Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலையில் புத்தரின் உருவம் ; தமிழ் பெண்ணுக்கு நடந்த அவலம்

Featured Replies

திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் அணிந்திருந்த சேலையால் இன்று மதியம் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

p1.jpg

குறித்த பெண் தனது பிள்ளையுடன் வயதான பெண்ணெருவருமாக திருகோணமலை நகரிற்கு  ஆலய வழிபாட்டிற்காக வந்தபோதும் அவர் புத்தரின் உருவம் பொறித்த சோலை அணிந்திருந்ததனால் இப்பதற்றநிலைமை ஏற்பட்டது.

குறித்த சேலையில் பொறிக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் உருவத்தைக் கண்ட சில பெரும்பான்மையினத்தவர்கள் இதுதொடர்பாக பலருக்கும் அறிவித்ததுடன் குறித்த பெண்ணை சுற்றிவளைத்து கூடியதுடன் குறித்த சேலை தொடர்பாக  பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பஸ்நிலயத்தில் நின்ற பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

p2.jpg

பின்னர் பிரதான பொலிஸ் நிலயத்திற்கு முன்பாகவுள்ள விகாரையின் பௌத்ததுறவி தலமையிலான பலரும் குறித்த இடத்தில் கூடியதுடன் பெண் மீது மனம் புண்படியாகும் விதமான  கருத்துக்களை வெளியிட்டதுடன் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.

அதுமட்டுமன்றி தமது புத்த பெருமானை பொறித்த சேலை அணிந்த பெண்ணிற்கு தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பிள்ளை மற்றும் இரு பெண்களையும்  பொலிஸ் நிலயத்திற்கு அழைத்துச் சென்றனர். 

p3.jpg

குறித்த பெண்கள் பொலிஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ் நிலயத்தில் இந்நடவடிக்கையை அதிகளவிலான மக்கள் பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையப் பொலிசார் மேற்கோண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/63647

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தலைநகரில் குடியேறிச் சிங்கள பெளத்த காடைகள் நடத்தும் அடாவடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 

புத்தர் என்ன இவங்க வீட்டுச் சொத்தா. அவர் பிறந்த மண்ணிலேயே அவர் மேல் இவ்வளவு வெறிபிடித்த மனிதர்கள் வாழவில்லை. அவர் பிறந்த மண் இன்று உலகில் இந்துக்களின் நாடாக உள்ளது.

இந்த விஜயனின் கொலை கொள்ளைக் கும்பல் புத்தரை தாங்கள் தான் தத்தெடுத்துக் கொண்டதாக பாசாங்கு செய்து கொண்டு தமிழர்கள் மீது இனவெறியை கொட்டி வருகின்றன. 

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

குறித்த பெண்கள் பொலிஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ் நிலயத்தில் இந்நடவடிக்கையை அதிகளவிலான மக்கள் பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

நாலு தமிழர்கள் இவ்வாறு எங்குமே செய்ய முடியாது, காரணம் அங்குள்ள ஐந்தாவது தமிழன் விட மாட்டான். 

  • கருத்துக்கள உறவுகள்

தவறு  இந்த  தமிழ்ப்பெண்ணில்  தான்

சிங்களவனை  இன்னுமா  நீங்க புரிந்து கொள்ளவில்லை????????

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புத்தர் சேலை கட்டிய பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர். யாழ்ப்பாண்த்தில் ஒரு பெண் வளக்கறிஞர் கண்டிக்கப்பட்டிருக்கிறதாக ஞாபகம்.  ஒருவகையில் இது மத நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினையும்கூட. சிங்கள பெண்கள் சிவலிங்க சேலை உடுத்தாலும் தமிழருக்குப் பிடிக்காது. இத்தனை இருந்தும் ஏன் அந்த பெண் புத்த சேலை கட்டினார்? தெரியாமல் கட்டியிருக்கலாம். ஆனால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். பல்லின சமூகங்களிடை வாழ்கையில் குறிப்பாக எம்மைப்போன்ற போராடுகிற இனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Edited by poet

  • தொடங்கியவர்

தவறு தமிழ் பெண்ணில் இருக்கலாம். ஆனால், அவரிடம் மட்டும்தான் தவறு இருக்கின்றது என்றில்லை.

இந்த பெண் பெண்ணாக பிறந்தது தவறில்லை.

இந்த பெண் உடுத்த சீலையை இந்த பெண் உலகில் எங்கு உடுத்தினாலும் தவறு இல்லை. ஆனால், இலங்கையில் தவறு !

இந்த சீலையை வடிவமைத்தவர் மீது தவறு இருக்கலாம்?

இலங்கை சட்டப்படி சேலையை நாட்டில் வித்தவரை கைது செய்யலாம்? நாட்டில் வடிவமைத்தவர் இல்லை இறக்குமதி செய்தவரை கைது செய்யலாம்?

தவறு அந்த தமிழ் பெண் மீது இல்லை. அவரை பார்க்கும் கண்களில், அதில் உள்ள மத வெறியில் தான் தவறு.

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஐயா இந்த பெண். அநேகமா அவருக்கு அது புத்தரின் உருவம் என்றே தெரிந்திருக்காது. எதோ ஒருவரின் கண்கள் போன்றே தெரிகிறது. எது எப்படியோ இனவாதிகளின் கண்களுக்கு இதெல்லாமா தெரியப் போகிறது.

பொயட் சொல்வது போல சிவலிங்கத்தை சேலையாய் அணிந்தாலும், யேசுவின் படத்தை காற்சட்டை தைத்துப் போட்டாலும் இதே அளவுக்கு கோபப் படத்தான் போகிறாரகள். நபியின் படத்தை கார்ட்டூ வரைந்தாலே மற்ற கோஸ்டி பத்வா கொடுக்கும்.

ஒரே வித்தியாசம், சிறுபான்மை இனங்கள் என்பதால் இலங்கையில் கிறிஸ்தவ, முஸ்லீம், இந்து அடிப்படைவாதிகள் அடக்கி வாசிக்கிறாரகள். பெரும்பான்மைத் திமிரில் பெளத்த சிங்களவர்கள் எழும்பி ஆடுகிறார்கள்.

பிகு: இங்கே பச்சாதாபப்பட்டு எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும் போது, சில மாதங்களுக்கு முன் சுயவிருப்பில், தமது மதம் சார்ந்து உடையணிந்த முஸ்லிம் பெண்கள் மீது, சிங்கள காடைகள் ஏவிவிட்ட வன்முறையும், சிங்கள காடைகளால் ஏவுப்பட்டு அவிசாவளையில் சில தமிழ் காடைகள் செய்த அடாவடியும் -அதை புலம் பெயர் நாட்டில் இருந்து விசிலடிச்சு, நியாப்படுத்தியவர்ளின் செயலும் கண் முன்னே வந்து போகிறது.

நியாயம் எல்லாருக்கும் ஒன்றுதான். சேலை அணிந்த பெண்ணாகினும், ஹிஜாப் அணிந்த பெண்ணாகினும்.

அதேபோல் அநியாயமும் ஒன்றுதான். அது சேலை அணிந்த பெண் மீது ஏவப்பட்டாலும், ஹிஜாப் அணிந்த பெண் மீது ஏவப்பட்டாலும்.

குழு மனோநிலை கண்ணை/புத்தியை மறைப்பதால் நம் மத்தியில் இருந்து எழும் அநியாயத்தை வரவேற்கும் யாருக்கும், அதே அநியயாம் நமக்கு நடக்கும் போது கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இல்லை.

  • தொடங்கியவர்
16 minutes ago, goshan_che said:

பொயட் சொல்வது போல சிவலிங்கத்தை சேலையாய் அணிந்தாலும், யேசுவின் படத்தை காற்சட்டை தைத்துப் போட்டாலும் இதே அளவுக்கு கோபப் படத்தான் போகிறாரகள்

கோபப்படலாம். ஆனால், ஒன்றும் செய்யமுடியாது, பூட்டிய அறைக்குள் அழுவத்தைத்தவிர.

  • கருத்துக்கள உறவுகள்

புர்க்கா.. ஹிஜாப்.. இவை எல்லாம்.. மத அடையாளங்களை காண்பிக்கும்.. ஆள் அடையாளங்களை மறைக்கும்.. உடலில் ஒளித்து வைத்திருக்கும் பொருட்களை மறைக்கத்தக்க.. சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்க வல்ல ஆடைகளாக இனங்காணப்பட்டவை... படக் கூடியவை. 

அதுக்கும் சாதாரண சேலைக்கும்.. அதில்.. புத்தர் கூட இல்லை.. புத்தரின் முகச்சாயலில்.. ஒரு டிசைன் இடப்பட்டதுக்கு சிங்கள பெளத்த இனவாதிகள் காட்டும் வெறுப்பு என்பது கடைந்தெடுத்த பேரினவாத பெளத்த மத வெறிப் பயங்கரவாதமே ஆகும். 

புர்க்காவை.. ஹிஜாப்பை காட்டி.. இந்த அப்பாவிகள் மீதான சிங்கள பெளத்த இனவெறியாட்டத்தை நியாயப்படுத்த முனைவது கேவலமான சந்தர்ப்பவாதமே தவிர வேறில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ampanai said:

கோபப்படலாம். ஆனால், ஒன்றும் செய்யமுடியாது, பூட்டிய அறைக்குள் அழுவத்தைத்தவிர.

அது இலங்கையில். சனாதன தர்மம் கோலோச்சும் பாரத புண்ணிய பூமியில், மாடு சாப்பிட்டன் எனக் கூறி மனிதனையே அடித்துக் கொல்லலாம். எல்லாம் எங்கே யார், யார் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை பொறுத்ததே.

16 minutes ago, nedukkalapoovan said:

புர்க்கா.. ஹிஜாப்.. இவை எல்லாம்.. மத அடையாளங்களை காண்பிக்கும்.. ஆள் அடையாளங்களை மறைக்கும்.. உடலில் ஒளித்து வைத்திருக்கும் பொருட்களை மறைக்கத்தக்க.. சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்க வல்ல ஆடைகளாக இனங்காணப்பட்டவை... படக் கூடியவை. 

அதுக்கும் சாதாரண சேலைக்கும்.. அதில்.. புத்தர் கூட இல்லை.. புத்தரின் முகச்சாயலில்.. ஒரு டிசைன் இடப்பட்டதுக்கு சிங்கள பெளத்த இனவாதிகள் காட்டும் வெறுப்பு என்பது கடைந்தெடுத்த பேரினவாத பெளத்த மத வெறிப் பயங்கரவாதமே ஆகும். 

புர்க்காவை.. ஹிஜாப்பை காட்டி.. இந்த அப்பாவிகள் மீதான சிங்கள பெளத்த இனவெறியாட்டத்தை நியாயப்படுத்த முனைவது கேவலமான சந்தர்ப்பவாதமே தவிர வேறில்லை. 

இதே போல, மாத்தறை.காம் எனும் திரியில், ஒரு “கெலிங்யன்ன கொல்லோ” எனும் ஒரு சிங்கள கருத்தாளர், புத்தரை வேணுமெண்டே சேலையில் வரைந்து, இலங்கையில் பெளத்தர்களை அவமதித்து, பெளத்த சிங்கள நாட்டை அபகரிக்கும் பயங்கரவாத செயலின் வெளிப்பாடே இந்த பெண் சேலை அணிந்தது என்றும், இது ஒரு அபாயகரமான, தீவிரவாத போக்கு, என நீட்டி முளக்கி கொண்டிருக்கக்கூடும் 😂

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

#தக்காளிசோஸ் #ரத்தம் 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் அழகாகவும் 
தெய்வீகமாகவும்தான் இருக்கிறது.

கல்லிலே கடவுளை காண்கிறோம் 
நூலிலே காணும்போது ஏன் பதறுகிறோம்? 

யாருக்கு உண்மையில் மதம் தெரியாதோ அவர்கள்தான் தகராறு பண்ணுகிறவர்கள் 
மதம் பிடித்தவர்களால்தான் பிரச்சனையே தவிர ...... மதங்கள் இதை தெளிவாக இருப்பதாகவே படுகிறது.

லக்ஸ்மி இப்படி காஞ்சிபுரம் சேலைக்கட்டி 
நவீன தொழிநுட்ப வடிவமைத்த தங்க நகை அணிந்து இருக்கவில்லை.
லக்சுமியை ஒரு ஓவிய கலைஞன் இவ்வாறு அழகுற வடிவமைத்தான் 
அவன் தன ஓவிய கலையிலே கடவுளை கண்டான் .....

இன்னொரு ஆடை வடிவமைப்பாளன் ...
லக்சுமியை இவ்வாறு அழகுற காண்கிறான் 

உண்மையில் கடவுளை நம்புவன் 
கடவுள்தான் உலகை படைத்தார் என்பதை நம்புவான் 
சாதாரண ஒரு மர இலை பூவிலேயே கடவுளை காண்கிறான் 
அவைகள் கடவுளின் உணர்வுகள் கடவுளின் எண்ணங்கள் சித்தரிப்புக்கள் 
அதில் கடவுளை உணரமுடியும்.
ஆதியில் எல்லா மனிதரும் இலை குழையில்தான் ஆடைகொண்டனர். 

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

 நாணயம் என்றால் கட்டாயம் இருவேறு பக்கங்கள் இருந்தே ஆகும். அதற்காக ஒரு பக்கத்தை காட்டிக் காட்டி மறுபக்கமும் அதே போல் தான் என்பது நியாயம் ஆகாது.

அதேபோல் தான்.. சாதாரண இந்த சேலை விடயத்தையும்.. சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாதத்தையும்.. இஸ்லாமிய அடிப்படைவாத மதப் பயங்கரவாதத்தையும் சமனிலைப்படுத்த முனைவது. 

  • தொடங்கியவர்
51 minutes ago, goshan_che said:

அது இலங்கையில். சனாதன தர்மம் கோலோச்சும் பாரத புண்ணிய பூமியில், மாடு சாப்பிட்டன் எனக் கூறி மனிதனையே அடித்துக் கொல்லலாம். எல்லாம் எங்கே யார், யார் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை பொறுத்ததே.

உண்மை, அது கூடுதலாக வட இந்தியாவில், இந்துத்துவா தேசத்தில்.

ஆனால், தமிழர்கள்/சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ் நாட்டில் சிறுபான்மை மதத்தினர்கள் அவ்வாறு தண்டிக்கப்படுவதில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ampanai said:

உண்மை, அது கூடுதலாக வட இந்தியாவில், இந்துத்துவா தேசத்தில்.

ஆனால், தமிழர்கள்/சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ் நாட்டில் சிறுபான்மை மதத்தினர்கள் அவ்வாறு தண்டிக்கப்படுவதில்லை  

மீண்டும் ஒருமுறை -பெரியாருக்கு நன்றி.

3 minutes ago, goshan_che said:

மீண்டும் ஒருமுறை -பெரியாருக்கு நன்றி.

நான் சொல்ல நினைக்க நீங்கள் சொல்லி விட்டீர்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலைகளை அழுக்கான இடங்களில் வைத்து விற்கலாம் (அங்காடிகள், பாதையோரம்). மனிதர்கள் பச்சை குத்தக்கூடாது, ஆடைகளிலும் புத்தர் பதிப்பு இருக்கக்கூடாது. இலங்கைக்கு போகும் போது அவதானம் புலம் பெயர் உறவுகளே!
அண்மையில் பிரித்தானிய பெண்மணி இலங்கை சென்ற போது புத்தரை கையில்  பச்சை குத்தியதால் சிறையில் தள்ளப்பட்டார்.

Naomi Coleman

https://www.bbc.co.uk/news/world-asia-27107857

  • தொடங்கியவர்
7 minutes ago, Ahasthiyan said:

புத்தர் சிலைகளை அழுக்கான இடங்களில் வைத்து விற்கலாம் (அங்காடிகள், பாதையோரம்). மனிதர்கள் பச்சை குத்தக்கூடாது, ஆடைகளிலும் புத்தர் பதிப்பு இருக்கக்கூடாது. இலங்கைக்கு போகும் போது அவதானம் புலம் பெயர் உறவுகளே!
அண்மையில் பிரித்தானிய பெண்மணி இலங்கை சென்ற போது புத்தரை கையில்  பச்சை குத்தியதால் சிறையில் தள்ளப்பட்டார்.

ஆம், இவ்வாறான குறிப்பை இலங்கை உல்லாசத்துறையும், மற்றும் வெளிவிவகார அமைச்சும் விசா விண்ணப்பிக்கும் பொழுது கூறுவதில்லை :-(

சிக்கலில்  மாட்டினால் கந்தல் தான் !

9 hours ago, Maruthankerny said:

இவையெல்லாம் அழகாகவும் 
தெய்வீகமாகவும்தான் இருக்கிறது.

கல்லிலே கடவுளை காண்கிறோம் 
நூலிலே காணும்போது ஏன் பதறுகிறோம்? 

யாருக்கு உண்மையில் மதம் தெரியாதோ அவர்கள்தான் தகராறு பண்ணுகிறவர்கள் 
மதம் பிடித்தவர்களால்தான் பிரச்சனையே தவிர ...... மதங்கள் இதை தெளிவாக இருப்பதாகவே படுகிறது.

லக்ஸ்மி இப்படி காஞ்சிபுரம் சேலைக்கட்டி 
நவீன தொழிநுட்ப வடிவமைத்த தங்க நகை அணிந்து இருக்கவில்லை.
லக்சுமியை ஒரு ஓவிய கலைஞன் இவ்வாறு அழகுற வடிவமைத்தான் 
அவன் தன ஓவிய கலையிலே கடவுளை கண்டான் .....

இன்னொரு ஆடை வடிவமைப்பாளன் ...
லக்சுமியை இவ்வாறு அழகுற காண்கிறான் 

உண்மையில் கடவுளை நம்புவன் 
கடவுள்தான் உலகை படைத்தார் என்பதை நம்புவான் 
சாதாரண ஒரு மர இலை பூவிலேயே கடவுளை காண்கிறான் 
அவைகள் கடவுளின் உணர்வுகள் கடவுளின் எண்ணங்கள் சித்தரிப்புக்கள் 
அதில் கடவுளை உணரமுடியும்.
ஆதியில் எல்லா மனிதரும் இலை குழையில்தான் ஆடைகொண்டனர். 

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

Image result for hindu god on underware

என்ன இருந்தாலும் இவ்வாறான ஆடைகள் தடைசெய்யப்படவேண்டும். அதிகமாக பக்திகொண்டவர்கள் தொட்டு கும்பிட்டுவிட்டால்  பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகமாகிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை நாளில் மரக்கறி அல்லாத விடயங்களை பற்றி கதைப்பது சங்கடமெனினும்

" அடியாத மாடு படியாது என்பதே நிதர்சனம் "  …..

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ampanai said:

திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் அணிந்திருந்த சேலையால் இன்று மதியம் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

p1.jpg

குறித்த பெண் தனது பிள்ளையுடன் வயதான பெண்ணெருவருமாக திருகோணமலை நகரிற்கு  ஆலய வழிபாட்டிற்காக வந்தபோதும் அவர் புத்தரின் உருவம் பொறித்த சோலை அணிந்திருந்ததனால் இப்பதற்றநிலைமை ஏற்பட்டது.

குறித்த சேலையில் பொறிக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் உருவத்தைக் கண்ட சில பெரும்பான்மையினத்தவர்கள் இதுதொடர்பாக பலருக்கும் அறிவித்ததுடன் குறித்த பெண்ணை சுற்றிவளைத்து கூடியதுடன் குறித்த சேலை தொடர்பாக  பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் பஸ்நிலயத்தில் நின்ற பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

p2.jpg

பின்னர் பிரதான பொலிஸ் நிலயத்திற்கு முன்பாகவுள்ள விகாரையின் பௌத்ததுறவி தலமையிலான பலரும் குறித்த இடத்தில் கூடியதுடன் பெண் மீது மனம் புண்படியாகும் விதமான  கருத்துக்களை வெளியிட்டதுடன் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.

அதுமட்டுமன்றி தமது புத்த பெருமானை பொறித்த சேலை அணிந்த பெண்ணிற்கு தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பிள்ளை மற்றும் இரு பெண்களையும்  பொலிஸ் நிலயத்திற்கு அழைத்துச் சென்றனர். 

p3.jpg

குறித்த பெண்கள் பொலிஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ் நிலயத்தில் இந்நடவடிக்கையை அதிகளவிலான மக்கள் பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இந்தச் செய்தியை பார்த்தவுடன், மிகவும் கவலையாக இருந்தது.
அந்தப் பெண்ணுக்கே.... அதில் புத்தர் படம் பொறிக்கப் பட்டுள்ளது என்று,  தெரிந்திருக்காது.
ஒரு, சீலையின் நிறம் பிடித்தவுடன் அவர் அதனை வாங்கியிருக்கலாம், 
அல்லது வேறு யாராவது அன்பளிப்பு செய்திருக்கலாம்.
ஒருவர் அறியாமல் செய்த தவறுக்கு....  கைக் குழந்தையுடனும்,  வயதான பெண்ணுடனும்...
நீண்ட தூர பயணம் மேற்கொள்ள ஆயத்தமானவரை... 
போலீஸ் நிலையம் வரை அழைத்து சென்று... இம்சை படுத்தியிருக்க தேவையில்லை. 

அங்கு நின்ற புத்த பிக்கு கூட.... மற்ற காடையாரை சமாதானப் படுத்தி அனுப்பியிருக்கலாம்.
அதனை செய்யாமல்....  ஒரு மதத் தலைவருக்கு உரிய லட்சணமின்றி  நடந்து கொண்டது,
இவர்கள் மேல்... இன்னும் வெறுப்பையே அதிகரிக்கின்றது.

இந்த பிக்குகள்... விகாரைக்குள் இருந்து..... கஞ்சா அடிப்பதையும்,
ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதையும் விடவா.... 
இந்தப் பெண், புத்த மதத்துக்கு  இழுக்கை கொண்டு வந்து விட்டார்.

இப்படியான சீலைகள்...  சீனா, இந்தியா போன்ற நாடுளில் இருந்து வந்திருக்க சந்தர்ப்பம் அதிகம்.
இவற்றை இறக்குமதி செய்தவரையும், விற்றவரையும்.. கண்காணிப்பதை விட்டு விட்டு, 
அந்தப் பெண்ணை... பெரிய குற்றவாளி போல் நடத்தியது கண்டனத்துக்குரியது.   

இப்போது... அவர் விடுவிக்கப் பட்டாரா? என்பது கூட தெரியவில்லை.
உண்மையில்... மனம் வேதனையாக உள்ளது.  ☹️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் , வைத்தியர் கைது , சேலையில் புத்தன் ।। எல்லாமே தற்செயலாக நடந்தது போல தோற்றம் பெறுகுதில்லை !

கருணாவையே வாங்கி வைத்திருப்பவர்களுக்கு இதனை அரங்கேற்றுவது ஒரு ஜூஜூபே   ।। எங்களுக்கும் பே பே தான் ….

95% வீத வாக்குகளை வாங்குவதன்  நீண்ட கால திட்டத்தின் அமுலாக்கலில் எம்மவர்களுக்கும் " புல்லுக்கும் ஆங்கே பொசிகின்றதா ……..?

Edited by சாமானியன்
spelling thaan

மதங்களை தூக்கி தலையில் வைத்து கொண்டு ஆடும் நாடுகளில் தான் இப்படியான தேவையற்ற விடயங்கள் நடை பெறுகின்றன. இதனால் தான் இப்படியான நாடுகள் முன்னேற முடியாமல் உள்ளன.  தன்னுடன் வாழும் சக மனிதனை இழிவு படுத்தும் இவர்களுக்கு  கடவுள் பக்தி அதிகமாம். இவர்கள் தூக்கி தலையில் வைத்து ஆடும் கடவுள் கூட இவர்களுக்கு உதவி செய்ய‍ப்போவதில்லை என்ற உண்மை அறியாத பேதைகளாகவே உள்ளனர்.  இதனால் தாங்களும் சந்தோசமாக இல்லாமல் மற்றவர்களையும் தொல்லை ப்படுத்துகிறார்கள்.  இந்தியாவில் வளர்ந்து வரும் காவி இந்து கூட்டமும் இதே போல தான். 

மதங்களை முன்னோர்களின் ஒரு கலாச்சாரம்  என்ற ஒரு அடையாளம் மட்டும் போதும். அதை விட அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மதங்கள்  தமது பாரம்பரியம் என்பதை தவிர அதற்கு  மேலதிக முக்கியத்துவம் கொடுக்காத மக்கள் இப்படி மத்ததிற்காக சக மனிதர்களை இழிவுபடுத்துவதில்லை.  எல்லாவற்றையும் ஒரு ஜாலியாக எடுத்து  வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். 

2f61757691f8c4095db7efac5f0cd685-full.jpg

7778e3dec7de09be493009e97283c58b-full.jpg67c48469f4e5bd1492611ed06f8e534d-full.jpg

eca140e0d42f966ec19b938e432a3288-full.jpg

75ec1189e88b3dd5623c0975f6aaf6f2-full.jpg

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்......  சரியான போட்டி. 
இந்து சமயமும், கிறிஸ்தவ  சமயமும் தான்... இழிச்ச வாயர்களா?
புத்த, முஸ்லீம்  சமயத்தவர்களின்.... உள்ளாடையையும், பார்த்தால்  தான், எனக்கு, நித்திரை வரும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

எல்லாவற்றையும் ஒரு ஜாலியாக எடுத்து  வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். 

எல்லாமே யாலிதான்.😂🤣41821-16_10_2015_011_018.jpg?w=497

20 minutes ago, Paanch said:

எல்லாமே யாலிதான்.😂🤣41821-16_10_2015_011_018.jpg?w=497

நான் கூறியதைத்தானே நீங்களும் திருப்பி எனக்கு பதிலாக  கூறியுள்ளீர்கள்.   மததங்களைத்  தூக்கி பிடிக்கும்  மதவாதிகள் இப்படியான வேலைகளை தானே புரிவார்கள்.  மாணவியுடன்எ உல்லாசமாக இருந்த  மத போதகரையோ கருவறைக்குள் சிறுமியை கூட்டு பாலியல் வல்லுறவு புரிந்த அர்சகரையோ நான் சிலாகிக்கவில்லை

மதங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காத மனிதர்களையே நான் சிலாகித்திருந்தேன்.  பாஞ்ச் எனது கருத்தை தப்பாக விளங்குவதே உங்களுக்கு வாடிக்கை ஆகிவிட டது.  ஜாலி என்றால் செக்ஸ் மட்டும் அல்ல. (மனிதர்களுக்கு) 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.