Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகா.. நானும் ஒரு சமையல் விற்பன்னர்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஒவ்வொரு ஆணின் சமையலுக்குப்  'பின்'னால் ஒரு பெண் இருக்கிறாள் .........!  😁

வாஸ்தவம்தான், அதனால்தான் நான் சேஃப்டி பின்களை ஒளித்து வைத்துவிடுவேன், 'பின்'னால் பிரச்சினை வரக்கூடாதில்லையா..? 😎

  • Replies 70
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமையலுக்கு பாராட்டுக்கள் ராசாவன்னியர்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலக்கு கலக்கிவிட்டீர்கள்.நானும் எதோ பெரிய சமையல் என்று பார்த்தால் .... இட்லிதானா ???? இட்லி பக்கற்  கூட அங்கு விற்கிறார்களா ??? சாதாரணமாக எங்கண்ணா நீங்கள் உண்பது ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சமையலுக்கு பாராட்டுக்கள் ராசாவன்னியர்..

மிக்க நன்றி திரு.புத்தன்.

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு கலக்கு கலக்கிவிட்டீர்கள்.நானும் எதோ பெரிய சமையல் என்று பார்த்தால் .... இட்லிதானா ???? இட்லி பக்கற்  கூட அங்கு விற்கிறார்களா ??? சாதாரணமாக எங்கண்ணா நீங்கள் உண்பது ???

மிக்க நன்றி அம்மணி.

அட நீங்க வேறை..! இந்த இட்லியை செய்து சாப்பிடவே தடுமாற வேண்டியிருக்குது..!!

இம்மாதிரி இட்லி, தோசை மாவு பாக்கெட்கள் இங்கே மளிகை கடைகளில் கிடைக்கும். '4 திர்ஹாம்' என நினைக்கிறேன். ஃப்ரிட்ஜில் வைத்திருந்து தேவைகேற்ப மாவை ஊற்றி இட்லியோ தோசையோ செய்து சாப்பிடலாம். ஒரு வாரத்திற்கு மாவு கெடாமல் இருக்கும்.

Pocket.jpg

வழக்கமாக சரவண பவன், ஆரியாஸ் போன்ற கடைகளில் டிபன் ஆர்டர் செய்தால், வீட்டிற்கே வந்து பார்சலில் கொடுப்பார்கள்.

கராமா (Karamaa) என்ற இடத்தில் ஏகப்பட்ட தமிழக உணவகங்கள் உள்ளன.

'சரவண பவன், அஞ்சப்பர், பொன்னுசாமி, ஆரியஸ், ஆம்பூர் பிரியாணி, காரைக்குடி மெஸ், மதுரை கோனார், சென்னை ரெஸ்டாரண்ட் etc. என குறிப்பிட்டு சொல்லலாம். விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

வீட்டிற்கு மிக அருகிலேயே பட்டுக்கோட்டையை சேர்ந்தவரின் உணவகம் உள்ளது. காலை, மாலை டிபன் நன்றாக இருக்கும். அவ்வப்போது விருப்பட்ட உணவங்களில் சாப்பிடுவது வழக்கம்.

துபாயில் 'டப்பு' இருந்தால் வாங்கி சாப்பிட, எந்த நாட்டு உணவுகளும் வரையறைக்குட்பட்டு கிடைக்கிறன.

எல்லாவற்றுக்கும் 'டப்பு' வேணும் அம்மணி, 'டப்பு'..! :)

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியரே தமிழ்நாட்டுக்காரர்கள் நன்றாக சாம்பாறு வைப்பார்கள்.ஒரு கறியிலேயே பல்சுவை இருக்கும்.இதன் செய்முறையும் வெகுசுலபம்.
ஒரு அடுப்பில் சாதம்.இன்னொரு அடுப்பில் சாம்பாறு.அலுவல் முடிந்தது.
ஆத்துக்காரியை கேட்டு செய்யுங்க.
மறக்காமல் ஒரு டப்பா யோக்கட்டும் வாங்கி வையுங்க.ஊறுகாய் பிடித்தா அதுவும் தனிச்சுவை.

On 24/4/2020 at 08:58, ராசவன்னியன் said:

சாதம் கொஞ்சம் குழைஞ்சிடிச்சி..! அடுத்த முறை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

உங்க வயதுக்கு சாப்பிட சுகமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியரே தமிழ்நாட்டுக்காரர்கள் நன்றாக சாம்பாறு வைப்பார்கள்.ஒரு கறியிலேயே பல்சுவை இருக்கும்.இதன் செய்முறையும் வெகுசுலபம்.
ஒரு அடுப்பில் சாதம்.இன்னொரு அடுப்பில் சாம்பாறு.அலுவல் முடிந்தது.
ஆத்துக்காரியை கேட்டு செய்யுங்க.
மறக்காமல் ஒரு டப்பா யோக்கட்டும் வாங்கி வையுங்க.ஊறுகாய் பிடித்தா அதுவும் தனிச்சுவை.

சரவண பவன், மற்றும் ஆரியாஸில் சாம்பார் மட்டும் தனியாக 5 திர்ஹாமுக்கு கிடைக்கிறது. வீட்டில் 'ப்ரியா' ஊறுகாய், ஆச்சி இட்லி பொடி, புளியோதரை பேஸ்ட், அல்மராய் தயிர், மற்றும் மோர் என வாங்கி ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்துள்ளேன்.

சோறு சமைத்துவிட்டு மேலேயுள்ளவற்றை விருப்பபடி கலக்கியடித்தால் சாப்பாடு ஓவர்..!

12 minutes ago, ஈழப்பிரியன் said:

..ஆத்துக்காரியை கேட்டு செய்யுங்க..

சாப்பாடு விடயத்தில் ஆட்டுவிக்கிறதே அவங்கதான்.. 'வயசாகி வருது, கவனமா இருக்கோணும்' என அறிவுறுத்தல்கள்.

எந்த விடயத்திலும் சுயமாக ஒரு கோணத்தில் மட்டும் தறிகெட்டு சிந்தித்து வேகமெடுத்து கணவன் ஓடும்போது, ஆண்டவனாக பார்த்து இணைக்கப்பட்ட "ப்ரேக்" தான் இந்த இல்லாள் பரிசு..!😍

ஒன்னும் சொல்ல இயலாது..! :)

29 minutes ago, ஈழப்பிரியன் said:

..உங்க வயதுக்கு சாப்பிட சுகமாக இருக்கும்.

என் வயசா..? அப்படி என்னாகி போச்சுது..??

இரும்பை கரும்பாக்கி சாப்பிடும் வயசு, சாமி..!

கருத்துக்களுக்கு மிக்க நன்றி திரு.ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சூப்பர்ஆ இருக்கு, கலக்குங்க ராசவன்னியன். இந்த கொரோனாவில் இருந்து தப்பிப்பிழைப்பவர்கள், பெரும் சமையல்காரர்களாக வருவார்கள் போல இருக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 minutes ago, நீர்வேலியான் said:

பார்க்க சூப்பர்ஆ இருக்கு, கலக்குங்க ராசவன்னியன். இந்த கொரோனாவில் இருந்து தப்பிப்பிழைப்பவர்கள், பெரும் சமையல்காரர்களாக வருவார்கள் போல இருக்கு. 

உண்மைதான் நீர்வேலியான்.

கொரானா, ரமலான் நோன்பு போன்றவைகளால் உணவு தட்டுப்பாடும் அதிகரிக்கிறது. பெரிய உணவங்களில் தினமும் அதிக விலைகொடுத்து சாப்பிடவும் முடியாது, கொரானா தொற்றிலிருந்து இவர்களின் 'உணவு தயாரிப்பு எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கும்' என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் இயலாது. 🙄

ஒரே வழி, சமையலை கற்றுக்கொண்டு தொற்று அபாயத்தை முடிந்தளவு தவிர்ப்பதுதான்.

சமையலில் பழக்கம் இல்லாவிட்டாலும், கேட்டுத் தெரிந்து விரைவாக செய்துமுடிக்கக் கூடிய வத்தக் குழம்பு, தக்காளி குழம்பு போன்றவைகளை கற்றுக்கொள்ள நினைக்கிறேன். வீட்டம்மாவிடம் டியூசன் எடுத்து செய்யணும்..! :innocent:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடந்த ரெண்டு, மூனு நாள் சொந்த சமையல் செய்து சாப்பிட்டு அலுத்துப் போச்சுது. sereveiller.gif

இந்த பெண்கள், எப்படித்தான் வாழ்நாள் முழுவதும் சமைத்துக் கொட்டி, பிள்ளை குட்டிகளையும் கவனித்து வளர்த்து, வீட்டையும் கவனித்து அதே சமயம் கணவனின் லொள்ளுகளையும் தாங்கிக்கொண்டு... 1mamie.gif

யப்பாடி, ரொம்ப பொறுமை வேணுமடா சாமியோவ்..!  rockingchair.gif

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ராசவன்னியன் said:

சிலருக்குப் பணி ஓய்வு வந்தபின்தான் வீட்டுப் பராமரிப்பில் பெண்கள் படும் சிரமங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால்தான் என்னவோ கொரோனா வந்து உன் பெண்டாட்டி படும் பாடுகளையும் பாரடா என்று வீட்டுக்குள் முடக்கி அடக்கி வைத்துள்ளதோ......🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 16:58, ராசவன்னியன் said:

சாதம் கொஞ்சம் குழைஞ்சிடிச்சி..! அடுத்த முறை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

இரண்டு அளவுமுறை..

1. எந்த கப் பாவித்து அரசி ஒரு கப் எடுக்கிறீர்களோ, அந்த கப்பில், 1 1/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்தால் அளவு சரியாகும். 2 கப் ஆயின் 3 கப் தண்ணீர்.

2. ரைஸ் குக்கர் பாவிப்பதானால், அரசியனை கழுவி பின்னர் கையினால் சமமாக பரவி, கைவிரலில் நடுவிரலின் நுனியில் இருந்து முதலாவது மடிப்பு கோடுவரை தண்ணீர் இருக்கும் வரை சேர்ப்பது.

மூணாவது போனஸ் டிப்... விரைவான சமையலுக்கு.... தண்ணீர் அளவு சரியாக தெரிந்த பின்னர், கொதித்த சுடுநீர் சேர்ப்பதன் மூலம், விரைவாக அரசியினை, சோறாகலாம். 

இந்த முறையில் அளவு பார்க்கிறேன் எண்டு விரலை, அரிசிக்கு மேல் வைக்கிறதில்லை... கொதி தண்ணீர். ஒரு ஸ்பூன் பாவிக்கலாம். (கைவிரல் நீளத்தினை, கரண்டியால்  அளந்து... பின்னர்.... லெவல் படுத்திய அரிசிக்கு மேல் வைத்து, அளவு பார்த்துக் கொண்டே, சுடுதண்ணீர் விடுவது.... 

(விரல் நுனி லெவல் படுத்தப்பட்ட அரிசியின் மேல் மட்டத்தினை தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். ரைஸ் குக்கரின் அடிப்பாகத்தினை அல்ல)

வீட்டம்மா வந்தபின்னர்.... யாழ் உறவுகள் பத்தி சொல்லாமல், நீங்கலாக கண்டு பிடித்ததாக பீலா விடலாம்..

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Paanch said:

சிலருக்குப் பணி ஓய்வு வந்தபின்தான் வீட்டுப் பராமரிப்பில் பெண்கள் படும் சிரமங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால்தான் என்னவோ கொரோனா வந்து உன் பெண்டாட்டி படும் பாடுகளையும் பாரடா என்று வீட்டுக்குள் முடக்கி அடக்கி வைத்துள்ளதோ......🤪

mzVfW2.gif

அப்பப்போ ஐயா வந்துதான் எனக்கு சரியான நேரத்தில் தலையில் உறைக்கிற மாதிரி புத்திமதி சொல்லுவார்..!  😋

நன்றி சார்.. ! :)

6 minutes ago, Nathamuni said:

இரண்டு அளவுமுறை..

1. எந்த கப் பாவித்து அரசி ஒரு கப் எடுக்கிறீர்களோ, அந்த கப்பில், 1 1/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்தால் அளவு சரியாகும். 2 கப் ஆயின் 3 கப் தண்ணீர்.

2. ரைஸ் குக்கர் பாவிப்பதானால், அரசியனை கழுவி பின்னர் கையினால் சமமாக பரவி, கைவிரலில் நடுவிரலின் நுனியில் இருந்து முதலாவது மடிப்பு கோடுவரை தண்ணீர் இருக்கும் வரை சேர்ப்பது.

மூணாவது போனஸ் டிப்... விரைவான சமையலுக்கு.... தண்ணீர் அளவு சரியாக தெரிந்த பின்னர், கொதித்த சுடுநீர் சேர்ப்பதன் மூலம், விரைவாக அரசியினை, சோறாகலாம். 

இந்த முறையில் அளவு பார்க்கிறேன் எண்டு விரலை, அரிசிக்கு மேல் வைக்கிறதில்லை... கொதி தண்ணீர். ஒரு ஸ்பூன் பாவிக்கலாம். (கைவிரல் நீளத்தினை, கரண்டியால்  அளந்து... பின்னர்.... லெவல் படுத்திய அரிசிக்கு மேல் வைத்து, அளவு பார்த்துக் கொண்டே, சுடுதண்ணீர் விடுவது.... 

மிக்க நன்றி நாதமுனி.

நீங்கள் கூறிய இரண்டாவது முறையில் தான் அரிசிக்கு தண்ணீர் சேர்ப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவது போனஸ் டிப் ஆக  ரைஸ் குக்கர்  கொள்கலனின்  அடிப்பாகத்தை  உலர்ந்த  துணியால் துடைக்கணும் அதில் நீர் தன்மை இருந்தால்  டப்  டுப்  என  சத்தம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 11:12, suvy said:

கொஞ்சம் நில்லுங்க வன்னியன்.......சோறு சமைக்கிறம் என்று மனிசிமார் சொல்வதெல்லாம் புருஷனை ஏமாத்துற பக்கா பிளான்.......!   அது ஒன்றும் பெரிய வேலையில்லை. ரைஸ் குக்கரில் அரிசியை கழுவி பின் போட்டு அதில் அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணி ( பச்சத் தண்ணி) விடுங்கள்.....எவ்வளவு என்றால் அரிசியில் இருந்து  உங்களின் ஆள்காட்டி விரல்  அளவு போதும்......அடுத்த அரைமணி நேரத்தில் யாரும் சமைக்காமலேயே அது சோறாகிவிடும்.......!    😁

வன்னியரே! சுவியரின் ஆலோசனையை நான் படித்தபோதே அறிந்துகொண்டேன், அவர் உங்களைக் கலாய்ப்பதை. ஆனாலும்..... அனுபவப்படட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். 😆  

On 24/4/2020 at 17:58, ராசவன்னியன் said:

சாதம் கொஞ்சம் குழைஞ்சிடிச்சி..! அடுத்த முறை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

ஆள்காட்டி விரலை முழுவதும் விட்டால் அரிசி குழையாமல் பூப்போலவா வரும்.......?? வீட்டம்மாவிடம் பீலா காட்டித் திட்டு வாங்கட்டும் என்றிருந்தேன், அதக்குள் நாதமுனித் தம்பி வந்து என் எதிர்பார்ப்புக்கு ஆப்பு வைத்துவிட்டார். 😩

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Paanch said:

வன்னியரே! சுவியரின் ஆலோசனையை நான் படித்தபோதே அறிந்துகொண்டேன், அவர் உங்களைக் கலாய்ப்பதை. ஆனாலும்..... அனுபவப்படட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். 😆  

ஆள்காட்டி விரலை முழுவதும் விட்டால் அரிசி குழையாமல் பூப்போலவா வரும்.......?? வீட்டம்மாவிடம் பீலா காட்டித் திட்டு வாங்கட்டும் என்றிருந்தேன், அதக்குள் நாதமுனித் தம்பி வந்து என் எதிர்பார்ப்புக்கு ஆப்பு வைத்துவிட்டார். 😩

அவர் இஞ்சினியர் என்பதே மறந்து போய் விட்டது பாஞ்ச் ....அவருக்கு நான் 3.7 செ மீ  அளவு தண்ணீர் என்று சொல்லியிருந்தால் சரியாய் இருந்திருக்கும். மேலும் அவருடைய விரல் நீளமாகவும் இருந்திருக்கும்.ஆனாலும் நான் அவரின் பசியை ஆற்ற உதவியுள்ளேன் ....நீங்கள் அவர் அடி வாங்கட்டும் என்று பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறீங்கள்......!   😪

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சமையல் பழகினாலும் பாத்திரசூடு படும் போது அம்மா , மனைவி சமைக்கும் போது படும் பாடு தெரியவருகிறது 

நான் துபாயில் இருக்கும் போது சமைக்க பழகிக்கொண்டேன் இந்திய சாப்பாடுகள் ஆரம்பத்தில் பொருந்தவில்லை சாம்பார் , குருமா, உம்புமா, பூரி ,சப்பாத்தி, பொங்கல் , தயிர்சாதம் , தக்காளி சாதம் , புளியோதரை எல்லாம் ஹோட்டலில் இருந்துதான் 

நாங்கள் சமைக்க தொடங்கிய பிறகு நேபாள் நாட்டுக்காரன் கூட சாப்பிட தொடங்கினான்  அவன் கோழியை மட்டும் தான் சாப்பிடுவான் அசைவம் 

கராமாவில் இருக்கும் கடைகளில் விலை அதிகம் ராஜவன்னியர்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, Paanch said:

வன்னியரே! சுவியரின் ஆலோசனையை நான் படித்தபோதே அறிந்துகொண்டேன், அவர் உங்களைக் கலாய்ப்பதை. ஆனாலும்..... அனுபவப்படட்டும் வேடிக்கை பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். 😆  

ஆள்காட்டி விரலை முழுவதும் விட்டால் அரிசி குழையாமல் பூப்போலவா வரும்.......?? வீட்டம்மாவிடம் பீலா காட்டித் திட்டு வாங்கட்டும் என்றிருந்தேன், அதக்குள் நாதமுனித் தம்பி வந்து என் எதிர்பார்ப்புக்கு ஆப்பு வைத்துவிட்டார். 😩

1 hour ago, suvy said:

அவர் இஞ்சினியர் என்பதே மறந்து போய் விட்டது பாஞ்ச் ....அவருக்கு நான் 3.7 செ மீ  அளவு தண்ணீர் என்று சொல்லியிருந்தால் சரியாய் இருந்திருக்கும். மேலும் அவருடைய விரல் நீளமாகவும் இருந்திருக்கும்.ஆனாலும் நான் அவரின் பசியை ஆற்ற உதவியுள்ளேன் ....நீங்கள் அவர் அடி வாங்கட்டும் என்று பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறீங்கள்......!   😪

தங்கள் இருவரின் பதிவுகளை படித்தவுடன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டேன்.

ஒரு சாதாரண மின்கடத்தியில் மின்சாரம் செல்ல பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு பொறிமுறைகளை ஆராய்ந்து வடிவமைப்பது வழக்கம்.

பெரும்பாலும் வடிவமைத்த குறிப்பிட்ட எல்லை அளவுகளை மின்சாரம் மீறாது. அப்படியும் மீறினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். மின்சாதனங்களும் பழுதாகாது.

இப்படி சடப் பொருள்களை வடிவமைக்கவே இவ்வளவு ஆராயும் ஒரு பொறியாளர், சமைக்கும் முன் 'என்னென்ன பாதகங்கள், தெளிவில்லாத விடயங்கள் உள்ளன..?' என ஆராய்ந்து பல்வேறு இடங்களில் தகவல்கள் பெற மாட்டாரா..? அப்படியே தகவல்கள் பெற்றாலும் வீடு மந்திரியிடம் இறுதியாக ஆலோசனை கேட்க மாட்டாரா..?

என் இல்லாளிடம் இந்த சோறு குழைவு விடயமாக சொல்லி படத்தை காட்டியபோது, அவர் கூறியது "தண்ணீர் சரியான அளவில் சேர்த்தாலும், நீங்கள் வாங்கிய அரிசி புதியதாக இருக்கும், அந்த குறிப்பிட்ட நிறுவன பொருளை திரும்பக் கொடுத்துவிட்டு  இன்னொரு நிறுவனத்தின் பொருளை வழக்கமாக வாங்கும் கடையில் வாங்கி சமைத்துவிட்டு சொல்லுங்க..!" என்றார்.  (இப்பொழுது அந்த தமிழ்க் கடை ஊரடங்கு தளர்வு காரணமாக திறந்துள்ளது.)

நானும் புதிய அரிசிப் பொதியை திரும்பக் கொடுத்துவிட்டு வழக்கமாக வாங்கும் தமிழ்க் கடையில் பழைய பொன்னி அரிசி பொதியை வாங்கி சமைத்ததில், எல்லாம் சுகமே..!  😎

இரு 'தாத்தா'க்களின் ரகளைகளுக்கும் நன்றி ..! :)

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

"தண்ணீர் சரியான அளவில் சேர்த்தாலும், நீங்கள் வாங்கிய அரிசி புதியதாக இருக்கும்,

புதுசில் எல்லாமே குழையும். பழசான பின்புதான் பிரச்சனையே வன்னியரே - அனுபவம். 😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

புதுசில் எல்லாமே குழையும். பழசான பின்புதான் பிரச்சனையே வன்னியரே - அனுபவம். 😩

ஏதோ உள்குத்தாக சொல்ல வருகிறீர்கள், ஆனால் மாற்றி சொல்வதுபோல

எனக்கு தோற்றப்பாடு தெரிகிறது. 😋

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

புதுசில் எல்லாமே குழையும். பழசான பின்புதான் பிரச்சனையே வன்னியரே - அனுபவம். 😩

நல்ல பசி இருந்தால் எதுவும் எப்பவும் புதுசு தான்.😆

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

நல்ல பசி இருந்தால் எதுவும் எப்பவும் புதுசு தான்.😆

தெய்வமே....:100_pray: 

வன்னியருக்கும் தெளிவுபடுத்தி விடுங்கள். 🕺💃 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல பசி இருந்தால் எதுவும் எப்பவும் புதுசு தான்.😆

3 hours ago, Paanch said:

தெய்வமே....:100_pray: 

வன்னியருக்கும் தெளிவுபடுத்தி விடுங்கள். 🕺💃 

ம்ஹூம்.. திரி வேற பக்கம் போகுது..!

நாம சோறு பொங்குற வேலையை பார்ப்போம். mange7.gif

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

ம்ஹூம்.. திரி வேற பக்கம் போகுது..!

நாம சோறு பொங்குற வேலையை பார்ப்போம். mange7.gif

அரிசியை முன்று நான்கு தடவை நன்றாகக் கிளைந்து கழுவி, அளவான தண்ணீருடன் பொங்கினால் சோறு பூப்போல் பொங்கி வந்து..... ஆகா அதன் சுவையோ சுவை. . 2365.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

அரிசியை முன்று நான்கு தடவை நன்றாகக் கிளைந்து கழுவி, அளவான தண்ணீருடன் பொங்கினால் சோறு பூப்போல் பொங்கி வந்து..... ஆகா

அதற்குள் சிறிய பட்டர் துண்டையும் போட்டால் ஒட்டவும் மாட்டாது.சுவையாகவும் இருக்கும்.

10 hours ago, ராசவன்னியன் said:

நாம சோறு பொங்குற வேலையை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Paanch said:

அரிசியை முன்று நான்கு தடவை நன்றாகக் கிளைந்து கழுவி, அளவான தண்ணீருடன் பொங்கினால் சோறு பூப்போல் பொங்கி வந்து..... ஆகா அதன் சுவையோ சுவை. . 2365.jpg

53 minutes ago, ஈழப்பிரியன் said:

அதற்குள் சிறிய பட்டர் துண்டையும் போட்டால் ஒட்டவும் மாட்டாது.சுவையாகவும் இருக்கும்.

Vadivelu comedy from the winner movie part 1 on Make a GIF

இதைத்தானே நானும் சொன்னேன்......!    😪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.