Jump to content

மூங்கில் குழலில் அவியும் வெள்ளை மா பிட்டு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னன்டு புட்டு குழைத்தவ😂 தண்ணீ விடேல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடையில் தேங்காய் பூ போடடால்   இன்னும் சுவையாய் இருக்கும்.   நூலால் வெட்டிட  தேவை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, நிலாமதி said:

இடையில் தேங்காய் பூ போடடால்   இன்னும் சுவையாய் இருக்கும்.   நூலால் வெட்டிட  தேவை இல்லை

ஏறத்தாழ வ்வொரு  அங்குலம் பிட்டு குழைத்த  மாவுக்கு தேங்காய் போட்டு வைப்பது தானே குழல் பிட்டு.  

சாதரண பிட்டுக்கு கூட நீத்துப்பெட்டியில் அவித்தால் , அரை அங்குல இடைவெளி வைத்து தேங்காய் போட்டு அவிப்பதும்  இருக்கிறது.

இப்பொது தான் சிந்திக்கிறேன், வேறு எதாவது (உ.ம். பச்சை மிளகாய் சம்பல்) வைத்து அவிப்பதை ஏன் முயதர்சி செய்து பார்க்கவில்லை என்று. ஏனெனில், கொதிக்கும் பிட்டுடன் பச்சை மிளகாய் சம்பலை குழைக்க முயலும் பொது வரும் வாசனை நாசி நினைவில் வந்துவிட்டது. 

யாழ்ப்பாணத்தில் மாறி விட்டதோ குழல் பிட்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

என்னன்டு புட்டு குழைத்தவ😂 தண்ணீ விடேல்ல 

என்னத்த பார்கிறீயள்.

உப்பை, சிரட்டை தண்ணீல கலந்து, கரைச்சு, பாவீக்கிறாவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

என்னத்த பார்கிறீயள்.

உப்பை, சிரட்டை தண்ணீல கலந்து, கரைச்சு, பாவீக்கிறாவே.

நான் பார்த்தேன் ...உப்பை கரைத்து கொஞ்ச தண்ணீர் தானே விடுகிறா ...அது காணுமாய் இருந்ததா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ரதி said:

நான் பார்த்தேன் ...உப்பை கரைத்து கொஞ்ச தண்ணீர் தானே விடுகிறா ...அது காணுமாய் இருந்ததா 

அதுதானே கொஞ்ச தண்ணீர் காணுமா???  தேங்காய் பூ இடைக்கிடை போட்டால் தான் சுவை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ரதி said:

என்னன்டு புட்டு குழைத்தவ😂 தண்ணீ விடேல்ல 

2 hours ago, ரதி said:

நான் பார்த்தேன் ...உப்பை கரைத்து கொஞ்ச தண்ணீர் தானே விடுகிறா ...அது காணுமாய் இருந்ததா

2 hours ago, உடையார் said:

அதுதானே கொஞ்ச தண்ணீர் காணுமா???

அவர் தேங்காய் பாலில் பிட்டுக்கான மாவை குழைத்து உள்ளார்.

ஆனாலும், இதற்கும் தேங்காய் பூவை இடையிடையை வைத்து அவிப்பது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kadancha said:

ஏறத்தாழ வ்வொரு  அங்குலம் பிட்டு குழைத்த  மாவுக்கு தேங்காய் போட்டு வைப்பது தானே குழல் பிட்டு.  

சாதரண பிட்டுக்கு கூட நீத்துப்பெட்டியில் அவித்தால் , அரை அங்குல இடைவெளி வைத்து தேங்காய் போட்டு அவிப்பதும்  இருக்கிறது.

இப்பொது தான் சிந்திக்கிறேன், வேறு எதாவது (உ.ம். பச்சை மிளகாய் சம்பல்) வைத்து அவிப்பதை ஏன் முயதர்சி செய்து பார்க்கவில்லை என்று. ஏனெனில், கொதிக்கும் பிட்டுடன் பச்சை மிளகாய் சம்பலை குழைக்க முயலும் பொது வரும் வாசனை நாசி நினைவில் வந்துவிட்டது. 

யாழ்ப்பாணத்தில் மாறி விட்டதோ குழல் பிட்டு. 

3 hours ago, ரதி said:

நான் பார்த்தேன் ...உப்பை கரைத்து கொஞ்ச தண்ணீர் தானே விடுகிறா ...அது காணுமாய் இருந்ததா 

3 hours ago, உடையார் said:

அதுதானே கொஞ்ச தண்ணீர் காணுமா???  தேங்காய் பூ இடைக்கிடை போட்டால் தான் சுவை

சிங்கள மக்கள் தேங்காய் பிட்டு செய்யும் முறை வித்தியாசமானது.

எம்மைப் போல பிட்டைக் குழைத்து, சுழகில் பரப்பி பேணியால் கொத்தி சிறியதாக்கி குழலில் போடும் போது தேங்காய்பூ சேர்ப்பதில்லை.

மாறாக, தேங்காய்பூவினுள் தண்ணீர் சேர்த்து, அதனுள் மாவை சேர்த்து கையால் கிளறுவார்கள். தேங்காய்பூ நடவிலும், சுத்தி மாவுமாக, ஒரே அளவில் பிட்டு கட்டிகள் பரப்பி கொத்த வேண்டிய தேவையில்லாமல் வரும்.

இவோவும் அந்த முறையில் செய்கிறார். கவனித்தீர்களா?

கவனிகாதவர்கள், தண்ணிய காணம் எண்டுறியள்.
 
எனக்கெண்டா இது இலகுவா தெரியுது.😇

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு தெரிந்து சிறு வயசில் எனது அம்மம்மா (ஆச்சி) பெரிய கறுப்பன் பச்சை அரிசியை இடித்து மாவாக்கி துருவிய தேங்காய்ப்பூ போட்டு மூங்கில் குழலில் அவித்து தந்து சாப்பிட்டிருக்கின்றேன் அதன் சுவை தனி ......😋

இவர் செய்வது முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றது 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

மாறாக, தேங்காய்பூவினுள் தண்ணீர் சேர்த்து, அதனுள் மாவை சேர்த்து கையால் கிளறுவார்கள். தேங்காய்பூ நடவிலும், சுத்தி மாவுமாக, ஒரே அளவில் பிட்டு கட்டிகள் பரப்பி கொத்த வேண்டிய தேவையில்லாமல் வரும்.

இப்படித்தானே நீத்துப்பெட்டியில் அவிக்கும் பிட்டுக்கு குழைப்பது.
 
அப்படி குழல் பிட்டுக்கும் குழைப்பது, தேங்காய் பாலில் குழைப்பது. சிங்களவரின் முறையோ தெரியாது.

ஆனால், இப்படியான குழல் பிட்டும் வீட்டில் அவிப்பார்கள், இடையிடையே தேங்காய் பூவை வைத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kadancha said:

இப்படித்தானே நீத்துப்பெட்டியில் அவிக்கும் பிட்டுக்கு குழைப்பது.
 
அப்படி குழல் பிட்டுக்கும் குழைப்பது, தேங்காய் பாலில் குழைப்பது. சிங்களவரின் முறையோ தெரியாது.

ஆனால், இப்படியான குழல் பிட்டும் வீட்டில் அவிப்பார்கள், இடையிடையே தேங்காய் பூவை வைத்து.

நீஙகள் சொல்வது, பிட்டு, கொஞ்சம் தேங்காய்பூ, பிறகு பிட்டு என்று குழலில் போட்டு அவிப்பதை.

இது, ஈரமாக்கிய தேங்காய்பூவினுள் மாவை சேர்த்து குழைத்து பின் குழலில் போட்டு அவிப்பதை.

நாம செய்வது; பிட்டும் தேங்காய்பூவும்

இது; தேங்காய்பூவும் பிட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கடை ஊரிலை எல்லாம் மூங்கில்லை செய்த குழல்தான். என்ரை வீட்டிலை குழல் புட்டு  கூப்பன் மா இல்லாட்டி நாங்களாய் ஊற வைச்சு இடிச்சு வறுத்த அரிசிமாவிலை  தான் அவிக்கிறனாங்கள். குழல் புட்டு எண்டால் இடைக்கிடை தேங்காய்ப்பூ போட்டுத்தான் அவிக்கிறது. சில நேரம் சில்லுப்புட்டு எண்டும் சொல்லுவம். நீத்துப்பெட்டி புட்டு எண்டால் தேங்காய்ப்பூவை மாவோடை கலந்து தான் அவிக்கிறது.
இந்த இடத்திலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லியே ஆகணும்.:grin:
நான் மூங்கில்லை புட்டுகுழல் செய்யிறதிலை ஸ்பெசலிஸ்ற் :cool:. எங்கடை ஒரு காணிக்கை மூங்கில் கூட்டமாய் நிக்கிது.ஊரிலை ஆரும் புட்டுக்குழல் செய்து தரச்சொல்லி கேட்டால் நான் தான்......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழல் புட்டு இறக்கிய பின் அதன் மேல் தேங்காய் பால் விடுவதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

சிங்கள மக்கள் தேங்காய் பிட்டு செய்யும் முறை வித்தியாசமானது.

எம்மைப் போல பிட்டைக் குழைத்து, சுழகில் பரப்பி பேணியால் கொத்தி சிறியதாக்கி குழலில் போடும் போது தேங்காய்பூ சேர்ப்பதில்லை.

மாறாக, தேங்காய்பூவினுள் தண்ணீர் சேர்த்து, அதனுள் மாவை சேர்த்து கையால் கிளறுவார்கள். தேங்காய்பூ நடவிலும், சுத்தி மாவுமாக, ஒரே அளவில் பிட்டு கட்டிகள் பரப்பி கொத்த வேண்டிய தேவையில்லாமல் வரும்.

இவோவும் அந்த முறையில் செய்கிறார். கவனித்தீர்களா?

கவனிகாதவர்கள், தண்ணிய காணம் எண்டுறியள்.
 
எனக்கெண்டா இது இலகுவா தெரியுது.😇

நான் ஒரு நாளும் இப்படி செய்து பார்க்கவில்லை ...செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Nathamuni said:

இவா MDK மாவில அவிக்கிறா போல இருக்கு. இப்ப சிங்கள சனம் எல்லாம் இந்தமாதான் பாவிக்குது. நானும் ஓன்லைனில வேண்டினான். சும்மா பச்சைத்தண்ணியை விட்டு குழைத்து நல்ல மெதுவான இடியப்பம், புட்டு செய்யலாம். இடியப்பம் புரிவதும் மிகவும் சுலபம். ஒருக்காலும் பிழைக்கவும் மாட்டுது. 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

எங்கடை ஊரிலை எல்லாம் மூங்கில்லை செய்த குழல்தான். என்ரை வீட்டிலை குழல் புட்டு  கூப்பன் மா இல்லாட்டி நாங்களாய் ஊற வைச்சு இடிச்சு வறுத்த அரிசிமாவிலை  தான் அவிக்கிறனாங்கள். குழல் புட்டு எண்டால் இடைக்கிடை தேங்காய்ப்பூ போட்டுத்தான் அவிக்கிறது. சில நேரம் சில்லுப்புட்டு எண்டும் சொல்லுவம். நீத்துப்பெட்டி புட்டு எண்டால் தேங்காய்ப்பூவை மாவோடை கலந்து தான் அவிக்கிறது.
இந்த இடத்திலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லியே ஆகணும்.:grin:
நான் மூங்கில்லை புட்டுகுழல் செய்யிறதிலை ஸ்பெசலிஸ்ற் :cool:. எங்கடை ஒரு காணிக்கை மூங்கில் கூட்டமாய் நிக்கிது.ஊரிலை ஆரும் புட்டுக்குழல் செய்து தரச்சொல்லி கேட்டால் நான் தான்......

இந்த இடத்திலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லியே ஆகணும்

அம்மம்மாவின் புட்டுக்குழல் பழையதாகி வெடிக்க தொடங்கி விட்டது 
நான் கோழி கூட்டில் கம்பி எடுத்து உடையாது திருத்தி கொண்டே இருக்கிறது 
மூங்கில் புட்டுக்குழல் திருத்திரத்தில் நான் ஸ்பாலிஸ்ட் .
மூங்கில் குழல் புட்டு ஒரு தனி சுவை ...
பின்பு திருவிழாக்களில் எல்லாம் அந்த அலுமினிய குழலும் பானையும்தான் விற்பார்கள் 
புட்டுக்குழல் தேடியும் கிடைக்காது....
அப்பவே இந்த யாழ்களம் இருந்து இருந்தால் ........ நான் இப்ப உங்கள் வீட்டில் நின்றிருப்பேன். 

1 hour ago, nilmini said:

இவா MDK மாவில அவிக்கிறா போல இருக்கு. இப்ப சிங்கள சனம் எல்லாம் இந்தமாதான் பாவிக்குது. நானும் ஓன்லைனில வேண்டினான். சும்மா பச்சைத்தண்ணியை விட்டு குழைத்து நல்ல மெதுவான இடியப்பம், புட்டு செய்யலாம். இடியப்பம் புரிவதும் மிகவும் சுலபம். ஒருக்காலும் பிழைக்கவும் மாட்டுது. 

spacer.png

இந்த மா நல்லதா?
நான் ஒருக்கால் வேண்டிகொண்டுவந்து 
வீட்டில் ஓரே பேச்சு .... வெள்ளை அரிசிமாவில என்ன செய்கிறது எண்டு?
(தங்களுக்கு தெரியாவிட்டால் எங்களை லூசு ஆக்கிறதிலே பொம்பிளையள் கெட்டிக்காரர்)
நாங்களும் கொஞ்சம் கொஞ்சம் சமையல் தெரிந்து வைத்திருக்கத்தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Maruthankerny said:

இந்த மா நல்லதா?
நான் ஒருக்கால் வேண்டிகொண்டுவந்து 
வீட்டில் ஓரே பேச்சு .... வெள்ளை அரிசிமாவில என்ன செய்கிறது எண்டு?
(தங்களுக்கு தெரியாவிட்டால் எங்களை லூசு ஆக்கிறதிலே பொம்பிளையள் கெட்டிக்காரர்)
நாங்களும் கொஞ்சம் கொஞ்சம் சமையல் தெரிந்து வைத்திருக்கத்தான் வேண்டும். 

நல்ல சுகமான வேலை. நான் சிவப்பும் வெள்ளையும் வாங்கினேன். சிவப்பு அவ்வளவு soft ஆக வரவில்லை. Chinese grocery இல் இந்த வெள்ளை அரிசிமாவை வேண்டி வறுத்து MDK சிவப்பு அரிசிமாவுடன் கலந்து இடியப்பம் புட்டு அவித்துப்பார்த்தோம் . மிகவும் நல்லாக வந்தது (இந்த கலவைக்கு கொதிநீர் ஊற்றித்தான் குழைக்கவேணும்) மற்றும்படி MDK  வெள்ளை அரிசிமாவுக்கு பச்சைத்தண்ணியை விட்டு கையாலேயே குழைத்து புட்டு இடியப்பம் சுலபமாக வைக்கலாம். அவித்த பிறகு மூடி வைக்க வேணும் . அல்லது காய்ந்து போயிரும். எப்படியும் microwave பண்ணினால் திரும்ப soft ஆகி விடும். இந்த படத்தில் இருப்பவை எல்லாம் MDK  இடியப்பம் தான் புட்டு china அரிசிமாவுடன் கலந்து சுடுதணியில் குழைத்தது 

நிச்சயம் எல்லோருக்கும் சமையல் மட்டுமல்ல வீடு வேலை எல்லாமே செய்ய தெரிந்திருக்க வேணும். எனக்கு ரெண்டும் மகன்மார். வீட்டில் சமையல் உட்பட எல்லாம் பழக்கி  வச்சிருக்கு . நாம் இல்லாத காலத்தில் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேவைப்பட்டால் உதவும் 

spacer.png

spacer.pngspacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்கு இந்த சம்பல் மிகவும் பிடித்த உணவுபோல இருக்கு ....
எப்போதும் எல்ல படத்திலும் சம்பல் இருக்கும்.

யாழ் தமிழர்களின் நாக்கு சம்பலுக்கு அடிமை என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டுக்கு வந்த பின்பே அலுமினிய குழலைப் பார்க்கிறேன்.
அதற்கு முதல் இதே மாதிரியான குழலில்த் தான் புட்டு அவித்து சாப்பிட்டோம்.

5 hours ago, nilmini said:

நிச்சயம் எல்லோருக்கும் சமையல் மட்டுமல்ல வீடு வேலை எல்லாமே செய்ய தெரிந்திருக்க வேணும். எனக்கு ரெண்டும் மகன்மார். வீட்டில் சமையல் உட்பட எல்லாம் பழக்கி  வச்சிருக்கு . நாம் இல்லாத காலத்தில் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேவைப்பட்டால் உதவும் 

முன்னர் பொண்ணுக்கு பாட்டுபாட தெரியுமா?டான்ஸ் தெரியுமா?சமைக்க தெரியுமா? என்ற காலம் போய்

மாப்பிள்ளைகளுக்கு இது எல்லாம் தெரியுமா என்று கேட்கிற காலம் வருகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு இந்த சம்பல் மிகவும் பிடித்த உணவுபோல இருக்கு ....
எப்போதும் எல்ல படத்திலும் சம்பல் இருக்கும்.

யாழ் தமிழர்களின் நாக்கு சம்பலுக்கு அடிமை என்று எண்ணுகிறேன். 

சம்பல் சரியான விருப்பம் என்பதால் நிறய விதமான சம்பல்கள் பழகி வைத்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில்  மர  உரலில் இடித்து  சாப்பிடும் சம்பல் போல வராது 

11 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டுக்கு வந்த பின்பே அலுமினிய குழலைப் பார்க்கிறேன்.
அதற்கு முதல் இதே மாதிரியான குழலில்த் தான் புட்டு அவித்து சாப்பிட்டோம்.

முன்னர் பொண்ணுக்கு பாட்டுபாட தெரியுமா?டான்ஸ் தெரியுமா?சமைக்க தெரியுமா? என்ற காலம் போய்

மாப்பிள்ளைகளுக்கு இது எல்லாம் தெரியுமா என்று கேட்கிற காலம் வருகுதோ?

கேட்டாலும் கேப்பார்கள். அதற்கு முதலே பழக்கி ரெடி பண்ணவேண்டியதுதான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது யாழ்ப்பாண முறையல்ல...எங்கள் குழல்பிட்டு தனித்துவமிக்கது...அதை சம்பலுடனும் சாப்பிடலாம்..சீனி ,சக்கரையுடனும் சாப்பிடலாம்..இது அவிப்பு முறையே வித்தியாசம்...இது தென்பகுதி பெருமினப் பிட்டு...பிட்டில் நான் பேதம் பார்ப்பதில்லை....எனினும் நம்ம  பிட்டு தனித்துவம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு இந்த சம்பல் மிகவும் பிடித்த உணவுபோல இருக்கு ....
எப்போதும் எல்ல படத்திலும் சம்பல் இருக்கும்.

யாழ் தமிழர்களின் நாக்கு சம்பலுக்கு அடிமை என்று எண்ணுகிறேன். 

46 minutes ago, nilmini said:

சம்பல் சரியான விருப்பம் என்பதால் நிறய விதமான சம்பல்கள் பழகி வைத்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில்  மாற உரலில் இடித்து  சாப்பிடும் சம்பல் போல வராது 

கேட்டாலும் கேப்பார்கள். அதற்கு முதலே பழக்கி ரெடி பண்ணவேண்டியதுதான் 😂

மனைவியின் சம்பலுக்கு இப்ப பிள்ளைகளும் அடிமை😀

1 hour ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டுக்கு வந்த பின்பே அலுமினிய குழலைப் பார்க்கிறேன்.
அதற்கு முதல் இதே மாதிரியான குழலில்த் தான் புட்டு அவித்து சாப்பிட்டோம்.

முன்னர் பொண்ணுக்கு பாட்டுபாட தெரியுமா?டான்ஸ் தெரியுமா?சமைக்க தெரியுமா? என்ற காலம் போய்

மாப்பிள்ளைகளுக்கு இது எல்லாம் தெரியுமா என்று கேட்கிற காலம் வருகுதோ?

மகளுக்கு சமைப்பதில் ஆர்வமில்லை, பெடியலுக்கு நல்ல ஆர்வம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, உடையார் said:

மனைவியின் சம்பலுக்கு இப்ப பிள்ளைகளும் அடிமை😀

மகளுக்கு சமைப்பதில் ஆர்வமில்லை, பெடியலுக்கு நல்ல ஆர்வம் 😀

வாற பொம்பிளை பாடு கொண்டாட்டம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, உடையார் said:

மகளுக்கு சமைப்பதில் ஆர்வமில்லை, பெடியலுக்கு நல்ல ஆர்வம் 😀

4 minutes ago, ஈழப்பிரியன் said:

வாற பொம்பிளை பாடு கொண்டாட்டம் தான்

வாற  மருமகன்தான்.... திண்டாடப் போறார். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.