் மாறியவர்கள் அல்லது மாற்றப்பட்டவர்கள். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் அனைவரும் தமிழர்களே, ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் அல்ல, அதுவும் சைவத் தமிழர் வழிவந்து பிறந்து மதம் மாறியவர்கள் அல்லது மாற்றப்பட்டவர்கள். 

எங்கிருந்தோ விரோதம் வளர்க்கப்படுகின்றது.

சரியான தமிழ் அரசியல் தலைமைகள் இல்லாததால் நடுத்தெருவில்/நட்டாற்றில் ஈழத்தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எங்கிருந்தோ விரோதம் வளர்க்கப்படுகின்றது.

சரியான தமிழ் அரசியல் தலைமைகள் இல்லாததால் நடுத்தெருவில்/நட்டாற்றில் ஈழத்தமிழினம்.

எப்படிப்பட்ட அரசியல் தலைமைகள் இருந்தாலும் இவர்களை திருத்த முடியும் என்று நினைக்கிறீர்களா ?? 

நான் ஊரில் இருப்பதால் கேட்கிறேன் இந்த கேள்வியை ஏனென்றால் பல தடவை இவர்களின் நடவடிக்கை நேரில் பார்த்து அண்ணாந்து காறி துப்பினதாக நினைச்சிருக்கிறன் ( நம்ம மீது தான் விழும்)

  • கருத்துக்கள உறவுகள்

அநீதியை தட்டிக்கேட்க யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கலாம் என்று எனக்கு எடுத்துச்சொன்ன யாழ்கள உறவுகளுக்கு சமர்ப்பணம். வளர்ந்துவரும் சமுகச் சீர்கேட்டுக்கு நல்லதோர் உதாரணம்.  இது அராஜகத்தின் இன்னும் ஓர் உருவம். இத்துடன் முடிந்துவிடாது இன்னும் தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் 'நண்டுக்களின் கூட்டம்' என எங்கோ படித்த நினைவு.

பட்டான்கள் மாதிரி, ராணுவ ஆளுமைக்குள்ளேயே இருந்தால்தான் ஒற்றுமை வரும்.

இப்பொழுது அதற்கும் வழியில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தலைவர்  தென்பகுதி...வேண்டும் என்றே...மகிந்தவின் கர்தினாலால் நியமிக்கப் பட்டவர்..போப்பிடமே எம்மினதை இழிவாக்கியவர்....இந்த சோசையும் எமது பிரச்சினைக்கு எதிரான கருத்துச் சொன்னவர்...ராசப்பு போனபின் மன்னார் மாறிவிட்டது...ராசப்புவையே இந்த குள்ளநரி  அணில்தான் படுக்கையில் கிடத்தியவன்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவர்களிடமிருந்து.... இப்படியான ஒரு  கீழ்த்தரமான  செயலை, எதிர் பார்க்கவில்லை. 😣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தமிழர்கள் 'நண்டுக்களின் கூட்டம்' என எங்கோ படித்த நினைவு.

பட்டான்கள் மாதிரி, ராணுவ ஆளுமைக்குள்ளேயே இருந்தால்தான் ஒற்றுமை வரும்.

இப்பொழுது அதற்கும் வழியில்லை..!

"பேய்கள் ஆட்சிசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்."

சிறீலங்காவில் பேய்களின் ஆட்சி தொடர்வதால் மக்கள்கூட்டம் எதையேனும் தின்னத் தேடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ்த்தவ மதகுரு இப்பிரச்சினையின் பின்னால் இருப்பதில் ஆச்சரியமில்லை. 

மடுத் தேவாலயத்தில் குருவாக இருப்பவர்கள் மன்னார், புத்தளம் நீர்கொழும்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்களத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இனவுணர்வென்பது இவர்களிடம் எப்போதும் இருந்ததில்லை. தம்மைச் சிங்களவர்களாக அடையாளம் காண்பவர்கள். வடக்குக் கிழக்கிலிருந்து வரும் கிறீஸ்த்தவக் குருக்களால் இவர்கள் போல் சரளமாக சிங்களத்தில் பேச முடியாது.
தெற்கிலிருந்து வரும் சிங்கள பக்தர்களுக்காக இந்த ஏற்பாடு. சென்ற வருடம் சித்திரை மாதம் இங்கு சென்றிருந்தேன். வழிபாட்டில் ஈடுபடலாம் என்று இருந்தபொழுது, சிங்களத்தில் வழிபாடு ஆரம்பமாகியது. ஒன்றிரண்டு சிங்களவர்கள் ஆலயத்தில் நின்றிருந்தார்கள் மீதிப்பேர் தமிழ்ர். ஆனால், குருவானவரோ முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலுமாக மாறி மாறி வழிபாடு செய்தார். கடவுளென்று வந்தபின்னர். மொழி பார்க்கமுடியாது என்றுவிட்டு வந்துவிட்டேன். 

ஆனால், மன்னார், குறிப்பாக மடுத் தேவாலயப் பகுதி சிறிது சிறிதாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிப்புப் பலகையிலிருந்து, மெழுகுதிரி, புத்தகங்கள், காணிக்கைப் பொருட்கள் விற்பவர்கள் வரை எல்லோருமே சிங்களவர்கள். ஆலயச் சூழல் முழுக்க தெற்கிலிருந்து வந்த பஸ்களும் வான்களும் தரித்து நிற்க, சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழ் மடு காணாமல்ப் போயிருந்தது.

இப்போது வளர்ந்துவரும் தமிழர்களுக்கிடையிலான பிணக்குக் கூட, சிங்கள மொழி மதகுருவினால்த்தான் தூண்டப்படுகிறதென்று நினைக்கிறேன். இயல்பாகவே தமிழருக்கெதிரான சிங்கள இனவாதத்தை மத குரு இவ்வடிவில் காட்ட முற்படுகிறார். வெறுமனே மதம் என்கிற பெயரில் கிறீஸ்த்தவ தமிழர்களும் இவர் பின்னால் ஆட்டு மந்தைகள் போல இழுபட்டால், அழிவு எங்களுக்குத்தான். 

எப்போது உணரப் போகிறார்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உரை

10 hours ago, தமிழ் சிறி said:

கிறிஸ்தவர்களிடமிருந்து.... இப்படியான ஒரு  கீழ்த்தரமான  செயலை, எதிர் பார்க்கவில்லை. 😣

சைவ மக்களும் மதபாகுபாடின்றி  கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று வழிபடுபவர்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.....tw_frown:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கேதீஸ்வர நுழைவாயிலில் -பறக்கும் நந்திக் கொடிகள்!!

  • 53545901_313518989367631_525827221360109
  • 53037398_2261469793909345_15953016199713
  • 53333232_2261469720576019_50881685177195

மன்னார் திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவர்காளால் நேற்றுப் பிடுங்கியெறியப்பட்ட வளைவு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஆலய நுழைவாயிலில் மீண்டும் நந்திக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

வளைவு பிடுங்கியெறியப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிவான் வளைவினை மீண்டும் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதுடன், வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், அங்குள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய தொண்டர்கள், சைவ மகா சபையின் தொண்டர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று நண்பகல் 12 மணிமுதல் வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://newuthayan.com/story/16/கேதீஸ்வர-நுழைவாயிலில்-ப.html

 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

சைவ மக்களும் மதபாகுபாடின்றி  கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று வழிபடுபவர்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.....tw_frown:

பெரும்பாலும் சைவ மக்கள் எந்தக் கடவுளின் ஆலயங்களைக் கண்டாலும், அதன் உள்ளே செல்லாவிட்டாலும்  கையால் நெஞ்சைத்தொட்டு தலைதாழ்த்தி வணங்கிச் செல்வார்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Paanch said:

பெரும்பாலும் சைவ மக்கள் எந்தக் கடவுளின் ஆலயங்களைக் கண்டாலும், அதன் உள்ளே செல்லாவிட்டாலும்  கையால் நெஞ்சைத்தொட்டு தலைதாழ்த்தி வணங்கிச் செல்வார்கள்.  

 உண்மைதான்...

கொச்சிக்கடை அந்தோனியார் கோவில்  தொடக்கம் மடுமாதா வரைக்கும் சைவமக்கள் பெருந்தொகையாக போவது வழக்கம். மட்டக்களப்பு அந்தோனியார் கோவிலிலும் சைவ மக்களின் வழிபாடு நிறைந்தே இருக்கும். ஐரோப்பாவில் வதியும் புலம்பெயர் தமிழ் சைவ மக்கள் கேவலார் தேவாலயத்திற்கும் லூட்ஸ் தேவாலயத்திற்கும்  வருடாவருடம் சென்று வருபவர்கள்.

எனது கிறிஸ்தவ நண்பர்களின் திருமண வைபவம் என்றாலும் சரி ஞானஸ்தான வைபவம் என்றாலும் சரி தேவாலயத்திற்கு  உள்ளே சென்று கலந்து கொள்பவன். வெளியில் நிற்பதில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, குமாரசாமி said:

னது கிறிஸ்தவ நண்பர்களின் திருமண வைபவம் என்றாலும் சரி ஞானஸ்தான வைபவம் என்றாலும் சரி தேவாலயத்திற்கு  உள்ளே சென்று கலந்து கொள்பவன். வெளியில் நிற்பதில்லை.

கிறித்துவ மதத்திற்கு மதம்மாறிச் சென்ற மற்றும் திருமண பந்தத்தால் இணைந்த எனது இரத்த உறவினர்களும் உள்ளனர். அவரவர் வீட்டு வைபவங்களில் அனைவரும் கூடி அதில்வரும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதும், ஆறுதல் கூறுவதும் இன்றும் தொடர்கிறது. திருமணப் பந்தமூலம் சிங்களர்களும் உறவினராக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2019 at 8:32 PM, தமிழ் சிறி said:

கிறிஸ்தவர்களிடமிருந்து.... இப்படியான ஒரு  கீழ்த்தரமான  செயலை, எதிர் பார்க்கவில்லை. 😣

ஏன் எதிர்பார்க்கவில்லை? அவர்களும் தமிழர்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Jude said:

ஏன் எதிர்பார்க்கவில்லை? அவர்களும் தமிழர்கள் தானே?

மத சகிப்புத் தன்மைக்கு.... கிறிஸ்தவ தமிழர்கள், முன் மாதிரியானவர்கள்  என்பதை...
எனது வாழ்க்கையில் பல விடயங்களில் கண்டுள்ளேன்.
போர்க்காலத்தில் கூட... எத்தனையோ பாதிரியார்கள், தமது இன்னுயிரை இழந்துள்ளார்கள்.
அதன் மூலம்...  அந்த மதத்தில், மிகுந்த மதிப்பு எனது மனதில் பதிந்திருந்தது.

புத்த, முஸ்லீம்  மதத்தை சேர்ந்தவர்கள் இதனை செய்திருந்தால் ஆச்சரியப்  பட்டு இருக்க மாட்டேன். 
தமிழ் கிறிஸ்தவர்கள் செய்தது... ஆச்சரியமாகவும், கவலையாகவும் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மத சகிப்புத் தன்மைக்கு.... கிறிஸ்தவ தமிழர்கள், முன் மாதிரியானவர்கள்  என்பதை...
எனது வாழ்க்கையில் பல விடயங்களில் கண்டுள்ளேன்.
போர்க்காலத்தில் கூட... எத்தனையோ பாதிரியார்கள், தமது இன்னுயிரை இழந்துள்ளார்கள்.
அதன் மூலம்...  அந்த மதத்தில், மிகுந்த மதிப்பு எனது மனதில் பதிந்திருந்தது.

புத்த, முஸ்லீம்  மதத்தை சேர்ந்தவர்கள் இதனை செய்திருந்தால் ஆச்சரியப்  பட்டு இருக்க மாட்டேன். 
தமிழ் கிறிஸ்தவர்கள் செய்தது... ஆச்சரியமாகவும், கவலையாகவும் இருந்தது.

பொது எதிரி அடிக்காமல் விட்டதனால் தங்களுக்குள் அடிபடுகிறார்கள், முட்டாள்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Jude said:

பொது எதிரி அடிக்காமல் விட்டதனால் தங்களுக்குள் அடிபடுகிறார்கள், முட்டாள்கள்.

என்னது உங்கள் பார்வையில் பொது எதிரிகளும் உள்ளார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

என்னது உங்கள் பார்வையில் பொது எதிரிகளும் உள்ளார்களா?

அவர்களுக்கு பொது எதிரி இருக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Jude said:

அவர்களுக்கு பொது எதிரி இருக்கவில்லையா?

நீங்கள் “அவர்களுக்குள்” அடங்கவில்லையா? 

மதமாற்றம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இனமாற்றம் பற்றிக் கேட்டதில்லை இதுவரை!

8 hours ago, ragunathan said:

நீங்கள் “அவர்களுக்குள்” அடங்கவில்லையா? 

மதமாற்றம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இனமாற்றம் பற்றிக் கேட்டதில்லை இதுவரை!

இனமும் எப்போதுமே மாறாது என்றில்லை.

காலச் சுழற்சியில், பரிணாமம் அடைந்து, ஓரினம் வேறினமாக அல்லது இனமற்றவர்களாக மக்கள் மாறுவதும் நடக்கத்தான் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

இனமும் எப்போதுமே மாறாது என்றில்லை.

காலச் சுழற்சியில், பரிணாமம் அடைந்து, ஓரினம் வேறினமாக அல்லது இனமற்றவர்களாக மக்கள் மாறுவதும் நடக்கத்தான் செய்கிறது.

குரங்கு இனம் பரினாமம் அடைந்து மனித இனம் உருவான டார்வின் கூற்றைப் பள்ளியில் பாடமாகவும் படிப்பிக்கிறார்கள். ஆனாலும் குரங்கு இனம், இன்னமும் அப்படியே குரங்காகவே இருக்கிறது ஆச்சரியமாக உள்ளது. இனி மனித இனம் பரினாமம் அடைந்து என்னவாகுமோ...🤔🤔   

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2019 at 7:29 PM, ragunathan said:

நீங்கள் “அவர்களுக்குள்” அடங்கவில்லையா? 

நான் அவர்களுக்குள் அடங்கவில்லை. அடங்கி இருந்தால் அந்த திருகேதேச்வரம் வளைவுகள் பற்றி மதம் பிடித்து அடிபட்டு இருப்பேன். 

நான் வேறு - அவர்கள் வேறு.

நீங்கள் அவர்களுக்குள் அடங்கி இருக்கிறீர்களா? எந்த பக்கம்? சைவர்கள் பக்கமா அல்லது கத்தோலிக்கர் பக்கமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.