Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு

image_d0ea337276.jpg-க. அகரன்

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்.

பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் குறித்த நபரை ஓட்டோ ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல்கள் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்துக்கு முன்பாக சற்றுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்க ஒன்றுகூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வன்னி/மரம-உறபப-கடடய-இரணவ-வரரகக-நயபபடபப/72-244462

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மர்ம உறுப்பு என்று ஏன் சொல்கின்றார்கள்? யாராவது விளக்கம் தருவீர்களா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

மர்ம உறுப்பு என்று ஏன் சொல்கின்றார்கள்? யாராவது விளக்கம் தருவீர்களா? 😎

உங்களைப் போல் எனக்கும்  இதே கேள்வி இருக்கிறது கும்ஸ். 

கோயிலில் எல்லாம் மறைத்து வைக்காமல்தான்  (சிவ) லிங்கத்தை வைத்திருக்கிறார்கள்.  இங்கே எங்கே மர்மம் இருக்கிறது என்று  எனக்கும் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நையப்புடை என்பது இதுதானோ 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மர்ம உறுப்பு என்று ஏன் சொல்கின்றார்கள்? யாராவது விளக்கம் தருவீர்களா? 😎

இந்த தலைப்பை பார்தவுடன் எனக்கும் இந்த கேள்வி வந்தது. பார்த்தால் நீங்கள் முந்திவிட்டீர்கள் 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kavi arunasalam said:

உங்களைப் போல் எனக்கும்  இதே கேள்வி இருக்கிறது கும்ஸ். 

கோயிலில் எல்லாம் மறைத்து வைக்காமல்தான்  (சிவ) லிங்கத்தை வைத்திருக்கிறார்கள்.  இங்கே எங்கே மர்மம் இருக்கிறது என்று  எனக்கும் தெரியவில்லை

அது மட்டுமல்ல ஆண் பெண் பாகுபாடின்றி  இயற்கையான சிவலிங்கத்தை தொட்டு  பூஜிக்கின்றார்கள்.

4 hours ago, குமாரசாமி said:

மர்ம உறுப்பு என்று ஏன் சொல்கின்றார்கள்? யாராவது விளக்கம் தருவீர்களா? 😎

ஏனென்றால்...... அனேகமான நேரங்களில் அது இருக்கிறதே தெரியாமல் சிவனே.. என்று பேசாமல்  மர்மமாக இருக்கும்... ஆனால் விழிச்சுக் கொண்டால் படம் எடுத்து ஆடி தன் இருப்பை உறுதி செய்யும் என்பதால்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மர்ம உறுப்பு என்று ஏன் சொல்கின்றார்கள்? யாராவது விளக்கம் தருவீர்களா? 😎

அடுத்ததடவை நீங்கள் இலங்கைக்குப் போகும்போது சொல்லுங்கள் நானும் கூடவருகிறேன், வந்து உங்களை வவுனியா நொச்சிமோட்டைப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன் அங்கு உங்களுக்கு ஒரு வீரனுக்குரிய மரியாதை தந்து விளக்கமும் தருவார்கள் பெற்றுக்கொள்ளலாம்.  

NTLRG_20170826100943105175.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில்  எவ்வளவு செல்லமாக "குஞ்சா மணி" என்று பெயர் இருக்க 
சும்மா போய் அதை "மர்ம உறுப்பு ", "மறைந்த பருப்பு" என்று சொல்வதை எல்லாம் 
நான் வன்மையாக கண்டிக்கிறேன்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தமிழில்  எவ்வளவு செல்லமாக "குஞ்சா மணி" என்று பெயர் இருக்க 
சும்மா போய் அதை "மர்ம உறுப்பு ", "மறைந்த பருப்பு" என்று சொல்வதை எல்லாம் 
நான் வன்மையாக கண்டிக்கிறேன்  

குஞ்சா மணி என்பது ஊர்களில் தடைசெய்யப்பட்ட சொல் அல்லவா?

Edited by குமாரசாமி
முதல் எழுதிய கருத்திற்கு பல்வேறுபட்ட விமர்சனங்கள் தனிமடலில் வந்ததால் நீக்கப்பட்டு வேறு கருத்து இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மர்ம உறுப்பு என்பது private parts என்பதன் தமிழாக்கம். மர்மத்துக்கு என்ன அர்த்தம்? ரகசியம்/மறைபொருள் என்பதுதானே? இதன் இன்னொரு அர்த்தம் privacy.

என்னதான் வெக்கை என்றாலும் மேலாடையை து(தி)றந்தாலும் கீழாடையை, அரையில் ஒரு துணியாவது இருக்கும்படி பார்துக்கொள்கிறோம் அல்லவா?

ஏன்? ஏன்றால் அந்த பகுதியின் நீள, அகல, கன பரிமாணங்கள் என்ன என்பது எமக்கும், எமக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரிந்த “மர்மங்கள்”. 

இவை மர்மங்களாக இருக்க வேண்டும் என்பது எதோ ஒரு கட்டத்தில் எல்லா மனிதநாகரீகங்களும் எடுத்த முடிவு (சில பழங்குடிகளுக்கு இவை இன்றும் மறைபொருள்/மர்மம் இல்லை).

எனவேதான் இனப்பெருக்க உறுப்புகளை மஎனும் மர்ம உறுப்பு என்கிறோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தி ஊடகம் வரைக்கும் பரபரப்பானதால் அந்த பெண்ணை தெரிந்தவர்கள் எந்தக்கோணத்தில் பார்ப்பார்கள்? 
நக்கல் நையாண்டிகள் உட்பட......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மர்ம உறுப்பு என்பது private parts என்பதன் தமிழாக்கம். மர்மத்துக்கு என்ன அர்த்தம்? ரகசியம்/மறைபொருள் என்பதுதானே? இதன் இன்னொரு அர்த்தம் privacy.

என்னதான் வெக்கை என்றாலும் மேலாடையை து(தி)றந்தாலும் கீழாடையை, அரையில் ஒரு துணியாவது இருக்கும்படி பார்துக்கொள்கிறோம் அல்லவா?

ஏன்? ஏன்றால் அந்த பகுதியின் நீள, அகல, கன பரிமாணங்கள் என்ன என்பது எமக்கும், எமக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரிந்த “மர்மங்கள்”. 

இவை மர்மங்களாக இருக்க வேண்டும் என்பது எதோ ஒரு கட்டத்தில் எல்லா மனிதநாகரீகங்களும் எடுத்த முடிவு (சில பழங்குடிகளுக்கு இவை இன்றும் மறைபொருள்/மர்மம் இல்லை).

எனவேதான் இனப்பெருக்க உறுப்புகளை மஎனும் மர்ம உறுப்பு என்கிறோம். 

நீங்கள் குறிப்பிடுவது பால்ய பருவம் அடைந்த பின்னர் என நினைக்கிறேன். ஆனால் குழந்தைகளது பிறப்புறுப்புக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே. குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடும் பெற்றோர்களும் இருக்கின்றனர். ஆனால் காமமோ கூச்சமோ பெற்றோருக்கு இருப்பதில்லையல்லவா ? அவர்கள் முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும் இருக்கும். 

பலமுறை முயற்சித்திருக்கிறேன். எனக்கு ஏனென்று புரிவதேயில்லை 🤔

1 hour ago, குமாரசாமி said:

இந்த செய்தி ஊடகம் வரைக்கும் பரபரப்பானதால் அந்த பெண்ணை தெரிந்தவர்கள் எந்தக்கோணத்தில் பார்ப்பார்கள்? 

செங்கோணத்தில் பார்ப்பார்கள் என்டு நினைக்கிறன். 😎

Just now, Kapithan said:

பலமுறை முயற்சித்திருக்கிறேன். எனக்கு ஏனென்று புரிவதேயில்லை 🤔

நீங்க ஒரு மர்மமான ஆள் தான்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Rajesh said:

செங்கோணத்தில் பார்ப்பார்கள் என்டு நினைக்கிறன். 😎

நீங்க ஒரு மர்மமான ஆள் தான்! 😂

உண்மைதான். எல்லாமே மர்மமாகத்தான் இருக்கிறது. 😀

(நீங்கள் அவதானிக்கவில்லையா ?)

2 hours ago, குமாரசாமி said:

இந்த செய்தி ஊடகம் வரைக்கும் பரபரப்பானதால் அந்த பெண்ணை தெரிந்தவர்கள் எந்தக்கோணத்தில் பார்ப்பார்கள்? 
நக்கல் நையாண்டிகள் உட்பட......

தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்கின்ற கோபமோ ?😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, Kapithan said:

உண்மைதான். எல்லாமே மர்மமாகத்தான் இருக்கிறது. 😀

(நீங்கள் அவதானிக்கவில்லையா ?)

தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்கின்ற கோபமோ ?😉

.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியாவில் பேருந்தில் பயணம் செய்த இராணுவத்தினர் ஒருவர் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்தபோது தனது காற்சட்டை முன்பக்கத்தை கழற்றி அந்தரங்க உறுப்பை வெளியில் தெரியும்படி காட்டிக்கொண்டு இருந்ததாக அவர் இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஓர் பெண் கூறக்கேட்டு உள்ளேன். பேருந்தில் இப்படியான சம்பவங்கள் வழமையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கலைஞன் said:

இது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா ?

வேறுபகுதி என்றால் மர்ம உறுப்பே இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

வேறுபகுதி என்றால் மர்ம உறுப்பே இருக்காது.

இதிலேயும் மர்மமா ? 

12 hours ago, குமாரசாமி said:

குஞ்சா மணி என்பது ஊர்களில் தடைசெய்யப்பட்ட சொல் அல்லவா?

13 hours ago, Sasi_varnam said:

தமிழில்  எவ்வளவு செல்லமாக "குஞ்சா மணி" என்று பெயர் இருக்க 
சும்மா போய் அதை "மர்ம உறுப்பு ", "மறைந்த பருப்பு" என்று சொல்வதை எல்லாம் 
நான் வன்மையாக கண்டிக்கிறேன்  

இதட்கு சரியான மொழி பெயர்ப்பு அசம்பி என்று இருக்கிறது। பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்களில் ஆறுமுகநாவலர் மிகவும் முக்கியமானவர்। அவர் அங்கு அசம்பி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்। 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Vankalayan said:

இதட்கு சரியான மொழி பெயர்ப்பு அசம்பி என்று இருக்கிறது। பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்களில் ஆறுமுகநாவலர் மிகவும் முக்கியமானவர்। அவர் அங்கு அசம்பி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்। 

அசம்பி என்றால் உடம்பு என்றல்லவா இருக்கின்றது.

https://tamilromanisedbible.blogspot.com/2017/04/wordsnmeaning.html

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இது தமிழர் பகுதிகளில் மட்டும் இடம்பெறுகிறதா அல்லது வேறு பகுதிகளிலும் நடக்கின்றனவா ?

இது ஒரு வகை மனநோய். எல்லாபகுதிகளிலும் நோயாளர் உளர். இப்போ இப்படி செய்து, அதை பார்ப்பவரின் முக மாற்றத்தை ( விருப்பு/வெறுப்பு) மறைத்து வைத்த கமமெராவில் படம்பிடித்து சைடில் தரவேற்றம் செய்யும் கேசுகள் எல்லாம் கூட உண்டு.

கொழும்பில் கடற்கரொயோரம் இப்படியானவர்களை காணலாம். ஒருவர் அலுவலுக உடையில் இருப்பார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

இதட்கு சரியான மொழி பெயர்ப்பு அசம்பி என்று இருக்கிறது। பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்களில் ஆறுமுகநாவலர் மிகவும் முக்கியமானவர்। அவர் அங்கு அசம்பி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்। 

23 minutes ago, குமாரசாமி said:

அசம்பி என்றால் உடம்பு என்றல்லவா இருக்கின்றது.

https://tamilromanisedbible.blogspot.com/2017/04/wordsnmeaning.html

ஆண்/பெண் உறுப்பு/குறி என இலகு தமிழில் இருக்க ஏன் வேறு வாயில் நுழைய முடியா (!) வார்த்தைகளை தேடுறியள்.

நாவலர் பாவிச்ச பல சொற்கள் தமிழ் இல்லை. வட சொற்கள்.

தந்தை, மகன், தூய உயிர் என்பதை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்றும் தூய மரியே என்பது அர்ச்யசிஷ்ய என்றும் மொழி பெயர்த்ததில் இருந்து காணலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.