Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் மீதான தடையை.. மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது இந்திய அரசு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indian Government extended ban of LTTE for 5 more years

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கம் என்ற பட்டியலில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் வெளியிட்டது.

அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது.

எனினும் இந்தியாவில் அந்த தடை உத்தரவு நீக்கப்படவில்லை. இந்த நிலையில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன.

இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் அவர்களது சின்னம், கொடியை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது. இது போன்ற தடை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்திய அரசு தடை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Indian Government extended ban of LTTE for 5 more years

Indian Government extended ban of LTTE for 5 more years

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/indian-government-extended-ban-of-ltte-for-5-more-years-350197.html

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!

இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது.

ltte.jpg

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55888

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்திய அரசு தடை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பரப்பளவில் உலகில் 7வது இடத்தில் இருக்கும் இந்தியா என்ற ஒரு நாடு.... சுண்டங்காய் அளவுமில்லாத இலங்கை என்ற நாட்டின் வேண்டுகோளையும் புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ளுகிறது என்றால் இதுதான் உலகில் இருக்கும் உண்மையான சன(நாய்) அகம்.

 rajapalayam%2Bstamp.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைகள்- இந்திய உள்துறை அமைச்சு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா மேலும் ஐந்து வருடங்களிற்கு நீடித்துள்ளது.

2014 இல் நீடிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு இன்று  அறிவித்துள்ளது.

இந்தியாவின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு விடுதலைப்புலிகளின் வன்முறை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும்  நடவடிக்கைகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் இந்தியாவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதுடன் இந்திய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதாக விளங்குவதால்  அந்த அமைப்பை உடனடியாக சட்டவிரோதமானது என அறிவிக்கவேண்டியுள்ளது என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் இணையங்கள் மூலம் தொடர்ந்தும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை பரப்பிவருகின்றனர் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என தெரிவித்துவருகின்றனர் என தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சு இது இந்தியாவில் மிக மிகமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது எனவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ministry_of_home_affair_in.jpg

2009 தோல்விக்கு பின்னரும் விடுதலைப்புலிகள் இன்னமும் ஈழம் என்பதனை கைவிடவில்லை நிதிசேகரிப்பு மற்றும் பிரச்சாரங்கள் மூலம் அந்த நோக்கத்தை நோக்கி இரகசியமாக செயற்படுகின்றனர் எனவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள தலைவர்களும் உறுப்பினர்களும் அமைப்பிற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புத்துயிர்  கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/55935

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத அமைப்புக்கு தடையை போட்டு என்ன செய்ய போகினம்?!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

இல்லாத அமைப்புக்கு தடையை போட்டு என்ன செய்ய போகினம்?!

இருக்கிற ஐஸ் வேலைகளை இரண்டு நாடுகளுமா கோட்டை விட்டுப் போட்டு, இல்லாத புலிக்கு மீசை முறுக்கினம்...

என்னத்த சொல்லுறது..  

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கும் வியாபாரம் ஓடணுமே.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை புலிககள் தான் வந்து அழிக்க வேணும் எண்டு இல்லை.அது உங்களாலேயே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் பதவிக்கு வந்து.. தனது தந்தையின் தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக் கொண்டு.. இந்தத் தடையை விலக்கினால் அன்றி.. ஹிந்தியாவில் ஹிந்து கட்சிகள்.. காங்கிரஸ்.. இடதுசாரி கம்னிஸ்டுக்கள்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாத அமைப்புக்களுக்கு கொஞ்சமும் குறைந்தவை அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

அவர்களுக்கும் வியாபாரம் ஓடணுமே.

தடை எடுத்தால் நல்லது எண்டு ஐயா சொல்ல வாறார் போலை.....😎

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கும் வியாபாரம் ஓடணுமே.

6 hours ago, குமாரசாமி said:

தடை எடுத்தால் நல்லது எண்டு ஐயா சொல்ல வாறார் போலை.....😎

கோசானுக்குத் தெரிந்த வியாபார தந்திரம்.... கோமணம் கட்டிய சாமியாருக்குத் தெரியவில்லை....🤔

தடையை எடுத்தால், இன்னும் 4 குண்டுகளை வெடிக்கவைத்து தடையை மேலும் பெருக்கலாம் அல்லே.... 🤣 

  • கருத்துக்கள உறவுகள்

2009 போருக்குப் பின்னர், இந்தியா தொடர்ந்தும் புலிகள்  மீதான தடையை நீட்டித்துவருவதுபற்றி, கடந்த காங்கிரஸ் அரசில் இருந்த பலர் நியாயம் கற்பித்திருந்தனர்.

குறிப்பாக, சோனியா, ராகுல் மற்றும் சோனியாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்று கருதப்படும் நாராயணன், ஷிவ்ஷங்கர் மேனன், பிரணாப் முகர்ஜீ போன்ற காங்கிரஸ் பிரபலங்கள் மீதே ஈழத்தமிழர்களின் முழுக் கோபமும் இருப்பதால் இவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைப்பட்டு இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இன்று காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆப்படியிருந்தும் இத்தடை நீட்டிக்கப்படுகிறதென்றால், இன்றும்கூட இந்தியா தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரில் தனது பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதுடன், இந்தக் கொடூரத்தில் பங்கிகொண்ட தனது தலைவர்களைக் காக்கப் பாடுபடுகிறதென்பது உண்மையாகிவிடுகிறது. 

நீதிவிசாரணை மூலமோ அல்லது சர்வதேசச் சட்டங்கள் மூலமோ சோனியாவையும் அவளது ஏவலாளிகளையும் நீதியின் முன் நிறுத்த முடியாவிட்டாலும், மனச் சாட்சி என்று வரும்போது தாம் செய்த அநியாயங்களுக்குத் தண்டனை ஒருநாள் கிடைக்கும் என்கிற பயம் இருக்கலாம். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

ரெல்லியில் இருந்து கொண்டு பேப்பரில் ரைப் செய்தால் தடை ஆகி போச்சா..? ஒரே டமாஸ்தான்.. கல்யாணம் , காது குத்து , பிளக்ஸ் பேனர் , சந்து, பொந்து , இண்டு இடுக்கு .. சுவரொட்டி எல்லா இடத்திலும் நீக்கமற உள்ளது. வீரத்தின் அடையாளமா பார்க்கினம் .😊
 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 11:21 PM, குமாரசாமி said:

தடை எடுத்தால் நல்லது எண்டு ஐயா சொல்ல வாறார் போலை.....😎

இல்லை. எடுத்தாலும் எடுக்காட்டியும் ஒண்டுதான். ஆனால் எடுத்தால், தடையை நீடிச்சவைக்கு பிராந்திய வியாபாரம் டல் ஆகீடும். இதுதான் நான் சொல்ல வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லை. எடுத்தாலும் எடுக்காட்டியும் ஒண்டுதான். ஆனால் எடுத்தால், தடையை நீடிச்சவைக்கு பிராந்திய வியாபாரம் டல் ஆகீடும். இதுதான் நான் சொல்ல வந்தது.

60466263_1344935005646351_54720951933374

கோசான்...  நீங்கள், ஈழத்து  கமலஹாசன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

உருவ ஒற்றுமையை வைத்து மட்டும் மதிப்பிடல் ஆகாது 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உருவ ஒற்றுமையை வைத்து மட்டும் மதிப்பிடல் ஆகாது 😜

யாழ். களத்திற்கு, உருவம் முக்கியமில்லை.
உங்கள், கருத்துத்தான்...  முக்கியம்.   🧐  :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 5/14/2019 at 4:13 PM, nedukkalapoovan said:

ராகுல் பதவிக்கு வந்து.. தனது தந்தையின் தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக் கொண்டு.. இந்தத் தடையை விலக்கினால் அன்றி.. ஹிந்தியாவில் ஹிந்து கட்சிகள்.. காங்கிரஸ்.. இடதுசாரி கம்னிஸ்டுக்கள்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாத அமைப்புக்களுக்கு கொஞ்சமும் குறைந்தவை அல்ல.

விடுதலைப் புலிகள் தடையும் ஏழு பேர் விடுதலையும் ஏதாவது முன்னேற்றமென்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகள் தடையும் ஏழு பேர் விடுதலையும் ஏதாவது முன்னேற்றமென்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும்.

அதாவது சாராயம் பருகி ஒவ்வாமை ஏற்பட்டால்.... மீண்டும் அந்தச் சாராயத்தைப் பருக்கியே ஒவ்வாமையைப் போக்க முடிவதுபோல்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

அதாவது சாராயம் பருகி ஒவ்வாமை ஏற்பட்டால்.... மீண்டும் அந்தச் சாராயத்தைப் பருக்கியே ஒவ்வாமையைப் போக்க முடிவதுபோல்.  

ஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..? :unsure:
 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

ஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..? :unsure:
 

அனுபவம் வன்னியரே. !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகள் தடையும் ஏழு பேர் விடுதலையும் ஏதாவது முன்னேற்றமென்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும்.

 

4 hours ago, Paanch said:

அதாவது சாராயம் பருகி ஒவ்வாமை ஏற்பட்டால்.... மீண்டும் அந்தச் சாராயத்தைப் பருக்கியே ஒவ்வாமையைப் போக்க முடிவதுபோல்.  

 

4 hours ago, ராசவன்னியன் said:

ஒவ்வாமையை போக்க அப்படியும் வழி இருக்கா என்ன..? :unsure:
 

விசத்தை.... விசத்தால் தான் முறிக்கலாம்,  என்று ஊரில் சொல்வார்கள்.  :grin:

தமிழ் அகராதி:  விசம்  -  நஞ்சு.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.