Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

Featured Replies

  • Replies 146
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய படப் பிடிப்புடன்... எடுக்கப் பட்ட காணொளி.
ஒரு தமிழ்ப் பெண், வாழை மரத்திலிருந்து... குலையை வெட்டி விழுத்தி....
தோளில்...  சுமந்து, செல்லும் காட்சியை..  பார்க்க அழகாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட,

ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு,

மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு

Like, Subscribe, Bell பண்ணியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாய்பனும் வாயூற வைக்கிறது.

இங்கு யேர்மனியில் பச்சை வாழைக்காய்கள் சீப்புகளாகக் கடைகளுக்கு வரும், பழுக்க வைப்பதற்குப் புகைப்போடத் தேவையில்லை,  கடையில் வாங்கி வீட்டுக்குப் போவதற்குள் பழுத்துவிடும். இரசாயனக் கலவைகளின் மகிமை அப்படி. 

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

  • தொடங்கியவர்
4 hours ago, தமிழ் சிறி said:

அழகிய படப் பிடிப்புடன்... எடுக்கப் பட்ட காணொளி.
ஒரு தமிழ்ப் பெண், வாழை மரத்திலிருந்து... குலையை வெட்டி விழுத்தி....
தோளில்...  சுமந்து, செல்லும் காட்சியை..  பார்க்க அழகாக உள்ளது. :)

தமிழ் சிறி 

இது எனது கணவனாரால்  எடுக்கப்பட்ட காணொளி. அவருக்கு குறும்படங்கள் தயாரிப்பதில் பலகாலமாக அனுபவம் உண்டு. 

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

1 hour ago, Paanch said:

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாய்பனும் வாயூற வைக்கிறது.

இங்கு யேர்மனியில் பச்சை வாழைக்காய்கள் சீப்புகளாகக் கடைகளுக்கு வரும், பழுக்க வைப்பதற்குப் புகைப்போடத் தேவையில்லை,  கடையில் வாங்கி வீட்டுக்குப் போவதற்குள் பழுத்துவிடும். இரசாயனக் கலவைகளின் மகிமை அப்படி. 

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும். இப்போது யாழ்ப்பாணத்தி இரசாயனக்கலவை முறையிலும் பழுக்க வைக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
4 hours ago, உடையார் said:

இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட,

ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு,

மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு

Like, Subscribe, Bell பண்ணியாச்சு

இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். 

காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன்.

சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்

a to z  மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Sanchu Suga said:

இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். 

காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன்.

சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம் 

பாரம்பரிய உணவுகள் மட்டுமல்ல, அந்த உணவுகளின் பெயர்களையே இன்றைய தலைமுறை மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அவைகளை ஞாபகப்படுத்தி, வருங்காலச் சந்ததிகள் கொடிய நோய்கள் பீடிக்காமல் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்வதற்கு வழிகாட்டும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. தொடருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Sanchu Suga said:

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும்.

Strom.jpgதற்போது அங்கு திருவிழா, பொங்கல், கல்யாணம் என்று களைகட்டும் காலம், வாழைக்குலையும் விலையேறிவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

1 hour ago, Sanchu Suga said:

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது

மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்

Edited by Knowthyself

6 hours ago, Sanchu Suga said:

காணோலி மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.👍👍

  • தொடங்கியவர்
2 hours ago, யாழ் அரியன் said:

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு  முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. 

கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். 
 
சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.

  • தொடங்கியவர்
2 hours ago, Paanch said:

Strom.jpgThey said that now the festival, Pongal, Kalyana, weed, the bananaikkalai cost.

எங்கள் தோட்டத்தில் அரைக்கரைவாசி வாழைகளுக்கு இந்த நிலைமைதான். வாழைபழங்களின் விலை கூடிவிட்டதுதான். ஆனால் விவசாயிகளின் சந்தைப்படுத்துதல் விலைகளில் பெரிய மாற்றம் இல்லை. இது காலம் காலமாக இருக்கும் பிரச்சினைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, யாழ் அரியன் said:

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

3 hours ago, குமாரசாமி said:

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

6 hours ago, Sanchu Suga said:
6 hours ago, Sanchu Suga said:

இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு  முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. 

கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். 
 
சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

  • தொடங்கியவர்
14 hours ago, suvy said:

a to z  மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!   👍

மிக்க நன்றி. 

  • தொடங்கியவர்
9 hours ago, குமாரசாமி said:

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

பழுக்க வைக்கிறதுக்கு தண்டில் யூரியா தடவுறது, பனடோலை  தண்டில் செருகிறது  எண்டு பல உத்திகளை கையாளலாம்.

6 hours ago, யாழ் அரியன் said:

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

6 hours ago, யாழ் அரியன் said:

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

என்னோட புகுந்தவீட்டு மண்தான் செம்மண்கலர். போன புதுசில இப்பிடி ஒரு சிவப்பு மண்ணா எண்டு ஆச்சரியமாத்தான்  இருந்தது. ஆனால் நல்ல வளமான மண். என்ன நட்டாலும் நல்ல செழிப்பா வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sanchu Suga said:

சகல ஆதரவும் கொடுத்திருக்கு.மேலும் உங்கள் உழைப்பைக் காட்டுங்கள்.

எமது காலத்தில் தோட்டத்துக்குள் செருப்புடன் போனால் மீண்டும் செருப்பு போட காலே இருக்காது.இப்போ காலம் மாறிப் போச்சு.
தங்கச்சி பிள்ளைகள் செருப்போடு உலாவுகிறார்கள்.

உங்கள் காணொளியை ஆங்கிலத்தில் பதிந்துள்ளீர்கள்.
வெளிநாட்டிலிருந்து போயிருக்கிறீர்கள் போல.முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி..💐

maxresdefault.jpg பழம் பழுக்கல என்டாலும்  புகை போட்டு பழுக்க வைப்பம் - பகிடி தலைவர்.! 

டிஸ்கி

28155477455_6df1696457_o.jpg

பின் விளைவுகள் வாறாத வரைக்கும் மகிழ்ச்சி.☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

Banana Exporters & Suppliers from India

நீர் வேலியான்.... நேற்று காணாமல் போன,
வாழைக்குலையை.....
தேடிக் கொண்டிருப்பதாக, 
"உதயன்"  பத்திரிகையில் செய்தி வந்திருக்குது.  :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

நானும் யோசித்தனான், Sanchu Suga துக்கிட்டு ஓடிப்போய் வெட்டிதாக்கும் போது😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

இவரது வாழை தோட்டதையும், செம்பாட்டு மண்ணையும் பார்க்க ஊர் ஞாபகம் வருகிறது, இவர் எந்த ஊர் என்று தெரியவில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.