Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதை அனேகமாக ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்புதான் எம்மவர்களையும் ஆட்கொண்டதாக அறியமுடிகிறது. ஆனாலும் அங்கு பகிடி இருந்தது வதையும் இருந்தது, பாலியல் பெரிதாக பாதிப்படையவில்லை. அப்படியும் அதற்குள் ஈடுபட்ட ஒருசிலர் பாலியலைப் பேச்சிலும் வெளித்தெரியாத உள்ளுணர்விலும் அடக்கிக்கொண்டதாகவே பல்கலைக்கழகம் சென்ற அன்றைய சில மாணவர்களுடன் கதைக்கும்போது அறியமுடிந்தது. இன்று பகிடிவதை பாலியல்வதை அளவிற்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் மாணவர்கள் மட்டுமல்ல, அரசும் பிரதான காரணமாகும். இன்றைய அரசின் காவற்படையில் பெருமளவு காவாலிகளும் இணைக்கப்பட்டுள்ளனர், அதில் அதிகமானோர் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கடமை புரிகின்றனர். இவர்கள் குற்றச் செயல்கள் புரிவோருக்கு ஆதரவாக உதவிபுரிந்து அதனால் பொருளீட்டிக் கொள்வதை மக்கள் அறிந்தாலும், எதுவும் செய்யமுடியாத கையறுநிலையிலேயே உள்ளனர். இந்த நிலமையும் தமிழ் இளைஞர்கள் பயமோ, தயக்கமோ இன்றி விரும்பியவாறு தப்பான வழிகளில் செல்வதற்கு உதவிநிற்கிறது.

  • Replies 65
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஜெயபாலன் அண்ணா....  உங்களின் மலரும் நினைவுகளுக்கு, நன்றி.
யாழ். பல்கலைக் கழக்கத்திற்கு  முன் உள்ள.... குமாரசாமி வீதியில் உள்ள மக்கள்,
உதவிக்கு வந்ததை... நான் சிறுவனாக இருந்த போது,  நேரில் கண்டேன். 
அது, மறக்க முடியாத சம்பவம். :)

ஆம் அயலில் வாழும் குறிப்பாக குமாரசாமி வீதி மக்களை  பொதுமக்களை அணி திரட்டியதால் வெளியில் பாதைகளிலோ தங்கும் விடுதிகளிலோ புதிய மாணவர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது.

ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளூர் சண்டியர்களை நாடி இருக்கிறாராங்க. இதை நான் எதிர்பார்த்தேன்.  நான் அதற்க்கு முன்னமே இரண்டு மூன்று தடவை ரயில்வே கடவைப் பக்கமிருந்த  கள்ளுகொட்டிலில் உள்ளூர் சண்டியர்களோடும் இளைஞர்களோடும் களருந்தி  கள்ளருந்தி நட்பாகியிருந்தேன். எனக்கு அடிக்கும்படி பணத்துடன் உதவி கேட்டுபோன ரக்கிங் ஆதரவாளர்களை உள்ளூர் இளைஞர்களும் சண்டியர்களும் “ஜெயபாலன் எங்க நண்பன், அவருக்கு ஏதும் நடந்தா உங்களை கொன்றுவிடுவோம்” என மிரட்டி  விரட்டி விட்டார்கள். அந்த நிகழ்வு மேலும் எங்களை பலப்படுத்தியது.   நீங்கள் பழையவற்றை நினைவு படுத்துவது மிக்க மகிழ்ச்சி தமிழ்சிறி, என் நினைவுகளை மீட்டு எழுதுவது அவசியமென படுகிறது. உங்களை சந்திக்க விருப்பம். என் முகநூல் Jaya Palan. உங்க முகநூல் ஐடி என்ன?  உங்கள் புகைபடம் பார்த்தால் உங்களை கண்டு பிடித்துவிடுவேன். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

ஜெயபாலன் அண்ணா....  உங்களின் மலரும் நினைவுகளுக்கு, நன்றி.
யாழ். பல்கலைக் கழக்கத்திற்கு  முன் உள்ள.... குமாரசாமி வீதியில் உள்ள மக்கள்,
உதவிக்கு வந்ததை... நான் சிறுவனாக இருந்த போது,  நேரில் கண்டேன். 
அது, மறக்க முடியாத சம்பவம். :)

அன்புக்குரிய சிறி, உங்க ஞாபகங்கள் ஆர்வம் தருகிறது. உங்க தொடர்புக்கு முகநூல் தொலைபேசி எதாவது தருவீங்களா?

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை பெற்றோர், அவர்களை தைரியமான ,மனோதிடம் உள்ளவர்களாய் வளர்க்க வேண்டும் ...அதை போல ஆண்களை பெற்றோர் தங்கள் மகன்மாருக்கு ஆண்,பெண் உறவின் மகத்துவத்தை சொல்லி  சமத்துவமாய் வளர்க்க வேண்டும்.

கலாச்சாரம் ,மண்ணாங்கட்டி என்று கூப்பாடு போடுகின்ற யாழில் தான் பாலியல் வன்புணர்வுகள் அதிகமாய் நடக்கின்றது..லெக்சரர்கள் கூட மாணவிகளை பாலியல் பொம்மையாய் நடத்துகின்றனர்...இதற்குள் சிங்களவன் எம்மை அழிக்கிறான் என்று புலம்பல்.

வெளிநாட்டில் பிள்ளைகள் பாட்  டைமாய் படித்துக் கொண்டு வேலை செய்வதை போல அங்கிருப்பவர்களையும் விட வேண்டும் ...அங்கிருப்பவர்கள் பிள்ளைகளுக்கு கஸ்டம் சொல்லி வளர்ப்பதுமில்லை...இங்கிருப்பவர்கள் கண்ட பாட்டுக்கு காசை அனுப்பி அங்கிருப்பவர்களை தறுதலையாக்கி மிச்சமிருப்பவரையும் அழிச்சால் வேலை முடிஞ்ச்சது 

பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலை என்று தனித்தனியாக பாடசாலை நடைமுறை ஒழிக்கப்பட்டு கலவன் பாடசாலைகள் மட்டுமே  அமைக்கப்படல் வேண்டும்.  சிறு வயதில் இருந்து பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் சகஜமாக பழக அனுமதிக்கப்படல் வேண்டும். இதன் மூலம் பெண்பிள்ளைகளை பாலியல் கவர்சசியுடன் நோக்காது தமது சக நண்பர்கள் என்ற சிந்தனை இளம் பருவத்தில் இருந்து ஆண்பிள்ளைகளிடம் ஏற்படும்.   அதன் மூலம்  பரஸபரம்  கெளரவமான நட்பு உருவாகும்.  பல்ககலைக்கழகம் செல்லும் வயது என்பது ரீனேஜ் வயதல்ல. உடலியல் ரீதியாகவும் மனத்தளவிலும் வளர்சியடைந்த (matured) வயதாகும். இந்த வளர்சியடைந்த வயதில் பகிடிவதை அதுடன் இணைந்த பாலியல் வக்கிர சிந்தனை வருகிறது என்றால் அது அந்த சமூகத்தின் அடிப்படை மனித கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறத. தமிழ்கலாச்சா சீர்கேடு என்று  எப்போதும் புலம்பும் எம்மவர்கள் அடிப்படை மனித கலாச்சாரத்தைப்பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

👍உண்மை. 

யாழ்பாணத்தில் எங்கட தமிழ் கலாச்சாரத்தின் படி நாங்கள் எல்லாம் இதை அனுமதிக்க முடியாது அதை அனுமதிக்க முடியாது என்று பெரும்பாலோர் சொல்வதை தாராளமாக கேட்கலாம்.

7 hours ago, tulpen said:

இந்த வளர்சியடைந்த வயதில் பகிடிவதை அதுடன் இணைந்த பாலியல் வக்கிர சிந்தனை வருகிறது என்றால் அது அந்த சமூகத்தின் அடிப்படை மனித கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறத. தமிழ்கலாச்சா சீர்கேடு என்று  எப்போதும் புலம்பும் எம்மவர்கள் அடிப்படை மனித கலாச்சாரத்தைப்பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. 

 

On 2/7/2020 at 4:59 AM, கிருபன் said:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகமா ? விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகமா ? விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் பலர் செய்த முறைப்பாடுகளையடுத்து, இது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்கலைக் கழக நிர்வாகம் பகிடிவதைக்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையைப் பெற்றோர் மத்தியில் ஊட்டும் வகையிலும் யாழ். பல்கலைக் கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியின் அறிவுறுத்தல்களுக்கமைய விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த திட்டம் பற்றி பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இன்று 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து கொள்ளவுள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து பகிடி வதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசிமூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறன துன்பியல் சம்பவங்கள் நிகழாது தடுக்கும் முகமாகவும் வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக பணிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று காலை 10.00 மணியளவில் கூடவுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாண-பல்கலைக்கழகத-4

பகடிவதை என்பது இப்போது தான் முதன்முதலில் நடப்பது போல பாசாங்கு செய்து உணர்ச்சி வசப்பட்டு முகநூலில் புலம்பி ஆவதொன்றுமில்லை இலங்கையின் வரலாற்றில் பகடிவதை பிரித்தானியா தந்த தொழுநோய். பகடிவதை மேனிலை மாணவர்கள் புகுமுக மாணவர்களை அறிமுகமாக்க புரிந்துணர்வு கொள்ள பயன்படும் ஓர் கருவி என்றார்கள் பிரித்தானியர்.அவர்களின் கல்வித்திட்ட வாரிசுகள் அதை இன்று வரை விட்டபாடில்லை. பெண்குறியுள் மெழுகுவர்த்தி நுழைக்க முயன்ற சம்பவத்திலிருந்து தப்பு பேராதனையின் மாடியிலிருந்து குதித்து முடமாகிமாண்ட உரூபா போன்ற பல சாவுகளை நாம் பார்த்தவர்கள்.பகடிவதை குற்றச் செயல் என இலங்கையில் சட்டமுண்டு ஆனால் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த மாட்டார்கள்.குற்றம் புரிவோர் க்கு கூடுதல் தண்டனை கூட இல்லை. ஏனேனில் அமைச்சர்களின் அதிகாரிகளின் பிள்ளைகள் இதில் அதிகம் பங்கெடுக்கின்றார்கள்.பேராசிரிகள் இதற்கு உடந்தைகள்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் படிமத்தில் பகடிவதை செய்யோம் எனக் கையொப்பம் இடுகிற ஒவ்வொருவனும் தவறு செய்கிற பட்சத்தில் நீக்கப்பட மானியங்கள் குழுவிற்கு அதிகாரம் இருந்தும் எவரும் நீக்கப்படுவதில்லை அரசியல் அதற்கு இடமழிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சிங்கள அரசின் சதி என்டு சொல்லிப்போட்டு இருந்தால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை

February 8, 2020

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது மோச பகிடிவதையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து ஒழுக்காற்று குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு நேற்றுச் சென்றிருந்த குழு அங்குள்ள அதிகாரிகள், மாணவர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

எனினும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தரப்பிடமோ, குற்றஞ்சாட்டப்படும் தரப்பிடமோ விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது.
 

http://globaltamilnews.net/2020/136798/

On 2/6/2020 at 8:16 PM, Maruthankerny said:

மாணவிக்கு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சிபீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களால் எடுக்கப்பட்ட குறித்த தொலைபேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

0763762380
0769202125
0772488443
0774005260
0764199802
0754472445
0750412574
0764895147
0762730423
0757907530
0771827169
0776217873
0776972626
0710554374
0766353346
0767710894
0778775128
0768401384
0779972439

இந்த மாணவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு,
முழுமையாக விசாரிக்கப்பட்டு,
குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட சகல ****

On 2/8/2020 at 4:02 AM, nunavilan said:

 

 

இந்த குரல்களுக்குரிய *** மாணவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு ***

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா மரபுவழி பல்கலைக்கழகங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழத்திடம் இருந்து பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய மாணவர்களை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரவேற்கும் முறை... சர்வதேச தரத்திற்கு இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/8/2020 at 10:21 PM, tulpen said:

பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலை என்று தனித்தனியாக பாடசாலை நடைமுறை ஒழிக்கப்பட்டு கலவன் பாடசாலைகள் மட்டுமே  அமைக்கப்படல் வேண்டும்.  சிறு வயதில் இருந்து பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் சகஜமாக பழக அனுமதிக்கப்படல் வேண்டும். இதன் மூலம் பெண்பிள்ளைகளை பாலியல் கவர்சசியுடன் நோக்காது தமது சக நண்பர்கள் என்ற சிந்தனை இளம் பருவத்தில் இருந்து ஆண்பிள்ளைகளிடம் ஏற்படும்.   அதன் மூலம்  பரஸபரம்  கெளரவமான நட்பு உருவாகும்.  பல்ககலைக்கழகம் செல்லும் வயது என்பது ரீனேஜ் வயதல்ல. உடலியல் ரீதியாகவும் மனத்தளவிலும் வளர்சியடைந்த (matured) வயதாகும். இந்த வளர்சியடைந்த வயதில் பகிடிவதை அதுடன் இணைந்த பாலியல் வக்கிர சிந்தனை வருகிறது என்றால் அது அந்த சமூகத்தின் அடிப்படை மனித கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறத. தமிழ்கலாச்சா சீர்கேடு என்று  எப்போதும் புலம்பும் எம்மவர்கள் அடிப்படை மனித கலாச்சாரத்தைப்பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. 

 தமிழர் கலாச்சாரத்திலை கை வைக்கிறதுக்கு முதல்  காசை வைச்சு அலுவல் பாக்கிற கலாச்சாரத்தையும்,செல்வாக்கை வைச்சு வெட்டி ஆடுற கலாச்சாரத்தையும் அழிக்க வேணும்.
அது சரி முஸ்லீம் மாணவிகளிடமும் இப்படியான பாலியல் ராக்கிங் நடக்கின்றதா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா மரபுவழி பல்கலைக்கழகங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழத்திடம் இருந்து பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய மாணவர்களை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரவேற்கும் முறை... சர்வதேச தரத்திற்கு இருக்கிறது.

 

நன்றி நெடுக்கால போவான், இத்தகைய ஒரு மரபை யாழ் பல்கலைகழகத்தில் 1976,77,78 காலபகுதியில் உருவாக்கினோம். ஆனால் தொடரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடந்ததை எல்லோரும் ராக்கிங் அது இது என்றுதான் பார்க்கிறார்கள் 
இது ராக்கிங்கும் இல்லை கத்தரிக்காயும் இல்லை 
சுத்த பாலியல் துஸ்பிரயோகம் .... பலாத்காரம் .... வன்மம் 

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க ஒரு மாணவி தற்கொலை செய்யும் 
அளவுக்கு சென்று இருக்கிறது  அவர் உயிர் பிழைத்தது தற்செயல் 
நான் தொலைபேசியில் சிலருடன் பேசிய பின்புதான் இந்த செய்தியை இங்கு இணைத்தேன்.

இங்கு அமேரிக்கா கனடா (கனடாவில் இங்குபோல் என்றுதான் எண்ணுகிறேன்) என்றால் 
இதில் ஈடுபட்டவர்கள் குறைந்த பட்ஷம் 5 வருடம் சிறை செல்ல வேண்டும் 
தவிர இவர்கள் வெளியில் வந்தாலும் எங்கு வசிக்கிறார்கள் என்பது அந்த சிட்டி மப்பில் 
இருக்கும். இவர்கள் பற்றிய விழிப்புணர்வு அங்கு வசிப்பவர்களுக்கு தேவை. 

இது கோர்ட்டுக்கு போகும்போது இதனை எல்லோரும் புரிந்து கொள்ளாலாம் 
(கோர்ட்டுக்கு போகுமா? லஞ்சம் ஊழல் தடுக்குமா என்பதுதான் தெரியவில்லை) 

15 minutes ago, Maruthankerny said:

சுத்த பாலியல் துஸ்பிரயோகம் .... பலாத்காரம் .... வன்மம் 

காவாலி மாணவர்களால் ராகிங், பகிடிவதை என்ட பேர்ல நடத்தப்படுற பாலியல் வன்முறை.

இந்த மாணவ மிருகங்களை மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைக்க வேணும். கொஞ்சம் வருமானமாவது வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.