Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

(ஜேர்மன் நிதியமைச்சர்)

என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... 
காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... 
"மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்...
சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற  படியால்.... 

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,
முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. :grin:

இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு...
பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்....
"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?...  என்று, ஒருமுறை தான்... கேட்டேன். ❤️
ஒவ்வொரு அறையிலிருந்தும்... நான் வெட்டுகின்றேன் என்று, 
மூன்றும்.... பாய்ந்து வந்து விட்டதுகள். 💕

வந்தவர்களை... ஏமாற்றப் படாது என்று, 
இருக்கிற, பொட்டல் காணியை...  😎
இடது பக்கம், வலது பக்கம், பிடரி பக்கம் என்று.. பிரித்து கொடுத்து,
இனி வெட்டுங்கோ... என்று சொன்ன போது,
அவர்கள்... குழந்தைகளாக இருந்த நேரத்தில்...  குழறக்  குழற... 
நான், மயிர் வெட்டிய... நினைவுகள், எல்லாம் வந்திருக்கும் போலை...
பிரித்து... மேய்ந்து விட்டார்கள். 😅

ஒராள்... மயிர் வெட்ட,  சும்மா நின்ற ஒராள்... வீடியோ எடுக்குது,
மற்ற ஆள்... கணனியில், பழைய நாடகத்தை... மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த,
மனைவியிடம்... "அப்பாவுக்கு... தலைமயிர் வெட்டுறம்,  நீங்களும்  வந்து பாருங்கோ... "
என்று சொல்லி முடிக்க முதல்.... 💥

மனிசி... குளியலறைக்குள், புயலென வந்து.... 🗯️ 
வருசப் பிறப்பான இன்று...தலை மயிர் வெட்டுறீங்களோ...
நேற்று, முந்தநாள்... எல்லாம்,  இந்த யோசனை வரமால்,
கொம்புயூட்டருக்குள்ளை தலையை, வைத்துக் கொண்டு இருந்து போட்டு,
இண்டைக்கென்று... இதை செய்ய வெக்காமையில்லை? 👁️‍🗨️
வி*ர்  பிடிச்ச மனிசன், ச**ன் பிடிக்கிற வேலை பாக்குது...  என்று, பேசத்  தொடங்கி விட்டது. 😢

இதென்ன.... கோதாரியாய் கிடக்கு, 
அடுத்த வீட்டுக்கு... சத்தம் கேட்கப் போகுது  என்ற பயத்திலையும்,
நான் சாரத்துடன்.... அரைவாசி தலை மயிர் வெட்டின நிலைமையில்....
கட்டி அணைத்து, முத்தம் 💋 கொடுத்து...  சமாளிக்கவும் முடியாமல்...
தேவாங்கு...👽 மாதிரி முழித்துக்  கொண்டிருந்த போது.... 💀

மனிசியின்...  ரெலிபோன்,  "கிணிங்  கிணிங்" என்று அழைத்தது. 
பொறுங்கோ... வாறன், எண்டிட்டு போன, இடை வெளியில்...
ஆர்....  எடுத்தது என்று, பிள்ளைகளிடம், கேட்ட போது...
கனடாவில் இருந்து... சின்ன மாமி கதைக்கிறா.. என்று சொன்னார்கள்.  

அப்பாடா..... தப்பினேன் பிழைத்தேன்... என்று சந்தோசப் பட்டேன். :grin:

மனிசி.... தன்ரை, தங்கச்சியுடன் கதைத்தால்,கன நேரம் எடுக்கும்.
என்ரை... மச்சாள் (தமிழ் நாட்டில்.. சகலை) என்னை, 
அந்த.. இக்கட்டில் இருந்து, காப்பாற்றி விட்டாள். 🤣

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான். 🤪

பிற் குறிப்பு:  இந்தக் கதையை... எழுத,
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்கில் வந்த படம்  தான்... காரணம். 

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. :)

Edited by தமிழ் சிறி

  • Replies 74
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் அட்வான்ஸ் கோஸ்ட்டிகள்  நமக்கு நாமே தலைக்கு  முழுக்கு போடமுன் கொஞ்சம் கொஞ்சமே  அரிந்துவிடுவம் புதிதாய் என்போல் முயற்சிப்பவர்கள்  இந்தியன் கடையில் தண்ணி பைப்  அடைப்பு எடுப்பதை வாங்கி வைக்கவும் .😃

நமக்குவாது  பரவாயில்லை  பியூட்டி பார்லருக்கு ஒவ்வொரு கிழமையும் போய்  மீசையும் காது பக்கத்தில் வளரும் முடியையும் எடுத்த கூட்டம் இப்ப என்ன செய்கினம் என்று தெரியவில்லை ஆநேகமா இந்த லொக்டவுன்  முடிய நிறைய அசம்பாவிதம்கள்  நடக்க இருக்குது என்று உள்  மனது சொல்லுது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

படத்தை போடுங்கோ பார்ப்போம். எனக்கு வெட்டினது பெற்றறா அல்லது உங்களுக்கு அடிச்சது பெற்றறா எண்டு சொல்லுறன்.  😜

(மாணவர் விடுதியில் கன காலம் இருந்தபடியால் நான் நன்றாகவே புகுந்து விளையாடுவேன் 😂)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

நாங்கள் எல்லாம் அட்வான்ஸ் கோஸ்ட்டிகள்  நமக்கு நாமே தலைக்கு  முழுக்கு போடமுன் கொஞ்சம் கொஞ்சமே  அரிந்துவிடுவம் புதிதாய் என்போல் முயற்சிப்பவர்கள்  இந்தியன் கடையில் தண்ணி பைப்  அடைப்பு எடுப்பதை வாங்கி வைக்கவும் .😃

நமக்குவாது  பரவாயில்லை  பியூட்டி பார்லருக்கு ஒவ்வொரு கிழமையும் போய்  மீசையும் காது பக்கத்தில் வளரும் முடியையும் எடுத்த கூட்டம் இப்ப என்ன செய்கினம் என்று தெரியவில்லை ஆநேகமா இந்த லொக்டவுன்  முடிய நிறைய அசம்பாவிதம்கள்  நடக்க இருக்குது என்று உள்  மனது சொல்லுது .

பெருமாள்... எனது,  "மொட்டை  மண்டையை"   பார்த்து...
வேலை இடத்தில்... எல்லாரும் வியந்தார்கள்.

எங்கு...  வெட்டிநீர்கள்?
என்று கேட்ட போது....
அது, குடும்ப ரகசியம்... என்று, பதிலளித்த போது...
பயங்கரமாய்... சிரித்தார்கள். அது, போதும் எனக்கு.

அடுத்த முறையும்... மயிர் வளர்ந்தால்,  வீட்டில் வைத்துத்தான்.. மயிர் வெட்டுவேன்.    :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தைரியத்தை பாரட்டனும் 😃, வெளியில் போனீர்களா? 

நான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் வீட்டில் தான் வெட்டுவது, பின் மண்டையை மட்டும் பிள்ளைகளிடம் கெடுப்பது சரி செய்ய. மொட்டைதான் 😄😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

படத்தை போடுங்கோ பார்ப்போம். எனக்கு வெட்டினது பெற்றறா அல்லது உங்களுக்கு அடிச்சது பெற்றறா எண்டு சொல்லுறன்.  😜

(மாணவர் விடுதியில் கன காலம் இருந்தபடியால் நான் நன்றாகவே புகுந்து விளையாடுவேன் 😂)

கபிதன்.... நான், யாழ். களத்தில்  இணையும் போதே......
தனிப்பட்ட படங்களை, இணைப்பது இல்லை.... 
என்ற,  வைராக்கியத்துடன் தான், உள்ளே வந்தேன்.
அப்படி... ஒரு  படம் வந்தால்,  அது.... துயர் பகுதியில் வரலாம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

உங்கள் தைரியத்தை பாரட்டனும் 😃, வெளியில் போனீர்களா? 

நான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் வீட்டில் தான் வெட்டுவது, பின் மண்டையை மட்டும் பிள்ளைகளிடம் கெடுப்பது சரி செய்ய. மொட்டைதான் 😄😄

உடையார்... எனக்கு,  வாரத்தில்... ஐந்து நாளும்... வெளியே போக வேண்டிய வேலை.
முதல் இரண்டு நாள்..  வெட்கத்தில்  தொப்பி போட்டுக் கொண்டு போனேன்.

பிறகு...  என்ரை, மொட்டை  மண்டையை... தடவுறதில இருக்கிற சந்தோசம்.... 
பெரிதாக இருக்குது என்ற... படியால்,  இப்ப தொப்பி போடுவதில்லை.

ஐந்து நாளில், வெட்டிய..மயிர் எல்லாம், புசு.. புசேண்டு..  வெள்ளையாக வளருது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வீடியோ எடுக்குது,

அந்த வீடியோவை போட்டால் நாங்களும் பார்த்து சிரிப்போமல்ல😀

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்.... நான், யாழ். களத்தில்  இணையும் போதே......
தனிப்பட்ட படங்களை, இணைப்பது இல்லை.... 
என்ற,  வைராக்கியத்துடன் தான், உள்ளே வந்தேன்.
அப்படி... ஒரு  படம் வந்தால்,  அது.... துயர் பகுதியில் வரலாம். :)

சிறி,

பகடியாக கேட்டதை சீரியஸாக எடுதுவிட்டீர்கள். வெறு யாரினதும் படத்தை இணைப்பீர்கள் என எதிர்பார்த்தேன். 😀

33 minutes ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

லேடியை அணைவு பிடிச்ச கேடி 😂😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

குமாரசாமி அண்ணா.... நாங்கள் குளிக்கிறதே....மாசத்துக்கு ஒரு தரம் தான்,
நாங்கள்... இலங்கையிருந்து...வரும்.... போதே...
மில்க் வைற், சண்  லைற், ரெக்சோனா, லைவ்  போய்....
போன்ற சவர்க்காரங்களை கொண்டு வந்தானங்கள். 

எனக்கு,  குளிக்கிற தண்ணியில கண்டம் என்று.... சிலோன் சாத்திரி சொன்னவர். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

....அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

கொடுப்புக்குள் சிரிக்கக் கூடிய பதிவு..!  😋

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,

வணக்கம் சிறி
1992ம் ஆண்டு மனைவி பிள்ளைகள் நியூயோர்க் வந்த பின் இன்றுவரை சலூன் பக்கம் போனதில்லை.
பலருக்கும் இதை நம்ப கஸ்டமாக இருக்கும்.ஆனாலும் இது தான் உண்மை.
அவர்கள் வந்த புதிதிலேயே மெசினும் ஒன்று வாங்கினேன்.மனைவி பிள்ளைகள் மாறிமாறி வெட்டிப் பழகினார்கள்.சரிபிழையைப் பற்றி எதுவுமே அலட்டிக் கொள்வதில்லை.5-6 வருடத்துக்கொரு தடவை புதிதாக மெசின் வாங்குவேன்.
     அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.ஆனால் அந்தக் காலங்களில் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி 
படத்தை போடாடததால் , அந்த அழகை நாங்கள்  பார்க்க கொடுத்து வைக்கவில்லை. எனக்கு கனகாலமாக மனிசிதான் வெட்டிவிடுகிறார். இந்த கொஞ்ச முடிக்கு 10 டாலர் கொடுக்க வேண்டுமா என்று பேசிபோட்டு வெட்டத்  தொடங்கியது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உடையார்... எனக்கு,  வாரத்தில்... ஐந்து நாளும்... வெளியே போக வேண்டிய வேலை.
முதல் இரண்டு நாள்..  வெட்கத்தில்  தொப்பி போட்டுக் கொண்டு போனேன்.

பிறகு...  என்ரை, மொட்டை  மண்டையை... தடவுறதில இருக்கிற சந்தோசம்.... 
பெரிதாக இருக்குது என்ற... படியால்,  இப்ப தொப்பி போடுவதில்லை.

ஐந்து நாளில், வெட்டிய..மயிர் எல்லாம், புசு.. புசேண்டு..  வெள்ளையாக வளருது.:grin:

மொட்டை அடிச்சுப்போட்டு தடவுற சுகமே தனி 😃

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவு மீட்டல் சிறியர்.....!

நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது  ஒருவர் வருவார் நான் மற்றும் அயலட்டை  பிள்ளைகள் என்று ஒரு 8/10 பேர் பின் வளவில் பூவரசுக்கு கீழ்  ஸ்டூலில் இருக்க வெட்டியது நல்ல ஞாபகம். பின்பு நான் இளந்தாரியாய் வந்தபின் எப்போதும் வசந்தா சலூனில்தான் வெட்டுவது வழக்கம்.( கே.கே. எஸ். வீதியில்  மனோகரா தியேட்டருக்கும்  கன்னாதிட்டி சிவன் கோவிலுக்கும் இடையில் இருந்தது).அங்கு வெட்டுவதற்கு இன்னுமொரு காரணம் அவர்கள் "மல்லிகை" என்ற புத்தகம் வைத்திருப்பார்கள். இலக்கியத்தரமான புத்தகம்.மாதம் ஒருமுறை வரும்.அதை வாசிப்பது வழக்கம்.....!

     பின்பு என் அப்பம்மாவின் இறுதிச்சடங்கு செய்ய வந்தவர் (சிறுவயதில் வெட்டியவரின் மகன் ) நான் கொள்ளி வைக்க முன் எனக்கு மொட்டை அடித்து விட்டவர் தான் நாச்சிமார் கோயிலடியில் சலூன் வைத்திருப்பதாக சொன்னார்.அதன்பின் அங்குதான் போவது....!

     பிரான்ஸ் வந்தபின் gare de l 'est ல் ஒரு பாகிஸ்தான் சலூனில் வெட்டுவது. அங்குதான் 5 ஈரோ. மற்றைய இடங்களில் 8 / 10 ஈரோ.....! பின்பு மனைவி பிள்ளைகள் வந்தபின் நான் ஒரு மிசின் வாங்கி மகனுக்கு நான் வெட்டி விடுவது, மனைவி எனக்கு வெட்டி விடுவது. ஆரம்பத்தில் தடக்குப் பட்டாலும் பின் கச்சிதமாக வெட்டப் பழகி விட்டாள்.பின்பு அவள் இல்லாத சமயங்களில் நானே பின் பக்கம் ஒரு கண்ணாடியை பிடித்துக் கொண்டு வெட்டிக்கொள்வேன்.இப்பவெல்லாம் பொடியள் அநியாய காசு குடுத்து சலூனில் வெட்டிக்கொள்கிறார்கள்......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

  • கருத்துக்கள உறவுகள்

என்க்கும் இப.படித்தான் மனைவி பின் மகள் என்று வெட்டிவிடுவது.இப்ப நாலு மயிர் கையால அப்பப்ப பிடுங்கி எறிஞ்சுப்போட்டு போறது.😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.ஆனால் அந்தக் காலங்களில் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

எல்லாருக்கும் அந்தக்காலத்திலை அடர்த்தியாகத்தான் இருக்கும்.பிரச்சனை இப்பவெல்லோ 😎

  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. 

கதை என்னவோ சிரிப்பா இருக்கு... ஆனால் கணக்குத் தான் இடிக்குதே.. 70+40 = 110%

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஒமோம்...துரையண்ண கராஜ்... தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டுக்கு முன்னால இருந்தது.... அங்க பழனி என்று டிங்கேர் வேலை செய்யுற ஒருத்தர் இருந்தவர். அவரை சிலோன் ஜெமினி எண்டு சொல்லுவினம்.. 

சீராளனின் மாமனார், கால் ஏலாத ஒருவர், அவரும் கந்தர்மடம் சந்தில கார் வைத்திருந்தவர்... முரட்டு மீசை..நல்ல தடிமன்... ஆள் கொஞ்சம் கட்டை... தமிழ் படங்களில் வரும் வில்லன் மாதிரி பயம் காட்டும் உருவம்.

10 hours ago, ஈழப்பிரியன் said:

     அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.

நாங்கள் நுவரஎலியாவில் எடுத்த உங்கண்ட படத்தை, பார்த்திருப்பதால், எந்தளவுக்கு இருக்குது எண்டு தெரியும்...🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஒமோம்...துரையண்ண கராஜ்... தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டுக்கு முன்னால இருந்தது.... அங்க பழனி என்று டிங்கேர் வேலை செய்யுற ஒருத்தர் இருந்தவர். அவரை சிலோன் ஜெமினி எண்டு சொல்லுவினம்.. 

சீராளனின் மாமனார், கால் ஏலாத ஒருவர், அவரும் கந்தர்மடம் சந்தில கார் வைத்திருந்தவர்... முரட்டு மீசை..நல்ல தடிமன்... ஆள் கொஞ்சம் கட்டை... தமிழ் படங்களில் வரும் வில்லன் மாதிரி பயம் காட்டும் உருவம்.

நாங்கள் நுவரஎலியாவில் எடுத்த உங்கண்ட படத்தை, பார்த்திருப்பதால், எந்தளவுக்கு இருக்குது எண்டு தெரியும்...🤗

பழனியும் எனது உறவினர்.....துரையண்ணர் நண்பர்......பட்டறை  வைத்திருந்தவர் அண்ணர் .....!

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்,

தெய்வீக திருக்குறள் மன்ற ரோடினுள், பொக்சர் வீட்டுக்கு பக்கத்தில், முருகவேள் என்று ஒருவர் இருந்தார்.... ஜெர்மனி போனார்.... உங்களுக்கு அவரை தெரியுமா?
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.