Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ந‌ட‌க்க‌ இருக்கும் ஈழ‌த்து தேர்த‌ல் ப‌ற்றி அண்ண‌ன் சீமானின் காணொளி , ம‌ற்றும் எம் ஜீ ஆர் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌துக‌ளை ந‌ல் ம‌ன‌தோடு சொல்லுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

தற்போது இருக்கும் எம் ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு 13 ஆம் சரத்து, ஒற்றையாட்சி பற்றி எல்லாம் தெரிந்து இருப்பதை விட சீமானுக்கு அதிகப்படியாக தெரிந்து இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் 

உங்க‌ளுக்கு ந‌ம்பிக்கையான‌வ‌ர்க‌ளுட‌ன் நீங்க‌ள் ப‌ய‌ணியுங்க‌ள் , அதில் நான்  ஒரு போதும் த‌லையிட‌ மாட்டேன் ,

நான் ஒரு க‌ட்சி த‌லைவ‌ர் ஓட‌ ந‌ம்பிக்கை வைத்து ப‌ய‌ணிக்கும் போது , அதில் தேவை இல்லா குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ண‌ வேண்டாம் ,

நீங்க‌ள் எழுதுவ‌து உங்க‌ள் க‌ற்ப‌னைக்கு எட்டிய‌து , க‌ள‌ நில‌வ‌ர‌ம் முற்றிலும் மாறுப‌ட்ட‌து , இனியும் வேண்டாம் பூனைக் க‌தைக‌ள் ,

எம் இன‌த்தில் எதிரிக‌ளை உருவாக்காம‌ல் ந‌ண்ப‌ர்க‌ளை உருவாக்க‌ பாருங்கோ 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்     

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

எழுஞாயிறு இங்கு சீமான் சொன்னதையே இவரும் சொல்கிறார்.என்ன தான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

கதையோட கதையாக இதையும் பாருங்கோ

காணொளி இணைப்பிற்க்கு... நன்றி எழுஞாயிறு. இவர், எனது நெருங்கிய உறவினர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

நல்ல பதிவு பையன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எழுஞாயிறு இங்கு சீமான் சொன்னதையே இவரும் சொல்கிறார்.என்ன தான் பிரச்சனை?

அதைதான் அவரும் சொல்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

2009 குப் பின்னர் தமிழ் மக்களின் கூட்டு உளவியலைச் சிதைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

 2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்றும் தெரியவில்லை. 

உண்மையில் என்னவென்று சொன்னால் மக்களிடம் நடந்த கதைகளை திருப்பிக் கூற வைத்து அவர்களின் அந்த வெளிப்பாடுகளுக்கு ஊடாக எதிர்காலத்தில் தாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை தீர்மானிக்க வைத்திருக்க வேண்டும். இது தான் ஆற்றுப்படுத்தலுக்கு மிக அடிப்படையான விடயம். அதை நாங்கள் செய்திருக்க முடியும். என தெரிவித்தார் யாழ். பல்கலையின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி. க. சிதம்பரநாதன். 

அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, 
மக்களை அடித்து நொறுக்கினால் பிறகு மீண்டும் ஒரு எழுச்சி இங்கு நடந்துவிடக் கூடாது. மீண்டும் மக்கள் ஒற்றுமைப்பட்டுவிடக் கூடாது. இளைஞர்கள் செயல்முனைப்பானவர்களாக ஆகி விடக் கூடாது. அதற்கான தரகராக தான் சம்பந்தர் செயற்பட்டார்.  

மக்கள் மத்தியில் அரசியல் இல்லை. அவர்கள் மத்தியில் எந்த தெளிவூட்டலும் இல்லை.   அரசியல் கலந்துரையாடல்கள் இல்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. 

மக்கள் மத்தியில் புகுத்தப்பட்ட கருத்துகள் என்னவென்று சொன்னால் இனி எங்களால் ஏலாது.  நாங்கள் சிறுபான்மையினம். நாங்கள் ஒரு மாதிரி சமாளித்துப் போக வேண்டும். அடங்கிப் போய்த் தான் காரியங்களைப் பெற வேண்டும். யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். ஏதாவது சலுகைகளைப் பெற வேண்டும். இப்படியான நிலையில் உள்ள பெரிய ஆபத்து என்னவென்றால் தங்களால் எதுவும் ஏலாது என நினைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
முப்பது வருடங்கள் போராடிய எம் மக்கள் தான் தங்களுக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். சுமந்திரன் அல்ல. சம்பந்தன் அல்ல. 

முழுமையான நேர்காணலை காணொளியில் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று என்றால் யார்? கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா?

-குருபரன் குமாரவடிவேல் -

முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை பார்ப்போம். தனிப்பட்ட நீதியரசர் விக்கினேஸ்வரனின் கரங்கள் தூயமையானவை. 2013இல் கூட்டமைப்பில் இணைந்து முதலமைச்சரானவர் 18 மாதங்களிலேயே தமிழரசுக் கட்சியின் பிறழ்வுகளை விளங்கி தனித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்தவர். தனது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படுபவர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஐயாவிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடே அவரின் அரசியல் தயக்கமும் அரசியல் கருத்தியல் தெளிவின்மையும். இரண்டு உதாரணங்களை பார்ப்போம்:

முதலாவது:

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் மிகப் பெரிய கருத்தியல் உள்ளடக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமானவர். அந்த நேரத்தில் நான் பேரவையின் உப குழுவில் சிவில் சமூக பிரதிநிதியாக சனாதிபதி சட்டத்தரணி புவிதரனுடன் சேர்ந்து பணியாற்றினேன். பேரவையின் வரைவை தயாரிப்பதில் குறிப்பிடத்தக்களவு பங்கு எங்களுக்கும் இருந்தது. அந்த வரைபின் இறுதி வடிவம் நீதியரசருக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் 'தமிழ் தேசம்' எனக் குறிப்பிடப்பட்ட இடங்களை எல்லாம் வெட்டி நீக்கி 'தமிழ் மக்கள்' என வெட்டி திருத்தினார். மேலே தான் செய்ததற்கு விளக்கமாக 'இந்த திருத்தங்கள் கூட்டமைப்பின் 'உணர்வுகளை' (feelings) ஐ மதித்து செய்யப்படுகின்றன' என விக்கினேஸ்வரன் ஐயா குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமார் இதை கடுமையாக எதிர்த்தார். கஜேந்திரகுமார் தேசம் என்ற சொல் பாவனையின் முக்கியத்துவத்தை சட்டம் சார்ந்து, தேசத்தின் இறைமையில் இருந்தான எமது தீர்வு எடுத்தப்படவேண்டியதன் நடைமுறை முக்கியத்துவம் சார்ந்து, முன்வைத்து வருபவர். ஒரு நாட்டிற்குள் தீர்வையினும் அது தேசம் என்ற அங்கீகாரத்துடன் வராவிட்டால் அதனால் பிரோயோசனமில்லை என்பதனையும் குறிப்பாக தமிழரால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களிலேயே நாம் இதனை சொல்லாமல் விடுவது ஒரு தொடந்தேர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முறிவாக இருக்கும் என்பதனையும் கஜேந்திரகுமார் அறிவார். அந்த தெளிவோடு எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தோல்வியை கண்டாலும் தொடர்ந்து பிரயாணிப்பவர் அவர். அந்த வகையில் விக்கினேஸ்வரன் ஐயா தேசம் என்ற சொல்லை விடுத்து சுமந்திரன் சேர் பரிந்துரைக்கும் 'மக்கள்' என்ற சொல்லை முன்வைப்போம் என்று நிலைப்பாடு எடுத்த போது மிகக் கடுமையாக எதிர்த்து அந்த மாற்றத்துடன் பேரவையின் அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்பட அனுமதிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இந்த மாற்றங்களை பிரேரித்த விக்கினேஸ்வரன் ஐயா ஆவணத்திற்கு நான் மின்னஞ்சலில் உடனடியாக பதிலளித்தேன். 1951 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்திலேயே 'தேசம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதனை தற்போதைய தமிழரசுக் கட்சியினர் மறந்திருக்கலாம் ஆனால் தமிழரை தேசம் என வரையறுத்த முதல் கட்சி தமிழரசுக் கட்சி தான் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பின்னர் விக்கினேஸ்வரனை ஐயா அதை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் விக்கினேஸ்வரன் ஐயாவின் அரசியல் தயக்கத்திற்கும் தெளிவின்மைக்கும் சான்று.

இரண்டாவது:

2019 சனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் மத்தியில் பொது நிலைப்பாடு வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் கூட்டங்களை நடத்தினர். நான் இதில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் இடைக்கால அறிக்கையை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்மபலத்தின் வலியுறுத்தலை கூட்டமைப்பு ஏற்காதிருக்க பேச்சுவார்த்தை முறிவடையும் என்று மாணவர்கள் அஞ்ச என்னையும் அழைத்தார்கள். அறிக்கையின் கீழே முன்னணியின் நிலைப்பாட்டை தனித்து சொல்லி அவர்களின் அந்த நிராகரிப்பை பதிவு செய்தல், ஒரு அடிக்குறிப்பாக முன்னணியின் நிலைப்பாட்டை சேர்த்தல் என பல தெரிவுகள் முன்வைக்கப்பட்டன. மாவை, சுமந்திரன் சேர், ஸ்ரீகாந்தா சேர், சுரேஷ் என்று எல்லோரும் அதை எதிர்த்தார்கள். முன்னணி மட்டும் நிராகரிக்கின்றது என்று அறிக்கை வெளிவந்தால் தாம் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமாகி விடுமே, அதனால் அப்படி சேர்க்கக் கூடாது என்றும் இன்று விக்கினேஸ்வரன் ஐயாவோடு கூட்டணியில் இருக்கும் சில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.விக்கினேஸ்வரன் ஐயா கொஞ்சம் பிந்தி வந்தார். அவருக்கு நடந்த விவாதத்தின் சுருக்கத்தை சுமந்திரன் சேர் வழங்கினார். நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தானும் ஏற்பதாக விக்கினேஸ்வரன் ஐயாவும் சொன்னது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. குறைந்தது முன்னணி தமது நிலைப்பாட்டை தனித்து சொல்ல அறிக்கையில் இடம் வழங்கலாம் என்பதைக் கூட விக்கினேஸ்வரன் ஐயா பரிசீலிக்கவில்லை. இடைக்கால அறிக்கையை பற்றி அந்த அறிக்கையில் பேச வேண்டுமா என்பதை கூட நியாயமான நிலைப்பாடாக கருதலாம். ஆனால் அதை நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அன்றுடன் யார் மாற்று என்பது தொடர்பில் எனக்கு தெளிவாக விளங்கியது.

இதை சொல்வதால் எனக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு கருத்து முரண்பாடுகள் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. முன்னணி சனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரியது தவறு எனக் கருதுகிறேன். 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க எடுத்த முடிவு உத்தி சார்ந்து தவறு என நான் கருதுகிறேன். முன்னணியின் சில உறுப்பினர்களின் அதி தீவிர தேசியவாதம் வன்மமானது. தேர்தல் அரசியலில் அதி கூடிய விட்டுக்கொடுப்பின்மை, இறுக்கத்தை காட்டுவதாகவும் கருதியது உண்டு. எனினும் கூட்டமைப்பின் தேசிய நீக்க அரசியலுக்கு சவால் கொடுக்க கூடிய தெளிவு உள்ள ஆளுமைகள் உள்ள ஒரே கட்சி என்னை பொறுத்த வரையில் முன்னணி தான்.

- குருபரன் குமாரவடிவேல் -

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படியே நடக்கிறார்கள் என்று மிகவும் திட்டமிட்டவகையில் பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணர்கிறேன். இலங்கையில் கஜேந்திரக்குமாரைத் தவிர அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டுள்ள நிலையில், தமிழ்த்தேசியத்தின் மிகப்பெரும் குரலாக இன்று இலங்கைக்கு வெளியே ஒலித்துக்கொண்டிருப்பது சீமான் மட்டும்தான். ஆகவே, தமிழ்த்தேசியம் என்பது இந்தியாவின் பொம்மைதான் என்று செய்யப்படும் விசமப் பிரச்சாரம் சீமானைக் குறிவைத்தே நடத்தப்படுவதாக உணர்கிறேன். 

இவ்வாறு, சீமானை இந்தியாவின் கைக்கூலி என்று முகவரியிடும் இந்தப் பிரச்சாரங்களின் பின்னாலிருப்பவர்கள் சீமானின் கருத்தியலுக்குப் பலம்சேர்க்கும் புலம்பெயர் முன்னாள்ப் புலிகள் மற்றும் ஆதரவாளர்களையும் சேர்த்தே இந்தியாவினால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் அல்லது, இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுபவர்கள் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சீமான் இந்தியாவின் ஏஜெண்ட் என்று அவிழ்த்துவிடப்பட்டும் இப்பிரச்சாரங்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறிவைத்தே நடத்தப்படவேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். 

ஆனால் உண்மை அதுவல்ல. இன்று இந்தியாவிற்கு தமிழகத்தில் இருக்கும் முக்கிய சவால் சீமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டும் தமிழ்த்தேசிய அரசியல்தான் என்றால் மிகையில்லை. சீமான் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியம் ஈழத்தமிழர்களுக்குச் சார்பானதென்பதும், சீமான் மூலமான தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலையென்பது மீள் எழுகையினை நோக்கிச் செல்கிறதெனும் இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் அச்சமே, சீமானையும் ஈழத்தமிழரையும் முற்றாகப் பிரித்துவிடும் இந்தப் பிரச்சாரக் கைங்கரியம் என்றால் அது மிகையில்லை. 

தம்மை முன்னின்று அழித்தது இந்தியாதான் என்று ஈழத்தமிழர்கள் இன்று முற்றிலுமாக நம்பும் நிலையில், ஈழத்தமிழரின் எழுச்சிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து வலியுறுத்தும் சீமானை ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிப்பதன் மூலம் இலாபம் அடையப் போவது யாரென்று தேடினால் இந்த விசமப் பிரச்சாரம் எங்கிருந்து வருகிறதென்பது புரியும். 

அத்துடன், இவ்வகையிலான பிரச்சாரத்தை இன்னொரு பிரிவினரும் முன்னெடுக்கின்றனர். சிங்களவர்கள் நல்லவர்கள், இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்றுவரை நம்பியிருப்பதாலேயே தமிழர்களை அவர்கள் அழிக்கிறார்கள் எனூம் பிரச்சாரமும் முன்வைக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டுடன் இந்தியாவினது உண்மை முகம் மிகத்தெளிவாக ஈழத்தமிழருக்கு உணர்த்தப்பட்டு, 2009 இல் வெளிப்படையாகவே இந்தியா ஈழத்தமிழர்மீதான இனக்கொலையினை நடத்தி முடித்த பின்னரும்கூட, இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்பதும், அதனாலேயே சிங்களவர்கள் தொடர்ந்தும் கொல்கிறார்கள் என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்காகச் செயற்படும் சக்திகளால் மட்டுமே முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 14:16, Elugnajiru said:

இங்கு குறிப்பிடப்படும் பாலா மாஸ்ரர் இப்போது லண்டனில் வாழ்கிறார். இவர் உட்பட ஆனந்தசங்கரி பத்திரிகையாளர் திருநாவுக்கரசு காசி ஆனந்தன் பரந்தன் ராஜன் ஆகியோர் இந்தியாவினது நிகழ்சித்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டாச்சு. தவிர சீமான் இந்தியாவால் களமிறக்கப்பட்ட மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கலான விக்கியரை எதிர்க்கமாட்டார் காரணம் அப்படிப்பேசினால் மத்தியில் தமிழகம் ஈழம் தொடர்பாகக் கொள்கைவகுப்போருக்குகச் சினம் வந்துவிடும் என்பதால். கதையோட கதையாக இதையும் பாருங்கோ

பையன் அவர்களே,

கருணா பிள்ளையான் ஒரு பொருட்டல்ல

மக்களுக்கு எப்போதுமே இரண்டு தேர்வுகளுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் கஜேந்திரகுமார், மற்றும் விக்கி அவர்களை குறிப்பிடுகிறார் சீமான். மிகுதியை தாயக மக்கள் செயல்படுத்துவார்கள் அல்லவா?!

2010 என நினைக்கிறேன். அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திர குமாரையும் ஆதரியுங்கள் என நான் உட்பட சிலர் இங்கு எழுதியபோது, ஒற்றுமை, தீர்வுப்பொதி என “சம்பந்த” வுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இன்று குய்யோ முறையோ என கத்துகிறார்கள்.

அரசியலில் ஒருமுறை தப்புக்கணக்கு போட்டால் அது பல சந்ததிகளை அழித்துவிடும் அல்லது பின்னோக்கி தள்ளிவிடும். இனிமேலாவது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎07‎-‎2020 at 16:08, பையன்26 said:

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

தான் போக வழியில்லையாம் மூஞ்சுறு ...........😂😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

தான் போக வழியில்லையாம் மூஞ்சுறு ...........😂😂😂

எட்டப்பர் கூட்டங்களுக்கு  எப்ப எங்கை நல்லது புடிச்சிருக்கு?
எவனை எப்ப கவுக்கலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை ஊத்திக்கொண்டு திரியுற கூட்டங்களுக்கு நல்லதும் தெரியாது கெட்டதும் தெரியாது.😜

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இசைக்கலைஞன் said:

மக்களுக்கு எப்போதுமே இரண்டு தேர்வுகளுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் கஜேந்திரகுமார், மற்றும் விக்கி அவர்களை குறிப்பிடுகிறார் சீமான். மிகுதியை தாயக மக்கள் செயல்படுத்துவார்கள் அல்லவா?!

தமிழ்த் தேசியத்தை ஒற்றுமையாக முன்னெடுக்காத கட்சிகள் தனிநபர்களாக பாராளுமன்றம் செல்வது பன்மைத்துவமாக இருக்கலாம். ஆனால் எதுவித பலனும் தராத ஆண்டுகளாக அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளும் இருக்கும்.

தாயக மக்கள் எப்படியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நாளை தெரியும். அவர்களை “மொக்குக் கூட்டம்” என்று வசைபாடாவிட்டால் சரி!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டில 2சைக்கிளுக்கு, 2மீனுக்கு போட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

எங்கட வீட்டில 2சைக்கிளுக்கு, 2மீனுக்கு போட்டோம்.

நல்ல முடிவு... ஏராளன். பாராட்டுக்கள்.
வீட்டுக்கு... போடாமல் விட்டது, மிக்க மகிழ்ச்சி. :)   

நான்... ஊரில், இருந்திருந்தால்... எல்லா வாக்குகளும், 
🚴‍♂️ சைக்கிளுக்கே 🚴‍♀️.. போட வைத்திருப்பேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 12:38, பையன்26 said:

க‌ருணாவுக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று எம் உற‌வுக‌ளை அன்போடு கேட்டு கொள்ளுகிறார் அண்ண‌ன் சீமான் 

தல,
எங்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம். உங்களுடைய குடும்ப பஞ‍்சாயத்தை பருங்கோ.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, zuma said:

தல,
எங்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம். உங்களுடைய குடும்ப பஞ‍்சாயத்தை பருங்கோ.
 
உண்ணாவிரதத்தில் கருணாநிதி

இதயக்கோவில் எம் ஜி ஆர் அவர்களின் ...

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

தம்மை முன்னின்று அழித்தது இந்தியாதான் என்று ஈழத்தமிழர்கள் இன்று முற்றிலுமாக நம்பும் நிலையில், ஈழத்தமிழரின் எழுச்சிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து வலியுறுத்தும் சீமானை ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிப்பதன் மூலம் இலாபம் அடையப் போவது யாரென்று தேடினால் இந்த விசமப் பிரச்சாரம் எங்கிருந்து வருகிறதென்பது புரியும். 

அத்துடன், இவ்வகையிலான பிரச்சாரத்தை இன்னொரு பிரிவினரும் முன்னெடுக்கின்றனர். சிங்களவர்கள் நல்லவர்கள், இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்றுவரை நம்பியிருப்பதாலேயே தமிழர்களை அவர்கள் அழிக்கிறார்கள் எனூம் பிரச்சாரமும் முன்வைக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டுடன் இந்தியாவினது உண்மை முகம் மிகத்தெளிவாக ஈழத்தமிழருக்கு உணர்த்தப்பட்டு, 2009 இல் வெளிப்படையாகவே இந்தியா ஈழத்தமிழர்மீதான இனக்கொலையினை நடத்தி முடித்த பின்னரும்கூட, இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்பதும், அதனாலேயே சிங்களவர்கள் தொடர்ந்தும் கொல்கிறார்கள் என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்காகச் செயற்படும் சக்திகளால் மட்டுமே முடியும். 

2009ற்கு பின் மனவழுத்தத்துடன் வாழ்வதாகவும் விடிவுக்கான பாதை தெரியவில்லை, குழப்பமாக இருப்பதாகவும் எங்கோ நீங்கள் எழுதியதை படித்ததாக நினைவு. சிறிலங்காவும், இந்தியாவும் எதிரிகள். ஆனால், சீமானில் விடிவுக்கான நம்பிக்கை வந்திருப்பதாக தெரிகிறது. பலருக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை, இல்லையா? இந்த நம்பிக்கை மனநிம்மதியை தர வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

உண்ணாவிரதத்தில் கருணாநிதி

இதயக்கோவில் எம் ஜி ஆர் அவர்களின் ...

கருணாநிதிக்கு இது டபுல பொருந்தும். எம் ஜி ஆர் உயிரோடுயிருக்கும் வரை எமது போராட்டத்திதை நியாயமாக ஆதரித்தவர். அவரும் உயிரோடு இருந்து சுயநல அரசியலுக்கு பாவித்தால் அவருக்கும் இது பொருத்தும்.

Edited by zuma

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.