Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

happy.jpg

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.

நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/மகிழ்ச்சியான-நாடுகளின்-ப/

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

2880px-Happiness_score_of_countries_acco

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

கட்டாயம் இல்லை. அதுக்குத்தான் இந்தியா இருக்கிறதே! சாரி   ராசவன்னியன் அண்ட் கோ ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

2880px-Happiness_score_of_countries_acco

எங்களைவிடவும் தென்னமெரிக்க, வடக்கு ஆப்பிரிக்கர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! 

ஆனால் இந்தியாகூட எங்களைப்போலதான்.

எப்போதுபோல கனடாவும் அவுஸ்த்திரேலியாவும், ஸ்கண்டிநேவியாவும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கட்டாயம் இல்லை. அதுக்குத்தான் இந்தியா இருக்கிறதே! சாரி   ராசவன்னியன் அண்ட் கோ ?

அரை முதல் ஒரு புள்ளி அதிகமாக பெற்று வாழும் நாட்டிலிருந்து இங்க பாருங்கப்பா, சாரோட அலப்பறையை..? :)

 இந்தியாவ பத்தி யாருங்கோ கவலைப்பட்டா..? 😜

தமிழ்நாடு, வளமா, மகிழ்ச்சியா இருந்தால் போதும் சாமி..!😍

  • கருத்துக்கள உறவுகள்

உலகின், முதலிடமுள்ள  மகிழ்சியான நாட்டில்  வாழ்ந்தாலும் நான் மட்டும் மகிழ்சியாக இல்லை.

"என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்" 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி  என்பதை எதை  வைத்து  கணிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை

பணம்??  பொருளாதாரம்??

சுகாதாரம்??

நிம்மதி??????

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ragunathan said:

அப்போ, மிகவும் கவலையான நாடுகளின் பட்டியலில் எத்தனையாவது இடம்? முதலாவது ???

ஊரில் மக்கள் கவலையாய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல் உள்ளது 😧

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

ஊரில் மக்கள் கவலையாய் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல் உள்ளது 😧

இல்லை, நான் அப்படியான அர்த்தத்தில் சொல்லவில்லை. சிறிலங்கா அப்படித்தான் மக்களை வைத்திருக்கிறது என்று சொல்கிறேன். அவர்கள கவலைப்படவேண்டும் என்று நான் ஏன் ஆசைப்படுகிறேன்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.

குளிர் கூடின நாடுகள் மகிழ்ச்சியாய் இருக்கிறமாதிரி தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

குளிர் கூடின நாடுகள் மகிழ்ச்சியாய் இருக்கிறமாதிரி தெரியுது.

அப்ப.... ரஸ்யாவும் மகிழ்ச்சியாக எல்லா இருக்க வேணும். :grin:
பார்க்க... அப்பிடி, தெரியேல்லையே... 😝

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

மகிழ்ச்சி  என்பதை எதை  வைத்து  கணிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை

பணம்??  பொருளாதாரம்??

சுகாதாரம்??

நிம்மதி??????

கல்வி மருத்துவம் போதுமான அளவு அரசு உதவிப்பணம் 
இருந்தால் ........
ஜாலியா படுத்து தூங்கலாம் என்கிறார்கள். 

நான் நினைக்கிறேன் 
ஸ்கண்டிநேவியா அவுஸ் கனடாவில் மற்ற நாடுகள்போல் 
இளம் பெண்கள் அதிகமா லெக்கிங்ஸ் அணிவது இல்லைபோல ...

மற்ற நாடுகளில் ஆண்கள் நிம்மதியாவேகவே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2019 at 5:54 PM, விசுகு said:

மகிழ்ச்சி  என்பதை எதை  வைத்து  கணிக்கிறார்கள்  என்று  தெரியவில்லை

பணம்??  பொருளாதாரம்??

சுகாதாரம்??

நிம்மதி??????

ஒவ்வொருவருக்கும் ஓவ்வரு விடையம் மகிழ்ச்சி. அதுக்கும் இந்த பட்டியலுக்கும் சம்பந்தம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஒவ்வொருவருக்கும் ஓவ்வரு விடையம் மகிழ்ச்சி. அதுக்கும் இந்த பட்டியலுக்கும் சம்பந்தம் இல்லை.

இந்தப் பட்டியலுக்கு சம்பந்தம் இல்லை என்ற உங்கள் கருத்தில் மாற்றமில்லை. ஏனெனில், ' கொலை, களவு, கள், காமம், பொய்கூறல்'  இவற்றைக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழ்பவர்கள் அரசுசெய்ய அவர்களுக்கு ஆதரவளித்து செல்வம் சேர்த்துச் செழித்து வாழும் மக்களைக் கொண்ட  நாடுகளே உலகில் அதிகம். அந்தவகையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளே பட்டியலில் முதலிடத்தில் இருக்கவேண்டும். 🤔

இலங்கையில்

முதல் 10 இடத்தில் உள்ள பணக்காரர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்.

1. மஹிந்த ராஜபக்ஸ (Mahinda Rajapaksa – $18 Billion)2. அர்ஜுனா ரணதுங்கா (Arjuna Ranatunga – $68 million)
3. மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena – $14million)
4. ஆறுமுகம் தொண்டைமான் (Arumugam Thondaman – $1.9million)
5. விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthy Muralitharan – $1.7million)
6. அப்துல் ஹமீது முஹம்மத் பௌசி (A. H. M. Fowzie – $1.4million)
7. சந்திரிகா குமாரதுங்கே (Chandrika Kumaratunga – $1.4 Million)
8. அனுரா குமாரா திசநாயகே (Anura Kumara Dissanayaka – $1.3 million)
9. அஹ்மத் லெப்பே மரைகாயர் அதுல்லா (A. L. M. Athaullah – $900,000)
10. ரணில் விக்ரமசிங்கே (Ranil Wickremesinghe – $860,000)

இந்தியாவில்

1.       முகேஷ் அம்பானி 15 லட்சம் கோடி ரூபாய்

2.       திலிப் சங்வி 11 லட்சம் கோடி ரூபாய்

3.       இந்துஜா சகோதர்கள் 10.1 லட்சம் கோடி ரூபாய்

4.       அசிம் பிரேம்ஜி 10 லட்சம் கோடி ரூபாய்

5.       பல்லோன்ஜி பிஸ்திரி 9.31 லட்சம் கோடி ரூபாய்

6.       லட்சுமி மிட்டல் 8.37 லட்சம் கோடி ரூபாய்

7.       கோத்ரேஜ் குடும்பம் 8.31 லட்சம் கோடி ரூபாய்

8.       ஷிவ் நாடார் 7.64 லட்சம் கோடி ரூபாய்

9.       குமார் பிர்லா 5.89 லட்சம் கோடி ரூபாய்

10.   சைரஸ் பூனவாலா 5.76 லட்சம் கோடி ரூபாய்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இந்தப் பட்டியலுக்கு சம்பந்தம் இல்லை என்ற உங்கள் கருத்தில் மாற்றமில்லை. ஏனெனில், ' கொலை, களவு, கள், காமம், பொய்கூறல்'  இவற்றைக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழ்பவர்கள் அரசுசெய்ய அவர்களுக்கு ஆதரவளித்து செல்வம் சேர்த்துச் செழித்து வாழும் மக்களைக் கொண்ட  நாடுகளே உலகில் அதிகம். அந்தவகையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளே பட்டியலில் முதலிடத்தில் இருக்கவேண்டும். 🤔

செல்வம் மட்டும்தான் மகிழ்ச்சி என்று நீங்கள் நினைத்தால் சொல்வதற்க்கு ஓன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

செல்வம் மட்டும்தான் மகிழ்ச்சி என்று நீங்கள் நினைத்தால் சொல்வதற்க்கு ஓன்றும் இல்லை

தவறான புரிதல் என்று எண்ணுகிறேன். 😥

இன்றைய உலக அரசியல், அனேகமாக கயவர்களின் தலைமையில் இயங்குவது கண்கூடு. அந்த கயவர்களின் வழிகாட்டலில் வாழ்ந்து அதுவே மகிழ்ச்சி என்று எண்ணும் மக்கள் கூட்டத்தைக் குறிப்பிட்டேன். என்னையும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நீங்கள் பார்க்க எண்ணினால் அது என் துர்ப்பாக்கியம். 😯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.