Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Featured Replies

5 hours ago, சாணக்கியன் said:

இயற்கையை அறிவதுதான் விஞ்ஞானம். அந்த அணுவும் அது சொல்லித்தான் தொியும். விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முயற்சியும், பயிற்சியும், தைரியமும் இல்லாமல் குறுக்கு வழியில் செல்ல எத்தனிப்பவர்களின் விளக்கம் அல்லது கட்டுக் கதையே கடவுள்.

நீங்கள் எழுதுவதை பார்த்தால் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது। ஒரு வேலை இந்த கொரோன உங்களை பிடித்தாலும் இதே நம்பிக்கையில்தான் இருப்பீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Vankalayan said:

நீங்கள் எழுதுவதை பார்த்தால் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது। ஒரு வேலை இந்த கொரோன உங்களை பிடித்தாலும் இதே நம்பிக்கையில்தான் இருப்பீர்களா? 

நான் யாரையும் நம்புவேன்.ஆனால் கடவுள் இல்லையென வாதாடும் நாத்தீகர்களை ஒரு போதும் நம்புவதில்லை.

  • தொடங்கியவர்

அறிவியல் சொல்கின்றது சனநாயகம் ஊடான அரசமைப்பே சிறந்தது என்று. 

அதே அறிவியல் சொல்கின்றது, மக்களை ஒன்று கூட வேண்டாம் என்று. 

ஆகவே, தேர்தல் நடக்க உள்ள நாடுகளான இலங்கை, அமெரிக்க நாடுகளில் அறிவியல் ரீதியாக எது சரி ? கொரானாவால் மக்களின் உரிமை பறிக்கப்படுமா? 

சரி, மத வழிபாடு என்பதும் அறிவியல் ரீதியாக பல நாடுகளில் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. எனவே, அதே உரிமையை ஒன்று கூடாதீர்கள் என எவ்வாறு அறிவியல் ரீதியாக கேட்க முடியும்? 🙂 🤣

ஒரு வகையில் உலகில் வாழும் அனைவரும் நாத்தீகர்களே. கடவுளை நம்பும், கடவுளை தேடும், கடவுளை அடையவிரும்புவதாக கூறும் (ரீல் விடும் ) பக்தன் ஒருவன்  தனக்கு மாரடைப்பு வரும் போது கோவிலை நோக்கி  கடவுளிடம் ஓடுவதில்லை.  தனது கருதுகோள்ப்படி தான்  நம்பிய கடவுளிடம் தானே போகிறோம் என்று  கூட எண்ணாமல் செத்து தொலைந்து  போவேன் என்ற பயத்தில் வைத்தியரிடம்  தான் போகிறான். ஹார்ட்சத்திரசிகிச்சைக்கு ஹார்ட் ஷபெஷலிஸ்டிடைத் தான்  தேடிப் போகிறான். அவனுக்கு நன்றாகவே தெரியும் அர்சசனை தன்னை காப்பாற்றாது என்று. 

ஒரு விபத்தில் தப்பிய ஒருவன் தெய்வாதீனமாக உயிர் தப்பிவிட்டேன் என கூறுபவன் அதே விபத்தில் இறந்தவனை கடவுள் கொன்று விட்டார் என்று கூறுவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது கட்டுக்கதை என்பது அவனது  அடி மனதிற்குத்  தெரியும் . 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஒரு விபத்தில் தப்பிய ஒருவன் தெய்வாதீனமாக உயிர் தப்பிவிட்டேன் என கூறுபவன் அதே விபத்தில் இறந்தவனை கடவுள் கொன்று விட்டார் என்று கூறுவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது கட்டுக்கதை என்பது அவனது  அடி மனதிற்குத்  தெரியும்

ஏதாவது ஒரு நல்லது நடந்தால் அது இறைவனால் தான் நடை பெற்றது என்று நம்பவைப்பதற்காக தெய்வாதீனமாக என்று  ஒரு சொல்லை ஏற்படுத்தி காலகாலமாக பதிய வைத்திருக்கிறார்கள்.இந்த இறைவன் என்பவர் ஒரு மோசமான புகழ் விரும்பி. ஒரு சிறு துரும்பை கூட எடுக்காமல் அதில் தொடர்புள்ள மனிதன் பெற்று கொள்ள வேண்டிய புகழை தான் சும்மா இருந்தபடி பெற்று கொள்வார். தோல்வி அடைந்தால் அது மனிதனின் தவறால் நடந்தது. அவுஸ்ரேலியாவில் காட்டு தீயினால் பேரழிவு நடை பெற்றது பல உயிரினங்கள் கருகி இறந்தன. பின்பு ஒரு மழை வந்தது. மழையை அவர் தான் கொண்டுவந்தார் என்று இறைவனின் கருணையை பற்றி பரவசபட்டனர் பக்தர்கள்.

10 hours ago, குமாரசாமி said:

நான் யாரையும் நம்புவேன்.ஆனால் கடவுள் இல்லையென வாதாடும் நாத்தீகர்களை ஒரு போதும் நம்புவதில்லை.

நான் யாரையும் நம்புவேன்.ஆனால் இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்பவர்களை ஒரு போதும் நம்ப மாட்டேன் இது ஒரு அறிவார்ந்த கருத்து தான்.

Edited by விளங்க நினைப்பவன்

  • தொடங்கியவர்
5 hours ago, tulpen said:

ஒரு வகையில் உலகில் வாழும் அனைவரும் நாத்தீகர்களே. கடவுளை நம்பும், கடவுளை தேடும், கடவுளை அடையவிரும்புவதாக கூறும் (ரீல் விடும் ) பக்தன் ஒருவன்  தனக்கு மாரடைப்பு வரும் போது கோவிலை நோக்கி  கடவுளிடம் ஓடுவதில்லை.  தனது கருதுகோள்ப்படி தான்  நம்பிய கடவுளிடம் தானே போகிறோம் என்று  கூட எண்ணாமல் செத்து தொலைந்து  போவேன் என்ற பயத்தில் வைத்தியரிடம்  தான் போகிறான். ஹார்ட்சத்திரசிகிச்சைக்கு ஹார்ட் ஷபெஷலிஸ்டிடைத் தான்  தேடிப் போகிறான். அவனுக்கு நன்றாகவே தெரியும் அர்சசனை தன்னை காப்பாற்றாது என்று. 

ஒரு விபத்தில் தப்பிய ஒருவன் தெய்வாதீனமாக உயிர் தப்பிவிட்டேன் என கூறுபவன் அதே விபத்தில் இறந்தவனை கடவுள் கொன்று விட்டார் என்று கூறுவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது கட்டுக்கதை என்பது அவனது  அடி மனதிற்குத்  தெரியும் . 

கடவுள் நம்பிக்கை என்பது வைத்தியர் என்ற வேலைப்பதவி உருவாக முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டது. 

நீங்கள் அடிக்கடி கூறுவது போன்ற அறிவியல் வளர்ச்சியால் மனிதனால் வைத்தியர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இருந்தும், வைத்தியத்தால் கொரானா உட்பட பல வருத்தங்களுக்கு மருந்து இல்லை. அந்த இடத்தில், சில மனிதர்கள் இறைவனை நாடுவது ஒரு கலாச்சார நிகழ்வாயும் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் யாரையும் நம்புவேன்.ஆனால் இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்பவர்களை ஒரு போதும் நம்ப மாட்டேன்

??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நான் யாரையும் நம்புவேன்.ஆனால் இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்பவர்களை ஒரு போதும் நம்ப மாட்டேன் இது ஒரு அறிவார்ந்த கருத்து தான்.

இல்லாத ஒன்றை இல்லையென்று சொல்பவர்கள் - உண்மையாளர்கள் 

அதை நம்ப மறுப்பவர்கள் - பொய்யர்கள் 

  • தொடங்கியவர்

கொரோனாவிற்கு மதம்  கிடையாது ;

கடவுளிற்கும் மதம் கிடையாது ; 

மனிதனுக்கு மதமும் கிடைக்கும். 

2 hours ago, ampanai said:

கடவுள் நம்பிக்கை என்பது வைத்தியர் என்ற வேலைப்பதவி உருவாக முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டது. 

நீங்கள் அடிக்கடி கூறுவது போன்ற அறிவியல் வளர்ச்சியால் மனிதனால் வைத்தியர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இருந்தும், வைத்தியத்தால் கொரானா உட்பட பல வருத்தங்களுக்கு மருந்து இல்லை. அந்த இடத்தில், சில மனிதர்கள் இறைவனை நாடுவது ஒரு கலாச்சார நிகழ்வாயும் உள்ளது.  

கடவுள் உட்பட நாம் உணரும், கொண்டாடும் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவைதான்.. இயற்கையைத்தவிர. ஒரு இருண்ட அறையினுள் என்ன இருக்கிறது என்று தொியாத போது அதில் ஏற்படும் மயக்கம், பயம்தான் கடவுள் சிலருக்க அது பேய். அங்கே விஞ்ஞானம் ஒரு விளக்கை கண்டுபிடித்து தரும்போது அந்த பயம் நீங்கி விளக்கம் கிடைக்கிறது. பயம் அகலுகின்றது. முன்பு பயந்த பலவற்றிற்கு இன்று நாங்கள் பயப்படுவது கிடையாது. எழுமாறான (probability) பல நிகழ்வுகளால் கடவுள் கல்லாக் கட்டுகிறார். உதாரணம் முறிகண்டி பிள்ளையார். (விபத்துகளுக்கு விஞ்ஞானத்தால் statistics மற்றும் road safety rules என்பன தரப்பட்டிருந்தாலும் பிள்ளையார் வருமானத்தில் குறைவில்லை). இன்று தொியாதவை பல நாளை தொியவரும். நடுவில் இயலாமையால் நம்பிக்கை இழந்தவர்கள் ஆத்திகத்தில் குதித்து மறைந்துவிடுவார்கள். நாங்கள் (மனித இனம்) நீண்ட தூரம் கடந்து வந்துள்ளதுள்ளோம், விஞ்ஞானத்தின் துணையுடன் இன்னும் பயணிப்போம்.. இந்தக் கடவுள் பயமும் கூடவே வரும்.. மனிதன் இந்த உலகில் வாழும் வரை மட்டும்.

13 hours ago, குமாரசாமி said:

நான் யாரையும் நம்புவேன்.ஆனால் கடவுள் இல்லையென வாதாடும் நாத்தீகர்களை ஒரு போதும் நம்புவதில்லை.

யாரையும் நம்பாதீர்கள்... உங்களை மாத்திரம் நம்புங்கள்.. அதுவே நாத்திகம்.

ஒரு ஆத்திகன் பிச்சைபோடும் போது கூட தனக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நினைக்கிறான். ஆனால் நாத்திகன் எதையும் பிரதிஉபகாரமாக எண்ணுவதில்லை.

Quote

Morality is often associated with religion, but new research reveals that children from religious households are actually less generous than kids from a secular background.

Religion Makes Children More Selfish, Say Scientists

14 hours ago, Vankalayan said:

நீங்கள் எழுதுவதை பார்த்தால் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது। ஒரு வேலை இந்த கொரோன உங்களை பிடித்தாலும் இதே நம்பிக்கையில்தான் இருப்பீர்களா? 

உங்களைப் போலவே நானும் பிறக்கும் போதே என் பெற்றோரால் மதம் என்னும் போதைக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட்டாலும், இப்போது அதிலிருந்து விடுபட போராடுகிறேன். சாகும்போது மதமில்லாத மனிதனாக சாகவே விரும்புகிறேன். இன்சா அல்லா! 😉

14 hours ago, ampanai said:

அறிவியல் சொல்கின்றது சனநாயகம் ஊடான அரசமைப்பே சிறந்தது என்று. 

அதே அறிவியல் சொல்கின்றது, மக்களை ஒன்று கூட வேண்டாம் என்று. 

ஆகவே, தேர்தல் நடக்க உள்ள நாடுகளான இலங்கை, அமெரிக்க நாடுகளில் அறிவியல் ரீதியாக எது சரி ? கொரானாவால் மக்களின் உரிமை பறிக்கப்படுமா? 

சரி, மத வழிபாடு என்பதும் அறிவியல் ரீதியாக பல நாடுகளில் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. எனவே, அதே உரிமையை ஒன்று கூடாதீர்கள் என எவ்வாறு அறிவியல் ரீதியாக கேட்க முடியும்? 🙂 🤣

நீங்கள் வீதிக்கு அடுத்தபக்கம் உள்ள கடையில் 🍝 சாப்பிடப் போகிறீர்கள்.. ஆனால் வீதியில் ஒரு வாகனம் 🚖வேகமாக வருகின்றது... என்ன செய்வீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறுகளில் இனி யேசுவும் இல்லை prayer உம் இல்லை,.... ஐ...........ஜாலி.....

இதுக்குள்ள சில விசர் கோஷ்டிகள் கூட்டு பிரார்த்தனை என்டு கோவில்ல கூடி இருக்கு.
அய்யருக்கு கொரோனாவையும் வைச்சு காசடிக்கிற ஆசை!
இவனுகளை ஜெயில்ல அடைக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஞாயிறுகளில் நடக்கும் கொரோன விசேஷ ஆராதனை உங்கள் கண்ணில் தென்படவில்லையோ

Just now, MEERA said:

ஏன் ஞாயிறுகளில் நடக்கும் கொரோன விசேஷ ஆராதனை உங்கள் கண்ணில் தென்படவில்லையோ

நீங்க சொல்றது முழு உண்மை.
நாங்க முதல்ல எங்கட பிழைகளை திருத்துவம் என்ட எண்ணம் தான்.

இன்னும் சொல்லோனும் என்டா. குறிப்பா இத்தாலில இருந்து தப்பி ஓடிவந்த ஆட்கள் கூடுதலா நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ ஆட்களாம். இவங்கள் பெருமளவு ஒழுக்கக்கேடான முறைல தலைமறைவான திரிறதால பெரும் பிரச்சினை என்டு வைத்தியர்கள் அறிவிச்சு இருக்கீனம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, சாணக்கியன் said:

நீங்கள் வீதிக்கு அடுத்தபக்கம் உள்ள கடையில் 🍝 சாப்பிடப் போகிறீர்கள்.. ஆனால் வீதியில் ஒரு வாகனம் 🚖வேகமாக வருகின்றது... என்ன செய்வீர்கள்?

வீதியில், வாகனம் வேகமாக வந்தாலென்ன, மெதுவாக வந்தாலென்ன - மனிதன் வீதியைக் கடக்கும் விதம் அறிந்து வைத்திருக்கிறான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, சாணக்கியன் said:

ஒரு ஆத்திகன் பிச்சைபோடும் போது கூட தனக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நினைக்கிறான். ஆனால் நாத்திகன் எதையும் பிரதிஉபகாரமாக எண்ணுவதில்லை

ஒரிருவர் செய்வதை வைத்து முழு சமுதாயத்தையும் எடை போடுவது முற்றிலும் தவறு.

6 hours ago, சாணக்கியன் said:

நீங்கள் வீதிக்கு அடுத்தபக்கம் உள்ள கடையில் 🍝 சாப்பிடப் போகிறீர்கள்.. ஆனால் வீதியில் ஒரு வாகனம் 🚖வேகமாக வருகின்றது... என்ன செய்வீர்கள்?

உலகில் வாழும் உயிரினங்களில் ஏன் மனித இனத்திற்கு மட்டும் ஆறறிவு? 😷

22 minutes ago, குமாரசாமி said:

ஒரிருவர் செய்வதை வைத்து முழு சமுதாயத்தையும் எடை போடுவது முற்றிலும் தவறு.

உலகில் வாழும் உயிரினங்களில் ஏன் மனித இனத்திற்கு மட்டும் ஆறறிவு? 😷

குமாரசாமி அண்ணே, கள் அடித்தாலும் கருத்தாய் எழுதுகிறீர்கள்। தொடருங்கள்।

6 hours ago, மாங்குயில் said:

வீதியில், வாகனம் வேகமாக வந்தாலென்ன, மெதுவாக வந்தாலென்ன - மனிதன் வீதியைக் கடக்கும் விதம் அறிந்து வைத்திருக்கிறான் 

அதுபோல எதை முதல் செய்ய வேண்டுமோ அதைதான் முதலில் செய்ய வேண்டும். தேர்தல் கொரோனா இரண்டிலும் அவசரமோ அது முதலில்.

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

6 hours ago, குமாரசாமி said:

உலகில் வாழும் உயிரினங்களில் ஏன் மனித இனத்திற்கு மட்டும் ஆறறிவு? 😷

முன்பு இருந்தன. ஆறறிவு உள்ள விலங்குகளில் மனிதன் மட்டுமே எஞ்சியுள்ளான். இப்போது அப்படி வேறொன்று இருக்குமானால் எல்லா மனிதரும் ஒன்றுசேர்ந்து அதன் கதையை முடித்திருக்கும். அல்லது அது மனிதனை இல்லாதொழித்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, சாணக்கியன் said:

அதுபோல எதை முதல் செய்ய வேண்டுமோ அதைதான் முதலில் செய்ய வேண்டும். தேர்தல் கொரோனா இரண்டிலும் அவசரமோ அது முதலில்.

வீதியில் ஒருவர் கடப்பதற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

வழிபாட்டுத்தலங்கள், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையங்கள் அல்ல.

அவை இறைவனைப் பிரார்த்திக்கும் / வழிபடும் இடங்கள்.

வழிபாட்டுத் தலங்களில், இறைவன் வாசம்  செய்வதில்லை.

நோய்க்கான சிகிச்சைக்கு -  மருத்துவர், வைத்தியசாலைகளைத்தான் நாட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.