Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த

விடுதலைப்புலிகளை தோற்கடித்த படையினரும் பொலிஸாரும் சுகாதார தரப்பினருடன் இணைந்து கொவிட் 19ற்கு எதிரான இன்னொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார்.200315-SLN-coronavirus-1-300x199.jpg
இது தமிழ் மக்களிற்கு எதிரான யுத்தமல்ல எவ்பிஐயினால் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான வெற்றி காரணமாக தமிழ் மக்கள் தற்போது தாங்கள் விரும்பியபடி வாழ முடிகின்றது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் சிறுவர்கள் தற்போது பலவந்தமாக விடுதலைப்புலிகளால் படையணிகளில் சேர்க்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.sl-army.jpg
தமிழ் அரசியல்வாதிகள் முன்னர் போல விடுதலைப்புலிகளின் படுகொலைகள் குறித்து அச்சத்தில் வாழவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைப்புலிகள் இல்லாததன் காரணமாக வடக்குகிழக்கில் தேர்தல்களை நடத்தலாம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக அந்த மாகாணங்களை சேர்ந்த வாக்களிப்பதற்கான உரிமையை பாதுகாக்க முடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கொவிட் 19ற்க்கு எதிரான யுத்தத்திலும்; வெல்கின்றது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச பொதுமக்களுடன் இணைந்து படையினரும் காவல்துறையினரும் ஆற்றியுள்ள முக்கிய பங்களிப்பு கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.1589794044-Ex-military-officers-will-alw
இது மீண்டும் படையினரும் பொலிஸாருமே தேசத்தின் பாதுகாவலர்கள் என்பதை உறுதி செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழமைவில் நல்லாட்சி அரசியல் கட்சிகள் பொதுமக்களிற்கும் படையினருக்கும் இடையில் செயற்கையான சமூக வேறுபாட்டை உருவாக்குவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் கடுமையாக கண்டிக்கின்றேன் என பிரதமர்மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.mr-army2-300x111.jpg
ஆயுதப்படையை சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பதவி வழங்கப்பட்டால் அதனை இராணுவமயப்படுத்தல் என எதிர்கட்சியினர் சித்தரிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையிலிருந்து ஒருவர் ஓய்வுபெற்றுவிட்டால் அவர் அதன் பின்னர் சாதாரண பிரஜையாகிவிடுகின்றார் அவர் அதன் பின்னர் படைததரப்பை சேர்ந்தவரில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.mahinda-rajapaksa-300x255.jpg
இலங்கையின் ஜனநாயக முறைiயிலான ஆட்சியை அழிப்பதற்கான முயற்சிகளை முறியடித்து மக்களின் வாக்குரிமையை அடிப்படையாக கொண்ட இறைமையை ஏற்படுத்துவதற்கு படையினர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நாங்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவமரியாதையையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்ட படையினருக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் பதவியிலிருக்கும் வரை படைத்தரப்பையும் காவல்துறையையும் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களிற்கு அரசாங்கத்தில் இடமளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் பௌத்த சிங்கள வரலாற்றை இதற்கு உதாரணம் காட்டியுள்ளார்.

http://thinakkural.lk/article/42282

14 minutes ago, உடையார் said:

ஆயுதப்படையை சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பதவி வழங்கப்பட்டால் அதனை இராணுவமயப்படுத்தல் என எதிர்கட்சியினர் சித்தரிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படையிலிருந்து ஒருவர் ஓய்வுபெற்றுவிட்டால் அவர் அதன் பின்னர் சாதாரண பிரஜையாகிவிடுகின்றார் அவர் அதன் பின்னர் படைததரப்பை சேர்ந்தவரில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய மக்களாட்சி நாடாக கருதப்படும் இந்தியா முதல், பலமான மக்களாட்சி நாடாக கருதப்படும் அமெரிக்காவரை சேவையில் இருந்து இளைப்பாறிய முப்படையினர் தனியார் நிறுவங்களில் வெளி செய்வதே வழமை. 

அந்த பண்பை, அதற்கான காரணத்தை ஒளிக்கின்றார் போர்க்குற்றவாளி. 

ஒருநாள், அந்த முப்படையினரே இவர்களுக்கு ஆப்பாகி விடுவார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

மிகப்பெரிய மக்களாட்சி நாடாக கருதப்படும் இந்தியா முதல், பலமான மக்களாட்சி நாடாக கருதப்படும் அமெரிக்காவரை சேவையில் இருந்து இளைப்பாறிய முப்படையினர் தனியார் நிறுவங்களில் வெளி செய்வதே வழமை. 

அந்த பண்பை, அதற்கான காரணத்தை ஒளிக்கின்றார் போர்க்குற்றவாளி. 

ஒருநாள், அந்த முப்படையினரே இவர்களுக்கு ஆப்பாகி விடுவார்கள்.  

அப்படி நடந்தால் மிக்க நன்று, எமக்கு விடிவு வரலாம் 

25 minutes ago, உடையார் said:

வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆணவம் அழிவிற்கே வித்திடும். 

ஒருவேளை, விடுதலைப்புலிகள் ஆனந்தபுரம் சண்டையில் வெறிக்கரமாக அரச படையை வென்றிருந்தால், இன்று அங்கே அந்த ஒரு தூபி இருந்திருக்கும், சிங்கள தாய்மார்கள் உறவுகள் வந்து மரியாதை செய்ய வழி தரப்பட்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆட்ச்சிகான அறிவித்தலைப் பகிரங்கமாகவே கூறும் துணிச்சலை மகிந்தவுக்கு யார் கொடுத்தது ?🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இராணுவ ஆட்ச்சிகான அறிவித்தலைப் பகிரங்கமாகவே கூறும் துணிச்சலை மகிந்தவுக்கு யார் கொடுத்தது ?🤔

போராட்டத்தையும் கொரானா வைரைசயும் ஒன்றாக ஒப்பிடும் துணிச்சல் நம்ம தலக்குத்தான் உலகத்தில உண்டு

LTTEஎன்ற பயங்கரவாத அமைப்பு கொடுத்துபோட்டுது போல.....

கொரானா வைரைசையும் LTTE யையும் வீழ்த்திய அப்பே மகிந்தா மாத்தையாட்ட ஜெயவேவா

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஒருவேளை, விடுதலைப்புலிகள் ஆனந்தபுரம் சண்டையில் வெறிக்கரமாக அரச படையை வென்றிருந்தால், இன்று அங்கே அந்த ஒரு தூபி இருந்திருக்கும், சிங்கள தாய்மார்கள் உறவுகள் வந்து மரியாதை செய்ய வழி தரப்பட்டிருக்கும். 

இரசாயன தாக்குதல் நடைபெறாமல் இருந்திருந்தால் மேலே சொன்னது நடந்திருக்கும்.அதன் தாக்கத்தை உணர்ந்தே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமே ஆட்சி செய்கிறது. இதில பதவி கொடுத்தாலென்ன? கொடுக்காவிட்டாலென்ன? வெகு சீக்கிரம் அது எப்படிப்பட்டது என்பதை நீங்களும் உணருவீர்கள்., எதற்கும் இடி அமீன் முஷாரப் அவர்களின் சரித்திரத்தையும் படித்து வையுங்கள். எதிர்காலத்தில் உதவலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

ஆணவம் அழிவிற்கே வித்திடும். 

ஒருவேளை, விடுதலைப்புலிகள் ஆனந்தபுரம் சண்டையில் வெறிக்கரமாக அரச படையை வென்றிருந்தால், இன்று அங்கே அந்த ஒரு தூபி இருந்திருக்கும், சிங்கள தாய்மார்கள் உறவுகள் வந்து மரியாதை செய்ய வழி தரப்பட்டிருக்கும். 

8 hours ago, ஈழப்பிரியன் said:

இரசாயன தாக்குதல் நடைபெறாமல் இருந்திருந்தால் மேலே சொன்னது நடந்திருக்கும்.அதன் தாக்கத்தை உணர்ந்தே இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய.!

priyanka.jpg

போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.vanakkamlondon.com/priyanka-19-05-2020/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

அதை மறைப்பதற்குத்தான், அடிக்கடி பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட எமது  படைகள் என்று எதற்கெடுத்தாலும் மார்பு தட்டிக்கொள்ளுகினம். சொல்லியாவது மகிழட்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

பதினோரு நாடுகளின் துணையுடன்... சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட,
இரசாயன   குண்டுகளை பாவித்து, கோழைத்தனமாக வென்ற ஸ்ரீலங்காவிற்கு...
போர் வெற்றியை கொண்டாடுவதற்கு... எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. 

சிறித்தம்பி அந்த பக்கத்து சகுனி நாடு தான் எமக்கு முழு தரித்திரமே?
சிங்களம் 30 வருசமாய் முக்கினதுக்கு மிண்டு குடுத்து அழிச்ச நாதாரிகள்.

On 18/5/2020 at 08:13, உடையார் said:

இலங்கையின் ஜனநாயக முறைiயிலான ஆட்சியை அழிப்பதற்கான முயற்சிகளை முறியடித்து மக்களின் வாக்குரிமையை அடிப்படையாக கொண்ட இறைமையை ஏற்படுத்துவதற்கு படையினர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நாங்கள் எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீன அரசின் அறிவுறுத்தல் படியே இலங்கையில் மக்கள் ஆட்சிப்பொறுப்புக்களில் முப்படையினர் சேர்க்கபபட்டு வருகின்றனர். 

சீனாவில் நடப்பது - அரைவாசி கம்னியூச ஆட்சி. ( ஒரு கட்சி, திறந்த பொருளாதரம், அழுங்கு பிடி கொண்ட முப்படைகள்) 

சிங்களத்தில் நடந்து கொண்டு இருப்பது - அரைவாசி இராணுவ ஆட்சி ( பல கட்சிகள், திறந்த பொருளாதரம் (?), அழுங்கு பிடிக்குள் கொண்டுவரப்படும் முப்படைகள்) 

இன்று அண்ணளவாக 200000 சீனர்களை கொண்ட 1948ல் 'சுதந்திரம்" அடைந்த இலங்கை, கிட்டத்தட்ட 1000000 சொந்த மக்களை அகதிகளாகவும் குடியேறிகளாகவும் வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. 

2048இல், சிங்கள தேசிய கீதம் சீன மொழியிலும் கூட பாடப்படலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2020 at 19:27, Kapithan said:

இராணுவ ஆட்ச்சிகான அறிவித்தலைப் பகிரங்கமாகவே கூறும் துணிச்சலை மகிந்தவுக்கு யார் கொடுத்தது ?🤔

வழக்கம்போல் மீனுக்கு வாலும்  பாம்புக்கு தலையும் காட்டி கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்க வெளிக்கிட்டவை இன்றைய கொவிட்  -19 நிலவரத்தில் உலகவங்கி கையை விரித்து விட்டது வழக்கம்போல் பாம்புக்கறி தலையங்களிடம் கடன் வாங்கலாம் ஆனால் இம்முறை கட்டுநாயக்கா சுதந்திரவர்த்தகவலையத்த  கெட்டுபோடுவாங்களே என்ற பயம் வேறை இன்னும் சில நாடுகள் கடன் இல்லை என்று தங்கள் நாட்டை தாழ்த்தி கொள்வதை விட தமிழரின் விடயத்தில் நீதியுடன் நடந்து கொள்ளுங்கோ என்று அறிக்கை விட்டது மகிந்தவுக்கு இவ்வளவு கோபத்தை கொண்டுவந்து விட்டது .பக்கத்தில ஒன்று வம்பரசு கனவில் கொறட்டை  விடுவது ஏதாவது ஒப்பேத்தும் என்று நம்பினம்  இல்லாட்டி தாங்களே தங்களை தனிமைப்படுத்தல்  செய்ய வேண்டியதுதான் .

ஒரு இராணுவம் என்பது நாட்டிற்கு உள்ளே இல்லை வெளியே பாதுகாப்பு தேவை என்றால் மட்டுமே பொதுவாக வீதிகளில் இறங்குவார்கள். இந்த ஆட்சியில் புத்த பிக்கு அழைத்தாலும்  வருவார்கள். 
99090656_10158068616556855_46833268288389120_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=ri0rbdouAQIAX8j5wQ4&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=0ae8a1cc66b2f4b03bcc24e156407d7d&oe=5EEBC6CC

What is the perceived threat to national security that warranted a rushed visit by the Secretary Defence, himself a famous combat general, and two serving chiefs of the armed forces (with the only absentee being the Air Force Chief) to the Muhudu Maha Vihara and Digavapi in the Eastern Province?

On 19/5/2020 at 16:23, குமாரசாமி said:

சிறித்தம்பி அந்த பக்கத்து சகுனி நாடு தான் எமக்கு முழு தரித்திரமே?
சிங்களம் 30 வருசமாய் முக்கினதுக்கு மிண்டு குடுத்து அழிச்ச நாதாரிகள்.

இதைத்தான் நான் அடிக்கடி குறிப்பிடுவது, எல்லாவற்றிட்கும் அந்த இந்தியாக்காரன்தான் முக்கிய காரணம் எண்டு. பிள்ளையையும்  கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கூடடம்.

Edited by Vankalayan
Need to change some wordings

4 minutes ago, Vankalayan said:

இதைத்தான் நான் அடிக்கடி குறிப்பிடுவது, எல்லாவற்றிட்கும் அந்த இந்தியாக்காரன்தான் முக்கிய காரணம் எண்டு. பிள்ளையையும்  கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கூடடம்.

இந்திய மத்திய அரசு என்றும் முக்கியமானது. அவர்களை மீறி இந்த பிராந்தியத்தில் பெரிதாக எதுவும் நடை பெறாது, சீன உட்பட. மாலைதீவில் ஆட்சியை சீனாவின் பிடியில் இருந்து இந்தியா மாற்றியது. 

அங்கே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர் தரப்பிற்கு  நட்பு முக்கியமானது என்ற அடிப்படை உண்மைகளை மறுப்பதும் மறைப்பதும் ஆபத்தானது. 

57 minutes ago, ampanai said:

அப்படி என்றால் TNA  செய்வதையும் கூறுவதையும் ஆதரிக்க வேண்டும். அவர்கள் இந்தியனின் அனுமதி இல்லாமல் எதையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் TNA  செய்வதையும் கூறுவதையும் ஆதரிக்க வேண்டும். அவர்கள் இந்தியனின் அனுமதி இல்லாமல் எதையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை. 

அப்படியா....

எப்படி அடுத்த பொங்கலுக்கு தீர்வு, அடுத்த தீபாவளிக்கு தீர்வு

என்றதையா....

அல்லது

MY3 காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் திறப்பு என்னிடம் இல்லை இப்போ அரசியல் கைதிகளின் விபரம் சனாதிபதியிடம் கையளிப்பு

என்றதையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.