Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-1-720x450.jpg

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் உற்சவ காலத்தின் தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழக்கமாக காணப்படுவதுடன், தூக்குக் காவடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் நல்லூர் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/நல்லூர்-ஆலய-வளாகத்துக்கு/

  • Replies 134
  • Views 10.8k
  • Created
  • Last Reply

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

10 minutes ago, Paanch said:

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குக்காவடி தடை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே.

1 hour ago, குமாரசாமி said:

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

தூக்குகாவடியில் காட்டுமிராண்டித்தனமாக தொங்குவது  நிலத்தில் புரண்டு உருளுவது போன்றன காட்டுவாசிகள் காலத்தில் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டிருக்கலாம். இப்போதைய அறிவியல் வளர்சியடைந்த காலத்தில் சிந்தக்கும்  திறன் இன்றி இவற்றை செய்ய வேண்டிய தேவை உள்ளதா? சிந்தித்து பாருங்கள். 

ஒரு காலத்தில் பருவமெய முதலே பெண்பிள்ளைகளை திருமணம் செய்யது வைக்கும் பழக்கம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்ற இந்து பாரம்பரியங்கள்  ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட போதும் உங்களை போன்றவர்கள் எமது முன்னோர்கள், எமது பாரம்பரியம் எற்று புராணம் பாடினார்கள். அவர்கள்  சொல்லை அன்று கேட்டிருந்தால்  நாங்கள் இன்னும் ஆயிரம் வருடம் பின்னோக்கி இருந்திருப்போம்.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

உடற்பயிற்சி செய்யிறம் என்ற பெயரில் வீதிகளிலும்,மைதானங்களிலும் ஓடுபவர்களும், ஜிம்முக்கு போகிறவர்களும் எத்தனை பதக்கங்களை எடுத்துக் கிழித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

என்னது நீங்கள் சொல்வது அறிவுபூர்வமான  விவாதமா? அப்படியொன்றும் அறிவுபூர்வமாக நீங்கள் விவாதத்தித்ததாக  நான் எந்த திரியிலும் கண்டதில்லை. எப்ப பார்த்தாலும் சமய சம்பந்தமான சடங்குகளையும் நடைமுறைகளையும் நக்கலடிப்பதை விட என்ன அறிவு பூர்வமாக சொன்னீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் நல்லூர் ஆலய வளாகத்திலும் சுற்றாடலிலும் யாரும் வேட்டியுடணோ சேலையுடணோ வரக்கூடாது ஜீன்ஸ் சேட் டெனிம் வட இந்ந்திய உடைகளை அணிந்தே வரவேண்டும் எனச் சொன்னாலும் சொல்வார்கள் நல்லூர் ஆலயத்தின் உரிமையாளருக்குப் பாரம்பரியம் என்றால் என்னவென்று புரியவில்லைப்போல் இருக்கு. 

உண்மையில் எனது குடும்பத்தினதும் எனதும் குலதெய்வம் நல்லூர் முருகந்தான் ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மனதுக்குச் சங்கடமாக இருக்கு. தவிர உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் திருவிழாக்காலத்தில் மச்சம் மாமிசம் பாவிக்காமல் நல்லூரானை அனுட்டிப்பவன் நான்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

"நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

நிர்வாகத்திற்கு முடிவுகளை எடுக்க உரிமை உண்டு, அதை மக்கள்/பக்தர்கள் ஏற்றும் நடக்க வேண்டும். அது அவர்களின் கடமை.

ஆனால், ஏன் தடை செய்தொம் என்பதை நிர்வாகம் அறிவிக்க வேண்டும், அதுவே அவர்கள் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதை அவர்கள் இன்னும் செய்யவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை பாருங்கோ இந்த லூசுகள் செய்யிற வேலையை!!!!!!!!! 🤣

இந்து மதத்தில் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் தன் உடலை வருத்தி, இரத்தம் சிந்தி, ஊசிகளை ஏற்றிக் கொண்டு வழிபட்டால் கடவுள் அனுக்கிரகம் செய்வார் என்று சொல்லப்பட்டு இருக்கா? தன்னை வருத்தி (உண்ணாமல் இருப்பது,  தோப்பு கரணம் இடுவது.,..) இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பது வேறு, தன்னை சித்திரவதை செய்து அதன் வலியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது வேறு. தன்னை சித்திரவை செய்வது காட்டுமிராண்டித்தனம்.

எல்லா மதங்களிலும் இப்படியான காட்டுமிராண்டித்தங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் பெண்களை முழுக்க மூடும் ஆடைகளை அணியச் செய்வதில் இருந்து, சிறுமிகளை மணம் முடித்து வைப்பது வரை பல காட்டுமிராண்டித்தங்கள் உள்ளன.

அதே போன்று இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை ஏனைய கிறிஸ்தவர்களின் பாவங்களை கழுவுவதற்காகவும் என நம்பப்படுவதும் காட்டுமிராண்டித்தனமே. பாவத்தில் இருந்து பிறந்த மதமாக கிறீஸ்தவம் இருக்கின்றது.

அஹிம்சை மதம் என சொல்லப்படும் பெளத்தத்திலும் சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்குவதில் இருந்து இனவழிப்பை நியாயப்படுத்தும் காரணிகளை கொண்டு இருப்பது வரைக்கும் காட்டுமிராண்டித்தனங்களே.

என்னைக் கேட்டால் குகைகளில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரீகமடைந்த ஒரு இனமாக முற்றிலும் மாறுவதை தடுப்பது இப்படியான மத செயல் முறைகளே

45 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

ஒருவர் கூறும் கருத்துக்கு எதிர்கருத்து எழுதவேண்டுமென்றால் அவருக்கு ஒரு முத்திரை குத்தி அவமதிப்பது உங்கள் வாடிக்கை. உங்களுக்காக நான் ஜெகோவா, அல்லலூயா லூசுக்கூட்டங்கள் செய்யும் வேலைகளை அறிய அங்கு செல்ல முடியாது. நான் பிறந்த மத முட்டாள்தனங்களை தான் கேள்வி கேட்க முடியும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எ.த, உங்கள் சுகப் படுத்த முடியாத மூலக்கொதி இங்கே எல்லாருக்கும் தெரிந்தது தான்! ஆனால் அந்த மூலக்கொதி தமிழ் வாசிப்பு கிரகிப்பிலும் கூட உங்களை அரைகுறைத் தமிழனாக மாற்றி விட்டது. கீழே மீளவும் நான் எழுதியதை கோடிகாட்டியிருக்கிறேன்!

2 hours ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

மற்ற படி உங்களுக்கு விஞ்ஞானிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று விளக்கும் நோக்கம் எனக்கில்லை!

"எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

ஒருவேளை சம்பந்தர் ஐயாவும் மாவை சேனாதிராசாவும் தமது பாவங்களை கழுவ தூக்கு காவடி எடுக்க முயல்வதாக நிர்வாகத்திற்கு செய்தி கிடைத்திருக்கலாம் 😂

3 hours ago, valavan said:

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

கண்டியில் தற்பொழுது நடக்கும் எசல பெரகராவில் யானைகளை வதைக்கிறார்கள் என்ற கருத்தை நீண்ட காலமாக செவிமடுக்கும் அஸ்கிரிய மற்றும் மால்வைத்தை பீடங்கள் கூட நல்லூர் நிர்வாகத்தை முன்மாதிரியாக முன்மாதிரியாக கொண்டு தடை விதிப்பார்கள் என்று எல்லாளன் நம்பலாம். ஆனால் கைமுனு நம்ப மாட்டான். அதனால் தான் அவன் மக்களுக்கு நாடு, எல்லாளன் மக்களுக்கு வேண்டுமானால் ஒரு சின்ன நினைவுச்சின்னம் (அதுவும் காலப்போக்கில் அழிக்கப்படும்). 

எசல பெரஹரா வௌி வீதி ஊர்வலம் இன்று ஆரம்பம்

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

Me too இயக்கம் வந்த பின்னர் எல்லாப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களையும் பிற்போக்கு என்று முத்திரை குத்துகின்றார்கள்!

அலகு குத்தி தூக்குக்காவடி எடுப்பது அதைவிட கடுமையான சூழலில் இருந்து காத்த கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு காணிக்கையாகவும் இருக்கலாம்தானே.

காட்டு மிராண்டித்தனம் என்பதன் வரைவிலக்கணம் தெரியாது. ஏதோ காடும் மிரட்டும் வன்முறையையும் கொண்டாதான ஒரு கூட்டுச்சொல் மாதிரி தெரிகின்றது.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தமைக்கு முதன்மை காரணம் : சிங்கள காண்டுமிராண்டித்தனம்? அதற்காக சிங்கள இனமோ இல்லை சர்வதேசமோ வருத்தப்படுவதில்லை. தப்ப வலிமை கொண்டிருந்த உறவுகளில், பெரும்பான்மையாக ஈழ தமிழர்கள் ஏதிலிகளாக புலம்பெயர்ந்து வாழுவதும் காட்டுமிராண்டித்தனம் கொண்ட நாடுகளில் தான், நானும் தான்.

தமிழர்கள் தம் இதிகாசங்கள், புராணங்கள், கலாச்சாரங்களில் இருந்த இந்த காலத்திற்கு ஒவ்வாத காண்டுமிராண்டித்தனங்களை விட்டு ஒரு பண்பாட்டில் உயர்ந்த சமூகமாக வந்து கொண்டிருக்கின்றது. எனக்கும் நூறு வீதம் நாம் அப்படிப்பட்ட ஒரு சமூகமாக, இனமாக மாறுவதில் மகிழ்ச்சியே.

ஆனால், ஒரு பல்லின மதங்கள், சமூகம் கொண்ட நாட்டில் ஒரு சிறுபான்மை மத, இனத்தவர்கள் மட்டும் செய்வது தற்கொலைக்கு சமனானது. 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, tulpen said:

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

ஒருவனை பைத்தியக்காரன் என்பதற்கும், ஒருவன் பலகோடிபேரை  பைத்தியக்காரர்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.

அடுத்தவரை தொந்தரவு செய்யாமலும் சட்டத்தை மீறாமலும் அவரவர் வழிபாட்டு கடமைகளை அவர்கள் விரும்பிய வகையில் ஈடேற்றுவது அவரவர் பிரச்சனை.

அதனால்தான்  அடுத்தவர் மூக்கு நுனியில் உங்கள் விரல் பட்டால்கூட குற்றம் என்று சட்டம் வைத்துள்ள மேற்குலகங்களில்கூட நீங்கள் சொன்ன காட்டுமிராண்டிதன வழிபாடுகளில் அந்நாட்டு அரசுகள் கை வைப்பதேயில்லை.

சாவின் விளிம்பிலிருந்து தப்பிய  தன் குழந்தைக்காக அலகுகுத்தி காவடி எடுப்பவர்களும் உண்டு , அது அவரவர்களின்  நம்பிக்கை நேர்த்திக்கடன், 

அவர்களின் முன்னால் போய் நின்று நீங்கள் செய்தது காட்டுமிராண்டிதனம் பைத்தியக்காரமான செயல்  செயல் என்று  சொல்லும் துணிவு உங்களுக்கிருக்கா?

நான் வேண்டுமென்றால் எனக்கு பிடிக்காத பைத்தியக்காரதனம்,காட்டுமிராண்டி தனங்களிலிருந்து என்னையும் எனது நெருங்கிய உறவுகளையும் ஒதுங்கியிருக்க சொல்லலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.