Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன்  மற்றும் கோஷன் இந்த படம் பழைய படம் பாருங்கள் 
உங்களுக்கு நன்றாக பிடிக்கும் (எனக்கும் பிடித்த படம்) 
நீங்கள் வடிவமைத்து வைத்திருக்கும் சீமானியசத்துக்கு முற்றிலும் 
ஆதரவாக சித்தரிப்பு காட்ச்சிகள் கொண்ட படம். 

முரட்டு தேசியவாதத்தை எவ்வாறு தூண்டுவது போன்ற 
காட்சி அமைப்புக்கள் உள்ள திரைப்படம் 

நேரம் கிடைக்கும்போது பாருங்கள் 

இந்த சின்ன பகுதியை பார்த்தால் உங்களுக்கு 
முழுதும் பார்க்கும் ஆர்வம் தோன்றும் 

கோசான் துல்பன் மட்டும் இல்லை மற்றும் இதர 
எம்மைப்போன்ற புலம்பெயர் தேசிக்காய்களுக்கு வகுப்பு எடுக்க 
இருக்கும் எல்லோருக்கும் இது தேன். 

  • Replies 231
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

கிருபன், காசுக்கு மேலால் பயனுள்ள புத்தகம். இதை ஒர் உசாத்துணைப் புத்தகமாக வாசிக்கக் கூடிய அளவுக்கு முதல் நிலைத் தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி தகவல்களைத் தந்துள்ளார். கலாநிதி முருகர் குணசிங்கத்திற்கு குருவாக இருந்தவர் பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா என்ற யாழ் பல்கலையின் முதல் வரலாற்றுப் பீடப் பேராசிரியர், இப்போதும் அவுசில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது ஆய்வுகளும் நூலாக வந்திருக்கிறது. இவர்கள் இருவரதும் ஆய்வுகள் பற்றித்  தெரியாமல் யாரேனும் இலங்கையினது இன வரலாறு பற்றிப் பேசினால் அது நிச்சயம் பூரணமற்றதாகத் தான் இருக்கும் என்பது என் அபிப்பிராயம்! ( உங்களைச் சொல்லவில்லை!) 

51ArJKmk0RL._SX331_BO1,204,203,200_.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

£7.07 சுடச்சுட டவுன்லோட் பண்ணியுள்ளேன். ஆனால் அட்டையில் உந்தப்படம் இல்லை!

107631566_914349405712658_3776086713130145378_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=jhTNeUaesrwAX-nesuG&_nc_oc=AQmjEHB5TU9Ok1CxkLx8HDSYwtE3W7zHO1m6Ha59OEUlGgMklLFIjmN_z2VCJJrRFuNFDgcoADUm6bGF95XxOZrC&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=e254ce3f8c88185c467d167a5cf85942&oe=5F77580E

நீங்கள் தமிழ் வாங்கினீர்களா ?

7 hours ago, Maruthankerny said:

சுவிஸில் சாதாரண பிரஜாவுரிமை எடுக்கவே 30-40 வருடம் போராடுகிறார்கள் 
நீங்கள் லுசெர்னில் உள்ளூரட்ச்சி மன்றில் வென்றதை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் 

Unterwalden (Obwalden (OW) / Nidwalden (NW))

இங்கு வெளிநாட்ட்டவர் குடியேறவே முடியாது என்று முனிசப்பல்லில் 
சட்டம் அமுலாக்கினார்கள் .. பெடெரலால் ஒன்றும் செய்ய முடியாது 
முனிசப்பல் உரித்துமம்தான் கண்டோனின் கவுன்சிலை நிர்ணயிக்கிறது 

இந்த முனிசிபல் அழுத்தத்தால் வெளிநாட்டவருக்கு வேறு மாநிலங்களில் நன்மை உண்டு 
கூட்டி கழித்து பார்த்தால் நஷடம்தான் கூட. உதாரணத்துக்கு உள்ளுராட்ச்சி தேர்தலில் 
அங்கே வசிக்கும் வெளிநாட்டவர்களே ஜூரா நோசத்தல் (Jura, Neuchatel) கண்டோனில் வாக்கு போடாலாம் இது உலகில் எங்கும் இல்லை ... அதைவைத்து கொண்டு சுவிஸுக்கு வெள்ளையடிக்க முடியாது.அல்லது சீமானுக்கு சாயம் அடிக்கவும் முடியாது இதில் எதுவும் சீமானின் எண்ணம் இல்லை. 

நான் எழுதியது மாநில அதிகாரம் பற்றியும் 
பெடரல் அதிகாரம் பற்றியும் இதைத்தான் சீமான் பேசுகிறார். 

சுவிற்சர்ஙாந்தின் கிராமமட்டம் வரையான அதிகார பங்கீட்டு முறை அரசியமைப்பில் பல நன்மைகள் உண்டு. அதிலுள்ள ஒரே குறைபாடு சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க பல காலம் எடுப்பதே. அது பிரஜாவுரிமை விடயமாக இருந்தாலும் சரி அரசின் மிகப்பெரிய அபிவிருத்தி Projekt ஆக இருந்தாலும் சரி.  

இடையில் உள்ள சில கிராம சபைகளின் எதிர்ப்பினால்  பெரு வீதிகளின் கட்டுமானம் கூட 10 வருடங்களுக்கு மேல் இழுபட்ட வரலாறும் உண்டு.  ஆனால் அதுவல்ல இங்கு பேசுபொருள். இங்கு பிரஜாவுரிமை பெற்ற முதல் தலைமுறை தமிழர் மீது கூட  இங்கு பூர்வீகமாக உள்ள சுவிஸ் பிரஜையால் இனவெறி சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டதாக திரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. அது மட்டுமே நான் சுட்டிக் காட்ட விழைந்த விடயம். இங்கு முதல் தலைமுறையான எனக்கோ இரண்டாம் தலைமுறையான எனது பிள்ளைகளுக்கோ எதிராக இனவெறி பேசப்பட்டால் அதல் வலி எப்படி இருக்கும் என்பதையே நினைத்து பார்ககிறேன். 

மற்றது சீமானுக்கு நீங்கள் கொடுக்கும் certificate இன் அர்ததம் என்பது ஓரிரு  வருடங்களுக்கு முன் நான் சீமானைப்பற்றி நினைத்ததை நீங்கள் இப்போதும் நினைத்துக்கொண்டுள்ளீர்கள் என்றே  நான் விளங்கி கொள்வதால் அந்த உங்கள் கருத்து என்ற ரீதியில் அந்த கருத்துக்கு  என்றும் எனது Respect உண்டு. ( சீமானின் இனவெறிக்  கருத்துக்கல்ல உங்கள் கருத்துக்கு)  தமிழ் நாட்டின் மாநில சுயாட்சி என்ற விடயத்திற்கு  எல்லோரையும் போல சீமானும் ஆதரவளிக்கிறார் என்பது மகிழ்ச்சியே. 

நன்றி வணக்கம். நட்புடன் துல்பன்.  

Edited by tulpen

3 hours ago, Maruthankerny said:

107631566_914349405712658_3776086713130145378_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=jhTNeUaesrwAX-nesuG&_nc_oc=AQmjEHB5TU9Ok1CxkLx8HDSYwtE3W7zHO1m6Ha59OEUlGgMklLFIjmN_z2VCJJrRFuNFDgcoADUm6bGF95XxOZrC&_nc_ht=scontent.ffcm1-1.fna&oh=e254ce3f8c88185c467d167a5cf85942&oe=5F77580E

நீங்கள் தமிழ் வாங்கினீர்களா ?

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

எ.பொ.த,

அடுத்தமுறை எதுவும் தெரியாதவன் போல எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

பிகு: உங்கள் “கண்ணியமாக உரையாடுங்கள்” அட்வைசை இப்போ நீங்களே பின்பற்றுவதில்லை போல தெரிகிறது. ஊருக்குத்தான் உபதேசமா?

அலம்புவது என்பது கண்ணியமான வார்த்தை இல்லையென்றால் மன்னிக்கவும். எனது கருத்து புரட்சி தமிழ் நாட்டிலிருந்து அங்கு என்ன நடக்கிறது, எதற்காக தமிழ்த்தேசியம் அவசியமாகிறது என்று விளக்கமாக கூறும்போது அதை நீங்கள் UK யில் இருந்துகொண்டு மறுதலிப்பது பற்றியதே.

பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை!!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

துல்பன் சீமான் தானாக எதுவுமே செய்யவில்லை.அயல் மாநிலங்கள் தங்கள் மொழிக்காக சட்டமே இயற்றி வைத்திருக்கிறார்கள்.அதைத் தான் தமிழ்நாட்டிலும் கேக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபான்மையாக வந்த பின்பும் எல்லாவற்றையும் எல்லோருக்கும் திறந்துவிடு என்கிறீர்களே.
உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

அவருக்கு வேற பிரச்சனை!!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

புத்தகத்தை அடிக்கடி கிழக்கு இலண்டன் பெளசரின் கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் இல்லாததால் வாங்கவில்லை. 

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

எதுக்கும் ஜஸ்டினட்டை கேளுங்கோ உந்த புத்தகத்தில் உள்ள வரலாற்று பதிவுகள்  peer review செய்யப்பட்டதா என்று??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, கிருபன் said:

அண்மைய வரலாறுகளே யானை பார்த்த குருடர் கதையாக உள்ளபோது பழைய வரலாறுகள் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையீனத்துடன்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

 பல புத்தகம் எழுதுபவர்களின் எழுத்துக்கள் எல்லாம் வியாபார நோக்கத்துடன் இருக்கும். அவர்கள் எழுதுவதையெல்லாம் வைத்து உண்மையென வாதிட முடியாது.அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள் எனவும் நம்பமுடியாது.ஒவ்வொரு வரலாற்று எழுத்தாளர்களுக்கும் வேறுபட்ட சிந்தனைகள் இருக்கும்.

இன்று எழுத்தாளர் சுஜாதாவையும் கழுவி ஊத்துகின்றார்கள். 😁

5 minutes ago, குமாரசாமி said:

உண்மை தான். எல்லாம் நரி திராட்சைப்பழக்கதை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இடையில் உள்ள சில கிராம சபைகளின் எதிர்ப்பினால்  பெரு வீதிகளின் கட்டுமானம் கூட 10 வருடங்களுக்கு மேல் இழுபட்ட வரலாறும் உண்டு.  ஆனால் அதுவல்ல இங்கு பேசுபொருள். இங்கு பிரஜாவுரிமை பெற்ற முதல் தலைமுறை தமிழர் மீது கூட  இங்கு பூர்வீகமாக உள்ள சுவிஸ் பிரஜையால் இனவெறி சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டதாக திரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. அது மட்டுமே நான் சுட்டிக் காட்ட விழைந்த விடயம். இங்கு முதல் தலைமுறையான எனக்கோ இரண்டாம் தலைமுறையான எனது பிள்ளைகளுக்கோ எதிராக இனவெறி பேசப்பட்டால் அதல் வலி எப்படி இருக்கும் என்பதையே நினைத்து பார்ககிறேன். 

உங்க பிரிட்டனிலை, அமெரிக்கவிலை இல்லாத சட்டமே?

9 minutes ago, குமாரசாமி said:

 பல புத்தகம் எழுதுபவர்களின் எழுத்துக்கள் எல்லாம் வியாபார நோக்கத்துடன் இருக்கும். அவர்கள் எழுதுவதையெல்லாம் வைத்து உண்மையென வாதிட முடியாது.அவர்கள் வரலாறு தெரிந்தவர்கள் எனவும் நம்பமுடியாது.ஒவ்வொரு வரலாற்று எழுத்தாளர்களுக்கும் வேறுபட்ட சிந்தனைகள் இருக்கும்.

இன்று எழுத்தாளர் சுஜாதாவையும் கழுவி ஊத்துகின்றார்கள். 😁

இவர்கள் சொல்லும் புத்தங்களை கழுவி ஊத்தும் சிங்கள ஆய்வாளர்களும் இருக்கிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

இலகுவாக புரியும்....

ஒன்றாக இருந்த ஜெர்மனி மக்களை பிரித்தார்கள் நாஜிகள். ஆண்டார்கள்.... அழிவுகளை கொண்டு வந்தார்கள்.

ஒன்றாக இருந்த தமிழர்களிடையே சாதிய பிரிவினை உண்டாக்கி, ஆளுபவர்கள் தான் திராவிடர். மலைகளை அழித்தார்கள், மண்ணை அள்ளி வித்தார்கள். அதில் வந்த காசை கொடுத்து, ஏழைகளின் வாக்குகளை வாங்கி ஆண்டார்கள்.

அதனை புரிந்து தமிழனாக ஒன்று படு, நாட்டினை காத்துக்கொள், வளங்களை காப்பாத்து  என்றால்.... வெறுப்பரசியல்...

இலங்கை மாதாவின் பிள்ளைகள், சகோதர்கள் நாம் என்று சொன்னதை நம்பி, நாசமருந்து.... நிக்கிறோம்.... அனுபவத்தில் சொல்கிறோம்.... முழித்துக் கொள்ளுங்கள் என்றால் வெறுப்பரசியல்... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அலம்புவது என்பது கண்ணியமான வார்த்தை இல்லையென்றால் மன்னிக்கவும். எனது கருத்து புரட்சி தமிழ் நாட்டிலிருந்து அங்கு என்ன நடக்கிறது, எதற்காக தமிழ்த்தேசியம் அவசியமாகிறது என்று விளக்கமாக கூறும்போது அதை நீங்கள் UK யில் இருந்துகொண்டு மறுதலிப்பது பற்றியதே.

பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை!!

கண்ணியம்- பரவாயில்லை, அது பெரிய விடயம் இல்லை.

புரட்சி- முன்னர் கதிர்காமர் எனும் ஒரு தமிழர் இலங்கையில் இருந்து சொன்னதையா தமிழரின் உண்மை நிலை என கருதினீர்கள்.

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை ஆனால் தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர். பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர். பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்.

அது போன வருசம்...

புது கணக்கு எட்டு மாதத்தில் தெரியுமே... 😁

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

கண்ணியம்- பரவாயில்லை, அது பெரிய விடயம் இல்லை.

புரட்சி- முன்னர் கதிர்காமர் எனும் ஒரு தமிழர் இலங்கையில் இருந்து சொன்னதையா தமிழரின் உண்மை நிலை என கருதினீர்கள்.

50 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர். பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 13:12, goshan_che said:

4. இதை எல்லாம் தேடி பிடிக்க, படிக்க அலுப்பாக இருந்தால் - இலங்கையில் சட்டம் படித்த ஒருவருக்கு போன் போட்டு கேட்டாலும் போதும்.

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

ஆம் 
பதிப்பகங்கள் மட்டுமே வேறு 

வெளியீட்டு ஆண்டுகள் வேறு என்று வந்திருக்க வேண்டும் 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

Edited by tulpen

13 minutes ago, Maruthankerny said:

ஆம் 
பதிப்பகங்கள் மட்டுமே வேறு 

வெளியீட்டு ஆண்டுகள் வேறு என்று வந்திருக்க வேண்டும் 

இல்லை மருதங்கேணி தங்களிடம் உள்ள புத்தகமும் என்னிடம் உள்ள புத்தகமும் ஒரே பதிப்பகம். ஆண்டு வேறு. ஆனால் இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இவரது பேட்டி கேட்டேன். தலைவர் பிரபாகரனை சந்தித்தும் உள்ளார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

துல்பன் நீஙகள் சொல்லுவது மக்களைப் பற்றி.

அவர் சொல்லுவது மாறிமாறி அரசுகளே இதை முன்னின்று ஊக்குவித்து செய்கின்றன.
ஆகவே அரசை மாற்ற வேண்டும் என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

1 hour ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

போர்த்துக்கீசர்  தென்இந்திய கரையோரங்களில் வந்து இறங்கியபோது 
பெரும்பாலமான கரையோரங்கள் விஜயநகர பேரரசின் ஆடசிக்கு உட்பட்டு இருந்தது 
போர்த்துக்கீசரின் வருகைகள் வணிகம் நோக்கியே இருந்தது இடங்களை பிடித்து ஆளுமை 
செய்யும் எண்ணம் அவர்களிடம் அப்போது  இருக்கவில்லை. ஆதலால் அந்த அரசர்களுக்கு 
லஞ்சம்போல தங்களிடம் இருந்த சில வெகுமாணங்களை கொடுத்து இங்கிருந்த திரவியங்களை 
அறாவிலையில் பெற்றுக்கொண்டார்கள் ... அப்படியொரு டீலில்தான் சொந்த ஆடசியை இழந்து இருந்த 
கேரளா மக்கள் விஜயநகர அரசுகளால் போர்த்துக்கீசருக்கு விற்கப்படடார்கள் அவர்கள்தான் மலபார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தென்காசி பாண்டியர்கள் மீள் எழுச்சிபெற்று விஜயநகர ஆடசியை விரட்டிக்கொண்டு இருந்தார்கள். 

அந்த மலபார்களை போர்த்துக்கீசர் யாழ் தீவுகளில் கொண்டுவந்து குடியேற்றினார்கள் நெடுந்தீவு புங்குடுதீவு  போன்ற இடங்களில் கொண்டுவந்து குடியேற்றி தமது குதிரைப்படையை வளர்ப்பது வணிக பொருட்களை ட்ரான்சிட் செய்ய அவர்கள் புங்குடுதீவையும் நெடுந்தீவையும் பயன்படுத்தினார்கள் அதற்கும் அவர்களை பயன் படுத்த்தினார்கள். 

தேசவழமை சட்டம் சங்கிலி மன்னர்களால்தான் அறிமுகமானது 
முன்பு நிலங்கள் ஏதும் மக்களுக்கு சொந்தம் இல்லை பின்பு வேளாண்மை செய்ய என்று 
சில நிலங்களை வேளாண்மை செய்பவர்களுக்கு இனாமாக அரசு வழங்கியது இதனால் இவர்கள் 
நிலவுடமை பெற்றதால் சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்தை பெற்று இங்குதான் ஈழத்தில் முதன் முதலில் ஏற்ற தாழ்வு  (சாதி) சமூகத்தில் ஏற்படுகிறது தம்மை வேளாளர் என்றும் உயர்வானவர்கள் என்றும் ஒரு போக்கை அவர்கள் கொண்டார்கள். 

தேசவழமை சட்டம் பின்னாளில் வன்னியில் ஆளுமை கொண்ட பண்டாரவன்னியனால் 
அங்கிருந்து நீக்கபட்டது ஆனால் அது யாழ் மைய பகுதியில் ஒல்லாந்தர் காலத்திலும் அது  நீடித்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

இல்லை மருதங்கேணி தங்களிடம் உள்ள புத்தகமும் என்னிடம் உள்ள புத்தகமும் ஒரே பதிப்பகம். ஆண்டு வேறு. ஆனால் இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இவரது பேட்டி கேட்டேன். தலைவர் பிரபாகரனை சந்தித்தும் உள்ளார். 

அதைத்தான் நான் கீழே எழுதியிருக்கிறேன் 
பதிப்புகள் என்பதை பதிப்பகம் என்று எழுதியதால் 
முன்பு கீளே எழுதி இருக்கிறேன் ஆண்டுகள் வேறு என்று  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

. பல கோடிக்கள் சிந்திப்பது வேறு கோணத்தில்.

மற்றவர்கள் சிந்திப்பது ஓட்டுக்காக கொடுக்கப்படும் காசைப்பற்றி !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.