Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை அரசு... - என்.சரவணன்

Featured Replies

iraavana.jpg
 
இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது.
 
“இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை.
020-07-18-at-10.31.jpg
WhatsApp%2BImage%2B2020-07-19%2Bat%2B5.1
இது இலங்கை அரச விளம்பரம் என்பதை கவனத்திற்கொள்க:
இதனை 2020 யூலை 31 க்கு முன்னர் 0766317110 என்கிற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ  mgrrdp@caa.lk என்கிற மின்னஞ்சல் மூலமோ அல்லது குறிப்பிட்ட விலாசத்துடன் தொடர்பு கொண்டோ அறியத்தந்தால் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது இலங்கை அரசு.
 
இராவணனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை சிங்களவர்களின் முப்பாட்டனே இராவணன் என்று நிறுவுகிற அவசரத்தில் இந்த புஷ்பக விமான புனைவில் அரசே நேரடியாக இறங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மறுபுறம் இந்தக் கண்மூடித்தனத்தின் ஆபத்தின் எச்சரிக்கையையும் நமக்கு மிச்சம் வைக்கிறது.
 
உலகின் முதலாவது விமானத்தைத் தந்தவன் இராவணன் என்றெல்லாம் கட்டுரைகள் உள்ளன. 
 
இராவணனை தற்போது சிங்களவர்கள் தமது நாயகனாகவும், சிங்கள பௌத்தர்களின் மூதாதையாராகவும் கொண்டாடி வருவதை அறிவீர்கள். இராவணன் வாழ்ந்ததாக கூறி வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள நிலங்களை சுவீகரிக்கும் முன்னெடுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். இராவணன் என்கிற கற்பனைக் காவியத்தில் உள்ளதையெல்லாம் இருந்ததாகக் கூறி இப்போது புஷ்பகவிமானத்தையும் தேடத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே புஷ்பக விமானம் வந்திறங்கிய பகுதிகளாக சிகிரிய மலை உள்ளிட்ட இன்னும் பல இடங்களை குறித்து புஷ்பக விமானம் வந்திறங்கிய தளங்கள் என்று நிறுவுகிற நூல்களும், ஆவணப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளதை அறிவீர்கள்.
 
dandumonara-edit.jpg
1921 இல் U.D. Johannes Appuhami’s என்பவர் வாய்மொழிக் கதையை வைத்து எழுதிய கவிதை நூலான “The Story of the Wooden Peacock,” என்கிற நூலின் அட்டைப்படம்
இராவணன் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இதுவரை அதிகாரபூர்வமாக எங்கும் வெளியானதில்லை. ஆனால் இலங்கையில் ஆயிரகணக்கான இடங்களை இராவணனின் அடையாளங்களாக கற்பிதம் செய்து புனைந்து நிறுவுகின்ற போக்கை தொடர்ச்சியாக காண முடிகிறது.
 
இலங்கையின் முக்கிய சர்வதேச விமான ஒட்டி பயிற்சி நிலையத்தின் பெயர் கூட இராவணன் விமான பயிற்சி நிலையம் (Ravana Aviation Academy) (https://ravanaaviation.com/) இது களனியில் இயங்கி வருகிறது.
 
ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக தொல்லியல் போர் தொடங்கியாயிற்று. இம்மாதம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வடக்கு கிழக்கில் தமிழர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆரம்பித்த “தொல்லியல் செயலணி” சிங்கள பௌத்தர்களை மட்டுமே கொண்ட ஒரு ஆபத்தான குழு. இராணுவத் தளபதி, பிக்குமார், ஆகியோரை தலைமையாகக் கொண்ட அந்தக் குழு ஒரு இராணுவவாத, இனவாத குழுவென்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
 
தொல்லியல் திணைக்களமானது கலாசார அமைச்சின் கீழ் இயங்குகிறது. பிரதம மகிந்த ராஜபக்சவே கலாசார அமைச்சராக இருக்கிறார் என்பதையும் கவனித்திற்கொள்க.
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களுக்குள் நாங்களே உனக்கு பகுத்தறிவு எனக்குப் பகுத்தறிவுன்னு வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு.. புராணம்.. இட்டுக்கதை.. இதிகாசம் என்று பேச்சோடு புறக்கணித்து சென்று விட..

எமது இலக்கியங்களை.. புராணங்களை சிங்களவன் மட்டுமல்ல.. மேலை நாட்டினரும்.. வேலை மிணக்கட்டு அறிவியல் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இராமர் பாலம் தொடர்பில் அமெரிக்க நாசா அக்கறை செய்திருக்கிறது. இப்ப சிங்களம் இராவணனின் புட்பக விமானம் தொடர்பில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கான நோக்கம் சிங்கள பெளத்த இனப்பரம்பலை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் என்றிருந்தாலும்.. ஆய்வுக்கு உட்படுவது.. நாம் வெறும் இதிகாசம்.. புராணம்.. என்று புறக்கணிக்கத் தூண்டியவை.

இதே யாழில்.. ஒரு தசாப்தத்திற்கு முன் நிகழ்ந்த விவாதம் ஒன்றில்.. எமது விருப்பு வெறுப்பு அப்பால்.. இராமாயணம்.. குறிப்பாக கம்பராமாயண எடுகோள்கள்.. ஆய்வுக்குட்படுத்தப்படனும்.. குறிப்பாக அறிவியல் ஆய்வுக்கு உட்படனும் என்று எழுதி இருந்தோம்.

அதனையும் இங்கு சில தம்மை மேதாவிகள் என்று காட்டிக்கொள்ள விளைந்து நக்கல் அடித்தனர். இப்ப அவர்கள் இங்கு அதே பெயரில் இல்லை. 

எம்மவர்கள் எப்பவுமே எதையும் ஒரு மட்டத்திற்கு மேல் ஆய்வதில்லை. அதற்கான திறமையும் இல்லை. ஆனால் வெட்டிப் பெருமை. 

நாம் மறந்தவற்றை மிதித்தவற்றை புறக்கணித்தவற்றை மற்றவன் தனதாக்க எவ்வளவு கஸ்டப்படுறான்.. உழைக்கிறான் என்பதற்கு இது நல்ல உதாரணம். 

Edited by nedukkalapoovan

இராமாயணம் என்ற புனைகதையையும் புஷ்பக விமானத்தையும் நம்பும் அளவுக்கு அறிவு மழுங்கி போய்விட்டது.  ஏதே ஒன்றை காட்டி  இது தான் அது என்று சொன்னாலும் நம்ப ஆட்கள் உண்டு.   

நடைமுறை வாழ்வில் பெருமைபட எதுவும் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில்  கற்பனையில் வெட்டி பெருமை பேசுவதே வழமையாகிவிட்டது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அதனையும் இங்கு சில தம்மை மேதாவிகள் என்று காட்டிக்கொள்ள விளைந்து நக்கல் அடித்தனர். இப்ப அவர்கள் இங்கு அதே பெயரில் இல்லை. 

அவர்களின் கொண்டைகளை  மறைக்க மறந்து போய்  இங்கு நின்று சதிராடுகின்றனர் 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நாங்கள் எங்களுக்குள் நாங்களே உனக்கு பகுத்தறிவு எனக்குப் பகுத்தறிவுன்னு வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு.. புராணம்.. இட்டுக்கதை.. இதிகாசம் என்று பேச்சோடு புறக்கணித்து சென்று விட..

எமது இலக்கியங்களை.. புராணங்களை சிங்களவன் மட்டுமல்ல.. மேலை நாட்டினரும்.. வேலை மிணக்கட்டு அறிவியல் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இராமர் பாலம் தொடர்பில் அமெரிக்க நாசா அக்கறை செய்திருக்கிறது. இப்ப சிங்களம் இராவணனின் புட்பக விமானம் தொடர்பில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கான நோக்கம் சிங்கள பெளத்த இனப்பரம்பலை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் என்றிருந்தாலும்.. ஆய்வுக்கு உட்படுவது.. நாம் வெறும் இதிகாசம்.. புராணம்.. என்று புறக்கணிக்கத் தூண்டியவை.

இதே யாழில்.. ஒரு தசாப்தத்திற்கு முன் நிகழ்ந்த விவாதம் ஒன்றில்.. எமது விருப்பு வெறுப்பு அப்பால்.. இராமாயணம்.. குறிப்பாக கம்பராமாயண எடுகோள்கள்.. ஆய்வுக்குட்படுத்தப்படனும்.. குறிப்பாக அறிவியல் ஆய்வுக்கு உட்படனும் என்று எழுதி இருந்தோம்.

அதனையும் இங்கு சில தம்மை மேதாவிகள் என்று காட்டிக்கொள்ள விளைந்து நக்கல் அடித்தனர். இப்ப அவர்கள் இங்கு அதே பெயரில் இல்லை. 

எம்மவர்கள் எப்பவுமே எதையும் ஒரு மட்டத்திற்கு மேல் ஆய்வதில்லை. அதற்கான திறமையும் இல்லை. ஆனால் வெட்டிப் பெருமை. 

நாம் மறந்தவற்றை மிதித்தவற்றை புறக்கணித்தவற்றை மற்றவன் தனதாக்க எவ்வளவு கஸ்டப்படுறான்.. உழைக்கிறான் என்பதற்கு இது நல்ல உதாரணம். 

சில விடயங்களை இது சாதாரணமானது தானே என்று சில மெத்தப்படித்த மேதாவிகள் தட்டிக்கழிப்பார்கள்.

17ம் நூறாண்டில் நடந்த இதே, பொது முடக்கம் 2 ஆண்டுகள் நீடித்தது. கேம்பேரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் BA பட்டம் பெற்று, MA பட்டபடிப்பு ஆரம்பித்த கையோடு, தனது வீட்டில் முடங்கிய நியூட்டன் ஆப்பிள் மரத்தின் பக்கத்தில் இருந்து வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆப்பிள் பக்கத்தில் விழ, அவர் சிந்திக்க தொடங்கினார். உலகப்பந்தில் தலைகீழாக தொங்கும் அந்த ஆப்பிள் மரத்தில் இருந்த பழம், வான் நோக்கி போகாமல், எதிர்திசையில் எப்படி பயணிக்கிறது என்று யோசித்தார். ஈர்ப்பு விசை தத்துவம் பிறந்தது.

100 - 120 வருடங்களுக்கு முன்னர் மனிதன் ஜெட் விமானத்தில் ஏறி 17 மணி நேரத்தில் அவுஸ் போகலாம் என்றால், வெட்டிப்பேச்சு என்று சிரித்திருப்பார்கள். வானத்தில் ஏறி நிலாவுக்கும் போகலாம் என்றால் பரிகசித்திருப்பார்கள்.

மனிதன் சாதித்தான். அப்படியானால் ராமாயணம்,  உண்மையா, பொய்யா என்பதுக்கு முன்னர், புஸ்பக விமானம் இருந்திருக்குமா என்ற கேள்வி வீண் பேச்சு, வெட்டி பேச்சு என்று சொல்வதற்கு முன்னர், இன்று மனிதனால் எவ்வாறு ஹெலிஹாப்டர், விமானங்கள் கண்டு பிடிக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றனவோ அதேபோல, ஒரு படிப்பறிவுள்ள கூட்டம் அன்று இருந்திருக்குமோ என்று தானே ஆராய வேண்டுமேயன்றி, அது கற்பனையில் வெட்டி பெருமை பேசுவதே என்று சொல்வது மடமைத்தனம்.

சரி... உலகத்தின் வயது பல மில்லியன் வருடங்கள்.... துல்லியமான சரித்திரம் கிடைப்பது... இயேசு மரணத்துக்கு பின்னான 2200 வருடங்களில் மட்டுமே. அதுக்கு முன்னர், அங்கொன்றும், இங்கொன்றுமாக, சில, சில விபரங்கள்.... சிந்துவெளி நாகரிகம், எகிப்திய பிரமிட், அசோக சக்கரவர்த்தியின், பௌத்த மத பரப்பல் என்று சில விபரங்கள் உண்டு.

சில ஆய்வாளர்கள், இந்து மதத்தின் பிரளயம் என்ற சொல்லினை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள்.

பூமிப்பந்து பிரளயத்தினால் குலுங்கி, இருப்பவை நீரினுள் போக, நீரினுள் இருப்பவை வெளியே வர, ஒரு புதிய உலகம் உருவாகும். அதில் சகலமும், முற்று, முழுதாக ஆரம்பத்தில் இருந்து, புல், பூண்டு, பூச்சி, வண்டு என உருவாகும் என்று இந்து சமயம் சொல்கின்றது.

நாம் இப்போது வாழ்வது கலி யுகம் என்றும், இது முடிந்து அடுத்த யுகம் வரும்போது சகலமும் புதிதாகவே ஆரம்பிக்கும் என்றும் சிலர் கருதுவர்.

உதாரணமாக, லெமோரியா கண்டம் காணாமல் போனதையும், ஒன்றாக இருந்த ஐரோப்பாவில் இருந்து, 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், பிரித்தானியா, நீரினால் பிரிக்கப்பட்டு ஒரு தீவானதுக்கு சுனாமி அல்லது கடற்கோள் காரணமாக இருந்தது. 

இந்த கடற்கோள் நூறு வீதமாக இருப்பதே பிரளயம் என்றும் இந்த பிரளயத்தின் போது, ஒரு படகில் ஏறி தப்பிப்பிழைத்த சிலர் குறித்து சமைய வேதங்கள் சொல்கின்றன. இவர்கள் மூலமாகவே, அடுத்த யுகத்தில் மனித வம்சம் விருத்தி அடைந்தது என்றும் அது விளக்குகின்றது.

  • படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.
  • மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும். 
  • ...... அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்துகொண்ட முனிவர், அவரிடம், ” தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன ? ” என்று கேட்டார்.
  • “மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப்போகின்றன. அச் சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு ( சப்த ரிஷிகள் = முக்கியமான ஏழு முனிவர்கள் ) , நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். அப்போது, பிரம்மனின் உறக்கம் முடியும்வரை என் வாயுவால் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்.
  • ..... நடந்து கொண்டிருக்கும் கலியுக காலத்தின் இறுதியில், மகாவிஷ்ணு எடுக்கவிருப்பதே கல்கி அவதாரம் ஆகும்.
  • கலியுகத்தின் முடிவில் யசாஸ் எனும் பிராமணரின் மகனாக, மகாவிஷ்ணு பிறப்பு எடுப்பார்.
  • பின் வெள்ளை குதிரை மீதேறி மூன்று நாட்களில் உலகினை சுற்றி வருவார். அக்கிரம செயல்களை எதிர்த்து, அதர்ம செயல்கள் புரிவோரை அழித்து தருமத்தினை நிலை நாட்டுவார்.
  • அத்துடன் கலியுகம் முடிவுக்கு வரும்.

அடுத்து வரும் யுகத்தில், கலியுகத்தில், (புஸ்பக) விமானம் இருந்ததாக யாராவது சொன்னால்.... ஹா.... ஹா... கற்பனையில் வெட்டி பெருமை என்று அன்றும்,  சில மெத்தப்படித்த மேதாவிகள் தட்டிக்கழிப்பார்கள்.

************

இன்னும் சொல்வதானால்,  60 வருடங்களுக்கு முன்னர் மாயாபஜார் என்ற மந்திர தந்திர படம் ஒன்று வந்தது.

N T ரங்காராவ் மந்திரவாதியாக நடித்த படம் அது. 

மாயக்கண்ணாடியே, பேரழகியான, இளவரசி எங்கே இருக்கிறார் என்று காட்டி விடு என்பார்.... கண்ணாடியும் காட்டும்....

சில மேதாவிகள் அன்றும்  சொல்லி இருப்பார்கள்...  அபத்தம், இது மந்திரம், தந்திரம் என்று மக்களை முட்டாளாக்கி காசு பார்க்கிறார்கள் என்று...

ஆனால்... 35 - 45 ஆண்டுகளில், அது கையில் இருக்கும் மொபைல், ஐபாட் மூலம் நியமானது.

First Zoom Meeting in the 1960's

அன்றும் ஒருவர் பிளந்து கட்டி இருப்பார்: மந்திரத்தினை நம்பும் அளவுக்கு அறிவு மழுங்கி போய்விட்டது.  தந்திரமாக ஒன்றை காட்டி  சாத்தியமானது தான் அது என்று சொன்னாலும் நம்ப ஆட்கள் உண்டு.   

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டும்தான் அறிவாளி, உலகில் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியதா மூடர்கள்😜.

ஒரு தேடல்தான் கண்டுபிடிப்பை கொண்டுவரும். விஞ்ஞானிகளின் பல தேடல்கள்தான் அணுவையே பிளக்க முடியாது என்று சொன்னவர்கள், கடவுளின் துகள் வரை வந்து நிற்கின்றது,. 

மற்றவன் எமது கலாச்சாரத்தை தொடர, நாம் தொலைத்துவிட்டு நிற்கபோகின்றோம்

காலத்தை யுகஙகளாக ப்பிரிக்கிறது இந்து மதம்.

கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்கள் 
திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் வருடங்கள் 
துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள் 
கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்கள் 

இதில்  திரேதா யுகத்தில் இராமர் பிறந்ததாக எந்த ஒரு சிறிய ஆதாரம் கூட  இல்லாமல் குறிப்பிடப் பட்டுள்ளது.  கிட்டதட்ட 2 மில்லயன் வருடங்களுக்கு முதல் மனிதன் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் ஹோமோ சேப்பியன் படி இல்லை. 

இராமாயணத்தில் சுந்தர கண்டத்தில் சீதையை தேடிச்சென்ற அனுமன் சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தில்  புத்தரின் ஆலயம் போன்ற உப்பரிகையை கண்டான் என்று கூறுகிறது. (சுந்தர காண்டம் 15 வது சர்க்கம்)

வாலியிடம் ராமன் கூறுகிறான் பூர்வத்தில் ஒரு பௌத்த சந்நியாசி உன்னைப் போல் கொடிய காவத்தை செய்து  மாந்தாதா சக்கரவர்ததியால் தண்டனை விதிக்கப்பட்டான். ( கிஷ்கிந்தா காண்டம் 18 ம் சர்க்கம்) 

இராமன் ஜாபீலி என்ற புரோகித ரிசியிடம் கூறுகிறான் திருடனும் பௌத்தனும் ஒன்றே, பௌத்தனுக்கும் நாஸ்திகளுக்கும் பேதமில்லை என்று சொன்னதாக.  ( அயோத்தி காண டம் 109 ம் சர்க்கம்) 

இப்போது கேட்கிறேன் 2500 வருடங்களுக்கு முன்னர் உருவான பெளத்த மதத்தை ஆலயங்கள் எப்படி 2 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்திருக்க முடியும். 

வாய்வழியாக தென்னாசிய நாடுகள் முழுவதும் பொழுது போக்கிற்காக   வலம் வந்த இராமாயண கதைகள்   உண்மைக் காவியங்களாக மாற்றப்பட்டு  கடந்த 2000 வருடங்களுக்கு பிறகு எமக்கு கூறப்பட்டுள்ளது. அந்த புரட்டுக்களை நம்பி இங்கு நம்மவர் வெட்டி பெருமை பேசுகின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் 

வாழ்ந்தவர்கள குரங்குகள் என்று தமிழர்களை அவர்கள  கூறிய பின்பும் இந்த வெட்டிப் பெருமை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள வழமையின்படி மாட்டை மரத்தில் கட்டியாயிற்று😀

முன்னர் ஒரு நீண்ட கட்டுரை இணைத்திருந்தேன். அதைப் படித்தால் சிங்களவர்களின் நோக்கங்கள் புரியும். புரிய விரும்பாமல் தும்பைவிட்டு வாலை மட்டும்தான் பிடிப்பேன் என்றால் அப்படியே தொடருங்கள்😆

20 minutes ago, கிருபன் said:

யாழ்கள வழமையின்படி மாட்டை மரத்தில் கட்டியாயிற்று😀

முன்னர் ஒரு நீண்ட கட்டுரை இணைத்திருந்தேன். அதைப் படித்தால் சிங்களவர்களின் நோக்கங்கள் புரியும். புரிய விரும்பாமல் தும்பைவிட்டு வாலை மட்டும்தான் பிடிப்பேன் என்றால் அப்படியே தொடருங்கள்😆

மன்னிக்க வேண்டுகிறேன் கிருபன். இதை வைத்து அடுத்து வந்த கருத்துகளுக்கு பதில் சொல்லப் போய் உங்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டோம். Sorry 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

மன்னிக்க வேண்டுகிறேன் கிருபன். இதை வைத்து அடுத்து வந்த கருத்துகளுக்கு பதில் சொல்லப் போய் உங்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டோம். Sorry 

இதில் கோபம் எதுவுமில்லை. வெறும் அயர்ச்சிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக டொன் கரோலிஸ் மரவேலை நிறுவனம் 
அரசாங்கம் கொடுத்த புஷ்பக விமான ப்ரொஜெக்ட்டை முடித்திருப்பினம், கோணேஸ்வரம் அல்லது நல்லூரில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடப்போகும் புதிய மரபுரிமை பாதுகாப்பு குழு இதனை கண்டுபிடிக்கும், அப்புறம் என்ன ஜரூர்தான் , புதிய மரபுரிமை பிக்கிகளை அறிவித்த கையுடன் புஷ்பக விமானத்தை தேடுகிறார்கள் என்றால் மணி எங்கேயோ அடிக்கவில்லை...? 
இலங்கை வீர இந்துக்கள் இராவணனையும் கடவுளாக ஏற்று அவருக்கு நல்லூர் கந்தனுக்கு அல்லது கோணேஸ்வர சிவாவிற்கு  பக்கத்தில் சிலை வடித்து தமது சனநா(ய்)யக பன்மைத்துவத்தை பேண வேண்டும்   

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

புஷ்பகவிமானம் ......இது இராவணன் தவவலிமையால் சிவனிடம் வரங்கள் பெற்று (1008 அண்டங்களை 108 யுகங்கள்)ஆளும் வலிமையால் எல்லா உலகங்களையும் பிடித்துக்கொண்டு வரும் வழியில் தனது பாட்டன் குபேரனிடம் இருந்து எடுத்து வந்ததுதான் இந்த புஷ்பகவிமானம்......அப்படியெனில் அதுக்கு முதல் புஷ்பக விமானங்கள் இல்லையா என்றால் இருந்தது.....!

---- தட்ஷனின் மகள் தாட்சாயினி(உமாதேவியார்)  தனது வானளாவிய மாளிகையின் உப்பரிகையில் நிக்கிறாள். அப்பொழுது தேவர்கள்,கந்தர்வர்கள் போன்றவர்கள் அம் மாளிகையின் அருகாக பலவகையான விமானங்களில் பறந்து செல்கின்றனர்.அப்போது அவள் அவர்களிடம் வினவுகிறாள் எல்லோரும் எங்கே செல்கின்றீர்கள் என்று அப்போது அவர்கள் தமது விமானத்தை அருகே நிறுத்தி (இது கெலிகாப்ட்டர் மொடல்) தங்கள் தட்ஷனின் யாகத்துக்கு செல்வதாக கூறிச்செல்கின்றனர்......உடனே அவள் தனது தந்தை என் தங்களை அழைக்கவில்லை என்று சிவனுடன் வாக்குவாதப்பட்டு அவர் தடுக்கவும் கேளாமல் அந்த யாகத்துக்கு சென்று தந்தையுடனும் சண்டை பிடித்து அந்த யாகத்தீயில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.அதன்பின் வீரபத்திரர் தோன்றி யாகத்தையும் அழித்து தட்ஷனின் தலையையும் கொய்து என்று போகும் .........!

---- பிற்காலத்தில் அவ்வையார் கணபதி பூசை செய்துகொண்டு இருக்கும்போது சுந்தரர் வெள்ளையானையிலும் சேரமான் ஒரு தேரிலும் விண்ணுலகம் நோக்கி செல்கின்றனர்.அப்போது அவ்வையாரையும் கூப்பிடுகின்றனர்.ஆயினும் அவள் அதை மறுத்து ஆறுதலாக விநாயகர் அகவல் பாடி பூசையை முடிக்கிறாள்.பின்பு கணபதியே அவளை அவர்களுக்கு முன்பாக கைலாசத்தில் சேர்த்து விடுகின்றார்......!

இவைகள் எல்லாம் மணிஅய்யரின் பிரசங்கங்களில் கேட்டது.விரும்பியவர்கள் இந்தப் புராணங்களை படித்து தெளிவுறலாம். அல்லது அவரிடம் நேரில் சென்று கேட்கவும். 

(இராவணன் சீதையை தூக்கி வரும்பொழுது ஜடாயுவால் வழிமறிக்கப்பட்டு ஜடாயு தாக்கியதில் அந்த விமானம் சேதமைந்து விட்டிருக்கும்.அதனால் அது விஸ்வகர்மாவின் தொழிற்சாலையில்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்)........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனின் புட்பக விமானத்தின் மூல தகவல்களை கேட்டு விளம்பரம்..! இராவணனை சிங்களவனாக்க முயற்சி பணத்திற்காக தகவல்களை வழங்கவேண்டாம் எதிர்ப்பு..

Ravana-senathi.jpg

இராவணன் பயன்படுத்தியதாக கூறப்படும் புட்பக விமானத்தை பற்றிய மூல தகவல்கள் இருப்பின் தமக்கு வழங்குமாறுகோரி சிவில் விமான சேவைகள் அதிகாரசபை ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது.

“இராவணன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்ற தலைப்பில் ஆய்வு தொடங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான மூல தகவல்களை வழங்குமாறும் கேட்கப்பட்டிருக்கின்றது.

advert-Ravana.jpg

இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை சிவில் விமான சேவை அதிகார சபை கோரியுள்ளது.

இதனை 2020 யூலை 31 க்கு முன்னர் 0766317110 என்கிற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது mgrrdp@caa.lk என்கிற மின்னஞ்சல் மூலமோ அல்லது குறிப்பிட்ட விலாசத்துடன் தொடர்பு கொண்டோ விபரங்களை அறியத்தந்தால் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் இந்த முயற்சி இராவணனை சிங்களவனாக்கும் முயற்சியே எனவும் முக்கிய மூல தகவல்கள் இருப்பின் அவற்றை பாதுகாக்கவேண்டும். பணத்திற்காக அதனை சிங்களத்திற்கு விற்று விடக்கூடாது என சமூக வலைத்தளங்களில்  எழுதப்பட்டு வருகின்றது.

https://jaffnazone.com/news/19444

  • கருத்துக்கள உறவுகள்

என்ஜின் வீட்ட தான் கிடந்தது .... இப்ப எங்க கிடக்கோ தெரியவில்லை 
அப்பவே எல்லாம் கறல்  புடிச்சு கிடந்தது ..இப்ப 20 வருஷம் ஆகுது கார்பெரேட்டர் டிரான்ஸ்மிஷன் அதுகள் 
எல்லாம் உக்கி இருக்கும் என்று நினைக்கிறேன் ... எதுக்கும் ஒருக்கா அம்மாவை கேட்டு விட்டு சொல்கிறேன் 

  • தொடங்கியவர்

சிங்கத்திற்கும் மானுடப் பெண்ணுக்கும் இடையில் நிகழ்ந்த கலவியினால் தான் சிங்கள இனமே தோன்றியது என மகாவம்சம் கூறுவதையே ஏற்றுக் கொண்ட ஒரு இனம் வேறு எவ்வாறு தன் இனவாதத்தை இறுகத் தொடரும்? இராவணனை தன் மன்னனாக வரிந்து கட்ட முனையும் சிங்களம் தான் ஏன் அதனை செய்கின்றது என்பதில் தெளிவாக இருக்கின்றது. 
நியாயமான, விஞ்ஞான பூர்வமான தொல்பொருள் ஆராச்சியின் மூலம் தன் தொன்மையை உலகிற்கு காட்ட முடியாது என்பது சிங்கள இனத்திற்கு மிகவும் தெளிவாகவே தெரியும்.அதனால் தான் இதிகாசத்தினையும் கட்டுக் கதைகளையும் தன் பங்கிற்கு இழுத்து உலகிற்கு காட்ட முனைகின்றது. இந்தியாவில் பிஜேபி எவ்வாறு இராமன் மூலம் தன் இந்துத்தவா / ஆரிய கொள்கைகளை நிலை நாட்ட முற்படுகின்றதோ அதற்கு சமாந்திரமாக இராவணனை தன் பங்கிற்கு காட்ட முனைகின்றது.

இதற்கு எதிர்வினையாக ஈழத் தமிழர்கள் இராவணனை தன் மன்னாக காட்ட முற்படுவதை விட்டுவிட்டு இராவணன் எனும் மன்னனை இதிகாச காலத்து காவிய கற்பனை பாத்திரம் என நிரூபிப்பதில் மினக்கெட்டால் நல்லது. ஏனெனில் விஞ்ஞான பூர்வமாக இராவணனை நிரூபிக்க சிங்களத்தால் ஒரு போதும் முடியாது.

33 minutes ago, நிழலி said:

இதற்கு எதிர்வினையாக ஈழத் தமிழர்கள் இராவணனை தன் மன்னாக காட்ட முற்படுவதை விட்டுவிட்டு இராவணன் எனும் மன்னனை இதிகாச காலத்து காவிய கற்பனை பாத்திரம் என நிரூபிப்பதில் மினக்கெட்டால் நல்லது. ஏனெனில் விஞ்ஞான பூர்வமாக இராவணனை நிரூபிக்க சிங்களத்தால் ஒரு போதும் முடியாது.

மிக சரியான கருத்து. நன்றி நிழலி 👍👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

இப்பிடித்தான் நானும் யோசித்தேன், ஏதாவது ஒருவகையில் வரலாற்றை மாற்றி எழுத முனைகிறார்கள், முக்கியமாக சிங்களவர்களுக்கு ஊட்ட நினைக்கிறார்கள், இது அவ்வளவு இலகுவாக இருக்காது, இது ஒரு கற்னை கதை என்பது நிரூபிப்பது கஷ்டமல்ல, அதை நாங்கள் செய்வதே எங்கள் எதிர்காலத்துக்கு சரியாக இருக்கும், பத்தாதுக்கு நாங்களும் எங்கள் மண்ணுக்கு சம்பந்தமே இல்லாமல் புதுசு புதுசாக ராமர்/லக்ஷ்மிநாராயணன்/ஆஞ்சநேயர் கோவில் என்று இலங்கையில் புது புதுசாக வட இந்தியாவில் இருந்து இறக்கிக்கொண்டு இருக்கிறோம். வட இந்திய அடையாளத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம். இது எப்பிடி முடியும் என்றால் நாங்கள் வந்தேறிகளாகவும், அவர்கள் ராவணனின் வழி வந்த மண்ணின் மகிந்தர்களாகவும் அடையாளப்படுத்துவதிலேயே முடியும். நாங்கள் எவ்வளவுதான் காலை சுத்தி வந்தாலும் இந்த மோடி குரூப் எங்களை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை.  காலம் காலமாக ஆரியர்களின் வழி வந்தவர்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி வரலாற்றை மாற்றி எழுதுவதில் உள்ள திறமை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தும் விடயம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சிங்கத்திற்கும் மானுடப் பெண்ணுக்கும் இடையில் நிகழ்ந்த கலவியினால் தான் சிங்கள இனமே தோன்றியது என மகாவம்சம் கூறுவதையே ஏற்றுக் கொண்ட ஒரு இனம் வேறு எவ்வாறு தன் இனவாதத்தை இறுகத் தொடரும்? இராவணனை தன் மன்னனாக வரிந்து கட்ட முனையும் சிங்களம் தான் ஏன் அதனை செய்கின்றது என்பதில் தெளிவாக இருக்கின்றது. 
நியாயமான, விஞ்ஞான பூர்வமான தொல்பொருள் ஆராச்சியின் மூலம் தன் தொன்மையை உலகிற்கு காட்ட முடியாது என்பது சிங்கள இனத்திற்கு மிகவும் தெளிவாகவே தெரியும்.அதனால் தான் இதிகாசத்தினையும் கட்டுக் கதைகளையும் தன் பங்கிற்கு இழுத்து உலகிற்கு காட்ட முனைகின்றது. இந்தியாவில் பிஜேபி எவ்வாறு இராமன் மூலம் தன் இந்துத்தவா / ஆரிய கொள்கைகளை நிலை நாட்ட முற்படுகின்றதோ அதற்கு சமாந்திரமாக இராவணனை தன் பங்கிற்கு காட்ட முனைகின்றது.

இதற்கு எதிர்வினையாக ஈழத் தமிழர்கள் இராவணனை தன் மன்னாக காட்ட முற்படுவதை விட்டுவிட்டு இராவணன் எனும் மன்னனை இதிகாச காலத்து காவிய கற்பனை பாத்திரம் என நிரூபிப்பதில் மினக்கெட்டால் நல்லது. ஏனெனில் விஞ்ஞான பூர்வமாக இராவணனை நிரூபிக்க சிங்களத்தால் ஒரு போதும் முடியாது.

சிங்களவன்.. ஆதாரத்தை தேடுறான்.. நாங்கள் மீண்டும்.. இதிகாசம் என்று சப்பை கட்டைக் கட்டிட்டு இருக்க முனைகிறம்.

ஆனால்.. சிங்களவன்.. இதனை சும்மா தேடவில்லை.. அவன் பல பின்னணிகளை ஆராய்ந்து விட்டு தான்.. இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறான். அது விளங்காமல்.. பழைய பல்லவியை நாம் பாட முனைகிறோம். இது எம் இயலாமையின் தொடர்ச்சி மட்டுமே. இது சிங்களத்தை அதன் நரித்தனத்தை இனங்காட்ட போதுமாகாது. சிங்களம்.. சரித்திரத்தை மாற்றி எழுதத் தான் போகிறது. நாம் கொட்டாவி விடத்தான் போகிறோம்... இதிகாசம் என்று விட்டு.

https://www.youtube.com/watch?v=odUtqDz4lEk

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் புதைகுழிகளையே சோடிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து.. இந்த நவீன விஞ்ஞான உலகில் கூட மூடிமறைத்த  சிங்களம்.. சிகிரியா தொடங்கி எல்லா வரலாற்றுச் சின்னங்களுக்கும் பெளத்த வடிவம் கொடுப்பதை திறம்படச் செய்து வருகிறது.

நாம்.. இவை எல்லாம் இதிகாசம்.. என்று சொல்லி இதிகாச நிகழ்கால அடையாளங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாமல்.. முழி பிதிக்கிக் கொண்டு... நமக்கு நாமே வார்த்தைகளால் முதுகு சொறிந்து கொள்கிறோம்.

அறிவியல்.. ஆய்வென்ற ஒன்று எமக்கு எட்டாக்கனி. அடுத்தவன் இந்தப் பலவீனத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இவை எல்லாம் இதிகாசம்.. என்று சொல்லி இதிகாச நிகழ்கால அடையாளங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாமல்.. முழி பிதிக்கிக் கொண்டு... நமக்கு நாமே வார்த்தைகளால் முதுகு சொறிந்து கொள்கிறோம்.

இராவணனை சிங்கள மன்னன் என்று தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. இலங்கையில் தமிழ் பெளத்தம் இருந்தது, கந்தரோடையில் உள்ள புராதன பெளத்த சின்னங்கள் தமிழில் பெளத்த மதம் இருந்தது என்பதற்கான ஆதாரம்.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழர்களிலும் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தார்கள் என்பதை ஏற்காததால், சிங்களவர்கள் இலங்கை முழுவதுமே இருந்தவர்கள் சிங்கள பெளத்தர்கள் என்றும், இராவணன் சிங்கள மன்னன் என்றும் நிறுவி ஏற்றுக்கொள்ள வைப்பார்கள்.

1 hour ago, nedukkalapoovan said:

அறிவியல்.. ஆய்வென்ற ஒன்று எமக்கு எட்டாக்கனி. அடுத்தவன் இந்தப் பலவீனத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்கிறான்.

அறிவியல் ஆய்வு, வரலாற்று ஆய்வு எல்லாம் இப்போது தமிழர்கள் யூரியூப்பிலும், முகநூலிலும்தானே செய்கின்றார்கள். பல்கலைக்கழகங்கள், பெரிய கம்பனிகள் நிதியுதவி செய்தால் மாற்றம் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இராவணனை சிங்கள மன்னன் என்று தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. இலங்கையில் தமிழ் பெளத்தம் இருந்தது, கந்தரோடையில் உள்ள புராதன பெளத்த சின்னங்கள் தமிழில் பெளத்த மதம் இருந்தது என்பதற்கான ஆதாரம்.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழர்களிலும் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தார்கள் என்பதை ஏற்காததால், சிங்களவர்கள் இலங்கை முழுவதுமே இருந்தவர்கள் சிங்கள பெளத்தர்கள் என்றும், இராவணன் சிங்கள மன்னன் என்றும் நிறுவி ஏற்றுக்கொள்ள வைப்பார்கள்.

பாருங்கள் நீங்களே வரலாற்றைக் குறுக்குகிறீர்கள்.

பெளத்தம் அல்ல.. தமிழில் புத்தம்.

புத்தமதம் என்பது பூம்புகார் உட்பட.. குமரிக்கண்டத்தில் நிறைந்தே இருந்துள்ளது. மணிமேகலை இலக்கியத்தில் தாக்கம் செய்யும் அளவுக்கு அதன் சமூக தாக்கம் இருந்துள்ளது.

தமிழர்கள் இன்ன மதத்தை மட்டுமே பின்பற்றினார்கள் என்றில்லை. வரலாற்று நெடுகிலும்.. ஒவ்வொரு ஆதிக்கச் சூழலுக்குள்ளும்.. அது மத ஆதிக்கம்.. அரச ஆதிக்கம்.. அந்நியராதிக்கம்.. நில ஆக்கிரமிப்பு.. இவற்றால்.. தமிழர்களின் மதம்.. நாகரிகம்.. மருவியே வந்துள்ளது. 

இன்றே... இஸ்லாமிய தமிழன் இருக்கான்... அல்லேலுயா தமிழன் இருக்கான்.. கிறிஸ்தவத் தமிழன் இருக்கான்.. அதிலும் றோமன் கத்தோலிக்கன்.. பெந்துகோசு... புரட்டஸ்தாந்து.. தமிழன்..

ஏன் இப்ப கனடா தமிழன்.. லண்டன் தமிழன்... பாரிஸ் தமிழன்.. சுவிஸ் தமிழன்.. 

அதுக்காக.. தமிழன் வெறும் இதிகாசம் என்று சொல்லி தப்பிடலாமோ..??! 

23 hours ago, tulpen said:

வாய்வழியாக தென்னாசிய நாடுகள் முழுவதும் பொழுது போக்கிற்காக   வலம் வந்த இராமாயண கதைகள்   உண்மைக் காவியங்களாக மாற்றப்பட்டு  கடந்த 2000 வருடங்களுக்கு பிறகு எமக்கு கூறப்பட்டுள்ளது. அந்த புரட்டுக்களை நம்பி இங்கு நம்மவர் வெட்டி பெருமை பேசுகின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் 

வாழ்ந்தவர்கள குரங்குகள் என்று தமிழர்களை அவர்கள  கூறிய பின்பும் இந்த வெட்டிப் பெருமை. 

ராமாயணம் புராணங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுவதில்லை. அவை ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றது. ராமாயண கதாபத்திரத்தின் ராமனுக்கு கோயில் கட்டுவொம் என்று ஒன்றை முதன்மையாக முன்வைத்தே பிஜேபி இந்திய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது. பிஜேபி அதிகாரத்தில் இருந்த காலத்திலேயே இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றியது. இதற்கு முற்பட்ட காலத்தில் மனுதர்ம சாஸ்திரங்களை உருவாக்கி மக்களை சாதிவாரியாக பிளவுபடுத்தி தேசிய இனங்களை சிதைத்து இந்தியா என்ற அதிகார மையத்தை பிராமணர்கள் கைப்பற்றினார்கள். கடந்த வாரம் சோழர் வரலாறு திருக்குறள் போன்றன பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  சிங்கள பேரினவாதம் ராணுவ ஆக்கிரமிப்பை செய்ய முன்னர் பொளத்தமும் மகாவம்ச கதைகளும் பேரினவாத உருவாக்கத்திற்கு பிரதான சக்தியாக இருந்தது. 

கடவுள் இல்லை என்பதோ இல்லை புராணங்கள் புரட்டு என்பதோ அதற்கு அறிவியல ஆதராங்கள் தேடுவதோ பிரதானமானதில்லை. அவைகள் எவ்வாறு ஒரு இனக் குழுமத்தை உருவாகக பலப்படுத்த அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற  தக்க வைக்க பயன்படுததப்படுகின்றது என்பதே பிரதானமானது. ராவணனை தன் மன்னனாக சிங்கள பேரினவாதம்  இன்று முயற்சிப்பது ஒரு விதையை ஊன்றுவது போன்றது. அதற்கான பலன் நூறாணடுகள் கடந்தும் கிடைக்கும். 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , எம்மை பொறுத்தவரை புல்லை வைத்து என்னத்த புடுங்கிறது என்றே சிந்திக்கப் பழகியவர்கள்.  எமது இயலாமைக்கு அறிவியல் ஒரு போதும் தீனி போடாது. 

15 minutes ago, nedukkalapoovan said:

பாருங்கள் நீங்களே வரலாற்றைக் குறுக்குகிறீர்கள்.

பெளத்தம் அல்ல.. தமிழில் புத்தம்.

புத்தமதம் என்பது பூம்புகார் உட்பட.. குமரிக்கண்டத்தில் நிறைந்தே இருந்துள்ளது. மணிமேகலை இலக்கியத்தில் தாக்கம் செய்யும் அளவுக்கு அதன் சமூக தாக்கம் இருந்துள்ளது.

தமிழர்கள் இன்ன மதத்தை மட்டுமே பின்பற்றினார்கள் என்றில்லை. வரலாற்று நெடுகிலும்.. ஒவ்வொரு ஆதிக்கச் சூழலுக்குள்ளும்.. அது மத ஆதிக்கம்.. அரச ஆதிக்கம்.. அந்நியராதிக்கம்.. நில ஆக்கிரமிப்பு.. இவற்றால்.. தமிழர்களின் மதம்.. நாகரிகம்.. மருவியே வந்துள்ளது. 

இன்றே... இஸ்லாமிய தமிழன் இருக்கான்... அல்லேலுயா தமிழன் இருக்கான்.. கிறிஸ்தவத் தமிழன் இருக்கான்.. அதிலும் றோமன் கத்தோலிக்கன்.. பெந்துகோசு... புரட்டஸ்தாந்து.. தமிழன்..

ஏன் இப்ப கனடா தமிழன்.. லண்டன் தமிழன்... பாரிஸ் தமிழன்.. சுவிஸ் தமிழன்.. 

அதுக்காக.. தமிழன் வெறும் இதிகாசம் என்று சொல்லி தப்பிடலாமோ..??! 

எடுத்துக் காட்டாக தென்னிந்திய வரலாற்றில் தமிழர்களிடையே பௌத்த, சமண சமயங்கள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த போது அதன் தாக்கத்திற்குட்பட்டு இலங்கைத்தீவிலும் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்களிலும் பௌத்த, சமண மதத் தலங்கள் உருவாக்கப்பட்டிந்ததனையும் பின்னர் பல்லவர் சோழர் காலங்களில் சைவ வைணவ சமயங்களின் எழுச்சியினால் சமண, பௌத்த மதங்களும் அவற்றின் வழிபாட்டிடங்களும் செல்வாக்கிழந்த நிலையில் அதன் சான்றுகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்நிலையில் அத்தகைய சான்றுகளை ஒற்றை நோக்கத்தில் வியாக்கியானஞ் செய்து பயன்படுத்த முயற்சிப்பது இலங்கைத்தீவின் பல்வகைமைப் பண்பாடுகளை மறுதலிக்கும் செயற்பாடாகவே அமைந்திருக்கும்.”

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.