Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில் ; சிங்களம் முதல் இடத்தில்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத பேய்களை கண்டு வேட்டியை நனைத்த விமல் வீரவங்ஸ..! மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில், சிங்களம் முதலாமிடத்தில்.!

FB_IMG_1579543499936.jpg

மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ஸ திறந்துவைத்த தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி 1ம் இடத்தில் இருந்த நிலையில் சிங்கள இனவாதிகளின் கூச்சலினால் இனவாத அமைச்சரின் உத்தரவையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கிற தர்க்கம் பேசப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் மேற்படி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சிறு வணிக அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு பனந்தும்பு உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

அதில் அரச முயற்சி நிறுவனத்தின் பெயர் முதலில் தமிழிலும் அதற்கடுத்து சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த பெயர் பலகை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/15512

இதில் ஏதும் பெரிய தவறு இருப்பதாக தெரியவில்லை। இதனால் மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்படுமாக இருந்தால் இதை பெரிய விடயமாக கருதலாம்। எனவே இதை பெரிது படுத்த தேவை இல்லை। படித்த பண்புள்ள தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் அதிமேதகு செல்வம் அடைக்கலம் அதனை பார்த்துக்கொள்வார்। 

2 hours ago, Vankalayan said:

வங்காலையான் சுவிற்சர்லாந்தில் மூன்று அரசகரும மொழிகள் உண்டு. ஒரு பிரதேசத்தில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்களோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்க‍ப்படுகிறது. ஒடும் ரயிலில்  கூட அந்த ரயில் எந்த மொழி பேசும் மக்களின் பிரதேச மூடாக பயணம் செய்கிறதோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்கப்படும். உதாரணமாக  சூரிச் தொடரூந்து நிலையத்தில் இருந்து  ஜெனீவா செல்லும் தொடரூந்தில் அது புறப்படும் போது ஜேர்மன் மொழியில் முதலில் அறிவுப்பு செய்யபடும். அந்த தொடரூந்து ஃபிறிபேர்க் (Freiburg) ஐ தாண்டுகிறதோ உடனே பிரெஞ்ச் மொழி முதலிடத்திற்கு வந்து விடும். ஆகவே இதில் பெரிய தவறு இருப்பதாக தெரிய வில்லை என்று நீங்கள் கூறியது நியாயம் என்று எனக்கு படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

ஒடும் ரயிலில்  கூட அந்த ரயில் எந்த மொழி பேசும் மக்களின் பிரதேச மூடாக பயணம் செய்கிறதோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்கப்படும்.

14 minutes ago, tulpen said:

ஜெனீவா செல்லும் தொடரூந்தில் அது புறப்படும் போது ஜேர்மன் மொழியில் முதலில் அறிவுப்பு செய்யபடும். அந்த தொடரூந்து ஃபிறிபேர்க் (Freiburg) ஐ தாண்டுகிறதோ உடனே பிரெஞ்ச் மொழி முதலிடத்திற்கு வந்து விடும்.

மன்னாரில் உள்ள மக்கள் எந்தமொழி பேசுகிறார்கள்......? தமிழா, சிங்களமா, ஆங்கிலமா அன்றி அரபுமொழியா...??

3 minutes ago, Paanch said:

மன்னாரில் உள்ள மக்கள் எந்தமொழி பேசுகிறார்கள்......? தமிழா, சிங்களமா, ஆங்கிலமா அன்றி அரபுமொழியா...??

தமிழ் மொழி. ஆகவே தான் அங்கு தமிழ் முதலிடத்தில் இருப்பதே நியாயம் என்றே கூறினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வங்காலையான் சுவிற்சர்லாந்தில் மூன்று அரசகரும மொழிகள் உண்டு. ஒரு பிரதேசத்தில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்களோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்க‍ப்படுகிறது. ஒடும் ரயிலில்  கூட அந்த ரயில் எந்த மொழி பேசும் மக்களின் பிரதேச மூடாக பயணம் செய்கிறதோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்கப்படும். உதாரணமாக  சூரிச் தொடரூந்து நிலையத்தில் இருந்து  ஜெனீவா செல்லும் தொடரூந்தில் அது புறப்படும் போது ஜேர்மன் மொழியில் முதலில் அறிவுப்பு செய்யபடும். அந்த தொடரூந்து ஃபிறிபேர்க் (Freiburg) ஐ தாண்டுகிறதோ உடனே பிரெஞ்ச் மொழி முதலிடத்திற்கு வந்து விடும். ஆகவே இதில் பெரிய தவறு இருப்பதாக தெரிய வில்லை என்று நீங்கள் கூறியது நியாயம் என்று எனக்கு படவில்லை. 

சுவிட்சர்லாந்தை சிறீலங்கா வுடன் ஒப்பிடுவது சரியா??

  • கருத்துக்கள உறவுகள்

40 வருடங்களுக்கு முன் மன்னாரில் உயிலங்குலம் என்னும் ஒரு இடத்திற்கு சென்ற ஞாபகம் உண்டு. அப்பொழுது அங்கு தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள். பீலி தண்ணீரில் அள்ளி குளித்தேன், டிரக்டரில் ஏறி சென்றேன். இரவில் லைட் இருக்காது. எங்கும் மண்தரை. 6 மணிக்கு பிறகு எல்லோரும் முற்றத்தில் உட்கார்ந்து கதைத்து கொண்டிருப்பார்கள். அருமையான மக்கள். இந்து / கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இப்பொழுது முஸ்லீம்கள் அதிகம். மதவாத கூட்டங்கள் எல்லாவற்றையும் அபகரித்து கொண்டர்கள்.பலர் மதமாற்ப்ப்ட்டுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

7-A1817-ED-E25-C-4-E7-F-A30-A-34261-BE0-

2 hours ago, விசுகு said:

சுவிட்சர்லாந்தை சிறீலங்கா வுடன் ஒப்பிடுவது சரியா??

இரு நாட்டிலும் மனிதர்கள் தான் வாழுகின்றனர், இரண்டுமே ஜனநாயக நாடுகள்  என்ற எடுகோளின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்து அது. ஆனால் இதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். 

Edited by tulpen

நல்லவர்கள் வேடம் போட்டு அரசியல் நடத்தும் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் சுயரூபத்தினை வெளிப்படுத்தும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற விமல் வீரவன்ச, ஒரு முட்டாள் இனவாதி –

January 21, 2020

sinhala.-wimal-vs-mano.jpg?resize=750%2C

வட மாகாணத்தின் மன்னார் செல்வாரியில் அமைந்துள்ள பனை உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர் பலகையை திறந்து வைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பலகையில் முதலில் இருந்த தமிழ் மொழி எழுத்துகளை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதன்படி இப்போது தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்பலகை மாற்றப்பட்டு, தற்போது சிங்களத்தில் முதலில் எழுதப்பட்ட மும்மொழி பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னை அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என  மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியுள்ளார் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பல இன, மொழி, மத பன்மைத்துவத்தை சிதைத்து, இந்நாட்டை மீண்டும் பின்னோக்கி 1950களின் ‘சிங்களம் மட்டும்’ என்ற இருண்ட யுகத்துக்கு அழைத்து செல்வதில் விமல் வீரவன்ச முன்னணி வகிக்கின்றார்.

இந்நாட்டில் சமூக, பொருளாதார சீரமைப்பு மற்றும் ஒழுக்கம் என்று பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காட்டிக்கொண்டாலும், இந்நாட்டின் பன்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இவை அனைத்தும் எந்தவித பயனையும் தராது.

இந்த அரசாங்கத்தில் இடம்பெறும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அமைச்சர்களான அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கு, இது தெரியவில்லையா? தமது அமைச்சரவை சகா விமல் வீரவன்சவின் இனவாத நடவடிக்கைகள் பற்றி விளங்கவில்லையா?

நான் எனது அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த வேளையில், எமது அரசு தவறு விடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசுக்குள் இருந்தபடி அமைச்சரவையிலும், கட்சி தலைவர்கள் கூட்டங்களிலும் உரக்க குரல் எழுப்பி, ஜனநாயகரீதியாக மோதி என்னால் இயன்றதை செய்திருக்கிறேன் என்பதை இந்நாட்டு தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இதுவும் இந்த அரசில் வடக்கையும், மலையகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த தமிழ் அமைச்சர்களுக்கு தெரியாதா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் வினா எழுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்ட செல்வாரியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை நிறுவனம் ஒன்றின் மும்மொழி பெயர்பலகையில் தமிழ் மொழியை தரவிறக்கம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி தனது முகநூல் மற்றும் டுவீட்டர் தளங்களில் கருத்து கூறியுள்ள முன்னாள், தேசிய ஒருமைப்பாடு, மொழி விவகார, சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

விமல் வீரவன்ச, தனது இந்த நடவடிக்கை மூலம் தமிழர்களை இலங்கை தேசிய வாழ்வில் இருந்து ஒதுக்கி வைக்கிறார். தாம் சிங்கள மேலாண்மை ஆக்கிரமிப்பின் கீழேயே வாழ்கிறோம் என்ற எண்ணப்பாட்டை தமிழர்களுக்கு இவர் தருகிறார்.

நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டுக்கு மேல் தமிழ் பேசும் இலங்கையர்கள் வாழும் மன்னாரில், அரச நிறுவன பெயர் பலகையில் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்பது ஆக்கிரமிப்பு, மேலாண்மை சிந்தனை என்பதை தவிர வேறு என்ன?

மறுபுறம் விமல் வீரவன்ச என்ற இந்த அமைச்சருக்கு சட்டம் தெரியவில்லை. அரசியலமைப்பின் 18ம் 19ம் விதிகளின் படி சிங்களமும், தமிழும் இந்நாட்டின் அரசகரும மற்றும் தேசிய மொழிகள் என கூறப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் சிங்களம், தமிழை விட உயர்ந்தது என கூறப்படவில்லை.

அதேவேளை 22ம் விதியின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக பதிவேடுகள் தமிழிலும், ஏனைய மாகாணங்களில் சிங்களத்திலும் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுக்க பெயர்பலகைகளில் சிங்களத்தில்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் எங்கே இருக்கிறது? அப்படி ஒரு சட்டம் இல்லை. இந்த துறைசார்ந்த முன்னாள் அமைச்சர் என்ற முறையில் எனக்கு இது நன்கு தெரியும்.

இப்படி பெயர் பலகைகளில் சிங்கள மொழியை முன்னிலை படுத்தும் ஒரு சட்டம் இருப்பதாக, விமல் வீரவன்சவோ அல்லது அவரது அரசாங்கத்தில் இடம்பெறும், தமிழ் தெரிந்த அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உட்பட எந்தவொரு அமைச்சரோ எனக்கு சுட்டிக்காட்டுவார்களாயின், அரசியலில் இருந்து நான் ஒதுங்கி விடுகிறேன்.

உண்மையில் அரசியலமைப்பு முன்வைக்கும் சட்ட உள்ளார்த்தத்தை மீறியதன் மூலம், அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னை நாட்டின் அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என அடையாளம் காட்டியுள்ளார்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
http://globaltamilnews.net/2020/136391/

  • கருத்துக்கள உறவுகள்

சரி வடமாகாணத்தில் உள்ள புகையிரதநிலையங்களில் சிங்ளத்தில்த் தானே முதலில் எழுதப்பட்டுள்ளது.

இதை இதுவரை யாரும் கண்டதாக தெரியவில்லையே!

ஊர்களின் பெயர்களும் அப்படியே தொடர்கிறது.

விரைவில் இந்த பலகை அகற்றப்பட்டு தமிழுக்கு உரிய முதல் இடம் கொடுக்க வேண்டும்.

14 hours ago, colomban said:

40 வருடங்களுக்கு முன் மன்னாரில் உயிலங்குலம் என்னும் ஒரு இடத்திற்கு சென்ற ஞாபகம் உண்டு. அப்பொழுது அங்கு தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள். பீலி தண்ணீரில் அள்ளி குளித்தேன், டிரக்டரில் ஏறி சென்றேன். இரவில் லைட் இருக்காது. எங்கும் மண்தரை. 6 மணிக்கு பிறகு எல்லோரும் முற்றத்தில் உட்கார்ந்து கதைத்து கொண்டிருப்பார்கள். அருமையான மக்கள். இந்து / கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இப்பொழுது முஸ்லீம்கள் அதிகம். மதவாத கூட்டங்கள் எல்லாவற்றையும் அபகரித்து கொண்டர்கள்.பலர் மதமாற்ப்ப்ட்டுள்ளார்கள்

நீங்கள்  என்ன சொல்ல வருகிறீர்கள்।  அங்கு முஸ்லிம்கள் அரபும் , மதம் மாற்றப்படடவர்கள் (உதாரணத்துக்கு கிறிஸ்தவர்களாக ) ஆங்கிலமும் பேசுகிறார்களா।

மன்னாரில் இந்து மக்கள் 5 % , முஸ்லிம்கள் 30 % , கத்தோலிக்கர் , கிறிஸ்தவர்கள் 65 %। இப்போது சிறிய மாற்றங்கள் ஏட்பட்டிருக்கலாம்।

அங்குள்ள மக்களின் முயட்சியால் இப்போது மின்சாரம், பாதைகள், தண்ணீர் திட்ட்ங்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் செய்யப்பட்டுள்ளது। அங்குள்ள மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்।

14 hours ago, விசுகு said:

சுவிட்சர்லாந்தை சிறீலங்கா வுடன் ஒப்பிடுவது சரியா??

சரியாக சொன்னீர்கள்। ஏன் இந்தியா, மலேசிய , சிங்கப்பூருடன் ஒப்பிடவில்லை। அங்கும் தமிழர்கள் இருக்கிறர்கள்தானே। மேலும் ஊர்களின் பெயர்களில் எல்லாம் சிங்களம்தான் வட கிழக்கில் முதலில் இருக்கிறது। விமல் எனும் முடடாள் இனவாதியாக இருப்பதட்காக நாங்களும் இனவாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ।

ஒரு பிட்பொக்கற் பேர்வழிக்கு அறிவுரை கூறும் போது பக்கத்து தெருவில் உள்ள வழிப்பறித்திருடனை  முன்மதிரியாக கொள் என்று அறிவுரை செய்வதில்லை. அதனால் தான் இந்தியாவை ஒப்பிடவில்லை. உண்மையான இன நல்லிணக்கத்தை சிறிப்பாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட நாடான சுவிற்சர்லாந்தை முன்மாதிரியாக காட்டினேன். இல்லை நம்ம ரேன்சுக்கு வழிப்பறித்திருடன் தான் முன்மாதிரி என்று வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை.  

Edited by tulpen

59 minutes ago, tulpen said:

 நாமே பிச்சை எடுக்குற நாடு। அதுக்குள்ளே ஸ்சுவிட்சலாந்தெல்லாம் முன்னுதாரணத்துக்கு எடுக்கலாமா? பிச்சைக்காரன் பிச்சைக்காரன் ரேஞ்சிலதான் யோசிக்கணும்। நாம் அங்கு இருக்கிறபடியால் அந்த  நாடடைபோல யோசிக்க முடியாது ------------------------ மேலும் எழுத விரும்பவில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிய விமல் வீரவன்ச – மனோ கணேசன் காட்டம்

Sign-board-in-Mannar.jpg
புதிய பெயர்ப்பலகை

மன்னார் பனை அபிவிருத்திச் சபையின் பெயர்ப்பலகையில் முதலாம் இடத்திலிருந்த தமிழை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டு சிங்களத்துக்கு முதலிடம் கொடுத்த அமைச்சர் விமல் வீரவன்சவின் செயலை மிகவும் வன்மையாகச் சாடியுள்ளார் மனோ கணேசன்.

சிங்களத்தை முதலிடத்தில் பொறித்த புதிய பெயர்ப்பலகை ஒன்றை நிறுவுவதற்கு அவர் கொடுத்த உத்தரவின்பேரில் தற்போது அது நிறுவப்பட்டுள்ளது.

download-3.jpg
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்

பெயர்ப்பலகையில் இருந்த தவறு இப்போது திருத்தப்பட்டுவிட்டதாக அவர் தனது முகனூலில் பதிவும் இட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் தேசிய இன ஒற்றுமை அமைச்சர் மனோ கணேசன் தனது ருவீட்டரில், “வீரவன்ச தமிழ்ச் சமூகத்தை அன்னியப்படுத்தும் வகையிலும், ‘சிங்கள ஒடுக்குமுறைக்குள் வாழும்’ உணர்வினைத் தமிழர் கொண்டிருக்கும் வகையிலும் நடந்து கொள்கிறார் என மிகவும் வன்மையாகச் சாடியுள்ளார். அத்தோடு, இந்த அமைச்சர் இப்படியாகத் தனது தேசிய மேலாண்மையைக் காட்டுவதற்கு சட்டமும் இடம் கொடுக்கவில்லை எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 18 வது, 19 வது கட்டளைகளின் பிரகாரம், சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ, தேசிய மொழிகள் எனவும், சிங்கள மொழிக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டுமென ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசியலமைப்பின் 22 வது கட்டளையின் பிரகாரம் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மட்டுமே பொதுப் பதிவுகள் சிங்களத்தில் இருக்கவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://marumoli.com/தமிழை-இரண்டாம்-இடத்துக்க/?fbclid=IwAR28IViIu6l-y46LtakfpqnWWSOtIuB-pJLg-xMk1wO1ON2i2DYEyTEFpTc

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2020 at 9:07 AM, Vankalayan said:

 நாமே பிச்சை எடுக்குற நாடு। அதுக்குள்ளே ஸ்சுவிட்சலாந்தெல்லாம் முன்னுதாரணத்துக்கு எடுக்கலாமா? பிச்சைக்காரன் பிச்சைக்காரன் ரேஞ்சிலதான் யோசிக்கணும்।

உங்களது இந்த கருத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடும் இல்லை.

On 1/21/2020 at 10:02 AM, Vankalayan said:

இதில் ஏதும் பெரிய தவறு இருப்பதாக தெரியவில்லை। இதனால் மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்படுமாக இருந்தால் இதை பெரிய விடயமாக கருதலாம்। எனவே இதை பெரிது படுத்த தேவை இல்லை।

இந்த உங்களது கருத்து சரியானது 👍. தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழியிலும் இருக்கிறது தானே தமிழ் மொழியில் இல்லாவிட்டால் தான் -  இந்தியா மாதிரி கிந்தியில் மட்டும் இருந்தால் பெரிய விடயமாக எடுக்கலாம்.

On 1/21/2020 at 12:19 PM, tulpen said:

வங்காலையான் சுவிற்சர்லாந்தில் மூன்று அரசகரும மொழிகள் உண்டு. ஒரு பிரதேசத்தில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்களோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்க‍ப்படுகிறது. ஒடும் ரயிலில்  கூட அந்த ரயில் எந்த மொழி பேசும் மக்களின் பிரதேச மூடாக பயணம் செய்கிறதோ அந்த மொழிக்கு முதலிடம் வழங்கப்படும். உதாரணமாக  சூரிச் தொடரூந்து நிலையத்தில் இருந்து  ஜெனீவா செல்லும் தொடரூந்தில் அது புறப்படும் போது ஜேர்மன் மொழியில் முதலில் அறிவுப்பு செய்யபடும். அந்த தொடரூந்து ஃபிறிபேர்க் (Freiburg) ஐ தாண்டுகிறதோ உடனே பிரெஞ்ச் மொழி முதலிடத்திற்கு வந்து விடும்.

ஒரு மிகவும் வளர்ச்சி அடைந்த சுவிச்சலண்டு நாட்டில்  அந்த நாட்டு பயண அறிவிப்பு தனது மொழில் தான் முதலில் வர வேண்டும் என்று விரும்புகிற விமல் வீரவன்சவும், மனோ கணேசனும் அங்கே  இருக்கிறார்கள் என்பதும் அவர்களை  மகிழ்விப்பதற்காக சுவிச்சலண்டு நடந்து கொள்வதும்  விசித்திரம்.

வருத்தம்.

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு மிகவும் வளர்ச்சி அடைந்த சுவிச்சலண்டு நாட்டில்  அந்த நாட்டு பயண அறிவிப்பு தனது மொழில் தான் முதலில் வர வேண்டும் என்று விரும்புகிற விமல் வீரவன்சவும், மனோ கணேசனும் அங்கே  இருக்கிறார்கள் என்பதும் அவர்களை  மகிழ்விப்பதற்காக சுவிச்சலண்டு நடந்து கொள்வதும்  விசித்திரம்.

வருத்தம்.

விளங்க நினைப்பவன் நான் என்ன கருத்தை சோல்லி உள்ளேன் என்பதை நீங்கள்  விளங்க விளங்க நினைக்காதது மட்டுமல்ல  அதற்கு முயற்சிக்காதது ஆச்சரியம் தான். சுவிற்சர்லாந்து இப்போது உள்ளது போல் வளர்சசி அடைந்த நாடாகவே பிறப்பெடுக்கவில்லை. தம் நாட்டில் வாழும் பல தேசிய இனக்களின் உரிமையை அங்கீகரித்து  அனைவருக்கும் சம கெளரவம் கொடுக்கும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சிறந்த அரசியலமைப்பை உருவாக்கி அதை திறம்பட அமுல்படுத்தி தனது நாட்டை வளர்சியடைய செய்தது. ஒரு கிராம சபையின் அதிகாரத்தில் கூட ஜனாதிபதி கூட தலையீடு செய்ய முடியாது. அந்தளவுக்கு ஒரு சிறிய கிராம மக்களின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுப்பது மனித நாகரீகம். ஜேர்மன் மொழி மாநிலத்தில் ஜேர்மனிக்கும், பிரெஞ்சு மொழி மாநிலத்தில் பெரெஞ்சுக்கும், இத்தாலி மொழி மாநிலத்தில் இத்தாலிக்கும் முதலிடம் கொடுப்பது மனித மாண்பு. இதை விமல் வீரவம்ச மனநிலை என்று எப்படி அபத்தமாக  வரையறுக்கின்றீர்கள் என்பதை விளங்க நினைத்தாலும் என்னால் அது முடியவில்லை. 

Edited by tulpen

17 hours ago, tulpen said:

நீங்கள் சொல்வது உண்மைதான்। அவர்கள் வளர்ச்சியடைந்த விளங்கிக்கொள்கின்ற மனப்பக்குவமுடைய மக்களை கொண்ட நாடு। ஸ்ரீ லங்கா இன்னும் அந்த இடத்துக்கு வரவில்லை। இனவாதம் பேசினால்தான் இங்கு எடுபடும்। கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்களால்தான் தான் தெரிவு செய்யப்பட்ட்தாக கோத்த கூறினார்। அதுதான் உண்மையுயம் கூட। அவர்களின் மன நிலையை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்। எனவே தமிழர் பகுதிகளில் முழுமையாக தமிழுக்கு முதலிடம் கொடுப்பது அவர்களுக்கு இன்னும் பிரச்சினையாக இருக்கிறது। இப்போது இருக்கும் அரசு தமிழுக்கு இரண்டாவது இடம் கொடுத்ததே பெரிய காரியம்। 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

விளங்க நினைப்பவன் நான் என்ன கருத்தை சோல்லி உள்ளேன் என்பதை நீங்கள்  விளங்க விளங்க நினைக்காதது மட்டுமல்ல  அதற்கு முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.

நான் உங்கள் கருத்தை குறைசொல்லவில்லை. நீங்கள் சொன்ன சுவிச்சலண்டு நாட்டை பற்றிய தகவல்களில் தனது மொழில் தான் முதலில் அறிவிப்பு வர வேண்டும் என்று நிற்கிற விமல் வீரவன்சவும் மனோ கணேசனும் அங்கேயும்  இருக்கிறார்கள் என்பதே எனது வியப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.