Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பிராந்திய சுகாதாரப் பணியகத்துக்கு முகக் கவசங்களை வழங்கியது இந்து குருமார் பேரவை

Featured Replies

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி முகக்கவசம் கையளிப்பு

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி நீக்கி என்பன கையளிக்கப்பட்டது.

லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வவுனியா அந்தனர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது.

-இதன் போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது உன்னதமான பணியாற்றி வரும் மருத்துவ துறை சார் உத்தியோகத்தர்கள் அனைவரது நலன் வேண்டியும் உலக மக்களின் நலன் வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Mannar-hindu-Gurumae-Peravai-Help-1.jpgMannar-hindu-Gurumae-Peravai-Help-2.jpg

பொது எதிரியாக இன்று கோவிட் 19, பிளவுகளை மறக்க வைத்து  தமிழர்களை ஒன்றிணைக்கிறான். ஒற்றுமை பலமடையட்டும். 

  • தொடங்கியவர்

இந்த கொரோனா தொற்று பரவும் ஆபத்தான நிலைமைல பல இந்து அமைப்புக்களும் பல கோவில்களும் பல்வேறு உதவிகளை தமிழ் சமூகத்துக்கு வழங்கி வரும் பல நல்ல செய்திகளைக் காணக் கூடியதாக இருக்கு. தங்கட சமூக பொறுப்பை இவங்க உணர்ந்திருக்கிறது நல்ல விஷயம்.  

ஆனா உதவிகளை செய்து மத வியாபாரம் செய்யும் அமைப்புகள் கப்சிப். அறுவடை ஏதும் கிடைக்காது என்ற எண்ணமா இருக்கும். ஒரு சில கோஷ்டிகளை மட்டும் மத வியாபாரம் செய்வதாக குற்றம் சுமத்தி தம்மை நல்லவனா காட்டும் ஒரு ஆமென் கோஷ்டியும் கப்சிப். கன நாளைக்கு ஆமென் கோஷ்டி நல்லவன் வேடம்போட முடியாது என்கிறதை இந்த ஆபத்தான நிலைமை வெளிப்படுத்தி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 புகைப்படம் எடுக்காமல் செய்வது தெரிய வருவதில்லை. உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். பெயருக்கும் புகழுக்கும் கொடுப்பது அதோடு போய்விடும். நாம் கொடுப்பது மற்றவரை வாழ வைக்க வேண்டும். அதை  பார்ப்பவர்  அந்த வழியை தொடர பின்பற்ற வைக்க வேண்டும்.  அதைத்தான் இன்று நாட்டில் இளைஞர் தொடங்கி அனைவரும் செய்கின்றனர். 

  • தொடங்கியவர்

திருடர்கள், கொள்ளைக்காரர்கள் தங்கட தொழிலை போட்டோ எடுத்து படம் போட்டு செய்யமாட்டாங்கள் என்டு எல்லாருக்கும் தெரியுமே! கஷ்டப்பட்டவங்களுக்கு உதவி செய்றம் என்டு மார்தட்டின ஆட்கள் இப்ப பிளேட்டை மாத்தி இடக்கை கொடுக்கிறத வலக்கைக்கு தெரியாக் கூடாது என்டு புதிய சுவிசேஷ செய்திகளோடு நிக்கினம்.

ஆமை ஆயிரம் முடடைகள் இட்டுவிட்டு சத்தம்போடாமல் போகுமாம்। கோழி ஒரு முடடையிட்டுவிட்டு கொக்கரிக்குமாம்। அந்த மாதிரிதான் இருக்குது இந்த விளையாட்டு। எதோ சில பொருட்களை கொடுத்து விட்டு கொரோனவையே ஒளித்து விட்ட்தாக கொக்கரிக்கிறார்கள்। பாவம் அவர்கள், கிடைக்கிற மோதகத்தையும் வடையையும் வைத்து என்ன செய்ய முடியும்।

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் சாதாரணமாக நடக்கிற ஒரு  செயலுக்கு பிரபல்யம் தேவைப்படுவதில்லை. பிரபல்யம் தேடியும்  செய்வதில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 23:28, Rajesh said:

இந்த கொரோனா தொற்று பரவும் ஆபத்தான நிலைமைல பல இந்து அமைப்புக்களும் பல கோவில்களும் பல்வேறு உதவிகளை தமிழ் சமூகத்துக்கு வழங்கி வரும் பல நல்ல செய்திகளைக் காணக் கூடியதாக இருக்கு. தங்கட சமூக பொறுப்பை இவங்க உணர்ந்திருக்கிறது நல்ல விஷயம்.  

ஆனா உதவிகளை செய்து மத வியாபாரம் செய்யும் அமைப்புகள் கப்சிப். அறுவடை ஏதும் கிடைக்காது என்ற எண்ணமா இருக்கும். ஒரு சில கோஷ்டிகளை மட்டும் மத வியாபாரம் செய்வதாக குற்றம் சுமத்தி தம்மை நல்லவனா காட்டும் ஒரு ஆமென் கோஷ்டியும் கப்சிப். கன நாளைக்கு ஆமென் கோஷ்டி நல்லவன் வேடம்போட முடியாது என்கிறதை இந்த ஆபத்தான நிலைமை வெளிப்படுத்தி இருக்கு.

வெறுப்பைக் கொஞ்சம் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு மேன்மையான விடயங்களை பாராட்டுவோமே. 👍

30 minutes ago, Vankalayan said:

ஆமை ஆயிரம் முடடைகள் இட்டுவிட்டு சத்தம்போடாமல் போகுமாம்। கோழி ஒரு முடடையிட்டுவிட்டு கொக்கரிக்குமாம்। அந்த மாதிரிதான் இருக்குது இந்த விளையாட்டு। எதோ சில பொருட்களை கொடுத்து விட்டு கொரோனவையே ஒளித்து விட்ட்தாக கொக்கரிக்கிறார்கள்। பாவம் அவர்கள், கிடைக்கிற மோதகத்தையும் வடையையும் வைத்து என்ன செய்ய முடியும்।

அவைகள் செய்தது நல்ல விடயமா இல்லையா ? 🤔

இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் மக்களின் உழைப்பில் வந்த பணம் கஷ்ரப்பட்ட மக்களுக்கு உதவி உள்ளது. மக்கள் வழங்கிய  பணத்தை  பரிமாறி பெயர் எடுப்பவர்களை விட்டு விட்டு இதை வழங்க கஷ்ரப்பட்டு உழைத்து அதை வழங்கி விட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கும் அந்த மக்களைப் பாராட்டுவோம். 

ஐரோப்பாவில் தமிழ் மக்களின் உழைப்பை உறுஞ்சி தமது வாழ்க்கையை நடத்தும் தமது சக பாடிகளிடம் பணம் திரட்டி வழங்கி இருக்கலாம். இவர்கள் தானம் வழங்குவதும்  மக்கள் பணம் தான்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Quote

லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன்

யாரோ வெள்ளையள் உண்டியலில் போட்ட பணமாயிருக்கும்....

2 minutes ago, tulpen said:

இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் மக்களின் உழைப்பில் வந்த பணம் கஷ்ரப்பட்ட மக்களுக்கு உதவி உள்ளது. மக்கள் வழங்கிய  பணத்தை  பரிமாறி பெயர் எடுப்பவர்களை விட்டு விட்டு இதை வழங்க கஷ்ரப்பட்டு உழைத்து அதை வழங்கி விட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கும் அந்த மக்களைப் பாராட்டுவோம். 

22 hours ago, Kapithan said:

அவைகள் செய்தது நல்ல விடயமா இல்லையா ? 🤔

நல்ல நோக்கோடு செய்தால் நல்ல விடயம்। ஒரு செயல் செய்யும்போது என்ன நோக்குடன் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்। அதைத்தான் சொல்லுவது சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று।

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Vankalayan said:

நல்ல நோக்கோடு செய்தால் நல்ல விடயம்। ஒரு செயல் செய்யும்போது என்ன நோக்குடன் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்। அதைத்தான் சொல்லுவது சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று।

செயல் நன்மையானதாக இருந்தால் பாராட்டலாம்தானே 🤔

23 hours ago, Kapithan said:

செயல் நன்மையானதாக இருந்தால் பாராட்டலாம்தானே 🤔

அதை பிழையான நோக்கோடு செய்யும்போது எப்படி ஏற்றுக்கொள்ளுவது। சிங்களவன் ஒரு நல்ல காரியத்தை பிழையான நோக்கோடு செய்யும்போது ஏற்றுக்கொள்வீர்களா?

உதாரணத்துக்கு இரணைமடுக்குளம் இப்போது மாகாண சபையின் கீழ் உள்ளது। இப்போது மகாவலி நீரை திசை திருப்பி அங்கு கொண்டு வருகிறார்கள்। இது ஒரு நல்ல நோக்கம்। வருடம் முழுவதும் அங்கு தண்ணீர் கிடைக்கும்। ஸ்ரீதரன் MP வருடம் முழுவதும் விவசாயம் செய்யலாம்।

ஆனால், இனி இந்த இரணைமடுக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும்। சிங்கள குடியேற்றங்கள் நடக்கும் ।

இது எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது। இன்னும் உங்களுக்கு விளங்கவிடடாள் இதுக்கு மேலே என்னால் தொடர்ந்து எழுத முடியாது।

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

உதவி தேவையானவர்களுக்கு மட்டும் கிடைத்தால் நல்லது அதான் பசித்திருப்பவனுக்கு சாப்பாடு கிடைப்பது போல 

சாப்பிட்டவன் கறி சரியில்லை, சோறு சரியில்லை என்பான் 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 21:40, Vankalayan said:

நல்ல நோக்கோடு செய்தால் நல்ல விடயம்। ஒரு செயல் செய்யும்போது என்ன நோக்குடன் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்। அதைத்தான் சொல்லுவது சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று।

இவ்வளவு காலமும் செய்யாமல் தற்போது மட்டும் ஏன் என்கிறீரா ? 🤔

செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தால், செயலில் இறங்கித்தானாக வேண்டும். நோக்கம் பிழையாயிருந்தால் அது வெளியே தெரியத்தான் போகிறது. ஆதலால் அவர்களின் நோக்கத்தை  சந்தேகத்துடன் அணுகுதல் நல்லதல்ல. 🙂 

2 hours ago, Vankalayan said:

அதை பிழையான நோக்கோடு செய்யும்போது எப்படி ஏற்றுக்கொள்ளுவது। சிங்களவன் ஒரு நல்ல காரியத்தை பிழையான நோக்கோடு செய்யும்போது ஏற்றுக்கொள்வீர்களா?

உதாரணத்துக்கு இரணைமடுக்குளம் இப்போது மாகாண சபையின் கீழ் உள்ளது। இப்போது மகாவலி நீரை திசை திருப்பி அங்கு கொண்டு வருகிறார்கள்। இது ஒரு நல்ல நோக்கம்। வருடம் முழுவதும் அங்கு தண்ணீர் கிடைக்கும்। ஸ்ரீதரன் MP வருடம் முழுவதும் விவசாயம் செய்யலாம்।

ஆனால், இனி இந்த இரணைமடுக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும்। சிங்கள குடியேற்றங்கள் நடக்கும் ।

இது எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது। இன்னும் உங்களுக்கு விளங்கவிடடாள் இதுக்கு மேலே என்னால் தொடர்ந்து எழுத முடியாது।

ஐயா,

உங்கள் எச்சரிக்கை உணர்வை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் இவர்களின் செயலை சந்தேகத்துடன் பார்ப்பது எந்த அளவு சரி என்று தெரியவில்லை. 🤔

6 minutes ago, Kapithan said:

இவ்வளவு காலமும் செய்யாமல் தற்போது மட்டும் ஏன் என்கிறீரா ? 🤔

செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தால், செயலில் இறங்கித்தானாக வேண்டும். நோக்கம் பிழையாயிருந்தால் அது வெளியே தெரியத்தான் போகிறது. ஆதலால் அவர்களின் நோக்கத்தை  சந்தேகத்துடன் அணுகுதல் நல்லதல்ல. 🙂 

ஐயா,

உங்கள் எச்சரிக்கை உணர்வை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் இவர்களின் செயலை சந்தேகத்துடன் பார்ப்பது எந்த அளவு சரி என்று தெரியவில்லை. 🤔

செய்த நல்ல காரியம் அந்த இந்து குருமாரின் தன்னார்வத்தால் அல்ல. லண்டன் நயினை நாக பூஷனி ஆலய நிர்வாகத்தில் உள்ள நல் மனம் படைத்த மனிதர்களின் முயற்சியால்  லண்டன் வாழ் தமிழ் மக்களின் உழைப்பு இந்த நல்ல காரியத்திற்கும் இந்து குருமாரின் விளம்பரத்திற்கும் பயன் பட்டிருக்கிறது. 

மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை சில மதவெறியர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி கிடைக்கும் பணங்களை துஷ்பிரயோகம்  செய்து மக்களை ஏமாற்றி மதம்மாற நிர்பந்திப்பது போல இந்து குருமார்கள் ஒருபோதும் செய்வதில்லை என்பது மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

செய்யும் அயோக்கியத்தனங்களை தொடர்ச்சியாக நியாயப்படுத்துவதால் அந்த சமூகம் மேலும் மேலும் சாக்கடைக்குள் அமிழ்ந்து கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 11:09, ampanai said:

பொது எதிரியாக இன்று கோவிட் 19, பிளவுகளை மறக்க வைத்து  தமிழர்களை ஒன்றிணைக்கிறான். ஒற்றுமை பலமடையட்டும். 

ஆமாம் பலர் ஒற்றுமையாக உதவி செய்து கொண்டிருக்கின்றார்  இளைஞர்கள் உட்பட. பாரட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை சில மதவெறியர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி கிடைக்கும் பணங்களை துஷ்பிரயோகம்  செய்து மக்களை ஏமாற்றி மதம்மாற நிர்பந்திப்பது போல இந்து குருமார்கள் ஒருபோதும் செய்வதில்லை என்பது மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

செய்யும் அயோக்கியத்தனங்களை தொடர்ச்சியாக நியாயப்படுத்துவதால் அந்த சமூகம் மேலும் மேலும் சாக்கடைக்குள் அமிழ்ந்து கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும்!

இன்னும் கொஞ்சம் மென்மையான வார்த்தைப் பிரயோகம் வரவேற்கப்ப்டுகிறது. 🙂

  • தொடங்கியவர்
3 hours ago, போல் said:

மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை சில மதவெறியர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி கிடைக்கும் பணங்களை துஷ்பிரயோகம்  செய்து மக்களை ஏமாற்றி மதம்மாற நிர்பந்திப்பது போல இந்து குருமார்கள் ஒருபோதும் செய்வதில்லை என்பது மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

செய்யும் அயோக்கியத்தனங்களை தொடர்ச்சியாக நியாயப்படுத்துவதால் அந்த சமூகம் மேலும் மேலும் சாக்கடைக்குள் அமிழ்ந்து கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும்!

மிகவும் சிறப்பாக சொல்லப்பட்ட கருத்து! நன்றிகள்!!! 👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Rajesh said:

மிகவும் சிறப்பாக சொல்லப்பட்ட கருத்து! நன்றிகள்!!! 👏👏👏

வாழ்த்துக்கள் இராஜேஸ். 😀

எப்போதும் என்னை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்களில் காணக் கிடக்கிறது. 👍

நன்றிகள் பல.👏

4 minutes ago, போல் said:

மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை சில மதவெறியர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி கிடைக்கும் பணங்களை துஷ்பிரயோகம்  செய்து மக்களை ஏமாற்றி மதம்மாற நிர்பந்திக்கும் கிறிஸ்தவ மதவெறியர்கள் செய்யும் இமாலய அயோக்கியத்தனங்களுடன் ஒப்பிடுகையில் இந்து குருமார் இழைக்கக்கூடிய தவறுகள் 0.0000001% அளவுகூட இருக்காது என்பதை அறியாத மாதிரி அப்பாவியாக நடிக்கிறீர்கள்.

நீங்கள் கூறும் மதத்தை  வெறித்தனமாக நம்பி ஏமாறுபவர்கள்  சாதாரண அப்பாவி மக்களே. மற்றப்படி மதம் மாற்றும் கூட்டமும் இந்து குருமார்  கூட்டமும் மதத்தையும் கடவுளையும் வைத்து தொடரந்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும்  ஒரே வகையான பிழைப்புவாதக்  கும்பல்களே.  இந்த இரண்டு அயோக்கியர்களுக்குள்  எந்த வேறுபாடும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎04‎-‎2020 at 10:11, tulpen said:

இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் மக்களின் உழைப்பில் வந்த பணம் கஷ்ரப்பட்ட மக்களுக்கு உதவி உள்ளது. மக்கள் வழங்கிய  பணத்தை  பரிமாறி பெயர் எடுப்பவர்களை விட்டு விட்டு இதை வழங்க கஷ்ரப்பட்டு உழைத்து அதை வழங்கி விட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கும் அந்த மக்களைப் பாராட்டுவோம். 

ஐரோப்பாவில் தமிழ் மக்களின் உழைப்பை உறுஞ்சி தமது வாழ்க்கையை நடத்தும் தமது சக பாடிகளிடம் பணம் திரட்டி வழங்கி இருக்கலாம். இவர்கள் தானம் வழங்குவதும்  மக்கள் பணம் தான்.

துல்பன்,லண்டனில் இருந்து பணம் அனுப்பினாலும் அதை அவர்கள் மற்றவர்களுக்கு பிரயோசனமாய் பயன் படுத்தி உள்ளனர்... பொதுவாய் இந்துக்கள் மதம் சார்ந்து அனுப்புவது குறைவு...ஏதாவது அனர்த்தம் என்றால் பொதுவான அமைப்பினுடாகவே அனுப்புவார்கள் ...இப்போது தான் முதல் முறையாய் இப்படி அனுப்பி உள்ளார்கள் ..இங்கேயிருந்து கிறிஸ்தவ சபையால் அனுப்ப்பப்படும்  பணம் தான் அங்கே உதவி செய்து போட்டு  மத மாற்றத்திற்கு பயன்படுகிறது....இவர்கள் பிரதி பலன் இல்லாமல் உதவியிருக்கிறார்கள் ...உங்களால் நன்றி சொல்ல முடியா விட்டால் ஒதுங்கி இருக்கலாம்.
 
1 hour ago, ரதி said:

ரதி நீங்கள் கூறியது போல் இந்துகள் மத‍ம் சார்ந்து  சமூக நல திட்டங்களுக்கு உதவுவது  முன்னர் இல்லை. இந்து மத‍த்தை வழிநடத்தி தம்மை மட்டும் மத குருமார்களாக தாமே நியமித்த கும்பல்கள்  இந்து மக்களை அப்படி உதவி செய்யும் வகையில் வழி நடத்தவில்லை.  தமது வருமானத்திற்க்காகவே மத‍த்தையும் அதனுன் சேர்த்து அவர்களால் மக்கள் மீது திணிக்கபட்ட மூடநம்பிக்கைகளையும்  பயன்படுத்தினர். 

1990 களின் நடுப்பகுதியில்  ஈழப்போர் உக்கிரமாக  நடைபெற்று  மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்ட்ட போது  கோவிலில் மித மிஞ்சி இருக்கும் பணத்தை அனுப்ப வேண்டும் என்று மக்களில் ஒரு சிலர் கேட்ட போது கோவில் நிர்வாகத்தினர் அவ்வாறு செய்வது பஞ்ச மா பாதகங்களில் ஒன்றாகவே நோக்கினர். கோவில் பணம் இறைவன்  திருப்பணிகளுக்கு  மட்டுமே பயன்படுத்த படவேண்டும் என்றும் கோவிலில் அரசியலுக்கு இடமில்லை என்று தம்பாட்டிற்கு வியாக்கியானமும் கொடுத்தனர். அதன் பின்னர் விடுதலை புலிகள் சில கோவில்களை கைப்பற்றி அவ்வாறு செய்ய தொடங்கியதுடன் மக்கள் புனர்வாழ்வுக்கு கோவில்கள் உதவ வேண்டும் என்று பல பொது அமைபுபுகளுடன் பல ஆலய நிர்வாகிகளையும் அழைத்து   பாரிய அழுத்தம் கொடுத்த பின்னரே சில கோவில்கள் இறங்கி வந்தன அல்லது வர நிர்ப்பந்திக்க‍ப்பட்டன. அந்த நிலையில் கூட விடுதலை புலிகள் அடாவடியாக தம்மிடம் பணம் பறிக்கிறார்கள் என்று சுவிஸ் அரசிடம் முறையிட்ட  இந்து குருமார்களும் உண்டு. 

அக்காலப்பகுதியின் பின்னர் பல இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் நல் மனம் படைத்தவர்கள் மனம் மாறி இவ்வாறான உதவிகளை குருமாரையும் மீறி செய்ய தொடங்கிய பின்னரான காலப்பகுதியில் தான்  பல கோவில் நிர்வாகங்கள் அதை பின்தொடர்ந்தன. 1990 களில் இறுதி பகுதியில் விடுதலை புலிகள் வெற்றி முகத்துடன் இருந்ததால்  மறு பேச்சு பேச முடியவில்லை. 

இவ்வாறு  ஐரோப்பாவில் இந்து ஆலயங்களில்  மக்கள் பணி பாரிய போராட்டங்ககின் பின்னரே சாத்தியமாயிற்று.  அவ்வாறு நற்காரியங்ககளை செய்த செய்து கொண்டிருக்கும் கோவில் நிர்வாக சபையினரும் மக்களும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.  இந்த நிலையே ஏற்படுத்திய விடுதலைபுலிக்களுக்கும் நன்றி கூற வேண்டும்

உண்மை நிலை இவ்வாறிருக்க இந்து மத குருமார்  நல்மனம் படைத்தவர்கள் என்பது போல் போல் எழுதிய கருத்தும் நீங்களும் அவ்வாறே அப்பாவித்தனமாக கருதுவதும்  சிரிப்பை வரவழைத்த‍து. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 05:22, satan said:

 புகைப்படம் எடுக்காமல் செய்வது தெரிய வருவதில்லை. உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். பெயருக்கும் புகழுக்கும் கொடுப்பது அதோடு போய்விடும். நாம் கொடுப்பது மற்றவரை வாழ வைக்க வேண்டும். அதை  பார்ப்பவர்  அந்த வழியை தொடர பின்பற்ற வைக்க வேண்டும்.  அதைத்தான் இன்று நாட்டில் இளைஞர் தொடங்கி அனைவரும் செய்கின்றனர். 

spacer.pngspacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.