Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ....

  • Replies 130
  • Views 75.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: காவல் கீதம்  (1992)

இசை:இளையராஜா

வரிகள்: பிறைசூடன்

பாடியோர் : SPB &  S ஜானகி

.......

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே..

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ...

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ..

மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்..
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ..

  • கருத்துக்கள உறவுகள்
 
பாடல்: கண்ணா என் சேலைக்குள்ள | Song: Kanna En Selaikulla
திரைப்படம்: ஜெய்ஹிந்த் | Film: Jaihinth
இசை: வித்யாசாகர் | Composer: Vidhyasagar
---------------------------------------------------------------------------------------------------
jaihinth.jpg
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று 
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

எறும்பு செய்யும் லீலைபோல் 
குறும்பு செய்ய வந்தாயோ..!
உள்ளே என்னமோ பண்ண..

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

அங்கே தொட்டு இங்கே தொட்டு 
எங்கே தொட எண்ணம் ராசா.?
கன்னம்தொட்டு வண்ணம்தொட்டு 
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா.!

இது தேவையான குறும்பு 
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு..
வா வா வா வா..

கண்ணா....

பூமிக்குள்ள பொண்ண வச்சான் 
பொண்ணுக்குள்ள என்ன வச்சான்.?
ஆம்பளைக்கு மீசை வச்சான் 
பொம்பளைக்கு என்ன வச்சான் .?

அதைத் தெரிஞ்சு விளக்கம் தாரேன் 
உன்னை திருடிக் குடிக்க போறேன்..
வா வா வா வா..

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று 
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

எறும்பு செய்யும் லீலைபோல் 
குறும்பு செய்ய வந்தாயோ..!
உள்ளே என்னமோ பண்ண..

கண்ணா....
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:48 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: காவல் கீதம்  (1992)

இசை:இளையராஜா

வரிகள்: பிறைசூடன்

பாடியோர் : SPB &  S ஜானகி

.......

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே..

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ...

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ..

மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்..
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ..

 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தர்மதேவதை(1986)

இசை : ரவீந்திரன்

வரிகள் : வாலி

பாடியோர்: ஜேசுதாஸ் & ஜானகி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ....
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

யாவுமே நீ சொல்லி சொல்லி தா...
தேவையை நீ அள்ளி அள்ளி தா...
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ...
ஆசைகள் சொல் யாரை விட்டதோ...
ஒருவரை ஒருவர் உரசும் கலையிது...
இருவரும் உலகை மறக்கும் நிலையிது...
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...


ஆலிலை உன் அங்கம் அல்லவா...
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா...
மாங்கனி தேன் சொட்ட சொட்டத்தான்...
ஆண் கிளி நீ கொத்த கொத்தத்தான்...
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது...
வரவர விவரம் எனக்கும் புரியிது...
நானாட நீயாட ஆனந்தம் அபிநயம் இதுவோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

  • கருத்துக்கள உறவுகள்

 

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்..
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாறும் மலர்ப்பந்தலாகும்..
கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே..
கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்..
மகராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்..
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

 

 

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ

வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

 

அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்

தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா

நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி

ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

 

இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ

முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே

நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே

பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

 

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ

வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2019 at 4:09 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: தர்மதேவதை(1986)

இசை : ரவீந்திரன்

வரிகள் : வாலி

பாடியோர்: ஜேசுதாஸ் & ஜானகி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ....
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

யாவுமே நீ சொல்லி சொல்லி தா...
தேவையை நீ அள்ளி அள்ளி தா...
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ...
ஆசைகள் சொல் யாரை விட்டதோ...
ஒருவரை ஒருவர் உரசும் கலையிது...
இருவரும் உலகை மறக்கும் நிலையிது...
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...


ஆலிலை உன் அங்கம் அல்லவா...
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா...
மாங்கனி தேன் சொட்ட சொட்டத்தான்...
ஆண் கிளி நீ கொத்த கொத்தத்தான்...
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது...
வரவர விவரம் எனக்கும் புரியிது...
நானாட நீயாட ஆனந்தம் அபிநயம் இதுவோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

இந்த ஆல் இலை பல பாடல்களில் வருகிறது 

இதுக்கு உண்மையான அர்த்தம் நான் நினைப்பதுதானா?
அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

இந்த ஆல் இலை பல பாடல்களில் வருகிறது 

இதுக்கு உண்மையான அர்த்தம் நான் நினைப்பதுதானா?
அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? 

101% தாங்கள் நினைப்பதுதான் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101% தாங்கள் நினைப்பதுதான் தோழர்..👍

இப்பிடி பச்சையா வெளிப்படையாக அநேகமான பாடல்களில் எழுதுகிறார்களே 
எனக்கு தெரியாமல் ஏதும் வேறு அர்த்தம் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் 
அதுதான் திரியும் காமம் என்று இருப்பதால் 
யாரையாவது கேட்டுவிட வேண்டும் என்று எண்ணினேன்! நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாடும் பறவைகள்(1988)

இசை:இளையராஜா

பாடியோர்:  SPB & S ஜானகி

ஏகாந்த வேளை
இன்பத்தின் வாசல்

ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தல் என்பது
   இருட்டு
கண்கள் என்பது
   விளக்கு
உந்தன் புன்னகை
   கிழக்கு
இன்னும் ஏனடி
   வழக்கு
மேகம் வந்து
   பாய் விரிக்க
நீயும் நானும்
   சேர்ந்திருக்க
காமன் அம்புகள்
   பாயட்டும்
காதல் வம்புகள்
   ஓயட்டும்
ராச லீலைகள்
  ஆகட்டும்
விண்ணில் வெண்ணிலா
   வேகட்டும்
வா
    மெல்ல வா
பூ
   அல்லவா
நான்
   கிள்ளவா  

ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

நேற்று ராத்திரி
   மலர்ந்தேன்
நீல ஆற்றிலே
   நனைந்தேன்
ஈர ஆடைகள்
   களைந்தேன்
பூவில் ஆடைகள்
   புனைந்தேன்
வண்ண பூக்களும்
   வெடிக்க
பூவில் வண்டு தேன்
   குடிக்க
தங்கம் போன்றது
   அங்கங்கள்
எங்கு வேண்டுமோ
   தங்குங்கள்
காமன் யாத்திரை
   செல்லுங்கள்
காலை வந்ததும்
   சொல்லுங்கள்
நம்
   நெஞ்சங்கள்
பூ
   மஞ்சங்கள்
தேன்
   சிந்துங்கள்
 
 ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை

(குளிருது குளிருது)

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பதுன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

(குளிருது குளிருது)

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத் துளி மழைத் துளி தொல்லையா
நாளை அடை மழை தாங்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

(குளிருது குளிருது)

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

இசை : சங்கர்-கணேஷ்

பாடியவர் : ஜேசுதாஸ் & வசந்தா

வரிகள்:  புலமை பித்தன்

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான் இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ..

இடை கொண்ட அன்னம் ஒன்று

எழிலோடு வந்தாட..

நடை சிந்தும் நளினம் கண்டு மனம் ஒன்று போராட..

படை கொண்ட மன்னன் கூட பசி கொண்டு தள்ளாட ..

பாவை உந்தன் பருவம் இன்று பதில் சொல்லுமோ..

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான் ..

கடல் போல பொங்கும் உள்ளம்

கரை காணும் நேரத்தில்

உடல் மீறி பொங்கும் இன்பம் அலை மோதும் கோலத்தில்

மடல் கொண்டு இளமை எழுதும்

கவி ஒன்று மலராதோ..

விடை சொல்ல விடியும் காலை

வரும் அல்லவோ..

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான்..இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ..

  • கருத்துக்கள உறவுகள்

அட! நம்ம மிட்நைட் மசாலா!

எதுக்கும் இந்த திரிய பேவரிட்ஸ்ல போட்டு வைப்பம் 😍

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுமணியே....
கன்னி வெடியே.......
கண்டபடியே...............
கட்டிப்புடியே .................

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கண்ணுமணியே....
கன்னி வெடியே.......
கண்டபடியே...............
கட்டிப்புடியே .................

கன்னி வெடியை விட
கண்ணி வெடி பறவாயில்லை.
தினம் தினம் வெடிக்காமல் ஒருதரம் வெடிக்கும்.

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

மன்னா நீ மதி காண வாராயோ

என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ

பெண் பாவைக்குள் பேராசையோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

நீங்காத மேலாடை நீங்க

என் விடல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட

அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக

ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள

மெய்யை மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள

ம்.. ஆ.. அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள

தீரா ஏக்கம் தீர

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

கல்வெட்டு போல் எந்தன் கன்னம்

உன் பல் பட்டு வரலாற்று சின்னம்

முரசுள்ள மஞ்சம் என் நெஞ்சம்

அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்

வரும் விடிகாலை பொழுதே ஏன் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை

குத்தித் தள்ளும் உன் பார்வை

யாரோ யார் வெல்லுவாரோ

ஓ.. எம்மை கொஞ்சும் உன் காமம்

உம்மை விஞ்சும் என் யாமம்

யாரோ யார் மிஞ்சுவாரோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இத்தனை  நாளாக  இப்பக்கம்  என் கண்ணில் படவில்லையே??

இப்பவெல்லாம் நல்லது  தெரியவர  நாளாகுது??😋

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இதயத்தை திருடாதே(1989)

வரிகள்: வாலி

இசை: இளையராஜா

பாடியோர்: மனோ & S ஜானகி

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  வண்டிசோலை சின்ராசு(1994)

இசை :  AR ரஹ்மான்

பாடியோர்: SPB & வாணி ஜெயராம்

வரிகள்: வைரமுத்து

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு

சாம வேதம் நீ ஓது வாடைத் தீயைத் தூவும் போது
வா இனி தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர
மெய்யோடு மெய் சேர

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2019 at 10:25 AM, Lara said:

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

மன்னா நீ மதி காண வாராயோ

என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ

பெண் பாவைக்குள் பேராசையோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

நீங்காத மேலாடை நீங்க

என் விடல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட

அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக

ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள

மெய்யை மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள

ம்.. ஆ.. அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள

தீரா ஏக்கம் தீர

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

கல்வெட்டு போல் எந்தன் கன்னம்

உன் பல் பட்டு வரலாற்று சின்னம்

முரசுள்ள மஞ்சம் என் நெஞ்சம்

அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்

வரும் விடிகாலை பொழுதே ஏன் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை

குத்தித் தள்ளும் உன் பார்வை

யாரோ யார் வெல்லுவாரோ

ஓ.. எம்மை கொஞ்சும் உன் காமம்

உம்மை விஞ்சும் என் யாமம்

யாரோ யார் மிஞ்சுவாரோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

 

மிகவும் அருமையான வரிகள் .....
எனக்கு இந்த இசை சரியாக பொருந்தவில்லை என்று தோன்றுகிறது 
யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை 

ஒரு சரியான இசை கிடைத்திருக்குமெனில் ஒரு அற்புதமான 
பாடலாக இருந்து இருக்கும் 

இணைப்பிற்கு நன்றி 

58 minutes ago, Maruthankerny said:

மிகவும் அருமையான வரிகள் .....
எனக்கு இந்த இசை சரியாக பொருந்தவில்லை என்று தோன்றுகிறது 
யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை 

ஒரு சரியான இசை கிடைத்திருக்குமெனில் ஒரு அற்புதமான 
பாடலாக இருந்து இருக்கும் 

இணைப்பிற்கு நன்றி 

பாடல் வரிகள்: லலிதானந்த்

இசை: சந்தோஷ் நாராயணன்

பாடியவர்: கல்பனா ராகவேந்தர்

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

லலிதா ஆனந்த்  இவரை முன்பு கேள்விப்படவில்லை 
மிக நன்றாக ரசித்து எழுதி இருக்கிறாரே என்று நினைத்தேன் 
பெண் என்பதால் தனது உணர்வை கொட்டினாரோ என்னமோ 

4 minutes ago, Maruthankerny said:

நன்றி 

லலிதா ஆனந்த்  இவரை முன்பு கேள்விப்படவில்லை 
மிக நன்றாக ரசித்து எழுதி இருக்கிறாரே என்று நினைத்தேன் 
பெண் என்பதால் தனது உணர்வை கொட்டினாரோ என்னமோ 

லலிதா ஆனந்த் அல்ல லலிதானந்த். ஒரு ஆண்.

https://en.m.wikipedia.org/wiki/Lalithanand

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

லலிதா ஆனந்த் அல்ல லலிதானந்த். ஒரு ஆண்.

https://en.m.wikipedia.org/wiki/Lalithanand

லலிதா என்று தனது மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கிறார் 
பெண்பெயரை சேர்த்திருப்பதால் அப்படி ஒரு உணர்வு வந்திருக்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.