Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆளுநராக சார்ள்ஸ் ; அவர் விரும்பினால் நியமிப்போம் என்கிறார் ஜனாதிபதி

Featured Replies

வடமாகாண  ஆளுநராக  திருமதி  பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு   திட்டமிடப்பட்டுள்ளது. அவர்  விரும்பினால்  அதற்கான நியமனம்  வழங்கப்படும் என்று  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ  தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை  நேற்று சந்தித்து  பேசிய அவர்   ஆளுநர் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே   இவ்வாறு  தெரிவித்தார்.

இங்கு  அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்;

வடமாகாண  ஆளுநராக பதவியேற்குமாறு   முத்தையா முரளிதரனை கோரியிருந்தேன். ஆனால் அவர்  அதனை ஏற்பதற்கு மறுத்துவிட்டார்.  

ஆளுநராக பதவியேற்பதற்கு தகுதியானவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை.  தற்போது  திருமதி  பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது.

அவர்  விரும்பினால் அதற்கான நியமனம் வழங்கப்படும். வடக்கில் ஆளுநராக கடமையாற்றுவதற்கு   பலரும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.  

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன்  செயற்பட முடியாது. அவர்களின் அழுத்தங்களுக்கு உட்படவேண்டி வரும் என்று  இவர்கள்  அச்சப்படுகின்றார்கள். இதனால்தான் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

https://www.virakesari.lk/article/71199

Image

சிங்கள ஆட்களோட நிறைய கூத்தடிச்சவர். அதால சான்ஸ் உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் மட்டத்தில் கூட்டமைப்பு அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது என்பதை கேட்பதற்கு மகிழ்ச்சி. ஆனால் நம்பும்படியாக இல்லை என்பதுதான் கவலை. உண்மையில் வடக்கின் ஜதார்த்தமான நிர்வாக நிலைமை  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ  சொல்வதற்கு நேர் மாறு.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்க்கு யாரோ ஒருவர் ஆளுனராக உள்ளார். கிழக்குபோல வடக்கிற்க்கும் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது சேதி. சகோதரி சாள்ஸ்  நல்ல நிர்வாகியாக செயல்பட்டால் போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, poet said:

வடக்கிற்க்கு யாரோ ஒருவர் ஆளுனராக உள்ளார். கிழக்குபோல வடக்கிற்க்கும் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது சேதி. சகோதரி சாள்ஸ்  நல்ல நிர்வாகியாக செயல்பட்டால் போதும்.

 பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  மாண்புமிகு எங்கள்   ஐயா அவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.தமிழர் என்ற பெயருடன் சிங்களத்தின் எடுபிடிகளாக வருபவர்களை தான் நாம் எதிர்க்கின்றோம் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

  • தொடங்கியவர்

எமது பல விடயங்களில் தீர்மானங்களை எடுக்க தினறுகிறார் ஜனாதிபதி - சுமந்திரன் 

வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் தினறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது பல விடயங்களில் தினறிக்கொண்டு இருக்கின்றார். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

01.jpg

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,  

வடமாகாண நிர்வாகங்கள் சரியான முறையில் நடைபெற முடியாது முன்னேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது ஆளூநர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முதலில் அவர் ஆளூநர்  ஒருவரை நியமிக்கட்டும். என தெரிவித்தார்.

அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் , கூட்டமைப்பு ஒருவரை பரிந்துரை செய்ததாகவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்ட போதும் , ஜனாதிபதி அவரை ஏற்றுக்கொள்ளாது அவரை நியமிக்க முடியாது எனவும் கூறியதாக இணையங்களில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் கேட்கப்பட்ட போது, 

இணையங்களில் வரும் செய்திகள் தொண்ணூறு வீதமானவை பொய்யானவை ஆனால் இந்த செய்தி நூற்றுக்கு நூறு வீதமும் பொய்யானது. அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/71250

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  மாண்புமிகு எங்கள்   ஐயா அவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.தமிழர் என்ற பெயருடன் சிங்களத்தின் எடுபிடிகளாக வருபவர்களை தான் நாம் எதிர்க்கின்றோம் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

பேரன்புக்குரிய குமாரசாமி, ஆளுனர் வடமாகாண நிர்வாகியாக  அரசினால் நியமிக்கபடுகிறவர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆளுனர் நம் தெரிவல்ல.  அப்படி அரசு நியமனங்களில்  மக்கள் சந்திக்க பேசக்கூடிய நல்ல நிர்வாகி தான் நமக்குள்ள தெரிவு. நம் அரசியல் தேடல்கள் தொடரும் நம் போராட்டம்சார்ந்தது.  வெற்றிபெறுவோம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  மாண்புமிகு எங்கள்   ஐயா அவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.தமிழர் என்ற பெயருடன் சிங்களத்தின் எடுபிடிகளாக வருபவர்களை தான் நாம் எதிர்க்கின்றோம் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

ஏற்கனவே மட்டக்களப்பிலிருந்துதான்  மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அம்மணி போனார் வவுனியாவில் இருந்து வந்தவர் இப்பா ஆளுனர் 

விக்டர் பெரேரா: ஐயையோ... உவர் சிங்கள பொலிஸ்காரர்...எமக்கு வேண்டாம்

டிக்சன் சரச்சந்திர: அச்சச்சோ இவர் தானே ஊவாவிலும் இருந்தவர்... தமிழ் மக்கள் பற்றி அறியாதவர் உவரும் வேண்டாம்

சந்திரசிறி: ஆமிக்காரன்.... வேண்டவே வேண்டாம்

பாலிககார: ஐ நாவில் எமக்கு எதிராக வேலை செய்தவர்.....No way

ரெஜினோல்ட் கூரே: தமிழ் நல்லா தெரிந்த சிங்கள குள்ள நரி....தமிழ் கதைத்தே ஏமாற்றி விடுவார் ..எமக்கு இவரும் கூடாது

சுரேன் ராகவன்: ஆள் தமிழ் என்றாலும் பெளத்தத்தில் டிகிரி முடிச்சவர்.. இவர் எப்படி எமக்கு கவர்னர் ஆகலாம்?

முத்தையா முரளிதரன்: சிங்கள விசுவாசி...தமிழ் என்றாலும் தமிழ் கதைக்க கூச்சப்படுபவர் ..துதிப்பவர்...ஒருக்காலும் கூடாது

சாள்ஸ்: சிங்களவருடன் கூத்தடிச்சவர்...மட்டக்களப்பிலும் சனம் எதிர்த்தது..So, ஒரு நாளும் இவர் வரக் கூடாது

மிஸ்ரர் / மிஸ் எக்ஸ் - ஐயைய்யோ... சிங்கள சனாதிபதியால் நியமிக்கப்படுபவர்....இவரும் எவரும் எமக்கு வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

இவ சிறந்த ஆளுமை மிக்கவர் என்று சொல்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

மட்டக்களப்பிலும் சனம் எதிர்த்தது..So, ஒரு நாளும் இவர் வரக் கூடாது

இலங்கையில் நல்லவர்கள் நல்ல சேவையாளர்களை காண்பது மிக அரிதாக இருக்கிறது வருகிறவர்கள் முழுப்பேரும் சுடுட்டுறவர்கள் என்றால் என்னதான் செய்யலாம் 

அம்மணிக்கு வாழ்த்துக்கள் 

14 minutes ago, ரதி said:

இவ சிறந்த ஆளுமை மிக்கவர் என்று சொல்கிறார்கள் 

திறமையானவர் இரும்பு பெண்மணியென்றும் அழைக்கப்பட்டவர்  சில நேரம் நல்ல சேவையாளர்களும் திறம்பட செய்ய முடியாது சில வேலைகளை அரசியல் தலையீடு இருப்பதால் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் நல்லவர்கள் நல்ல சேவையாளர்களை காண்பது மிக அரிதாக இருக்கிறது வருகிறவர்கள் முழுப்பேரும் சுடுட்டுறவர்கள் என்றால் என்னதான் செய்யலாம் 

அம்மணிக்கு வாழ்த்துக்கள் 

திறமையானவர் இரும்பு பெண்மணியென்றும் அழைக்கப்பட்டவர்  சில நேரம் நல்ல சேவையாளர்களும் திறம்பட செய்ய முடியாது சில வேலைகளை அரசியல் தலையீடு இருப்பதால் 

பெரிய பதவிகளில் இருப்பவர்கள் சில நேரங்களில் சில காரணங்களால் பக்க சார்பாய் நடப்பது உண்டு தான்...மட்டக்களப்பில்  கூட காணி விஷயத்தில்  சாம் தம்பிமுத்துவின் மகளுக்கு சப்போட் பண்ணினார் என்று கேள்விப் பட்டேன் ...ஒரு சில காரணங்களை வைத்து அவரை நிராகரிப்பதற்கு இங்கு மற்றவர்கள் யோக்கியர்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

பெரிய பதவிகளில் இருப்பவர்கள் சில நேரங்களில் சில காரணங்களால் பக்க சார்பாய் நடப்பது உண்டு தான்...மட்டக்களப்பில்  கூட காணி விஷயத்தில்  சாம் தம்பிமுத்துவின் மகளுக்கு சப்போட் பண்ணினார் என்று கேள்விப் பட்டேன் ...ஒரு சில காரணங்களை வைத்து அவரை நிராகரிப்பதற்கு இங்கு மற்றவர்கள் யோக்கியர்கள் இல்லை 

காணி விடயங்கள்தான் அம்மணிக்கு பாரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது 

  • தொடங்கியவர்
9 hours ago, ampanai said:

இணையங்களில் வரும் செய்திகள் தொண்ணூறு வீதமானவை பொய்யானவை ஆனால் இந்த செய்தி நூற்றுக்கு நூறு வீதமும் பொய்யானது. அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என தெரிவித்தார்

அட, யாழில் 90% பொய்களைத்தான் நாமும் அலசுகிறோம் 😜

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெடுவது தமிழர்களின் வாடிக்கை. இவரையும் நம்பிக் கெட வேண்டியான். 

  • கருத்துக்கள உறவுகள்

Quote

எமது பல விடயங்களில் தீர்மானங்களை எடுக்க தினறுகிறார் ஜனாதிபதி - சுமந்திரன் 

80443218_2821863434503175_13239698742501

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.