Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலம் தழுவாத நிழல்கள் .

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் பகுதியை நீங்கள் எதோ வேண்டாவெறுப்பாக எழுதியதுபோல் இருக்கண்ணா 🙂

நான் சில வர்ணனைகளில்தான் அடக்கி வாசிக்கிறதே தவிர கதையின் போக்கில் காம்ரமைஸ் செய்வதில்லை சகோதரி.ஒருபோதும் வேண்டாவெறுப்பாக எழுதுவதில்லை....ஒருவேளை இந்த பகுதியில் சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்....!

  • Replies 73
  • Views 8.3k
  • Created
  • Last Reply
On 3/18/2020 at 9:47 PM, suvy said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.நீங்கள் சொல்வது சரியே......! நான் இந்த யாழ் இணையத்தின் ஊக்குவிப்பில்தான் முதன்முதலாக கதைகள் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இதுவரை ஒரு ஐந்தாறு கதைகள் எழுதியுள்ளேன்.ஆரம்பத்தில் கன்றுக்குட்டி துள்ளுவதுபோல் தலை கால் புரியாமல் கொஞ்சம் ரசனைகளுடன் எழுதியிருக்கிறேன். பின் வர வர இங்கு அறிமுகமானவர்கள் நிறைய படிக்கும் இடம் ஆகையால் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறேன்.கலாசாரத்திலும் கூட, நிழலி கூட  முந்தைய கதைகளில் நீங்கள் அவசர படுகிறீர்கள் போல் இருக்கு என்றெல்லாம் கருத்திட்டுள்ளார். ஆனால் நான்தான் சுயகட்டுப்பாட்டுடன் எழுதுகின்றேன்.....யாழின் சென்ற அகவைகளில் மற்றும் கதைக்களத்தில் அந்தக் கதைகள் இருக்கு நேரமிருந்தால் படித்து கருத்திடவும்.......!  😁

நிச்சயமாக நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலம்..............(14). 🐀 🐀 🐀 🐀 🐀 🐀 🐀

                                    🐀 🐀 🐀 🐀 🐀 🐀 🐀.

 

                                                               இப்போதெல்லாம் ஷாலினி வேலை முடிந்ததும் மெட்ரொவிலும் சில சமயம்  நிக்கோலாவோடும்  அவன் வீட்டுக்கு போய் விடுகிறாள்.நிக்கோலாவின் பெற்றோரும் தினமும் அவளின் வரவை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.மூவருமாக கதைத்து பேசிக் கலகலப்பாக பல வேலைகளையும் செய்கின்றனர்.ஆந்தரேக்கும் மரியத்துக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.பல வருடங்களின் பின் இழந்த வாழ்வு மீண்டதுபோல் இருக்கின்றது.தோட்ட வேலைகள் எல்லாம் செய்யும்போது அவள் கஸ்ரப்படாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள்.நீச்சல் குளம் எல்லாம் நவீனமாகச் செய்ப்பவர்களிடம் குடுத்து புது நீர் நிரப்பி நவீனப் படுத்தி இருந்தார்கள்.வீட்டின் திரைசீலைகள் எல்லாம் புதிதாக மாற்றி குழந்தைக்காக தனி அறையும்,ஷாலினி நிக்கோலாவுக்காக ஒரு கட்டில் மற்றும் புது மெத்தைகள் தலையணைகள் எல்லாம் போட்டிருந்தார்கள்.அநேக இரவுகளில் கிரில் போட்டு இறைச்சிகள் வாட்டிச் சாப்பிட்டார்கள். இப்போதெல்லாம் நிக்கோலாவும் அதிகம் வெளியே தங்குவதில்லை.இவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.ஷாலினி வேலை செய்யும் போது மூச்சு வாங்குவதையும் தாரா போல் நடப்பதையும் பார்த்துகேலியும் கிண்டலும் செய்ய ஜாலியாக பொழுது போகின்றது.போரடிக்கும் போது" லா சப்பல்" போய்   தமிழ் சாப்பாட்டு கடைகளில் இட்லி தோசை,இடியப்பம் சாம்பார் என்று சாப்பிட்டு விட்டு வரும் போது  ஷாலினியை வீட்டில்  இறக்கி விட்டு செல்வார்கள்…… !

                                                                      அன்று ஒரு சனிக்கிழமை.ஷாலினி காலையிலேயே எழுந்து வேலைக்கு போய் விட்டாள்.சாரதா வைக்கூம் கிளீனரால் வீட்டை சுத்தமாக்கிக் கொண்டு இருக்கிறாள்.பிறேமன் தொலைக்காட்சியில் கால்பந்து ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.அப்போது சாரதா பிரேமனிடம், பிரேம் நான் ஒன்று கேட்டால்  தப்பா நினைக்க மாட்டியே.... இல்லை சொல்லு.....வந்து நீ ஷாலினிக்கு பணம் ஏதாவது குடுத்தனியா.....

பிரேம் :இல்லையே ....அவ ஒருநாளும் என்னிடம் பணம் கேட்டதில்லை.எவ்வளவு....!

சாரதா: ஒரு ஐயாயிரம் வரை. முன்பு ஒரு முறை அவள் என்னிடம் ஐயாயிரம் ஈரோ வாங்கியிருந்தாள்அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தர வந்தவள்.நான்தான் பறவாய்இல்லை இருக்கட்டும் பிறகு எடுக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.ஆனால் அன்று இருந்த கோபத்தில் பணத்தை உடனே தரச் சொல்லி மெசேஜ் போட்டு விட்டேன்.பின்பு அது தப்பு என்றும் மனசில் பட்டது. ஆனால் அன்று பின்னேரமே அவள் எனது அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி இருந்தாள்.திடீரென்று அவ்வளவு பணம் யார் தருவார்கள்.அந்நேரம் அவளிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் எனக்குத் தெரியும். ஒருவேளை நீ குடுத்திருப்பியோ என்று நினைத்தேன்.....!

பிரேமன்: அது எனக்குத் தெரியாது.ஷாலினி என்னிடம் எதுவும் கேட்கவில்லை.உன்னுடைய கடிதத்தை கண்டு இடிஞ்சு போனவள்தான்.அதன்பின் அவள் முகத்தில் சந்தோஷத்தையே நான் காணவில்லை.( நீ உடனே அப்படிக் கேட்டது தப்பு என்று சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று சொல்லவில்லை).....!

சாரதாவும் ஹாலைச் சுத்தம் செய்துவிட்டு ஷாலினியின் அறைக்குள் சுத்தம் செய்யப் போகிறாள்.மேசையை ஒழுங்கு படுத்தும்போது ஒரு சோடி இமிட்டேசன் தோடும் வளையலும் கண்ணில் படுகிறது.ஷாலினி எப்பொழுதும் பவுன் நகைகள்தான் அணிவாள்.ஒரு நாளும் இதுபோல் ரோல்ட்கோல்டு நகைகள் வாங்கவே மாட்டாள்.இது எப்படி இங்கு....யோசித்தவள் உடனே சென்று அவளின் அலுமாரியைத் திறந்து பார்க்க அவள் நகைகள் வைத்திருக்கும் பெட்டி இருக்கு.உடனே தன்னிடம் இருக்கும் சாவியால் (இருவரிடமும் சாவி உண்டு) அதைத் திறந்து பார்க்கும்போது அதற்குள் றம்புத்தே வங்கியில் ஐயாயிரம் ஈரோவுக்கு நகை அடைவு வைத்த ரசீது இருக்கின்றது. அதை எடுத்து பார்த்தவள் ஓ ...வென்று பெரிதாக அழுது அரற்றிக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள். இதுவரையும் ஷாலினி பிரேம் மீது ஒரு சிறு சந்தேகம் மனசுக்குள் ஒழிந்து இருந்து கொண்டே இருந்தது.காரணம் தான் ஒரேயொருநாள் அதுவும் ஒரு அந்நியனுடன் தங்கிய போதே தன்னை இழக்க இருந்து மனேஜரால் காப்பாற்றப் பட்டதை நினைக்கிறாள்.ஆனால் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாரக்கணக்காக தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம், சும்மா இருப்பார்களா..... ஆனால் அந்த சந்தேகமும் இப்போது பூரணமாகத் தீர்ந்து விட்டது. எதுக்காக அழுவது என்று தெரியாமல் தனக்காக தன்னையே நொந்து அழுகிறாள். என்னவோ ஏதோ என்று பிரேமன் "மெஸ்ஸியின் பனால்ட்டி கிக்கையும் பார்க்காமல்"  ஓடிவந்து பார்க்க அடைவு துண்டை அவனிடம் கொடுக்கிறாள்.... ஓ ....அவள் தன் நகைகளை அடைவு வைத்துத்தான்  உனக்கு பணம் போட்டிருக்கிறாள்.....சரி....சரி...நீ அழாதே என்று சாரதாவைத் தேற்றுகிறான்.......!

                                                              

                                                                                          நிக்கோலாவின் வீட்டில் ஷாலினி ஆந்தரே மரியம் மூவரும் தோட்டத்தில் புதிதாக பூச் செடிகள் நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அப்போது ஷாலினிக்கு லேசாக வயிறு வலிக்கிறது.மரியத்துக்கு புரிந்து விட்டது.ஆந்தரேயிடம் காரை போர்டிகோவுக்கு கொண்டுவரச் சொல்லிவிட்டு ஷாலினியையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.அந்த நிலையிலும் அவள் சாரதாவுக்கும்,நிகோலாவுக்கும் தான் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்புகிறாள்.அந்நேரம் பிரேமனும் சாரதாவும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்ததால் உடனே கவனிக்க வில்லை.நிக்கோலா உடனே அங்கு வந்து விட்டான். அவளைப் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லும்போது நர்ஸ் நிக்கோலாவிடம்  நீதான் அப்பாவா என்றால் விரும்பினால் உள்ளே வரலாம்என்கிறாள்.அவன் தயங்க ஷாலினி அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே போகிறாள்.சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறக்கின்றது.ஷாலினியை கட்டிலுடன் கொண்டுவந்து அறையில் விடுகின்றனர்.நிக்கோலா பிள்ளையுடன் வந்து அதை தன் தாயின் கைகளில் தந்து விட்டு அப்படியே மண்டியிட்டு தாயின் கால்களைக் கட்டிப் பிடித்து கொள்கிறான்.ஆந்தரே சரி  சரி என்று சொல்லி அவன் தலையைக் கோதி விடுகின்றார். ....!

                                                                                       நர்ஸ் வந்து பிள்ளையை ஷாலினியிடம் குடுத்து  பால் குடுக்க வைக்கிறாள்.நிக்கோலா அவள் தலையை வருடிக்கொண்டு குழந்தையின் கன்னத்தை ஒரு விரலால் நிமிண்டிக் கொண்டு நிக்கிறான்.மரியம் அவளுக்கு ஒரெஞ் ஜூஸ் போட்டுக் கொண்டு வருகிறாள்.அறை வெப்பமாய் இருப்பதால் ஷாலினிக்கு வேர்க்கிறது. ஆந்தரே வெளியில் சென்று டீப்போவில் இருந்த பழைய சஞ்சிகைகளில் ஒன்றை எடுத்து வந்து  அவளுக்கு விசுறுகிறார்.  அந்த நேரத்தில் சாரதாவும் பிரேமனும் கையில் ஒரு அழகிய பார்சலுடன் வருகின்றார்கள்.  அப்படி ஒரு குடும்பத்தின் அன்பைச் சம்பாதித்து வைத்திருக்கும்  ஷாலினியைப் பார்த்த சாரதாவுக்கு ஒரு கணம் பொறாமை தோன்றி பின் புண்ணகையாய் மலர்கின்றது.எல்லோரிடமும் ஒரு செல்ல முத்தம் பரிமாறிக்கொள்கிறாள்.பிரேம் கை குலுக்கிக் கொள்கிறான்.ஷாலினி தன் மார்பில் உறங்கிய பிள்ளையை எடுத்து சாரதாவிடம் தருகிறாள். அப்போது நர்ஸ் ஒரு விண்ணப்ப படிவத்துடன் வந்து நிக்கோலாவிடம் தார அதை அவன் நிரப்பி என்ன பெயர் வைக்கலாம் என்று ஷாலினியிடம் கேட்க அவளும் உங்களின் குடும்பப் பெயருடன் உன்னுடைய பெயர் முதல் எழுத்தும் எனது பெயர் முதல் எழுத்தும் சேர்த்து  "நிசாந்தன்" என்று வைக்கலாம் என்கிறாள்.அது எல்லோருக்கும் பிடித்திருந்தது.அவனும் அப்படியே நிரப்பி தந்தையின் இடத்தில் தனது பெயரையும் போட்டு பதிவதற்கு எடுத்துக் கொண்டு போகிறான்.கூடவே ஆந்தரேயும்  மரியமும் பிறகு வருவதாக சொல்லிக் கொண்டு போகிறார்கள்......!

நிலம்............(14).

  • கருத்துக்கள உறவுகள்

 தொடருங்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 7:18 AM, suvy said:

சாரதா ;  ஏன் பணத்துக்கு யோசிக்கிறாயா டார்லிங்....நான் தாறன்.முழுச்செலவும் என்னோடது.என்ன சொல்கிறாய்.....!

உறவு உறவாக இருந்தாலும் பறி தனி.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 4:13 AM, suvy said:

பிரேம் மௌனமாக இருப்பதைப் பார்த்தவள், வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் பிரேம்..... என்ன சொல்லு...... ஷாலினிக்கு ஒரு அறையை குடுத்து விடலாம்,மிச்ச செலவுகளிலும் அவள் பங்கெடுத்து கொள்ளட்டும்.என்ன சொல்கிறாய்...... ஓகே சாரு. எதோ உன்னிஷ்டம்....என்று பிரேம் சொல்கிறான்.....!

புதுவீடு போக முதலே ஏழரைச்சனியை உள்ள இறக்கிறதா முடிவு பண்ணியாச்சா?

On 3/9/2020 at 2:12 AM, suvy said:

ஆனாலும் இந்தா எனது அலுமாரியின் இன்னொரு சாவி இதை நீ வைத்துக் கொள்.உனக்கு பணம் தேவைப்படும் போது தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம்.என்று சாவியைக் கொடுக்கிறாள்.அவள் மனம் நோகக் கூடாதென்று அவன் அந்த சாவியை வாங்கிக் கொள்கிறான்.ஆயினும் அவனுக்கு அந்த சாவியை உபயோகிக்கும் தேவை ஏற்படவில்லை.....!

என்னய்யா பிரான்ஸ்சில் பணத்தை அலுமாரியிலா முடக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 1:28 AM, suvy said:

நகைகளா, அவ்வளவு பெறுமதியானவையா... ஓம் எல்லாம் 22 காரட் கோல்ட். பிரெஞ் கடைகளில் 18 காரட்டில்தான் நகைகள் இருக்கும்.

இங்கு 14 கரட்டில் பெரிய சங்கிலி போட்டு கோட்டு சூட்டுக்கு மேல் விட்டிருப்பார்கள்.
பார்க்க சிரிப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 1:33 AM, suvy said:

பின்பு எல்லோரும் வெளியில் வருகின்றனர்.சவப்பெட்டியை நாங்குபேர் தூக்கி வருகின்றனர்.வெளியே மழை தூறிக்கொண்டிருப்பதால் எல்லோரும் ஒரேமாதிரி நீண்ட பிடியுள்ள பெரிய  கறுப்புக் குடை பிடித்துக் கொண்டு நிக்கிறார்கள்.ஷாலினி மட்டும் தனியாக தூறலில் நனைந்து கொண்டு நிற்பதைப் பார்த்த நிக்கோலா அவளைத்  தனது குடைக்குள் அழைத்துக் கொள்கிறான்.சவப்பெட்டி கயிற்றின் மூலம் குழிக்குள் இறக்கப் படுகின்றது.ஷாலினி உட்பட எல்லோரும் ஒவ்வொரு பிடி மண் எடுத்துப் போடுகின்றார்கள்.பின்பு எல்லோரும் கலைந்து செல்கின்றனர்..... நிக்கோலாவின் பெற்றோர் மனசால் மிகவும் உடைந்து போய் இருந்தார்கள்.ஷாலினி கொஞ்ச நேரம் அவர்கள்கூட  இருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு பின் நிக்கோலாவிடமும் விடை பெற்றுக் கொண்டு செல்கிறாள்......!

இழப்பிலும் ஒரு கிழுகிழுப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

                                 

 நிலம் ............(15).  🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝

                                       🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝.

                                             

                                         நீங்கள் கதைத்து கொண்டிருங்கள் நான் தொழிற்சாலை வரைக்கும் போயிட்டு வருகின்றேன் என்று சொல்லி பிரேமன் வெளியேறுகின்றான். இருவரும் தனியாக இருக்கின்றார்கள்.அப்போது ஷாலினி சாரதாவிடம் ஏதோ சொல்ல வந்து சொல்லத் தயங்குவது போல் இருக்கின்றது.என்ன ஷாலினி என்ன ஏதோ சொல்ல வருவது போல் இருக்கின்றது.....இல்லை சாரதா இதை எப்படி சொல்வது, நீ எப்படி எடுப்பாய் என்றுதான் குழம்புகிறேன்...... எதுவானாலும் சொல்லு ஷாலினி இந்த சில மாதங்களில் நிறைய அனுபவம் ஏற்பட்டு விட்டது.முன்பை விட இப்போது உன்னிடம் நிறைய அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கு.எதுவானாலும் சொல்லு நான் தப்பாய் நினைக்க மாட்டேன்.....நான் நேற்று மாலை இங்கு வந்ததும் வெளியே இருக்கும் பொழுது தற்செயலாக இந்த யூர்னலை பார்க்க நேர்ந்தது....சரி ... சரி என்று சொல்லி தனது தலையணையின் கீழ் இருந்து ஒரு சஞ்சிகையை எடுத்து அவளிடம் குடுக்கிறாள்.சாரதாவும் என்ன என்ற கேள்வியுடன் அதை வாங்கி பிரிக்க, இங்கு வேண்டாம் டாய்லட்டில் போய் இருந்து நடுப்பக்கத்தைப் பார். பிறகு அதைக் கிழித்து உள்ளே போட்டு பிளாஷ் பண்ணிவிடு......ஒரு விணாவுடன் அவளைப்  பார்த்தபடியே அந்த பளபளப்பான ஸ்போர்ட்ஸ் யூர்னலுடன் சாரதா டாய்லட்டுக்குள் போகிறாள்.....!

                                                                                                        அங்கே அந்த நடுப்பக்கத்தைப் பார்த்ததும் அவள் தலையே கிறுகிறுக்கிறது.அது ஒரு பழைய யூர்னல்தான்.அந்தப் பக்கத்தில் அவளும் மில்டனும் சுவிஸின் மலை உச்சியில் முத்தமிட்ட படம் அழகிய வர்ணத்தில் இருக்கிறது.அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லையென்றால் யார் நம்புவார்கள்.வேர்க்கிறது.அன்று தங்களைச் சுற்றி பலர் படம் எடுத்தது தெரியும். காரணம் அவன் ஒரு பிரபல விளையாட்டு வீரன். ஆனால் அதுக்குள்ளே ஒரு ரிப்போர்ட்டர் இருப்பான் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லையே. அந்த மாலை நேரம் எதிர்பாராமல் அவனோடு முத்தமிட்டது தப்புதான்.வேறொரு தப்பும் செய்யவில்லையே. ஏன் நீ மதுவும் அருந்தி போதையில் இருந்தாயே மனம் இடித்துரைக்கிறது. கடவுளே இதென்ன சோதனை. நாம் ரகசியம் என்று நினைக்கும் எல்லா இடத்திலும் ஏதோ சில கண்கள் எம்மைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.ஷாலினி சொன்னபடி அந்தப் பக்கத்தை கிழித்து போட்டு   பிளாஷ் பண்ணிவிட்டு வருகிறாள். ஷாலினி என்னை நம்புடி நான் ஒரு தப்பும் செய்யவில்லை. அது நானே எதிர்பாராமல் நடந்தது என்று சொல்ல. நீ எதுவும் சொல்ல வேண்டாம் சாரதா.நான் உன்னை தப்பாகவே நினைக்கவில்லை. இப்ப கூட நான் இதை உனக்கு காட்டியதற்கு காரணம் எப்போதாவது யாரும் ஏன் அண்ணா கூட  இது பற்றி பிரஸ்தாபித்தால் நீ அதை எதிர்கொள்ள தயாராய் இருக்க வேண்டும், மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் சுலபமாய் கடந்து போக வேண்டும் என்றுதான்.....அழுகிறவளை தன்நெஞ்சுடன் சேர்த்து அனைத்துக் கொண்டாள்.எல்லாவற்றையும் மறந்து விடு, போய் முகத்தைக் கழுவிக் கொண்டுவா.இனி ஆட்கள் வருவினம்.....! !!

                                                                                அப்போது அங்கு பிரேமனும் வந்து விடுகிறான்.சாரதா ஷாலினியிடம் எப்ப துண்டு வெட்டுவார்கள் ஷாலினி. நான் உனக்காக உனது அறையில் நீ பிள்ளையுடன் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வைக்கிறேன்.....!

ஷாலினி: அது அவசியமில்லை சாரதா. நான் பிள்ளையுடன் நிக்கோலா வீட்டுக்குத்தான் போகிறேன்.நிக்கோலாவும் அவன் பெற்றோர்களும் பிள்ளைக்காக தமது வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து வைத்து விட்டு காத்திருக்கிறார்கள்.....!

சாரதா: என்னடி நீ, அவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை, சுத்தமாகப் பொறுப்பு இல்லாதவன்.அவனை நம்பி நீ போறேன் என்கிறாய்.பைத்தியமாடி நீ.......!

ஷாலினி: நான் பைத்தியம்தான் சாரதா.ஆனால் இப்ப தெளிஞ்சுட்டுது. நான் நிக்கோலாவை நம்பி போவதாக யார் சொன்னது. இப்ப நான் யாரையுமே நம்புவதில்லை. எமிலி மரணத்துக்கு பின் ஒருநாள் அவள் பெற்றோர்களுடன் கதைக்கும்போது அவர்கள் விரக்தியுடன் சொன்னார்கள்.தங்களுக்கும் வயசாகி விட்டது. மகளும் இறந்து விட்டாள். இந்த வீட்டில் இருக்க வெறுமையாய் இருக்கு.நிக்கோலாவுக்கும் இன்னும் பொறுப்பு வரவில்லை.கண்டபடி கண்ட கண்ட பெண்களுடன் ஊர் சுற்றுகிறான்." நீ சொன்னது போலவே "அதனால நாங்கள் எங்களுடைய கிராமத்துக்கும் பின் முதியோர் இல்லத்துக்கும்  போகப் போவதாக சொன்னார்கள்.எனக்கு நெஞ்சு திக் என்று இருந்தது.என்ன இருந்தாலும் அவர்களது பேரன் என் வயிற்றில் வளர்கிறது.மேலும் என்னுடைய பெற்றோர் மாதிரித்தானே அவர்களும்..... அப்போதுதான் நான் சொன்னேன் எனது வயிற்றில் வளர்வது உங்களின் பேரப்பிள்ளைதான்.நீங்கள் விரும்பினால் இவனுக்காக இவனுடன் நீங்கள் இங்கே இருக்கலாம் என்று சொன்னேன்.அவர்களும் கூட முதலில் நான் ஏதோ அவர்களை ஏமாத்தவும் அவர்களது சொத்துக்காக  நாடகமாடுவதாகவும்  கூறி என்னை நம்பவில்லை.நான் அவர்களுடன் மிகவும் தயவாகக் கதைத்து நான் அப்படியான பெண் இல்லை.உங்களது சொத்து எனக்கோ என் பிள்ளைக்கோ அவசியமில்லை என்று சொல்லித்தான் அவர்களை ஒருவாறு சமாதானம் செய்தேன். இப்போது அவர்களுக்கே வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஆர்வமும் ஏற்பட்டு விட்டது.நாளடைவில் என்மீதும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.நீங்கள் வரும்போது பார்த்தனீங்கள்தானே.

                                                                                                  அதைவிட அதிசயம் நிக்கோலா இப்போதெல்லாம் கடையும் வீடுமாய் இருக்கிறான். வியாபாரத்தையும் ஒழுங்கா கவனிக்கிறான்.முன்பு போல் பார்ட்டி பெண்கள் என்று அலைவதில்லை. ஒருநாள் ஏண்டா நீ உன் சிநேகிதிகளுடன் டேட்டிங்  போவதில்லையா என்று கேட்டேன்.அதுக்கு அவன் இல்லை ஷாலினி.இப்போதெல்லாம் சிநேகிதிகளுடன் முழு ஈடுபாடாய்  என்னால் அவர்களுடன் இயங்க முடிவதில்லை.எங்கும் நீயும் இந்தப் பிள்ளையும்தான் வந்து டிஸ்டார்ப் பண்ணுது. நான் இப்ப சிகரெட் மது எல்லாம் கூட அதிகம் எடுப்பதில்லை தெரியுமா.நீ இங்கு வந்தபின் எனது அம்மா அப்பாவின் சந்தோஷத்தைப் பார்க்கவே எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கு என்கிறான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதைவிட வேறென்ன வேண்டும் சொல்லு சாரதா.

  சாரதா: அவளின் கைகளை பிடித்துக் கொண்டு என்னை மன்னித்துக் கொள்ளடி ஷாலினி. நான் நிறைய தப்பு பண்ணி விட்டேன் என்று குரல் தளதளக்க சொல்கிறாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது......சீ ....அழாதையடி.....எதிர்பார்க்காத திருப்பங்களால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாய் இருக்கின்றது. என்று சொல்லி சாரதாவின் கண்களைத் துடைத்து விடுகிறாள்.

 

                                                          அன்று நிக்கோலா ஒரு புதிய பென்ஸ் காருடன் ஆஸ்பத்திரி வாசலில் வந்து நிக்கிறான்.ஷாலினி முன்னே வர பின்னால் குழந்தையுடன் சாரதாவும் பிரேமும் வருகிறார்கள்.காரின் பின் சீட்டில் ஆந்தரேயும் மாரியமும் இருக்க அவர்களுக்கு நடுவில் குழந்தையின் துணியாலான கூடை இருக்கிறது.மரியம் சாரதாவிடம் பிள்ளையை வாங்கி அதில் படுக்க வைத்து பிடித்துக் கொள்கிறாள்.ஷாலினி முன்னால் எற கார் இவர்களுடன் விடை பெற்றுக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் அசைந்து செல்கிறது.இவர்கள் இருவரும் கை அசைக்கிறார்கள்.....!

பிரேமன்:  ம்....தப்பென்று நினைத்தது சரியாய் இருக்கு என்று சொல்கிறான்.....!

சாரதா: அவசரமாக  என்ன சொல்கிறாய் பிரேம்.....!

பிரேம்: இல்லை சாரதா, ஷாலினியை அன்று நீ வீட்டுக்கு அழைத்து வருவதாகச் சொன்னதும் நான் வேண்டாம் என்று தடுத்தேன்.காரணம் நிக்கோலா ஒரு பிளேபாய்யாக இருந்தான்.இவள் வேறு அவனுடன் சிநேகிதமும் தொடர்புமாய் இருக்கிறாள் என்று பயந்தேன்.ஆனால் அவள் தனது பொறுமையாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல எண்ணங்களாலும் அவனையும் திருத்தி அவன் பெற்றோர்களுக்கு வயதான காலத்தில் ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறாள்.அதன் பிரதிபலனாய் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என்கிறான்...... ஓம் பிரேம் அவள் ஒரு பெருமைப்படத்தக்க இனிமையான பெண் என்று சாரதா அதை ஆமோதிக்கிறாள்......!

                                                                                    சுபம்.  🦚

யாழ் 22 அகவைக்காக

ஆக்கம் சுவி......!                                                                                  

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தொடர்' பின்னீட்டீங்கள் சுவியர். சட்டுப்புட்டு என்டு அடுத்ததுக்கு அடுக்கு பண்ணுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திருப்பத்துடன் கொண்டுபோகிறீர்கள் என்று எண்ண பட்டென்று கதையை முடித்து சுபம் போட்டுவிட்டீர்களே அண்ணா. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது அண்ணா ...கதாநாயகன் ,நாயகியை விட்டு விட்டு துணை நடிகையை கொண்டு படத்தை ஏனோ தானோ என்று முடித்து விட்டிர்களோ என்று தோன்றுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இது ஏதோ அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது அண்ணா ...கதாநாயகன் ,நாயகியை விட்டு விட்டு துணை நடிகையை கொண்டு படத்தை ஏனோ தானோ என்று முடித்து விட்டிர்களோ என்று தோன்றுகின்றது 

உண்மை தான் ரதி .மனுசனுக்கு என்ன பிரச்சனையோ.அது தான் நான் கனக்க நோன்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 1:51 AM, suvy said:

அவர்களுக்கு முன் அந்த அறைக்கு சென்றவர் அவளது பெட்டியை எடுத்து வேறொரு அறையில் வைத்து விட்டுவர இருவரும் ஒருவரை யொருவர் அணைத்தபடி அறைக்கு முன்னால் வருகின்றனர்.அவர் மில்டனோடு கை குலுக்கி விட்டு அவனை அவனது அறைக்குள் தள்ளாத குறையாய் அனுப்பிவிட்டு, வாருங்கள் மேடம் உங்களின் ரூம் தயாராகி விட்டது என்று சொல்லி அவளை அழைத்து சென்று அந்த அறைக்குள் விட்டு கதவை சாத்திவிட்டு செல்கிறார்.....!

ஆஆஆ
சிவபூசைக்குள் கரடியா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

இப்போதெல்லாம் சிநேகிதிகளுடன் முழு ஈடுபாடாய்  என்னால் அவர்களுடன் இயங்க முடிவதில்லை.எங்கும் நீயும் இந்தப் பிள்ளையும்தான் வந்து டிஸ்டார்ப் பண்ணுது. நான் இப்ப சிகரெட் மது எல்லாம் கூட அதிகம் எடுப்பதில்லை தெரியுமா.நீ இங்கு வந்தபின் எனது அம்மா அப்பாவின் சந்தோஷத்தைப் பார்க்கவே எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கு என்கிறான்

கால்கட்டு பாரிஸ்காரனுக்கும் வேலை செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவி
இந்தத் தொடரில் கதை இப்படித் தான் போகப் போகுது என்று தொடரும்போது திடீரென்று கதையின் போக்கை மாற்றிக் கொண்டு போகும் திறன் அபாரம்.
மிகுந்த பாராட்டுக்கள்.

இன்னும் கொஞ்ச காலம் வெளியே போக முடியாது.அடுத்த கதையை ஆரம்பிக்க வேண்டியது தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

இது ஏதோ அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது அண்ணா ...கதாநாயகன் ,நாயகியை விட்டு விட்டு துணை நடிகையை கொண்டு படத்தை ஏனோ தானோ என்று முடித்து விட்டிர்களோ என்று தோன்றுகின்றது 

 

16 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மை தான் ரதி .மனுசனுக்கு என்ன பிரச்சனையோ.அது தான் நான் கனக்க நோன்டவில்லை.

அப்படியெல்லாம் இல்லை. நான் முன்பே குறிப்புகள் எடுத்து வைத்து கொண்டு ஆறுதலாகத்தான் எழுதியிருக்கிறேன்.இதுக்கு மேல் போனால் சும்மா வழ வழ வென்று போய் விடும் என்று நினைத்தேன்.மேலும் இதில் யாருக்கும் ஹீரோயிசம் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.அதை முதல் அத்தியாயத்தில் ஆதிவாசியின் பதிலில் குறிப்பிட்டுள்ளேன். யதார்த்தமாய் அந்தந்த சூழ்நிலைக்கேற்பத்தான் மனிதர்கள் மாறுபடுவார்கள். இப்பவும் பாருங்கள் சாதாரணமாக வரிசையில் ஒழுங்கு பேணும் பிரெஞ்சுக்காரர்களும் கடைகளுக்குள் நின்று இழுபறிப்படுகிறார்கள்.இதுதான் நிஜம்.இதை வெளிப்படுத்த ஒரு கொரோனா தேவையாய் இருக்கு.இதில்  சாரதாவும் பிரமனும் கூட விதிவிலக்கில்லை. உங்கள் அணைவரின்  ஊக்கத்தினால்தான் என்னால் இவ்வளவு எழுத முடிந்தது. .......!

ஆஞ்சனேயர் மாதிரி வந்து வாழ்த்திவிட்டாய் ஆதி, இதில் மனிதர்கள் அந்தந்த நேரத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் குறை நிறைகளுடன் வருவார்கள் என நினைக்கிறேன். இதுவரை எனக்கும் சரியாய் சொல்லாத தெரியவில்லை.துருச்சாமியுடன் பழகியவர்கள் எல்லோரும் அப்புறம் அவரை மறக்கவில்லை. நன்றி ஆதி வருகைக்கும் கருத்துக்கும்.......இன்றைய மகளிர்தின வாழ்த்துக்கள்.....!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுவி அவர்களே!

ஒரு அழகான ஆழமான குறுநாவல். சிறப்பு. யாழ்களத்தை மேலொமொரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளீர்கள். கடந்த துருச்சாமி ஒருவகையென்றால்; சாரதா-பிறேம். சாலினி - சாராதா படிப்பினையான படைப்பு. மேற்போக்கான ஐயங்கள் குடும்பங்களை விரைந்து சிதைத்துவிடும் ஆபத்தானது என்பதை சாரதா பதிவுசெய்துள்ளார். கடவுளாக வந்து காத்த முகாமையாளரையும் மறக்கமுடியாது. 

பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக. படையலைப் பெருக்குக.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 9:38 AM, suvy said:

ரத்தியும் அவளிடம் மூக்கு துடைக்க  ரிசூ பேப்பரை நீட்டியவாறே "இந்த ஆண்களே இப்படித்தான்.எப்பவும் சபல புத்தியுடையவர்கள்.கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் எங்க எப்ப எதைப் பார்க்கலாம் என்று அலைவார்கள்.அதுதான் நான் ஒருத்தரையும் நம்புறதில்லை.நம்பவும் மாட்டன்".என்கிறாள்

ஹய்!! ரத்தி வந்திட்டா😃 நான் லேட்டாக வந்திட்டன் போலிருக்கே!!😜

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 9:57 AM, suvy said:

வனிதாவின் முயற்சியில் சாரதாவும் இப்ப மிக நவநாகரீகமான ஆடைகள் அணிகிறாள்.தலை அலங்காரமும் மாறி விட்டிருந்தது. நீளமான கூந்தல் பிரேமனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலேயே அதையும் குட்டையாக கத்தரித்து ஆங்காங்கே மண்நிறத்தில் டையும் அடித்திருந்தாள்.

கலியாணத்திற்கு முன்னர் நவநாகரீகமான மங்கையாக இருக்கவில்லையா?

கூந்தலைக் கட்டையாக வெட்டி மண்ணிற டையும் அடித்தால் அழகு கூடும் என்று நம்புகின்ற கூட்டம் இருக்குத்தான்!

On 3/13/2020 at 8:28 AM, suvy said:

ஷாலினியைப் பார்த்து அந்தப் பணத்தை நான் தருகிறேன் நீ இந்த நகைகளை திருப்பி வீட்டுக்கு எடுத்துச் செல். பின்பு எனக்கு பணத்தைத் தா....!

 ஏண்டா நீங்கள் எல்லாரும் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா

இவ்வளவு முட்டாளாக இருக்கின்றானே என்று நினைத்தபோது அடைவு கொடுக்காமல் கிடைக்கக்கூடிய பணத்தை தட்டிக் கழித்த ஷாலினி முட்டாளாக இருக்கிறாள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 8:33 AM, suvy said:

உனக்கு பத்து, நூறு தோழிகள் இருக்கலாம்.அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.இனிமேலும் நீ எப்போதும் போலவே இரு.நான் ஏனென்று கேட்க மாட்டேன்,உன் வழியில் குறுக்கிட மாட்டேன்.நீ என்னை சந்திக்கவும் வர வேண்டாம்.ஆனால் நான் உன் ஒருத்தனுடன்தான் என் அன்பைப் பகிர்ந்து கொண்டேன்.நீ ஒருத்தன்தான் என்னை நெருங்கலாம், என் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம்

ம்ம்ம். இப்படி ஒருத்தி கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்😲 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சுவியரே அந்த பெண் கிளிச்சு போட்டு தண்ணிய அமிழ்த்திச்சென்ற அந்த மெகசீன் ஒரு நாள் கண்ணில் படும் பிரேமுக்கு  அப்போது பகுதி ரெண்டை அடுத்த வருடம் எதிர்பார்க்கிறேன்

கதை அருமை பெண் புத்தி எப்பவும்ம் தீர விசாரிக்காமல்  துள்ளிக்குதிப்பது வழமை

பெட்டை கோழி பெட்டைக்கோழிதான் கொக்கரிப்பு கொக்கரிப்பு 😃😃

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2020 at 09:44, suvy said:

மிகவும் உணர்ச்சி பூர்வமானவளாகவும் பாரம்பரியம் மிக்கவளுமாய் இருக்கிறாள்.எதையும் நேர் படப் பேசுகிறாள்.ஏதோ ஒரு கவர்ச்சி அவளிடம் இருக்குது

நிக்கோலாவுக்கு அட்டமத்தில சனி வந்திருக்குப் போல😬. அப்பத்தான் இப்படியெல்லாம் பேசவைக்கும்😜

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2020 at 09:29, சுவைப்பிரியன் said:

அருமையான தொடர்' பின்னீட்டீங்கள் சுவியர். சட்டுப்புட்டு என்டு அடுத்ததுக்கு அடுக்கு பண்ணுங்கோ.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவை......எழுதலாம் என்றுதான் யோசிக்கிறேன்.....எதைப்பற்றி எழுதுவது என்பதுதான் பிரச்சினை......!  🤔

On 21/3/2020 at 10:24, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல திருப்பத்துடன் கொண்டுபோகிறீர்கள் என்று எண்ண பட்டென்று கதையை முடித்து சுபம் போட்டுவிட்டீர்களே அண்ணா. 🤔

திருப்பங்கள்தான் கதையை சுவாரஸ்யமாக்கும் சகோதரி......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.