Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டாவது தேனிலவு... ஏன் அவசியம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்."

இரண்டாவது தேனிலவு... ஏன் அவசியம்? - டாக்டர் ஷாலினி விளக்கம்

ரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள்.

தேனிலவு

தேனிலவு ஏன் அவசியம்?

`திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். `காலையில் எழுந்தோம்; காபி குடித்தோம்; சமைத்தோம் சாப்பிட்டோம்; வீட்டுவேலை பார்த்தோம்' என்று இருந்தால், பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது. தேனிலவு என்று சில நாள்கள் வெளியே செல்லும்போது, வேலை பளு இல்லாதது, அருகருகே அமர்ந்து பயணம் செய்வது, பேசுவது, கூடவே ஒருவரையொருவர் உடலாகவும் மனமாகவும் தெரிந்துகொள்வது என்று தாம்பத்தியத்தை இறுக்கமாக்கும் பல அனுபவங்கள் நிகழும். அந்தக் காலத்தில் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், குழந்தை பிறக்கும் என்பது தெரியாது. அதனால், நிலவு வளர்கிற காலத்தில் தேனெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியமான உடலுடன் தம்பதியர் இணைந்தால், குழந்தை பிறக்கும் என்று சில தினங்களைக் கடைபிடித்தார்கள். அதுதான் தேனிலவு. இந்தக் காலத்தில், எந்தெந்த நாள்களில் இணைந்தால் குழந்தை பிறக்கும் என்று தெரிந்திருந்தாலும்கூட, பரஸ்பரம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள தேனிலவுதான் உதவி செய்யும்.''

செவன் இயர் இட்ச்-ல் இருந்து ஒரு தாம்பத்தியத்தை இரண்டாவது தேனிலவு காப்பாற்றுமா?

``முதலில் செவன் இயர் இட்ச் என்றால் என்ன என்று சொல்லி விடுகிறேன். பொதுவாக செவன் இயர் இட்ச் திருமணமான 6 அல்லது 7-வது வருடத்தில் வரும் என்று சொல்லப்பட்டாலும், இந்த உணர்வு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் உண்மை. இது மன அழுத்தம் மாதிரியான உணர்வு. தம்பதியரில் யாருக்கு வேண்டுமானால் வரலாம். மனைவிக்கு, `தன்னுடைய திறமைகள் எதையுமே கணவன் பாராட்டவில்லை; நான் ஏதோ வேலைக்காரி மாதிரி இந்த வீட்டில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். என் உழைப்பை இவர் அனுபவிக்கிறார்' என்று கோபம் வரும். கணவனுக்கு, `வெளியுலகத்தில் இருக்கிற பெண்கள் தன்னை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள். தன்னுடைய திறமையைப் பார்த்து எப்படிப் பயப்படுகிறார்கள். ஆனால், என் மனைவி மட்டும் என்னையும் மதிப்பதில்லை, என் பெற்றோரையும் மதிப்பதில்லை. வீட்டுக்கு வந்தால் ஒரு அழுக்கு நைட்டி போட்டுக்கொண்டிருக்கிறாள்' என்று மனம் நிறைய மனைவி மீது குற்றச்சாட்டுகள் இருக்கும். இதை பரஸ்பரம் பேசிச் சரி செய்துகொள்ள மாட்டார்கள். மனதுக்குள்ளே வைத்து குமுறிக் கொண்டிருப்பார்கள். இதன் விளைவாகச் சிடுசிடுப்பு, சண்டை என்று பிரச்னைகள் நீண்டுகொண்டே போகும். இந்த நேரத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெளிநபர் யாராவது அன்பு காட்டினாலோ அல்லது அவர்களுடைய திறமையை சிறிதளவு பாராட்டினாலோ, `நம்முடைய பழைய உறவிலிருந்து வெளிவந்து இந்தப் புது உறவில் ஈடுபடலாமோ' என்கிற தடுமாற்றம் அவர்களுக்கு வரும். அந்தத் தடுமாற்றத்தின் பெயர்தான் செவன் இயர் இட்ச். நாலைந்து நாள்கள், தனிமையில் மனம்விட்டுப் பேசிக் கொள்கிற இரண்டாம் தேனிலவு, செவன் இயர் இட்ச் பாதிப்பை நிச்சயம் மாற்றும். 

தம்பதி

பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு, கணவன் - மனைவி பிரிந்து தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதையெல்லாம் மாற்றி, தம்பதியரிடையே மீண்டும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், கணவன் - மனைவி மட்டும் சேர்ந்து செல்கிற தனிமைப் பயணங்கள் அதற்கு உதவும். இதற்கு இரண்டாவது தேனிலவு மிக நல்ல சாய்ஸ். இரண்டாம் தேனிலவு என்றால், நிறைய பேர் `அது செக்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ்க்கானது' என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. அதில் செக்ஸும் இருக்கும் என்றாலும், மனதின் ஆழத்துக்குள் போய்விட்ட தாம்பத்தியத்தைப் புதுப்பித்துக் கொள்கிற ஒரு வழிதான் இந்த இரண்டாம் தேனிலவு. ஆனால், அங்கே போய் சொந்தக் கதை, சோகக்கதை பேசுவது, பழைய பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு செல்வதெல்லாம், இரண்டாவது ஹனிமூனுக்கான அடிப்படையையே அசைத்துவிடும்.''

 

 

இரண்டாவது தேனிலவு... பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்லலாமா? 

``அழைத்துச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது. சின்னக் குழந்தைகள் என்றால், உடன் அழைத்துச் சென்று விடுங்கள். வளர்ந்த பிள்ளைகள் என்றால், நம்பிக்கையான யாரிடமாவது அவர்களை விட்டு விட்டுச் செல்லுங்கள். உங்கள் டிரிப்பை 2 அல்லது 3 நாள்கள் மட்டுமாக வைத்துக்கொள்ளுங்கள். டீன் ஏஜ் பிள்ளைகள் என்றால், `அப்பா - அம்மாவுக்கு மனம் விட்டுப் பேச வேண்டும்' என்று நாகரிகமாகச் சொல்லிவிட்டுக் கிளம்புங்கள்.''

ஒரு ஃப்ரெண்ட்லியான தாம்பத்தியத்துக்குக் கணவனும் மனைவியும் என்ன மாதிரி முன்னெடுப்புகள் செய்ய வேண்டும்?

``ஒரு கணவன், தன் மனைவியை ஒரு டீச்சர் மாதிரி, ஒரு போலீஸ்காரி மாதிரி, ஒரு வக்கீல் மாதிரி நினைத்துவிட்டான் என்றால், மனைவி உலக அழகியாகவே இருந்தாலும் அவள் மீது ஈர்ப்பு வராது. ஆணுடைய செக்ஸுவல் இயல்பு இதுதான். அதனால், மனைவிகள் கணவரை அவ்வப்போது அப்பர் ஹேண்ட் எடுக்க விடுங்கள்; அவரைக் கொஞ்சம் ஸ்பெஷலாக நடத்துங்கள். ரொமான்ஸ்க்கான, ஃப்ரெண்ட்லியான தாம்பத்தியத்துக்கான நல்ல யுக்தி இதுதான். 

அடுத்து, மனைவிகளின் உடையலங்காரம். `என் புருஷந்தானே. அவர் முன்னாடி நான் எப்படி டிரெஸ் பண்ணிக்கிட்டிருந்தா என்ன' என்று மனைவிகள் நினைப்பது சரியாக வராது. பெண்களின் தோற்றத்தைப் பார்த்துத்தான் ஆண்களுக்கு ரொமான்ஸ் உணர்வே வரும். ஆண்களுடைய மூளையின் வடிவமைப்பே இப்படித்தான் எனும்போது, இதற்கு ஏற்றபடி மனைவிகள் நடந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். இதில் கணவர்களுக்கும் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. வீட்டு வேலைகள், வெளி வேலைகள், குழந்தைகளுக்கான வேலைகள், வீட்டில் இருக்கிற பெரியவர்களுக்கான வேலைகள் எல்லாம் செய்து களைத்துப் போயிருக்கிற மனைவி, தினமும் உங்கள் கண்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். 

காதல்

அடுத்தது மிக மிக முக்கியமான இரண்டு பாயின்ட்ஸ். மனைவிகளுக்குக் கணவர்களிடம் முக்கியமான எதிர்பார்ப்பொன்று இருக்கிறது. தன் கணவன் தன்னை எங்கேயும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதில் முதல் பாயின்ட். இரண்டாவது, தன்னை மற்ற  பெண்களுடன் கம்பேர் செய்து, `எங்கம்மாவைப் பாரு எவ்வளவு நல்லா சமைக்கிறா, நீயும் சமைக்கிறியே', `குடும்பம் நடத்துறதுன்னா என் ஃப்ரெண்டோட வொய்ஃபைப் பார்த்துக் கத்துக்கோ' என்று சொல்கிற கணவர்களைப் பார்த்தாலே மனைவிகளுக்குக் கோபம்தான் வரும். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், கணவர்கள் தங்கள் மனைவிகளை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள். 

மொத்தத்தில் செக்ஸ் தவிர மற்ற விஷயங்களில் எல்லாம், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் காயப்படுத்திவிட்டு, தாம்பத்தியம் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் அது நடக்காது. ஸோ, வெளி விஷயங்களில் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துங்கள். தாம்பத்தியம் தானாகவே ஃப்ரெண்ட்லியாக மாறும். 

இரண்டாவது தேனிலவை, உங்கள் அன் கண்டிஷ்னல் லவ்வை உங்கள் துணைக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டால், உங்கள் உறவு இரண்டாம் தேனிலவில் நிச்சயம் புதுப்பிக்கப்படும்.''

இந்தக் கோடை விடுமுறையில் ஒரு வாரத்தை உங்கள் இரண்டாம் தேனிலவுக்கு ஒதுக்குங்களேன்.

https://www.vikatan.com/news/miscellaneous/156332-why-should-a-couple-go-to-the-second-honeymoon-psychiatrist-shalini-explains.html?artfrm=trending_vikatan

 

  • கருத்துக்கள உறவுகள்

25 - 30 வயதில்... கலியாணம் கட்டும்  போது,  அவ்வளவு அனுபவம் இருக்காது. 😎
"குருட்டுப் பூனை...  விட்டத்தில்  பாய்ந்த மாதிரி"   இருக்கும். :grin:

இரண்டாவது  தேனிலவின்  போது.... 
தம்பதிகள்... நன்றாக அனுபவம் வாய்ந்தவர்களாக மாறி விடுவதால்.... 
எல்லோருக்கும்... இரண்டாவது,  தேனிலவு  தேவை.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..! 

loving02.gif

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..!  http://smileys.smilchat.net/smiley/love/loving01.gif

Ãhnliches Foto

ராஜ வன்னியரே..... நெடுகவும்,  "மல்லிகைப்பூ"  கட்டிலில் படுத்தால்....
தேன் நிலவின்.... அருமை தெரியாமல் போய் விடும். 😍

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..!  http://smileys.smilchat.net/smiley/love/loving01.gif

 

அது இந்த  தலைமுறைக்கு...

எங்களுக்கல்ல

நீங்க  தொடருங்க  ராசா...😍😍😍

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

அது இந்த  தலைமுறைக்கு...

எங்களுக்கல்ல

நீங்க  தொடருங்க  ராசா...😍😍😍

ஆ.. இந்த நினைப்புதான், தலை நரைத்தாலும் இளமையாக வாழ உதவுகிறது. loveyou.gif

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/30/2019 at 6:51 PM, ராசவன்னியன் said:

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..! 

loving02.gif

 

 

எனக்கு தெரிஞ்ச கூட்டு மாசிலாமணி சொன்னான் தனக்கு 67 வயதிலையும் டெய்லி  தேனிலவாம்......😃

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு தெரிஞ்ச கூட்டு மாசிலாமணி சொன்னான் தனக்கு 67 வயதிலையும் டெய்லி  தேனிலவாம்......😃

உங்களுக்கு இப்படி எதுவும் சொன்னதாக ஞாபகமில்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு இப்படி எதுவும் சொன்னதாக ஞாபகமில்லையே!

அப்பாடா  இஞ்சைவந்து வெளியிலை போறதுக்குள்ளை எத்தினை சலசலப்பு சச்சரவுகளை சந்திக்க வேண்டிக்கிடக்கு....:cool:

Bildergebnis für vadivelu funny gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்பாடா  இஞ்சைவந்து வெளியிலை போறதுக்குள்ளை எத்தினை சலசலப்பு சச்சரவுகளை சந்திக்க வேண்டிக்கிடக்கு....:cool:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

ராஜா புதுமாப்பிள்ளைக்கே இந்தக் கேள்வி வரலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

 இதுக்குத்தான் ஊரில் கத்தரிக்காயை முத்த  விடக்கூடாது  என்பார்கள்...😋😋😋

  • கருத்துக்கள உறவுகள்

பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி  🐧

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இதில் உடன்பாடில்லை. துணை இருவருக்கும் திருமண நாளில் இருந்து தேன்நிலவு தான்.. வாழ்வின் முடிவு வரை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி  🐧

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

Nellie and Joe Graham, NI's 'oldest married couple'

Nellie and Joe Graham

https://www.bbc.co.uk/news/uk-northern-ireland-48121313

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி  🐧

சும்மா நகைச்சுவைக்காக எழுதுகிறேன். ஊரில முந்தி கடிப்பான்கள்: "செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு"

On 4/30/2019 at 9:45 AM, தமிழ் சிறி said:

25 - 30 வயதில்... கலியாணம் கட்டும்  போது,  அவ்வளவு அனுபவம் இருக்காது. 😎
"குருட்டுப் பூனை...  விட்டத்தில்  பாய்ந்த மாதிரி"   இருக்கும். :grin:

இரண்டாவது  தேனிலவின்  போது.... 
தம்பதிகள்... நன்றாக அனுபவம் வாய்ந்தவர்களாக மாறி விடுவதால்.... 
எல்லோருக்கும்... இரண்டாவது,  தேனிலவு  தேவை.  🤣

இது உண்மைதான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

  தேன்+நீ லவ்வு எண்டால்  ஆணும் பெண்ணும் எங்கையும் போய் அமைதியாய் நித்திரை கொண்டுட்டு வாறது.......கேக்கிறாரு பார் கேள்வி....:cool:

Romance Couples GIF - Romance Couples Anime GIFs

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ராஜா புதுமாப்பிள்ளைக்கே இந்தக் கேள்வி வரலாமே?

ஹாஹா பெரிய கட்டைகள் இதுக்க பிரண்டு அடிக்க சும்மா எட்டிப்பார்த்துவிட்டு செல்லலாம் என்று  ஒரு கேள்வி கேட்டுப்போனதுதான் 

 

8 hours ago, விசுகு said:

 இதுக்குத்தான் ஊரில் கத்தரிக்காயை முத்த  விடக்கூடாது  என்பார்கள்...😋😋😋

ஆஹான்  கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆகணும் 

 

35 minutes ago, குமாரசாமி said:

  தேன்+நீ லவ்வு எண்டால்  ஆணும் பெண்ணும் எங்கையும் போய் அமைதியாய் நித்திரை கொண்டுட்டு வாறது.......கேக்கிறாரு பார் கேள்வி....:cool:

Romance Couples GIF - Romance Couples Anime GIFs

 

ஓ இதானா மேட்டர்  இதுக்கேன் வேற ஊர் போகணும் ஒரு பாயும் ரெண்டு தலையணையும் போதுமே ( தரைதான் சேவ்டி) சாமியோவ்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா பெரிய கட்டைகள் இதுக்க பிரண்டு அடிக்க சும்மா எட்டிப்பார்த்துவிட்டு செல்லலாம் என்று  ஒரு கேள்வி கேட்டுப்போனதுதான் 

ஊரடங்குச் சட்டம் பெரிய உதவியாக இருந்திருக்குமே?

இப்போ கறன்ற் கட் வேறை. எல்லா விதத்திலும் உங்களுக்கு சாதகமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு இதில் உடன்பாடில்லை. துணை இருவருக்கும் திருமண நாளில் இருந்து தேன்நிலவு தான்.. வாழ்வின் முடிவு வரை. 😂

இதே நெடுக்கரை ஒரு எட்டு வருசத்துக்கு முன் யாழில் பார்த்ததிற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள வித்தியாசமல்லவா இருக்கு..? சந்தோசம்..!

ஒரு ஆணின் வாழ்க்கையில், பெண் வந்ததும் இத்தனை மாற்றங்களா..? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

இதே நெடுக்கரை ஒரு எட்டு வருசத்துக்கு முன் யாழில் பார்த்ததிற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள வித்தியாசமல்லவா இருக்கு..? சந்தோசம்..!

ஒரு ஆணின் வாழ்க்கையில், பெண் வந்ததும் இத்தனை மாற்றங்களா..? :grin:

இதுக்குத்தான்... "கால்கட்டு"  போட்டால், எல்லாம் சரிவந்திடும் என்று பெரிசுகள் சொல்வார்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

"இல்லாதான் இல் வாழ்வில் நிம்மதி எது"

அங்குபோயும் மோர்ட்கேட்ஜ் பில்  கார் லோன் கோட்டல் பில் 
என்று புதுசா ஒன்று வர அங்கு போய்  சண்டை பிடிப்பதிலும் விட 
இங்கேயே  சண்டையை போட்டுவிட்டு வேலைக்கு போகலாம்.

இவர்களுக்குத்தான் திருவள்ளுவர் 
ஊடலுக்கு பின் கூடல் என்று மூன்றாம் பாலில் வச்சு இழுத்து இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரடங்குச் சட்டம் பெரிய உதவியாக இருந்திருக்குமே?

இப்போ கறன்ற் கட் வேறை. எல்லா விதத்திலும் உங்களுக்கு சாதகமே.

ஹாஹா ம்ம் ஆனால் ஊருக்குள் நாங்கள் சுற்றி திரிவது வழமை மெயின் வீதிகள் மட்டுமே பூட்டு  கரண்ட் இப்ப கட்டாவதில்லை   சாதகம்தான் ( என்ன ஓர் அக்கறை)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா ம்ம் ஆனால் ஊருக்குள் நாங்கள் சுற்றி திரிவது வழமை மெயின் வீதிகள் மட்டுமே பூட்டு  கரண்ட் இப்ப கட்டாவதில்லை   சாதகம்தான் ( என்ன ஓர் அக்கறை)

கரண்ட் இருந்தால் மட்டும் திண்ணைதான் தஞ்சமாக்கும்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா ம்ம் ஆனால் ஊருக்குள் நாங்கள் சுற்றி திரிவது வழமை மெயின் வீதிகள் மட்டுமே பூட்டு  கரண்ட் இப்ப கட்டாவதில்லை   சாதகம்தான் ( என்ன ஓர் அக்கறை)

இவருக்கு எப்படி புரிய  வைக்கலாம்....???😋😋😋😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.