Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

கோசன் இந்த இடத்தில்தான் நாங்கள் எதிர்மறையாகிறோம் என்று எண்ணுகிறேன் 
இதை தமிழர்கள் சொல்லிக்காட்ட முனையவில்லை. இதைவைத்து எஞ்சிய தமிழர்களை 
ஓரம்கட்ட அவர்கள் முனைகிறார்கள் 
நாம் இங்கு  விவாதிக்க வேண்டியது இதுதான்.
இது வெறுப்பரசியல் அல்ல 
எமது இருப்புக்கு ஆன அரசியல். 

சென்ற கிழமை சென்னை ரயில்வே நிலையத்தில் தமிழ் நீக்கி 
ஹிந்தியில் போட்டு இருக்கிறார்கள்.
ஏன்? 

ஏன்?

இதற்கு முதல் யார் ? என்று கேளுங்கள்.

பாதி தெலுங்கன் அண்ணா, தெலுங்கன் கருணாநிதி, கன்னடத்தி( பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது தமிழ்நாட்டில்) ஜெ

ஆளும் போது வராத துணிவு இப்போ ஏன் வருகிறது?

ஏனென்றால் செய்பவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆள்பவர்கள் தமிழராய் இருந்தும் அவர்களுக்கு கூஜா தூக்கிகள்.

அவர்களுக்கு ராஜாஜி காலத்தில் இருந்தே இதுவே கனவு. 

ஆனால் அப்போ தமிழ் பேசுவோர் எல்லாரும் ஒரே அணியில் நின்றதால் முடியவில்லை.

இப்போ அவர்களில் 2/5 நீ தமிழனே இல்லை என ஒரு ஐந்தாம் படையை கொண்டு ஒதுக்கி, தம் பக்கம் வர வைத்து. அண்ணாமலையை இறக்கி, ரஜனியை இறக்கி, சாதிய கட்சிகளை திசைக்கொன்றாக்கி, தமிழ் பேசும் தரப்பை சிதறடித்து இதை செய்ய விழைகிறார்கள்.

இலங்கையில் பேரினவாதம் வெற்றி பெற உதவிய அதே பிரித்தாளும் உத்தி.

அவர்கள் வெல்லத்தான் போகிறார்கள்.

  • Replies 231
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

யாரும் உங்களுக்கு சான்றிதழ் தரத்தேவையில்லை மருதர்! பேசும்/எழுதும் ஒருவர் கேட்பவர்/வாசிப்பவர் புத்திசாலி என்று மரியாதை வைத்திருந்தாலே உறுதியான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டே பேச வேண்டுமென்ற நிலை வந்து விடும்! 

ஆனால், யாழில் உங்களுடைய, நாதத்தின் சில எழுத்துகள், இன்னும் சிலரின் எழுத்துகள் வாசிப்போரை முட்டாள்களக நினைத்து எழுதப் பட்டவையாகவே நான் நினைக்கிறேன். இப்போது நடக்கும் உரையாடலோடு தொடர்புடையதால் உங்களுக்கு விஜயநகர பேரரசு கதையை நினைவூட்ட விரும்புகிறேன்! திரி காவும் நோக்கம் இல்லை! 

என்ன 1350இல் இண்டிரெக்ட்டாக விஜயநகர பேரரசு

1880 மைல்களுக்கு அப்பால் ஹம்பியில் இருந்து 

இலங்கையில் ஆடசி செய்த கதையா? 

அந்த இன்ட்ரெக்ட் தியோரி Indirect Theory தலைசுத்தும் என்பதால் 
அங்கினேயே  விட்டிட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சரி முடியுமானளவு எழுதி விட்டேன். திரி வேற 1350 க்கு போய்விட்டது.

சந்திப்போம்.

பின்ன வரட்டே

(சத்தியமா மலையாளம் இல்லை, யாழ்பாண வட்டார வழக்கு நம்புங்கள்😝). 

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி பேசுபவர்கள் கவனத்துக்கு....

ஏதோ அங்கே தான் இது இருப்பது போலவும், தாங்கள் ஏதோ இனவெறியே இல்லாத நாட்டில் வாழ்வது போலவும் பீத்த வேண்டாம்.

அமெரிக்காவில் நடப்பது உலகறியும்.

சுவிஸில், சில கண்டோன்களில் ஒருவருக்கு பிரயாஉரிமை கொடுப்பதாயின், அந்த பகுதி மக்களின் வாக்களிப்பில் தான் முடியும். எந்த தோலுக்கு வாக்குகள் எதிராக விழும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

டோட்ச் வங்கியின் நிறைவேற்று செயலாளரானார் ஜெயின் என்ற இந்தியர்.

ஜெர்மனியில் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று, ஒரு டம்மியை ஜெர்மனியில் காட்டிக் கொண்டு, லண்டனில் இருந்து இந்தியர் இயங்கினார்.

பிரிட்டனில் பிரதமர் அரை யூதர், அரை இஸ்லாமியர், நிதி அமைச்சர், உள்நாட்டு, வணிக அமைச்சர் ஆகிய அரசின் முக்கிய பதிவிகளில் மூவரும் இந்தியர்கள். 

வெளிப்படையாக பொருமுகிறார்கள்.... எப்போது போரிசினை தூக்குவார்களோ தெரியாது.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டாலும், கட்சியால் கடாசப்படும் நிகழ்வுகள் அவர்களின் பழமைவாத கட்சியில் நிறையவே உண்டு. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

51qGxOFYTzL._SX331_BO1,204,203,200_.jpg

அமேசானில் $20க்கு இருக்கு வாங்கி படியுங்கள் 

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

இது ஹார்ட் கவர் என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

இது ஹார்ட் கவர் என்று எண்ணுகிறேன் 

நான் 2008 இல் வாசித்த hardback இலும் இந்த படம் இருந்ததாக நியாபகம் இல்லை.

9 minutes ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

இவரும் ஒரு புத்தகம் அடுக்கிற ஆள்தான் (அட அதுதான் உங்க பாசையில் நூலகர் 😀).

இவரை பற்றி நீங்கள் முன்பே யாழில் எழுதிய நியாபகம். இதையும் படித்திருபீர்கள் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படித்தான் 83 அவர்களும் சொன்னர்கள்.

ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து அதிகாரத்தின் அடுத்த நிலையில் அமர்ந்து அப்பாவி சிங்களவரை ஏய்து எடுத்த பணத்தில் கட்டிய சொத்து என்று.

இது வேறு... அதிகாரத்தில் இருந்து கொண்டு கொள்ளை அடிப்பது வேறு

28 minutes ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

வாசிச்சுப்போட்டு, நாலு வரி விபரம் சொல்லுங்கோ.... ஜஸ்டின் எப்ப பார்த்தாலும் அவரை கோட் பண்ணுவதால்.... என்ன தான் இருக்கு எண்டு பார்க்க ஆசை.... முடிந்தால், தனி மடலில் அனுப்புங்கோ புத்தகத்தை.... £0.07 அனுப்பி வைக்கிறேன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இது வேறு... அதிகாரத்தில் இருந்து கொண்டு கொள்ளை அடிப்பது வேறு

இனத்தூய்மைவாத சிங்களவரின் பார்வையில் அதிகாரத்தில் இருந்த சொற்பமான ஆங்கிலேயருக்கு அடுத்த படியில் இருந்து அவர்களை கொள்ளை அடிப்பதில் பங்கெடுத்தார்கள் தென்னிந்திய வந்தேறி தமிழர்கள். 

ஒரே மேட்டர் தான்.

நமக்கு என்றால் ரத்தம்

வேறு யாருக்கோ என்றால் தக்காளி சோஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இனத்தூய்மைவாத சிங்களவரின் பார்வையில் அதிகாரத்தில் இருந்த சொற்பமான ஆங்கிலேயருக்கு அடுத்த படியில் இருந்து அவர்களை கொள்ளை அடிப்பதில் பங்கெடுத்தார்கள் தென்னிந்திய வந்தேறி தமிழர்கள். 

ஒரே மேட்டர் தான்.

நமக்கு என்றால் ரத்தம்

வேறு யாருக்கோ என்றால் தக்காளி சோஸ்.

தப்பு தப்பாக சொல்கிறீர்களே.

ஆங்கிலேயர் காலத்தில், கல்கத்தாவில் இருந்து, கிழக்கிந்திய கம்பெனியினரால், அமெரிக்க சுதந்திர பிரகடன கடுப்பில் வெளியே அனுப்படட அமெரிக்கன் மிஷனரிகள் மொரிசியஸ் போகும் வழியில் யாழில் தங்கிய போது, அங்கேயே தங்கி விட முடிவு செய்கிறார்கள்.

முடிவு, 11 அமெரிக்கா மிஷன் பாடசாலைகளில் 9 பாடசாலைகள் குடாநாட்டில்.

படித்த தமிழர்கள் இரண்டாம் நிலை அரச உத்தியோகங்களில், இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகம், மலேசியா, பர்மா, மொரிசியஸ் என்று போய் பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.

அதனால் வந்த பொறாமை தான், 1958, 1977, 1983...

தமிழகத்தில் திராவிடனாக நடித்து, தமிழனை ஏமாத்தி ஆட்டையிணை போட்டார்கள்.

இலங்கையிலோ, இலங்கை மாதாவின் பிள்ளைகள், நாம் ஒன்றாக இருப்போம் என்று சொல்லி, 1948ல் ஒரு ஜின்னா உருவாகாமல் செய்து தமிழனை ஏமாத்தினார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இவரும் ஒரு புத்தகம் அடுக்கிற ஆள்தான் (அட அதுதான் உங்க பாசையில் நூலகர் 😀).

இவரை பற்றி நீங்கள் முன்பே யாழில் எழுதிய நியாபகம். இதையும் படித்திருபீர்கள் என நினைத்தேன்.

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

தப்பு தப்பாக சொல்கிறீர்களே.

ஆங்கிலேயர் காலத்தில், கல்கத்தாவில் இருந்து, கிழக்கிந்திய கம்பெனியினரால், அமெரிக்க சுதந்திர பிரகடன கடுப்பில் வெளியே அனுப்படட அமெரிக்கன் மிஷனரிகள் மொரிசியஸ் போகும் வழியில் யாழில் தங்கிய போது, அங்கேயே தங்கி விட முடிவு செய்கிறார்கள்.

முடிவு, 11 அமெரிக்கா மிஷன் பாடசாலைகளில் 9 பாடசாலைகள் குடாநாட்டில்.

படித்த தமிழர்கள் இரண்டாம் நிலை அரச உத்தியோகங்களில், இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகம், மலேசியா, பர்மா, மொரிசியஸ் என்று போய் பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.

அதனால் வந்த பொறாமை தான், 1958, 1977, 1983...

தமிழகத்தில் திராவிடனாக நடித்து, தமிழனை ஏமாத்தி ஆட்டையிணை போட்டார்கள்.

இலங்கையிலோ, இலங்கை மாதாவின் பிள்ளைகள், நாம் ஒன்றாக இருப்போம் என்று சொல்லி, 1948ல் ஒரு ஜின்னா உருவாகாமல் செய்து தமிழனை ஏமாத்தினார்கள்.

நான் சொன்னது -சிங்கள இனவாதிகளின் பார்வையை. 

எப்படி சீமான் இப்போ ஒரு “தெலுங்கு சதி” தமிழ்நாட்டை கொள்ளை அடித்தது (அதிகாரத்தின் சகல மட்டங்களையும் வசப்படுத்தி) என்று சொல்கிறாரோ, அதே போல் ஒரு “தமிழ் சதி” படித்து ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து, அதிகாரத்தில் ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையை அடைந்து, முழு இலங்கையையையும் கொள்ளை அடித்தது என்பதே சிங்கள சீமான் அநகாரிக தர்மபால போன்றோர் கூறியது.

இந்த கொள்கை விளக்கமே சுதந்திர இலங்கயின் சகல பிரச்சினைகளுக்கும் அடிநாதம்.

நேற்றே கவனித்தேன் ஜின்னாவை பற்றி சொன்னீர்கள். லண்டனில் இருந்த, அரசியலே சாராத ஜின்னா எப்படி இந்தியா போனார், எப்படி அவர் கொள்கை பாகிஸ்தானில் முடிந்தது எனும் வரலாற்று தெளிவும், அதே காலகட்டத்தில் இலங்கையில் இருந்த நிலை பற்றிய தெளிவும் இருந்தால் “இலங்கையில் ஒரு ஜின்னா இருக்கவில்லையே” என அங்கலாய்பது தவறு என்பதும் அன்றைய இலங்கை சூழலில் ஒரு ஜின்னா எழவே சாத்தியம் இருக்க இல்லை என்பதும்,  புரியும்.

தெளிவாக எழுத இப்போதைக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை.

முதலில் குணசிங்கத்தை வாசிச்சு முடியுங்கோ, இன்னொரு திரியில ஜின்னா v பொன்ன(ம்பலம்) இராமநாதனை அலசலாம்.

பிகு: தர்மபால, சீமானை போலவே ஹிட்லரின் Jewish Conspiracy தியரியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இனொரு திரி தொடங்கதான்.... இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

குணசிங்கத்திடம் நடுநிலையான evidence based approach இருக்கும். ஆனால் எழுத்துப் பாணி செம போர்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நான் சொன்னது -சிங்கள இனவாதிகளின் பார்வையை. 

எப்படி சீமான் இப்போ ஒரு “தெலுங்கு சதி” தமிழ்நாட்டை கொள்ளை அடித்தது (அதிகாரத்தின் சகல மட்டங்களையும் வசப்படுத்தி) என்று சொல்கிறாரோ, அதே போல் ஒரு “தமிழ் சதி” படித்து ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து, அதிகாரத்தில் ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையை அடைந்து, முழு இலங்கையையையும் கொள்ளை அடித்தது என்பதே சிங்கள சீமான் அநகாரிக தர்மபால போன்றோர் கூறியது.

இந்த கொள்கை விளக்கமே சுதந்திர இலங்கயின் சகல பிரச்சினைகளுக்கும் அடிநாதம்.

நேற்றே கவனித்தேன் ஜின்னாவை பற்றி சொன்னீர்கள். லண்டனில் இருந்த, அரசியலே சாராத ஜின்னா எப்படி இந்தியா போனார், எப்படி அவர் கொள்கை பாகிஸ்தானில் முடிந்தது எனும் வரலாற்று தெளிவும், அதே காலகட்டத்தில் இலங்கையில் இருந்த நிலை பற்றிய தெளிவும் இருந்தால் “இலங்கையில் ஒரு ஜின்னா இருக்கவில்லையே” என அங்கலாய்பது தவறு என்பதும் அன்றைய இலங்கை சூழலில் ஒரு ஜின்னா எழவே சாத்தியம் இருக்க இல்லை என்பதும்,  புரியும்.

தெளிவாக எழுத இப்போதைக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை.

முதலில் குணசிங்கத்தை வாசிச்சு முடியுங்கோ, இன்னொரு திரியில ஜின்னா v பொன்ன(ம்பலம்) இராமநாதனை அலசலாம்.

பிகு: தர்மபால, சீமானை போலவே ஹிட்லரின் Jewish Conspiracy தியரியும்.

கோஷன் சும்மா பொழுதுபோக்குக்கு எழுதுவது போல எழுதாமல் ஏதாவது அறிவுபூர்வமாக எழுதுங்கள். தமிழ்நாட்டுக்காரனே அங்கு என்ன நடக்கிறது என்று எழுதும்போது எதோ எல்லாம் தெரிந்த அறிவாளி மாதிரி அலம்புவது மிக பரிதாபமாக இருக்கிறது. நேரம் பொன்னானது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

கோஷன் சும்மா பொழுதுபோக்குக்கு எழுதுவது போல எழுதாமல் ஏதாவது அறிவுபூர்வமாக எழுதுங்கள். தமிழ்நாட்டுக்காரனே அங்கு என்ன நடக்கிறது என்று எழுதும்போது எதோ எல்லாம் தெரிந்த அறிவாளி மாதிரி அலம்புவது மிக பரிதாபமாக இருக்கிறது. நேரம் பொன்னானது.

எ.பொ.த,

அடுத்தமுறை எதுவும் தெரியாதவன் போல எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

பிகு: உங்கள் “கண்ணியமாக உரையாடுங்கள்” அட்வைசை இப்போ நீங்களே பின்பற்றுவதில்லை போல தெரிகிறது. ஊருக்குத்தான் உபதேசமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நான் சிங்களவனாக பிறந்திருந்தாலும் தமிழ் தேசியவாதியாக இருந்திருப்பேன் - ஏனென்றால் நியாயம் அங்கே இருக்கிறது என்று.

உங்கள் எழுத்துக்களில் அந்தப் பண்பு தெரியவில்லையே சார், கேலியும், கிண்டலும், சீண்டலுமே காணக்கிடக்கிறது. நீங்கள் பிறப்பு தமிழ், வெள்ளை அடிப்பது சிங்களத்துக்கு.  இனி சிங்களவனாய் பிறந்தால் தமிழ்த் தேசியவாதியாக இருப்பீர்கள் என்று கண்டிப்பாக நம்பலாம். சிங்களம் விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டி அடிப்போம் என்கிறது, அதை திசை திருப்பி வேறெங்கோ நிஞாயம் தேடுகிறோம். 

5 hours ago, Maruthankerny said:

ஒரு நாட்டு சாதாரண பிரஜை ஆகவேண்டும் என்றால் 
நீங்கள் அந்த நாடு பற்றி அறியவேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் 
என்பதுதான் உலக விதி. அது காரணத்தோடுதான் இருக்கிறது 
நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது பொருட்டல்ல 
எவ்ளவு அந்த நாடு பற்றி அறிந்தீர்கள் என்பதுதான் கவனத்தில் எடுக்கப்படும்.
எடுக்கப்பட வேண்டும். 

நீங்கள் வசிக்கும் சுவிஸ் நாட்டின் பெடரல் ஒப் ஹெல்வித்தியா 
மாநில சுயாட்ச்சி பற்றி என்ன சொல்கிறது? அது மாநில அடிப்படை உரிமை 
நாம் தமிழர் கட்சி ஒன்று உலகில் இல்லாத ஒன்றையும் கோரவில்லை 
நீங்கள்தான் இப்படி ஒரு விம்பத்தை உருவாக்கி உங்களுக்கு வெள்ளை அடிக்க அப்ப 
அப்ப முயற்சி செய்கிறீர்கள். 

கோசான் மாங்காயும் தேங்காயும் தென்னையில் இருந்துதான் வந்தது என்று 
புதுப்புரளி செய்வதுபோல ஏனென்றால் இரண்டும் காய் என்று முடிகிறது என்கிறார். 

தெலுங்கு மொழியே தமிழின் பிள்ளைதான் 
அதுக்காக எல்லாம் அவ்வளவு காலம் பின்தள்ளி போக முடியாது அதை 
யாரும் தெலுங்கரோ கர்நாடரோ ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.

கர்நாடாவில் என்ன நடைமுறையோ 
ஆந்திராவில் என்ன நடைமுறையோ 
கேரளவில் என்ன நடைமுறையோ 
அதுதான் நாம் தமிழர் கட்சி கோருவது ......இங்கு வேறு ஒன்று புதிதாக கோரப்படவில்லை.
அதுக்கான அடிப்படை காரணம் அதுதான் ஒரு மாநில வளர்ச்சிக்கு உதவும் என்பதிலும் இன்றி அமையாது என்பதுதான் உண்மை. 

தமிழ் மொழியும் மண்ணும் உள்ளிருந்து வேரறுக்கப்பட்டது 
என்பதுதான் உண்மை இதை அடுத்த தலைமுறை கவனத்தில் கொள்ளவேண்டும் 
ஓரளவேனும் ஒரு சாராரிடம் என்றாலும் இதுபற்றிய எண்ணம் இருந்ததால்தான் 
இதாவது மிஞ்சியது என்பதுதான் யதார்த்தமான உண்மை. 

கந்தனை ஸ்கந்தன் ஆக்கியதே 
கந்தபுராணத்தை அழித்து பொய்புரட்டுக்களை திணிக்கவே 
அவர்கள் வாழ்வுக்கு நாம் எதிராளிகள் அல்ல 
எமது வாழ்வுக்கும் மொழிக்கும் தான் நாம் உரிமை கோருகிறோம்  

மருதங்கேணி நான் சமஸ்டிக்கு எதிரானவன் என்று எப்படி முடிவெடுத்தீர்கள். சமஸ்டி என்பது தமிழ் நாட்டில் புதிய கோரிக்கை அல்ல. மாநில சுயாட்சி கோரிக்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து அண்ணா போன்ற தமிழ் நாட்டு தலைவர்களின் காலத்திலேயே உள்ளது. சீமான் அந்த கோரிக்கையை தொடர்ச்சியாக எடுத்து செல்வதில் எந்த தவறும் இல்லை. தமிழ் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அந்த சமஸ்டி தமிழ் நாடு என்ற மாநில மக்களின் உரிமை என்ற ரீதியில் இருக்கு வேண்டும். 

ஆனால் பிரச்சனை சீமானின்  அடுத்த  இன மக்கள் மீதான வன்ம்ம் தான். சீமானின் அரசியல் எ ன்பது இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அவர்  முன்னெடுப்பது. மற்றது  தனது தம்பிகளை கொண்டு சமூக ஊடகங்களில்  பேசும் பச்சை இன வாத வெறுப்பரசியல்.  நிச்சயமாக அவரது பதவி ஆசை தான் இதை செய்ய தூண்டுகிறது. அவர் வெல்வதற்கு ஒரு பேசுபொருள் வேண்டும் என்பதற்காக அவர் இனவாத‍த்தை கையில் எடுத்துள்ளார். இலங்கையில் இனவாத‍த்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதை பார்த்த சீமானுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

நீங்கள் சுவிஸ் சமஸ்டி பற்றி கூறியதால் கூறுகிறேன். இங்கு முதல் தலைமுறையாக வந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் எவரும் முடிந்தால் எந்த உயர் பதவிக்கும் வரலாம். வந்தேறி தமிழர்களின் பிள்ளைகள் இப்படி உயர்பதவிக்கு வர விடக்கூடாது என்று யாராவது சுவிஸ்பிரஜை பொது தளத்தில் இனவாதம் பேசுவாராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாயும்.  இலங்கையில் இருந்து வந்த முதல் தலைமுறையினரே கன்ரோன் பாராளுமன்றத்திற்கும், மாநகர சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களின் வாக்கில் வெற்றி பெறவில்லை.  99 வீதம் சுவிஸ் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யபட்டார்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, satan said:

உங்கள் எழுத்துக்களில் அந்தப் பண்பு தெரியவில்லையே சார், கேலியும், கிண்டலும், சீண்டலுமே காணக்கிடக்கிறது. நீங்கள் பிறப்பு தமிழ், வெள்ளை அடிப்பது சிங்களத்துக்கு.  இனி சிங்களவனாய் பிறந்தால் தமிழ்த் தேசியவாதியாக இருப்பீர்கள் என்று கண்டிப்பாக நம்பலாம். சிங்களம் விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டி அடிப்போம் என்கிறது, அதை திசை திருப்பி வேறெங்கோ நிஞாயம் தேடுகிறோம். 

அவர்கள் நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள். தயவு செய்து சீண்டாதீர்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

உங்கள் எழுத்துக்களில் அந்தப் பண்பு தெரியவில்லையே சார், கேலியும், கிண்டலும், சீண்டலுமே காணக்கிடக்கிறது. நீங்கள் பிறப்பு தமிழ், வெள்ளை அடிப்பது சிங்களத்துக்கு.  இனி சிங்களவனாய் பிறந்தால் தமிழ்த் தேசியவாதியாக இருப்பீர்கள் என்று கண்டிப்பாக நம்பலாம். சிங்களம் விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டி அடிப்போம் என்கிறது, அதை திசை திருப்பி வேறெங்கோ நிஞாயம் தேடுகிறோம். 

வணக்கம் சாத்தான்,

கிண்டலும், சீண்டலும் உங்களை வருத்தி இருந்தால் மன்னிக்கவும். அவை ஒரு கருத்தின் நியாயத்தை நயம்பட அல்லது முகத்தில் அறைந்தால் போல் சொல்லவும்,  என்னை தோழமையாக கிண்டல் செய்பவர்களுக்கு அதை ரிட்டர்ன் கொடுக்கவுமே கையாளப்படுகிறன.

சிவி - நான் முன்பும் ஒரு திரியில் எழுதினேன் - இவரின் வருகையை வரவேற்க என்றே யாழில் எழுத தொடங்கியவன் நான்.

அப்போது எல்லாரும் மாவைதான் முதல்வர் வேட்பாளர் என்று வரிந்து கட்டி - என்னை சிங்கள சம்பந்தியை முன் தள்ள வந்த சிங்கள கைக்கூலி என்றே திட்டித்தீர்த்தனர்.

அப்போ நீங்கள் இந்த பெயரில் வருவதில்லை. ஆனால் 2013 பதிவுகளை பார்த்தால் தெரியும்.

ஆகவே எனது தமிழ் தேசியம் பற்றிய பற்றுறுதியை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

“கோசான் சிங்களவனுக்கு வெள்ளை அடிக்கிறான்” என்ற கூச்சலும், தாம் வரையறுத்ததே தமிழ் தேசியம்,  என வாதிடும் நபர்களால் சீசனுக்கு சீசன் எழுப்பபடும் ஒன்றுதான். 

7 வருடமாக ஒவ்வொரு நிலையிலும் யார் யார் தமிழ் தேசியத்தினை முன் தள்கிறார்கள் என நான் நினைத்தேனோ அவர்களுக்கு அல்லது அந்த கொள்கைகளுக்கு ஆதரவாக எழுயுதியும், பின்னர் அப்படியானவர்கள் பிறழ்ந்து போகும் போது கண்டித்தும் எழுதியுள்ளேன்.

உதாரணத்துக்கு இங்கே தமிழ் தேசிய போர்வை போத்திய பலர் இந்து-கிறீஸ்தவ திரிகளில் மிக மோசமாக சமூக ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் எழுதியபோது, அதை தட்டி கேட்டும் எழுதினேன். காரசாரமாகவே. நீங்கள் வந்து லைக்கும் போட்ட்டீர்கள்.

இதை சொன்னதும் கோசான் மத பிரச்சனையை கொண்டு வந்து திசை திருப்பிறான் எண்டு நினைக்க வேண்டாம்.

சாதி மதம் சாராத, எல்லா தமிழரையும் உள்வாங்கிய தமிழ் தேசியம் என்ன என்பதில் எனக்கு 100% தெளிவு உண்டு.

செல்வா வகுத்து பிரபா நடைமுறையில் காட்டிய தத்துவம் அது.

அந்த உயரிய வரைவிலக்கணத்தில் இருந்து விலகி தமிழ் தேசியத்தை யார் சிறுகடித்தாலும் - அதை எதிர்த்து எழுதியே ஆகுவேன். யாருக்கு உவப்பானாதோ, இல்லையோ.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சரி முடியுமானளவு எழுதி விட்டேன். திரி வேற 1350 க்கு போய்விட்டது.

சந்திப்போம்.

பின்ன வரட்டே

(சத்தியமா மலையாளம் இல்லை, யாழ்பாண வட்டார வழக்கு நம்புங்கள்😝). 

இன்னும் போகலையோ?
கொதிதண்ணி சட்டியோடை வாறதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, tulpen said:

நீங்கள் சுவிஸ் சமஸ்டி பற்றி கூறியதால் கூறுகிறேன். இங்கு முதல் தலைமுறையாக வந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் எவரும் முடிந்தால் எந்த உயர் பதவிக்கும் வரலாம். வந்தேறி தமிழர்களின் பிள்ளைகள் இப்படி உயர்பதவிக்கு வர விடக்கூடாது என்று யாராவது சுவிஸ்பிரஜை பொது தளத்தில் இனவாதம் பேசுவாராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாயும்.  இலங்கையில் இருந்து வந்த முதல் தலைமுறையினரே கன்ரோன் பாராளுமன்றத்திற்கும், மாநகர சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களின் வாக்கில் வெற்றி பெறவில்லை.  99 வீதம் சுவிஸ் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யபட்டார்கள்.  

சுவீசில் மொழி திணிப்பும் இல்லை. மொழி அழிப்பும் இல்லை. இந்தியாவில்/இலங்கையில் அப்படியல்ல, அங்கு வேறு அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் போகலையோ?
கொதிதண்ணி சட்டியோடை வாறதோ?

ஐயோ அண்ணை வேண்டாம். இந்தா வெளிக்கிட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

ஆனால் பிரச்சனை சீமானின்  அடுத்த  இன மக்கள் மீதான வன்ம்ம் தான். சீமானின் அரசியல் எ ன்பது இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அவர்  முன்னெடுப்பது. மற்றது  தனது தம்பிகளை கொண்டு சமூக ஊடகங்களில்  பேசும் பச்சை இன வாத வெறுப்பரசியல்.  நிச்சயமாக அவரது பதவி ஆசை தான் இதை செய்ய தூண்டுகிறது. அவர் வெல்வதற்கு ஒரு பேசுபொருள் வேண்டும் என்பதற்காக அவர் இனவாத‍த்தை கையில் எடுத்துள்ளார். இலங்கையில் இனவாத‍த்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதை பார்த்த சீமானுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

துல்பன் சீமான் தானாக எதுவுமே செய்யவில்லை.அயல் மாநிலங்கள் தங்கள் மொழிக்காக சட்டமே இயற்றி வைத்திருக்கிறார்கள்.அதைத் தான் தமிழ்நாட்டிலும் கேக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபான்மையாக வந்த பின்பும் எல்லாவற்றையும் எல்லோருக்கும் திறந்துவிடு என்கிறீர்களே.
உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

மருதங்கேணி நான் சமஸ்டிக்கு எதிரானவன் என்று எப்படி முடிவெடுத்தீர்கள். சமஸ்டி என்பது தமிழ் நாட்டில் புதிய கோரிக்கை அல்ல. மாநில சுயாட்சி கோரிக்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து அண்ணா போன்ற தமிழ் நாட்டு தலைவர்களின் காலத்திலேயே உள்ளது. சீமான் அந்த கோரிக்கையை தொடர்ச்சியாக எடுத்து செல்வதில் எந்த தவறும் இல்லை. தமிழ் நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அந்த சமஸ்டி தமிழ் நாடு என்ற மாநில மக்களின் உரிமை என்ற ரீதியில் இருக்கு வேண்டும். 

ஆனால் பிரச்சனை சீமானின்  அடுத்த  இன மக்கள் மீதான வன்ம்ம் தான். சீமானின் அரசியல் எ ன்பது இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அவர்  முன்னெடுப்பது. மற்றது  தனது தம்பிகளை கொண்டு சமூக ஊடகங்களில்  பேசும் பச்சை இன வாத வெறுப்பரசியல்.  நிச்சயமாக அவரது பதவி ஆசை தான் இதை செய்ய தூண்டுகிறது. அவர் வெல்வதற்கு ஒரு பேசுபொருள் வேண்டும் என்பதற்காக அவர் இனவாத‍த்தை கையில் எடுத்துள்ளார். இலங்கையில் இனவாத‍த்தை முன்னெடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதை பார்த்த சீமானுக்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

இதை சீமானே பலமுறை எதிர்த்து பேசி இருக்கிறார் பல் வீடியோக்கள் 
இங்கும் இணைக்கப்பட்டிருக்கு. நீங்கள் ஒரு சீமானை வடிவமைத்து அதுக்கு எதிராக கருத்து இழுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். முதல்வராக தமிழர் இருக்கவேண்டும் என்பதுதான் சீமானின் கருத்து ... தமிழர் என்றால் 
உணர்வால் உள்ளத்தால் அந்த மண்ணின் ஈரம் ஆழம் தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்பதே சீமானின் கருத்து. ஆழ நினைப்பவன் அந்த மண்ணை அறிய வேண்டும் என்பதில் என்ன தப்பு காண்கிறீர்கள்? குறித்த மண்ணின் ஏற்றத்தாழ்வு மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் தெரியத  ஒருவன் ஆளுவது என்பது அழிவை கொடுக்கும் அதுதான் இன்று தமிழ் நாடு சந்தித்து இருக்கும் மிக பெரிய பின்னடைவு. உலகின் அடுத்த போரே நீரால் வரும் என்று எச்சரிக்கிறார்கள் தமிழ்நாட்டு இயற்கை நீர் நிலை யாவும் அழிக்கபட்டு வருகிறது. அதை உணரும் ஒருவன் அதை தொடர்ந்தும் செய்வானா?

சீமானிடம் நிறைய பேசுபொருள் இருக்கிறது ........ நீங்கள் வடிவமைக்கும் சீமானிடம்தான் பிரச்சனை இருக்கிறது. 

13 minutes ago, tulpen said:

நீங்கள் சுவிஸ் சமஸ்டி பற்றி கூறியதால் கூறுகிறேன். இங்கு முதல் தலைமுறையாக வந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் எவரும் முடிந்தால் எந்த உயர் பதவிக்கும் வரலாம். வந்தேறி தமிழர்களின் பிள்ளைகள் இப்படி உயர்பதவிக்கு வர விடக்கூடாது என்று யாராவது சுவிஸ்பிரஜை பொது தளத்தில் இனவாதம் பேசுவாராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாயும்.  இலங்கையில் இருந்து வந்த முதல் தலைமுறையினரே கன்ரோன் பாராளுமன்றத்திற்கும், மாநகர சபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களின் வாக்கில் வெற்றி பெறவில்லை.  99 வீதம் சுவிஸ் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யபட்டார்கள்.  

சுவிஸில் சாதாரண பிரஜாவுரிமை எடுக்கவே 30-40 வருடம் போராடுகிறார்கள் 
நீங்கள் லுசெர்னில் உள்ளூரட்ச்சி மன்றில் வென்றதை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் 

Unterwalden (Obwalden (OW) / Nidwalden (NW))

இங்கு வெளிநாட்ட்டவர் குடியேறவே முடியாது என்று முனிசப்பல்லில் 
சட்டம் அமுலாக்கினார்கள் .. பெடெரலால் ஒன்றும் செய்ய முடியாது 
முனிசப்பல் உரித்துமம்தான் கண்டோனின் கவுன்சிலை நிர்ணயிக்கிறது 

இந்த முனிசிபல் அழுத்தத்தால் வெளிநாட்டவருக்கு வேறு மாநிலங்களில் நன்மை உண்டு 
கூட்டி கழித்து பார்த்தால் நஷடம்தான் கூட. உதாரணத்துக்கு உள்ளுராட்ச்சி தேர்தலில் 
அங்கே வசிக்கும் வெளிநாட்டவர்களே ஜூரா நோசத்தல் (Jura, Neuchatel) கண்டோனில் வாக்கு போடாலாம் இது உலகில் எங்கும் இல்லை ... அதைவைத்து கொண்டு சுவிஸுக்கு வெள்ளையடிக்க முடியாது.அல்லது சீமானுக்கு சாயம் அடிக்கவும் முடியாது இதில் எதுவும் சீமானின் எண்ணம் இல்லை. 

நான் எழுதியது மாநில அதிகாரம் பற்றியும் 
பெடரல் அதிகாரம் பற்றியும் இதைத்தான் சீமான் பேசுகிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.