Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

4 minutes ago, Maruthankerny said:

என்கிறீர்களா?
அதையும் இல்லை என்கிறீர்கள் ....
அவர்களை பண்படுத்த நீங்கள் எதாவது அல்லது உங்கள் மதம் எதாவது செய்கிறதா?
என்றால் எல்லாம் புததகத்தில் இருக்கு என்கிறீர்கள் ...
அவர்கள் மதுக்கு விசுவாசம் இல்லை என்கிறீர்கள் 

பண்படாதவன்தானே .......... அங்கு போனால் என்ன?
இங்கு இருந்தால் என்ன?

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஐரோப்பிய வருகை தந்த கலாச்சாரமும், அவர்களின் மதமும் நமது தாய்மண்ணின் பண்பாட்டை பாதிக்கவில்லை என்று கூற முடியுமா? அதன் தொடர்ச்சியே இந்த மதமாற்ற வியாபாரம் எல்லாம். 

நமது மண் பண்பாடு இழப்பது உங்களுக்குச் சரியென்று பட்டால் அது உங்கள் இஷ்டம். எங்களைப் போன்றவர்கள் அதை விமர்சிப்போம். அதற்கான நியாயமும், உரிமையும் எமக்கு உண்டு. 

தவிரவும் இது மதம் மாறுபவன் மீதான விமர்சனம் அல்ல; அதை பணம், அதிகாரம் மூலம் திணிப்பவர்கள் மீதும் தான். 

10 minutes ago, Maruthankerny said:

உங்களுடைய ஹிந்தி மதத்துக்கும் சைவமதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை 
இது பார்ப்பான் பரப்பிய பொய் ... ஆதாரம் இருந்தால் பகிரவும்.
அல்லது மேலே நீங்கள் எழுதியதுபோல சிறுவயதில் படித்தோம் என்று எழுதுங்கள் போதும். 

இந்து மதத்தையும், சைவத்தையும் தொன்மைக் காலத்தில் இருந்து நமது பூட்டன், பாட்டன், தந்தை வழியாக இன்று வரை எமக்குக் கடத்திய வழியில் நான் விசுவாசமாக இருக்கிறேன். என் போன்றோரும் இதில் தெளிவாக இருக்கிறார்கள். உங்கள் எதிர்மறையான கருத்துக்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை. 😊

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.

Posted By Vimal On 31st Juli, 2017. Under ஆன்மீகம்  
 
 15-500x261.jpg
 
நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய எதையும் நாமும் எளிதாக உதாசீனம் செய்துவிடுவோம் என்று கூறுவார்கள். இந்த கருத்தை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
0_small-190x300.jpg
நம்மில் பலர் திருவாசகத்தை படிப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. அனால் ஜெர்மனியை சேர்ந்து தம்பதியினர் திருவாசகம் கேட்டதால் அவர்கள் வாழ்வில் மிக பெரிய அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாருங்க இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜெர்மனியை சேர்ந்த கர்ப்பணிப் பெண் ஒருவர் நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால் பெர்லின் மருத்தவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம்
பரிசோதனை செய்துள்ளார்.
அவரும் பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்து “குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது ” என்று கூறி அனுப்பிவிட்டார்.
என்ன செயவதென்று புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர் அனால் அனைவரும் ஒரே விதமான பதிலையே கூறியுள்ளனர்.
woman-1284353_960_720-300x200.jpg
இந்நிலையில் அப்பெண்ணும் அவர் கணவரும்  மன நிம்மதிக்காக இளையராஜாவின் திருவாசகம் இசையைக் கேட்டுள்ளனர்.
என்ன ஆச்சரியம்! “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகாதார்” என்ற சான்றோர் வார்த்தைக்கு இணங்க சிலநிமடங்களில் வயிற்றில் அசைவு தெரிய மகிழ்ச்சியில் இசையை நிறுத்தி உள்ளனர். உடனே குழந்தையின் அசைவும் நின்றுள்ளது.
Raaja-300x152.jpg
தொடர்ந்து நான்கு முறை இப்படி போட்டு போட்டு நிறுத்தியுள்ளனர். குழந்தையும் அதற்கு ஏற்றார் போல் அசைவை நிறுத்தியுள்ளது. அதன்பின் தொடர்ந்து வீடு முழுவதும் ராஜாவின் இசைதான் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. சரியாக பத்தாவது மாதத்தில் அறுவை சிகிச்சை இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறந்து மருத்துவர்களை விய்ப்பில் ஆழ்த்தியது.
How-to-take-care-the-babies-in-the-womb-
அந்த ஜெர்மன் தம்பதியர் சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். இளையராஜாவும் குழந்தைக்கு ஆசி வழங்கியுள்ளார் . தற்போது ஜெர்மனியை சார்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த இசையில் உள்ள அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு மட்டும் இல்லாமல் ராஜாவின் திருவாசகம சி டி யைக்கேட்டு அந்த இசைக்கட்டுமானத்தில் வியந்து போயுள்ளனர்.
அத்துடன் மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.
New-Venture-Medical-Research-16-300x200.
இப்படி பட்ட பல அதிசயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. உதாரணத்திற்கு நாம் போகர் சித்தர் கூறிய அரும்பெரும் மருத்துவ குறிப்புகளை ஓரங்கட்டிவிட்டோம். ஆனால் வெளிநாட்டவரோ அந்த குறிப்புகளை வைத்து மருத்துவ துறையில் சாதனைகள் பல படைத்தது வருகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

அப்ப இந்து பிரபாகரன் இருந்திருந்தால் மோடி தங்க தட்டில தமிழீழம் வைச்சு தந்திருப்பார் என்று சொல்லுறீங்கள் போல இருக்கு. 

வட்டுக்கொட்டைக்கு போற வழி எது என்று கேட்டால்... துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்ற கேள்விபதில் ஞாபகத்திற்கு வருகிறது. தயவுசெய்து யூட் அவர்கள் கேட்ட கேள்வியைத் திரும்பப் படிக்கவும்

17 hours ago, Maruthankerny said:

நல்லூரை உதாரணத்துக்கு எடுத்தால் ... உங்கள் பூட்டன் தொடங்கி வணங்கி வருகிறார்கள் 
நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் பிள்ளையோ பேரனோ கூட அர்ச்சகர் ஆகமுடியாது.
இந்து என்ற போலி  மதத்தில் நீங்கள் எட்ட கூடிய உயரம் இவ்வளவுதான் என்று இருக்கிறது 

மாறாக புனித அந்தோனியார் கோவிலில் உங்களது  மகனோ பேரனோ நினைத்தால் 
பாதிரியார் ஆகமுடியும். இறைபணி என்பதை முழுமையாக செய்யமுடியும் 

முதலாவதில் நீங்கள் அடிமை 
இராண்டாவதில் நீங்கள் முழுமை. 

ஆக, உங்களுக்கு மதத் தலைவர் பதவி கிடைக்கக் கூடிய மதம் ஒன்று தேவைப்படுகிறது... அப்படித் தானே!

அதாவது கடைநிலை ஊழியனாக இருந்து Chief Executive Officer ஆக வருவது தான் ஒரு மதத்தைப் பின்பற்றுபவனின் இலக்காக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஐரோப்பியரின் மதத்தின் மன நிலையில் இருந்து வியாபார நோக்கில் பார்த்தால் அவ்வாறு தானே தோன்றும் உங்களுக்கு!

ஒரு இந்துவோ/சைவனோ இறை பணி செய்ய, ஆன்மீக வழி செல்ல, இறைவனை அடைய மதகுருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய புராணத்தில் கூறப்பட்ட நாயன்மார்கள் வரலாறு இதற்கு ஒரு சான்று.

நான் ஒரு மத குரு அல்ல. ஆனால் சைவனாக இருக்க ஒரு தடையும் இல்லை. சைவமோ இந்து மதமோ என் போன்றோரை நல்வழிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. மதகுருவாகும் பேராசையும் இல்லை. அவர்களின் ஆலோசனைகளை நாடுவோம். அதற்காக நாங்கள் அடிமைகளோ, அவர்கள் எஜமான்களோ அல்லர்.

பணத்துக்காக மதம் மாறுபவர்களே மதத்துக்கும், பணத்துக்கும் அடிமையாகிச் செல்வோர். 

எங்கள் மதத்தின் வழி மகிழ்ச்சியாகவும், ஆன்மீக சுதந்திரமாகவும் நாங்கள் உள்ளோம். பணம், சலுகைகள் மூலம் அளவிட முடியாதது இச் சுதந்திரமும், மகிழ்ச்சியும்! 😊

Edited by மல்லிகை வாசம்

21 minutes ago, Paanch said:

ஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.

Posted By Vimal On 31st Juli, 2017. Under ஆன்மீகம்  
 
 15-500x261.jpg
 
ஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.
நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய எதையும் நாமும் எளிதாக உதாசீனம் செய்துவிடுவோம் என்று கூறுவார்கள். இந்த கருத்தை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
0_small-190x300.jpg
நம்மில் பலர் திருவாசகத்தை படிப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. அனால் ஜெர்மனியை சேர்ந்து தம்பதியினர் திருவாசகம் கேட்டதால் அவர்கள் வாழ்வில் மிக பெரிய அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாருங்க இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜெர்மனியை சேர்ந்த கர்ப்பணிப் பெண் ஒருவர் நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால் பெர்லின் மருத்தவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம்
பரிசோதனை செய்துள்ளார்.
அவரும் பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்து “குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது ” என்று கூறி அனுப்பிவிட்டார்.
என்ன செயவதென்று புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர் அனால் அனைவரும் ஒரே விதமான பதிலையே கூறியுள்ளனர்.
woman-1284353_960_720-300x200.jpg
இந்நிலையில் அப்பெண்ணும் அவர் கணவரும்  மன நிம்மதிக்காக இளையராஜாவின் திருவாசகம் இசையைக் கேட்டுள்ளனர்.
என்ன ஆச்சரியம்! “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகாதார்” என்ற சான்றோர் வார்த்தைக்கு இணங்க சிலநிமடங்களில் வயிற்றில் அசைவு தெரிய மகிழ்ச்சியில் இசையை நிறுத்தி உள்ளனர். உடனே குழந்தையின் அசைவும் நின்றுள்ளது.
Raaja-300x152.jpg
தொடர்ந்து நான்கு முறை இப்படி போட்டு போட்டு நிறுத்தியுள்ளனர். குழந்தையும் அதற்கு ஏற்றார் போல் அசைவை நிறுத்தியுள்ளது. அதன்பின் தொடர்ந்து வீடு முழுவதும் ராஜாவின் இசைதான் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. சரியாக பத்தாவது மாதத்தில் அறுவை சிகிச்சை இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறந்து மருத்துவர்களை விய்ப்பில் ஆழ்த்தியது.
How-to-take-care-the-babies-in-the-womb-
அந்த ஜெர்மன் தம்பதியர் சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். இளையராஜாவும் குழந்தைக்கு ஆசி வழங்கியுள்ளார் . தற்போது ஜெர்மனியை சார்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த இசையில் உள்ள அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு மட்டும் இல்லாமல் ராஜாவின் திருவாசகம சி டி யைக்கேட்டு அந்த இசைக்கட்டுமானத்தில் வியந்து போயுள்ளனர்.
அத்துடன் மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.
New-Venture-Medical-Research-16-300x200.
இப்படி பட்ட பல அதிசயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. உதாரணத்திற்கு நாம் போகர் சித்தர் கூறிய அரும்பெரும் மருத்துவ குறிப்புகளை ஓரங்கட்டிவிட்டோம். ஆனால் வெளிநாட்டவரோ அந்த குறிப்புகளை வைத்து மருத்துவ துறையில் சாதனைகள் பல படைத்தது வருகின்றனர்.
 
இப்படியே நாங்களே செய்தியை கற்பனையில எழுதி நாங்களே பிரசுரித்து நாங்களே அதை நம்பி எங்களுக்குள்ளையே சிரித்து மகிழ்ந்து  கொள்வதும் ஒரு வகை wellness தான். இதையே தான் அல்லோயா காரன் செய்கிறான். 

50 minutes ago, Maruthankerny said:

Image result for hindu torchering kids

Related image

Related image

Related image

Related image

அவர்கள் விளைவிக்கும் குந்தகங்களை வாசித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ......

ஒரு குந்தகமும் இல்லை. காலம் காலமாக இது நடைபெற்று வருகிறது. 

விடுப்புப் பார்க்கும் உங்களுக்கு அவர்களின் பக்தி கோமாளித்தனமாகத் தெரியலாம். ஆனால், அவர்களுக்கும் உங்கள் சிந்தனை கோமாளித்னமாகத் தெரியலாம் ! 😃

22 minutes ago, மல்லிகை வாசம் said:

ஆக, உங்களுக்கு மதத் தலைவர் பதவி கிடைக்கக் கூடிய மதம் ஒன்று தேவைப்படுகிறது... அப்படித் தானே!

அதாவது கடைநிலை ஊழியனாக இருந்து Chief Executive Officer ஆக வருவது தான் ஒரு மதத்தைப் பின்பற்றுபவனின் இலக்காக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஐரோப்பியரின் மதத்தின் மன நிலையில் இருந்து வியாபார நோக்கில் பார்த்தால் அவ்வாறு தானே தோன்றும் உங்களுக்கு!

ஒரு இந்துவோ/சைவனோ இறை பணி செய்ய, ஆன்மீக வழி செல்ல, இறைவனை அடைய மதகுருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய புராணத்தில் கூறப்பட்ட நாயன்மார்கள் வரலாறு இதற்கு ஒரு சான்று.

நான் ஒரு மத குரு அல்ல. ஆனால் சைவனாக இருக்க ஒரு தடையும் இல்லை. சைவமோ இந்து மதமோ என் போன்றோரை நல்வழிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. மதகுருவாகும் பேராசையும் இல்லை. அவர்களின் ஆலோசனைகளை நாடுவோம். அதற்காக நாங்கள் அடிமைகளோ, அவர்கள் எஜமான்களோ அல்லர்.

பணத்துக்காக மதம் மாறுபவர்களே மதத்துக்கும், பணத்துக்கும் அடிமையாகிச் செல்வோர். 

எங்கள் மதத்தின் வழி மகிழ்ச்சியாகவும், ஆன்மீக சுதந்திரமாகவும் நாங்கள் உள்ளோம். பணம், சலுகைகள் மூலம் அளவிட முடியாதது இச் சுதந்திரமும், மகிழ்ச்சியும்! 😊

பழம் எட்டாது என்பது இந்து மதத்தைப் பற்றி நன்கு அறிந்த  உங்களுக்கு நன்றாவே தெரியும். ஆனால் மருது உண்மையான ஆன்மீகவாதியாக விரும்பும்  சாதாரண மக்களும்  மத தலைவர் ஆக வேண்டும். எலா மக்களும் இறைவனின் முன்னால் சமமாக இருக்க வேண்டும்  என்று விரும்புகிறார். இந்து சனாதன, மனு  தர்மத்தின்படி எல்லோரும் ஒன்றல்ல.  கீழ்நிலை மக்கள் பார்பானுக்கு பணி புரிவதே இறை பணி என்பதை அவர் அறியவில்லை போலும். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மல்லிகை வாசம் said:

பணத்துக்காக மதம் மாறுபவர்களே மதத்துக்கும், பணத்துக்கும் அடிமையாகிச் செல்வோர். 

அப்போ ஏழ்மையால்  அரிசி பருப்புக்கு போகேலை பண ஆசையால் போகுது சனம். வயிறு காஞ்சு புண்பட்டுப்போன சனங்களை மதம் மாத்திப்போடடானுகள் என்று ஒரு சிலர் ஒப்பாரி வைக்கினம். இதில் எது உண்மை என்று சம்பந்தப் பட்டவர்களை கேக்காமல் எங்கட கற்பனையில் வடிக்க வேண்டியதுதான்.

1 hour ago, மல்லிகை வாசம் said:

ஒரு குந்தகமும் இல்லை. காலம் காலமாக இது நடைபெற்று வருகிறது. 

விடுப்புப் பார்க்கும் உங்களுக்கு அவர்களின் பக்தி கோமாளித்தனமாகத் தெரியலாம். ஆனால், அவர்களுக்கும் உங்கள் சிந்தனை கோமாளித்னமாகத் தெரியலாம் ! 😃

காலம் காலமாக அடிமைகளாக இருப்பர கள் அறிவு பெற்று சுதந்திரத்திற்காக போராடுவது சுதந்திரத்தை அடைய துடிப்பது தவறு கிடையாது.  ஆன்மீகம் என்ற போர்வையில் தவறாக வழிநடத்தப்பட்ட பாமர மக்களே பக்தி என்ற பெயரில்  இப்படியான முட்டாள்தனங்களை செய்கிறார்கள். பாப்பனர்கள் இவற்றை ஊக்குவித்தாலும் இவற்றை அவர்கள் என்றுமே செய்வதில்லை. இவை எல்லாம் முட்டாள்தனங்கள் என்ற தெளிவு அவர்களுக்கு உண்டு. ஆனால் இவ்வாறான மக்களின் முட்டாள்தனம் தான் அவர்களின் மூலதனம் என்பதால் இவற்றை தடுக்க முன்வராதது மட்டுமல்ல இவற்றை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள்.

மதம் மாற்றுபவர்கள் இந்த முட்டாள்தனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றார்கள்.   மதம் மாறும் மக்களில் அதிகமானவர்கள் இப்படியான அதிக பக்தி என்ற பெயரில் கோமாளித்தனம் புரியும்  பாமர மக்களே. இங்கு முரண்பாடு என்னவென்றால் மத மாற்றத்தை கடுமையாக எதிப்பவர்களே மத மாற்றத்திற்கு முக்கிய காரணியான தூண்டு கோலாக இருக்கும்  மூடபழக்கங்களையும் ஆதரிக்கின்றனர்.    ஆனமீகம் தத்துவம. என்று பாடம் எடுக்கும் இவர்களுக்கே அதில் நம்பிக்கை இல்லாமல் பாமர மக்களுக்கு பார்பான ஊட்டிய நச்சு விதைகளான மூடத்தனங்களை நம்புகின்றனர். எமது தமிழ் மக்கள. உலகப்பரப்பில் தலை நிமிர்ந்து மற்றய இன மக்களுக்கு சமமாக அறிவு பெற்று வாழ்வதுவே எமக்கு பெருமை. குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

14 minutes ago, Paanch said:

திருவாசகம் என்பது தமிழில் உள்ள சிறந்த இலக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு மொழியின. சிறப்பை அம்மொழியில் உள்ள இலக்கியங்கள. பறை சாற்றுகின்றன.   இவ்வாறான பக்தி இலக்கியத்தின் பெருமை என்பது வேறு. அதை வைத்து கதை கட்டுவது என்பது வேறு. 

எனக்கு தெரிஞ்ச இரண்டு குடும்பத்தினர்கள் பற்றி இங்கு குறிப்பிடலாம் 
ஒரு குடும்பத்தினர் எங்கள் ஊரவர் மற்றயவர் எனது உறவினர்..
எங்கள் ஊரவரின் மனைவிக்கு  இனம்தெரியாத நோய் எல்லா வைத்தியசாலைகளுக்கும் சென்றும் சுகமாகவில்லை, அதன் பிறகு செய்வினை சூனியம் என நம்பி ஊரில் உள்ள பேய் கோவில்களிற்கு எல்லாம் திரிந்தார்கள் எந்த மாற்றமும் இல்லை இறுதியில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜெபித்து அவரின் நோய் மார் விட்டது .. அவர்கள் குடும்பமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடடார்கள்
அக்கா குடும்பத்தினருக்கு அத்தானிற்கு கிடனி இரண்டும் பழுதடைந்து மாற்றீடு செய்தே ஆக வேண்டிய நிலை .. இன்னும் கிடனி கிடைக்கவில்லை.. உடலில் உள்ள கிடனி மிகவும் பழுதடைந்து விட்ட்தால் அதை எடுப்பது என முடிவு அத்தானிற்கு துளியும் விருப்பம் இல்லை பயம் . அவர்களிற்கு முன்னரே அறிமுகமான பாதிரியார் ஒருவரிடம் இது பற்றி முதல் நாள் இரவு போன் கதைத்திருக்கிறார்கள் .. அவர் அப்போது அவர்களிடம் அப்பிடி ஏதும் சத்திரசிகிட்சை நடக்காது என கூறி  இருக்கிறார் அவர் சொன்ன படியே அடுத்த நாள் வந்த தலைமை டாகடர்  தேவை இல்லை என கூறி இருக்கிறார் இப்போது அவர்கள் வீடு வந்து விடடார்கள் பூரண சுகம் என இல்லை  முன்னரிலும் பரவாய் இல்லை எனும் நிலை தான்.. அவர்களும் மதம் மாறி விடடாரர்கள்..எவரும் கொடுக்காத நம்பிக்கையை ஒருவரோ ஒரு மதமோ கொடுக்கும் போது அதை அவர்கள் பின் பற்ற விரும்புவதிலே என்ன தவறு இருக்க முடியும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, satan said:

 கவலையை விடுங்கோ  சாமி. எங்கட அடுத்த அரசியல்  தலீவர் நீங்கள் தான். அதற்கான எல்லாத் தகுதிகளும், அதற்கு மேலேயும் உங்களுக்கு உள்ளது.

அப்ப நானும் சம்பந்தன்,மாவை,சுமந்தி ஐயாக்கள் மாதிரி நல்லாட்சிக்கு மிண்டு குடுத்து சொத்து சொகங்கள் வெளிநாட்டிலை வீடுவளவு எண்டு ஜாலியாய் இருக்கலாம் எண்டுறியள்.freu.gif

குருபெயர்ச்சியிலையும் இருந்தது நான்தான் நம்பேல்லை..:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, அபராஜிதன் said:

எனக்கு தெரிஞ்ச இரண்டு குடும்பத்தினர்கள் பற்றி இங்கு குறிப்பிடலாம் 
ஒரு குடும்பத்தினர் எங்கள் ஊரவர் மற்றயவர் எனது உறவினர்..
எங்கள் ஊரவரின் மனைவிக்கு  இனம்தெரியாத நோய் எல்லா வைத்தியசாலைகளுக்கும் சென்றும் சுகமாகவில்லை, அதன் பிறகு செய்வினை சூனியம் என நம்பி ஊரில் உள்ள பேய் கோவில்களிற்கு எல்லாம் திரிந்தார்கள் எந்த மாற்றமும் இல்லை இறுதியில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜெபித்து அவரின் நோய் மார் விட்டது .. அவர்கள் குடும்பமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடடார்கள்
அக்கா குடும்பத்தினருக்கு அத்தானிற்கு கிடனி இரண்டும் பழுதடைந்து மாற்றீடு செய்தே ஆக வேண்டிய நிலை .. இன்னும் கிடனி கிடைக்கவில்லை.. உடலில் உள்ள கிடனி மிகவும் பழுதடைந்து விட்ட்தால் அதை எடுப்பது என முடிவு அத்தானிற்கு துளியும் விருப்பம் இல்லை பயம் . அவர்களிற்கு முன்னரே அறிமுகமான பாதிரியார் ஒருவரிடம் இது பற்றி முதல் நாள் இரவு போன் கதைத்திருக்கிறார்கள் .. அவர் அப்போது அவர்களிடம் அப்பிடி ஏதும் சத்திரசிகிட்சை நடக்காது என கூறி  இருக்கிறார் அவர் சொன்ன படியே அடுத்த நாள் வந்த தலைமை டாகடர்  தேவை இல்லை என கூறி இருக்கிறார் இப்போது அவர்கள் வீடு வந்து விடடார்கள் பூரண சுகம் என இல்லை  முன்னரிலும் பரவாய் இல்லை எனும் நிலை தான்.. அவர்களும் மதம் மாறி விடடாரர்கள்..எவரும் கொடுக்காத நம்பிக்கையை ஒருவரோ ஒரு மதமோ கொடுக்கும் போது அதை அவர்கள் பின் பற்ற விரும்புவதிலே என்ன தவறு இருக்க முடியும் ...

கிட்னி பழுதடைந்தால், பூரண சுகம் இல்லைதான்.

அதென்ன, பாதிரியார் ஜெபித்தவுடன் - முன்னர் இருந்த நிலையைவிட பரவாயில்லை என்று சொல்கிறீர்கள்?

இப்படித்தான் எல்லாரையும் ஏமாற்றுகிறார்கள்.

பாதிரியாருக்கு, கிட்னி பழுதானால் ஜெபிக்க மாட்டார்.   Nawaloka Hospital இல் இருப்பார்.

குருடர் பார்க்கிறார் என்று மேடையில் ஜெபித்த ஒரு பாதிரியார், அவரின் கண்ணுக்கு Appollo Hospital இல் மருத்துவம் பார்த்தார்.  

பாதிரியாரின் பெயர் ஞாபகமில்லை.  பால் தினகரன் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

ஆக, உங்களுக்கு மதத் தலைவர் பதவி கிடைக்கக் கூடிய மதம் ஒன்று தேவைப்படுகிறது... அப்படித் தானே!

அதாவது கடைநிலை ஊழியனாக இருந்து Chief Executive Officer ஆக வருவது தான் ஒரு மதத்தைப் பின்பற்றுபவனின் இலக்காக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஐரோப்பியரின் மதத்தின் மன நிலையில் இருந்து வியாபார நோக்கில் பார்த்தால் அவ்வாறு தானே தோன்றும் உங்களுக்கு!

ஒரு இந்துவோ/சைவனோ இறை பணி செய்ய, ஆன்மீக வழி செல்ல, இறைவனை அடைய மதகுருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய புராணத்தில் கூறப்பட்ட நாயன்மார்கள் வரலாறு இதற்கு ஒரு சான்று.

நான் ஒரு மத குரு அல்ல. ஆனால் சைவனாக இருக்க ஒரு தடையும் இல்லை. சைவமோ இந்து மதமோ என் போன்றோரை நல்வழிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. மதகுருவாகும் பேராசையும் இல்லை. அவர்களின் ஆலோசனைகளை நாடுவோம். அதற்காக நாங்கள் அடிமைகளோ, அவர்கள் எஜமான்களோ அல்லர்.

பணத்துக்காக மதம் மாறுபவர்களே மதத்துக்கும், பணத்துக்கும் அடிமையாகிச் செல்வோர். 

எங்கள் மதத்தின் வழி மகிழ்ச்சியாகவும், ஆன்மீக சுதந்திரமாகவும் நாங்கள் உள்ளோம். பணம், சலுகைகள் மூலம் அளவிட முடியாதது இச் சுதந்திரமும், மகிழ்ச்சியும்! 😊

உங்களுக்கு எழுதுவது ஒன்றும் புரியவில்லை ...
வீணாக சும்மா அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
ஒரே ஒரு மகிழ்ச்சியான விடயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று எழுதி இருப்பதுதான்.

ஆதிக்கத்துக்கும்  அடிமைத்தனத்துக்கும்  
திட்டமிட்ட இன-மத அழிப்புக்கும்  உங்களுக்கு வித்தியாசமும் விளக்கம் புரியவில்லை 
தொடர்ந்தும் அலம்புவதால் பயன் ஒன்றும் இல்லை.

இப்படி நீங்கள் ஏன் அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் 
இதுக்கு எல்லாம் என்ன மூல காரணம் என்பதுபற்றித்தான் நான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன் 
ஒட்டுமொத்த இனமும் அலம்பிக்கொண்டு இருப்பதால்தான்... பலர் மதம் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்பதைத்தான்  இங்கு பலர்  சுட்டி காட்ட முனைவது.

சம்மந்தர் பார்ப்பான் எனபதால் தப்பித்தார் 
அப்பர் சுந்தரர் எவ்வாறு சிததரவதை பட்டு கொல்லபட்டார்கள்? ஏன்?
எனப்து பற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சுந்தரமூர்த்தி நாயனாரை  பார்ப்பான் சிதம்பரம் கோவிலுக்குள் வைத்துதான் அடித்து கொன்றான் 
சுந்தரருக்கு என்ன நடந்தது? என்பதைத்தான் அப்போதைய மக்கள் "சிதம்பர ரகசியம்" என்று சொல்லி வந்தார்கள்  பின்பு பார்ப்பான் அதை மறைக்க இப்போ லைற் பிடிச்சு வெளிச்சம் காட்டுகிறான்.

உங்களுக்கு சைவமும் தெரியாது 
ரிக் வேதமும் தெரியாது 
வைஷ்ணமும் தெரியாது 
தெரிந்திருந்தால் எதைப்பற்றியாவது விளக்கமாக எழுதுவீர்கள். மாறாக சும்மா எதை எதையோ தொடர்ந்தும் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். 

என்னால் இனி தொடரமுடியாது .... காரணம் இது வெறும் தனிமனித தாக்குதலாகி போகுமோ என்ற உள்ளுணர்வு இருப்பதால்.

புத்தகம் இருக்கிறது இருக்கிறது என்று அடுத்தவனுக்கு சொல்லிக்கொண்டு இருக்காமல் நேரம் கிடைத்தால் 
சென்று வாசியுங்கள். 
நல்வழிக்கும் பைத்தியகாரத்தனத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு 
ஒரு மனிதன் நல்வழியில் நடந்தால் நாட்டிலும் அவனை சார்ந்து பல நல்லதும் நன்மையும் நடந்துகொண்டு இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மாங்குயில் said:

கிட்னி பழுதடைந்தால், பூரண சுகம் இல்லைதான்.

அதென்ன, பாதிரியார் ஜெபித்தவுடன் - முன்னர் இருந்த நிலையைவிட பரவாயில்லை என்று சொல்கிறீர்கள்?

இப்படித்தான் எல்லாரையும் ஏமாற்றுகிறார்கள்.

பாதிரியாருக்கு, கிட்னி பழுதானால் ஜெபிக்க மாட்டார்.   Nawaloka Hospital இல் இருப்பார்.

குருடர் பார்க்கிறார் என்று மேடையில் ஜெபித்த ஒரு பாதிரியார், அவரின் கண்ணுக்கு Appollo Hospital இல் மருத்துவம் பார்த்தார்.  

பாதிரியாரின் பெயர் ஞாபகமில்லை.  பால் தினகரன் என்று நினைக்கிறேன்.

இங்கு பல நோய்கள் மனதால்தான் வருகிறது 
மனத்தால் பயந்தவர்கள் பல நோய்களை தாமாகவே உருவாக்கி கொள்வார்கள் 
திடீரென ஒருவர் நம்பிக்கை ஊட்டும் படி ஏதும் சொன்னால் 
அவர்கள் மனோதைரியம் பெற்று பலம் அடைந்துவிடுவார்கள் 

ஊரில் எமக்கு சின்ன வயதில் கோவில்களில் கொண்டு சென்று கையில் 
நூலை கட்டிவிடுவார்கள் இனி பிள்ளையார் உன்னுடன் இருப்பார் உன்னை இனி யாராலும் 
ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.
சாதாரண இருட்டுக்கே பயந்துகொண்டு திரிந்த நாம் நூல் கட்டியவுடன் தைரியமாக திரிவோம்.
அப்படி ஒரு நம்பிக்கையை கொடுப்பதுதான்.

கிட்னியால் இப்போ பிரச்சனை இல்லை என்றால் 
ஒரு கிட்னி ஓரளவு முன்பு வேலை செய்துகொண்டு இருந்து இருக்கிறது என்றுதான் 
நினைக்கிறேன் இவர்களின் மனோபயம் கவலை என்பவற்றால் உடல் சோர்வடைந்து 
முந்திய மருத்துவ பரிசோதனை நேரம் முழு உடலும் பலவீனமாக இருந்து இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

பாஞ் அண்ணா ...
ஒரு கவிஞர் எழுதியதுபோல 
எல்லாம்தான் படிசீங்க  என்ன செய்து கிளிச்சீங்க? 
என்பதுதான் நாம் இங்கு எழுதிக்கொண்டு இருப்பது 

அதைவிட முக்கியம் 90வீதம் எதையும் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் 
அதைவிட கொடுமை சுத்த பைத்தியகாரர்களாக இருக்கிறார்கள் 
இவ்வளவும் இருக்கிற ஒரு மதத்தில் இருந்தவன் ... ஒன்றும் இல்லாத கிறிஸத்வத்துக்கு 
தவுகிறானே ஏன்?
இதை எவ்வாறு நிறுத்துவது?
இங்கு என்ன தவறு நடக்கிறது?
இவைதான் இங்கு முன்வைக்கப்படும் கேள்விகள்.

இவற்றுக்கு சொந்த மதம் பற்றிய அக்கறை கொண்டவன் 
நாடு எதிர்காலம் பற்றி சிந்திப்பவன்தான் ஒரு முடிவை பதிலை தேடிக்கொண்டு இருப்பான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Maruthankerny said:

பாஞ் அண்ணா ...
ஒரு கவிஞர் எழுதியதுபோல 
எல்லாம்தான் படிசீங்க  என்ன செய்து கிளிச்சீங்க? 
என்பதுதான் நாம் இங்கு எழுதிக்கொண்டு இருப்பது 

அதைவிட முக்கியம் 90வீதம் எதையும் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் 
அதைவிட கொடுமை சுத்த பைத்தியகாரர்களாக இருக்கிறார்கள் 
இவ்வளவும் இருக்கிற ஒரு மதத்தில் இருந்தவன் ... ஒன்றும் இல்லாத கிறிஸத்வத்துக்கு 
தவுகிறானே ஏன்?
 
கிட்னி இரண்டும் failure ஆகின பின்பும், பாதிரியாரின் ஒரு ஜெப 'dose' இற்காக குடும்பத்துடன், கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களை என்னவென்று அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட இறுதி வரைக்கும் ஓடும் போல இருக்கு இந்த திரி

மருதரும் இப்ப படங்களோடு வெளிக்கிட்டார் போல

நல்ல காலமோ இல்ல நாம் இன்னும் அனுபவிக்க வேண்டுமோ தெரியல நமக்கு ஒரு நாடு  இன்னும் கிடைக்கல.

  நமக்கு எதற்குடா எதிரி  நமக்கு நாமே போது ஆளவும் அடிச்சிட்டு சாகவும் 

3 hours ago, அபராஜிதன் said:

எனக்கு தெரிஞ்ச இரண்டு குடும்பத்தினர்கள் பற்றி இங்கு குறிப்பிடலாம் 
ஒரு குடும்பத்தினர் எங்கள் ஊரவர் மற்றயவர் எனது உறவினர்..
எங்கள் ஊரவரின் மனைவிக்கு  இனம்தெரியாத நோய் எல்லா வைத்தியசாலைகளுக்கும் சென்றும் சுகமாகவில்லை, அதன் பிறகு செய்வினை சூனியம் என நம்பி ஊரில் உள்ள பேய் கோவில்களிற்கு எல்லாம் திரிந்தார்கள் எந்த மாற்றமும் இல்லை இறுதியில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜெபித்து அவரின் நோய் மார் விட்டது .. அவர்கள் குடும்பமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடடார்கள்
அக்கா குடும்பத்தினருக்கு அத்தானிற்கு கிடனி இரண்டும் பழுதடைந்து மாற்றீடு செய்தே ஆக வேண்டிய நிலை .. இன்னும் கிடனி கிடைக்கவில்லை.. உடலில் உள்ள கிடனி மிகவும் பழுதடைந்து விட்ட்தால் அதை எடுப்பது என முடிவு அத்தானிற்கு துளியும் விருப்பம் இல்லை பயம் . அவர்களிற்கு முன்னரே அறிமுகமான பாதிரியார் ஒருவரிடம் இது பற்றி முதல் நாள் இரவு போன் கதைத்திருக்கிறார்கள் .. அவர் அப்போது அவர்களிடம் அப்பிடி ஏதும் சத்திரசிகிட்சை நடக்காது என கூறி  இருக்கிறார் அவர் சொன்ன படியே அடுத்த நாள் வந்த தலைமை டாகடர்  தேவை இல்லை என கூறி இருக்கிறார் இப்போது அவர்கள் வீடு வந்து விடடார்கள் பூரண சுகம் என இல்லை  முன்னரிலும் பரவாய் இல்லை எனும் நிலை தான்.. அவர்களும் மதம் மாறி விடடாரர்கள்..எவரும் கொடுக்காத நம்பிக்கையை ஒருவரோ ஒரு மதமோ கொடுக்கும் போது அதை அவர்கள் பின் பற்ற விரும்புவதிலே என்ன தவறு இருக்க முடியும் ...

அபராஜிதன் இவை எல்லாம் உண்மை என்று மனதார நம்புகின்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மாங்குயில் said:

கிட்னி இரண்டும் failure ஆகின பின்பும், பாதிரியாரின் ஒரு ஜெப 'dose' இற்காக குடும்பத்துடன், கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களை என்னவென்று அழைப்பது?

அதுக்கு கூட வக்கு இல்லாத மதம் ஒன்றில் வைத்திருக்கும்போது 
என்ன சொல்லி அழைத்தீர்கள்?
அதனிலும் இப்போ கொஞ்சம் மேன்மையானவர்கள் என்று அழைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த வருட இறுதி வரைக்கும் ஓடும் போல இருக்கு இந்த திரி

மருதரும் இப்ப படங்களோடு வெளிக்கிட்டார் போல

நல்ல காலமோ இல்ல நாம் இன்னும் அனுபவிக்க வேண்டுமோ தெரியல நமக்கு ஒரு நாடு  இன்னும் கிடைக்கல.

  நமக்கு எதற்குடா எதிரி  நமக்கு நாமே போது ஆளவும் அடிச்சிட்டு சாகவும் 

அதற்கான சரியான காரணத்தை அறிந்துகொள்ளுமட்டும் 
அப்படியொரு நாடு உருவாக போவதும் இல்லை.

நாம் ஏன் சீரழிக்கிறோம்?
உங்களுக்கு ஒரு ஆபத்து நேர்ந்தால் ஓடிவரக்கூடிய 
அயலவனை சாதியைச்சொல்லி அடாவடி செய்ய உங்களுக்கு யார் சொல்லி தருகிறான்?
அவனுக்கு அதில் என்ன லாபம்? 
இவற்றுக்கு ஆனா விடைகளை காணாது காவடியாடியதால்தான் 
எமது முன்னோர்கள் சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கத்தியானோம்.

முதல் மொழி தமிழ் 
முதல் நாகரீகம் தமிழ் (கீழடி ஆய்வு சொல்கிறது)
முதல் மதம் சமணம் 

இவ்வளவும் 3000 வருடம் முன்பு கட்டி வைத்தும் இன்று தெருவில் நிற்கிறோமே?
ஏன் என்ற கேள்வி இனியும் கேட்காது ... எத்தனை நாளைக்கு பைத்தியம்போல திரியப்போகிறோம்?

முருகன் தமிழன் 
தமிழ் நாடு தாண்டி முருகன் இல்லை 
முருகனுக்கு இன்னொருமொழியில் பூஜை செய்து 
எனது தமிழ் முருகனுக்கு விளங்காது என்கிறானே ?
எத்தனை நாளைக்கு இப்படியே சேடம் இழுப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அப்ப நானும் சம்பந்தன்,மாவை,சுமந்தி ஐயாக்கள் மாதிரி நல்லாட்சிக்கு மிண்டு குடுத்து சொத்து சொகங்கள் வெளிநாட்டிலை வீடுவளவு எண்டு ஜாலியாய் இருக்கலாம் எண்டுறியள்.freu.gif

குருபெயர்ச்சியிலையும் இருந்தது நான்தான் நம்பேல்லை..:grin:

வேலைக்காக   நீங்கள் குறிப்பிட்டிருந்த தகுதியை வைத்து சொன்னேன்.  வேலை  கிடைத்தால் முயன்று பாருங்கள். சத்தியமாய்  உங்களைப்பற்றி எனக்கு வேறு  எதுவும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலிருந்து ஒருவர் உயர் படிப்பு, தொழில், அகதி என்று கிறிஸ்தவ நாட்டுக்கு போனார். இப்போ முழு குடும்பமே குடியேறி விட்டது. அந்நாட்டவரும் வாழட்டும் என்று விட்டுவிட்டார்கள். தப்பில்லை. அங்கே தங்கள் சுதந்திரத்தோடு மதம் மாறி, மாறாமல் இருக்கிறார்கள். இங்கிருப்பவருக்கு சட்டம் போடுகிறார்கள். எல்லோருமல்ல. பல பெயர் ஒருவருக்கு, பல வழி ஓரிடத்துக்கு, பல போதனை ஒரு உண்மைக்கு. இது தெரியாமல் பிடுங்குப்பாடு. போனவன் போய்விட்டான். போனவனை திரும்பி அழைக்க விருப்பமில்லை. இருக்கிறவர்களையும் இழக்கத்தான் இந்த திரி நீளுது. வெள்ளைக்காரன் கொண்டுவந்த கல்வி, சாதனங்கள், மொழி, இத்யாதி வேண்டும். மதம் வேண்டாம். முடிந்தால் வாழ வையுங்கள் முடியெலைன்னா விலகி வழி விடுங்கள் அவர்களும் வாழட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/22/2019 at 7:24 PM, Lara said:

நீங்கள் சாத்தான் என்று பெயர் வைத்து, profile படமும் போட்டுள்ளீர்களே தவிர, சாத்தானை வைத்து இந்த உலகில் நடக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாது என்பதை உங்கள் கருத்துகளை வாசிக்கும் போதே புரிந்து கொண்டேன்

உங்களது  என்னைப்பற்றிய  புரிதல்   உண்மைதான் லாரா. எனக்குள்ளும், என்னைச் சுற்றியும் இருக்கும்  பிடிவாதம், தற்பெருமை, அழுக்காறு, பேராசை, பொறாமை போன்ற சாத்தான்களைத்தான் தெரியும். அதை விரட்டவும், அண்டவிடாமல் தடுக்கவும்  ஒவொருநாளும் போராடி சோர்ந்து போகிறேன். நீங்கள் சொல்லும் சாத்தான்களைப் பற்றி ஆராய எனக்கு நேரமுமில்லை,  விருப்பமுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.