Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு!

Featured Replies

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் எவ்வகையான முடிவை எடுக்கவேண்டுமென்பது தொடர்பில் சம்பந்தனுடன் இன்று பேச்சு நடத்திய வடக்கு - கிழக்கில் இருந்து கொழும்பு சென்ற மதத் தலைவர்கள், கட்டுரை ஆசிரியர்கள், மற்றும் புத்திஜீவிகள் சிலர் இன்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தி மத தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென முடிவெடுத்துள்ளதுடன் அந்த சந்திப்பின் ஒரு அங்கமாகவே இன்றைய சந்திப்பு நடந்தது.

தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார்.

இதன்பின்னர் யாழிலுள் சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்தனர். திருமலை ஆயரின் மூலமாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டார்.

இதன் ஏற்பாட்டாளர்களாக மதத்தலைவர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இன்று காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததுள்ளமை குறிப்பிடத் தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/srilanka/01/227560?ref=home-feed

 

 

Edited by போல்

  • Replies 115
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் தனித்துவத்தை காக்கவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் பேரினவாத அரசாங்கங்களினால் புறக்கணிக்கப்பட்டு வருவதை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கும், சிங்கள தேசத்துக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளபட்டுள்ளோம்.

இம் முறை நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் எடுக்கும் முயற்சிக்கு எனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தொடர்ந்து இது தொடர்பான மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசித்து இவ் முயற்சிக்கு எனது பங்களிப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளதை அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் அரசியல் கட்சிகள் பேதமின்றி ஒற்றுமையாக ஒரு நடுநிலையான ஒருவரை தெரிவுசெய்ய வேண்டிய தேவை உள்ளது.

நான் ஒருவரின் பெயரை சிபாரிசு செய்துள்ளேன். அவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நீண்டகாலம் பயனித்தவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தேசியத் தலைவருடன் நீண்டகாலம் பயணித்தவரும் அதனால் சிறைவாசம் அனுபவித்து தற்போது சமூகத்தில் இணைந்து வாழ்பவரும் எமது போராட்டத்தை நன்கு உணர்ந்தவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் ஆளுமைமிக்க ஒருவரை நான் மதத் தலைவர்களிடம் இனம் காட்டியுள்ளேன்.

இது தொடர்பாக அவர்கள் பரிசீலிப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக உடனடியான முடிவிற்கு நாம் வரவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியை நாம் இதனூடாக சொல்ல வேண்டும். ஆகவே, இம் முயற்சியை கைவிடாமல் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு அனைவரும் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுப்பதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/227637?ref=home-feed

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் சார்பில் ஒருவரை களமிறக்க தயாராக வேண்டும்!

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறுப்பட்டவர்கள் போட்டியிடவுள்ள நிலையில் தமிழ் மக்கள் சார்பிலும் ஒரு பிரதிநிதி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்குரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

எனவே, தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/227644?ref=home-feed

\

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நான் ஒருவரின் பெயரை சிபாரிசு செய்துள்ளேன். அவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நீண்டகாலம் பயனித்தவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தேசியத் தலைவருடன் நீண்டகாலம் பயணித்தவரும் அதனால் சிறைவாசம் அனுபவித்து தற்போது சமூகத்தில் இணைந்து வாழ்பவரும் எமது போராட்டத்தை நன்கு உணர்ந்தவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் ஆளுமைமிக்க ஒருவரை நான் மதத் தலைவர்களிடம் இனம் காட்டியுள்ளேன்.

யாராக இருக்கும்???

Quote

தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார்.

பெரிய பிஸ்தா உடனே மாட்டேன் என்று விட்டார்😛

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் சார்பில் ஒருவரை களமிறக்கும் சமயத் தலைவர்களின் முயற்சிக்கு முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர்.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியிருந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் பொதுவேட்பாளராக களமிறங்கும்படி கோரியபோதும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

இந்தநிலையில், இன்று காலையில் நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் அவரை சந்தித்து சிவில் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர்.

விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை விக்னேஸ்வரன் மறுத்து விட்டார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் சார்பில் ஒருவரை களமிறக்க தயாராக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இவ்வாறான கோரிக்கைகள் முக்கியம் பெற்றதை அடுத்து கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை அடையாளம் காணும் பணியில் தற்போது சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் இந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான ஏனைய விடயங்கள் விரைவில் ஊடகங்களிற்கு தெரியப்படுத்தப்படும் என பெயர் குறிப்பிட விரும்பாத சிவில் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையானது சர்வதேசம் மற்றும் தென்னிலங்கை அரசுகளிற்கு பாரிய நெருக்கடிகளை கொடுக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறும் அரசியல் விமர்சகர்கள், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு வேறு அர்த்தத்தை கூறி திசை திருப்பாமல் விட்டால் இந்த செயற்பாடு அரசியல் ரீதியில் பாரிய தாக்கம் செலுத்தும் என மேலும் குறிப்பிட்டார்.

https://www.tamilwin.com/srilanka/01/227653?ref=imp-news

சிங்கள கட்சிகளுக்கு ஆதரவளிப்பதில் பிரயோசனம் இல்லை என்பதற்காக மட்டுமே தமிழர் ஒருவரை நிறுத்த எண்ணுவது சரி என தெரியவில்லை.

ஆனால், இதன் மூலம் உலகத்திற்கு எமது மக்கள் தெளிவாக ஒரு செய்தியை மீண்டும் கூறலாம். எமக்கு சிங்கள சனநாயக ஒற்றையாட்சி முறையில் நம்பிக்கையில்லை என்று. 

  • தொடங்கியவர்

 

 

Edited by போல்

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கினால் அது சஜித்துக்கு செல்லவிருக்கும் வாக்குகளை தடுத்து கோத்தாவின் வெற்றியை இலகுவாக்கும்.

தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மக்களில் பலர் இரண்டாம் தெரிவுக்கு யாரையும் போடாமல் விடும் சந்தர்ப்பமும் உள்ளது.

Edited by Lara

கோத்தபாயா வென்றுவிட்டால், கோத்தபாயாவுக்கு சஜித் பரவாயில்லை  போன்ற அடிமை, பிச்சைக்கார ராஜதந்திர மனநிலைகளை வைச்சு தான் சிங்களவன் தமிழின அழிப்பை மிக நீண்ட காலமாக, மிகச் சுலபமா செய்துவாறான்!

இது போன்ற அடிமை, பிச்சைக்கார ராஜதந்திர மனநிலைகளை விட்டு தமிழர்  வெளிவர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது ஈழமண்ணில் வாழும் புத்திஜீவிகளும், மதத்தலைவர்களும், ஈழத் தமிழர்களுக்கு அர்ப்பணிப்போட சேவை செய்யும் ஒருசில அரசியல்வாதிகளும் தான்.   

கடந்த 5 வருடங்களில் சஜித் பல இடங்களில் பகிரங்கமாகவே தமிழின விரோத கருத்துக்களை கூறி வந்துள்ளது சொறிலங்கா அரசியல் நிலவரங்களை கவனமாக அவதானிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். தமிழரிடம் கொள்ளையிடப்படும் வரிப் பணத்துல தமிழர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மிகக் குறைவு.

இன்றுவரை சஜித்தின் அரச வீடமைப்பில் வெறும் 1% மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொந்த வீடற்ற மலையக தமிழர்களுக்கு ஒன்றுமே இல்லை (மிக மிக சொற்பம்).

1, 2 மாதங்களுக்குள்,

  • அரசியல் கைதிகள் விடுதலை,
  • அனைத்து காணி விடுவிப்பு,
  • காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு,
  • ஐநா சபையில் கொடுத்து வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றல்,
  • கல்முனை பிரதேசசபை,
  • சர்வதேச பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை,
  • மாகாணசபை தேர்தல்,
  • சிங்கள இராணுவக் காடையர்களை தமிழ் மண்ணில் இருந்து அகற்றல்,
  • போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்களில் இருந்து அகற்றல்,

போன்ற மிகச் சுலபமான ஒருசில விடயங்களுக்கு கூட எழுத்துமூல வாக்குறுதி வழங்க வக்கில்லாத சஜித் வந்து என்ன பிரயோசனம்?
சஜித் எந்த விசயத்துல கோத்தபாயாவைவிட திறம்?  சஜித், கோத்தபாய ஆகிய இரண்டும் வெவ்வேறு வெளிவடிவங்களைக் கொண்டுள்ள ஒரே இன மிருகங்களே!

எனவே தமிழர் இந்த முறை ஒன்றிணைத்து தாங்கள் ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது அர்த்தமுள்ள மிகச் சிறந்த முடிவாகவே இருக்கும் என்டு நினைக்கிறன்!

14 hours ago, Rajesh said:

சஜித் எந்த விசயத்துல கோத்தபாயாவைவிட திறம்?  சஜித், கோத்தபாய ஆகிய இரண்டும் வெவ்வேறு வெளிவடிவங்களைக் கொண்டுள்ள ஒரே இன மிருகங்களே!

எனவே தமிழர் இந்த முறை ஒன்றிணைத்து தாங்கள் ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது அர்த்தமுள்ள மிகச் சிறந்த முடிவாகவே இருக்கும் என்டு நினைக்கிறன்!

சஜித், கோத்தா யார் வந்தாலும் சிங்கள பௌத்த கொள்கையுடன் தான் இயங்குவார்கள். 

தமிழர்கள் பலமிழந்த நிலையில் தமிழர்களுக்கு தீர்வு தரவோ, தமிழர்களுக்கு சார்பான நிலைப்பாடு எடுக்கவோ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

ஒரு பேச்சுக்கு சஜித் தமிழர்களுக்கு தீர்வு தர விரும்பினாலும் சுற்றியுள்ளவர்கள் விடப்போவதில்லை. இதுவே ராஜபக்ச குடும்பம் முன்னைய கொன்று குவிப்புகளை தாண்டி தமிழர்களுக்கு தீர்வு தர விரும்பினால் சுற்றியுள்ளவர்களின் எதிர்ப்பை மீறி அதை செய்ய முடியும். இது பற்றி முன்னர் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன்.

https://yarl.com/forum3/topic/231257-கோத்தா-பழைய-கஞ்சி-அனுர-பழைய-சாதம்-எங்களது-வெற்­றி­க­ர­மான-ராஜ­தந்­திரம்-இதுவே/?ct=1570180662

அவ்வாறே ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் பல அபிவிருத்திகளையும் மேற்கொள்வார்கள்.

ஆனால் இவற்றையும் தாண்டி,

ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தால் கடந்த காலங்களில் நடந்தது போல் கடத்தல், கொலை, காணாமல் ஆக்கப்படுதல், கைது செய்தல் போன்றன அங்குள்ள மக்களை பாதிக்கும். புலம்பெயர் தேசத்தில் வாழ்வோர் இலங்கைக்கு செல்வதை தவிர்க்கலாம். தாயகத்தில் வாழ்வோரின் நிலை அப்படியல்ல.

இலங்கையை பேயோ பிசாசோ தான் ஆளப்போகிறது என்பதால் இரண்டில் யாரை தெரிவு செய்வது என்பதை ஒப்பீட்டளவில் முடிவெடுப்பதில் தமிழர்களும் பங்கு வகிக்க வேண்டும்.

தமிழர்கள் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தினால் அந்நடவடிக்கையை மேற்கொள்வோர் ராஜபக்ச குடும்பத்தை வெல்ல வைப்பதற்காகவும் அதை செய்யலாம். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக என கூறுவது மக்கள் காதில் பூ சுற்ற கொடுக்கும் ஒரு விளக்கமாகவும் இருக்கலாம்.

இதன் மூலம் சர்வதேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் ஒரு செய்தியை கூறலாம் என்றால் சர்வதேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்றை தான் கூறப்போகிறார்கள்.

ஒருவேளை தமிழ் வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்காமல் சஜித்துக்கு வாக்களித்து தமிழ் வேட்பாளர் தமிழர் பகுதியில் தோல்வியை தழுவினால் தமிழர்களே தமிழரை ஏற்கவில்லை, சிங்களவர்களை தான் ஏற்கிறார்கள் என்ற புதிய செய்தியை வேண்டுமானால் கூறலாம். 😀

Edited by Lara

17 hours ago, Lara said:

தமிழர்கள் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தினால் அந்நடவடிக்கையை மேற்கொள்வோர் ராஜபக்ச குடும்பத்தை வெல்ல வைப்பதற்காகவும் அதை செய்யலாம். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக என கூறுவது மக்கள் காதில் பூ சுற்ற கொடுக்கும் ஒரு விளக்கமாகவும் இருக்கலாம்.

முழுமையான பூச்சுற்றல் இது தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் இரண்டில் ஒன்று நடக்கும்:  

1) எல்லாத் தமிழர்களும் அவருக்கு மட்டுமே வாக்களித்து, அதன் பக்க விளைவாக சிறிது பெரும்பான்மைச் சிங்களவர்களால் ஆதரிக்கப் படும் கோத்தா வெல்வார்.

2) கோத்தாவை அறிந்த தாயக தமிழர் இதை ஊகித்து தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்காமல் விடக்கூடும்!

1 நடந்தால்: உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும் (ஆனால் அது ஒன்றும் கடந்த 30 வருடங்களில் ஈழத்தமிழர் சொல்லாத புதிய செய்தி அல்ல, உலகமும் கேட்டு விட்டு சும்மா இருக்கும்!). வெள்ளை வான்கள் வீதிகளில் இறங்கும்!

2 நடந்தால்: தமிழர்களே தம்  வேட்பாளரை நம்பவில்லை, இணக்க அரசியலை விரும்புகிறார்கள் என்று சிங்களவர்கள் வியாக்கியானம் செய்வர்! 

எனவே இரண்டில்   எது நடந்தாலும் தமிழருக்கே ஆப்பு! இந்த சிம்பொலிக்கான தந்திரங்களை விட்டு விட்டு இருக்கிற கோவணத்தையாவது காத்துக் கொள்ள புத்திஜீவிகள் வழி பார்க்க வேண்டும்!

  • தொடங்கியவர்
On 10/4/2019 at 8:07 AM, Rajesh said:

கோத்தபாயா வென்றுவிட்டால், கோத்தபாயாவுக்கு சஜித் பரவாயில்லை  போன்ற அடிமை, பிச்சைக்கார ராஜதந்திர மனநிலைகளை வைச்சு தான் சிங்களவன் தமிழின அழிப்பை மிக நீண்ட காலமாக, மிகச் சுலபமா செய்துவாறான்!

இது போன்ற அடிமை, பிச்சைக்கார ராஜதந்திர மனநிலைகளை விட்டு தமிழர்  வெளிவர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது ஈழமண்ணில் வாழும் புத்திஜீவிகளும், மதத்தலைவர்களும், ஈழத் தமிழர்களுக்கு அர்ப்பணிப்போட சேவை செய்யும் ஒருசில அரசியல்வாதிகளும் தான். 

மிகவும் எதார்த்தமான கருத்து!

கோழைகளுக்கு தினமும் மரணம், வீரனுக்கு ஒருதரம் மரணம்! 

  • கருத்துக்கள உறவுகள்

இங்க எவ்வளவு அமளி துமளி நடந்தாலும் சர்வதேசம் மிக்சர் சாப்பிட்டு கொண்டு திரியினம்..

zsCDHY.gif

நாமதான் ஆய்வு கட்டுரையா எழுதறம்..😢

 

  • தொடங்கியவர்

இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய ஏற்பாட்டில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அருந்தவபாலன், தமிழரசுக்கட்சி சார்பில் மாவை ஸ்ரீதரன் சிவஞானம், தமிழ் மக்கள் கூட்டணி, டெலோ சார்பில் ஸ்ரீகாந்தா, புளட் சார்பில் சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பில் மணி, ஈபிஆர்எல்எப் சார்பில் இருவர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அனைவரும் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஒருமனதாக விரும்பினாலும், வழமைபோல இவர்களின் ஒன்றிணைந்த சந்திப்புக்கு காலதாமதத்தால் அதற்கான சாத்தியம் குறைவு என ஏங்கினார்.  எனினும் இன்னமும் முயற்சிகளை கைவிடவில்லை என்று தெரிகிறது.

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலை மாணவர்களின் முயற்சி பிரதான தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்தன

Tamil-Political-Parties-and-jaffna-university-students-union-meeting.jpg

தற்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக அனைத்துத் தமிழ் கட்சிகளையும் பொது நோக்கோடு ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான அவசர சந்திப்பொன்று இன்று (சனிக்கிழமை) முன்னிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ. சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.அருந்தவபாலனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டனர்.

அத்துடன், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் எஸ். ராகவன் ஆகியோரும் ரெலோ அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் நலன் நோக்கி, பொது நிலைப்பாடொன்றுக்கு வருவதற்கான இணக்க நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவர் என்றும் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததோடு அடுத்த சந்திப்பை எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருருப்பதாகவும் அறிய வருகிறது.

இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தனித்தனியாக நிலைப்பாடுகளை வெளியிடாமல் தமது நிலைப்பாட்டை அறிக்கை வடிவில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

எனினும் இந்த செய்தி வரையப்படும் வரை மாணவர் ஒன்றியத்திடமிருந்து அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை.

Tamil-Political-Parties-and-jaffna-unive

Tamil-Political-Parties-and-jaffna-unive

Tamil-Political-Parties-and-jaffna-unive

 

http://athavannews.com/தமிழ்-கட்சிகளை-கூட்டாக-ச/

  • தொடங்கியவர்

IMG-20191005-WA0039.jpg

On 10/5/2019 at 5:26 AM, Rajesh said:

முழுமையான பூச்சுற்றல் இது தான்!

வாக்குப்பிரிப்பு அரசியல் பற்றி தெரிந்தவர்களுக்கு எது பூச்சுற்றல் என புரியும். 😀

தமிழர்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அது கோத்தாவுக்கு தான் சாதகமானது.

இது தெரிந்தும் தமிழ் வேட்பாளரை நிறுத்த விரும்பினால் ராஜபக்ச குடும்பத்தை வெல்ல வைப்பதற்காகவே அதை செய்கிறார்கள் என அர்த்தம்.

கோத்தாவுக்கு வாக்களிக்குமாறு தமிழர்களை நேரடியாக கேட்க முடியாது. எனவே அதற்கு மாற்றாக இப்படியான வாக்குப்பிரிப்பு நடவடிக்கைகள்.

இப்பொழுது பல தரப்பினர் கலந்துரையாடலில் பங்கு பெறுவதால் அறிவுபூர்வமாக சிந்தித்து தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என இறுதி முடிவெடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கது.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை தமிழ் மக்கள் தாமாக உணர்ந்து வாக்களிக்க வேணும்.

16 hours ago, Justin said:

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் இரண்டில் ஒன்று நடக்கும்:  

1) எல்லாத் தமிழர்களும் அவருக்கு மட்டுமே வாக்களித்து, அதன் பக்க விளைவாக சிறிது பெரும்பான்மைச் சிங்களவர்களால் ஆதரிக்கப் படும் கோத்தா வெல்வார்.

2) கோத்தாவை அறிந்த தாயக தமிழர் இதை ஊகித்து தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்காமல் விடக்கூடும்!

1 நடந்தால்: உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும் (ஆனால் அது ஒன்றும் கடந்த 30 வருடங்களில் ஈழத்தமிழர் சொல்லாத புதிய செய்தி அல்ல, உலகமும் கேட்டு விட்டு சும்மா இருக்கும்!). வெள்ளை வான்கள் வீதிகளில் இறங்கும்!

2 நடந்தால்: தமிழர்களே தம்  வேட்பாளரை நம்பவில்லை, இணக்க அரசியலை விரும்புகிறார்கள் என்று சிங்களவர்கள் வியாக்கியானம் செய்வர்! 

எனவே இரண்டில்   எது நடந்தாலும் தமிழருக்கே ஆப்பு! இந்த சிம்பொலிக்கான தந்திரங்களை விட்டு விட்டு இருக்கிற கோவணத்தையாவது காத்துக் கொள்ள புத்திஜீவிகள் வழி பார்க்க வேண்டும்!

மிகவும் யதார்த்தமான அய்வு...

இதனால் மிக அதிகம் மகிழ்வில் ஆழப்போகின்றவர் சாட்சாத் கோத்தா அவர்களே....

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ரணிலின் வெற்றியை தடுத்து மஹிந்தவை அரியணை ஏற்றி சொந்த காசில் சூனியம் வைத்த தமிழர்கள்,

இன்று சஜித்தின் வெற்றியை தடுத்து கோத்தபாயவை அரியணை ஏற்றி கடும் சிங்கள போக்காளர்களின் கரங்களை வலுபடுத்த துடிக்கிறார்கள்.

ஒரு தமிழர் ஒருபோதும் இலங்கை ஜனாதிபதியாகும் வாய்ப்பில்லை.அது வாக்குகளை பிரிக்கும் ஒன்றை தவிர எந்த வசதிகளையும் செய்து தரப்போவதில்லை.

சர்வதேசம் ஒருபோதும் இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட  மஹிந்த கோஷ்டிக்கோ அவர்களது படைகளுக்கோ தண்டனை தரபோவதில்லை.

ஆனால் சர்வதேச தண்டனைகளை பார்க்கிலும் அவர்கள் மனதளவில் அனுபவிக்கும் பெரும் துயரம் தமிழர்களை அழித்தொழித்து சாகசம் காட்டியும் சிங்கள தேசத்தை ஆள்வதற்கு முடியவில்லையே என்பதுதான்.

எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விஷயத்தில் எந்த தீர்வும் தரபோவதில்லை,ஆனால் இதில் இருக்கும் ஒரே வாய்ப்பு  எம்மை அழித்தொழித்தவர்களை அவர்கள் இனம் ஆதரித்தாலும் அவர்களை ஆட்சி ஏறாமல் தடுக்கும் பழிவாங்கல் பலம் ஒன்றே.

அந்த பலம் சிதறடிக்கபடுவதில் யார் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ அவர்கள் மகிழ்ச்சிபடலாம்,அதுவும் ஒரு ஜனநாயக உரிமை என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

அன்று  ஆயுதபோராட்ட காலத்தில்  அண்ணனை சிங்களவர்களின் ஹீரோவாக்கிய தமிழர்கள் ,இன்று அரசியல் போராட்ட காலத்தில் தம்பியை ஹீரோவாக்கும் முயற்சியில் களமிறங்கபோகிறார்கள் போல் தெரிகிறதே?

இலங்கையில்இன ஒழிப்பு நடந்தது , இன ஐக்கியம் இல்லையென்றெல்லாம் ஐநா போய்வரை எவர் கத்தியது? நாங்கள்  அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களையே மறைமுகமாக அரச தலைவராக்கும் இன ஐக்கியத்துடன் வாழ்கிறோம் 

தயவு செய்து ஒற்றுமையா வாழும் எங்களை சர்வதேச நீதி மையங்களின் முன் நின்று போராட்டம் நடத்தி பிரிக்கும் சதி வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

கோத்தபாயவை விட சஜித் மேல் என்று சிங்கள பேரினவாதத்தின் மீது விசுவாசத்தை காட்டும் அடிமை மனநிலை பலரிடம் ஊறிப்போய் இருக்கு. அதுவும் புலம்பெயர்ந்த சிலரிட்டை இருக்கிறதுல ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

சஜித் வென்றால் தனது நிலை கவலைக்கிடம் என்கிறதால சஜித் தோற்பதையே ரணில் உள்ளூர விரும்புவதாக செய்திகள் சொல்லுது. அதற்காவே ரணிலின் ஆலோசனையின்படி கோத்தபாய குழுவுடன் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) எழுதாத உடன்படிக்கை செய்ய சுமந்திரன் கடும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில வாக்கு பிரியப்போகுது, கோத்தபாய வந்தால் அவ்வளவு தான் என்று புலம்புற ஆக்கள் என்ன செய்யப்போகினமோ தெரியல. ஏற்கனவே சஜித்துக்கு கிடைக்கக்கூடிய முஸ்லீம் வாக்குகளை பிரிக்க ஹிஸ்புல்லா இறக்கப்பட்டுள்ளார்.

ஈழத்துல வாழ்ற தமிழர்களுக்கு சஜித்தோ கோத்தாவோ யார் வந்தாலும் ஒரு வித்தியாசமும் இருக்கப் போறதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முஸ்லீம் வாக்குகளை பிரிக்க அசாத் சாலி, ஹிஸ்புலா, பசீர், ஏனென்றால் கிழக்கு முஸ்லீம்கள் ஊர்வாதம் மிக்கவர்கள்.

தமிழ் வாக்குகளை பிரிக்க ஒன்று பட்ட பொது வேட்பாளர், ஏனென்றால் தமிழர்களுக்கு ஒற்றுமைபட்டு சர்வதேசத்தை அழுத்தலாம் என்பதில் நடைமுறைச் சாத்தியம் இல்லாத நம்பிக்கை உண்டு 😂. இந்த பப்பா இல்மரத்தில் உச்சி வரை தமிழர்களை ஏற்றுவது மிகச் சுலபம்.

கடந்த 10 வருடத்தில் என்ன சர்வதேச அழுத்தம் கொடுத்து என்னைத்தை சாதித்தோம்?  வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானக்களுக்கு சர்வதேசம் என்ன பதிலுறுத்தது?  

சர்வதேசத்தால் நமக்கு ஒரு மாங்காயும் விளையாது என்பதை உணர்ந்து, இலங்கைக்குள்ளே நமது வலுவை அதிகரிப்பதன் மூலம் நாம் எம்மை எப்படி தற்காத்து கொள்ளலாம் என்று சிந்திக்கும் வரை நாம் ஒரு அடி கூட நகர முடியாது.

கோட்ட அபய வெல்வதால் எமது மக்களின் உரிமைப் போராட்டம் இம்மியளவும் சர்வதேச அரங்கில் முன்னேறாது.

மாறாக இப்போ உள்ள ஒப்பீட்டளவு சுதந்திரமும் பறிபோகும். செம்மலையில் நின்று அலம்பிலை அச்சுறுத்தும் குடியேற்றம், சில்லாலையில் வந்து அமர்ந்து காலாட்டும்.

2005 இல் தேர்தல் புறக்கணிப்பு மூலம் எம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டோம். இது புலிவாந்தியல்ல. அவர்கள் அந்த நேரத்தில் அந்த நகர்வை ஒரு ராசதந்திர நகர்வாகவே செய்தார்கள். ஆனால் அவர்கள் எதிர் பார்த்ததை விட ராஜபக்சேக்கள் ரணிலை மீறிய சூரர்களாய் அமைந்ததால் அந்த நகர்வு பிசகிப் போனது.

இப்போ எமக்கு ராஜபக்சேக்கள் யார் எனத் தெரியும். 200-2010 எதிர் 2010-2015 காலத்தில் ஊரில் மக்கள் வாழ்வு எப்படி அமைந்தது எனத் தெரியும்.

சர்வதேச அழுத்தம் என்பது ஒரு மாயமான் என்பது 10 வருடப்பட்டறிவு.

சஜித் வென்றால் அது தமிழர் போட்ட வாக்குகளிலே தங்கி இருக்கும். அடுத்த முறை வெல்ல இதை தக்க, எம்மை அதிகம் பகைக்காமல் வைக்க வேண்டிய தேவை சஜித்துக்கு இருக்கும்.

கோட்ட வென்றால் - அது தமிழர் போடாத வாக்குகளில் தங்கி இருக்கும். அடுத்த முறை வெல்ல, தமிழரை மேலும் ஒடுக்கி, மேலும் ஒரு  தனி வேட்பாளரை போட்டால் போதுமாயிருக்கும்.

நாளைக்கிடையே பொது வேட்பாளர் எல்லாம் சாத்தியமா தெரியவில்லை. அப்படி நின்றாலும் சிவாஜிலிங்கம் போல் ஒரு கோமாளி நிற்பதால் பெரிய மாற்றம் வரும்போலவும் தெரியவில்லை.

ஒருவேளை ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் நின்று, அவரால் கோட்ட வெல்லுவாராயின்;

சிங்களவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு கடுக்காய் கொடுத்து காயடிப்பதில் தாமே முதன்மையானவர்கள் என்பதை ராஜபக்சேக்கள் இன்னொரு முறை நிருபிப்பார்கள் 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Rajesh said:

கோத்தபாயவை விட சஜித் மேல் என்று சிங்கள பேரினவாதத்தின் மீது விசுவாசத்தை காட்டும் அடிமை மனநிலை பலரிடம் ஊறிப்போய் இருக்கு. அதுவும் புலம்பெயர்ந்த சிலரிட்டை இருக்கிறதுல ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

சஜித் வென்றால் தனது நிலை கவலைக்கிடம் என்கிறதால சஜித் தோற்பதையே ரணில் உள்ளூர விரும்புவதாக செய்திகள் சொல்லுது. அதற்காவே ரணிலின் ஆலோசனையின்படி கோத்தபாய குழுவுடன் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) எழுதாத உடன்படிக்கை செய்ய சுமந்திரன் கடும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில வாக்கு பிரியப்போகுது, கோத்தபாய வந்தால் அவ்வளவு தான் என்று புலம்புற ஆக்கள் என்ன செய்யப்போகினமோ தெரியல. ஏற்கனவே சஜித்துக்கு கிடைக்கக்கூடிய முஸ்லீம் வாக்குகளை பிரிக்க ஹிஸ்புல்லா இறக்கப்பட்டுள்ளார்.

ஈழத்துல வாழ்ற தமிழர்களுக்கு சஜித்தோ கோத்தாவோ யார் வந்தாலும் ஒரு வித்தியாசமும் இருக்கப் போறதில்லை!

கடந்த பத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளில் சகலருக்கும் கிடைத்த தரவுகளின் படி, சஜித் வந்தால் ஏற்படக் கூடிய நிலை, கோத்தா வந்தால் ஏற்படக்கூடிய நிலையை விட மேல் தான்! இதன் அர்த்தம் சஜித் கோத்தாவை விட மேல் என்று நாம் சான்றிதழ் கொடுப்பதாக அமையாது! இருக்கிற வரையறுக்கப் பட்ட தெரிவுகளில், தாயக மக்களை மீண்டும் கடத்திக் கொலை செய்யாத ஒருவரை பதவிக்கு வரச் சார்பாகக் கருத்துரைப்பது அடிமைப் புத்தி அல்ல!

தாயகத்திலோ புலத்திலோ பாதுகாப்பாக இருந்தபடி, அந்தப் பாதுகாப்பு இல்லாத தமிழர்களை கோத்தாவிடம் பலி கொடுத்து, படம் எடுத்து தீர்வு பெறலாம் என நினைக்கும் நப்பாசைக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை! 

தாயக மக்களின் உயிரைப் பணயம் வைத்து சர்வதேசத்திடம் இருந்து பெற இனி ஒன்றும் இல்லை! நூறு வழிகளில் சொன்னாலும் இது தான் அடிப்படையான யதார்த்தம்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்கு இனியும் ஏதாவது நல்லது நடக்குமென்று நம்புகின்றீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.