Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகரை கம்பீரமாக கட்டியெழுப்புவோம் – பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
FB_IMG_1567851224152.jpg

“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம் இது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார். என்னிடம் கேட்பார். அமைச்சிடம் கேட்பார். இப்படியாக யாழ் மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்ட வேண்டியதாகும் இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும்.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் அமைக்க இந்தியா நிதி உதவியளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல் சந்தைத் தொகுதியை அமைத்து வருகின்றோம். நெடுந்தூர பஸ் நிலையக் கட்டடம் அமைக்கப்படுகிறது. மேலும் பலாலி விமான நிலையத்தை நாம் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்கின்ற பெயரில் அபிருத்தி செய்து வருகின்றோம். முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்பதை கூறிக்கொள்கின்றேன். இதன்மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும்.

சுற்றுலாப் பயணிகளை இந்த பிரதேசத்திற்கு ஈர்த்துக்கொள்வதற்கு குறிப்பாக தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம் அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிருத்தி செய்துவருகிறோம் அத்துடன் சீமெந்து தொழிற்சாலையையும் மீள இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். கிளிநொச்சி, பூநகரியையயும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். அதுபோல் யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் தொழிற்முயற்சிகளையும் கட்டியெழுப்பவுள்ளோம் இதற்கென புதிய நிதியத்தை ஸ்தாபிக்கப்படும். – என்றார்.

https://newuthayan.com/?p=5116

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தல் நெருங்க "அடியடா பிடியாடா" என்பார்கள். தேர்த்தல் முடிய புத்தர் மூலைக்கு மூலை முளைத்துக்கொண்டே போவார்.( இப்போ அவதானித்து பார்த்தீர்கள் எனில் புத்தர் ஒரு நீண்ட break எடுப்பதை அவதானிக்கலாம். இவர்களின் அனுசரணை இல்லாமல் புத்தர் ஒரு அங்குலமும் நகர மாட்டார் என்பதையும் தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

திட்டங்களை தீட்டுவது நல்லதே, அதை நிறைவேற்ற நிதியை ஒதுக்கி பின்னர் அதை பெரு எதற்கும் திசை திருப்பாமல் இருக்கவேண்டும். திட்டம் முழுமையாக்கப்படல் வேண்டும். 

இப்படி பல திட்டங்கள் எழுத்துடனும் அரை வாசியிலும் இறந்து விட்டன.  

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு நீங்கள் எழும்ப வேணுமே

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு கட்டடம்

அடிக்கல் 1 Vs அடிக்கல் 2

டக்ளஸ் தேவானந்தா பசில் ராஜபக்சே கோஷ்டி Vs சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கே கோஷ்டி

70193359_533047853903240_684265928658622

69766391_533046573903368_845639177945586

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

ம்கும் எங்க நடக்க போகுது கிணறு முதல் கக்கூஸ் வரைக்கும் திறப்பு விழாவும் சாவீட்டு அரசியலும் 

On 9/7/2019 at 8:30 PM, பிழம்பு said:

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார்.

யாழ்நகர முதல்வர் பக்கா கேடி. நிதி கிடைச்சா சுமந்திரன் போல கொள்ளையடிக்கலாம் என்டு அலைஞ்சு திரிஞ்சிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:00 PM, பிழம்பு said:

“அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்”

அஹா.... நல்லூர் ஆலயத்தை  இவர்களா கட்டி எழுப்பினார்கள்
இத்தனை நாளும் இது தெரியாமல் இருந்த்திட்டேன்

7 hours ago, tulpen said:

அடிக்கல் நாட்ட ல்தி றந்துவைத்தல்  என்று அரசியலவாதிகளின் ஆடம்பர  பந்தா, பொன்னாடை போர்ததுதல் என்ற உதவாக்கரை சம்பிரதாயங்கள் நடைபெறாத  நாடுகளில் நாம் வாழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதுடன்  எமது நாட்டிலும் இதே போல் நடக்க வேண்டும் என்பது ஒரு கனவு. 

பொதுவாக மேற்குலகத்தில் மண்வெட்டியுடன் அரசியல்வாதிகள் காட்சி தருவார்கள். 

2019-0318-federal-courthouse-groundbreaking-1024x576.jpg

 

அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு 27 லட்சம் செலவாம் ,ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சாப்பாட்டின் விலை 2500 கிட்ட ( தகவல் உறுதிபடுத்தப்பட்டது இல்லை) 

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையை பறித்து முசுலிமிடம் கொடுத்தாயிற்று...இப்ப யாழ்ப்பாணத்தையும் பறித்து பிரிக்க ரெடி..பதவி ஆசை பிடித்த  ..காட்டெரி இது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.