Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20200706_082107.jpg

சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில்

 வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை பல்லின சமூகம் வாழும் பெரும்பான்மை நாடு. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அக்கட்சி பெரும்பான்மை சமூகத்துக்கு முன்னுரிமை வழங்குவது சாதாரண ஒரு விடயமாகும்.

இதனை குறை கூற முடியாது. ஏனெனில் சிங்கள மக்களே பெரும்பான்மையின சமூகமாக வாழ்கிறார்கள். இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும் அரசியல் அந்தஸ்தினையும் பாதுகாக்கும் ஒரு தேர்தலாகவே காணப்படுகிறது.

கடந்த காலங்களை காட்டிலும் நாட்டில் தமிழ் பேசும் மக்களின் நிலை தற்போது எந்த மட்டத்தில் உள்ளது என்பதை புதிதாக எடுத்துரைக்க வேண்டிய தேவை கிடையாது.

சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது. இதுவே யதார்த்தமான உண்மை இதற்காக எமது உரிமையினை விட்டுக்கொடுக்க முடியாது. எனவே, தமிழ் பேசும் மக்கள் அரசியலில் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- siva Ramasami

Thamilan lk

https://www.madawalaenews.com/2020/07/blog-post_497.html

இதனை 1950 களிலேயே தமிழ் தலைவர்களாக அன்று இருந்தவர்கள் சரியாக உணர்ந்து அதற்கேற்ப அரசியலை செய்திருந்தால்,  அல்லது அவர்கள் பின்னர் வந்த ஆயுத போராளிகள்  உண்மையான  ஜதார்ததத்தை உணர்ந்து தமது அரசியலை செய்திருந்தால் தமிழ் மக்களுக்கு இன்றுள்ள அவலநிலை வந்திருக்காது. இனிவரும் தலைமுறையாவது சுயநல அரசியல்வாதிகளதும், புலம்பெயர் வேலையற்ற நபர்களினதும்  உசுப்பேத்தல்களை காதில் வாங்காது தமது சொந்த மூளையில் சிந்தித்து செயற்ப்பட்டால் அவர்களின் காலத்திலாவது சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லையே.

அவர், சிங்கள மக்கள் மத்தியில் வாழும், பிரிட்டிஷ் காலத்தில் குடியேறிய, தனது சமூகம் சார்ந்த யதார்த்தம் பேசுகிறார்.

இதற்கும், எமக்கும் தொடர்பு இல்லையே. நாம் பூர்வீக குடிகள். பிரிட்டிஷ்காரர்கள் இணைத்தார்கள் என்பதற்க்காக, நாம் பெரும்பான்மை வாதத்தினை அங்கீகரிக்க முடியாது என்று தானே போராடினோம்.

உங்கள் கருத்துப்படி பார்த்தால், பேசாமல் வெள்ளியரின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாம் என்று சொல்வது போல படுகின்றது. காந்தி வேலை  இல்லாத நபர் என்று சொல்ல முடியுமா, என்ன?

ஆயுத வன்முறை தேவையில்லை, அதற்க்காக சிங்களவன் கீழ் அடிமையாக இருக்கவேண்டும் என்ற தேவையும் இல்லை.

எமக்கான சுயநிர்ணய உரிமை உள்ளது. அதனை மறுக்க சிங்களத்தினால் முடியாது. காலம் கனிந்துவரும் போது, அதற்குரிய முறையில் சாத்வீகமாக போராடலாம்.

Edited by Nathamuni

36 minutes ago, Nathamuni said:

உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லையே.

அவர், சிங்கள மக்கள் மத்தியில் வாழும், தனது சமூகம் சார்ந்த யதார்த்தம் பேசுகிறார்.

இதற்கும், எமக்கும் தொடர்பு இல்லையே. நாம் பூர்வீக குடிகள். பிரிட்டிஷ்காரர்கள் இணைத்தார்கள் என்பதற்க்காக, நாம் பெரும்பான்மை வாதத்தினை அங்கீகரிக்க முடியாது என்று தானே போராடினோம்.

உங்கள் கருத்துப்படி பார்த்தால், பேசாமல் வெள்ளியரின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாம் என்று சொல்வது சரியாக படுகின்றது. காந்தி வேலை  இல்லாத நபர் என்று சொல்ல முடியுமா, என்ன?

ஆயுத வன்முறை தேவையில்லை, அதற்க்காக சிங்களவன் கீழ் அடிமையாக இருக்கவேண்டும் என்ற தேவையும் இல்லை.

எமக்கான சுயநிர்ணய உரிமை உள்ளது. அதனை மறுக்க சிங்களத்தினால் முடியாது. காலம் கனிந்துவரும் போது, அதற்குரிய முறையில் சாத்வீகமாக போராடலாம்.

கடந்த 70 ஆண்டுகளில் அரசியல்வாதிகளும் ஆயுதப்போராளிகளும் செய்த வேலை  ஏற்கனவே இருந்த ஒரளவு கெளரவமான நிலையை கூட தமது முட்டாள்த்தனமான அணுகுமுறையின் மூலம் அதல பாதாளத்துக்கு கொண்டு வந்து விட்டு  செத்துப் போனதே. 

ஆகவே தான் கூறினேன் இந்த வீணாப்போனவர்களின் உசுப்பேத்தல்களை புறக்கணித்து புதிய தலைமுறையாவது புதிய வினைதிறனான அணுகுமுறையை  கையாண்டு அவர்களது வாழ்க்கையையாவது மேம்பட செய்யவேண்டும் என்று. நான் கூறியது போராட வேண்டாம் என்று அல்ல, தோற்று போனவர்களின்  பாடங்களை விளங்கி அவர்களின் அணுகுமுறையை, வீணாப்போன உசுப்பேத்தல்களை  தவிர்தது புதிய தலைமுறை  புதிய அணுகுமைறையில் போராடுமாறே. 

ஒரு  சிறிய தீவில் நாடு இரண்டு பட்டாலும் கூட பகை நாடுகளாக இருந்தால் தொடர்தும் அழிவுதான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

கடந்த 70 ஆண்டுகளில் அரசியல்வாதிகளும் ஆயுதப்போராளிகளும் செய்த வேலை  ஏற்கனவே இருந்த ஒரளவு கெளரவமான நிலையை கூட தமது முட்டாள்த்தனமான அணுகுமுறையின் மூலம் அதல பாதாளத்துக்கு கொண்டு வந்து விட்டு  செத்துப் போனதே. 

ஆகவே தான் கூறினேன் இந்த வீணாப்போனவர்களின் உசுப்பேத்தல்களை புறக்கணித்து புதிய தலைமுறையாவது புதிய வினைதிறனான அணுகுமுறையை  கையாண்டு அவர்களது வாழ்க்கையையாவது மேம்பட செய்யவேண்டும் என்று. 

ஒரு  சிறிய தீவில் நாடு இரண்டு பட்டாலும் கூட பகை நாடுகளாக இருந்தால் தொடர்தும் அழிவுதான். 

ஆயுத போராட்டம் ஒரு முயற்சி. அது பல காரணிகளால் வெல்லவில்லை. அதற்காக விடுதலைப் போராட்டத்தினை தவறு என்று சொல்வதோ, போராடி இருக்க கூடாது என்றோ சொல்ல முடியாது. ஒரு போராட்டத்தில், மக்கள் இழப்புகளும், துரோகத்தனங்களும் தவிர்க்க முடியாது.

நீங்கள் எழுதும் இரண்டாம் உலகப் போரை போலவே நடந்த முதலாம் உலக போரில் சரிதத்தில், பிரான்ஸ் நாட்டில், சொம்(மே) என்ற இடத்தில நடந்த போர் குறித்து அறிவீர்கள். அங்கே பிரான்ஸ் நாட்டுக்காக, பிரிட்டிஷ் படைகள் போரில் குதித்த முதல் நாளில், இழப்பு 65,000 பிரிட்டிஷ் வீரர்கள். உலக வரலாறில் ஒரே நாளில் நடந்த பேரிழப்பு. அதற்க்காக, பிரான்ஸ் நாட்டுக்காக அந்த போரில் பிரிட்டன் குதித்தது தவறு என்று யாருமே சொல்லவில்லை. காரணம் பிரிட்டன் அன்று போரில் குதித்திராவிடில், பிரான்ஸ் வீழ்வதுடன், அடுத்ததாக பிரிட்டனும் வீழ்ந்திருக்கும்.

அதனுடன் சேர்ந்து, அதனது காலனிகள் அனைத்துமே ஜேர்மன் வசமாகி இருக்கும்.

அமெரிக்கா, பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து விடுபட்டது ஆயுத போராட்டத்தில்.

ஆயுத போராடமானால் இழப்புகள் வரும் தான். அதற்க்காக, அடிமை விலங்குகளை உடைக்கும் கனவுகளை சிதைக்க முடியாதே.

****

அடுத்ததாக ஒரு சிறிய நாடு, இரண்டு பட்டால் பகை நாடுகளாகும் என்கிறீர்கள்.

போர்த்துக்கேயர் வரும்போது கோட்டை ராஜ்யத்தினை ஆண்டவன் விஜயபாகு. இவனுக்கு மூன்று மகன்கள். எல்லோரும் சேர்ந்து பக்கத்து சீதாவாக்கை ராஜ்யத்தினை கைப்பற்றி இரண்டையும் சேர்த்து விஜயபாகு ஆண்டுகொண்டிருந்த போது, மூத்தமகன் புவனேகபாகு, தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து, தந்தை விஜயப்பாகுவை கொன்று, இரண்டு ராஜ்யங்களை மூன்றாக பிரித்து ஆளத்தொடங்கினர். (கோட்டை, சீதாவாக்கை, ராஜிகம). (கண்டி, நல்லூர் தனி ராசதானிகள்)

அவர்களிடையே மூண்ட பெரும் பகையில், உள்ளே புகுந்த போர்த்துக்கேயர்,  புவனேகபாகுவை ஆதரித்து, இரு சகோதரர்களையும் வீழ்த்தி, பின்னர் புவனேகபாகுவை கொலை செய்து, அவனது பேரனை, கிறித்தவனாக்கி, டான் யுவன் தர்மபால என்ற பெயரில் பொம்மை அரசனாக்கினார். 

ஆக சொல்லவருவது என்னவென்றால், இலங்கை தீவில் சிங்களவர்களிடையே, தகப்பன் மகன்மாருக்கும், சகோதர்களுக்குமிடையே பகை இருந்த நிலையில், பல்லாண்டு காலம் பகை நாடுகளாக இருந்த ஈழமும், லங்காவும் எதிர் காலங்களில் ஒற்றுமையாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாதே என்பதை தான்.

Edited by Nathamuni

1 hour ago, Nathamuni said:

நான் சொல்ல வந்தது எமது பழைய அரசியல்வாதிகளினதும் ஆயுதப்போராளிகளினதும் தோல்வியடைந்த கறள்கட்டிய  அணுகுமுறைகளை தவிர்தது புதிய தலைமுறை  புதிய அணுகு முறைகளுடன் தமது வாழ்வை/ போரட்டத்தை சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதையே.  அப்படி இல்லை பழையவர்களின் துருப்பிடித்த அணுகுமுறையை கைக்கொண்டால் எதிர்காலத்தில்  வருந்தப் போவது அவர்கள் தான்.

தமது ஆற்றமையால் ஐடியா கொடுத்த அரசியல்வாதிகளும் புலம்பெயர் வேலையற்ற நபர்களும் ஏற்கனவே மண்டையை போட்டு வருந்துவதில் இருந்து தப்பி விடுவார்கள். 

பிரிட்டன் பிரான்ஸ் போன்றவை யுத்தங்களின் பின்னர் தமது  தவறுகளில் இருந்து பாடம் படித்து, புதிய அணுகுமுறைகளையே கைக்கொண்டன. ஆயுதப் போராட்டம் என்றால் இழப்புகள் வரும் தான். ஆனால் அதற்கு பொறுப்பேற்காது  தோல்விக்கு அடுத்தவனை பழிபோட்டு தமது தவறுகளை மறைப்பதால் எந்த பிரயோசனமும் வந்து விடாது. மீண்டும் அதே தவறு புதிய தலைமுறையாலும் மேற்கொள்ளப்படும். 
 
(குறிப்பு எனது முதல் பதிலில. நான் கூறியதை பிழையாக விளங்கி கொண்டீர்கள்.  நாடு இரண்டு பட்டாலும் பகை நாடுகளாக இருக்கமுடியாது நட்பு நாடுகளாக இருந்தாலே உண்மையான விடுதலை என்பதை)

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது. இதுவே யதார்த்தமான உண்மை

சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பகைத்துக்கொண்டு பெரும்பான்மைச் சிங்களமும் நாட்டில் நிம்மதியாக வாழமுடியாது இதுவும் யதார்த்தமான உண்மை. பயந்து பதுங்குழிகளில் பதுங்கி வாழ்ந்த அனுபவம் சிங்களவருக்கும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நான் சொல்ல வந்தது எமது பழைய அரசியல்வாதிகளினதும் ஆயுதப்போராளிகளினதும் தோல்வியடைந்த கறள்கட்டிய  அணுகுமுறைகளை தவிர்தது புதிய தலைமுறை  புதிய அணுகு முறைகளுடன் தமது வாழ்வை/ போரட்டத்தை சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதையே.  அப்படி இல்லை பழையவர்களின் துருப்பிடித்த அணுகுமுறையை கைக்கொண்டால் எதிர்காலத்தில்  வருந்தப் போவது அவர்கள் தான்.

தமது ஆற்றமையால் ஐடியா கொடுத்த அரசியல்வாதிகளும் புலம்பெயர் வேலையற்ற நபர்களும் ஏற்கனவே மண்டையை போட்டு வருந்துவதில் இருந்து தப்பி விடுவார்கள். 

பிரிட்டன் பிரான்ஸ் போன்றவை யுத்தங்களின் பின்னர் தமது  தவறுகளில் இருந்து பாடம் படித்து, புதிய அணுகுமுறைகளையே கைக்கொண்டன. ஆயுதப் போராட்டம் என்றால் இழப்புகள் வரும் தான். ஆனால் அதற்கு பொறுப்பேற்காது  தோல்விக்கு அடுத்தவனை பழிபோட்டு தமது தவறுகளை மறைப்பதால் எந்த பிரயோசனமும் வந்து விடாது. மீண்டும் அதே தவறு புதிய தலைமுறையாலும் மேற்கொள்ளப்படும். 
 
(குறிப்பு எனது முதல் பதிலில. நான் கூறியதை பிழையாக விளங்கி கொண்டீர்கள்.  நாடு இரண்டு பட்டாலும் பகை நாடுகளாக இருக்கமுடியாது நட்பு நாடுகளாக இருந்தாலே உண்மையான விடுதலை என்பதை)

இரண்டாயிரம் ஆண்டுகளாக பகையாக இருந்த நாடுகள், இணைந்திருந்தால் மட்டும், ஒற்றுமையாக இருக்கும் என்பது நிதர்சனம் இல்லை. கடந்த 1948க்கு பின்னரான யுத்தமே சான்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பகைத்துக்கொண்டு பெரும்பான்மைச் சிங்களமும் நாட்டில் நிம்மதியாக வாழமுடியாது இதுவும் யதார்த்தமான உண்மை. பயந்து பதுங்குழிகளில் பதுங்கி வாழ்ந்த அனுபவம் சிங்களவருக்கும் உண்டு.

இந்த உண்மையை சிங்கள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் போருக்கு முற்பட்ட காலத்திலேயே வடகிழக்கில் அதிக இராணுவ கடற்படை முகாம்களை அரசு நிறுவியது. மகாவலி குடியேற்றங்கள் மூலம் வடக்கு கிழக்கை ஊடறுக்க திட்டமிட்டதற்கும் இதுவே காரணம். போருக்கு பிந்திய காலத்தில் இராணுவமுகாம்களை அகற்ற மறுப்பதற்கும் சிங்கள குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரிப்பதற்கும் கூட இந்த பயமே காரணம். “சிறுபான்மை மனநிலை கொண்ட பெரும்பான்மை” என்று சிங்களவரை சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மையானாலும், உலகத்தமிழர் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையின் முன்னால் அழிந்துவரும் தாம் இலங்கையில் தோன்றிய, வேறெங்கும் வாழாத, ஆதிவாசிகள் என்று சிங்களவர் தம்மை கருதுகிறார்கள். ஆகவே தம்மை பெரும்பான்மை தமிழரினதும், பெரும்பான்மை முஸ்லிம்களினதும் ஊடுருவலில் இருந்து பாதுகாக்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். 

சிங்களவரின் இந்த பயமே தமிழரின் அழிவுக்கு காரணம். சிங்களவருக்கு இந்த பயம் உள்ளவரை தமிழரின் அழிவு தொடரும் சாத்தியம் அதிகம். தமிழரும் சிங்களவரும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ தேவையான முயற்சி சிங்களவரின் இந்த பயத்தை போக்குவதே.

1 hour ago, Nathamuni said:

இரண்டாயிரம் ஆண்டுகளாக பகையாக இருந்த நாடுகள், இணைந்திருந்தால் மட்டும், ஒற்றுமையாக இருக்கும் என்பது நிதர்சனம் இல்லை. கடந்த 1948க்கு பின்னரான யுத்தமே சான்று.

இணைந்திருந்தாலும் அழிவு, பிரிய முயன்றாலும் அழிவு, பிரிந்த பின்னும் அழிவு. ஆகவே, அழிவுக்கு காரணம் இணைவதோ, பிரிவதோ அல்ல. மேலே எழுதியபடி, சிங்களவரின் பயமே காரணம். அதுவே அகற்றப்பட வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கற்பகதரு said:

இணைந்திருந்தாலும் அழிவு, பிரிய முயன்றாலும் அழிவு, பிரிந்த பின்னும் அழிவு. ஆகவே, அழிவுக்கு காரணம் இணைவதோ, பிரிவதோ அல்ல. மேலே எழுதியபடி, சிங்களவரின் பயமே காரணம். அதுவே அகற்றப்பட வேண்டியது.

சிங்களவரின் பயம் 2,000 ஆண்டுகளுக்கு மேலானது. அந்த பயத்தினை வைத்து குளிர் காயம் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, நீங்கள் சொல்வது கடினமானது. அதுவே பிரச்னைக்கு காரணம். 

மகிந்தா நினைத்திருந்தால் 2009 பின்னர், இந்த பயத்தினை நீக்கி இருக்கலாம். ஆனால் அதே பயத்தினை வைத்தே 2019ல் அவரது சகோதரனை ஜனாதிபதி ஆக்கி உள்ளார்.

இதோ தேர்தல் வருகிறது. அதில் வென்றாலாவது, இந்த பயம் நீக்கப்படும் என்கிற உறுதி சொல்லவரா? இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

சிங்களவரின் பயம் 2,000 ஆண்டுகளுக்கு மேலானது.

உண்மை. நாயன்மார்களும், புத்த துறவிகளுமே இதற்குக் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைப் பகைத்துக்கொண்டு சிறீலங்காவில் வாழமுடியாது என்பது உண்மையே ஆனால் அவர்களிடமிருந்து பிரிந்துசென்று வாழலாம் ஆகவே அதனை நாம் விரைவுபடுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

குறிப்பு எனது முதல் பதிலில. நான் கூறியதை பிழையாக விளங்கி கொண்டீர்கள்.  நாடு இரண்டு பட்டாலும் பகை நாடுகளாக இருக்கமுடியாது நட்பு நாடுகளாக இருந்தாலே உண்மையான விடுதலை என்பதை)

இதை சிங்களதேசம் தான் முடிவெடுக்க வேண்டும்.

1 hour ago, கற்பகதரு said:

இணைந்திருந்தாலும் அழிவு, பிரிய முயன்றாலும் அழிவு, பிரிந்த பின்னும் அழிவு. ஆகவே, அழிவுக்கு காரணம் இணைவதோ, பிரிவதோ அல்ல. மேலே எழுதியபடி, சிங்களவரின் பயமே காரணம். அதுவே அகற்றப்பட வேண்டியது.

மூக்குள்ளவரை சளி போகாது.
இறுதி தமிழன் இருக்கும் வரை பயம் போகவே போகாது.
அதற்காகவே குடியேற்றம் நடக்கிறது.இன்னுமொரு 50 வருடம் போனால் ஏதாவதொரு மாற்றம் வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை சிங்களதேசம் தான் முடிவெடுக்க வேண்டும்.

மூக்குள்ளவரை சளி போகாது.
இறுதி தமிழன் இருக்கும் வரை பயம் போகவே போகாது.
அதற்காகவே குடியேற்றம் நடக்கிறது.இன்னுமொரு 50 வருடம் போனால் ஏதாவதொரு மாற்றம் வரலாம்.

சமரசம் சமத்துவம் வரலாம் எண்ட மாதிரி இப்பவே கதைக்கிறாங்கள்!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது பெண்கள் நாகரீகமாக உடையணிந்தால் 
பாலியல் பலாத்காரம் தவிர்க்கப்படலாம் என்ற போக்கிரித்தனமான வாதம் 
(மேலே இருக்கும் சில)
பெண்கள் முழுதாக மூடி கொண்டு இருக்கும் சவூதி ஆப்கானிஸ்தானில்தான் அதிக 
பாலியல் பலத்தகாரங்கள் செய்திகளையே சேராமல் நடக்கிறது. 

நீங்கள் எப்படி இருக்கிறீர் என்பது ஒரு பொருட்டு இல்லை 
யார் அடிக்கிறான் .... யார் ஆக்கிரமிக்கிறான் என்பதை பொறுத்ததே 
உங்கள் இனத்தின் முடிவு.

ஆதி குடி இந்தியர்களுக்கு எதிரான போக்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் 
எண்ணைக்காக புதிய வடிவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது 
அப்படி ஒரு இனம் முற்ற அழியும்வரை அது தொடரும் ....

இன்று உலக எதிர்ப்பின் மத்தியிலும் 
உலக சண்டியனின் துணையுடன் நடக்கும் 
யூத ஆக்கிரமிப்பு 

Israel-Palestine-map-2.png

தமிழர்கள் நீங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி 
நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று அறிவித்து 
தற்கொலை செய்யும்வரை சிங்கள அடாவடியும் ஆக்கிரமிப்பும் தொடரும் 

அப்போது கூட உங்கள் சிலரின் இறந்த உடல்கள் 
பாலியல் கொடுமைக்கு ஆளாகும் என்பதுதான் கடந்த 4000 வருட 
மனித வரலாறு. 

இதை சில இளம் சிங்களவர்களே டீவீட்டாரில் 
ஒத்துக்கொள்கிறார்கள் சிங்கள தனி சட்டம் தவறு என்று ஒத்துக்கொள்ளும் 
பல இளைய தலைமுறை (சிறுபான்மையாக வெளிநாடுகளில் வாழும் சிங்கள இளைய தலைமுறைகள்) 
தமிழர்கள் சாதுவாக மாறினாலும் பேரினவாதிகள் அடிப்பார்கள் என்பதை 
புரிந்துகொண்டு எழுதுகிறார்கள்...... காரணம் கடந்த 10 வருடமாக 
தமிழர்கள் அடிமையிலும் கீழ்கவே இருக்கிறார்கள் இருப்பினும் சராசரி மனிதராக 
ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வை கூட கடந்த நல்லாட்ச்சி அரசால் கூட முன்வைக்க 
முடியாமையை காரணம் காட்டுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

வரலாறுடன் கூடிய நுண்ணிய அரசியலை நாம் புரிந்து கொள்ளாதவரை, அடிமைத்தளை ஒழிக்க முடியாது.

சிங்கள ராசதானிகள், அளவில் சிறிய நல்லூர் ராசதானியை வீழ்த்த முடியாமல் இருந்ததன் காரணம், தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய அரசுகள்.

போர்த்துக்கேயர், யாழ் ராசதானியை சூழ்ந்துகொண்ட அதே காலப்பகுதியில் அதாவது 1529ல் தமிழகத்தினை தனது அதிகார விஸ்தரிப்பின் கீழ் கொண்டு வந்தது, தெலுங்கு விஜய நகர பேரரசு. பலமிக்க அதனுடன், வர்த்தக ஒப்பந்தங்களை போட்டு, சமாதானமாகி போனார்கள் போர்த்துகேயர்கள். 

ஆகவே, தமிழக உதவி இல்லாமல் போனதால், யாழ் ராசதானியை போர்த்துக்கேயர்கள் இலகுவாக பறித்துக் கொண்டார்கள். அதுபோல சிங்கள பகுதிகளையும் மடக்கிக் கொண்டார்கள்.

இந்த தமிழநாட்டினை ஆண்டு கொண்டிருந்த தெலுங்கு நாயக்க மன்னர்கள், தமது பிடியில் இருந்த கோட்டை ராஜ்ய பொம்மை அரச குடும்பங்களுடனும், கண்டி ராசதானியுடனும் மண உறவுகளை கொண்டதை தடுக்கவில்லை.

இதன்காரணமாக, தெலுங்கர்கள் இலங்கையினுள்ளும் புகுந்து கொண்டார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்தே வந்த தமிழர்களாகவே நடித்தார்கள். காரணம் தீவின் பூர்வீக குடிகளாக தமிழர்களும் இருந்ததனால்.

இன்று நிலை என்னவென்றால், தமிழகத்தில் திராவிடராகவும், இலங்கையில் சிங்களவராகவும் நடித்துக் கொண்டே, இனவாதத்தினை இங்கேயும், சாதிவாதத்தினை அங்கேயும் கிளப்பி, குளிர் காய்ந்த படியே ஆள்கின்றனர்.

அதுமட்டுமல்ல, ஒரிசாவில் பட் நாயக், புதுசேரியில் வைத்தீஸ்வர நாயக்கர் (முன்னர்)..... 

தமிழகத்தில் சிறிய புரிதல் வருகிறது.... சிங்களவரிடையே புரிதல் வரும் வண்ணம், சில பதிவுகள், காணொளிகள், சில சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொள்ள கூடியதாக உள்ளது.

இந்த வந்தேறிகள் பேராசையால், வீணாகிப் போனவர்கள், தீவின் பூர்வீக தமிழரும், சிங்களவரும் என்று சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

பார்க்கலாம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் ஒன்றில்லாவிட்டால் அது இன்னொனறு என்பார்கள், வடக்கு இல்லாவிட்டால் தெற்கு, ஏ இல்லையென்றால் பி என்று நாமாகவே முடிவு செய்வது மனித இயல்பு, ஏயும் பியும் மட்டுமா தெரிவு ஏன் சி இருக்ககூடாதா? மனோ கணேசன் இதனைத்தான் சொன்னார் என்று நாமாவகவே முடிவுகளை எடுத்து விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்கொங் மக்கள் சீன அதிகார வர்க்கத்துக்கு அடிபணிய மறுப்பதால்.. மேற்கு நாடுகள் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றன.

ஆனால்.. நாங்களோ.. சிங்களவனிடம் அடிவாங்கிக் கொண்டு.. அவன் நல்லவனுன்னு வேற சொல்லிக்கிட்டு திரியுறம். இதுதான் நாங்கள் விடும் அடிப்படை தவறு.. நாம் ஈழத்தில் நம் இருப்பை தொலைப்பதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nedukkalapoovan said:

ஹாங்கொங் மக்கள் சீன அதிகார வர்க்கத்துக்கு அடிபணிய மறுப்பதால்.. மேற்கு நாடுகள் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றன.

ஆனால்.. நாங்களோ.. சிங்களவனிடம் அடிவாங்கிக் கொண்டு.. அவன் நல்லவனுன்னு வேற சொல்லிக்கிட்டு திரியுறம். இதுதான் நாங்கள் விடும் அடிப்படை தவறு.. நாம் ஈழத்தில் நம் இருப்பை தொலைப்பதற்கு. 

அவர்களிடம் பணம் உள்ளது. அவர்களை வரவேற்க, அவுஸ், பிரிட்டன், கனடா, அமெரிக்கா சகலமும் தயார். மேலும் ஆயுதப்போராட்டம் இல்லாததால், சீனா தடுமாறுகிறது.

நாமும் கவனத்தினைக் கவருவோம்.... ஆசியாவில் பொருளாதார தளம் தேடும் மேற்கின் முயல்வுகளின் போது...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில்

 வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

சரி இதை நாங்கள் ஏன் திருப்பி போடக் கூடாது?

தமிழ் மக்களை பகைத்துக் கொண்டிருந்தால் தமிழர்களுக்கான உரிமையை கொடுக்காமல் விட்டுக் கொண்டிருந்தால் சிங்களம் வாழவே முடியாது.நாட்டை துண்டுதுண்டாக விற்று விற்று கடனில் மூழ்கி வெளிநாட்டவனுக்கு அடிமையாகிப் போவீர்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.