Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்

Featured Replies

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

Edited by tulpen

  • Replies 105
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

4 hours ago, tulpen said:

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள்.

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, MEERA said:

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

வெள்ளைக்காரர்களுக்கு  நான் சைவம் என்றால் அதுபற்றி ஏன் எப்படி என விளக்கம் கேட்பார்கள். அந்த சுகத்துக்காக இந்து என்று விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.  வெள்ளையளோடை தேவையில்லாமல் அலட்டத் தேவையில்லை.

சும்மா விண்ணாண விளக்கம் குடுக்க   நாங்கள் மதம் மாத்துற கோஷ்டியள் இல்லையெல்லோ.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

  • தொடங்கியவர்
17 hours ago, Kapithan said:

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

கொஞ்சம் கெளரவமான கள்ளன் என்கிறீர்கள்.  😂😂

40 minutes ago, alvayan said:

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

அப்படியென்றால் கத்தோலிக்க திருச்சபைக்கும் நான் கஞ்சாக் கேஸ் தான். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

  • கருத்துக்கள உறவுகள்

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது, தொடருங்கள் .......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது,

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

உங்கள் பிரச்சனை என்ன ? நான் நாளாந்தம் குளிப்பேனா என்று கேட்கிறீர்களா ? 😀

பயப்படாதீர்கள் ஈழப்பிரியன். நான் A/L எடுக்கும் காலம் தொட்டே இரு வேளையும் குளிபவனல்ல தலைக்கு முழுகுகிறவன்.Sportsman 👍

 கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

கடவுள் வரம் கோடுத்தாலும் ஈழப்பிரியன் விடமாட்டார் போல 😜😜

(முட்டையில் மயிர் பிடுங்குதல் என்பது இதுதானோ 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

கலியுகத்திலல்லவா இருக்கிறோம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

இந்துக் கல்லூரியில்(எந்தக் கல்லூரி என்று கேட்கப்படாது. அது இரகசியம்)  ஏறக்குறைய மூன்று வருடன்கள் கல்வி கற்றவன். வெள்ளிக் கிழமைகளில் அரைமணித்தியாலத்திற்கும் மேலாக நின்ற நிலையிற்  சொல்லப்படும் நமச் சிவாய வாழ்க நாதன் தாழ் தான் வாழ்க என்கின்ற தேவாரத்தால் கால் நோவெடுத்து வேறு கல்லூரி தேடி ஓடியவனாக்கு இந்த கப்பித்தான் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

நல்ல சிரிப்பான...  கதை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

20 minutes ago, Kapithan said:

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

நான் எந்த ஒரு இடத்திலும் குருக்களைக் குறை கூறவில்லையே. எனது அனுபவத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு சரி. இதில் குருக்களை நான் குறை கூற ஏதுமில்லை. 👍

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் 
உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன்.
ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது.
எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும்  இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது.
அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது.
என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. 

இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட.

எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு  வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.