Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..!

இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை நோயாளர்களாகவும் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.

Ananthi-Sasitharan.jpg

இலங்கையிலும் கிட்டத்தட்ட 176 ற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அதேவேளை 5 உயிர்களையும் காவுவாங்கியுள்ளது.

நோயாளர்கள் நாளுக்குநாள் புதிது புதிதாக இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடுப்புமருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்காத இச்சூழலில் இவ்வதிகரிப்பென்பது மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது இயல்பானதே.

மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைமிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாக நீண்டு செல்லும் ஊரடங்குச் சட்டம் மூலமாக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிகம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடாக இருப்பதும் இந்நோய்த் தாக்கத்திற்கு ஓர் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நெருக்கடி நிலமைகளில் மக்களின் உணவுத் தேவைகளை அரசின் திட்டமிட்ட பொறிமுறைகள் மூலமாகவே பூர்த்திசெய்ய முடியும்.

இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

மேலும் பொதுவெளியில் மக்களை சந்தித்து உதவுவது மேலும் நோய் பரவக் காரணமாக அமைந்துவிடும். ஊரடங்கு வேளையில் தன்னார்வலர்களும் உதவுவது சவாலானவிடயமே.

பொலிஸ் ஊரடங்கை இராணுவத்தினை வைத்து நடைமுறைப்படுத்தும் அரசும் அதன் திணைக்களங்களும் மாவட்ட உணவு சேமிப்பு தளத்திலிருந்தோ அல்லது வேறெங்கிருந்தோ உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். அரசின் பேரிடர் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உணவுவழங்கல் அமைச்சு,  என்பன துரிதமாக பணியில் இறங்கியிருக்க வேண்டும் ஆனால் இன்று வரை இவர்கள் தமிழர் பிரதேசங்களில் மனித நேயப் பணிகள் எதிலும் ஈடுபடவில்லை.

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட தொகையான ரூபா 10000 கூட சரிவர வழங்கப்படவில்லை. இதில் 5000 ரூபாவிற்கு உணவுப் பொருட்களும் 5000 ரூபா பணமாகவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் சமுர்த்திகடன் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இந்தகடன் இல்லை ன்பதுடன் ஏற்கனவே ரூபா 10000 சமுர்த்தி சேமிப்பில் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக பேசப்படுகிறது. பல சமுர்த்தி அலுவலர்கள் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஒருபிரதேசத்தில் 1500 ரூபா பொருட்கள் வழங்கப்படுகிறது. வேறோர் பிரதேசத்தில் 452 ரூபாபெறுமதியான 2.5கிலோ அரிசி  1.5கிலோ மா, 600 கிராம் சீனி என்பவையே வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் கட்டுப்பாட்டுவிலையை விட அதிகவிலைக்கே பெறுமதியிடப்பட்டுள்ளது. அதுவும் பொது இடங்களில் கூட்டமாக மக்களை வரவைத்தே வழங்கப்படுகிறது. மாவட்டச் செயலகமோ பிரதேச செயலகமோ இதனைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மேற்குநாடுகள் வீட்டிற்கு சென்று உணவுப்பொதிகளை வழங்குகிறது அத்துடன் மாதாந்த வருமானத்தில் குறிப்பிட்ட வீததொகையை வழங்குகிறது. ஆனால் இலங்கையில் இதேநிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்குபட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம்.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை அரிசி உற்பத்தி கூட போதியளவு இல்லை. வன்னிக்கான பாதைகள் பூட்டப்பட்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ள இச்சூழலில் உணவுப் பஞ்சத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்கள் பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இப்பிரதேசங்களை விசேட கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் சீனாவில் ஆரம்பித்தபின் விமல் வீரவன்சவின் மகளை சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதில் முனைப்புக்காட்டிய அரசு சீனர்களை இலங்கைக்கு சுதந்திரமாக வந்து செல்ல அனுமதித்தது. உலகளவில் வேகமாக இந்நோய் பரவியபோதும்கூட விமானப் போக்குவரத்தை உடனடியாக தடை செய்யத் தவறியது. உலக சூழல் இவ்வாறு இருக்கும்போது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு திகதி குறித்து வேட்புமனுத் தாக்கலும் நடைபெற்றது.

அவசர அவசரமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓர் சிவில் நிர்வாகம் ஊடாக இராணுவ கட்டமைப்பைக் கொண்டு ஆட்சியை நடாத்துகிறது அரசு. அத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டபின் வேட்ப்பாளர்கள் மக்களின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடமுடியாதென இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறது. இது யாழ் மாவட்டத்தில் மக்கள் மிகமோசமான பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

அமைச்சரவை இருந்தும் இது வரை கடும் ஊரடங்கில் சிக்குண்டு வீடுகளில் முடக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அரச உதவிகளும் சரிவர சென்றடையவில்லை. சிங்கள கட்சிவேட்பாளர்கள் தங்கள் கட்சி விளம்பரம் பொறிக்கப்பட்ட வாகனங்கள் பதாகைகளுடன் மக்களின் அத்தியாவசியப் பணி என்ற பெயரில் வாக்குவங்கி அரசியல் என்னும் ஈனச்செயலில் ஈடுபடுகின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் கூட ஈடுபடமுடியாமல் முடக்கப்படுகிறார்கள்.

மலையக மக்களைப் பொறுத்தவரை ஊரடங்கு வேளைகளிலும் வேலை செய்யுமாறு தோட்ட முதலாளிகளால் வற்புறுத்தப்படுகின்றார்கள். அரசின் எவ்வித உதவிகளும் அவர்களை சென்றடையவில்லை. முழு நாட்டிற்கும் ஜனாதிபதியாக உள்ளஒருவர் இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலைக் குற்றம் புரிந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை விடுதலை செய்வதையும் சிங்கள தமிழ் வேறுபாட்டு மனநிலையில் உதவிகள் வழங்குவதையும் நிறுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா வைரசிலிருந்தும் பட்டிணிச் சாவிலிருந்தும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களாகிய நாமும் அனாவசியமாக வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்புடன் விழிப்போடிருந்து கொரோனாவை விரட்டுவோம் என்றுள்ளது.

 

https://www.virakesari.lk/article/79375

5 hours ago, கிருபன் said:

இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

ஆம், அதை செய்வோம். எம் மண்ணையும் மக்களையும் காப்பற்றுவோம் !

7 hours ago, கிருபன் said:

இச்சந்தர்ப்பத்தில் பல தன்னார்வலர்களும், பொதுஅமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தன்னார்வமாக மக்கள் பணிபுரிவதைக் காணமுடிகிறது.

ஒரு அரசியல் தலைவரையும் மக்கள் மத்தில இதுவரை காணக் கிடைக்கேல!
இந்த ஒரு பச்சைப் பொய்யை தவிர மற்றையவை நியாயமான கருத்தா தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

 

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

 

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

பாலித கிளிநொச்சிக்கு வந்து தமிழருக்கும் உதவி இருக்கிறார். முஸ்லிம்களுக்கும் நிறைய செய்திருக்கிறார். சண்டியர் ஆனால் நல்லவர். இவர் கேட்பவர்களுக்கே தமிழ் மக்களும் முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://postimg.cc/rDB0G9xn

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

 

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்காய் புலம்பாமல் மக்களுக்கு ஏதாவது உருப்படியாய் செய்ய முயற்சிக்கலாமே அனந்தி அக்கா 
 

On 6/4/2020 at 09:58, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

சிங்கள் மக்களை நேசிக்கும் அரசியல் வாதியான பாலித தேவபேருமையை மட்டும் காணமுடிகிறது 

 

மாவை சேனாதிராசப்பெரும.. 😐

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் வெளிப்புறம்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 14:58, தனிக்காட்டு ராஜா said:

என்னது அரசியல் தலைவர்களா எங்கப்பா அவங்களை காணக்கிடைக்தில்ல

60 வயதுக்கு மேல உள்ள ஆட்களுக்கு மேலதானம்  கொரனோ  பரத நாட்டியம் ஆடுமாம்  நான் நினைச்சன் இதோட எங்கட சனத்துக்கு விடிவு வரும் எண்டு கிழட்டு கூட்டம் பதுங்கியிட்டுது .

என்கை மாட்டாமலா போயிடுவாங்க .

மூன்று வாரங்களாக தொடரும் ஊரடங்கு! புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகளும் மலையக மக்களும்!

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் மூன்றாவது வாரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிதிக் கொடைகளைக் கொண்டு பெருந்தோட்டங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார் கோரிக்கை முன்வைத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமலிருப்பதற்காக தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக மக்களுக்கு வழங்கிவருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் தமிழர் பகுதிகளிலும் அதேபோல மலையக மக்களிடையேயும் அவை விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் நேற்றைய தினம் இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எந்தவொரு பேதமும் இன்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ அணியினருடன் நேற்றைய தினம் நடத்திய சந்திப்பின்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார் இதுகுறித்து கருத்து வெளியிட்டார்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எந்த நிவாரணமும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இன்றுவரை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/140730

  • கருத்துக்கள உறவுகள்

92475160-1623109634506856-44488111132822

பாவம் மலையக மக்கள் பைதான் பெரிசு உள்ள ஒன்றும் இல்லை இது எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கும் நீங்களே முடிவு பண்ணுங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

அரசியலுக்காய் புலம்பாமல் மக்களுக்கு ஏதாவது உருப்படியாய் செய்ய முயற்சிக்கலாமே அனந்தி அக்கா 
 

இப்படி எல்லாம் ஆசைப்படவும் ஒரு துனிவு வேணும் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

கொரோனா சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் நேற்றைய தினம் இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவாயில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு அள்ளி வீசி வாக்கு சேகரிக்கலாம். அவங்களுக்கு தேர்தல் காலத்துக்கு ஏற்றமாதிரி ஒவ்வொன்று வந்து பணமழை கொட்டும்.

’பட்டினிச் சாவை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை’

வா.கிருஸ்ணா

அரசாங்கம், தேர்தலை மய்யப்படுத்தியச் செசயற்பாடுகளை முன்னெடுக்கின்றதேத் தவிர, கொரனா அச்சுறுத்தலால் ஏற்படும் பட்டினிச் சாவை தடுப்பதற்கானத் திட்டங்களை முன்னெடுப்பதாக இல்லை என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தை அமுல்படுத்திவிட்டே, ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மட்டு.ஊடக அமையத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக, அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்றும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம், பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது, சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சதொச மூலமாக, மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இருந்த சதோசவை டிவிட்டனர் என்றும் இருக்கும் சதோசவில், குறைந்த விலையில் பொருள்;களைக் கொள்வனவு செய்ய முடியாதயுள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். 

அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை.

தேர்தலை மய்யப்படுத்தியே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக தொழிலை இழந்த மக்களுக்கான மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை என்றும் சாடினார்.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பட்டினிச்-சாவை-தடுப்பதற்கு-அரசாங்கத்திடம்-திட்டங்கள்-இல்லை/73-248160

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பொகவந்தலாவ கெர்கசோல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தினால் நிவாரண பொதிகள், இன்று(8) வழங்கி வைக்கப்பட்டன. 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக,  பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனியும, இணைந்து 3,000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருள்கள் அடங்கிய பொதியை வழங்குவதாக அறிவித்திருந்தது.

குறித்த பொதியில்,  வெங்காயம், சீனி, உருளைக் கிழங்கு, நெத்திலி, அரிசி, கோதுமை மா ஆகிய அத்தியாவசிய பொருள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

image_00501b26e4.jpg

http://www.tamilmirror.lk/மலையகம்/தொழிலாளர்களுக்கு-நிவாரணம்-வழங்கி-வைப்பு/76-248189

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.