Jump to content

அழியாத கோலங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவா பெற்றோர் கல்யாணம் பேசும் போது பெடியன் படித்திருக்கிறானா,நல்ல வேலையில் இருக்கிறானா அல்லது வெளி நாட்டில் இருக்கிறானா,எவ்வளவு சம்பளம் எடுக்கிறான் என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.

மறு பக்கத்தாலே பெட்டை  வடிவாய் இருக்கோணும்,நிறைய சீதனம் கொண்டு வரோணும்,..நல்ல வேலையில் இருக்கோணும் அல்லது வசதியை பார்த்து செய்கிறார்கள்..இதில் இரு பக்கத்தாலும் மனப் பொருத்தம் பார்ப்பதில்லை.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி தங்களுக்கு வர போகும் கணவன்,மனைவி இப்படித் தான் இருக்க வேண்டும் என்ட  ஒரு எதிர் பார்ப்பு இருக்கும்...அந்த எதிர் பார்ப்பு நெருங்கும் போது வாழ்க்கை சூன்யமாகின்றது.

வாழ்க்கையில் ஒரு அளவுக்கு வரைக்கும் தான் ஒருவரால் விட்டுக் கொடுக்க முடியும்..ஒருவரே தொடர்ந்து விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிக்காது...

இருவரும் வளர்ந்த சூழ்நிலைகள் வித்தியாசமானவையாக இருக்கும்..இருவரது பழக்க வழக்கங்கள் வித்தியாசமாய் இருக்கும் ..சிலவற்றை கொஞ்ச,கொஞ்சமாய்  மாத்தலாம்..எனக்கு கிரைம் படம் பார்க்க விருப்பம்,எனது கணவருக்கு காதல் படம் தான் பிடிக்கும்..இது போன்ற சில விடயங்களில் இருவரும் சமாளித்து போகலாம்..இது பெரிய விடயமில்லை...ஆனால்,

பெண்ணுக்கு ஓவராய் கட்டுப் பாடுகள் போடுவது,அவளை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பது அல்லது பெண்கள்,தங்களோடு படுப்பதற்கும்,வீட்டு வேலைகள் செய்வதற்கும்,உழைப்பததற்கும் தான் என்று நினைப்பவர்களோடும் ....பெண்ணுக்கும் ஒரு மனசு இருக்கும்,ஆசை இருக்கும். அதை புரிந்து கொள்ள நினைக்காத ஆண்களோடும் விட்டுக் கொடுத்து வாழ முடியாது 

மறு  புறத்தே  ஆண்கள் தங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும்...அவரது பெற்றோர்,சகோதரிகளுக்கு உதவக் கூடாது...தன்னையும்,தன குடும்பத்தையும் மட்டும் கவனித்தால் போதும் என்று நினைக்கின்ற பெண்களோடும் வாழ முடியாது.

இவை எல்லாவற்றையும் விட இருவரது மனங்களும் பொருத்தி வர வேண்டும்...இருவருக்கும் மனப் பொருத்தம் ஓரளவுக்கேனும் இல்லாவிடின் எவ்வளவு தான் அனுசரித்து,விட்டுக் கொடுத்துப் போனாலும் வாழ்க்கை இனிக்காது 

இருமனத்தின் சங்கமம் தான் திருமணம்..அப்படி திருமணம் செய்தோர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பர். என்னைப் பொறுத்த வரை குறைந்த அளவினரே இப்படியான கல்யாணம் கட்டினோர் 

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ரஞ்சித் said:

உறவுகளுக்கிடையிலான, குறிப்பாக தம்பதியினருக்கிடையிலான நெருக்கம்  காலப் போக்கில் விரிவடைவதற்கான காரணம்பற்றி யாராவது எண்ணியிருக்கிறீர்களா? இது சேரும் ஆணுக்கும் பெண்ணிற்குமிடையிலான தெரிவென்பது ஆரம்பத்திலேயே சரியாக கணிக்கப்படாததன் காரணமாகவோ அல்லது,          வாழ்க்கையின் அழுத்தங்களின் அதிகரிப்பினால் ஏற்படுகின்றதென்று எடுத்துக்கொள்ளலாமா?

பேசிச் செய்யப்படும் திருமணங்களில் ஆணினதும் பெண்ணினதும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது எதிர்பார்ப்புகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல், குடும்ப கெளரவம், மூத்த பிள்ளை மற்றவர்களுக்கு உதாரணம் ஆக இருக்க வேண்டும், சொந்தத்தில் முடிக்கவேண்டும், சொத்துடன் முடிக்க வேண்டும் என்கிற தம்பதியினரின் அந்நியொன்னியத்திற்குச் சிறிதுமே சம்பந்தமில்லாத காரணிகளால் உறவு மூன்றாம் தரப்பினரால் தீர்மானிக்கப்பட்டு, நாளடைவில் ஒத்துவராதென்று இருவரும் அல்லது இருவருள் ஒருவரோ தீர்மானிக்கும்போது உறவு முற்றுப்பெறுகிறது.

அப்படியானால், காதல்த் திருமணங்கள் முறிவது ஏன்? இருவருமே அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணைந்தாலும் கூட, அவை தோற்பது ஏன்?

ஆகக் காதல் என்பது வெறும்  பதின்ம வயதில் வரும் பாட்கவர்ச்சியால் ஏற்படும் இரசாயன மாற்றம் என்பதும், தான் தேர்ந்தெடுக்கும்  துணை உண்மையிலேயே தனக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்று விளங்கிக்கொள்ள முடியாத காலத்தில் ஏற்படும் மாயை என்பதுமாகிவிடுகிறதா?

தொடங்கப்பட்ட தலைப்பிற்கும் இங்கு நான் பேசுவதற்கும் சம்பந்தமில்லை, ஆனாலும் ஒருமுறை உங்கள் கருத்தையும் கேட்டு வைக்கலாம் என்பதற்காக கேட்கிறேன்.

என்னோடு பாடசாலையில் படித்த சில ஒத்த வயதினர் 15,16 வயசிலேயே காதலிக்கத் தொடங்கி விட்டனர்...நான் இங்கு வந்தவுடன் அவர்கள் பிரிந்திருப்பார்கள் என்று நினைத்தேன்...அவர்கள் திருமணம் முடித்து சந்தோசமாய் இருப்பதை இட்டு எனக்கும் சந்தோசம் 

காதலிக்கும் போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களது குறை,நிறைகளை சுட்டி,காட்டி அவர்களை திருத்தி அவர்களோடு சந்தோசமாய் வாழ்கிறார்கள்.

பல பேருக்கு காதலிக்கும் போது சரியாய் தெரிந்த விடயம் கல்யாணத்திற்கு பிறகு பிழையாய் தெரிவது தான் பிரச்சனைக்கு காரணம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

பல பேருக்கு காதலிக்கும் போது சரியாய் தெரிந்த விடயம் கல்யாணத்திற்கு பிறகு பிழையாய் தெரிவது தான் பிரச்சனைக்கு காரணம் 

இதுவே இரண்டாம் திருமணத்தின் பின் விவாகரத்து மிகவும் குறைவு ஏன்?

2 hours ago, ரதி said:

இருமனத்தின் சங்கமம் தான் திருமணம்..அப்படி திருமணம் செய்தோர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பர். என்னைப் பொறுத்த வரை குறைந்த அளவினரே இப்படியான கல்யாணம் கட்டினோர் 

எமது திருமணம் அப்படி தான்.10 வருட காதல்.இப்போ குடும்பமாக 35 வருடம்.
தொடக்கத்தில் எப்படி இருந்தேனோ இப்பவும் அப்டியே இருக்கிறேன்.

Posted
3 hours ago, ரதி said:

என்னோடு பாடசாலையில் படித்த சில ஒத்த வயதினர் 15,16 வயசிலேயே காதலிக்கத் தொடங்கி விட்டனர்...நான் இங்கு வந்தவுடன் அவர்கள் பிரிந்திருப்பார்கள் என்று நினைத்தேன்...அவர்கள் திருமணம் முடித்து சந்தோசமாய் இருப்பதை இட்டு எனக்கும் சந்தோசம் 

இளவயதுக் காதல் காலம் காலமாகத் தொடரக்கூடியதாக இருப்பதும் ஓர் வரம் தான், ரதி. எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. சீதனம், சாதி, சோதிடம் என்று இன்னும் பல காரணிகளால் பல இளவயதுக் காதல்கள் கனவாகவே முடிந்துவிட்டன.

பதின்மவயது என்பது எழுதப்படாத வெறும் காகிதம் போல. எனவே அந்த வயதில் உண்மையாகக் காதலிக்கத் தொடங்குவோர் தங்கள் இருவருக்குமென ஓர் புதிய அத்தியாயத்தைப் புதிதாக எழுதக்கூடியதாக இருக்கிறது - இதுவே வாழ்க்கை முழுவதும் தாம் பரஸ்பரம் விரும்பியபடி புதிய அத்தியாயங்களைக் கூட்டாக எழுதி அதன்படி நல்லதோர் இல்லற வாழ்க்கையை வாழ ஏதுவாகின்றது. 

அந்தக் காகிதத்தில் வெளியாரின் எதிர்மறையான பாதிப்பு இல்லாமல் ஆக்கபூர்வமான வழிகாட்டலும், ஆலோசனைகளும் கூடவே எழுதப்படுமிடத்து அந்தக் காதல்திருமண வாழ்க்கை மேலும் செழுமையாகிறது. 🙂

Posted
On 3/25/2019 at 10:22 AM, ரஞ்சித் said:

எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. 

இந்த நிலை வந்துவிட்டால் மீதி தன்னால் நிகழும். பெரும்பான்மையானோர் நீங்கள் சித்தரிக்கும் நிலையினை அடையாதே இறந்து போய்விடுகின்றனர். நமது சமூக்தில் மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானோர், ஏதோ ஒரு பெறுமதியினை எடுத்துக் கொண்டு (அது பணம், அழகு, கல்வி இப்படி என்னவாகவேனும் இருக்கலாம்) அந்தப் பெறுமதியில் தம்மை விடக் குசறைவானவர்களாகத் தாம் கருதும் ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு அந்த வட்டத்திற்குள் தாம் றாஜாக்களாக மந்தை வளர்த்துக் கொண்டிப்பார்கள்.  தமது வட்டம் தமக்குப் பொன்னாடை போர்த்திக்கொண்டிருக்கும் வரை, தமது அகங்காரம் திருப்த்தியடைவதாக உணர்ந்துகொள்வார்கள். நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை உணர்வதற்கு முதற்படி தமக்குத் தாம் உண்மையாக இருப்பது அவசியம். தமது நிறைகுறைகள் சார்ந்தும் உணர்வுகள் இச்சைகள் தேடல்கள் சார்ந்தும் தமக்குள் தெளிவு அவசியம். பலர் இதனை அனுமதிப்பதில்லை.

இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் ஏதோ ஒரு நோவு ஏற்படுகிறது என்றால் உடனடியாக நோவுநீக்கி மாத்திரை இரண்டினை முழுங்கி விடல் ஒரு வழி. ஏன் நோவு ஏற்படுகிறது என்ற அடிப்படையினை ஆராய்ந்து அந்த அடிப்படைப் பிரச்சினைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடுவது பிறிதொரு வழி. முதலாளித்துவ சமூகம் எப்போதும் முன்னையதையே தேர்ந்தெடுக்கும். ஏனெனில் நீங்கள் நோவு நீக்கி மாத்திரையினை முழுங்கிவிட்டுஆசைப்படுதல்களத் தொடர்ந்தால் தான் சந்தைக்கு ஆதாயம். 

சுருக்கமாக, நீங்கள் சித்தரிக்கும் நிலையினை நீங்கள் உணர்ந்த மாத்திரத்தில், அந்த உணர்வுக்குச் செவிகொடுத்தலை முதல் பெறுமதி ஆக்கிக்கொள்ளுங்கள், மீதி தன்னால் நிகழும். இவை தொடர்பில் மற்றயைவருடன் உரையாடுவதோ, மற்றயையவரை மாற்ற முயல்வதோ வினைத்திறன் அற்ற தேர்வுகள். நீங்கள் உங்களுடன் இயன்றவரை அமைதிக்குள் வாழக் கற்றுக்கொள்ளுவது, இன்னுமொரு விதத்தில் சொன்னால் சும்மாயிருக்கக் கற்றுக்கொள்ளுவது பெரும் பயன் தரும். 

மொத்தத்தில் நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை நீங்கள்  பெற்றதைக் கொண்டாடுங்கள். மிக அவசியமான ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவே இரண்டாம் திருமணத்தின் பின் விவாகரத்து மிகவும் குறைவு ஏன்?

எமது திருமணம் அப்படி தான்.10 வருட காதல்.இப்போ குடும்பமாக 35 வருடம்.
தொடக்கத்தில் எப்படி இருந்தேனோ இப்பவும் அப்டியே இருக்கிறேன்.

இரண்டாவது திருமணம் செய்யும் போது முதற் திருமணத்தில் இருந்து பாடம் படித்திருப்பார்கள்...தாங்கள் முதலில் விட்ட பிழை எது என்று தெரிந்திருக்கும்..அவரசரப் படாமல் நிதானமாய் தங்களுக்கு ஏத்த மாதிரியான ஆளை பார்த்து காட்டுவார்கள்...பெற்றோர்களும் இரண்டாவது திருமணத்தில் பெரிசாய் மூக்கை நுழைப்பதில்லை...பக்குவம் வந்திருக்கும்...போன்ற பல காரணங்கள் இருக்கு 
 
நீங்கள் அதிஸ்டசாலி அண்ணா 45 வருசமாய் ஒரு பெண் உங்களை அனுசரித்து போகின்றாவே 😂
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, மல்லிகை வாசம் said:

இளவயதுக் காதல் காலம் காலமாகத் தொடரக்கூடியதாக இருப்பதும் ஓர் வரம் தான், ரதி. எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. சீதனம், சாதி, சோதிடம் என்று இன்னும் பல காரணிகளால் பல இளவயதுக் காதல்கள் கனவாகவே முடிந்துவிட்டன.

பதின்மவயது என்பது எழுதப்படாத வெறும் காகிதம் போல. எனவே அந்த வயதில் உண்மையாகக் காதலிக்கத் தொடங்குவோர் தங்கள் இருவருக்குமென ஓர் புதிய அத்தியாயத்தைப் புதிதாக எழுதக்கூடியதாக இருக்கிறது - இதுவே வாழ்க்கை முழுவதும் தாம் பரஸ்பரம் விரும்பியபடி புதிய அத்தியாயங்களைக் கூட்டாக எழுதி அதன்படி நல்லதோர் இல்லற வாழ்க்கையை வாழ ஏதுவாகின்றது. 

அந்தக் காகிதத்தில் வெளியாரின் எதிர்மறையான பாதிப்பு இல்லாமல் ஆக்கபூர்வமான வழிகாட்டலும், ஆலோசனைகளும் கூடவே எழுதப்படுமிடத்து அந்தக் காதல்திருமண வாழ்க்கை மேலும் செழுமையாகிறது. 🙂

உண்மை தான் ...எனக்கு அவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கின்றது🙂...அவர்களுக்கு,அவர்களது பெற்றோரது ஆதரவும்,ஆலோசனையும்,உதவியும்  இருந்தது 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

நீங்கள் அதிஸ்டசாலி அண்ணா 45 வருசமாய் ஒரு பெண் உங்களை அனுசரித்து போகின்றாவே 😂
 
கதை வேற மாதிரி போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் உங்கள் தேடல்கள் வரவேற்பிற்குரியன. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் வாழ்க்கையின் வழிகளில் சிலரைக் காண்கிறோம். அவர்களில் ஒருவர் எமக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவரென்று சில காலங்களிலேயே உணர்ந்துகொள்கிறோம்.  எமக்கு முற்றிலுமான நம்பிக்கையாக அவர்களை ஏற்றுக்கொள்கிறோம். அவர்களுடனான எமது வாழ்வு பற்றிய எதிர்பார்ப்புகள், கனவுகளுடன் ஒரு வாழ்வைத் தொடங்கிவிடுகிறோம்.

காலவோட்டத்தில், அவர்களுடனான வாழ்வு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சாத்தியமில்லை என்பது இன்னொரென்ன காரணங்களுக்காக எமக்கு உணர்த்தப்படும்பொழுது நாம் எதிர்பார்த்துப் பயணித்த வாழ்வின் தூரமும், மீளமுடியாத துயரும் தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து நாம் மேற்கொள்ளும் எந்தத் தேடல்களும் கேள்விகளும் காரணங்களும் நியாயங்களும் சுய பச்சாத்தாபத்திலேயே வந்து முடிவதால், நாம் இப்போதிருக்கும் வாழ்க்கையையும் சிறிது சிறிதாக தொலைக்கத் தொடங்குகிறோம். 

எமது உணர்வுகள் பற்றி உறவுகளுக்குப் புரியாது. எமது துயர்கள் அவர்கள் அறிந்தது கிடையாது. சிலருக்கு அவைபற்றிக் கேட்கவே விருப்பமில்லை. எமது கேட்கப்படாத துயர்கள் பற்றி அவர்கள் அறியவிரும்புவதுமில்லை, இருப்பதாக ஏற்றுக்கொள்வதுமில்லை. பூனை கண்களை மூடிக்கொண்டு பால்குடித்தால் உலகமே இருள்வததாக நினைப்பதுபோல, எமது துயர்கள் கேட்கப்படாதவிடத்து, அவை இருப்பதில்லை என்றே அவர்கள் நினைக்க விரும்புகிறார்கள். 

எதிர்காலக் கனவுகள் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட எமது வாழ்க்கை வெறும் விரக்தியையும், ஏமாற்றத்தையும் தாங்கொணாத் துயரையும் தருவது எமக்குத் தெரிகிறது. விடைகிடைக்காத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பதே எமக்கு வாடிக்கையாகிவிட்டது. 

இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டுபோவதுபோல இருந்த சில நிம்மதித்துளிகள் கூட இடையே வந்த வாழ்க்கை அடித்துச் செல்ல எல்லாம் தொலைத்து வெறுந்துயரில் மூழ்கிப்போவதுதான் நடக்கிறது. 

நாற்புறமும் பெருமதிற்சுவர்களுக்கிடையே முட்டி மோதி நாம் கேட்கும் கேள்விகளுக்கு நாமே பதில்களாகி, இருக்கும் எமது இப்போதைய வாழ்வையும் முடித்துக்கொள்ள பெரும்பாடு படுகிறோம். வாழ்வை முடித்துக்கொள்வதில் அப்படியொரு சந்தோஷம் எமக்கு.

புரிந்துகொள்ளா உறவுகள், கோழைத்தனமான மனிதர்கள், உணர்வில்லாத பிண்டங்களாய் சிலர் எம்மைச் சுற்றி சுற்றிவர, இவர்களுக்கெல்லாம் ஒரு "பாடம்" கற்பிக்கும் நோக்கில் மட்டுமே இப்போது எமது சிந்தனை செல்கிறது. எவர் எதைச் சொன்னாலும் கேட்கும் பக்குவமோ அல்லது நின்று சிந்திக்கும் நேரமோ எமக்கு இப்போது இல்லை. 

முடுக்கிவிட்ட கடிகாரம் போல, கண்கட்டிய குதிரை போல நாம் செல்கிறோம். உணர்வுகள் மடக்கி, புலன்கள் மறைத்து, இருப்பவை இழந்து வேகம் வேகமாக வாழ்க்கை பயணிக்கிறது. புரிந்துகொள்ளாதவர் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்டும்வரை !

On 3/29/2019 at 4:08 AM, ரதி said:

பொதுவா பெற்றோர் கல்யாணம் பேசும் போது பெடியன் படித்திருக்கிறானா,நல்ல வேலையில் இருக்கிறானா அல்லது வெளி நாட்டில் இருக்கிறானா,எவ்வளவு சம்பளம் எடுக்கிறான் என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.

மறு பக்கத்தாலே பெட்டை  வடிவாய் இருக்கோணும்,நிறைய சீதனம் கொண்டு வரோணும்,..நல்ல வேலையில் இருக்கோணும் அல்லது வசதியை பார்த்து செய்கிறார்கள்..இதில் இரு பக்கத்தாலும் மனப் பொருத்தம் பார்ப்பதில்லை.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி தங்களுக்கு வர போகும் கணவன்,மனைவி இப்படித் தான் இருக்க வேண்டும் என்ட  ஒரு எதிர் பார்ப்பு இருக்கும்...அந்த எதிர் பார்ப்பு நெருங்கும் போது வாழ்க்கை சூன்யமாகின்றது.

வாழ்க்கையில் ஒரு அளவுக்கு வரைக்கும் தான் ஒருவரால் விட்டுக் கொடுக்க முடியும்..ஒருவரே தொடர்ந்து விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிக்காது...

இருவரும் வளர்ந்த சூழ்நிலைகள் வித்தியாசமானவையாக இருக்கும்..இருவரது பழக்க வழக்கங்கள் வித்தியாசமாய் இருக்கும் ..சிலவற்றை கொஞ்ச,கொஞ்சமாய்  மாத்தலாம்..எனக்கு கிரைம் படம் பார்க்க விருப்பம்,எனது கணவருக்கு காதல் படம் தான் பிடிக்கும்..இது போன்ற சில விடயங்களில் இருவரும் சமாளித்து போகலாம்..இது பெரிய விடயமில்லை...ஆனால்,

பெண்ணுக்கு ஓவராய் கட்டுப் பாடுகள் போடுவது,அவளை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பது அல்லது பெண்கள்,தங்களோடு படுப்பதற்கும்,வீட்டு வேலைகள் செய்வதற்கும்,உழைப்பததற்கும் தான் என்று நினைப்பவர்களோடும் ....பெண்ணுக்கும் ஒரு மனசு இருக்கும்,ஆசை இருக்கும். அதை புரிந்து கொள்ள நினைக்காத ஆண்களோடும் விட்டுக் கொடுத்து வாழ முடியாது 

மறு  புறத்தே  ஆண்கள் தங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும்...அவரது பெற்றோர்,சகோதரிகளுக்கு உதவக் கூடாது...தன்னையும்,தன குடும்பத்தையும் மட்டும் கவனித்தால் போதும் என்று நினைக்கின்ற பெண்களோடும் வாழ முடியாது.

இவை எல்லாவற்றையும் விட இருவரது மனங்களும் பொருத்தி வர வேண்டும்...இருவருக்கும் மனப் பொருத்தம் ஓரளவுக்கேனும் இல்லாவிடின் எவ்வளவு தான் அனுசரித்து,விட்டுக் கொடுத்துப் போனாலும் வாழ்க்கை இனிக்காது 

இருமனத்தின் சங்கமம் தான் திருமணம்..அப்படி திருமணம் செய்தோர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பர். என்னைப் பொறுத்த வரை குறைந்த அளவினரே இப்படியான கல்யாணம் கட்டினோர் 

மிகச்சரியான கணிப்பு ரதி.

மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

எங்கள் வாழ்க்கையின் வழிகளில் சிலரைக் காண்கிறோம். அவர்களில் ஒருவர் எமக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவரென்று சில காலங்களிலேயே உணர்ந்துகொள்கிறோம்.  எமக்கு முற்றிலுமான நம்பிக்கையாக அவர்களை ஏற்றுக்கொள்கிறோம். அவர்களுடனான எமது வாழ்வு பற்றிய எதிர்பார்ப்புகள், கனவுகளுடன் ஒரு வாழ்வைத் தொடங்கிவிடுகிறோம்.

காலவோட்டத்தில், அவர்களுடனான வாழ்வு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சாத்தியமில்லை என்பது இன்னொரென்ன காரணங்களுக்காக எமக்கு உணர்த்தப்படும்பொழுது நாம் எதிர்பார்த்துப் பயணித்த வாழ்வின் தூரமும், மீளமுடியாத துயரும் தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து நாம் மேற்கொள்ளும் எந்தத் தேடல்களும் கேள்விகளும் காரணங்களும் நியாயங்களும் சுய பச்சாத்தாபத்திலேயே வந்து முடிவதால், நாம் இப்போதிருக்கும் வாழ்க்கையையும் சிறிது சிறிதாக தொலைக்கத் தொடங்குகிறோம். 

எமது உணர்வுகள் பற்றி உறவுகளுக்குப் புரியாது. எமது துயர்கள் அவர்கள் அறிந்தது கிடையாது. சிலருக்கு அவைபற்றிக் கேட்கவே விருப்பமில்லை. எமது கேட்கப்படாத துயர்கள் பற்றி அவர்கள் அறியவிரும்புவதுமில்லை, இருப்பதாக ஏற்றுக்கொள்வதுமில்லை. பூனை கண்களை மூடிக்கொண்டு பால்குடித்தால் உலகமே இருள்வததாக நினைப்பதுபோல, எமது துயர்கள் கேட்கப்படாதவிடத்து, அவை இருப்பதில்லை என்றே அவர்கள் நினைக்க விரும்புகிறார்கள். 

எதிர்காலக் கனவுகள் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட எமது வாழ்க்கை வெறும் விரக்தியையும், ஏமாற்றத்தையும் தாங்கொணாத் துயரையும் தருவது எமக்குத் தெரிகிறது. விடைகிடைக்காத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பதே எமக்கு வாடிக்கையாகிவிட்டது. 

இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டுபோவதுபோல இருந்த சில நிம்மதித்துளிகள் கூட இடையே வந்த வாழ்க்கை அடித்துச் செல்ல எல்லாம் தொலைத்து வெறுந்துயரில் மூழ்கிப்போவதுதான் நடக்கிறது. 

நாற்புறமும் பெருமதிற்சுவர்களுக்கிடையே முட்டி மோதி நாம் கேட்கும் கேள்விகளுக்கு நாமே பதில்களாகி, இருக்கும் எமது இப்போதைய வாழ்வையும் முடித்துக்கொள்ள பெரும்பாடு படுகிறோம். வாழ்வை முடித்துக்கொள்வதில் அப்படியொரு சந்தோஷம் எமக்கு.

புரிந்துகொள்ளா உறவுகள், கோழைத்தனமான மனிதர்கள், உணர்வில்லாத பிண்டங்களாய் சிலர் எம்மைச் சுற்றி சுற்றிவர, இவர்களுக்கெல்லாம் ஒரு "பாடம்" கற்பிக்கும் நோக்கில் மட்டுமே இப்போது எமது சிந்தனை செல்கிறது. எவர் எதைச் சொன்னாலும் கேட்கும் பக்குவமோ அல்லது நின்று சிந்திக்கும் நேரமோ எமக்கு இப்போது இல்லை. 

முடுக்கிவிட்ட கடிகாரம் போல, கண்கட்டிய குதிரை போல நாம் செல்கிறோம். உணர்வுகள் மடக்கி, புலன்கள் மறைத்து, இருப்பவை இழந்து வேகம் வேகமாக வாழ்க்கை பயணிக்கிறது. புரிந்துகொள்ளாதவர் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்டும்வரை !

மிகச்சரியான கணிப்பு ரதி.

மிக்க நன்றி

மாறி வரும் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கும்...இதில் மற்றவர்களது பிரச்னையை எங்கே காது கொடுத்து கேட்க போயினம்...நமக்கேன் வீண் வம்பு என ஒதுங்குபவர்கள் தான் இங்கு அதிகம் 

Posted
13 hours ago, ரஞ்சித் said:

முடுக்கிவிட்ட கடிகாரம் போல, கண்கட்டிய குதிரை போல நாம் செல்கிறோம். உணர்வுகள் மடக்கி, புலன்கள் மறைத்து, இருப்பவை இழந்து வேகம் வேகமாக வாழ்க்கை பயணிக்கிறது. புரிந்துகொள்ளாதவர் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்டும்வரை !

புரிந்துகொள்ளாதோரை நினைத்து நேரத்தையும், சக்தியையும் வீணடித்துக் கவனம் சிதறிய வாழ்க்கையை வாழ்வதைவிட, நம் நலனில் அக்கறை கொண்ட ஒரு சிலருடனாவது பரஸ்பரம் உதவி செய்து உறவாடுதல் புதிய வழிகளைத் தோற்றுவிக்கும் என நம்புகிறேன். 80/20 rule இங்கும் பயனுள்ளதாக அமையும் ரஞ்சித்! 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கருத்தாடல்கள் பாராட்டுக்கள் ரஞ்சித்.  நல்ல தலையங்கம் . அதுவும் புலம்  பெயர்ந்த  நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் எதை நோக்கி ...... மேலும் தொடர்க 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/25/2019 at 3:16 PM, ரஞ்சித் said:

நான் மனதில் இட்ட அழிக்கமுடியாத கோலங்களில் இன்றுவரை தொடர்ந்துவருவது எனது தேசம். நினைத்தவிடத்து போய்த் தரிசிக்க முடியாத கடப்பாடுகளும், ஆற்றாமைகளும் என் தேசம் மீதான ஏக்கங்களை கூட்டினவேயன்றி அழிக்க முடியவில்லை. தெரிந்தவரில் எவர் போய்வரினும் வாஞ்சையுடன் ஊர்ச்செய்தி கேட்டறியத் துடிக்கும் மனது. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பேசத் துடிக்கும் உதடுகள், ஆசையுடன் ஊர்ப்பெயர் சொல்லி நினைவு மீட்டலுக்கு கணப்பொழுதில் தயாராகும் நினைவலைகள் என்று என் இளமைக்கால ஏக்கங்களை இப்போதாவது அடைந்துவிட காத்திருக்கிறேன்.

பணவசதியும், உயர் வாழ்க்கைத்தரமும், பேரும் புகழும் இவை எதுவுமே நிறைவைத் தருவதாக நான் நினைக்கவில்லை. எதுவில்லாத பொழுதும், நான் பிறந்த மண்ணும், ஓடித்திரிந்து அள்ளி அள்ளிப் பருகிய மண்வாசனையும், கூடவே விருப்பமுடன் சேர்ந்து பழக ஒரு சில மனிதர்களும் போதுமென்று நினைக்கிறேன்.

அந்நியனின் ஆக்கிரமிப்பில் எந்தேசம் கிடந்தழுதாலும் கூட, அதுமீதான எனது ஏக்கங்களும், தாபங்களும் அப்படியே இருக்க, மீண்டுமொருமுறை என்வாழ்க்கை ஆரம்பக் கோட்டிலிருந்து தொடங்காதா என்று அங்கலாய்க்கிறேன்.  எனது இளமைக்காலங்களில் நான் தவறவிட்ட என் தேசத்துடனான எனது வாழ்க்கையை எல்லாக் காலத்திற்குமாகச் சேர்த்து வாழக் காத்திருக்கிறேன். 

நீங்கள் கூறுவது உண்மைதான். பெரும்பாலானவர்களுக்கு ஏக்கங்களும் அங்கலாய்ப்புக்களும் சாகும்வரை இருந்துகொண்டே இருக்கப்போகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது ஏக்கங்களும் நிறைவேறாத ஆசைகளும் எமக்கு கொண்டுவந்து சேர்த்தவை எவை என்பதுபற்றி அங்கலாய்க்கிறேன்.

தனிமை ஒன்றென்று சொல்லமுடியுமா? எம்மைச் சூழ்ந்த உலகமெலாம் எம்மைப் புரிந்துகொள்ளாதது எமக்குப் புரியும்போது தனிமையில் அழுவதைத்தவிர எமக்கு எதுவுமே இருப்பதில்லை. எவர்மீதும் நம்பிக்கை இல்லாமல்ப் போக எவருடனும் பேசாமல், தனியே ஒதுங்கிவிடுவது மேலென்று நினைக்கிறோம். சுற்றியிருந்த தொடர்புகள் சிறுகச் சிறுகத் துண்டிக்கப்பட எமது உலகமும் எம்மைச் சுற்றிச் சுருங்கிவிடுகிறது. வெறும் காற்றில்லாத வெறுமைக்குள் எம்மை அமிழ்த்திக் கொள்கிறோம்.

இந்த தனிமையான வாழ்க்கையில் அவ்வப்போதுஎமது கடந்த கால நினைவுகள் பசுமையுடன் உலாவரும்போது, அவை ஏன் இல்லாமல்ப் போனதென்று வினவுகிறோம். காரணம் எமக்குள்ளேயே இருந்தாலும், அதை நாம் ஏற்கப்போவதில்லை. அதை ஏற்காமலிருப்பதற்கான நியாயங்களை நாம் வலிந்தே தேடிக்கொள்கிறோம்.  எவருமே தொடர்பில்லாமலிருக்கும்போது கிடைக்கும் அமைதியை வேண்டுமென்றே வரிந்துகொண்டு இன்னுமின்னும் எமக்கு நாமே சுமைகளாகி விடுகிறோம்.

வாழ்வின் வசந்தங்கள் கருகிவிட்டதான பிரமையை உண்மையெனாறு நம்பும் நாம், அதுதொடர்பாக எதுவுமே செய்வதில்லை. பிரமை உண்மையாகிவிடுகின்றபொழுது நாம் நெடுந்தூரம் வந்திருப்பது புரிகிறது.

முற்றுப்பெறாத எமது கனவுகளுக்காக உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் நாம் வேண்டுமென்றே எம்மை வருத்துகிறோம். தேவையறிந்து சிலர் சொல்லும் அறிவுரைகளும் எமக்கு இப்போது எரிச்சலாகிட, மனதிற்குள் ஓர்மம் மட்டுமே மிஞ்சிக் கிடக்கிறது. 

ஆற்றோட்டத்தின் குறுக்கே கிடக்கும் பாறையை நீரலைகள் சுற்றிச் செல்வதுபோல , வாழ்வின் தடைகளுடன் மோதுவதைக் காட்டிலும், சுற்றிச் செல்வதே சிறந்தது என்று நாம் என்றோ கூறிய அதே வார்த்தைகள் எம்மைப் பார்த்து கேலியாக சிரிக்க, மனம் மட்டும் வைராக்கியத்துடன் கேட்க மறுக்கிறது.

கண்கட்டிய குதிரைகள் போல இருட்டில் தெரியா வழிதேடித் தொலைந்துவிடத் துடிக்கும் எமக்கு, கூட வந்து உதவும் உறவுகள் கூட வேண்டா வெறுப்பாகிவிடுவது நடக்கிறது.

இப்போதைக்கு எமது துயர்களே உலகின் பெரிதாகத் தோன்ற, அவற்றை நீக்கும் மருந்து எமது வாழ்வின் முடிவாக இருக்க விரும்பிக்கொண்டு தவணை குறித்து காத்திருக்கிறோம்..........
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/27/2019 at 2:05 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ?? ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை

ம்ம் அதேதான் நானும் தான் நேரமும் கிடைக்கவில்லை இருந்தாலும் ரகுநாதனின் தேட்ல்களில் பல கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் காலம் மட்டும் பதில் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரஞ்சித் said:

இப்போதைக்கு எமது துயர்களே உலகின் பெரிதாகத் தோன்ற, அவற்றை நீக்கும் மருந்து எமது வாழ்வின் முடிவாக இருக்க விரும்பிக்கொண்டு தவணை குறித்து காத்திருக்கிறோம்..........
 
சிந்திக்க தெரிந்த மனிதனாக எங்களுக்கு ஒரு பிறப்பு மனிதர்களாக வாய்த்துள்ளது, இதனை தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் சமூகத்திற்கும் பயனுற வாழ்ந்திற்று போவமே.
மறுபிறப்பில் நம்பிக்கையில்லை, ஏனென்றால் இப்பிறப்பின்  எந்த அனுபவமோ நினைவோ புதிய பிறப்பில் வரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓவ்வொருவரது மனக் கஸ்டங்கள்,எண்ணங்கள் வித்தியாசமானது...அதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது...எனக்கு பெரிதாய் தெரியும் ஒரு விடயம் மற்றவருக்கு ஒன்றுமே இல்லாத ஒரு விசயமாய்த் தோன்றலாம்.
தவிர,இந்தக் காலத்தில் யார் மற்றவர்களது எண்ணங்களை காது கொடுத்து கேக்கிறார்கள்...அப்படிக் காது கொடுத்து கேட்டாலும் அந்த விடயத்தினை போய் ஒன்றை பெரிதாக்கி,பத்தாக்கி சொல்லுவார்கள்...அதை விட வீட்டில் இருக்கும் சாமிப் படத்தோட கதைக்கலாம்...சாமி எதுவும் உதவி செய்யாட்டிலும் பேசாமல் கேட்டு தனக்குள்ளேயே வைத்திருப்பார்.
கணவனும்,மனைவியும் அன்டசான்ட் உள்ளவர்க்காய் இருந்தால் ஒருவரது கருத்தை மற்றவர்கள் காது கொடுத்து கேட்பார்...எது எப்படி இருந்தாலும் யார் மீதும் அளவுக்கு அதிகமாய் நம்பிக்கை வைக்க கூடாது...அடுத்தவர்கள் நம்ம பேச்சை கேக்கவில்லை,எமது எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படும் நாம் அவர்களது கருத்தினை கேட்கவோ,புரிந்து கொள்ளவோ முயற்சித்தோமா என்றும் யோசிக்க வேண்டும்.
பல நேரங்களில் தனிமை மிகச் சிறந்த மருந்து 🤭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/27/2019 at 7:35 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழகிய பெயரை ஏன் மாற்றினீர்கள் ?? ரஞ்சித் என்றதும் வேறு யாரோ என்று இந்தப் பக்கமே துடிப்பு பார்க்கவில்லை

ரகுநாதன் எனது பெயரில்லை, நண்பன் ஒருவனுடையது, இரவல் வாங்கியது. அவனுக்கும் நான் எழுதும் எதற்குமே எந்தச் சம்பந்தமும் இல்லை. சுத்தமான தமிழ்ப்பெயர் வேண்டும் என்று தேடினேன், அதனால் இவ்வளவுகாலமும் நான் எனக்கு முன்னால் நான் போட்டிருந்த முகமூடியைக் கழற்றிவிடலாம் என்று முடிவெடுத்தேன் (சத்தியமாக சொந்த முடிவென்று சொன்னால் நம்பவேண்டும்). 

எனது இயற்பெயர் ரஞ்சித் தான். என்னை அறிந்தவர்களுக்கு நான் ரஞ்சித் தான். அதையே யாழுக்காகவும் பாவிக்கலாம் என்று தோன்றியது.

ஒரு சின்னக் கேள்வி சுமே, புதியவர்கள் எழுதினாலும் நன்றாக இருக்கலாம், இல்லையா?! சும்மா, ஒரு பொதறிவுக்காகக் கேட்டு வைக்கலாம் என்று.........,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரஞ்சித் said:

எனது இயற்பெயர் ரஞ்சித் தான். என்னை அறிந்தவர்களுக்கு நான் ரஞ்சித் தான். அதையே யாழுக்காகவும் பாவிக்கலாம் என்று தோன்றியது.

ரஞ்சித், ரஞ்சிதாவை தெரியுமா உங்களுக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, colomban said:

ரஞ்சித், ரஞ்சிதாவை தெரியுமா உங்களுக்கு ?

எந்த ரஞ்சிதா? சுவாமியின் ரஞ்சிதாவா?

Posted
10 hours ago, ரஞ்சித் said:

ஒரு சின்னக் கேள்வி, புதியவர்கள் எழுதினாலும் நன்றாக இருக்கலாம், இல்லையா?! சும்மா, ஒரு பொதறிவுக்காகக் கேட்டு வைக்கலாம் என்று.........,

புதியவர்கள் என்றால் நேற்றுத் தான் மண்ணில் வந்து பிறந்தவர்கள் என்று பார்க்கப்படும் நிலையில் உங்கள் கருத்து சற்றே ஆறுதல் தருகிறது. நன்றி ரஞ்சித்! 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரஞ்சித் said:

ரகுநாதன் எனது பெயரில்லை, நண்பன் ஒருவனுடையது, இரவல் வாங்கியது. அவனுக்கும் நான் எழுதும் எதற்குமே எந்தச் சம்பந்தமும் இல்லை. சுத்தமான தமிழ்ப்பெயர் வேண்டும் என்று தேடினேன், அதனால் இவ்வளவுகாலமும் நான் எனக்கு முன்னால் நான் போட்டிருந்த முகமூடியைக் கழற்றிவிடலாம் என்று முடிவெடுத்தேன் (சத்தியமாக சொந்த முடிவென்று சொன்னால் நம்பவேண்டும்). 

எனது இயற்பெயர் ரஞ்சித் தான். என்னை அறிந்தவர்களுக்கு நான் ரஞ்சித் தான். அதையே யாழுக்காகவும் பாவிக்கலாம் என்று தோன்றியது.

ஒரு சின்னக் கேள்வி சுமே, புதியவர்கள் எழுதினாலும் நன்றாக இருக்கலாம், இல்லையா?! சும்மா, ஒரு பொதறிவுக்காகக் கேட்டு வைக்கலாம் என்று.........,

புதியவர்கள் எழுதுவது நன்றாக இருக்காது என்று யார் சொன்னது. ஆனாலும் புதுப் பெயர்களில் பலர் வந்து போயிருக்கின்றனர். பலர் தொடர்ந்து நிற்கின்றனர். பழையவர்கள் புதுப் பெயர்களில் வருகின்றனர். ஆனாலும் சில பெயர்களை பார்த்தவுடன் போய் எழுதத் தோன்றும் சில பெயர்களை போய் பார்க்க மனம் ஒப்புவதில்லை. எல்லாரும் போய் எழுதுகிறார்கள் என்று நான் போய் எழுத்துவதுமில்லை. என் பதிவிலும் கூட எல்லோரும் வருவதும் இல்லை. அதற்காகக் கோபிப்பதும் இல்லை நான். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/26/2019 at 2:16 AM, ரஞ்சித் said:

 எனது இளமைக்காலங்களில் நான் தவறவிட்ட என் தேசத்துடனான எனது வாழ்க்கையை எல்லாக் காலத்திற்குமாகச் சேர்த்து வாழக் காத்திருக்கிறேன். 

தேசத்தில் பழைய வாழ்வு வாழலாம் என்று நினைத்து இங்கு(புலத்தில்) வாழும் வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள்....

தேசம் பல வித‌த்தில் மாறிவிட்டது...வாழ்ந்த கிராமம் ,பயணித்த வீதிகள்,வழிபட்ட தேவாலயங்கள் இன்னும் பல விடயங்கள்..மாற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது...ஆனால் எமது தேடலை மாற்றிக்கொள்ளலாம்... வாழலாம்...
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

தேசத்தில் பழைய வாழ்வு வாழலாம் என்று நினைத்து இங்கு(புலத்தில்) வாழும் வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள்....

தேசம் பல வித‌த்தில் மாறிவிட்டது...வாழ்ந்த கிராமம் ,பயணித்த வீதிகள்,வழிபட்ட தேவாலயங்கள் இன்னும் பல விடயங்கள்..மாற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது...ஆனால் எமது தேடலை மாற்றிக்கொள்ளலாம்... வாழலாம்...
 
நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா,

எனது மனதில் இன்னும் பசுமையாக இருப்பவை எனது பள்ளிப்பருவக் காலத்தில் எனக்குக்கிடைத்த இனிமையான பொழுதுகளும், நான் கண்டும், கேட்டும் ரசித்த எனது தேசத்துடனான எனது அனுபவங்களும்தான். அவை அப்படியே இருக்குமா என்றால் எனக்குத் தெரியாது. பெரும்பாலும் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பதுதான் உண்மை. 

80 களில் நான் தரிசித்த எனது தேசம் இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பொத்திப் பொத்தி நான் சேகரித்த அந்த இனிமையான பொழுதுகளின் நினைவுகளை இப்போது என்னால் காணமுடியாமலிருக்கலாம். ஆனால், நான் நேசித்த அந்தத் தேசம் இன்னும் அங்கேயே இருக்கிறது. உருக்குலைந்து, மாற்றப்பட்டு, அடிமை கொள்ளப்பட்டு, அக்கிரமிப்பினுள் நாளும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. என்னுடன் வாழ்ந்தவர்கள் அங்கில்லை. எனது தோழர்கள் திக்கெட்டும் சிதறியடிக்கப்பட்டு வாழ்கிறார்கள். சிலருடன் தொடர்பிருக்கிறது, பலர் பற்றித் தெரியவில்லை. நான் இறுதிவரை நேசித்த எமது விடுதலை வீரர்கள் இப்போது அங்கில்லை. இருப்பவர்கள் குற்றுயிராக்கப்பட்டு, வாழ்விற்காகப் போராடிக்கொண்டிருக்க, மொத்தமாக தேசம் சோகத்தில் மூள்கிக் கிடக்கிறது. 

ஆனாலும், எனது தேசம் பற்றி என்னும்போதெல்லாம் உண்டாகும் அவ்வுணர்வு அப்படியே இருக்கிறது. என்னால் நெடுங்காலம் அங்கே வாழமுடியாமல்ப் போன ஏக்கம் இன்னும் இருக்கிறது. கூடவே, அச்சந்தர்ப்பம் இனிமேல் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை என்கிற பயமும் இருக்கிறது. 

புலம் விட்டெறிந்து என்னால் அங்கு போய்வாழமுடியுமா என்று நான் என்னை இதுவரைக்கும் கேட்கவில்லை. முடிந்தால் நன்றாக இருக்கும் என்றுமட்டும்தான் நினைக்கிறேன். பிள்ளைகள் அங்குவந்து வாழ்வதுபற்றி நினைத்துப் பார்க்கப்போவதில்லை. எனது தேசம் பற்றிய உணர்வு அவர்களுக்கும் என்னைப்போலவே இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 

பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.