Jump to content

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகழகான படங்கள் அசத்துகின்றீர்கள்  சகோதரி.....!

சாப்பாடு இல்லாமல் நீங்கள் சோர்ந்து வருவதை பார்த்து சிலை வடித்து விட்டார்கள்  போல் இருக்கிறது.....அது நீங்கள்தானே.....!   🌶️

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 அக்கறை நம்பர் வன்:- கமரா கவனமடி...🤣
அக்கறை நம்பர் ரூ:- தட்டிப்போடாதை...:cool:

யும் கேட்கேல்லை எண்டதுக்காக உப்பிடிப் பழிபோடுறதே😄

5 minutes ago, suvy said:

அழகழகான படங்கள் அசத்துகின்றீர்கள்  சகோதரி.....!

சாப்பாடு இல்லாமல் நீங்கள் சோர்ந்து வருவதை பார்த்து சிலை வடித்து விட்டார்கள்  போல் இருக்கிறது.....அது நீங்கள்தானே.....!   🌶️

கண்டுபிடித்து விட்டீர்களே😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இரவு உணவை உண்டுவிட்டு வாங்கிக்கொண்டு வந்த பிஸ்தாசியோவை எடுத்து உடைத்து வாயில் வைத்தால் அவை காற்றுப் போய் இளகி உண்பதற்கே அருவருப்பாய் இருக்க, எமக்கு உண்பதற்கு நல்லதைத் தந்துவிட்டு பழையவற்றை விற்று எம்மை ஏமாற்றிவிட்டது தெரிய  பழுதானத்தை ஏன் மினைக்கெட்டுக் காவிக்கொண்டு போவான் என்றபடி தூக்கிக் குப்பையில் எறிகிறேன்.

அடுத்தநாள் எழுந்து காலை உணவை உண்டுவிட்டு நடந்து சென்று தொடருந்தில் டிக்கற் எடுத்து ஒரு மாக்கற்றுக்குப் போனோம். இங்கெல்லாம் கூடுவதுபோல் பெரிதாகச் சனங்கள் இல்லை. கறுவா,ஏலம்,கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களும் வேறு பல காய்ந்த மூலிகை வகைகளும் பூசணி விதைகள், பருப்பு வகைகள், பிஸ்தாசியோ என்பன அனைத்துக்கடைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மலிவாக இருந்தாலும் எல்லாம் திறந்தே இருந்தபடியாலும் முதல் நாள் வாங்கி ஏமாந்த அனுபவத்தாலும் எனக்கு வாங்கவே மனம் வரவில்லை. தக்காளிகள் தான் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் நிறைய மரங்கள் செடி கொடிகளைக் கண்டவுடன் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு செல்ல போற இடத்திலயும் உதை விடமாட்டியோ  ஒரு கண்டுகளும் வாங்காதே. கொண்டு போக விடமாட்டாங்கள்.  என்று திட்டியபடி மனிசன்.  கனக்க மாதுளை மரங்கள் ஒவ்வொரு அளவிலும் பார்க்க ஆசையாக இருக்க ஒன்றைத் தூக்க, உன்னட்டை ஏற்கனவே ஒரு மரம் இருக்குதானே என்று பறிச்சு வச்சிட்டுது மனிசன்.
பிஸ்தாசியோ மரம் இருக்கா என்று தேடினால் ஒன்றுகூட இல்லை. நிறைய வேறுவேறு விதைகளும் அவர்கள் வைத்திருக்க  வறுக்காத பிஸ்தாசியோ விதைகள் இருக்கா என்று கடைக்காரனிடம் கேட்க, விதை இருக்கா என்று தேடிவிட்டு மரம் இருக்கு வா என்று ஒரு மீற்றர் உயரமுள்ள மரத்தைக் காட்டுகிறான். முதல் நாள் அந்தத் தீவில் காட்டிய மரம் போல் இல்லாமல் இலைகள் வேறாக இருக்க அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று புரிய இது வேண்டாம் என்கிறேன். பொறு கடையில் விதைகள் இருக்கின்றன தேடி எடுத்துத் தருகிறேன் என்று அவன் சொல்ல நானும் ஆவலாய்க் காத்திருக்க கையில் வேர்க்கடலையைக் கொண்டுவந்து  இந்தா பிஸ்தாசியோ விதை என்கிறான். எனக்கு கோவம் வர ஏன் இப்பிடி ஏமாற்றுகிறாய். இது எமது நாட்டில் இருக்கிறது என்றுவிட்டு மற்றப் பக்கம் போகிறேன்.

வித விதமாய் ஒரு ஏழு எட்டு விதமான ஒலிவ் பழங்கள். பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருக்க சாப்பிட்டுப் பார்க்கும்படி கடைக்காரன் ஒவ்வொன்றையும் எடுத்துத் தருகிறான். எல்லாமே நன்றாக இருக்க ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ தா என்று சொல்ல, உவ்வளத்தையும் கொண்டுபோய் சாப்பிட்டு முடிக்க மாட்டாய். கொஞ்சமாய் வாங்கு என்று இந்தாள் தடை போட வேறு வழியின்றி ஒவ்வொன்றிலும் அரைக் கிலோ வாங்குகிறேன். வேறு எதுவும் வாங்காமல் நடந்துகொண்டே போக ஓரிடத்தில் இறைச்சி, மீன் என்பவற்றின் படம் போட்டிருக்க சரி வந்தனாங்கள் இதையும் பார்த்திட்டுப் போவம் என்கிறார் மனிசன். நான் அதுக்குள்ள வரமாட்டன் என்று  நான் முரண்டு பிடிக்க நீ உதில நில். நான் போய் பார்த்திட்டு வாறன் எண்டு சொன்ன மனிசன் ஒரு இரண்டு நிமிடத்திலேயே திரும்பி வர மீன் நாத்தம் தாங்க முடியேல்லையோ என்று நான் நக்கலாய்ச் சிரிக்கிறேன்.

இப்பிடிச் சுத்தமான மீன் சந்தையை நான் ஒரு இடமும் பார்க்கில்லை. கட்டாயம் நீயும் பார்க்கவேணும். வந்து பார் எண்டு என்னை இழுத்துக்கொண்டு போகுது அந்தாள். நான் என்ன நாத்தம் நாறப் போகுதோ ஏன் இந்தாளுக்கு உந்த விபரீத ஆசை என்று திட்டியபடி போன என்னால் என் கண்களையம் மூக்கையும் நம்ப முடியவில்லை. வகை வகையாய் மீன்கள் அடுக்கி விடப்பட்டிருக்க ஒரு சிறிய தண்ணீர்ப் பைப்பும் ஒவ்வொரு கடைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்க மீன் சந்தை என்பதற்கான எந்த மணங்களும்  இன்றி இருக்கிறது அது. அப்பப்ப மீன்களுக்கு தண்ணீரை விடுகிறார்கள். மணக்காமல் இருக்க என்ன செய்கிறார்கள் என்று இன்றுவரை விளங்கவில்லை.

29793727_10209771455596698_5358207285011

29793786_10209771455876705_1350966879031

30261116_10209771456236714_6430886323648

29793106_10209771456196713_4724388932391

29792609_10209771456916731_3743538566580

29792113_10209771457476745_4773684483956

29793667_10209771457396743_3400809517913

30124847_10209771457916756_3261324759849

29793281_10209771458436769_3375380472547

29792810_10209771458716776_8831825646872

30123764_10209771459156787_8787701034068

30264410_10209771459876805_7096879564772

30124542_10209771460156812_5112568046539

29792355_10209771460676825_5874620232693

30123844_10209771461676850_2767591180815

29791947_10209771461876855_2137249428128

30261203_10209771462676875_6119131329285

29793497_10209771463236889_7493890308501

30127732_10209771464076910_7771219709764

29792896_10209771464396918_5982579587207


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பக்கம் போனால் இறைச்சிக் கடைகள். அவையும் கூட எந்த மணமும் இன்றி அழகாக அடுக்கி வைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டும் இருக்கின்றன. ஒரு கடை இந்தியர்களுடையது. எம்மைக் கண்டதும் மகிழ்வுடன் சிரித்துக் கதைத்தார்கள். எப்படிச் சந்தையில் மணம் இல்லாமல் இருக்கிறது. மருந்துகள் ஏதாவது போடுகிறீர்களா என்று கேட்டதற்கு, இது ஏதென்ஸின் பெரிய சந்தை. எல்லாம் புதிதாக ஒவ்வொரு நாட்களும் வரும் அன்றே விற்று முடிந்துவிடும் என்கிறார் ஒருவர். 

 

 

 

29792586_10209770944103911_5388882620044

29793311_10209770944183913_1689712590344

30127049_10209770944663925_8509345526464

30226808_10209770944743927_7126766721767

30261596_10209770945223939_9570251943780

29793314_10209770945943957_5740599257145

29793369_10209770946023959_9174250740703

30571158_10209793107377979_4235960900688

 

30516069_10209793120938318_7179728603444

 

 

மாமிச பட்ஷணிகள் அல்லாதோர் தயவு செய்து இப்படங்களை மன்னிக்கவும்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அன்று இரவு உணவை உண்டுவிட்டு வாங்கிக்கொண்டு வந்த பிஸ்தாசியோவை எடுத்து உடைத்து வாயில் வைத்தால் அவை காற்றுப் போய் இளகி உண்பதற்கே அருவருப்பாய் இருக்க, எமக்கு உண்பதற்கு நல்லதைத் தந்துவிட்டு பழையவற்றை விற்று எம்மை ஏமாற்றிவிட்டது தெரிய  பழுதானத்தை ஏன் மினைக்கெட்டுக் காவிக்கொண்டு போவான் என்றபடி தூக்கிக் குப்பையில் எறிகிறேன்.

அடுத்தநாள் எழுந்து காலை உணவை உண்டுவிட்டு நடந்து சென்று தொடருந்தில் டிக்கற் எடுத்து ஒரு மாக்கற்றுக்குப் போனோம். இங்கெல்லாம் கூடுவதுபோல் பெரிதாகச் சனங்கள் இல்லை. கறுவா,ஏலம்,கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களும் வேறு பல காய்ந்த மூலிகை வகைகளும் பூசணி விதைகள், பருப்பு வகைகள், பிஸ்தாசியோ என்பன அனைத்துக்கடைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மலிவாக இருந்தாலும் எல்லாம் திறந்தே இருந்தபடியாலும் முதல் நாள் வாங்கி ஏமாந்த அனுபவத்தாலும் எனக்கு வாங்கவே மனம் வரவில்லை. தக்காளிகள் தான் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் நிறைய மரங்கள் செடி கொடிகளைக் கண்டவுடன் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு செல்ல போற இடத்திலயும் உதை விடமாட்டியோ  ஒரு கண்டுகளும் வாங்காதே. கொண்டு போக விடமாட்டாங்கள்.  என்று திட்டியபடி மனிசன்.  கனக்க மாதுளை மரங்கள் ஒவ்வொரு அளவிலும் பார்க்க ஆசையாக இருக்க ஒன்றைத் தூக்க, உன்னட்டை ஏற்கனவே ஒரு மரம் இருக்குதானே என்று பறிச்சு வச்சிட்டுது மனிசன்.
பிஸ்தாசியோ மரம் இருக்கா என்று தேடினால் ஒன்றுகூட இல்லை. நிறைய வேறுவேறு விதைகளும் அவர்கள் வைத்திருக்க  வறுக்காத பிஸ்தாசியோ விதைகள் இருக்கா என்று கடைக்காரனிடம் கேட்க, விதை இருக்கா என்று தேடிவிட்டு மரம் இருக்கு வா என்று ஒரு மீற்றர் உயரமுள்ள மரத்தைக் காட்டுகிறான். முதல் நாள் அந்தத் தீவில் காட்டிய மரம் போல் இல்லாமல் இலைகள் வேறாக இருக்க அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று புரிய இது வேண்டாம் என்கிறேன். பொறு கடையில் விதைகள் இருக்கின்றன தேடி எடுத்துத் தருகிறேன் என்று அவன் சொல்ல நானும் ஆவலாய்க் காத்திருக்க கையில் வேர்க்கடலையைக் கொண்டுவந்து  இந்தா பிஸ்தாசியோ விதை என்கிறான். எனக்கு கோவம் வர ஏன் இப்பிடி ஏமாற்றுகிறாய். இது எமது நாட்டில் இருக்கிறது என்றுவிட்டு மற்றப் பக்கம் போகிறேன்.

வித விதமாய் ஒரு ஏழு எட்டு விதமான ஒலிவ் பழங்கள். பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருக்க சாப்பிட்டுப் பார்க்கும்படி கடைக்காரன் ஒவ்வொன்றையும் எடுத்துத் தருகிறான். எல்லாமே நன்றாக இருக்க ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ தா என்று சொல்ல, உவ்வளத்தையும் கொண்டுபோய் சாப்பிட்டு முடிக்க மாட்டாய். கொஞ்சமாய் வாங்கு என்று இந்தாள் தடை போட வேறு வழியின்றி ஒவ்வொன்றிலும் அரைக் கிலோ வாங்குகிறேன். வேறு எதுவும் வாங்காமல் நடந்துகொண்டே போக ஓரிடத்தில் இறைச்சி, மீன் என்பவற்றின் படம் போட்டிருக்க சரி வந்தனாங்கள் இதையும் பார்த்திட்டுப் போவம் என்கிறார் மனிசன். நான் அதுக்குள்ள வரமாட்டன் என்று  நான் முரண்டு பிடிக்க நீ உதில நில். நான் போய் பார்த்திட்டு வாறன் எண்டு சொன்ன மனிசன் ஒரு இரண்டு நிமிடத்திலேயே திரும்பி வர மீன் நாத்தம் தாங்க முடியேல்லையோ என்று நான் நக்கலாய்ச் சிரிக்கிறேன்.

இப்பிடிச் சுத்தமான மீன் சந்தையை நான் ஒரு இடமும் பார்க்கில்லை. கட்டாயம் நீயும் பார்க்கவேணும். வந்து பார் எண்டு என்னை இழுத்துக்கொண்டு போகுது அந்தாள். நான் என்ன நாத்தம் நாறப் போகுதோ ஏன் இந்தாளுக்கு உந்த விபரீத ஆசை என்று திட்டியபடி போன என்னால் என் கண்களையம் மூக்கையும் நம்ப முடியவில்லை. வகை வகையாய் மீன்கள் அடுக்கி விடப்பட்டிருக்க ஒரு சிறிய தண்ணீர்ப் பைப்பும் ஒவ்வொரு கடைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்க மீன் சந்தை என்பதற்கான எந்த மணங்களும்  இன்றி இருக்கிறது அது. அப்பப்ப மீன்களுக்கு தண்ணீரை விடுகிறார்கள். மணக்காமல் இருக்க என்ன செய்கிறார்கள் என்று இன்றுவரை விளங்கவில்லை.

29793727_10209771455596698_5358207285011

29793786_10209771455876705_1350966879031

30261116_10209771456236714_6430886323648

29793106_10209771456196713_4724388932391

29792609_10209771456916731_3743538566580

29792113_10209771457476745_4773684483956

29793667_10209771457396743_3400809517913

30124847_10209771457916756_3261324759849

29793281_10209771458436769_3375380472547

29792810_10209771458716776_8831825646872

30123764_10209771459156787_8787701034068

30264410_10209771459876805_7096879564772

30124542_10209771460156812_5112568046539

29792355_10209771460676825_5874620232693

30123844_10209771461676850_2767591180815

29791947_10209771461876855_2137249428128

30261203_10209771462676875_6119131329285

29793497_10209771463236889_7493890308501

30127732_10209771464076910_7771219709764

29792896_10209771464396918_5982579587207


 

 

இவ்வளவு கடலுணவுகளைகயும் சமைத்து என்னை யாரும் விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும் 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

இவ்வளவு கடலுணவுகளைகயும் சமைத்து என்னை யாரும் விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும் 😋

வயிற்றைப் பிரட்டி சத்தி வராமல் வந்தால் பெரிய காரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30261596_10209770945223939_9570251943780

 

உதென்ன கோதாரி? நாக்கிளி புழு போலை கிடக்கு........உவாக்........பாக்கவே வயித்தை பிரட்டுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகின்றீர்கள், சுமே!

உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்!

ஐரோப்பிய மீன் விலைகளைப் பார்க்கத் தலை சுத்துது....!😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ரதி said:

இவ்வளவு கடலுணவுகளைகயும் சமைத்து என்னை யாரும் விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும் 😋

இவ்வளவும் சமைக்கிறது பெரிய வேலை இல்லை. ஆனா இவ்வளவும் சாப்பிட ஏலுமா உங்களால??? 😀

58 minutes ago, குமாரசாமி said:

30261596_10209770945223939_9570251943780

 

உதென்ன கோதாரி? நாக்கிளி புழு போலை கிடக்கு........உவாக்........பாக்கவே வயித்தை பிரட்டுது...

எனக்கும் தான் உந்தக் கோதாரி என்ன எண்டு விளங்கேல்லை. குடலைத்தான் இப்பிடி வச்சிருக்கிறாங்களோ????

26 minutes ago, புங்கையூரன் said:

நன்றாக எழுதுகின்றீர்கள், சுமே!

உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்!

ஐரோப்பிய மீன் விலைகளைப் பார்க்கத் தலை சுத்துது....!😫

லண்டன் மீன் விலை சொன்னால் மயங்கி விழுந்திடுவியள். இப்ப 9 பவுண்ட்சுக்குக் குறைய பிறெஸ் மீன்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இவ்வளவும் சமைக்கிறது பெரிய வேலை இல்லை. ஆனா இவ்வளவும் சாப்பிட ஏலுமா உங்களால??? 😀

எனக்கும் தான் உந்தக் கோதாரி என்ன எண்டு விளங்கேல்லை. குடலைத்தான் இப்பிடி வச்சிருக்கிறாங்களோ????

லண்டன் மீன் விலை சொன்னால் மயங்கி விழுந்திடுவியள். இப்ப 9 பவுண்ட்சுக்குக் குறைய பிறெஸ் மீன்கள் இல்லை. 

பில்லிங்ஸ்கேற் சந்தையில......இரண்டு பவுணுக்கு ஒட்டி மீன் (டொக்ரர் பிஷ்) வாங்கின ஆக்கள் நாங்கள்...!

தலை சுத்தும் போல தான் ...கிடக்குது...!😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் ஒரு சுத்திக் காட்டிற பஸ் எடுத்து போனால் சும்மா ஒரு வீதியுலா போறான். ஒரு பக்கம் முழுக்க ஒரு பத்துக் கிலோமீற்றர் கடற்கரைதான். ஆனால் பெரிதாக ஆட்களைக் காணவில்லை. ஒரு மணிநேரம் சென்றபின் பஸ் ஓரிடத்தில் திரும்பி மீண்டும் ஓடி ஒரு வளைவில் நின்றது. நீங்கள் அரை மணி நேரம் கீழே இறங்கிப் பார்க்கலாம் என்கிறார் ஓட்டுநர். என்னத்தைப் பார்ப்பது எதையும் காணவில்லையே என எண்ணியபடி இறங்கி மற்றப் பக்கம் போனால் அழகான ஒரு காட்சி மனத்தைச் சொக்க வைத்தது.

 

 

61383368_10212097095816250_1871181465476

61651298_10212097096096257_1624804785414

61759574_10212097097016280_6948806156311

61933850_10212097097376289_1359809039873

61651667_10212097099936353_1825458459118

61665096_10212097098656321_1803335662397

61741682_10212097100016355_8265955399157

61984096_10212097100576369_2643422267538

62020861_10212097101296387_5830922556818

61334272_10212097101576394_2561825555431

61607290_10212097101816400_5084561599889

61558738_10212097102176409_3175209716376

61973900_10212097102376414_5904639502881

61581948_10212097102616420_5238186554228

61633724_10212097102976429_7881936179879

61588950_10212097103216435_8295779729370

61924341_10212097096376264_4032814771563

கடலில் இருந்து வரும் நீரேரி குளம் போல் ஓரிடத்தில் நிற்க சிலர் நீந்திக்கொண்டிருந்தனர். அட முதலே தெரிந்திருந்தால் நாமும் நீச்சல் உடை கொண்டு வந்திருக்கலாமே என்னும் எண்ணம் எழ ஆவென்று அரை மணிநேரம் நின்று பார்க்க மட்டும் தான் முடிந்தது. சிலர் சுற்றிப் போய் கிட்ட நின்ற பார்த்துவிட்டு வந்தார்கள். சாரதி மீண்டும் எல்லோரையும் வரும்படி அழைக்க திரும்பவும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்துக்கு ஒருவருக்கு 5 யூரோக்கள் மட்டும்தான். மீண்டும் நகரில் வந்ததும் பசி எடுக்க ஒரு சிறிய கடையில் இருந்த உணவு எம்மை இழுக்க அங்குபோய் அமர்ந்தோம்.

61548170_10212097103456441_8124139899780

61371953_10212097103856451_7598449809854

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீண்டும் நகரில் வந்ததும் பசி எடுக்க ஒரு சிறிய கடையில் இருந்த உணவு எம்மை இழுக்க அங்குபோய் அமர்ந்தோம்.

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டில் ரொம்ப கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட முதலே தெரிந்திருந்தால் நாமும் நீச்சல் உடை கொண்டு வந்திருக்கலாமே என்னும் எண்ணம் எழ

பொய் சொல்லப்படாது. உங்களுக்கு நீந்த தெரியுமா?

என்ன இருந்தாலும் இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு......காத்தோட்டமாய் இருந்து தண்ணியடிக்க மணி இடம்...🕶️

61741682_10212097100016355_8265955399157

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பொய் சொல்லப்படாது. உங்களுக்கு நீந்த தெரியுமா?

என்ன இருந்தாலும் இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு......காத்தோட்டமாய் இருந்து தண்ணியடிக்க மணி இடம்...🕶️

61741682_10212097100016355_8265955399157

நீச்சல் உடை அணிவதற்கு  நீந்தத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நீச்சல் உடை அணிவதற்கு  நீந்தத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே......!   👍

ஆ.......அப்ப கரையிலை நிண்டு தையக்க பித்தக்க.......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் பயணக்கதை பகிர்வுக்கு நனறி ...தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த உறவுகள் மீரா, ஜெகதா துரை, ஈழப்பிரியன் அண்ணா, ரதி, சுவி அண்ணா, ஏராளன் , புங்கை ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.

On 5/31/2019 at 2:48 PM, ஈழப்பிரியன் said:

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டில் ரொம்ப கவனம்.

அதுதானே ரொம்பவும் முக்கியம் 😀

On 5/31/2019 at 11:22 PM, குமாரசாமி said:

பொய் சொல்லப்படாது. உங்களுக்கு நீந்த தெரியுமா?

என்ன இருந்தாலும் இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு......காத்தோட்டமாய் இருந்து தண்ணியடிக்க மணி இடம்...🕶️

 

ஏன் உங்களுக்குத் பொய் சொல்ல வேணும். நம்பாட்டி நீங்கள் லண்டன் வரும்போது நீச்சல் குளத்திலே நீந்திக் காட்டிறன். 😎

On 6/1/2019 at 7:05 AM, suvy said:

நீச்சல் உடை அணிவதற்கு  நீந்தத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே......!   👍

உங்கள் வீட்டில் நீச்சல் உடையை வீட்டில் அணிவார்களோ ??????:innocent:😃

On 6/1/2019 at 9:04 AM, குமாரசாமி said:

ஆ.......அப்ப கரையிலை நிண்டு தையக்க பித்தக்க.......🤣

dream_blast_icon.jpg?mFeeCqScpestyDg1fpt

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிலாமதி said:

படங்களுடன் பயணக்கதை பகிர்வுக்கு நனறி ...தொடருங்கள் 

நன்றி அக்கா வரவுக்கு

 

பச்சை தந்த நீர்வேலியானுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் காலை எழுந்து காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் வந்து கட்டிலில் இருந்து ஊர் கதை உலகக் கதை எல்லாம் கதைத்துவிட்டு பத்துமணிபோல் கிளம்பி மீண்டும் பார்த்த இடங்களில் தவறவிட்ட  சிலவற்றைப் பார்த்துவிட்டு மேலே இருந்து பார்த்துவிட்டுத் தவறவிட்ட அரங்கத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்று போனால் வரிசை நீண்டுகொண்டே போகுது. நின்றாள் ஒரு மணிநேரமாவது வரிசையில் நிற்க வேண்டும். அன்று பார்த்து பள்ளி விடுமுறைபோல அதிகளவில் பிள்ளைகுட்டிகளோடு வந்திருந்தனர். சரி அத்தனை நேரம் நிற்கமுடியாது என்று கீழே வந்து sintagma square இங்கு வந்து அங்கிருந்து ராமில் ஒருவருக்கு 2.50 யூரோ கொடுத்து பயனச் சீட் டை எடுத்து அமர்ந்தோம்.

ஒரு மணிநேரம் ராம் கடற்கரை ஓரமாகவே ஓட அதிலிருந்தபடியே இடங்களை பார்த்துக்கொண்டு வந்து ஓரிட த்தில் இறங்கினோம். கடற்கரைகளில் பெரிதாக ஆடைகளையே காணவில்லை.  தனியாக இருவரும் வந்ததனால் தெரியாத கடலில் குளிப்பது ஆபத்து என்று எண்ணி நான் கடலில் இறங்கவே மறுத்துவிட்டேன். மனிசன் சொல்லக் சொல்லக் கேட்காமல் இறங்கிவிட்டுது. தூரப் போகாதேங்கோ எண்டாலும் கேட்கவில்லை. அந்தாள் வெளியில வரும் வரைக்கும் எனக்கு நெஞ்சுக்குள்ள தண்ணி இல்லை. ஒரு வாறு கத்திக் கத்திக் கூப்பிட்டு வெளியே வந்து தலை துடைத்து விட்டு மணலில் கற்களை அடுக்கி யாருடையது உயரமாக இருக்கு என்று சிறு பிள்ளைகள் போல் விளையாடிவிட்டு வெய்யில் தாங்க முடியாததாக மீண்டும் வந்து ராமில் ஏறினோம். தனியாகக் கடற்கரைக்குச் செல்வது காதலர்களுக்கு வேணுமானால் நன்றாக இருக்குமே தவிர கணவனும் மனைவியும் யாருமற்ற ஒரு கடற்கரையை அதிகநேரம் இரசிக்க முடியாது என்பது அன்றுதான் புரிந்தது. (தணியடிக்கிற கோஷ்டியளின் கதை வேறை).

மீண்டும் ஏறிய இடத்தில் இறங்கி நடுவில் ஆட்கள் இருப்பதற்குப் போடப்பட்டிருந்த வாங்குகள் போன்ற இருக்கையில் இருந்து போவோர் வருவோரை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருக்க மனிசன் போய் ஐஸ்கிரீம்கள் வாங்கிக்கொண்டு வந்தார். கடற்கரையிலும் பார்க்க இந்த இடம் நன்றாகவே இருக்க நேரம் போனதே தெரியவில்லை. மேலே மலைக்குன்றில் அக்றோபொலிஸ் கோவில் மிக அழகாக இருந்தது. இன்று இரவு இந்த இடத்துக்கு வந்து கோவிலில் அழகைப் பார்த்தால் என்ன என்றேன் நான். மின் விளக்கின் ஒளியில்  இரவில் அழகாக இருக்கும் என்று ஒன்லைனில் பார்த்த நினைவு எழ அருகில் கும்பலாக நின்ற நான்கைந்து போலீஸ் காரரிடம் சென்று இரவில் இந்த இடத்துக்கு அதிகமான மக்கள் வருவார்களா என்று கேட்டேன். நீங்கள் தனியாகவா அல்லது குழுவாக வந்துள்ளீர்களா என்று கேட்டார்  ஒருவர். நானும் கணவனுமென்று சொன்னதும் குழுவாக வருபவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இரவில் கள்வர்கள் அதிகம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பஸ்ஸில் அல்லது ட்ரெயினில் தானே இங்குவரவேண்டும்.அது பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள்.
நாம் எமது ஹோட்டலை புக் செய்தபோது அந்தக் கோவிலின் வியூ நன்றாகத் தெரியும் என்கிறார்கள். வந்தபின் தான் தெரிந்தது எதுவுமே தெரியவில்லை என்று. இனி அதுக்காகச் சண்டை போட முடியுமா என மனதில் எண்ணிக்கொண்டு எழுந்தோம். அடுத்தநாட் காலை ஐந்து மணிக்கு விமான நிலையம் செல்ல எழவேண்டும். அதனால் விரைவில் தூங்கவும் வேண்டும் என்று கூறியபடி ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு உணவகத் தில் உணவை உண்டுவிட்டு வர எதோ நீண்ட நாள் வசித்த இடத்தை விட்டுப் போவதுபோன்ற ஒரு துயரம் எழுந்தது.

என்னைக் கேட்டால் இன்னும் பலமுறை கூடச் செல்லச் சலிக்காத ஒரு இடம் கிரீஸ். ஆனால் இருவர் மட்டும் போகாது சிலராவது சேர்ந்து போனால் இன்னும் பல இடங்களைக் கடற்கரையை துணிவாக மகிழ்வாக அனுபவித்துவிட்டு வரக் கூடிய அற்புதமான சுற்றுலாத்தளம்.

 

 

62148202_10212131966367992_4801339172784

62102379_10212131966728001_9012278599029

62182950_10212131967008008_1384385091848

61768902_10212131967448019_8041017546570

62241061_10212131967768027_8384869570271

62125737_10212131968048034_6099414332725

61797546_10212131970208088_3194961180049

61890790_10212131970568097_8729221815928

61828734_10212131970488095_3091097102621

61917372_10212131971128111_2528060008608

61851972_10212131964087935_2327628178555

62075055_10212131962807903_8988234654846

 

 

61845028_10212131962887905_3925457073248

61741686_10212132040929856_6850675027000

61928116_10212132041729876_3918594595977

62242479_10212132041489870_3432914724868

62081502_10212132042609898_4303213057682

61923755_10212132042329891_9050005488678

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழே நான் போடும் படங்கள் இணையத்தில் உள்ளவை. இப்படங்கள் இன்னும் அழகானவை என்பதனால் உங்கள் பார்வைக்குப் போட்டுள்ளேன்.

athens-greece-monastiraki-square-with-pe

DSC_0166-5c756ffc46e0fb0001a5ef14.jpg

Athens-Monastiraki-Square-Night.jpg

a6.jpg

 

Parthenon-Athens-Greece.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...... கடைசிவரைக்கும்..... அத்தார் ஏன் கட்டிலுக்கு சண்டை பிடித்தார் என்று தெரியவில்லை.......

ரீசேட்டிற்குள் tablet ஐ ஏன் ஒழித்து வைத்திருக்கிறார்......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தனியாக இருவரும் வந்ததனால் தெரியாத கடலில் குளிப்பது ஆபத்து என்று எண்ணி நான் கடலில் இறங்கவே மறுத்துவிட்டேன்.

எனக்கு நீந்தத் தெரியாது என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ரீசேட்டிற்குள் tablet ஐ ஏன் ஒழித்து வைத்திருக்கிறார்

சுட்டுவிடுவார்கள் அல்லது சுட்டதை பிடித்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு நீந்தத் தெரியாது என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?

அவ நீச்சல் உடையை விட்டு விட்டு வந்துட்டாவாம்..... நானன்டால் இரண்டு கைக்குட்டை  வாங்கி கட்டிக்கொண்டு இறங்கியிருப்பேன்....!   🐟

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.