Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சனை பற்றி கதைத்தால்  உங்கள் போன்றவர்களுக்கு பஞ்சாமிர்தம். 😎

கருணாநிதி இப்போது இல்லை. ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்கள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக 70% தமிழக மக்களின் ஆதரவோடு இருந்தும் இலங்கைத் தேர்தல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  ஆனால் 5% ஆதரவு கூட இல்லாத தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து அதைச் சிதைக்கும் சீமானின் கட்சிக்கு சிறு துரும்பும் பிரச்சாரத்திற்கு தேவை என்பதைப் புரிந்துகொள்கின்றேன்.😁

  • Replies 222
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து அதைச் சிதைக்கும் சீமான்

இக்கூற்றை விளக்க முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

இக்கூற்றை விளக்க முடியுமா? 

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

முதன்மைக் கொள்கைகள்

1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!

2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!

3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!
அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட
போராடுவதே நமது இலட்சியம்!

4)தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!

5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.

6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்!

7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம்! தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம்!

8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்!

9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்!

10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்!

11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம்! சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம்! சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!

12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல! – அதை அடைவது பிறப்புரிமை! – அதற்காகப் பாடுபடுவோம்!

13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!

14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி! வழக்காடு மொழி!
தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு!

15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்!

16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது! ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது!

17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம்! கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்

18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்!

19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்!

20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம்! கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்!

21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்!

22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம்! அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்!

23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்!
(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.

24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்!

25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம்! நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்!

26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்!

https://www.naamtamilar.org/policies/

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம்

ஆக, தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளலாம் என்பது இனவாதமாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 50 வருடங்களாக தமிழரில்லாத ஒரு குடும்பம் ஆள்வதும், இன்னும் இன்னும் தமிழன் பிந்தள்ளப்பட்டு மராட்டியனும், தெலுங்கனும் ஆள எத்தனிப்பதும் தவறில்லையென்று சொல்கிறீர்கள். சரி, யார் ஆட்சி செய்தாலும் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா? அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே? ஆந்திராவும், கேரளமும், கர்நாடகமும் அந்தந்த நாட்டு இன மக்களாலேயே ஆளப்படும்போது தமிழகத்தினை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவாதமாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

முதன்மைக் கொள்கைகள்

உடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிமொழி

நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளைத் தொடங்கும் முன் தவறாமல் மேற்கொள்ளவேண்டிய அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி

அ.அகவணக்கம்

தாயக விடுதலைக்காக, உயிர்நீத்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும் இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம்.

ஆ.வீரவணக்கம்

நம் மொழி காக்க, இனம் காக்க
நம் மண் காக்க, மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்!

இ.உறுதிமொழி

மொழியாகி, எங்கள் மூச்சாகி,
முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி!
வழிகாட்டி, எம்மை உருவாக்கும்
தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!
விழிமூடித் துயில்கின்ற
வீரவேங்கைகள் மீதும் உறுதி
இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்!
உறுதி! உறுதி!
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை!
கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை!
வென்றாக வேண்டும் தமிழ்!
ஒன்றாக வேண்டும் தமிழர்!
தமிழால் இணைந்து
நாம் தமிழராய் நிமிர்வோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!

naam-tamilar-katchi-uruthimozhi-seeman-2018.jpg

கொடிப்பாடல்:

நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று தலைநிமிர்ந்து
பறக்குது புலிக்கொடி

நாற்றிசை உலகும் போற்றி மெய்சிலிர்க்கத்
தழைக்குது தமிழ்க்குடி

பறக்குது பறக்குது புலிக்கொடி
சிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)

மானமுயிர் மூச்சாய்
வீரம் புயல் வீச்சாய்
வாழும் தமிழ் மாந்தர் குலக்கொடி
தேனினும் இனிய தமிழ் மொழியும்
தமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி

சோழன் கடற்படைக் கப்பல்கொடி
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி (சோழன்)
கொடுமை ஆயிரம்? குமுறல் ஆயிரம்
அடிமைநிலை வாழ்வில் இனியுமா?

படைகள் ஆயிரம், தடைகள் ஆயிரம் – படினும்
எங்கள் மண் படியுமா?

பறக்குது பறக்குது புலிக்கொடி
சிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)

புலிக்கொடி வணங்கி நாம் துடித்தெழுவோம்!
புயலாய், நெருப்பாய் வெடித்தெழுவோம்!

10 minutes ago, கிருபன் said:

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

2 minutes ago, கிருபன் said:

உடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.

நன்றி, நினைத்தேன் வாசிக்கவில்லையோ என்று

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

வந்தேறிகள் மீதான வெறுப்பு

இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அந்த மாநிலத்தவரைச் சாராத ஒருவர், அல்லது வேற்று மாநிலத்தவர் ஆட்சிசெய்ததை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? ஆனால் தமிழகத்தில் தமிழர் முதலமைச்சராக இறுதியாக வந்தது எப்போதென்று நினைக்கிறீர்கள்? 

ஆக, தமிழகத்தை தமிழர் ஆளவேகூடாதெனும் முடிவிற்கு வருகிறீர்கள். 

மற்றைய இனத்தவர்கள் தமிழகத்திற்கு வருவதை அவர் ஆட்சேபிக்கவில்லையே? எவரும் வாருங்கள், வாழுங்கள், ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்கிறார். அதில் தவறென்ன இருக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

ஆக, தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளலாம் என்பது இனவாதமாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 50 வருடங்களாக தமிழரில்லாத ஒரு குடும்பம் ஆள்வதும், இன்னும் இன்னும் தமிழன் பிந்தள்ளப்பட்டு மராட்டியனும், தெலுங்கனும் ஆள எத்தனிப்பதும் தவறில்லையென்று சொல்கிறீர்கள். சரி, யார் ஆட்சி செய்தாலும் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா? அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே? ஆந்திராவும், கேரளமும், கர்நாடகமும் அந்தந்த நாட்டு இன மக்களாலேயே ஆளப்படும்போது தமிழகத்தினை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவாதமாகத் தெரிகிறது.

இதைப்பற்றி பல இடங்களில் விவாதித்தாயிற்று ரஞ்சித். தமிழ்நாட்டில் யார் ஆள்வது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கின்றார்கள். தமிழன் ஆளவேண்டும் என்று சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் தெலுங்கர், கன்னடரை வெறுக்கவைக்கும் பேச்சுக்கள் இனவாதம்தான்.

மேலும் தற்போது ஆள்பவர் சுத்தமான தமிழர்தானே😀

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா அந்த பூட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

நன்றி, நினைத்தேன் வாசிக்கவில்லையோ என்று

சீமானின் தம்பி உடையார் பாய்ந்து பாய்ந்து ஒட்டுகின்றார். இலங்கைத் தேர்தலுக்குள்ளும் சீமானின் பிரச்சாரம் முக்கியம் என்பது தெரியும்😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

மேலும் தற்போது ஆள்பவர் சுத்தமான தமிழர்தானே

அது நல்ல விடயம் தானே?

1 minute ago, கிருபன் said:

ஆனால் தெலுங்கர், கன்னடரை வெறுக்கவைக்கும் பேச்சுக்கள் இனவாதம்தான்

அவர் இந்த இனங்களை இலக்குவைத்துத் தாக்குவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், கருனாநிதியின் குடும்பம் நன்றாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, தெலுங்கு வம்சாவளி அரசியல்வாதிகளும், திராவிட இயக்கங்களின் பின்புலத்தில் இயங்கும் தெலுங்கு வம்சாவளியினரும் குறிவைக்கப்படுவதை மறுக்கவில்லை.

4 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டில் யார் ஆள்வது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கின்றார்கள்

இதுகூட ஒரு வரையறைக்குள்தான் கிருபன். பணம் இதைவிடப் பலமடங்கு பலத்தினை தேர்தலில் செலுத்துகிறது. இதைவிடவும், பரம்பரை பரம்பரையாக நடிகர்களை வழிபடும் சமூகம் விழித்துக்கொண்டு, உண்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை பின்பற்றுவது என்பது பல ஆண்டுகள் எடுக்கக் கூடியது. சீமான் இப்போது செய்வது அம்மக்களை தெளிவூட்டி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

சீமானின் தம்பி உடையார் பாய்ந்து பாய்ந்து ஒட்டுகின்றார். இலங்கைத் தேர்தலுக்குள்ளும் சீமானின் பிரச்சாரம் முக்கியம் என்பது தெரியும்😂

களப்பணி அடிமட்ட தொண்டனுக்கு அவசியம் 👍

இலங்கையில் தேர்தல் நடந்ததா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அப்படி என்னதான் செய்துவிட்டதாகப் புலம்புகிறீர்கள்? ஒரு துரோகியைத் தலைவனாக வரிந்துகொண்டு உலா வருகிறீர்கள். இதில ஏதோ மற்றையவர்களை வென்றுவிட்டதாக வீர வசனம் வேறு. உங்களின் சேட்டைகள் எல்லாம் பார்த்தாயிற்று, புதிதாக இருந்தால் சொல்லுங்கள் கேட்கலாம். 

எனக்கும் உங்கள் அலப்பறைகள் எல்லாம் அலுத்து விட்டது ...புதுசாய் முயற்சி செய்யுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

அதோட இவர் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்ன சிறீதரன் விருப்பு வாக்கில் முதலிடம், பிள்ளையான் வேற முதலிடம்.

மக்கள் இவர் சொன்னதை அப்படியே செய்திட்டினம் பாருங்கோ. 😝

விக்கியர் வெளியே என்று திண்ணையில் பீத்தின நீங்களா அண்ணே இப்படியும் எழுதினது. நம்பவே முடியவில்லை 

FBA1-EABD-0106-49-F6-A97-D-48185-AB98373

நல்லா செய்யுறாங்களப்பா 😀😀😀

எண்ட அக்காவை கலாய்க்க, எழுதினா, ஏதோ, நியூட்டன் சூத்திரத்தில பிழை எண்டு  நிருபிக்கிற மாதிரி வந்து மூக்கை நுழைக்கிறியள் முதல்வரே. 🤦‍♀️

முதலாவது, சீமான், நால்வர் பெயரை தான் குறிப்பிட்டார். அதில் ஸ்ரீதரன் இல்லை. தனக்கென ஒரு ஆதரவு தளத்தினை வைத்திருக்கும் டக்லஸ் வெல்லுவார்  என்று சீமானுக்கு தெரியாதா என்ன?

இரண்டாவது, நான் விக்கியர் குறித்து சொன்ன போது, பொது தளத்தில், முன்னிலையில் இருப்பதாக பேசப்பட்டவர்கள், மூவர், அதில் விக்கியர் இல்லை. முக்கியமாக சுமந்திரனும் இல்லை. 

கஜேந்திரகுமார் வெல்லுவார், விக்கியர் வெல்லுவார் என்று, அப்போதிருந்த தகவல் படி யாருக்குமே தெரியாது. 

மகிந்தாவின் வேலையால் தான், வடக்கில், போர்க்குற்ற விசாரணையினை நீர்த்துப்போக சுமந்திரனும், கிழக்கில் முஸ்லிம்களின் பலத்தினை குறைக்க பிள்ளையானும் வென்றார்கள் என்று சொல்வதும், அம்மான் வெற்றி, அவரது தேவையில்லாத 3000 ராணுவத்தினை அழித்த புலுடா கதையினால் அவிந்து போனதாக சொல்வதும் நானல்ல, முதல்வரே.  :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தமிழகத்து கட்சி அதுவும் சீமானோடு இவர்கள் நற்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே இலங்கையரசு இவர்களை இல்லாமல் அழித்து  விடும்.
கஜா கூட்டணி இப்படி பட்டவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யாமல் தங்களாவே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
சீமானை நம்பி நடுத் தெருவில் நிக்காமல் பக்சேகளுடன் சேர்ந்து தமது மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பது நல்லது 
 
இல்லாது ஒழிப்போம் என்று கூறியது நீங்கள். இலங்கை அரசு அல்ல. எனது கேள்வி உங்களுக்கானது சிறீலங்கா அரசிற்கு அல்ல. 

ஏன் இல்லாது ஒழிப்போம் என்று கூறினீர்கள் ?

இராஜபக்சேக்களுடன் நின்றால் உரிமை கிடைக்காது. பிச்சைதான் கிடைக்கும். பிச்சை என்பது இரந்து பெறுவது. உரிமைக்கும் யாசகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியாததல்ல. 

உரிமையை எங்காவது பிச்சை போட்டதுண்டா ? 

(இராசபக்ச தனக்கு விருப்பமானவர்களுக்கு உயர்தட தென்னஞ் சாராயம்தான் பிச்சை போடுவார். சில வேளைகளில் இது உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்😀)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

என்னை பொறுத்த வரை இந்தியா சார்பு நிலை , அதுவும் சீமானோடு தொடர்பு என்றால் இலங்கையரசியலில் நிலைத்து நிற்க முடியாது...இவர்கள் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மக்களுக்கு ஏதாவது தங்களால் முடிந்த அளவு செய்ய வேண்டும்...பக்க சார்பு நிலை எடுப்பதை விட்டு சுயமாய் இயங்கினால் இவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு  

பக்சேக்களது அரசியல் என்பது நீண்ட காலத்தினை அடிப்படையையாய் கொண்டது ...அவர்களது நோக்கம் ஒரு பிரச்சனையும் இல்லை ...எல்லாரும் இந்த நாட்டு மன்னர்களே என்று நிறுவது.
நான் சொல்வதும் அதைத் தான் ...அவர்களோடு சேர்ந்து ,எமது பலத்தை  நிரூபித்து பின்னர் கொஞ்சம்  ,கொஞ்சமாய் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வது ..எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று போட்டி போடாமல் அவர்களை மாதிரியே உறவாடி கவிழ்ப்பது 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நன்றி 🙂

4 hours ago, ரதி said:

நான் தொடங்க தேவையில்லை அண்ணா ...எழுதி வைத்து கொள்ளுங்கள் இங்கு யாழில் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் புகழ் பாடும் அனைவரும் இன்னும் ஐந்து வருடத்துக்குள் அவர்களை துரோகி என்று சொல்லாட்டில் 🙂

அவர்களை மட்டுமல்ல, விக்கியையும் துரோகி என்று சொல்லும் காலம் தூரத்தில் இல்லை. சரியாக சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம்

வந்தேரிகளாக உள்ள நீங்கள் அதிகாரத்தில் ஏறி தங்கள் இனத்தை தூக்கி பிடிக்க வந்தேரியாக இருக்கும் நாட்டின் வரலாறை தங்களின் வரலாறு என்றும் கூற முனைகிறீர்களா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Robinson cruso said:

அவர்களை மட்டுமல்ல, விக்கியையும் துரோகி என்று சொல்லும் காலம் தூரத்தில் இல்லை. சரியாக சொன்னீர்கள்.

சம்பந்தன் 40 வருடங்களாக எதுவும் செய்யவில்லை.துரோகியாக்கப்பட்டார்.சுமந்திரன் 10 வருடங்களாக எதுவும் செய்யவில்லை துரோகியாக்கப்பட்டார். இதனால் கட்சி பேதமின்றி புது முகங்களை முன்னிறுத்துவதை என்னைப்போன்றவர்கள் வரவேற்றார்கள். இந்த புதியவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. அடுத்த 4 வருடங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.  எதுவும் இல்லையேல் நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் துரோகிகள் தான். சந்தேகமேயில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் கொஞ்ச நேரம் கொடுத்துத்தான் பார்ப்போமே.. 

எதுக்கு முன் முடிவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்...

துரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது...

உரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...

Just now, மியாவ் said:

எழுபது வருடமாக என்ன இசைந்த கொடுத்தோம்? போராடித்தான் பார்த்தோம். இப்ப மட்டும் என்ன ஆட்சியா செய்கிறோம். எதோ எலும்புத்துண்டன்று பிச்சையாக மாவடட சபை, மாகாண சபை எண்டு எதையோ ஒரு சிறிய துண்டை  போடடான். அதையே கையாளத்தெரியாதவனுக்கு எதுக்கு அதிகாரம்? இப்பவே அடுபிடி. அதிகாரம் கிடைத்தால், குரங்கின்  கையில் பூமாலை கொடுத்தமாதிரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

மற்றைய மாநிலங்களில் நடப்பதை கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.