Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம்

இந்தியா மீது எங்களுக்கு முழு  நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய  கூட்டத்தில் தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இரவு பரபரப்பான நிலையில் இடமபெற்றது. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி. தவிர்ந்த மற்றயவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.இந்தக் கூட்டத்தில் சர்வதேசம் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என்ற வாசகம் அடங்கிய பிரேரணை ஒன்றின் நகல் வடிவத்தை மாவை சேனாதிராசா சமர்ப்பித்தார்.

அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட்சியின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார் சுமந்திரன்.

உடனே சரவணபவன் எம்.பி. தாம் இந்தியாவைத் தாக்கிப் பேட்டியளிக்கவில்லை என்றும் – தமது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் ஒளிபரப்பி அந்த ஊடகம் அதைத் திரிவுபடுத்தி விட்டது என்றும் -இந்தியாவின் நியாயமான பங்களிப்பை தாமும் எதிர்பார்க்கின்றார் என்றும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, அப்படி என்றால் இந்தியா மீது எங்களுக்கு எங்களின் கட்சிக்கு முழு நம்பிக்கை இருப்பதை உறுதிப்படுத்தி ஒரு தீர்மானத்தை இன்று மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைப்போமே என சுமந்திரன் யோசனை தெரிவித்தார்.அதற்கு சரவணபவன் எம்.பியும் ஆதர வளித்தார். அவரது பூரண இசை வோடு இந்தியா மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நேற்று கட்சியின் மத்திய குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது. அது இந்தியத்தரப்புக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இந்தியா தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியா மீது முழு நம்பிக்கை வைப்பதான தீர்மானம் ஒன்று நேற்று இரவு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் பிரதி இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/இந்தியா-மீது-எங்களுக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஆஹா ஆஹா....

  • கருத்துக்கள உறவுகள்

CyaDmVmXcAADyJg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

untouch.jpg

2 hours ago, கிருபன் said:

இந்தக் கூட்டத்தில் “சர்வதேசம் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என்ற வாசகம் அடங்கிய பிரேரணை ஒன்றின் நகல் வடிவத்தை மாவை சேனாதிராசா சமர்ப்பித்தார்.

காலம் காலமாக இதை தானே சொல்லி வருகிறீர்கள். 😎

2 hours ago, கிருபன் said:

ப்படி என்றால் இந்தியா மீது எங்களுக்கு எங்களின் கட்சிக்கு முழு நம்பிக்கை இருப்பதை உறுதிப்படுத்தி ஒரு தீர்மானத்தை இன்று மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைப்போமே என சுமந்திரன் யோசனை தெரிவித்தார்.அதற்கு சரவணபவன் எம்.பியும் ஆதரவளித்தார். அவரது பூரண இசை வோடு இந்தியா மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நேற்று கட்சியின் மத்திய குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அது இந்தியத்தரப்புக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் எல்லோரும் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்பது பல தமிழர்களுக்கும் தெரியும். இப்பிடி தீர்மானம் நிறைவேற்றி நேரத்தை வீணாக்க தேவையில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மேல் எமக்கு முழு நம்பிக்கை இருக்கு, எங்க மேலதான் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இவ்வண்,

தமிழரசுக் கட்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..ஆ மறுபடியும் முதல்ல இருந்தா..?

இந்த தமிழ் சனம், ரொம்ப ரொம்ப நல்லவங்கப்பா..!

 

roflphotos-dot-com-photo-comments-20171026170333.jpg

" அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட்சியின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார் சுமந்திரன்.

உடனே சரவணபவன் எம்.பி. தாம் இந்தியாவைத் தாக்கிப் பேட்டியளிக்கவில்லை என்றும் – தமது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் ஒளிபரப்பி அந்த ஊடகம் அதைத் திரிவுபடுத்தி விட்டது என்றும் -இந்தியாவின் நியாயமான பங்களிப்பை தாமும் எதிர்பார்க்கின்றார் என்றும் விளக்கமளித்தார்."

இந்த பரிமாற்றம் ஒரு திட்டமிடப்பட்ட நாடக அரங்கேற்றம் போல் தெரிகின்றது. 

( நீர் இப்படி ஒரு கேள்வியை கேளும் நான் இவ்வாறு பதிலளிப்பேன். எனவே இது நாம் இந்தியா பற்றி விவாதித்தது போல் மக்களுக்கு தெரியும். அத்துடன், எங்களுக்குள் இந்தியா பற்றி வெளிப்படையாக விவாதிக்கும் சனநாயக பண்பும் உள்ளதாக காட்டலாம்) 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

நீங்கள் எல்லோரும் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்பது பல தமிழர்களுக்கும் தெரியும். இப்பிடி தீர்மானம் நிறைவேற்றி நேரத்தை வீணாக்க தேவையில்லை. 😀

நேரத்தை வீணாக்கியும் இந்த விண்ணர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை..... அவர்களுக்கு நேரம் கிடைக்காதிருப்பதே நல்லது. கிடைத்தால் ஈழ மண் அணைத்தையும் தாரைவார்த்து விடுவார்கள், 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

காலம் காலமாக இதை தானே சொல்லி வருகிறீர்கள். 😎

கிளிப் பிள்ளை மாதிரி... சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
கால, உலக, சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட,  இவர்களுக்கு அறவே இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அடிப்படையில், இது சரியான முடிவு.

ஆனால் TNA இன் தவறு என்னவென்றால், மோதல் அணுகுமுறையை தவிர்த்தாலும், அணுகுமுறையை ஆக்கபூர்வமான அணுகு முறையையம் தவிர்த்து தான்.

ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு, சீனாவுடனும் உறவுகளை வளர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், கிந்தியவின் பிற்போக்கு தனத்தை கடிந்து கொள்ளவும் தயங்க கூடாது.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு 3 மாதத்தில் அரசு உறுதிப்படுத்த வேண்டும்

தவறினால் ஜனநாயக வழியில் மக்கள் போராட்டம்

தமிழரசுக்கட்சியின் 16வது மாநாட்டில் முக்கிய பிரகடனம்

 

ஐக்கிய இலங்கைக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் வழங்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீண்டும் வலியுறுத்தினார்.

மூன்று மாதகாலத்துக்குள் அரசாங்கம்

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீண்டும் வலியுறுத்தினார்.

மூன்று மாதகாலத்துக்குள் அரசாங்கம் நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். தவறினால் ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா இங்கு தலைமையுரை ஆற்றும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தமிழின அடையாளங்களை அழிக்கும் வகையிலான இனக்குடிப்பரம்பல் நிறுத்தப்படவேண்டும். காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி நீண்டகாலம் சிறையிலுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

பௌத்த அடிப்படைவாதிகள் இந்து மக்கள் கோவில்களில் இந்து கலாசார மையங்கள் புனித பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு செய்து புத்தர் சிலைகளையும் விக்கிரகங்களையும் கட்டிவரும் அத்துமீறல் அடாவடித்தனங்களுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரசாரம் செய்துவருகின்றனர். இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் இணங்கிய விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் சர்வதேச சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இம்மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும்” என்றும் மாவை சேனாதிராஜா தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

 

 
 

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தவேண்டுமென்ற பொறுப்பை வரலாற்றுக் கடமையை தெரிவு செய்து கொண்டிருக்கின்றேன். எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் தமிழ், - முஸ்லிம், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் ஒன்றுபட்டுழைக்க திடசங்கற்பம் பூணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பு கட்சிகளின் பிரேரணையை ஏற்காது விட்டமை தவறான விளைவுகளை ஏற்படுத்தி விட்டன. அதன் விளைவு தமிழர் தேசம், தமிழ் மக்கள் பல கூறுகளாகி புதிய புதிய கட்சிகளாய் தமிழர் பலம் சிதையும் நிலையை எட்டியிருக்கிறது. ஒன்றுபட்ட தேசமாய், ஒன்றிணைந்த தமிழர்களாய் எம் தமிழர், தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். 2013இல் பலதுறைகளில் மேம்பட்டவர்களின் வடக்கு மாகாணசபையாக அமைந்தது. 2/3 பங்கு உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பெற்றனர். ஐந்தாண்டு முடிவில் இச்சபை எதைச் சாதித்தது என்று எம்மக்களிடம் எழுங்கேள்விக்கு நாமே பொறுப்புக் கூறவேண்டி ஏற்பட்டுவிட்டது.

அரசியலமைப்புக் குற்றங்களைத் தொடர்ச்சியாக இழைத்துவரும் ஜனாதிபதி, ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும்பான்மை வாக்குகளுடனும் ஏகமனதாகவும் நிறைவேற்றிய 30/1, 34/1, 40/1 தீர்மானங்களை நிறைவேற்ற மறுத்து, இலங்கைத் தீவின் முக்கிய தீர்க்கப்படாத இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கூடிய அரிய சந்தர்ப்பங்களையும் போர் குற்ற விசாரணைகளையும் நிராகரித்து நிற்கும் ஜனாதிபதி மீது அரசின் மீது சர்வதேச நாடுகளும், ஐ.நா அமைப்புக்களும் பிரதமராக ராஜபக்ஷவை நியமித்த போது அதற்கு எதிராகச் செயல்பட்டது போல ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லையென ஆதங்கப்படுகிறோம். இவை தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் தமிழர் பிரதிநிதிகள் இராஜதந்திர முறையில் பேச்சு கேள்வி எழுப்புகிறோம். பேச்சு நடத்த வேண்டும் என்பது காலத்தின் தேவை.

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் தற்கொலைக் குண்டுதாரிகளை வெடிக்க வைத்துப் போரைத் தொடங்கிவிட்டனர். இலங்கை வரலாற்றில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை விட பௌத்த சிங்கள அடிப்படைவாத மேலாதிக்கமும் பேரினவாதமும் ஏனைய மதங்களையும், தமிழினத்தையும் அடக்கி ஒடுக்கி அழித்துவிட அரசியல் அடிப்படையிலும் எடுத்து வரும் நடவடிக்கைகளும் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என மதிப்பிட வேண்டும்.

மத, இன, ஜனநாயக சமத்துவம் இலங்கையில் இல்லை என்பது வெளிப்படை. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பினால் 250 பேர் கொல்லப்பட்டனர், 500 பேர் வரை காயமடைந்தனர். பொருளாதார சமூக ரீதியில் பேரழிவு ஏற்பட்டபோது சர்வதேசம் இலங்கைக்கு பாதுகாப்பு வழங்கவேண்டுமென இலங்கைக்குள் வந்து விட்டன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பெரு வெற்றி பெற்றது. அரசின் பங்காளிகளாகவோ அமைச்சரவை பங்காளிகளாகவோ இருந்ததில்லை. தமிழினப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் போரினால் சிதைந்த தமிழ் பேசும் மக்கள் தேசத்தையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதுமான தீர்மானங்களின் அடிப்படையில் அரசை ஆதரித்து வந்திருக்கிறது. 2016இல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானமெடுத்திருந்தது.

பாராளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு முன்வைக்கப்படும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் 225 பேரில் 157 உறுப்பினர் 2/3 பெரும்பான்மைப் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுடன் பேணி வந்திருக்கிறது. 2018 ஒக்டோபர் 26இல் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு முன்னரே ஜனாதிபதியின் சுதந்திரக்கட்சி தேசிய அரசிலிருந்து விலகிவிட்டது. இதுவும் ஓர் அரசியல் தவறேயாகும்.

புதிய அரசியலமைப்பில் நாட்டின் முக்கிய தேசியப் பிரச்சினையாக இருக்கின்ற தமிழ் இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்குமாகவே ஜனாதிபதித் தேர்தலில் 62 இலட்சம் மக்கள் வாக்களித்து மைத்திரி பால சிறிசேனவை வெற்றி பெறவைத்தனர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அற்பத்தனமாக முறியடித்து விட்டார். இச்செய்கையானது மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறாகும். பௌத்த அடிப்படைவாத நிலைப்பாட்டை ஏற்றுவிட்டார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

https://www.thinakaran.lk/2019/07/01/உள்நாடு/36558/தமிழ்-பேசும்-மக்களுக்கான-அரசியல்-தீர்வு-3-மாதத்தில்-அரசு-உறுதிப்படுத்த

On 6/30/2019 at 3:23 PM, ampanai said:

" அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட்சியின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார் சுமந்திரன். 

உடனே சரவணபவன் எம்.பி. தாம் இந்தியாவைத் தாக்கிப் பேட்டியளிக்கவில்லை என்றும் – தமது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் ஒளிபரப்பி அந்த ஊடகம் அதைத் திரிவுபடுத்தி விட்டது என்றும் -இந்தியாவின் நியாயமான பங்களிப்பை தாமும் எதிர்பார்க்கின்றார் என்றும் விளக்கமளித்தார்." 

சரவணபவன் சீனாவின் ஆதரவாளர் என்டு இந்தியனுக்கு சரவணபவன் மேல கடும் சந்தேகம் கிளம்பிருக்காம்!
அதான் இந்த நாடகம்.
இந்த நாடகத்தால இந்தியன் ஏமாந்திருப்பான்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம்

பொங்கலுக்கு தீர்வு  கிடைக்கும்...........சம்பந்தர்

 

tenor.gif?itemid=5436796&ext=gif&_nc_has

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.