Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள்

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள்

 

எல்லையில் சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பதிவு: ஜூன் 19,  2020 06:58 AM
புதுடெல்லி: 

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.


சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த இந்திய ராணுவத்தின் 76 வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த வீரர்களில், 18 பேர் லேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். மீதமுள்ள 56 மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பற்று வருகிறார்கள்.அவர்கள் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/19065821/76-Soldiers-Injured-In-Ladakh-Clash-All-Recovering.vpf

 

  • Replies 131
  • Views 12.9k
  • Created
  • Last Reply
1 hour ago, ஈழப்பிரியன் said:

மிகவும் சுவாரிசமான கலந்துரையாடல்.

தோலை உரிக்கும் கேள்விகள். 

சீனாவின் உற்பத்தி ஆளுமைக்குள் பணக்கார நாடுகள் மட்டுமல்ல, முன்னேறும் நாடுகளும் - அடிமைதான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லடாக் மோதலின் போது சீன வீரர்கள் பயன்படுத்திய கொடிய ஆயுதங்கள்

லடாக் மோதலின் போது சீன வீரர்கள் பயன்படுத்திய கொடிய ஆயுதங்கள்

புதுடெல்லி:

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 

சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.


 
இந்நிலையில், இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்திய பயங்கர ஆயுதங்களின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் அஜய் சுக்லா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களுக்கு எதிராக சீன வீரர்கள் பயன்படுத்திய ஆயுதம் என தெரிவித்து கூர்மையான ஆணிகளை கொண்ட இரும்பு கம்பிகளின்
புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 
சீன வீரர்கள் பயன்படுத்திய கொடிய ஆயுதம்
 
சண்டை நடந்த பகுதியில் இருந்து இந்திய படையினர் இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும், சீன வீரர்களின் இந்த காட்டுமிராண்டித்தம் நிச்சயம் கண்டனத்துக்கு உரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சீனா வீரர்கள் இந்திய வீரர்களை தாக்க பயன்படுத்திய ஆயுதங்கள் என சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து தற்போதுவரை இரு நாட்டு ராணுவமும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆணிகள் நிறைந்த இரும்புக் கம்பியால் இந்திய ராணுவத்தினர் தாக்கப்பட்டார்களா? சீனா சொல்வது என்ன?

கல்வானில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல்Getty Images

இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நுழைந்து சீன ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாவ் லிஜின் தெரிவித்துள்ளார். 

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாவ் லிஜின் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம், இந்திய ராணுவ வீரர்கள் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டார்களா? இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தியாளர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி சென்றதால், தாக்குதல் தீவிரமடைந்ததா? என்ற கேள்வியையும் எழுப்பினார். 

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ,''இந்த விவகாரத்தில் எது சரி எது தவறு என்பதில் குழப்பமில்லை. ஆனால், இதற்கு சீனா பொறுப்பேற்க முடியாது. இந்த மோதல் எங்கு துவங்கியது என்பதை நாங்கள் தெளிவாக விளக்கியுள்ளோம். தலைமை ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தை மீறி இந்தியா - சீனா எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நுழைந்து சீன ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலை தூண்டும் விதத்தில் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆணிகள் நிறைந்த இரும்புக் கம்பி

அதன் பிறகு, நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விவகாரம் குறித்து இந்தியா முழு வீச்சில் விசாரணை நடத்தி, மோதலுக்கு காரணமானவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என சீனா கேட்டுக்கொள்கிறது. இவ்வாறான தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்'' என சாவ் லிஜியன் கூறினார்.

ஏற்கனவே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் இருவரும் பேச்சு வார்த்தை மூலம் கல்வான் பள்ளத்தாக்கில் நடக்கும் மோதலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என ஒப்புதல் அளித்திருந்தனர். 

ஆணிகள் நிறைந்த ராடால் இந்திய ராணுவர்கள் தாக்கப்பட்டார்களா ? சீனா என்ன சொல்கிறது.

இந்தியா சீனா எல்லையில் மீண்டும் ராணுவத்தினர் அதிக அளவில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதேபோல சீனா ராணுவ வீரர்களும் எல்லையில் அதிகம் குவிக்கப்படுவார்களா? சீனா தரப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இருதரப்பிலும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணதான் முயற்சித்து வருகிறோம். இதற்கு மேல் என்னால் விளக்கம் கொடுக்கமுடியாது என்றும் சாவ் லிஜியன் கூறினார். 

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நடத்திய பேச்சு வார்த்தையில், இரு நாடுகளுக்கும் பலம் உள்ளது. இரு நாடுகளும் 1 பில்லியன் மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையை கொண்டவர்கள். எனவே, நம்பிக்கையும் வேறுபாடுகளும் அதிகரித்தால், இரு நாட்டு குடிமக்களும் பாதிக்கப்படுவார்கள். கடுமையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வாங் யி கூறியுள்ளார். 

கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது? 

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள் இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது.

இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சீனாGetty Images

அப்போது ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்று இருதரப்பும் தெரிவித்தன.

சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிக்கிறது

ஆனால், இது குறித்த விவரங்கள் எதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனினும், படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

 

https://www.bbc.com/tamil/global-53104171

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீண்டிப் பார்க்கும் சீனா: சீற மறுக்கிறதா இந்தியா?

india-china-war  

“இமயமலையில், இன்னமும் எல்லை வரையறுக்கப்படாத பகுதி ஒன்றில் இந்திய - சீனத் துருப்புகளுக்கு நடுவே நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் கடும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று தொடங்குகிறது ‘சீனா டெய்லி’ எனும் சீன நாளிதழின் தலையங்கம்.

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) இந்தியத் துருப்புகள் இரு முறை தாண்டி வந்ததால் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்றும், ‘ஆத்திரமூட்டும்’ அவர்களது செயல், இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்தது என்றும் அந்தத் தலையங்கம் குற்றம் சாட்டுகிறது.

ஏறத்தாழ சீனாவின் எல்லா ஊடகங்களும் சீன அரசால் நடத்தப்படுகின்றன என்பதால், ‘சீனா டெய்லி’ இதழின் கருத்து இப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், “சில இந்திய அரசியல்வாதிகள், தங்கள் அரசியல் லாபத்துக்காக மக்கள் மத்தியில் தேசியவாத உணர்ச்சியைத் தூண்டிவிடுவதன் மூலம் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள்” என்று அந்நாளிதழ் சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்க விஷயம். அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டிய விஷயமும்கூட!

பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்
20 இந்திய வீரர்களைப் பலிகொண்ட இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளிவந்த சில மணி நேரங்களில், மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. கரோனா ஊரடங்கு தொடர்பாக மாநில முதல்வர்களிடம் காணொலிக் காட்சியில் உரையாடிய பிரதமர் மோடி, இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால், பாஜகவினர் வரிந்து கட்டிக்கொண்டு விமர்சிப்பது வழக்கம் என்பதால், இந்த முறை காங்கிரஸ் அதைக் கையில் எடுப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் சீனா விஷயத்தைக் காங்கிரஸும் மிகுந்த கவனத்துடன், நிதானத்துடன்தான் கையாண்டது. நிதர்சனம் அதுதான்.

இன்னொரு புறம், சீனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி சீனத் தயாரிப்புத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தூக்கிப் போட்டு உடைக்கும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. இவை அர்த்தமற்றவை. மாறாக, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல்வதே தீர்வை நோக்கி இட்டுச்செல்லும்.

எல்லை விஷயத்தில் சீனாவின் பிடிவாதம்
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (Line of Actual Control) இந்தியப் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கட்டுமானப் பணிகளைச் சீனா மேற்கொண்டு வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. சம்பவம் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு, கிழக்கு லடாக்கில் இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துவரும் இந்தப் பகுதியைச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. பல ஆண்டுகளாகவே சீனா கடைப்பிடிக்கும் உத்தி இது.

19-ம் நூற்றாண்டில் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க பிரிட்டிஷ் இந்திய அரசு எடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் எல்லையை உருவாக்கும் பணிகள் தொடங்கின. 1914-ல் சிம்லாவில் நடந்த சந்திப்பில், திபெத்தின் ஆட்சி அதிகாரத்தை வரையறுக்கவும், இந்தியா - சீனா இடையிலான எல்லையைத் தீர்மானிக்கவும் பிரிட்டிஷ் அரசு முயன்றது. முத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டாலும், அப்போது மெக்மொஹன் கோடு தொடர்பான ஒப்பந்தத்தில் பிரிட்டனும் திபெத்தும் மட்டுமே கையெழுத்திட்டன.

அந்தக் கோடுதான் இந்தியா- சீனா இடையில் இமயமலைப் பகுதியில் நீண்டிருக்கும் எல்லை என்று பிரிட்டிஷ் இந்திய அரசு முடிவுசெய்தது. ஆனால், தான் கையெழுத்திடாத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது சீனா. அதேசமயம், அந்தச் சமயத்தில் பல்வேறு வகைகளில் பலவீனமாக இருந்த சீனா, பெரிய அளவில் எதிர்ப்பையும் காட்டவில்லை.

இந்தியாவுக்குத் தலைவலி
1949-ல் மாசே துங் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி அமைந்த பின்னர், சீனா பலம் பெற ஆரம்பித்தது. அதற்கு முன்பே இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஆசியாவில் யாருக்கு முக்கியத்துவம் எனும் அதிகாரப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள சீனா தீர்மானித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்ட மெக்மொஹன் எல்லைக் கோட்டைச் சீனா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை சுதந்திர இந்தியாவுக்கு வந்தது.

அந்தக் காலகட்டத்தின் வரைபடங்களில் இந்த எல்லைக் கோடு தெளிவாகக் குறிப்பிடப்படாததைச் சீனா பல முறை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. எனினும், “மெக்மொஹன் வரைந்த கோடுதான் எங்களுக்கு ஆதாரம். வரைபடம் இல்லாவிட்டாலும் இதுதான் எங்கள் எல்லைக்கோடு. இந்த எல்லைக்கோட்டைத் தாண்டிவர யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று பிரதமர் நேரு தீர்மானமாகத் தெரிவித்துவிட்டார். இவ்விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனும் சீனாவின் யோசனையையும் இந்தியா உறுதியாக மறுத்துவிட்டது. பேச்சுவார்த்தை என்று வந்துவிட்டால், ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளைச் சீனா முன்வைக்கும் எனும் ஜாக்கிரதை உணர்வுதான் அதற்குக் காரணம்.

நேரு எதிர்கொண்ட நெருக்கடிகள்
எனினும், இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியாக நேருவுக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது. அவ்வப்போது எல்லை தாண்டி வந்து வாலாட்டும் சீனாவை அடக்கிவைக்குமாறு ஜனசங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. திபெத்தை முன்வைத்தும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. 1959-ல், சீனாவின் அடக்குமுறைக்கு எதிராகத் திபெத்தில் நடந்த கிளர்ச்சியின்போது, தலாய் லாமா அடைக்கலம் கோரி இந்தியாவுக்கு வந்தார்.

அவரை இந்தியா அரவணைத்துக்கொண்ட பின்னர், சீனாவை விமர்சித்து தலாய் லாமா அறிக்கைகளை வெளியிட்டார். இது சீனாவை ஆத்திரப்படுத்தியது. இதற்கிடையே, லடாக்கில் உள்ள அக்சாய் சின் பகுதியில் சீனா சாலை அமைத்தது, லாங்ஜு பகுதியில் இரு தரப்பினருக்கும் நிகழ்ந்த மோதல் என்பன போன்ற காரணிகள் இரு தரப்பையும் பதற்றத்தின் எல்லைக்குத் தள்ளின.

இந்நிலையில், பிரதமர் நேருவுக்கும் சீனப் பிரதமர் சூ என்லாய்க்கும் இடையில் கடித வாயிலாகக் கண்டனங்களும் எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சீனா விஷயத்தில் நேரு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்து வந்தனர். இவற்றுக்கு இடையே, பேச்சுவார்த்தை இல்லாமல் நட்பு ரீதியாக இந்தியாவுக்கு வருகை தருமாறு சீனப் பிரதமர் சூ என்லாய்க்கு நேரு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று வந்து சென்ற சூ என்லாய், “நாங்கள் முன்வைக்கும் மேற்குப் பிராந்திய எல்லைக்கோட்டை இந்தியா ஏற்றுக்கொண்டால், இந்தியா முன்வைக்கும் கிழக்குப் பிராந்திய எல்லைக்கோட்டை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று இந்தியச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் மெக்மொஹன் கோட்டைச் சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்தார்.

15925490402484.jpg

எல்லையில் போர் மேகம்

சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு ‘முன்னேறிச் செல்லும் கொள்கை’யை முன்னெடுத்தது. இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததை ‘தி டைம்ஸ்’ இதழில் பணிபுரிந்த நெவில் மாக்ஸ்வெல் எழுதிய ‘இந்திய- சீனப் போர்’ புத்தகம் பதிவு செய்திருக்கிறது. அப்படியான ஒரு சூழலில், பலம்பொருந்திய சீனாவுடன் போர் சாத்தியமா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. எனினும், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் முன்னேறிச் செல்வது, அங்கு முகாம்களை அமைப்பது போன்றவை முக்கிய இலக்குகளாக இருந்தன.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் கோவாவைப் போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்தனர். மத்திய அரசு பல முறை கேட்டுக்கொண்டும் கோவாவை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள போர்த்துகீசியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து 1961 டிசம்பர் 19-ல் அங்கு நுழைந்த இந்திய ராணுவம், எளிதில் போர்த்துகீசியர்களை வென்றது. கோவா இந்தியா வசமானது. இந்த வெற்றி இந்திய ராணுவத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைத்தது. இதே உத்வேகத்துடன் சீனாவையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர்.

பெரும் தோல்வி
அரசியல் அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, காரியங்கள் படிப்படியாக அரங்கேறின. எல்லையில் சீன முகாம்களுக்கு அருகே இந்திய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. எனினும், பனிமலைகளில் நன்கு பழக்கப்பட்ட சீன ராணுவத்தினருடன் ஒப்பிட இந்திய ராணுவத்தினர் தடுமாறியதாக, நெவில் மாக்ஸ்வெல் பதிவுசெய்திருக்கிறார். சீன வீரர்கள் நவீன ஆயுதங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். சீன வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கம்பளி உடைகள், குளிரைத் தாங்கும் கனமான பூட்ஸுகள் இந்திய ராணுவத்தினரிடம் இல்லை என்றாலும் இந்தியர்கள் தீரத்துடன் சண்டையிட்டனர்.

இதற்கிடையில், எல்லையில் முன்னேறிச் செல்வது தொடர்பாக, ஊடகங்கள் மூலம் வெளியுலகத்துக்குத் தெரிவிக்கும்போது இந்தியா பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சீனத் துருப்புகள் எல்லை தாண்டி வந்து கட்டுமானங்களை அமைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதுவரை மத்திய அரசு என்ன செய்துகொண்டிருந்தது எனும் கேள்வி எழுந்தது. “இல்லை நாம்தான் சீனர்கள் முகாமிட்டிருக்கும் பகுதியில் படைகளை நிலைகொள்ளச் செய்திருக்கிறோம்” என்று சொன்னால், “பாருங்கள் இந்தியாதான் எல்லை தாண்டி அத்துமீறுகிறது” என்று சர்வதேசச் சமூகத்திடம் சீனா பாசாங்குடன் முறையிட்டது. ஆக, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய இந்த விவகாரத்தைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்தியா முன்னெடுத்தது.

ஒருகட்டத்தில், சீனாவின் கை ஓங்கியது. அப்போது அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ஆயுத உதவிகள் வழங்க முன்வந்தன. எனினும், தாக்-லா பகுதியில் இந்தியத் தரப்பு கடும் சேதத்தைச் சந்தித்தது. இந்திய ராணுவம் 3,000-க்கும் அதிகமான வீரர்களை இழந்திருந்த நிலையில், 1962 நவம்பர் 21-ல் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆம், அந்தப் போரில் நமக்குத் தோல்விதான் கிடைத்தது.

எல்லையும் அத்துமீறலும்
போரின் முடிவில் ‘உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of Actual Control) குறித்து இந்தியாவிடம் வலியுறுத்தியது சீனா. 1959 முதலே இது தொடர்பாக இந்தியாவிடம் பேசிவந்த சீனா, போர் நிறுத்தம் செய்த கையோடு அதிகாரபூர்வமாக அதை அறிவித்தது. அதேசமயம், அது தொடர்பாக இந்தியா தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அந்த எல்லைக் கோடு எங்கு அமைந்திருக்கிறது என்பதில் இந்தியா – சீனா இடையே நீண்டகாலமாக முரண்பாடுகள் இருந்தன.

அதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவைச் சீண்டியிருக்கிறது சீனா. 1967-ல் இந்திய – சீன எல்லையில் சிக்கிமில் அமைந்துள்ள நாது லா கணவாய் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் நடந்த சண்டையில் இந்தியத் தரப்பில் 88 பேர் கொல்லப்பட்டனர். 1975-ல் பும் லா அருகில், வழக்கமான ரோந்துப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 பேரைச் சீன ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இப்படி, எல்லையில் கட்டுமானப் பணிகள் என்று சீனத் தரப்பு இறங்குவதும் அதைத் தடுக்கும் வகையில் அதன் அருகில் இந்தியப் படைகள் முகாமிடுவதும் அவ்வப்போது நடந்துவரும் விஷயங்கள். திபெத்தின் மேற்குப் பகுதிக்குச் செல்வதற்கான வழியாக அக்சாய் சின்னைக் கருதும் சீனா அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கிறது.

2017 நவம்பரில், பூடானின் கட்டுப்பாட்டில் உள்ள டோக்லாம் பீடபூமி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டபோது இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினைக்குரிய பகுதிகளின் அருகில் டோக்லாம் இருப்பது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பூடானுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சியாகவும் அது பார்க்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நீடித்த பதற்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்த மோதலின்போதும் இரு தரப்பும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டன. சிலருக்குக் காயம் ஏற்பட்டது.

என்னதான் தீர்வு?
சீனாவைப் பொறுத்தவரை, அவ்வப்போது இந்தியாவைச் சீண்டுவது; எதிர்ப்பு வந்ததும் பின்வாங்குவது எனும் வழிமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்த முறையும் அதைத்தான் செய்திருக்கிறது. லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் சீன ராணுவம் மீண்டும் எல்லை மீறலாம் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள்.

15925490572484.jpg

1960-களில் நேருவுடன் ஒப்பிட சூ என்லாய், உலக அளவில் பிரபலான ஆளுமை அல்ல. எனவே, இயல்பாகவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்குத் தார்மிக ஆதரவளித்தன. இன்றைக்கு மோடி சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைவராக இருந்தாலும், மறுமுனையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மிக உறுதியான தலைவராக அறியப்படுகிறார். கடந்த காலத்தில் சீனா இழந்ததாகக் கருதப்படும் இடங்களை மீட்க வேண்டும் என்று ஜின்பிங் விரும்புவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது; சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் கூடாது; சீனாவிலிருந்து இடம்பெயரும் தொழில்களை ஈர்க்கக் கூடாது என்றெல்லாம் இந்தியாவுக்குச் சீனா உணர்த்த முயல்கிறது.

இப்படியான சூழலில், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் தீர்வுக்கு ஒரே வழி என்றும் முன்னாள் ராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள். தற்போது மேஜர் ஜெனரல்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. மறுபுறம், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்கெனவே, போராடிக்கொண்டிருக்கும் இந்தியா, ’போர் வேண்டும்!’ என்று முழக்கமிடுபவர்களுக்குச் செவிசாய்க்காமல், நிதானமாக, அதேசமயம் இன்றைக்கு இந்தியா அடைந்திருக்கும் ராணுவ பலத்தைச் சீனாவுக்கு நினைவுறுத்தும் வகையில் உறுதியாகச் செயல்பட வேண்டும்!

https://www.hindutamil.in/news/opinion/columns/560131-india-china-war-7.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கல்வான் பள்ளதாக்கு மோதல்: சீனா பிடித்து வைத்திருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்கள் விடுவிப்பு
கல்வான் பள்ளதாக்கு மோதல்: சீனா பிடித்து வைத்திருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்கள் விடுவிப்பு
 

கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா தாம் பிடித்து வைத்திருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 இந்திய படையினரை விடுவித்துள்ளது.
பதிவு: ஜூன் 19,  2020 15:12 PM
புதுடெல்லி: 

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.76 வீரர்கல் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.


தற்போது லடாக் பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா தாம் பிடித்து வைத்திருந்த 10 இந்திய படையினரை விடுவித்துள்ளது. இதில் ஒரு லெப்டினன்ட் கேர்னலும், மூன்று மேஜர் தர அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் இதனை இந்திய அரசாங்கம் உறுதிசெய்யவில்லை. அத்துடன் சீனாவுடனான மோதலின்போது தமது படையினர் காணாமல் போனதாக இந்தியா அறிவிக்கவுமில்லை.

இந்தநிலையில் பிடிக்கப்பட்ட இந்திய படையினர் விடுக்கப்பட்டது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான முக்கிய உந்துதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/19151258/10-Soldiers-Including-4-Officers-Released-By-Chinese.vpf

 

இன்னும் எத்தனை பேரை பிடித்து வைத்துள்ளானோ???🤔

 

 
23 hours ago, Kapithan said:

அட அதையும் நீங்கள்தானா சொல்வது 😂😂

நம்பீட்டோம் 😏

சொல்லும் பொய்யைக்கூட திறம்படக் கூற முடியாத இந்தியா 😂😂😂😂

😂👍கத்திறாங்க, அவசரமாக கூடுகின்றார்கள்ந அடி அந்த மாதிரி ; எந்த மாதிரி அந்த மாதிரி😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
இன்னும் எத்தனை பேரை பிடித்து வைத்துள்ளானோ???🤔

 

😂👍கத்திறாங்க, அவசரமாக கூடுகின்றார்கள்ந அடி அந்த மாதிரி ; எந்த மாதிரி அந்த மாதிரி😂

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட செய்தி;

மேற்கு இருக்கிறது என்கின்ற துணிச்சலில், எங்களுடன் வாலாட்ட நினைத்தால் எச்சிலைத் துப்பலில் இந்தியாவை மூழ்கடித்தே கொன்றுவிடுவோம். ந.......யே கவனமாக இரு.

செய்தி தெளிவாகப்  போய்ச் சேர்ந்திருக்கிறது. 😂😂😂😂

5 minutes ago, Kapithan said:

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட செய்தி;

மேற்கு இருக்கிறது என்கின்ற துணிச்சலில், எங்களுடன் வாலாட்ட நினைத்தால் எச்சிலைத் துப்பலில் இந்தியாவை மூழ்கடித்தே கொன்றுவிடுவோம். ந.......யே கவனமாக இரு.

செய்தி தெளிவாகப்  போய்ச் சேர்ந்திருக்கிறது. 😂😂😂😂

ஆனால் மோடி ஆதரவு போர் விரும்பிகளின் (😄) கர்ஜனையை சமூக இணையங்களில் சகிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இணையவன் said:

ஆனால் மோடி ஆதரவு போர் விரும்பிகளின் (😄) கர்ஜனையை சமூக இணையங்களில் சகிக்க முடியவில்லை.

குரைக்கிற நாய் கடிக்காது.😂😂

இச் சம்பவம் பற்றி சீனன் மூச்சுக் கூட விடவில்லை. 😂

ஆமை ஆயிரம் முட்டையிட்டும் மூச்சு விடாது. கோழி ஒரு முட்டையிட்டதை ஊரே தெரியும்படி கொக்கரிக்கும். 😂😂

இந்த இந்திய இராணுவத்தினர் சீனனிட்ட அடிவேண்டிச் செத்ததை விட பக்கத்திலிருந்த ஆற்றுக்குள் தப்பியோடப்  பாய்ந்து மூழ்கி இறந்ததுதான் அதிகம். 😂

எப்படியடா ஆட்டம் போட்டீங்க 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இணையவன் said:

ஆனால் மோடி ஆதரவு போர் விரும்பிகளின் (😄) கர்ஜனையை சமூக இணையங்களில் சகிக்க முடியவில்லை.

உண்மைதான்.தங்களுக்கு பயந்து சீனா மற்ற நாடுகளிடம்  உதவி கே;குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ImageImageNail studded rods used to attack Indian soldiers by Chinese army ...

ஆணி ஏற்றிய கட்டையால்  இந்திய படையினரை சீன படையினர் சித்திரவதை செய்து கொன்றார்களாம்.

https://www.opindia.com/2020/06/ladakh-standoff-china-nails-rods-mutilation-indian-soldiers-galwan-valley-pla/

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's view

dailymirror.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ImageImageNail studded rods used to attack Indian soldiers by Chinese army ...

ஆணி ஏற்றிய கட்டையால்  இந்திய படையினரை சீன படையினர் சித்திரவதை செய்து கொன்றார்களாம்.

https://www.opindia.com/2020/06/ladakh-standoff-china-nails-rods-mutilation-indian-soldiers-galwan-valley-pla/

சிதிரவதை எல்லாம்லை செய்து கொல்லவில்லை.  அடித்தே கொன்றார்களாம் 😜😜

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

இந்தியாவுக்குச் சொல்லப்பட்ட செய்தி;

மேற்கு இருக்கிறது என்கின்ற துணிச்சலில், எங்களுடன் வாலாட்ட நினைத்தால் எச்சிலைத் துப்பலில் இந்தியாவை மூழ்கடித்தே கொன்றுவிடுவோம்.

எச்சில் துப்புதல் ? போர் என்றால் எச்சில் துப்புதலாக இருந்தால் இந்தியா உலகையே வென்றுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா.... நீ... ஒரு பொந்தியா நாடு.
உனக்கு.... எந்த, நண்பனும். இல்லை.

குருவி  போல்....  சிறுகக் சேர்த்து... கட்டிக்காத்த,
தமிழ் ஈழத்தை... சிதைத்த   இந்தியா...  
நாசமாய்... போக வேண்டும்.

வெல்க சீனா... வாழ்க பாங்கீ  மூன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

எச்சில் துப்புதல் ? போர் என்றால் எச்சில் துப்புதலாக இருந்தால் இந்தியா உலகையே வென்றுவிடும்.

நீங்கள் கூறுவது பான்பராக் துப்பல். 😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பிரச்சினையை சாதகமாக்கி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சீனா’ -சதியை அம்பலப்படுத்துகிறது, அமெரிக்கா

கொரோனா பிரச்சினையை சாதகமாக்கி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சீனா’ -சதியை அம்பலப்படுத்துகிறது, அமெரிக்கா

 

கொரோனா பிரச்சினையை சாதகமாக்கி, இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது என லடாக் தாக்குதலில் சீனாவின் சதியை அமெரிக்கா அம்பலப்படுத்தி உள்ளது.
பதிவு: ஜூன் 20,  2020 05:00 AM
வாஷிங்டன்,

கொரோனா பிரச்சினையை சாதகமாக்கி, இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது என லடாக் தாக்குதலில் சீனாவின் சதியை அமெரிக்கா அம்பலப்படுத்தி உள்ளது.

லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பதற்றம் குறைத்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தன. இந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியில் கடந்த 15-ந் தேதி அதே லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்குதியில் ஏற்பட்ட மோதலில், சீன துருப்புகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த செயல், இந்தியாவை மட்டுமல்ல, ஈர இதயம் கொண்ட அனைத்து நாடுகளையும் உலுக்கி உள்ளது.


இந்த நிலையில், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கிழக்காசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச்செயலாளர் டேவிட் ஸ்டில்வெல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன துருப்புகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் சீனாவின் சதியை அம்பலப்படுத்தினார். கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி ஆட்டிப்படைத்துவருகிற நிலையில், உலகின் ஒட்டுமொத்த கவனமும், அதை வீழ்த்துவதில் திரும்பி இருந்தபோது சீனா நிலைமையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டதை அவர் தெளிவுபடுத்தினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர் பிழைப்பதில் உலகத்தின் கவனம் திசை திரும்பி இருக்கிறது. கொரோனா தொற்று நோயில் இருந்து மீள்வதில் உலகம் கவனம் செலுத்துகிறது. இந்த கவன சிதறலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனறால், இந்தியா, சீனா எல்லைப்பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறோம்.

இந்தியாவுடனான சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிது இல்லை. இது ஏற்கனவே கடந்த காலத்தில் (டோக்லாம் சந்திப்பில்) நடத்தியது போன்றதுதான். 2015-ம் ஆண்டு என்று கருகிறேன். ஜின்பிங் இந்தியாவுகு முதன் முதலாக சென்றார். அந்த சர்ச்சைக்குரிய பகுதியை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக துருப்புகளுடன் சென்று சீனா ஆக்கிரமித்தது.

இது பேச்சு வார்த்தை தந்திரமா அல்லது அவர்களின் பலத்தை நிரூபிக்க மூக்கில் குத்துவதா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால் பூடான் அருகே டோக்லாம் பிரச்சினையை பார்த்தபோது, இதே போன்ற கவலைகளை கண்டோம். நான் அதை அறிந்திருக்க விரும்புகிறேன். எங்களுக்கு நிறைய காட்சிநிலை இல்லை. சீன சகாக்களுடன் எங்களுக்கு வெளிப்படையான பேச்சு வார்த்தை இலலை. நேர்மையுடன் சொல்கிறேன். எங்களால் முடிந்தால் அதைப் பார்க்க விரும்புகிறேன்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, சீன வெளியுறவுத்துறை உயர் அதிகாரி யாங் ஜீச்சி இடையேயான பேச்சு வார்த்தையின் போது, இந்திய சீன எல்லை மோதல் விவகாரம் பேசப்பட்டதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பிராந்தியத்தில் சீனாவின் தற்போதைய நடத்தை குறித்து கவலைப்படுகிறோம்.

இந்தியாவை, தென்சீன கடலை, ஹாங்காங் விவகாரங்களையெல்லாம் நாங்கள் பார்க்கிறபோது, சீனாவின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானவை அல்ல. சீனாவுடன் நியாயமான, பரஸ்பரமான ஆக்கப்பூர்வமான முடிவு சார்ந்த உறவைத்தான் அமெரிக்கா நாடுகிறது. இது வெறும் பேச்சளவில் இருக்கக்கூடாது. செயல்களிலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/20021442/PLAs-attack-on-India-was-to-demonstrate-Chinas-military.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 23:23, தமிழ் சிறி said:

எத்தனை தரமும்.... ஆசையுடன் பார்க்கக் கூடிய அழகான படம். 👏

காந்தி, நேரு, இந்திரா, அறிஞர் அண்ணாவின் படங்களை வீடுகளிலும் வாசகர்சாலைகளிலும் (Library) தேனீர்க் கடைகளிலும் பெரிய பெரிய Frame போட்ட படங்களாக மாட்டி பெருமைப்பட்ட ஒரு இனத்தில், இந்த அளவிற்கு வெறுப்பை உமிழும் இனமாக மாற்றிய பெருமை இந்தியாவையே சாரும். ☹️

நன்றி இந்தியாவே 😡

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் - இந்திய விமானப்படை தளபதி

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் - இந்திய விமானப்படை தளபதி

 

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார்.
பதிவு: ஜூன் 20,  2020 10:15 AM
ஐதராபாத்

ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும் என்றும் கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த  "தியாகம்" வீணாகாது "என்றும் கூறினார். 


நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"மிகவும் சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளன. 

"எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.

"நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு உள்ளது.

"இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில்  அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன" என்று  கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/20101551/Chinese-action-in-Galwan-Valley-unacceptable-efforts.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் - இந்திய விமானப்படை தளபதி

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் - இந்திய விமானப்படை தளபதி

 

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார்.
பதிவு: ஜூன் 20,  2020 10:15 AM
ஐதராபாத்

ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும் என்றும் கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த  "தியாகம்" வீணாகாது "என்றும் கூறினார். 


நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"மிகவும் சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளன. 

"எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.

"நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு உள்ளது.

"இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில்  அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன" என்று  கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/20101551/Chinese-action-in-Galwan-Valley-unacceptable-efforts.vpf

 

எப்படி ? 🤔 

Go China Go என்று Banner கட்டிப் பறக்க விடுவீங்களோ 😂😂

பாகிஸ்தான் காறனாவது ஒரு பிளேனச் சுட்டதோட நிப்பாட்டிப் போட்டான். சீனாக்காறன் நியூ டெல்லி வர திரத்தித் திரத்தி அடிப்பான். 😂😂

வாயால வட சுடுவத நிப்பாட்டிப் போட்டு அற்லீற்ஸ் ரெண்டு குண்டாவது போடுங்கப்பா. எவ்வளவு நாளைக்குத்தான் லொக்டவுணால வீட்டுக்குள்ளிருந்து பழைய படங்களையே திரும்பத் திரும்பப் பார்ப்பது. எங்களுக்கொரு என்ரற்ரெயின்மென்ற் பிறஸ்ஸா வேண்டாமா 😜😜 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லையில் இந்தியா-சீனா வீரர்கள் மோதல்:கல்வான் பள்ளத்தாக்கில் 15-ந் தேதி நடந்தது என்ன?

லடாக் எல்லையில் இந்தியா-சீனா வீரர்கள் மோதல்:கல்வான் பள்ளத்தாக்கில் 15-ந் தேதி நடந்தது என்ன?

 

இந்தியா-சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: ஜூன் 22,  2020 04:45 AM
புதுடெல்லி,

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.

இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்திய வீரர்கள் அங்கிருந்து திரும்பத் தொடங்கினர். ஆனால் சீன வீரர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பாமல் அங்கேயே இருந்தனர்.

மேலும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தாங்கள் அமைந்திருந்த கண்காணிப்பு சாவடியை அகற்றுவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.அது மட்டும் இன்றி அந்தப் பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்களை அவர்கள் குவிக்கத் தொடங்கினர். அதன்படி அங்கு 300 முதல் 350 சீன வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அதேசமயம் இந்தியா தரப்பில் 16வது பீகார் படைப்பிரிவை சிறந்த வீரர்கள் உட்பட 100 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.


இவர்களை 16வது பீகார் படைப்பிரிவின் தலைவர் சந்தோஷ் பாபு வழிநடத்தினார்.சந்தோஷ் பாபு தலைமையில் 50 வீரர்கள், சீன வீரர்களிடம் சென்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு சாவடியை அகற்ற வலியுறுத்தினார்.அப்போது இருதரப்பும் வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இந்திய வீரர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த கற்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருந்த சீன வீரர்கள் திட்டமிட்டபடியே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.அதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் சண்டை நீடித்தது.

இந்த சண்டைக்கு மத்தியில் 16-வது பிகார் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சீன ராணுவ வீரர்கள் அமைத்திருந்த கண்காணிப்பு சாவடி மற்றும் அவர்களின் முகாம்களை அகற்றினர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/22011943/IndiaChina-clash--what-happened-in-Ladakh.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை வெல்லும் இந்தியாவின் படைபலம் ; சர்வதேச மையம் கணிப்பு

சீனாவை வெல்லும் இந்தியாவின் படைபலம் ; சர்வதேச மையம் கணிப்பு

 

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.
பதிவு: ஜூன் 22,  2020 05:30 AM
 
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.

அதில் இரு நாடுகளிலும் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கை, விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. அதில் இறுதியாக போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்முக்கிய அம்சம் வருமாறு:-

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்தியாவும், சீனாவும் எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது. இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும் எல்லையில் பதற்றம் குறையவில்லை. சீனாவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்கு தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளது தான் முக்கிய காரணம்.

பெரும் பிரச்சினை

சீன படை பலத்தின் முன் இந்தியா சாதாரணமானது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறு. ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா முன்னணியில் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் பரந்து விரிந்த சீனாவின் எல்லையை பாதுகாக்க போதாது.

போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது. இந்திய-சீன போர் ஏற்பட்டால் அதில் தரைப்படை மற்றும் விமானப்படை தான் முக்கிய பங்கு வகிக்கும். இரு நாடுகளிலும் கடல் வழி தாக்குதல்கள் சாத்தியமில்லை.

தரைப்படை

தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை பொறுத்தவரை இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால் இந்திய-சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனா தனது நாட்டை பாதுகாக்க 5 படைப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் படை மேற்கு திடேட்டர் கமாண்டட் ஆகும்.

இந்த படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் தான் உள்ளது. இவர்கள் மட்டுமே மலை பாங்கான அந்த பகுதிகளில் போரிடும் திறன் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவம் அனைத்தும் இந்திய-சீன எல்லையில் தான் உள்ளது. அதாவது மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய-சீன எல்லையில் இருக்கும் இடங்களை நன்கறிந்தவர்கள். மலை பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள். எனவே தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி உள்ளது.

விமானப்படை

சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன. அதன்படி விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன. போர் என்றால் இரு நாடுகளும் முதலில் விமான தளங்களை குறி வைத்தே தாக்குதல்களை தொடங்கும்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லை பதற்றம்: ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரம்

எல்லை பதற்றம்: ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி அதிகாரம்

சீனாவுடனான எல்லை பதற்றம் ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
பதிவு: ஜூன் 22,  2020 06:32 AM
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள்.


இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சீனாவுடனான எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.

குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று படைகளின் துணைத் தலைவர்களுக்கு  ரூ .500 கோடி வரை நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, இதில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தேவைகள் ஏற்பட்டால் அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விரைவான  நடைமுறைகளின் கீழ் தேவையான ஆயுத அமைப்புகளைப் பெறலாம்" என்று மூத்த அரசாங்க அதிகாரி கூறி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/22063210/After-violent-faceoff-with-China-armed-forces-granted.vpf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.