Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் மருது அராபிக் மொழியிலா எழுதியிருக்கிறார் ???🤔

சும்மா கதைவிடாதேங்கோ

உங்களுக்கு விளக்கம் குறைவாக்கும் .

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு விளக்கம் குறைவாக்கும் .

உங்களுக்கு குறைவெண்டு தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு குறைவெண்டு தெரியுது

நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இனி மேல் உங்கட சொந்த கதைகளை எழுதேக்குள்ள கவனமாய் யோசித்து எழுதுங்கோ😧

நான் அந்த யூனி பெஸ்ட் ,இந்த யூனி குறைவு என்று சொல்ல வரேல்ல ...பொதுவான தமிழர்களது குணத்தை சொன்னேன் 

சொந்த கதையை சட் எண்டு எழுதலாம் அக்காச்சி.

கற்பனையைதான் யோசிச்சு எழுதோணும் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 3

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பி  ஒருவர் ஒரு முதியவரின் தொலைபேசி இலக்கம் தந்தார். இவரிடம் நிறைய சாதகங்கள் இருக்கு. ஒருக்கா அவருக்கு போன்செய்து கதையும் என்கிறார். ஆசை விடவில்லை. போன் செய்தேன்.

அவர் : ஆர் பிள்ளை கதைக்கிறியள்.

நான் : நீங்கள் கலியாணம் பேசுறனீங்கள் எண்டு என் பிரெண்ட் சொன்னா.

அவர் :  ஓம் ஓம் உங்கட மகனோ  மகளோ?

நான் : மகள் தான்.

அவர் : என்ன செய்யிறா ? எத்தினை வயது ?

நான் : வேலை செய்யிறா? 24 வயது.

அவர் : நீங்கள் சரியான லேற் பிள்ளை. 18 வயசிலேயே மாப்பிளை பாக்க வெளிக்கிட்டிருக்கவேணும்.

நான் : இன்ன ராசி. இதுக்குப் பொருத்தமான சாதகங்கள் இருந்தால் தாங்கோ.

அவர் : பொறும் பொறும் அவசரப்படாதையும். நீங்கள் எந்த ஊர் ??
             இங்க எந்த இடம் எண்டு உங்கட விலாசத்தை முதல்ல சொல்லுங்கோ.

நான் : எங்கட விலாசம் எதுக்கய்யா?

அவர் : உங்களை பற்றி விசாரிக்கத்தான்.

நான் : எங்களை பற்றி நீங்கள் விசாரிச்சு என்ன செய்யப்போறீங்கள் ?
           சாதகம் பொருந்தி ....... பெடியனுக்கும் பெட்டைக்கும் விருப்பம் எண்டால் அதுக்குப் பிறகு             தாய்   தகப்பனே விசாரிப்பினம் தானே.
அவர்: என்ன பிள்ளை கொஞ்சம் கூடப்  பொறுப்பு இல்லாமல் கதைக்கிறீர்.

நான் : ஐயா மற்றவை மாதிரி என்னால நடிக்க முடியாது.  

அவர் : ரொம்பக் கஷ்டம். உம்மட ஹஸ்பண்ட் இல்லையே. அவரைக் கதைக்கச்சொல்லும்.

நான்: அவர் வேலைக்குப் போட்டார். நீங்கள் சாதகத்தைத் தந்தால் பொருத்தமோ எண்டு பார்த்திட்டு  பொருந்தினால் மேற்கொண்டு கதைக்கலாம் ஐயா.
 
அவர் : உது சரிவராது. முதல்ல எனக்குத் தேவையான விபரங்களைத் தாங்கோ. பிள்ளையின் சாதகம்,  எங்க படிச்சவ, என்ன படிச்சவ, இப்ப  என்ன தொழில் செய்யிறா?

நான் : குறை நினைக்காதைங்கோ ஐயா. பொம்பிளை பிள்ளையின் விபரங்கள் ஒண்டும் நான் தரமாட்டன். நீங்கள் மாப்பிள்ளைகள் இருந்தால் தாங்கோ. நாங்கள் பார்த்து விசாரிக்கிறம்.

அவர் : உம்மோட கஷ்டம். என்னோட ஒருத்தரும் உப்பிடிக் கதைக்கேல்ல. பொம்பிளைப் பிள்ளையை வச்சுக்கொண்டு.......  உம்மடை பிள்ளைக்கு இப்போதைக்கு கலியாணம் நடக்காது.

நான் : அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதைங்கோ. ஆனா மற்றவையை விசரர் ஆக்காதேங்கோ. நன்றி.

பாத்துக்கொண்டிருந்த மனிசன் உனக்கு உது தேவையோ என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அதனால் தான் கவனமாக எங்கள் கருத்தில்.. சம்பாசணை வரும்.. 'நான்'...' மனைவி' என்று எழுதினேன்.

ஊரில் இருந்து வந்த எங்கள் மக்களில் பலருக்கு தாம் வாழும் பிற தேசக் கல்வி முறைகள்.. பல்கலைக்கழகங்கள் பற்றி சரியான அறிவும்.. புரிதலும் இல்லை.

ஊரில் பிரபல.. போட்டிப் பாடசாலைகளுக்கு எப்படியாவது.. பிள்ளைகளை அனுப்பி.. கொலரை இழுத்து விடும்.. அதே பழைய பல்லவியை.. புதிய வடிவில்.. புலம்பெயர் நாடுகளிலும் காவித் திரிகின்றனர். நீங்கள் மட்டுமல்ல.. பலர்.

நான் அறிய... பிரித்தானியாவில்.. கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டங்கள் சில.. துறைசார் தொழிலுக்குள் நேரடியாக நுழைய போதுமானதல்ல. அதேபோல் யு சி எல். இம்பீரியல்.. ஹிங்ஸ் என்று பட்டியல் நீள்கிறது.

துறைசார் தொழிலுக்குள் நுழைய பட்டப்பின்.. தொழில்தகுதி திறன் வளர்ப்பில் (Portfolio) வெற்றி பெற வேண்டும் இங்கு பல தொழில்களுக்கு. அப்போது தான் அடுத்த படிநிலைகளுக்கு செல்ல முடியும்.. அனுபவம் மற்றும் தொழில் அனுபவக் கற்கை மூலமும். 

கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. யு சி எல்.. இம்பீரியல்.. எல்லாம் தரவரிசையில் முன்னுக்கு இருந்தாலும்.. சில துறைசார் வேலைகளுக்கு செல்லும் போது இவர்களின் பட்டங்களை அத்துறை சார் திறன் வகுப்பு.. நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்துக்கு.. ஒருவர்.. யு சி எல் லில்..  பிசியோதிரபி பட்டம் பெறுகிறார் என்றால்.. அவரின் பட்டம் The Chartered Society of Physiotherapy  அங்கீகரிக்கப்பட்டு.. பிரித்தானியாவில் அங்கீகரிப்பட்ட தொழில்வழங்குநரிடம் Portfolio பூர்த்தி செய்தால் தான் வேலை கிடைக்கும். அதுவும்.. அரச சட்டப்பாதுகாப்புப் பெற்ற GMC, HCPC போன்றவை உங்களை குறித்த தொழிலுக்கு தகுதியானவர் என்று பட்டியல் இட்டால் மட்டுமே தான் போக முடியும்.

இப்படிப் பல நுட்பங்கள் உள்ளன. 

கேம்பிரிச்... யு சி எல்.. பட்டங்கள் மேற்படிப்பை மேலும் தொடர்வதற்கான தகமைகளை வழக்கும் அதேவேளை.. பிற பல்கலைக்கழகங்கள்.. தொழில்வழங்குநரின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டங்களை வழங்கி.. இலகுவாக வேலையை எடுக்க செய்துவிடும்.

எனவே.. இங்கு படித்தால்.. நான் பெரிசு.. அங்கு படித்தால்.. நீ சின்னன்.. எல்லாம் இங்கு நடைமுறைக்கு சரிவராது. ஒருவர் டாக்டர் ஆகனுன்னா.. அவர் எங்கு படித்தாலும்.. GMC பதிவு அவசியம். அதேபோல்.. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பிசியோதெரபியாளர்கள் என்று அவர்களும்.. HCPC பதிவு அவசியம். அதேபோல்.. தான் பல்மருத்துவர்கள்.. கண் பரிசோதகர்கள் எல்லோருக்கும்.

ஏன் ஒரு பட்டையக்கணக்காளர் ஆகவும்.. இந்த நிலைகளை கடந்தே ஆக வேண்டும். 

யூனிவர்சிட்டிகளை தராதரம் பிரிப்பது ஒன்றும் ஊர் மனோநிலை அல்ல. Times Educational Supplement, The Guardian universities list எல்லாம் என்ன இலங்கை தமிழருக்காகவா நடத்தப்படுகிறது 😂

யூகேயில் ரஸள் குரூப் என்றும், அமெரிக்காவில் ஐவி லீக் என்றும் முண்ணணி யூனிகள் தமக்குள் ஒரு குழாமாக அமைந்து செயல்படுவதில் இருந்து இது புரியும்.

தவிரவும் GMC, Law Society, Bar Council இப்படியான அமைப்புகள் professional bodies. துறைசார் தகமைகாண் அமைப்புகள். ஆனால் யூனிவர்சிட்டிகள் அப்படி அல்ல. அவை கற்கை அமைப்புகள். Academic bodies. யூனிவர்சிட்டிகளின் தராதரம், வேலைவாய்ப்பை மட்டும் வைத்து கணிக்கப் படுவது இல்லை. கற்கை வசதி, ஆய்வுத் திறன், குறிப்பாக முதுமாணி ஆய்வுத்திறன், pastoral support, இப்படி பலதை வைத்தே தீர்மானிக்கப்படும்.

உதாரணதுக்கு எந்த யூனிவர்சிட்டியில் LLB சட்டமானி படிப்பை முடித்தாலும், barrister ஆக வேண்டும் என்றால் bar vocational course செய்து bar council இல் சேர்ந்தால் மட்டுமே முடியும். 

அண்மைகாலம் வரை ஓக்ஸ்போர்ட்டில் BVC கோர்ஸ் இருக்கவில்லை. தனியே LLB, LLM, LLD மட்டுமே இருந்தது. 

ஆனால் BPP எனும் ஒரு அமைப்பில் அல்லது Kaplan போன்ற ஒரு காலேஜில் BVC செய்யலாம்.

இதை மட்டும் வைத்து - BPP யும் Kaplan college உம் சட்டப்படிபுக்கு ஆக்ஸ்போர்டை விட திறம் என்று நிறுவுவது அபத்தம்.

முன்பு ஒரு காலம் வரை redbrick யூனிகள் மட்டுமே இருந்த காலத்தில், 1992 க்கு முன், யூனிவர்சிட்டிகள் தனியே கற்கை நெறிகளை மட்டுமே கற்பித்தன.

1992 க்கு பின், வெஸ்மின்ஸ்டர், ஹார்ட்வெட்சியர் இப்படி பல முன்னாள் தொழில்நுட்ப கல்லூரிகள் யூனிவர்சிட்டியா தரம் உயர்த்தப்பட்டன. இவற்றை New Universities என்பர். 

முதல் முதலில் இந்த நியூ யூனிவர்சிட்டிகள்தான் கற்கை நெறிகளுடன், தொழில்சார் நெறிகளையும் படிப்பிக்க தொடங்கினர்.

ஆனால் இப்போ கிட்டத்தட்ட பழைய, புதிய யூனிகள் எல்லாமே கற்கை+தொழிசார் நெறிகளை வழங்குகிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மருதர், கூகிளைத் தட்டிப்பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.

நான் எனது அனுமனதிலதான் எழுதினேன் 
நீங்கள் சொன்ன பின்தான் கூகிளை தட்டி பார்த்தேன் 
நான் எதிர்பார்த்ததுபோலதான் இருக்கிறது 
நீங்கள் கொம்பியூட்டர் ஸயன்ஸை வைத்து அதை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன் 
எ ஐ  மற்றும் மெஷின் லேர்னிங் முழுதாக அலோக்ரிதம் சார்ந்தது 
கேம்ப்ரிட்ஜ் ஒஸ்போர்ட் போன்றவை அதி- திறமையான மாணவர்களை உள்வாங்கி 
தமக்கான இடங்களை அதன்மூலம் தக்க வைத்து கொள்பவர்கள் 

டெக்னாலஜி  கிரேட்டிவ்  இன்ஜினியரிங் போன்றவற்றை தொழிசார் பல்கலைக்கழகங்கள்தான் 
பொதுவாக திறமையான பாட திட்ட்ங்கள் மூலம் அந்தந்த துறைகள் வளர வளர வளர்த்துக்கொண்டு போகும் வசதியை பெற்றுருப்பார்கள்.

நீங்கள் பார்மஸி தொழிசாலைகளை தேடி பார்த்தீர்கள் என்றால் புதிய புதிய மருந்துகளை 
கண்டுபிடிப்பவர்கள் பெயர்களை நீங்கள் கூகிளில் தட்டினால் அவர்கள் கேம்ப்ரிட்ஜ் ஒஸ்போர்டில் இருந்து 
வந்திருக்க மாட்டார்கள் ....ஆனால் ஒரு தகைமையை உருவாக்கிய பின்பு. ஒரு ரெப்ரெசென்ட்டுக்காக பி எச் டி  
ஒன்றை பின்னாளில் அங்கு செய்து இருப்பார்கள்.

நான் கூகிளில் எ ஐ என்று தட்டினால் கேம்பிரிட்ஜ் முதல் 16க்குள் வரவே இல்லை ... வர சாத்தியமும் இல்லை 
காரணம் தொழிசார் பல்கலைக்கழகங்கள்தான் பெரும்பாலும் இதே நெட்வேர்க் கை விரிவுபடுத்தி திறமையானவர்களை  தம்வசம் வைத்துக்கொண்டு இருந்து இருப்பார்கள். ஏற்கனவே திறமையாக வெளியில் செயலற்றிக்கொண்டு இருக்கும் நபர்களை அணுகி அவர்களை ப்ரோபிஸ்ஸர் ஆக்கி பாட திட்ட்ங்களை  காலத்துக்கு  தகுந்ததுபோல் உருவாக்கி கொள்வார்கள்.

மாஸ்டர் ப்ரோக்ராம்  பி ச் டி போன்றவற்றை பின்னாளில் கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலையில் பின்னாளில் 
செய்து தமது ரெசுமியை மெருகூட்டி விடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

விபச்சாரம் என்கிற சொல் இருபாலாரின் நிலையான பால் உறவுகளை குறிபதில்லை. திருமணமற்ற நிலைத்த பால் உறவு ’கூடி வாழ்தல்’ என்றோ ’வைத்திருத்தல்’ என்றோ தானே குறிப்பிடப்படுகிறது. எனவே பொருத்தபாடற்றது.

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூறுவது சரிதான். மற்றும் விபச்சாரம் பணத்தை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்டது. கூடி வாழ்தலில் பல நேர்மறை எதிர்மறை விடயங்கள் இருபாலாரினாலும் சகித்தும் ஏற்றும்கொள்ளப்படுகிறதே.

விபச்சாரம் என்பது உடல் ஈடுபாடு உடைய ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது 
பணம்கொடுத்து என்று நாம் குறுக்கிக்கொள்ள முடியாது பணம் என்பதே சில நூற்றாண்டுகள் 
முன்பு வந்ததுதான்.  விபச்சாரம் எப்போதே இருந்தே இருக்கிறது அப்போதெல்லாம் பொருள் கொடுத்து 
வாங்கப்பட்டிருக்கிறது என்றுதான் தெரிகிறது.
விபச்சாரத்திலும் கால அவகாசம் உண்டு .......முன்னைய நாட்களில்  கணவனை இழந்து 
பிள்ளைகளுடன் வீடு வாசல் இல்லாமல் இருந்த பெண்களை ஊரில் இருக்கும் தாசில்காரர்கள் 
அவர்கள் குடியேற ஒரு வழிவகை செய்து கொடுத்துவிட்டு .....பின்பு காலம்பூராக காமத்தை தீர்க்க சென்று வருவார்கள். சின்ன வீடும் விபச்சாரம்தான்.
நீங்கள் சொல்லும் அடிப்படையில் பார்த்தல் சின்ன வீடு திருமணபந்தத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
சின்ன வீட்டுக்கும் ....பெரிய வீட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் பௌதீக ரீதியாக இல்லை.
திருமண விபச்சாரத்தை ஆயுள்காலதுக்கு நீடித்து செய்வதாலும்  சில உறவுமுறைகள் தோன்றுவதாலும் 
100 வீத விபச்சாரமாக இல்லையே தவிர ..........சுற்றிவளைத்து பார்த்தால் கிட்டதட்ட விபச்சாரம்தான் 
ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு இது லாபகரமாக இல்லை என்பதால்தான் 
ஆணை சாராது தனது சொந்த காலில் பெண்கள் நிற்கும் இடங்களில் விவாகரத்து  மணமாகாது இருத்தல் 
என்பவை அதிக அளவில் நடக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றைய இனத்தில் அளவு எம்மினம் கலக்கவில்லை. DNA செய்வதற்கு 150 பவுன்ஸ்சுகள் தான் நீங்களும் ஒருக்காச் செய்து பாருங்கள்.

எந்த அடிப்படையில் இதை ஓர் assertion ஆக எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஏற்கனவே, பல திரிகளில் இதை நான் கூறி உள்ளேன்.

ஈழத்தமிழரின் மரபணு பூர்விக சிங்களவர்களின் மரபணுவுடன் பெரும் பாலும் ஒத்து போகிறது.

தற்போதையா சிங்கள சனத்தொகையில், ஏறத்தாழ 50% பூர்விக சிங்களவர்கள், 50% நவீன சிங்களர்கள்.

ஈழத்தமிழரின் மரபணுவில் ஏறத்தாழ 28% bengal மரபணு கலப்பு உள்ளது.

பூவிக்க சிங்களவர்களின் மரபணுவில் ஏறத்தாழ 25% bengal மரபணு கலப்பு உள்ளது.

நவீன சிங்களவர்களின் மரபணு இப்போதைய தமிழ் நாடு, கேரளம், மற்றும் ஆந்திராவின் மரபணுவுடன் ஒத்து போகிறது.

நவீன சிங்களவர்களின் மரபணுவிற்கும், பூர்விக சிங்ககள்வர்கள் மற்றும் ஈழத்தமிழரின் மரபணுவிற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளது, ஒருமைப்பாடுகள் மிகவும் குறைவு.

நவீன சிங்களவர்களின் மரபணு, அவர்களின் வரலாற்று குடிபெயர்வுடன் இயைந்தே காணப்படுகிறது.

அதாவது ஆக முந்திய அரசவம்ச திருமணம் மற்றும் படையெடுப்புகளில் தொடக்கம்  ஆகப் பிந்திய காலனித்துவ ஆட்சிகளில்  குடிவரவு வரை.

சாதிகளை பற்றி விமர்சிப்பது நோக்கமில்லையாயினும், எமது சரித்திரம் சாதிகளோடு பின்னிப்பிணைந்து.

மலையகத்தில் demala gatara எனும் உப சாதி சிங்களவர்கள் மத்தியில் உண்டு. இது வெகு விரைவாக கோவிகம எனும் சிங்கள பெரும்பான்மை சாதிக்குள் சீரழிந்து கொண்டு வருகிறது, இந்த demala gathara எனும் சாதியின் தோற்றம், வரலாற்றில் கூலிப் படைக்கலாகவும், ஏவல் படைக்கலவும் காலங்காலமாக வந்தோரின் இலங்கை தீவு பூர்வீக சந்ததிகள் ஆகும்.

இதை ஓர் உதாரணமாகவே சொல்கிறேன், நவீன சிங்கவர்களின் தோற்றத்தின் வரலாற்றிற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

ஒரு கருத்து என்றால் இப்படி இருக்க வேண்டும். மேலும் விடயங்களை தேடி வாசிக்க தூண்டுகிறது உங்கள் பதிவு.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியா ...ஆக நீங்களே சொல்கிறீர்கள் சமைக்கத்தெரியாதவைகள் பற்றி பெருமைப்பட தேவையில்லை என்று  . நாங்களே (ஆண்கள் ) அதனை பெரிசாக எடுக்கவில்லை பெண் உங்களுக்கு சக பெண்ணுக்கு சமைக்கத்தெரியாதது பிரச்சினை ..இதுதான் பெண்புத்தி.... அவிங்களே பழமை வாதத்தினுள் கிடந்தது உருளுவினம் பிறகு ஆண்கள் எங்களை மதிப்பதில்லை  எங்களுக்கு சமவுரிமை தருவதில்லை என்று புலம்புவினம், அடுப்பங்கரையில் இருந்து பெண் வெளியே வரவேண்டும் என்று புலம்பும் பெண்ணிய வாதிகளுக்கு அடுப்பம்கரையே பார்த்தறியாத பெண்ணை பார்த்ததும் ஏன் பிசிறடிக்கிறது ...? ஏன் தெரியுமா 
வெளிப்பேச்சில் தான் இந்த எடுத்துவிடல்கள் எல்லாம் உள்ளே  சக பெண்களை மடக்கி அடக்கி ஒடுக்குவதே இந்த பெண்கள் தான் 😊😊😊

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kadancha said:

இதுவும் நம்பிக்கையானதோ அல்லது முடிவான முடிவோ இல்லை.
ஈழத்தமிழரின் டி என் எ வில் 28வீதம் பெங்கால் மரபணு இருப்பது சாத்தியம் அற்றது 
அவர்கள் ஆய்வு செய்த தமிழர்களில் அது இருந்து இருக்கலாம் .......

இதை ஏதன் அடிப்படையில் எழுதுகிறேன் என்றால் பெங்கால் என்றே ஓர் தனித்துவமான 
மரபணு இருக்க சாத்தியம் இல்லாதபோது எப்படி 28 வீதம் பெங்கால் மரபணு ஈழத்தமிழரில் அல்லது சிங்களவரில் இருக்க முடியும்? 

பெங்கால் மரபணுவை  நீங்கள் சோதிக்க தொடங்கினால் இவர்கள் கூறுவதோ கூறவருவதோ 
ஒரு திரிப்பு அல்லது முழுமையற்ற ஆய்வின் முடிவு என்பது தெரியவரும். 

ஆரியர் குழுமம் 
திராவிட குழுமம் 
என்பதை பலர் இனமாக கருதுகிறார்கள் அதன் அடிப்படையில்தான் பல ஆய்வுகளை செய்கிறார்கள் 
இவை இரு வேறு மொழி குழுமங்கள் தவிர இன குழுமங்கள் இல்லை........ ஆதியில் இன குழுமங்களாக இருந்து இருக்கலாம்  ஆதியில் என்பது 10 ஆயிரம் ஆண்டுகள் முன்பு.
பின்னாளில் யார் ஆளுமை செய்தார்களோ அவர்களின் மொழி மற்றும் மதங்கள்  அங்கு இருந்த மக்களை ஆளுமை செய்ததோடு  மக்களும் அந்த மொழி குழுமத்துக்குள் சென்று விடுவார்கள். மக்களின் மரபணு என்று வரும்போது அது வேறு விதமான முடிவுகளையே கொண்டிருக்கும். 

Bengalis are a mixed race of 5 different ancestry.

-Early Farmers from Fertile crescent.

-South Asian Hunter Gatherer.

-Austroasiatic rice farmers from southeast Asia.

-Proto Indo European from Eurasian steppes.

-Tibeto Burman speaking East Asian.

The biggest chunk of Bengali's   dna is from Early Farmers from fertile crescent or neolithic Iranian people.We also have a significant amount of dna from Austroasiatic rice farmers and ancestral south indians followed by the proto-Indo European and Tibeto-Burman.

The most ancient inhabitant of the subcontinent were “the South Asian Hunter-gatherer” people.Then with the spread of rice agriculture austroasiatic speaking rice farmers from South-East Asia entered in eastern India and got mixed with the local.They spread the language and culture and modern day santhal tribes are their descendents.

Meanwhile in the west of subcontinent proto-Indo European people were “genetically”absorbed by a larger Indus valley people after they successfully spread the culture and language.

Modern day Bengalis are result of mix between Indo Aryan language speaking people from somewhere in Northern India(Early Farmers from fertile crescent+proto Indoeuropean+South Asian Hunter-gatherer) and local austroasiatic tribes(like Santhals) and tibeto burman tribes(like Chakmas).Since Bengal is a frontier region and was heavily forested, The Indo Aryan language speaking folks cleared the forest and got settled in, within times they exchanged DNA with both Austroasiatic and Tibeto Burmese tribes. Modern Bengalis/Bangladeshis genetical composition is :

  • 85-88% South Asian.
    • 45–50% Early Farmers from fertile crescent(Possibly from Iranian plateau and came to Bengal through Indo Aryan language speaking settlers).
    • 18–23% South Asian Hunter-gatherer.(Ancient DNA of these Hunter-Gatherer are yet to be discover but Austroasiatic tribes and Southern Indian tribes are a good proxy, Bengalis got this component from both Indo Aryan language speaking settlers and Austroasiatic tribals).
    • 15% Proto Indo European(Related to Sintashta and Andronovo culture and came to Bengal through Indo Aryan language speaking settlers).
  • 12–15% East Asian
    • 5-6% South-East Asian(Bengalis got it from Austroasiatic tribals).
    • 5-6% North-East Asian(Tibeto Burmese).
    • 2–3% Siberian(Came to Bengal through Indo Aryan language speaking settlers but also from North-East Asian).

main-qimg-39345a90ab6444ac55da57c544cc0c2c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kadancha said:

எந்த அடிப்படையில் இதை ஓர் assertion ஆக எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஏற்கனவே, பல திரிகளில் இதை நான் கூறி உள்ளேன்.

ஈழத்தமிழரின் மரபணு பூர்விக சிங்களவர்களின் மரபணுவுடன் பெரும் பாலும் ஒத்து போகிறது.

தற்போதையா சிங்கள சனத்தொகையில், ஏறத்தாழ 50% பூர்விக சிங்களவர்கள், 50% நவீன சிங்களர்கள்.

ஈழத்தமிழரின் மரபணுவில் ஏறத்தாழ 28% bengal மரபணு கலப்பு உள்ளது.

பூவிக்க சிங்களவர்களின் மரபணுவில் ஏறத்தாழ 25% bengal மரபணு கலப்பு உள்ளது.

நவீன சிங்களவர்களின் மரபணு இப்போதைய தமிழ் நாடு, கேரளம், மற்றும் ஆந்திராவின் மரபணுவுடன் ஒத்து போகிறது.

நவீன சிங்களவர்களின் மரபணுவிற்கும், பூர்விக சிங்ககள்வர்கள் மற்றும் ஈழத்தமிழரின் மரபணுவிற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளது, ஒருமைப்பாடுகள் மிகவும் குறைவு.

நவீன சிங்களவர்களின் மரபணு, அவர்களின் வரலாற்று குடிபெயர்வுடன் இயைந்தே காணப்படுகிறது.

அதாவது ஆக முந்திய அரசவம்ச திருமணம் மற்றும் படையெடுப்புகளில் தொடக்கம்  ஆகப் பிந்திய காலனித்துவ ஆட்சிகளில்  குடிவரவு வரை.

சாதிகளை பற்றி விமர்சிப்பது நோக்கமில்லையாயினும், எமது சரித்திரம் சாதிகளோடு பின்னிப்பிணைந்து.

மலையகத்தில் demala gatara எனும் உப சாதி சிங்களவர்கள் மத்தியில் உண்டு. இது வெகு விரைவாக கோவிகம எனும் சிங்கள பெரும்பான்மை சாதிக்குள் சீரழிந்து கொண்டு வருகிறது, இந்த demala gathara எனும் சாதியின் தோற்றம், வரலாற்றில் கூலிப் படைக்கலாகவும், ஏவல் படைக்கலவும் காலங்காலமாக வந்தோரின் இலங்கை தீவு பூர்வீக சந்ததிகள் ஆகும்.

இதை ஓர் உதாரணமாகவே சொல்கிறேன், நவீன சிங்கவர்களின் தோற்றத்தின் வரலாற்றிற்கு.

சிங்களவர்களினதும் தமிழர்களினதும் DNA ஒன்று என்பதை 2013 ம் ஆண்டிலேயே யாழ் இணையத்தில் எழுதியுள்ளேன்.

உலகின் முதல் மாந்தர்  M 130
ஒஸ்ரொலொயிட்  M 130
இலங்கை வேடர் M 130
தென்னிந்தியத் தமிழர் M  20
ஈழத்து தமிழர் M 20
சிங்களவர் M 20
இந்தோ ஆரியர்  M 17

தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் M 20

இதில் The Journey of the man - Dr Spencer Wells என்பவரின் நூலை வாசித்தும்

இலங்கையில் மனிதக் குடியகல்வு - திரு விசாகன்

Dr . தியாகராஜா ஆகியோரின் ஆகியோருடன் உரையாடியும் அவர்களூடாக நான் தெரிந்துகொண்டவற்றை எழுதினேன். மற்றப்படி இந்தத் திரியில் இதுபற்றி மேலதிகமாக அலச முடியாமைக்கு மன்னியுங்கள். ஏனெனில் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் பல தகவல்கள் மறந்துவிட்டன. மீண்டும் தேடி எடுத்து வாசிக்க நேரம் இல்லை.

இந்தியா முழுவதும் ஒரு முன்னர் தமிழர் பரந்து வாழ்ந்ததால் மற்றைய இனங்களுடன் கலந்த தமிழர்கள் மிகச் சொற்பமானவர்கள்தான் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் பெங்காலியர்களுடன் கலந்திருக்கலாம். இவர்களில் இருந்து பிரிந்த மாந்த இனத்தின் கூறுகள் ஆங்காங்கே நிட்சயமாய் இருக்கும். ஆயிரம் ஆண்டுகால இடப்பெயர்வின்ன் தொடர்ச்சி எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும் எம் இனத்தில் மற்றைய இனங்களுடனான கலப்பு அதிகம் இல்லை என்பது கண்கூடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

விபச்சாரம் என்பது உடல் ஈடுபாடு உடைய ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது 
பணம்கொடுத்து என்று நாம் குறுக்கிக்கொள்ள முடியாது பணம் என்பதே சில நூற்றாண்டுகள் 
முன்பு வந்ததுதான்.  விபச்சாரம் எப்போதே இருந்தே இருக்கிறது அப்போதெல்லாம் பொருள் கொடுத்து 
வாங்கப்பட்டிருக்கிறது என்றுதான் தெரிகிறது.
விபச்சாரத்திலும் கால அவகாசம் உண்டு .......முன்னைய நாட்களில்  கணவனை இழந்து 
பிள்ளைகளுடன் வீடு வாசல் இல்லாமல் இருந்த பெண்களை ஊரில் இருக்கும் தாசில்காரர்கள் 
அவர்கள் குடியேற ஒரு வழிவகை செய்து கொடுத்துவிட்டு .....பின்பு காலம்பூராக காமத்தை தீர்க்க சென்று வருவார்கள். சின்ன வீடும் விபச்சாரம்தான்.
நீங்கள் சொல்லும் அடிப்படையில் பார்த்தல் சின்ன வீடு திருமணபந்தத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
சின்ன வீட்டுக்கும் ....பெரிய வீட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் பௌதீக ரீதியாக இல்லை.
திருமண விபச்சாரத்தை ஆயுள்காலதுக்கு நீடித்து செய்வதாலும்  சில உறவுமுறைகள் தோன்றுவதாலும் 
100 வீத விபச்சாரமாக இல்லையே தவிர ..........சுற்றிவளைத்து பார்த்தால் கிட்டதட்ட விபச்சாரம்தான் 
ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு இது லாபகரமாக இல்லை என்பதால்தான் 
ஆணை சாராது தனது சொந்த காலில் பெண்கள் நிற்கும் இடங்களில் விவாகரத்து  மணமாகாது இருத்தல் 
என்பவை அதிக அளவில் நடக்கிறது. 

குடும்ப வாழ்வு என்பது இருபாலாரின்  சம்மதத்தோடும் குடும்பம் சமூகம் என்பவற்றின் அங்கீகாரத்தோடு நடத்தப்படுவது. அத்தோடு ஆண்டுக்கணக்காக சேர்ந்தே வாழ்வது. சின்னவீடு கூட அவர் குடும்பத்தைப் பார்த்தால் சம்மதத்தோடு நடைபெறுவதுதான். இதற்கும் பணம் தேவை எனினும் இதன் நோக்கம் பணம் இல்லை. ஆனால் விபச்சாரம் - பணமோ பொருளோ இன்றி மனது ஒப்பி நடப்பதல்ல. யாரும் யாருடனும் இருக்கலாம். போகலாம், வரலாம். இதில் எந்த உரிமைப்பாடோ அன்றி கட்டுப்பாடோ இல்லை.

1 hour ago, Maruthankerny said:

ஆரியர் குழுமம் 
திராவிட குழுமம் 
என்பதை பலர் இனமாக கருதுகிறார்கள் அதன் அடிப்படையில்தான் பல ஆய்வுகளை செய்கிறார்கள் 
இவை இரு வேறு மொழி குழுமங்கள் தவிர இன குழுமங்கள் இல்லை........ ஆதியில் இன குழுமங்களாக இருந்து இருக்கலாம்  ஆதியில் என்பது 10 ஆயிரம் ஆண்டுகள் முன்பு.

பின்னாளில் யார் ஆளுமை செய்தார்களோ அவர்களின் மொழி மற்றும் மதங்கள்  அங்கு இருந்த மக்களை ஆளுமை செய்ததோடு  மக்களும் அந்த மொழி குழுமத்துக்குள் சென்று விடுவார்கள். மக்களின் மரபணு என்று வரும்போது அது வேறு விதமான முடிவுகளையே கொண்டிருக்கும். 

ஆரிய திராவிடக் குழுமங்கள் என்பது ஒரு நூற்றாண்டுக்குள் வந்த சொற் பயன்பாடேயன்றி முன்னர் அவர் அப்படி இருக்கவில்லை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்பிடியா ...ஆக நீங்களே சொல்கிறீர்கள் சமைக்கத்தெரியாதவைகள் பற்றி பெருமைப்பட தேவையில்லை என்று  . நாங்களே (ஆண்கள் ) அதனை பெரிசாக எடுக்கவில்லை பெண் உங்களுக்கு சக பெண்ணுக்கு சமைக்கத்தெரியாதது பிரச்சினை ..இதுதான் பெண்புத்தி.... அவிங்களே பழமை வாதத்தினுள் கிடந்தது உருளுவினம் பிறகு ஆண்கள் எங்களை மதிப்பதில்லை  எங்களுக்கு சமவுரிமை தருவதில்லை என்று புலம்புவினம், அடுப்பங்கரையில் இருந்து பெண் வெளியே வரவேண்டும் என்று புலம்பும் பெண்ணிய வாதிகளுக்கு அடுப்பம்கரையே பார்த்தறியாத பெண்ணை பார்த்ததும் ஏன் பிசிறடிக்கிறது ...? ஏன் தெரியுமா 
வெளிப்பேச்சில் தான் இந்த எடுத்துவிடல்கள் எல்லாம் உள்ளே  சக பெண்களை மடக்கி அடக்கி ஒடுக்குவதே இந்த பெண்கள் தான் 😊😊😊

வடிவா வாசிக்கவேணும். நான் என் கணவரும் நன்றாகச் சமைப்பார் என்று எழுதியதை வாசிக்கவில்லையோ ? ஒரு மனிதன் என்றால் தன் அடிப்படைத் தேவைகளைத் தானே செய்யத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஒரு சமையல் தெரியாத பெண் கணவனுக்கும் சமைக்கத்தெரியாவிட்டால் ஒவ்வொருநாளும் கடையிலா உணவுகளை பெற்றுக்கொள்வார்? சரி அப்படி வாங்க வசதி உள்ளவர் என்றால் கூட, வீட்டில் சமைப்பது அவர்கள் உடல், உள நலன்களுக்கு எத்தனை சிறந்தது என்பது தெரியாதவராகத்தான் இருக்கவேண்டும். பெண்கள் நன்றாகச் சமைப்பார்கள் என்பது பழமைவாதம் என்று நீங்களாக எண்ணிக் கொண்டால் நான் என்ன செய்வது. நான் பெண்ணியவாதியும் அல்ல. அவர்களுக்கு கைதட்டும் ஆளும் அல்ல.

சமையல் என்பது ஒரு சிறந்த கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதல்ல. சுவையாகச் சமைப்பதும், அதை மற்றவருக்கு பரிமாறுவதும், அவர்கள் அதை மகிழ்வாக உண்பதைப்பார்த்து மகிழ்வதும் எல்லோருக்கும் வந்துவிடாது.
இன்னும் அதிகம் எழுதி உங்களை வருத்தப் பட வைக்கவில்லை.😂😂🤪

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

யூனிவர்சிட்டிகளை தராதரம் பிரிப்பது ஒன்றும் ஊர் மனோநிலை அல்ல. Times Educational Supplement, The Guardian universities list எல்லாம் என்ன இலங்கை தமிழருக்காகவா நடத்தப்படுகிறது 😂

யூகேயில் ரஸள் குரூப் என்றும், அமெரிக்காவில் ஐவி லீக் என்றும் முண்ணணி யூனிகள் தமக்குள் ஒரு குழாமாக அமைந்து செயல்படுவதில் இருந்து இது புரியும்.

தவிரவும் GMC, Law Society, Bar Council இப்படியான அமைப்புகள் professional bodies. துறைசார் தகமைகாண் அமைப்புகள். ஆனால் யூனிவர்சிட்டிகள் அப்படி அல்ல. அவை கற்கை அமைப்புகள். Academic bodies. யூனிவர்சிட்டிகளின் தராதரம், வேலைவாய்ப்பை மட்டும் வைத்து கணிக்கப் படுவது இல்லை. கற்கை வசதி, ஆய்வுத் திறன், குறிப்பாக முதுமாணி ஆய்வுத்திறன், pastoral support, இப்படி பலதை வைத்தே தீர்மானிக்கப்படும்.

உதாரணதுக்கு எந்த யூனிவர்சிட்டியில் LLB சட்டமானி படிப்பை முடித்தாலும், barrister ஆக வேண்டும் என்றால் bar vocational course செய்து bar council இல் சேர்ந்தால் மட்டுமே முடியும். 

அண்மைகாலம் வரை ஓக்ஸ்போர்ட்டில் BVC கோர்ஸ் இருக்கவில்லை. தனியே LLB, LLM, LLD மட்டுமே இருந்தது. 

ஆனால் BPP எனும் ஒரு அமைப்பில் அல்லது Kaplan போன்ற ஒரு காலேஜில் BVC செய்யலாம்.

இதை மட்டும் வைத்து - BPP யும் Kaplan college உம் சட்டப்படிபுக்கு ஆக்ஸ்போர்டை விட திறம் என்று நிறுவுவது அபத்தம்.

முன்பு ஒரு காலம் வரை redbrick யூனிகள் மட்டுமே இருந்த காலத்தில், 1992 க்கு முன், யூனிவர்சிட்டிகள் தனியே கற்கை நெறிகளை மட்டுமே கற்பித்தன.

1992 க்கு பின், வெஸ்மின்ஸ்டர், ஹார்ட்வெட்சியர் இப்படி பல முன்னாள் தொழில்நுட்ப கல்லூரிகள் யூனிவர்சிட்டியா தரம் உயர்த்தப்பட்டன. இவற்றை New Universities என்பர். 

முதல் முதலில் இந்த நியூ யூனிவர்சிட்டிகள்தான் கற்கை நெறிகளுடன், தொழில்சார் நெறிகளையும் படிப்பிக்க தொடங்கினர்.

ஆனால் இப்போ கிட்டத்தட்ட பழைய, புதிய யூனிகள் எல்லாமே கற்கை+தொழிசார் நெறிகளை வழங்குகிறனர்.

உலகில் பல்கலைக்கழகங்களின் தர வரிசை என்பதும்.. ஊரில் தேசிய பாடசாலைகள் என்பதும்.. அங்கு படிப்பவர்களும்.. அவர்களின் பெற்றோரும்.. கொலரை இழுத்து விடுவதற்கு அல்ல. இல்ல கொலரை இழுத்து விடத்தான் என்பது போல.. நம்மவர்களுக்கு உங்களைப் போன்றோர் கற்பிக்க விளைவது தான் தவறு.

தர வரிசை என்பது அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தரச்சுட்டிகளுக்கு ஏற்ப தம் தரத்தை உயர்த்தி பயன்பெறுநரின் பயனடையும் மட்டத்தை அதிகரிக்கச் செய்வது தானே ஒழிய... கொலரை இழுத்து விடுவதற்கு அல்ல. மொக்குத்தனமாக பெருமை பேசித் திரிவதற்கு அல்ல.

கேம்பிரிஷ் ஒரு பாடத்தில் சிறப்பு என்றால்.. தரவரிசையில்.. கடைசியில் உள்ள யுனி இன்னொரு பாடத்தில் சிறப்பாக இருக்கும்.  ஆகையால்.. ஏதோ கேம்பிரிஷில் படிப்பவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள் என்ற கற்பிதமே பொய். கேம்பிரிஷில் உருப்படியா படிப்பவர்களும் திறமைசாலிகளாகலாம்.. கடை வரிசை யுனியில் படிப்பவர்களும் திறமைசாலி ஆகலாம். கேம்பிரிஷ்சில் படித்தால்.. அதற்கான வழிக்காட்டல் அதிகமாக கிடைக்கலாம். கடை யுனியில்.. தனித்திறமைகள் அதிகம் வழிகாட்டும். அவ்வளவு தான். 

பிரித்தானியாவை பொறுத்தவரை விண்ணியல் ஆய்வில் கேம்பிரிஷ்சை விட தற்போது பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகம் சிறப்பாக விளங்குகிறது. பல விண்வெளித்திட்டங்களை அது அமுலாக்க கற்பித்தும் வருகிறது.. பயிற்றுவித்தும் வருகிறது. ஆனால் பிரித்தானிய தரவரிசையில் அதற்கு ஒரு இடமே இல்லை. ஆகவே தரவரிசை என்பது சரியான சுட்டி அள்ள. பருமட்டும் தான். 

அது பயிலுனர்களுக்கு பயனாளிகளுக்கு ஒரு வழிக்காட்டிச் சுட்டியே தவிர.. கொலரை இழுத்து விட தரப்படுவதில்லை. முதலில்.. இந்த விளக்கத்தை நம்மவர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்வது அவசியம்..! 

மற்றும்படி எந்தந்த யுனி அக்காடமிக் (கல்விசார்)... எவை.. வக்கேசனல் (தொழில்சார்) பாடநெறிகளில் சிறப்பு என்பதை.. எனது கருத்தில் ஏலவே பிரதிபலித்து விட்டேன். மீண்டும் அதை சொல்ல வேண்டியதில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nedukkalapoovan said:

கொலரை இழுத்து விட என யாரும் படிப்பதில்லை.

ஆனால் தரவரிசை என்பதே ஒட்டுமொத்தமாக எந்த யூனிவர்சிட்டி எந்த இடத்தில் காட்ட என்றுதான்.

எனவே தான் வளர்ந்த நாடுகளில் யூனிவசிட்டிகளை தரப்படுத்தும் வழக்கம் உளது. தவிரவும் நான் மேலே சுட்டிய times, guardian தரவரிசைகள், யூகே லிஸ்டையும், அதனுள்ளே துறைசார்ந்து மேலும் பல லிஸ்டுகளையும் கொடுக்கும்.

இங்கே உயர்தரம் படித்து, யூனிவர்சிட்டிக்கு யூகாஸ் மூலம் உள்வாங்கப் படாமல், வெளிநாட்டில் யூனிக்கு போய், அதன் பின் இங்கே வந்து யூனியில் வெளிநாட்டு மாணவர்களா சேர்ந்தவகளுக்கு இந்த புரிதல் இல்லாமல் இருக்க கூடும்.

ஆனால் இந்த முறையை கடந்து யூனி போன சொந்த அனுபவமே நான் மேலே எழுதியது.

இங்கே பள்ளிகூடங்களில், யூகாஸ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது ஆலோசனைக்கு என்று ஆசிரியர்களை நியமிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் கூட, யூனிவர்சிட்டி தரவரிசையை அடிப்படையாக வைத்தே ஆலோசனை செய்வார்கள்.

தாம் தரம் குறைந்த யூனிக்கு போனதால் என்னமோ சிலர் இங்கே வந்து ஆக்ஸ்போர்ட்/கேம்பிரிட்ஜ் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல எழுதுகிறார்க்ள் 😂

கீழே எந்த யூனியின் எந்த படிப்புக்கு அதிக சம்பளம் என்ற தரவுகளை தருகிறேன் பார்த்து பயனடையுங்கள் அல்லது  வயிறு எரியுங்கள் 😂.

https://www.telegraph.co.uk/education-and-careers/0/what-highest-paying-degrees-uk-top-graduate-salary-britain/ 

https://www.telegraph.co.uk/education/universityeducation/11918904/Oxbridge-graduates-earn-double-200000-Russell-Group-premium.html

ஆக்ஸ்போர்ட்டும், கேம்பிரிஜ்ஜும் உலக வரிசையில் ஹார்வர், ஸ்டான்போர்டுக்கு அடுத்து தொடர்சியாக முதல் 5 துக்குள் வருவன. முதல் 10க்குள் வர மிகுதி யூகே யூனிகள் எல்லாம் படாதபாடு படும்.

கனகரட்ணம் மாகாவித்யாலலம் கொமேர்சுக்கு நல்லம்தான் ஆனால் ஒட்டு மொத்த ஒப்பீட்டில் யாழ் இந்து/ சென்யோன்சை விட கீழேதானே?

இதுதான் யதார்த்தம். 

அடுத்து சில மொக்குகள் BMW ஓடுறோம் என காலரை தூக்கி விடுகிறது என்பதற்காக BMW கார் சரி எல்லை என்றோ அல்லது BMW m3 யும் பாஜாஜ் ஆட்டோவும் ஒன்று என்று சொல்ல முடியாதுதானே😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கனகரட்ணம் மாகாவித்யாலலம் கொமேர்சுக்கு நல்லம்தான் ஆனால் ஒட்டு மொத்த ஒப்பீட்டில் யாழ் இந்து/ சென்யோன்சை விட கீழேதானே?

அதற்காக யாழ் இந்துவில் படித்து 3/4 எப் எடுத்தாக்களும்.. நான் யாழ் இந்து என்று கொலரை இழுத்துவிடுவது எவ்வளவு அபந்தம் என்பதை விளங்கிக் கொண்டால்.. நல்லது. இங்கு சுமே ஆன்ரியின் சம்பாசணை தொடர்பில் இதை மையப்படுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது.. எம்மவர்களின் மனநிலை மாற்றத்தை நோக்கி.

மேலும் வழமையான உங்கள் அடுத்தவர்கள் பற்றிய கற்பனைகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்க நமக்கு காலமில்லை. 

கேம்பிரிச்சில் பட்டம் பெற்றவை எல்லாம் பெரும் அறிவாளிகள் என்றால்... இன்று உலகில்.. பல்லாயிரம் கேம்பிரிஷ் பட்டதாரிகள் அறிவாளிகளாக உலாவந்து கொண்டிருக்கனும். ஆனால் அது அல்ல யதார்த்தம் என்பதையும் தாங்கள் புரிந்து கொள்வது மிக மிக மிக அவசியம். 

கேம்பிரிச்சை.. ஒரு உதாரணத்துக்கு கையாண்டு இருக்கிறோம். 

எனக்குத் தெரிந்து இங்கு ஊரில் ஒரு சாதாரண பாடசாலையில் படித்துவிட்டு.. இங்கிலாந்திற்கு வந்து ஆங்கில தனியார் வகுப்பு எடுக்கும் ஒரு ஆச்சி.. கிழமைக்கு 2,000 - 2500 பவுன்ஸ் உழைக்கிறா. அவா கேம்பிரிஷ்.. ஆக்ஸ்பேட் ஆக்களை விட அதிக சம்பளம் எடுக்கிறா. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

அறிவாளி கனகரட்ணம் மகாவித்தியாலயம் இல்லை, சங்குபிட்டி ரோ.க.த.க வில் இருந்தும் பிரகாசிக்கலாம். 

அதேபோல யாழ் இந்துவில் படித்த நுனிபுல் மேயும் “jack of all trades master of none” பேர்வழிகளும் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதில் எங்கேயும் நான் OxBridge இல் படித்தவர்கள் எல்லாரும் அறிவாளிகள் என சொல்லவில்லை. 

ஆனால் overall தரம் என்று பார்த்தால் இவையிரண்டுமே முதல் என்பது மறுக்கவியலாத உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

சொந்த கதையை சட் எண்டு எழுதலாம் அக்காச்சி.

கற்பனையைதான் யோசிச்சு எழுதோணும் 😂

10 பேருக்கு ,10 கதையை மாறி,மாறி சொன்னால் இப்படித் தான் தடுமாறோணும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

10 பேருக்கு ,10 கதையை மாறி,மாறி சொன்னால் இப்படித் தான் தடுமாறோணும் 

😂

உந்த விடுப்பு கோஸ்டியளை குழப்பிறதில ஒரு சுகம் இருக்கு பாருங்கோ. அனுபவித்தால்தான் புரியும்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குடும்ப வாழ்வு என்பது இருபாலாரின்  சம்மதத்தோடும் குடும்பம் சமூகம் என்பவற்றின் அங்கீகாரத்தோடு நடத்தப்படுவது.

இதில் எங்கே விபச்சாரம் விலகி நிற்கிறது? 

அத்தோடு ஆண்டுக்கணக்காக சேர்ந்தே வாழ்வது.

நீங்கள் செய்யும் ஒப்பந்த அடிப்படையை பொறுத்தது 
எத்தனையோ காசு கார கிழடுகள் இளம் பெண்களை இப்படி வைத்திருப்பதை 
நீங்கள் பார்த்ததே இல்லையா?

சின்னவீடு கூட அவர் குடும்பத்தைப் பார்த்தால் சம்மதத்தோடு நடைபெறுவதுதான். இதற்கும் பணம் தேவை எனினும் இதன் நோக்கம் பணம் இல்லை.

சின்னவீட்டின் தேவை பொருளாதாரம்தான் 
பொருளாதார வசதியுடன் இருக்கும் ஒருவர் ஒரு ஏழையை சின்னவீடாக வைத்திருப்பதில்லை 

ஆனால் விபச்சாரம் - பணமோ பொருளோ இன்றி மனது ஒப்பி நடப்பதல்ல.

திருமணம் எல்லாம் மனம் ஒப்பி நடந்தால் இந்த குற்றசாட்டு ஏற்புடையது 
ஆனால் நிஜம் வேறு 

யாரும் யாருடனும் இருக்கலாம். போகலாம், வரலாம். இதில் எந்த உரிமைப்பாடோ அன்றி கட்டுப்பாடோ இல்லை.

இல்லை இருக்கிறது 
பல விபச்சாரிகள் சொந்த மனைவியைவிட நேர்மையானவர்களாக கூட இருப்பதாக 
சில ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் செய்யும் ஒப்பந்த கால அவகாசத்தை பொறுத்தது 
நீங்கள் ஒரு நாளைக்கு என்று ஒப்பந்தம் செய்தால் ... அந்த நாளை உங்களுடன்தான் கழிப்பார்கள் 
வேறு யாருடனும் போக மாட்டார்கள். 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆரிய திராவிடக் குழுமங்கள் என்பது ஒரு நூற்றாண்டுக்குள் வந்த சொற் பயன்பாடேயன்றி முன்னர் அவர் அப்படி இருக்கவில்லை

அதுதான் எல்லோராலும் அணிகரிக்கப்பட்ட விபச்சாரம் என்று அவர் சொல்லி இருக்கிறார். அதையே நீங்கள் முதலாவது வரியில் மீண்டும் எழுதி இருப்பதால் ....... விரிவாக எழுதவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எதையும் கூறலாம். ஆனால் உலக அரசியலையும் பொருளாதாரக் கொள்கைகளையும்  தீர்மானம் செய்பவர்கள் உலகின் முன்ணணிப் பல்கலைக்  கழகங்களில் கல்வி கற்றவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அதற்காக யாழ் இந்துவில் படித்து 3/4 எப் எடுத்தாக்களும்.. நான் யாழ் இந்து என்று கொலரை இழுத்துவிடுவது எவ்வளவு அபந்தம் என்பதை விளங்கிக் கொண்டால்.. நல்லது. இங்கு சுமே ஆன்ரியின் சம்பாசணை தொடர்பில் இதை மையப்படுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது.. எம்மவர்களின் மனநிலை மாற்றத்தை நோக்கி.

மேலும் வழமையான உங்கள் அடுத்தவர்கள் பற்றிய கற்பனைகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்க நமக்கு காலமில்லை. 

கேம்பிரிச்சில் பட்டம் பெற்றவை எல்லாம் பெரும் அறிவாளிகள் என்றால்... இன்று உலகில்.. பல்லாயிரம் கேம்பிரிஷ் பட்டதாரிகள் அறிவாளிகளாக உலாவந்து கொண்டிருக்கனும். ஆனால் அது அல்ல யதார்த்தம் என்பதையும் தாங்கள் புரிந்து கொள்வது மிக மிக மிக அவசியம். 

கேம்பிரிச்சை.. ஒரு உதாரணத்துக்கு கையாண்டு இருக்கிறோம். 

எனக்குத் தெரிந்து இங்கு ஊரில் ஒரு சாதாரண பாடசாலையில் படித்துவிட்டு.. இங்கிலாந்திற்கு வந்து ஆங்கில தனியார் வகுப்பு எடுக்கும் ஒரு ஆச்சி.. கிழமைக்கு 2,000 - 2500 பவுன்ஸ் உழைக்கிறா. அவா கேம்பிரிஷ்.. ஆக்ஸ்பேட் ஆக்களை விட அதிக சம்பளம் எடுக்கிறா. 

எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குமரி. பிளஸ்2 வுடன் இங்கே வந்தவா. இப்போ இரெண்டு மணத்தியாலத்துக்கு 500£ சம்பாதிக்கிறா.

🤦‍♂️

ஊர் பள்ளியில் படிப்பவர்களும் வேம்படியில் படிப்பவர்களும் ஒன்றல்ல. தேர்வில் நல்ல புள்ளி எடுத்தவர்  மட்டும் தான் வேம்படிக்குப் போகமுடியும். அதுபோலத்தான் யூனியும். ஆசைப்பட்டவுடன் மட்டும் நல்ல யூனிக்குப் போய்விட முடியாது எல்லோரும்.  என் மகளுக்கு 11ம் வகுப்பில் கேம்பிறிச்சுக்கு ஆப்பிளை செய்யும்படி ஆசிரியரே எம்மைக் கூப்பிட்டுக் கதைத்தார். ஏனெனில் நல்ல புள்ளி எடுப்பவர்களை சாதாரண பள்ளியில் இருந்தும் குறிப்பிட்ட தொகையில் எடுப்பார்கள். உங்கள் மக்களுக்கு அதிட்டம் இருந்து கிடைத்தால் நல்லது தானே என்று அதிகப்படியாக குறிப்புகள் எழுதி மகளுக்கு கொடுத்தார். ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. பாடசாலைகளே தம் பள்ளி மாணவர்களுக்கு நல்ல யூனி கிடைத்தால் தமக்குப் பெருமை என்று எண்ணும் போது நாம் சொல்வதில் என்ன தவறு. சாதாரண யூனியில் சில கற்கைநெறி நல்லதாகக்கூட இருக்கலாம். அதற்காக பெயர் போன யூனிகளில் கற்பவர்களை மட்டம் தட்டுவது தவறு.  

கேம்பிரிச்,  ஒக்ஸ்பேட் போன்ற யூனியில் எடுக்கும் சம்பளத்தில் அதிகமாக்க கூட ஆச்சி எடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் கற்பிக்க முடியுமோ ????

1 minute ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குமரி. பிளஸ்2 வுடன் இங்கே வந்தவா. இப்போ இரெண்டு மணத்தியாலத்துக்கு 500£ சம்பாதிக்கிறா.

🤦‍♂️

என்ன செய்து சம்பாரிக்கிறா என்று எங்களுக்கும் சொன்னால் ........😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.