Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

வந்தப்போச்சு, இப்படியொரு அன்பு அழைப்பை மறுக்கு முடியுமா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 22:08, suvy said:

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

நெஞ்சார்ந்த நன்றிகள் என்னை மென்மேலும் வளர்க்கும் உங்கள் பாராட்டுக்கள் 

On 2/7/2020 at 01:05, நிலாமதி said:

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

நன்றிகள் அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 02:21, உடையார் said:

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

அருமை உங்களின் அந்தக்காலத்தின் நினைவுகள் எனது கவிதையுடன் சேர்ந்து இனிக்கிறது. உளமார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

30 minutes ago, கிருபன் said:

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, tulpen said:

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

கவிதைக்கு பொய் அழகு..   

நன்றிகள்tulpen 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நன்றிகள் யாயினி 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 13:02, பசுவூர்க்கோபி said:

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

உங்கள் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் nilmini கட்டாயம் தொடருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிராம வாழக்கை எப்பவும் அழகு தான் உடல் உள ரீதியாக.சந்தரப்ப வசத்தாலோ அல்லது விரும்பியோ நகர வாழ்க்கைக்கு மாறியவர்கள் கிராமத்தை கொஞ்சம் குறைத்து தாங்கள் திருப்த்திப்பட்டுக் கொள்வார்கள்.இரு கோட்டுத் தத்துவம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவைப்பிரியன் அண்னா

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 17:22, பெருமாள் said:

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

On 1/7/2020 at 19:02, பசுவூர்க்கோபி said:

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எங்கள் பழைய காலத்து உணவுகளில் இருந்த இயற்கையான சத்துக்களும் அவற்றின் மருத்துவ குணாதிசயங்களும் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ?  அருமையான கவிதையும் பொருளும் !
தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் தோழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

உண்மையாகச் சொன்னீர்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் சுமேரியர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.