Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.! - சுமந்திரன்

sumow.jpg

நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் .

யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனி நான் கள்ளவாக்கால்தான் வென்றேன் என சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். நாளை முதல் யாராவது துணிவிருந்தால் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக சொல்லட்டும்.

அவர்கள் அதற்குரிய விளைவை சந்திப்பார்கள்.  நான் கள்ளவாக்கினால் வென்றேன் என்பவர்கள் தாராளமாக வழக்கு தாக்கல் செய்யலாம். நான் அரச உத்தியோகத்தர்களின் நேர்மையை சந்தேகிக்கவில்லை.

எனக்கு எதிராக யாரும் வழக்கு தாக்கல் செய்தால், நான் எனது வாக்கை மீள எண்ண சம்மதம் தர தயாராக இருக்கிறேன். எனது வெற்றி நேர்மையானது. அதனால் மீள வாக்கு எண்ணுவதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

https://vanakkamlondon.com/world/2020/08/80517/

  • Replies 123
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளவாக்கு சுமந்திரனுக்கு சுத்துமாத்து சுமந்திரனுக்கு உண்மையை சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். அதுக்காக.. மக்கள் உண்மையை பேசாமல் இருக்க முடியாது தானே.

இதென்ன ஸ்கூலா.. ரீச்சர் ரீச்சர்.. அவர் என்னை கள்ளவாக்கு.. என்று கூப்பிடுறார் ரீச்சர் என்று சொல்லி அழ.

நீங்க கள்ளவாக்கால்.. பின்கதவால் வரவில்லை என்றால்.. அதற்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து உங்களை விடுவிக்கும் வகையில்.... குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு அவை போலி என்று ஒரு வெளிப்படையான விசாரணையின் மூலம் நிரூபியுங்கள். அதைவிட்டிட்டு..??! இப்படியான அச்சுறுத்தல் தானா கறையபடியாத சட்டாம்பி சனநாய் அகம். 

Edited by nedukkalapoovan

இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கேட்டிருப்பார்கள், இல்லாவிட்ட்தால் நீதிமன்றம் சென்றிருப்பார்கள். இவர்களுக்கு தெரியும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு போனால் அவுட் என்று.

எனவே சுமந்திரன் எடுத்து நல்ல தீர்மானம். இவர்களை கோட்டுப்படிக்கு ஏத்தினாலதான் குறைந்தது பொய் சொல்லுவதையாவது நிறுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இவர்களை கோட்டுப்படிக்கு ஏத்தினாலதான் குறைந்தது பொய் சொல்லுவதையாவது நிறுத்துவார்கள்.

ஆமாம் உண்மை முக்காலும் உண்மை. அதுவும் அனுராதபுரக் கோட்டுக்கு ஏத்தினால் வாழ்க்கையிலேயே பொய்சொல்ல மாட்டார்கள். 

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

Just now, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அது உண்மையாக இருக்குமாக இருந்திருந்தால் நிச்சயமாக மீள் வாக்கெண்ணிக்கைக்கு கேட்டிருப்பார்கள். இதிலிருந்தே உண்மை வெளிப்படுகின்றது. இவர்களது நோக்கமெல்லாம் ஒருவரை அவமானப்படுத்த வேண்டுமேயொழிய வேறொன்றுமில்லை. அது அதிக நாட்களுக்கு செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஏன் தன்னை மட்;டும் கள்ள வாக்கு என்டு சொல்கிறார்கள் என்டு யோசிக்க வேணும்.

Just now, சுவைப்பிரியன் said:

முதலில் ஏன் தன்னை மட்;டும் கள்ள வாக்கு என்டு சொல்கிறார்கள் என்டு யோசிக்க வேணும்.

யாரும் யாரையும் எப்படியும் சொல்லலாம். அவர்களிடம் உள்ள ஆதங்கத்தால் , தங்கள் அப்படி தோற்றுவிட்டொமே என்பதால் அப்படி சொல்லலாம். அரசியல் காரணங்களுக்காக சொல்லலாம். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிடடாள் யார் பொய்யர் எண்டு தெரியவரும். சில வேளைகளில் கோட்டுப்படியும் ஏறவேண்டி வரும். அப்போது  தெரியும் யார் உசார் மடையர்கள் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கணவர்களை இழந்த குடும்பத்தலைவிகளுக்கு புனர்வாழ்வுக்கு என்று கனடாவில் வாங்கிய உதவி காசை கணக்கு கேட்டால் கணக்கு காட்ட வேணும் மாறாக கணக்கு கேட்ட அவரது கட்சியை சேர்ந்த மகளிர் சங்கத்தலைவி மீது 100 கோடி மான நஷ்ட்ட வழக்கு தாக்கல் செய்த சுமத்திரன் எடுத்தது கெல்லாம் வழக்கு போடுவார் என்பது தெரியாதா ?

கள்ள வாக்கின் மூலம் வென்றவர் அதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்குத்தான் இருக்கு அதைவிட்டு வழக்கு தாக்கல் செய்வன்  என்று சொல்வது அதுக்கு வக்காலத்து வேண்டுவதும் கேவலம் என்பதை உணரமுடியாத  மனித இனம் பூமியில் வாழ்வது வெட்கக்கேடான விடயம் .

கள்ளவாக்கு சுமத்திரன் மீது  நாளை கேட்கப்படும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாது விட்டால் தன்னை மான நஷ்ட்ட படுத்தி விட்டார் எதிராளி என்று வழக்கு போட்டாலும் போடுவார் இந்த கள்ள வோட்டு சுமத்திரன் .

15 minutes ago, Robinson cruso said:

சில வேளைகளில் கோட்டுப்படியும் ஏறவேண்டி வரும். அப்போது  தெரியும் யார் உசார் மடையர்கள் எண்டு.

உங்கடை வெருட்டல்கள் இனி எடுபடாது .

Just now, பெருமாள் said:

கணவர்களை இழந்த குடும்பத்தலைவிகளுக்கு புனர்வாழ்வுக்கு என்று கனடாவில் வாங்கிய உதவி காசை கணக்கு கேட்டால் கணக்கு காட்ட வேணும் மாறாக கணக்கு கேட்ட அவரது கட்சியை சேர்ந்த மகளிர் சங்கத்தலைவி மீது 100 கோடி மான நஷ்ட்ட வழக்கு தாக்கல் செய்த சுமத்திரன் எடுத்தது கெல்லாம் வழக்கு போடுவார் என்பது தெரியாதா ?

கள்ள வாக்கின் மூலம் வென்றவர் அதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்குத்தான் இருக்கு அதைவிட்டு வழக்கு தாக்கல் செய்வன்  என்று சொல்வது அதுக்கு வக்காலத்து வேண்டுவதும் கேவலம் என்பதை உணரமுடியாத  மனித இனம் பூமியில் வாழ்வது வெட்கக்கேடான விடயம் .

கள்ளவாக்கு சுமத்திரன் மீது  நாளை கேட்கப்படும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாது விட்டால் தன்னை மான நஷ்ட்ட படுத்தி விட்டார் எதிராளி என்று வழக்கு போட்டாலும் போடுவார் இந்த கள்ள வோட்டு சுமத்திரன் .

உங்கடை வெருட்டல்கள் இனி எடுபடாது .

அப்போ கோட்டு, நீதிபதி, சடடதரணி எல்லாம் அழகு பார்க்கவா வைத்திருக்கிறார்கள்? நீங்கள் பொய் சொல்லுவீர்கள், மற்றவர்களை அவமானப்படுத்துவீர்கள் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

நீங்கள் உங்களை நிரபராதி என்று நிரூபிக்கவும் மாடடீர்கள், மத்தவனை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டாமென்றும்  கூறுவீர்கள். எங்கே படித்தீர்கள் இந்த சடடமெல்லாம்? எல்லாரயும் ஏமாத்தலாம் எண்டு நினைக்க வேண்டாம்.

உங்களால், அல்லது நீங்கள் வக்காலத்து வாங்குபவர்களால் முதலில் நிரபராதி என்று நிரூபிக்க முயட்சியுங்கள். சும்மா பொய் சொல்லி ஏமாத்தலாமெண்டு நினைக்காதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பழுத்த அங்கிள் ஒருவரிடம் உதைப்பற்றி கேட்டேன்  ,ஆள் JPO,SPO என்று  தேர்தல் விடயங்களை கரைத்து குடித்த பேர்வழி , அவரது கூற்றுப்படி அதிகாரிகளும் முகவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் விருப்பு வாக்கில் செமையாக ஜில் மார்ட் காட்டலாமாம், அதாவது கட்சிக்கு மட்டும் ,மற்றும் ஒரு விருப்பு இலக்க  புள்ளடி ,மற்றும் இரு விருப்பு இலக்கங்களை மட்டும் புள்ளடியிட்டிருக்கும் வாக்குசீட்டுகளை அபேஸ் பண்ணினால் மெதுவாக சுத்துமாத்தின் இலக்கத்தில் புள்ளடியை இட்டுவிட்டு என்ன வேண்டியதுதான், அதற்க்கு பிறகு எத்தனை முறை மீள எண்ணினாலும் அது அவரது விருப்பு வாக்குத்தான், அந்த தைரியத்தில் தான் சுத்துமாத்திரன் சுழண்டடிக்கிறார்       

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கள்ளன் எண்டு கத்துவோம்,  அதை தடுக்க சுமந்திரன் யார்? இலங்கை சனநாயக குடியரசில் அதற்கு கூட உரிமையில்லையா?. நாங்களெல்லாம் சுயமமாக சிந்திக்க தெரியாத வீசில்லடிச்ச்சான் குஞ்சுகள்.   

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எனது கருத்துக்கு மறுப்பு கருத்து இடுவது உங்கள் உரிமை அதை யாரும் மறுக்க முடியாது .கணக்கு கேட்டால் கணக்கு காட்டுவதில் என்ன சிக்கல் ?

உங்கள் கைகள்  சுத்தம் என்றால் நென்சில்  தில்  இருந்தால் மறுவாக்கு  பதிவுக்கு கோரிக்கைக் விட்டு இருக்கணும் அதைவிட்டு ஆகாசத்தில் போன காக்க கள்ளவோட்டு சுமத்திரனின் வெள்ளைச்சட்டை மீது ஆய் போனாலும் வழக்கு போடுவம்  என்று கோரஸ் பாடக்கூடாது .

பாதிக்கப்படடவந்தான் சடடத்தை நாடுவான் உண்மையாக இருந்தால். இல்லாவிடடாள் இப்படியான பேய்காட்ட்டால்  கதைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

நாங்கள் கள்ளன் எண்டு கத்துவோம்,  அதை தடுக்க சுமந்திரன் யார்? இலங்கை சனநாயக குடியரசில் அதற்கு கூட உரிமையில்லையா?. நாங்களெல்லாம் சுயமமாக சிந்திக்க தெரியாத வீசில்லடிச்ச்சான் குஞ்சுகள்.   

கள்ளன் வேட்டியை அவுட்டு போட்டு போடா கள்ளா  என்று சொன்னால் சுமத்திரன் கைகள்  சுத்தமெண்டால் பொத்திக்கொண்டு அமைதியாய் போவதுதானே ?

உண்மை என்னவென்றால் இப்படி கஷ்ட்பட்டு கள்ளவோட்டு மூலம் வென்றும் பலனில்லை காரணம் மகிந்த அரசு எடுத்த மூன்றில் இரண்டு அங்கு சம்மியின் அலறல் காது  குடுத்து கேட்க முடியலை முதலில் புதிய அரசுக்கு ஆதரவு கொடுப்பம் என்றார்  கொழும்பு அமைதியாகவே இருந்தது வந்த பங்களா பறி போக போவுது என்றவுடன் இன்று சர்வதேசம் எங்களுடன் இருக்கு ஏதோ  வெருட்டெல்லாம் இன்று காலையில் அவங்கள்  சிரிச்சு போட்டு மற்ற வேலையை பார்க்க போய்  விடுவார்கள் அதே கதைதான் சும்முக்கும் அந்த கடுப்பில் தனக்குத்தான் சட்டம் தெரிந்தது போல் வழக்குகள் அராஜகமாக  போட்டு கொண்டு இருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

கள்ளவாக்கு சுமந்திரனுக்கு சுத்துமாத்து சுமந்திரனுக்கு உண்மையை சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். அதுக்காக.. மக்கள் உண்மையை பேசாமல் இருக்க முடியாது தானே.

இதென்ன ஸ்கூலா.. ரீச்சர் ரீச்சர்.. அவர் என்னை கள்ளவாக்கு.. என்று கூப்பிடுறார் ரீச்சர் என்று சொல்லி அழ.

நீங்க கள்ளவாக்கால்.. பின்கதவால் வரவில்லை என்றால்.. அதற்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து உங்களை விடுவிக்கும் வகையில்.... குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு அவை போலி என்று ஒரு வெளிப்படையான விசாரணையின் மூலம் நிரூபியுங்கள். அதைவிட்டிட்டு..??! இப்படியான அச்சுறுத்தல் தானா கறையபடியாத சட்டாம்பி சனநாய் அகம். 

அந்த மனிதன் களவாகப் போடப்பட்ட வாக்குகளால்தான் வென்றார் என்பவர்கள் ஏன் நீதிமன்றை நாடக்கூடாது.🤔

அதனைச் செய்யாமல் கூக்குரலிடுபவர்கள் எல்லோருமே ஊரில் மதகுகளின் மேலிருந்தும் வாசகர்சாலைச் சுவர்களின் மேலிருந்தும் போவோர் வருவோருக்கு கூக்க்குரலிட்டு (கூவடித்தல்)  நையாண்டி செய்யும் வெற்றுப்பயல்களின் செயல்களிற்கு ஈடானவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து ☹️

3 hours ago, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

வீதி வீதியாக அழுது புலம்புவதற்குத்தான் எமது தலைமைகள் என்போர் தகுதியானவர்கள் 😏

2 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் ஏன் தன்னை மட்;டும் கள்ள வாக்கு என்டு சொல்கிறார்கள் என்டு யோசிக்க வேணும்.

இதில் என்ன யோசிக்க வேண்டியுள்ளது. நாங்களேல்லோரும் நாகரீகமடைந்த இனத்தின் உறுப்பினர்கள் அல்லவா 😀 சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும். 

அதனால் அந்த மனிதன் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் போலும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

12 minutes ago, Kapithan said:

அந்த மனிதன் களவாகப் போடப்பட்ட வாக்குகளால்தான் வென்றார் என்பவர்கள் ஏன் நீதிமன்றை நாடக்கூடாது.🤔

உண்மையிலேயே இது நையாண்டி இல்லையா?

நீதி அரசை கையாளும் பாராளமன்ற தேர்தலிலேயே மோசடி 
இதைப்போய் நீதிமன்றில் கேட்க சொல்கிறீர்களே 
வடிவேலு மாதிரி தெரியவில்லையா?

வழக்குப்போட்டு நீதிமன்று போனவுடன் 
ஓ ஓகே நீதிக்கு வந்திருக்கிறீர்களா உள்ள வாங்கோ 
என்று கூப்பிட்டு நீதிவழங்கும் நாடகவா இலங்கை இருக்கு? 

சுமந்திரனை கொண்டுவந்ததே சிங்களவன். 

தமிழ்ப்படங்களில் 
பாலியல் துன்புறுத்தலுக்கு வில்லனின் மகனால் பாதிக்க படடவரை 
மகனின் தந்தையான பெரிய வில்லனிடம் போக சொலவதுபோல் இருக்கு 

யாராவது புத்தி இருக்கிறவன் போவானா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஊரில் பழுத்த அங்கிள் ஒருவரிடம் உதைப்பற்றி கேட்டேன்  ,ஆள் JPO,SPO என்று  தேர்தல் விடயங்களை கரைத்து குடித்த பேர்வழி , அவரது கூற்றுப்படி அதிகாரிகளும் முகவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் விருப்பு வாக்கில் செமையாக ஜில் மார்ட் காட்டலாமாம், அதாவது கட்சிக்கு மட்டும் ,மற்றும் ஒரு விருப்பு இலக்க  புள்ளடி ,மற்றும் இரு விருப்பு இலக்கங்களை மட்டும் புள்ளடியிட்டிருக்கும் வாக்குசீட்டுகளை அபேஸ் பண்ணினால் மெதுவாக சுத்துமாத்தின் இலக்கத்தில் புள்ளடியை இட்டுவிட்டு என்ன வேண்டியதுதான், அதற்க்கு பிறகு எத்தனை முறை மீள எண்ணினாலும் அது அவரது விருப்பு வாக்குத்தான், அந்த தைரியத்தில் தான் சுத்துமாத்திரன் சுழண்டடிக்கிறார்       

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் பிரசன்னமாயிருப்பர் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எல்லோரும் குறட்டை விட்டுக்கொண்டா இருந்தார்கள் என்றொரு கேள்வி எழுமல்லவா ? அதற்கான பதில் என்ன 😀

(அதிகாரிகளும் இதற்கு உடந்தை என்று கூறுகிறீர்கள் என்பதை மனதிலிறுத்துங்கள் ☹️)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன டவுட்டு 
ஐயாவை வெள்ளை வாக்கு சுமந்திரன் என்று அழைக்கலாமா?
அதில் குடிமன்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் எதிர்ப்பை பார்த்து ஒருவர் கூறியிருக்கிறார், நீங்கள் தோற்றுவிடுவீர்கள் என்று, அப்போது ஐயா சொல்லியிருக்கிறார் உறுதியாக வெல்வேன் என்று!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

உண்மையிலேயே இது நையாண்டி இல்லையா?

நீதி அரசை கையாளும் பாராளமன்ற தேர்தலிலேயே மோசடி 
இதைப்போய் நீதிமன்றில் கேட்க சொல்கிறீர்களே 
வடிவேலு மாதிரி தெரியவில்லையா?

வழக்குப்போட்டு நீதிமன்று போனவுடன் 
ஓ ஓகே நீதிக்கு வந்திருக்கிறீர்களா உள்ள வாங்கோ 
என்று கூப்பிட்டு நீதிவழங்கும் நாடகவா இலங்கை இருக்கு? 

சுமந்திரனை கொண்டுவந்ததே சிங்களவன். 

தமிழ்ப்படங்களில் 
பாலியல் துன்புறுத்தலுக்கு வில்லனின் மகனால் பாதிக்க படடவரை 
மகனின் தந்தையான பெரிய வில்லனிடம் போக சொலவதுபோல் இருக்கு 

யாராவது புத்தி இருக்கிறவன் போவானா? 

ஆக,

நாங்கள் புழுதி வாரித் தூற்றிக்கொண்டே இருப்போம். உருப்படியாக எதனையும் செய்யமாட்டோம். 

😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனது கருத்துக்கு மறுப்பு கருத்து இடுவது உங்கள் உரிமை அதை யாரும் மறுக்க முடியாது .கணக்கு கேட்டால் கணக்கு காட்டுவதில் என்ன சிக்கல் ?

உங்கள் கைகள்  சுத்தம் என்றால் நென்சில்  தில்  இருந்தால் மறுவாக்கு  பதிவுக்கு கோரிக்கைக் விட்டு இருக்கணும் அதைவிட்டு ஆகாசத்தில் போன காக்க கள்ளவோட்டு சுமத்திரனின் வெள்ளைச்சட்டை மீது ஆய் போனாலும் வழக்கு போடுவம்  என்று கோரஸ் பாடக்கூடாது .

சுமந்திரன் கையாடல் செய்துவிட்டார் என்கிறீர்கள். வாக்கு மோசடி செய்துவிட்டார் என்கிறீர்கள்.

குற்றம் சாட்டுபவர்தான் அதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் என்பது நீதிமன்ற நடைமுறை. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில்தான் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். 

உங்கள் கூற்றுப்படி சுமந்திரன் ஒரு பயங்கரவாதி 

😂😂

1 hour ago, பெருமாள் said:

கள்ளன் வேட்டியை அவுட்டு போட்டு போடா கள்ளா  என்று சொன்னால் சுமத்திரன் கைகள்  சுத்தமெண்டால் பொத்திக்கொண்டு அமைதியாய் போவதுதானே ?

உண்மை என்னவென்றால் இப்படி கஷ்ட்பட்டு கள்ளவோட்டு மூலம் வென்றும் பலனில்லை காரணம் மகிந்த அரசு எடுத்த மூன்றில் இரண்டு அங்கு சம்மியின் அலறல் காது  குடுத்து கேட்க முடியலை முதலில் புதிய அரசுக்கு ஆதரவு கொடுப்பம் என்றார்  கொழும்பு அமைதியாகவே இருந்தது வந்த பங்களா பறி போக போவுது என்றவுடன் இன்று சர்வதேசம் எங்களுடன் இருக்கு ஏதோ  வெருட்டெல்லாம் இன்று காலையில் அவங்கள்  சிரிச்சு போட்டு மற்ற வேலையை பார்க்க போய்  விடுவார்கள் அதே கதைதான் சும்முக்கும் அந்த கடுப்பில் தனக்குத்தான் சட்டம் தெரிந்தது போல் வழக்குகள் அராஜகமாக  போட்டு கொண்டு இருக்கிறார் .

நான் உங்களைக் கள்ளன் வேட்டியை அவிழ்த்துப்போட்டுப் போடா என்று கத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் 😀

அமைதியாகப் போவீர்கள் என்றால் நீங்கள் கூருவது சரி 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சுமந்திரன் கையாடல் செய்துவிட்டார் என்கிறீர்கள். வாக்கு மோசடி செய்துவிட்டார் என்கிறீர்கள்.

குற்றம் சாட்டுபவர்தான் அதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் என்பது நீதிமன்ற நடைமுறை. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில்தான் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். 

உங்கள் கூற்றுப்படி சுமந்திரன் ஒரு பயங்கரவாதி 

😂😂

இங்கு குற்றம் சாட்டுபவர் ஒரு அபலைப்பெண்மணி .தட்டிப்பறிக்கும் அண்டாம்காக்கை கூட கருணை இருக்கும் இங்கு கள்ளவாக்கு சுமத்திரனுக்கு அது கூட கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இங்கு குற்றம் சாட்டுபவர் ஒரு அபலைப்பெண்மணி .தட்டிப்பறிக்கும் அண்டாம்காக்கை கூட கருணை இருக்கும் இங்கு கள்ளவாக்கு சுமத்திரனுக்கு அது கூட கிடையாது .

அபலைப் பெண் என்பதா அல்லது மோசடி என்பதா விவாதத்திற்கான புள்ளி 🤔

மோசடி நடைபெற்றிருக்கிறது என்று அவர் கருதினால் உடனடியாகவே அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் ச்ரியான அணுகுமுறை. அவரின் மகளும் சட்டத்துறையிலிருப்பவர். நாங்கள் அறிவுரை கூறவேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நான் உங்களைக் கள்ளன் வேட்டியை அவிழ்த்துப்போட்டுப் போடா என்று கத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் 😀

அமைதியாகப் போவீர்கள் என்றால் நீங்கள் கூருவது சரி 🤔

நான் ஒரு அபலைப்பெண்ணின் வாக்குகளை களவெடுக்கவில்லையே ?

அப்படி யாராவது  சொன்னால் என் கைகள் சுத்தம் என்று அவ்விடத்திலே மறுபடியும் எண்ணி நிரூபித்து இருப்பன் .

எல்லாவற்றிக்கும் மேல் மிகவும் முக்கியமானது கொண்ட கொள்கையும்  சொன்ன வார்த்தையும் மாற்ற கூடாது அப்படி ஒரு கொள்கை இழப்போ அல்லது வாக்கு தவறினாலோ அதனால் பலபேர் பாதிக்கப்படுமானால் இறப்புத்தான் முடிவு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.