Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய  தென்மராட்சியில் உள்ள ஒரு ஊரில் "மலயாள பக்கம்" என்று ஒரு பிரிவினரை சொல்லுவார்கள்.

அதைத்தான் இங்கு சிலர் நுனி புல்  மேய்ந்துவிட்டு கரகாட்டம் ஆடுகினம் .

  • Replies 231
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இரண்டு பேருக்கும் தங்களின் பெயர் பெருமை கொண்டவர்கள் காசை எறிந்தால்  எஸ்கிமோவுன் இனப்பரம்பல் ஈழத்தமிழர் என்றும் சொல்லுவார்கள் .

இப்பவும் சிலம்பம் சுத்துவார்  காலையில் மெதுவாக என்றாலும் வீடு கட்டி முடிப்பார்(வீடு என்பது சிலம்பத்தில் ஏழு அடிமானம்களின் தொகுப்பு ) அவரின் தொழிலே பர்மாவுக்கும்  நாகபட்டினத்துக்கும் ஓடிய கடலோடி .

முதலில் உங்கடை நுனி பபுல்  மேய்ந்த வரலாற்று கதைகளை திரும்பவும் சரிபார்க்கவும் பல இடங்களில் இடறியுள்ளீர்கள் ஆனாலும் இப்படியொரு  கதையை  தொடக்கியபின் எவ்வளவு ஆதாரம்களையும் கொண்டுவந்து போட்டாலும் நீங்களோ  அல்லது உங்களுக்கு பாய்ந்து விழுந்து பச்சை குத்தும் ஐடிகளோ ஏற்று கொள்ள போவதில்லை ஆனால் உங்களை பொறுத்தவரை  குறிப்பிட்ட மனிதர்கள் மீது தொடர் சேறு பூசுதல் மூலம் ஒருவகையான மனப்பிறழ்வு இன்பம் கான்கிறீர் கள் வெற்றி  கொண்டதாக எண்ணி மகிழ்ச்சி கொள்கிறீர்கள் ஏனென்றால் உங்கள் வாழ்வின் கடந்த காலங்களில் அந்த பகுதி மக்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாய் நம்புகிறீர்கள் இல்லை அவர்களை  பார்த்து தேவையில்லாமல் பொறாமை உணர்வு கொள்ள முயல்கிறீர்கள் . நல்ல வைத்தியரை நாடுவது உங்கள் இனத்துக்கு நல்லது .

வரலாற்று ஆசிரியர் சொல்வது உண்மை என்று நம்ப சொல்லும் உங்களால் விக்கிரமபாகு கருணாரத்ன சொல்வதை ஏற்க முடியாது உள்ளது ?

undefined

பெருமாள்,

1. நான் எங்கே வெற்றி கொண்டதாக சொன்னேன்? நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள் தந்தேன். இப்போ 99 வயது கம்பு சுத்தும் அப்பு சொன்னதாக ஏதோ சொல்கிறீகள். அவ்வளவுதான். 

2. நீங்கள் மறைமுகமாக நான் யாழ்பாண மக்களை தாக்கும் எண்ணம் கொண்ட ஒரு “யாழ்பாணத்துக்கு வெளியான” மனிதன் என்பதாக எழுதியுள்ளீர்கள். அதோடு அவர்களால் நான் பாதிக்கபட்டதாக வேறு சொல்லி உள்ளீர்கள். நான் எந்த ஊர் என்பதை இதுவரை இங்கே சொல்லவில்லை. இனியும் சொல்வதாக இல்லை. ஏனென்றால் நான் யாழ்பாணத்தான், மட்டகளப்பான், வன்னியான், திருகோண மலையான் - தமிழன். ஆனால் யாழ் மண்ணின் அத்தனை கிராமசேவர் பிரிவிலும் என் கால்தடம் இருக்கும். எனது கருத்துக்கள் ஆதாரத்தின் அடிப்படையிலே அன்றி வேறு எதனாலும் அல்ல.

3.  விக்ரமபாகு “தமிழர்கள்” சிங்களவருக்கு முந்திய குடிகள் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

3.  விக்ரமபாகு “தமிழர்கள்” சிங்களவருக்கு முந்திய குடிகள் என்றார்.

அங்காலை மிகுதியை படிக்க முடியவில்லையாக்கும் .😀

எல்லாம் இந்த நுனிபுல் கூடடத்தின் தொல்லை தாங்க  முடியலை .

3 minutes ago, goshan_che said:

நீங்கள் மறைமுகமாக நான் யாழ்பாண மக்களை தாக்கும் எண்ணம் கொண்ட ஒரு “யாழ்பாணத்துக்கு வெளியான” மனிதன் என்பதாக எழுதியுள்ளீர்கள். அதோடு அவர்களால் நான் பாதிக்கபட்டதாக வேறு சொல்லி உள்ளீர்கள். நான் எந்த ஊர் என்பதை இதுவரை இங்கே சொல்லவில்லை.

நான் எங்கு யாழை இன்று இழுத்தேன் நீங்களா தொப்பியை போடுகிறீர்கள் 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

நான் பாதி மலையாளி என்றுதான் எண்ணுகிறேன் 
காரணம் நான் நெடுந்தீவை பாதி அடியாக கொண்டவன் 
தவிர கேரள பெண்களை பார்க்கும்போது எதோ ஒரு முந்திய 
காலத்து உறவு இருப்பதுபோல் இரத்த செல்களிலேயே ஒரு ஈர்ப்பு வருகிறது 

மேலதிக ஆய்வுக்கு ஒரு இரண்டு வருட லீவில் 
கேரளா சென்று அங்கிருந்தே ஆய்வு செய்வது என்று எண்ணியுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நான் எந்த ஊர் என்பதை இதுவரை இங்கே சொல்லவில்லை. இனியும் சொல்வதாக இல்லை.

யார் கேட்டான் அதான்  கொஞ்சநாளைக்கு  முன் ஒக்ஸ்போர்ட்டிலும் கேம் யுனியிலும் வேலைதேடுவதை விடலாம்  என்று பெரிய அடி  அடித்தீர்களே மறக்க  முடியுமா அந்த வெடியை ?

  • கருத்துக்கள உறவுகள்

தவிர தமிழ் பேசும்போது நாக்கு சிலிங்காகுது 
மலையாளம் வார்த்தைகளை சொல்லிப்பார்க்க இலகுவாக இருக்கிறது 
பெண்குரல்களில் கிடக்கும்போது மீண்டு மீண்டும் கேட்க வேண்டும் போலவும் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

யார் கேட்டான் அதான்  கொஞ்சநாளைக்கு  முன் ஒக்ஸ்போர்ட்டிலும் கேம் யுனியிலும் வேலைதேடுவதை விடலாம்  என்று பெரிய அடி  அடித்தீர்களே மறக்க  முடியுமா அந்த வெடியை ?

ரைட்டு....அப்ப நான் முதல்ல சொன்ன மாரி உது பழைய கறள் தான். 

நல்ல விடயம். இணைந்திருங்கள்.

நன்றி

வணக்கம்.

டொட்.

12 minutes ago, Maruthankerny said:

நான் பாதி மலையாளி என்றுதான் எண்ணுகிறேன் 
காரணம் நான் நெடுந்தீவை பாதி அடியாக கொண்டவன் 
தவிர கேரள பெண்களை பார்க்கும்போது எதோ ஒரு முந்திய 
காலத்து உறவு இருப்பதுபோல் இரத்த செல்களிலேயே ஒரு ஈர்ப்பு வருகிறது 

மேலதிக ஆய்வுக்கு ஒரு இரண்டு வருட லீவில் 
கேரளா சென்று அங்கிருந்தே ஆய்வு செய்வது என்று எண்ணியுள்ளேன். 

மருதர்,

சொன்னாப்போலை, உங்கட ஹிரு அண்ணியிலயும் ஒரு மலையாள லுக் இருக்கு.

5 minutes ago, Maruthankerny said:

தவிர தமிழ் பேசும்போது நாக்கு சிலிங்காகுது 
மலையாளம் வார்த்தைகளை சொல்லிப்பார்க்க இலகுவாக இருக்கிறது 
பெண்குரல்களில் கிடக்கும்போது மீண்டு மீண்டும் கேட்க வேண்டும் போலவும் இருக்கிறது 

மருதங்கேணி நீங்கள் ஆய்வு செய்ய போகும் போது நானும் வரலாமா?  ஆய்வுக்கான முன் தயாரிப்பு வேலைகளை நான் செய்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் ஆய்வு செய்ய போகும் போது நானும் வரலாமா?  ஆய்வுக்கான முன் தயாரிப்பு வேலைகளை நான் செய்கிறேன். 

நாங்கள் ஏன் இதை ஒரு குழுவாக ஒற்றுமையாக செய்ய கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நாங்கள் ஏன் இதை ஒரு குழுவாக ஒற்றுமையாக செய்ய கூடாது?

யானும் வரட்டே? (ஆய்வுக்கு!😊)

6 minutes ago, goshan_che said:

நாங்கள் ஏன் இதை ஒரு குழுவாக ஒற்றுமையாக செய்ய கூடாது?

தலைமை ஆய்வாளர் மருதர் தான் அந்த முடிவை எடுக்கலாம். நான் அவர் சொன்ன பகுதி வேலையை மட்டும் செய்வேன். 

4 minutes ago, Justin said:

யானும் வரட்டே? (ஆய்வுக்கு!😊)

நீங்கள் Check up  மட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

மருதர்,

சொன்னாப்போலை, உங்கட ஹிரு அண்ணியிலயும் ஒரு மலையாள லுக் இருக்கு.

அதுதான் நான் சொன்னேனே 
இரத்த செல்லிலேயேதானாக  ஒரு ஈர்ப்பு வருகிறது என்று.
ஆதலால் மலையாள பெண்களை கண்டு அறிய என்னை ஒரு கருவியாகவே நீங்கள் பாவிக்கலாம்.
வெளி சத்தங்கள் ஒளிகள் அற்ற சூழலில் கருவியின் முடிவு 100 வீதம் உண்மையாக இருக்கும் 

13 minutes ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் ஆய்வு செய்ய போகும் போது நானும் வரலாமா?  ஆய்வுக்கான முன் தயாரிப்பு வேலைகளை நான் செய்கிறேன். 

11 minutes ago, goshan_che said:

நாங்கள் ஏன் இதை ஒரு குழுவாக ஒற்றுமையாக செய்ய கூடாது?

குழு ஆய்வு செய்யக்கூடிய இடங்கள் சந்திக்கும்போது 
அறிய தருகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

அதுதான் நான் சொன்னேனே 
இரத்த செல்லிலேயேதானாக  ஒரு ஈர்ப்பு வருகிறது என்று.
ஆதலால் மலையாள பெண்களை கண்டு அறிய என்னை ஒரு கருவியாகவே நீங்கள் பாவிக்கலாம்.
வெளி சத்தங்கள் ஒளிகள் அற்ற சூழலில் கருவியின் முடிவு 100 வீதம் உண்மையாக இருக்கும் 

குழு ஆய்வு செய்யக்கூடிய இடங்கள் சந்திக்கும்போது 
அறிய தருகிறேன்
 
11 minutes ago, Justin said:

யானும் வரட்டே? (ஆய்வுக்கு!😊)

மேலே பார்க்கவும். 

வெயிடிங் லிஸ்ட் ...🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இரட்டிப்பாகலாம் என்பதே என் கணிப்பும்

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

IMG-20200903-223853.jpg

இவர் சாத்தூர் . ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி . இவர் முன்னாள் மந்திரியும் கூட. 8 முறை சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

சரி, உங்கள் கூற்றுபடி வருவம் தோழர் தமிழ் மட்டும் பேச தெரிந்த ( ? ) ரெட்டியார் சமூகத்தை சார்ந்த இவர் மற்றுமோர் பெரும்பான்மை தமிழ் பேசும் சமூகமான நாயக்கர் சமுதாயத்தால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார் .. வேறு தமிழ் பேசும் சமூகத்திற்கு அவர்கள் வாய்ப்பளிக்கவில்லை (?) .

உடனே அவரின் செயல்பாடுகளுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்டு கதை வேண்டாமே.? அப்படி பார்த்தால் தங்கத்தால் தனது தொகுதியை இழைத்தவர்கள் கூட தோற்று போய் உள்ளார்கள்..

ஏதோ ஒரு புள்ளி சாதி / மதங்களையும் தாண்டி இரு சமூகங்களையும் இணைக்கிறது. வெற்றி பெற வைக்கிறது . அதுதான் செந்தமிழாம் தமிழ் மொழி ஆகும் ..

திருச்சியில் இதே கதைதான் பெரும்பான்மை தமிழ் பேசும் முத்தரையர் (?)சமூகத்தின் இடையே ஐயா கே.என்.நேரு தமிழ் மக்களுக்கு நற்சேவை செய்து வருகிறார்.

இன்னும் கிருட்டினகிரி, மதுரை , தேனி என்டு தமிழ் மொழி பேச தெரிந்த கர்நாடககாரர் வேறு எங்களுக்கும் தொகுதி வேண்டும் என்று நிக்கினம் .. தேவகவுடவே பிரச்சாரத்திற்கு எல்லாம் வருகிறார் என்டால் பாருங்களேன்.

திருப்பூர், கோவையில் செந்தமிழாம் தமிழ் தெரிந்த பனியன் கம்பெனி பீகாரிகள் ரேஷன் கார்டு வாங்கிட்டினம்.. வரும் வருடம்களில் வார்டு கவுன்சிலரில் அவர்களும் ஆரம்பிப்பினம் .

செங்கல்பட்டு , மதுராந்தகம் திண்டிவனம்  ஏரியாக்களில் அக்கம்சந்த், ஹீரா சந்த் , உக்கம் சந்த் என்டு தமிழ் தெரிந்த சந்த்கள் எம்.எல்.ஏ களாக எம்.பி. ஆக தமிழ் உலகிற்கு சேவை செய்கினம் ..

கன்னியாகுமரி , நாகர்கோவில் பகுதியில் தமிழ் சேட்டன்களின் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது .

போக வேலூர் , குடியாத்தம் ,திருத்தணி பகுதிகளில் தமிழ் தெரிந்த மனவாடு சகோதரர்கள் மங்கள கீதம் இசைக்கினம் ..

"எல்லொருக்குமே தமிழ் தெரியும் ஆனால் தமிழனை மட்டும் தேர்வு செய்யமாட்டார்கள் .. ஏனெனில் அவர்களும் தான் தமிழர்களாச்சே.?"

====== (வணக்கம்)====👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சரி தோழர் உங்கள் வழிக்கே வருகிறேன். 

உங்கள் கணிப்பில், உங்கள் வரைவிலக்கண படி இப்போ தமிழ்நாடில் இருக்கும் வாக்காளரில் எத்தனை சதவீதம் பெயர் தமிழர் இல்லாதோர்?

அத்தனை பேரையும் ஒதுக்கி, எதிரியாக்கி ஒரு அரசியல் சாத்தியமா தோழர்?

தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதார் வருகை 1000 ஆண்டு விசயம் தோழர். பிற்கால சோழர்கள் தெரியுமா ? அவர்களுக்கு வரலாற்று ஆசிரியர் கொடுக்கும் பெயர் சாளுக்கிய சோழர்கள்.

இனத்தூய்மை பார்த்தால் - முதலாம் குலோதுங்கனுக்கு பிறகு சோழர்களே தமிழர் இல்லை என்றும் சொல்லலாம் தோழர்.

உங்கள் பிரச்ச்னை உண்மையில் 600 வருடத்து முன் வந்தவன் இல்லை தோழர். இப்போ வருபவன். 

உங்கள் அடிப்படை பிரச்சினை நீங்கள் இந்தியாவின் அங்கமாக இருப்பது தோழர்.

நீங்கள் இந்தியாவின் அங்கமாக இல்லாதவிடத்து, உள்ளே இருப்பவனை எல்லாம் தமிழாக்கி ஒரே குடையின் கீழ் கொண்டு வரமுடியும். ஆனால் இந்தியாவில் இருப்பதால் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது.

உங்கள் அரசியலில் இந்த அடிப்படை பிரச்சனைக்கு பதில் இல்லை. 

அப்புறம் சமுதாய அரசியல் சொன்னீர்கள் - ஏற்கிறேன் ஆனால் இதே மாதிரியான அணுகுமுறை தேவர், வன்னிய, தலித் சமுதாயம் அதிகம் உள்ள இடங்களிலும் உண்டே தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அத்தனை பேரையும் ஒதுக்கி, எதிரியாக்கி ஒரு அரசியல் சாத்தியமா தோழர்?

ஒதுக்கி என்டா எதிரி ஆகுதல் என்டு பொருள் இல்லை அல்லவா  தோழர்.? தமிழனை அவன் மண்ணை ஆள விட்டு ஒதுங்கி இருத்தல் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.?

9 minutes ago, goshan_che said:

உங்கள் பிரச்ச்னை உண்மையில் 600 வருடத்து முன் வந்தவன் இல்லை தோழர். இப்போ வருபவன். 

அதற்கும் முன் உள்ள தமிழ் சமூகத்திற்கே வாய்ப்பு இல்லை அடிப்படை சிக்கல் ஆதி சமூக தமிழ் குடிகளுக்கே உரிய  அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை ..

21 minutes ago, goshan_che said:

(சிறு தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் வள்ளுவர் சமூகத்தினர்)

625.500.560.350.160.300.053.800.900.160.

 பெண்கள் முதற்கொண்டு 50% , உரிய பிரதித்துவம் தருகிறவர்களையும் இனவாதி ,  அது இது என்டு தூற்ற தொடங்குகிறோம் ..

21 minutes ago, goshan_che said:

நீங்கள் இந்தியாவின் அங்கமாக இல்லாதவிடத்து, உள்ளே இருப்பவனை எல்லாம் தமிழாக்கி ஒரே குடையின் கீழ் கொண்டு வரமுடியும். ஆனால் இந்தியாவில் இருப்பதால் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது.

101 % உண்மை

22 minutes ago, goshan_che said:

அப்புறம் சமுதாய அரசியல் சொன்னீர்கள் - ஏற்கிறேன் ஆனால் இதே மாதிரியான அணுகுமுறை தேவர், வன்னிய, தலித் சமுதாயம் அதிகம் உள்ள இடங்களிலும் உண்டே தோழர்.

☺️.😊 உண்மை என்ன .? மேற்கூறிய பெரும்பான்மை சமூகங்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள்..(? )  இரண்டு திராவிட கட்சிகளும் அதே சமூகத்தை சார்ந்த ஆட்களை நிறுத்தி வாக்குகளை பிரித்து கூட்டி கழித்து மற்ற சமூக வாக்குகளால் தான் கரையேறுகிறார்கள் .. பிரிப்பு அரசியல்தான் இப்போ நடக்கிறது !

நான் மேற்கூறிய உதாரணம் சாத்தூர் ராமச்சந்திரனை  ரெட்டியார் சமூகமானாலும் நாயக்கர் சமூகம் தொடர்ந்து தேர்ந்தெடுக்க காரணம் " மனவாடு "  என்பது தானே .? இரண்டாம் நிலையில் உள்ள தமிழனுக்கு ஏன் இறங்கி வரவில்லை.?

இப்படியே தொடர்ந்து அவர்களின் இன பெருக்க வீதத்தினையும் கணக்கில் எடுங்கள் .! தனித்தனி தீவுகளாக மாறி வருகிறார்கள் அல்லவா.? ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அப்போதும் கொடுத்தேன் அண்ணா.

என் தங்கச்சி புருசன் என் தங்கச்சிய போட்டு அடிகிறான். அதுக்காக அவன் தங்கச்சியான என் பொண்டாடிய, நானும் போட்டு மதிக்கோணுமா?

சரி கோசான்
இப்போது நீங்கள் மட்டுமல்ல ஜஸ்ரின் துல்பன் எல்லோரும் என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?
உங்களது கொள்கைகள் தான் என்ன?நான் நாங்கள் போகும் பாதைகள் பிழை என்றால் சரியான பாதை தான் என்ன?
உங்கள் அரசியல் பின்புலம் தான் என்ன?
அல்லது எதுவுமே இல்லையா?
 இவைகளை தெளிவாக கூறினால்
உங்கள் பாதை நாம் போறதைவிட சரியான திடமான தமிழர்களுக்கு நல்ல பாதை என்றால் நாங்களும் உங்கள் வழியில் பயணிக்க உதவுமல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒதுக்கி என்டா எதிரி ஆகுதல் என்டு பொருள் இல்லை அல்லவா  தோழர்.? தமிழனை அவன் மண்ணை ஆள விட்டு ஒதுங்கி இருத்தல் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.?

அதற்கும் முன் உள்ள தமிழ் சமூகத்திற்கே வாய்ப்பு இல்லை அடிப்படை சிக்கல் ஆதி சமூக தமிழ் குடிகளுக்கே உரிய  அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை ..

(சிறு தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் வள்ளுவர் சமூகத்தினர்)

625.500.560.350.160.300.053.800.900.160.

 பெண்கள் முதற்கொண்டு 50% , உரிய பிரதித்துவம் தருகிறவர்களையும் இனவாதி ,  அது இது என்டு தூற்ற தொடங்குகிறோம் ..

101 % உண்மை

☺️.😊 உண்மை என்ன .? மேற்கூறிய பெரும்பான்மை சமூகங்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள்..(? )  இரண்டு திராவிட கட்சிகளும் அதே சமூகத்தை சார்ந்த ஆட்களை நிறுத்தி வாக்குகளை பிரித்து கூட்டி கழித்து மற்ற சமூக வாக்குகளால் தான் கரையேறுகிறார்கள் .. பிரிப்பு அரசியல்தான் இப்போ நடக்கிறது !

நான் மேற்கூறிய உதாரணம் சாத்தூர் ராமச்சந்திரனை  ரெட்டியார் சமூகமானாலும் நாயக்கர் சமூகம் தொடர்ந்து தேர்ந்தெடுக்க காரணம் " மனவாடு "  என்பது தானே .? இரண்டாம் நிலையில் உள்ள தமிழனுக்கு ஏன் இறங்கி வரவில்லை.?

இப்படியே தொடர்ந்து அவர்களின் இன பெருக்க வீதத்தினையும் கணக்கில் எடுங்கள் .! தனித்தனி தீவுகளாக மாறி வருகிறார்கள் அல்லவா.? ☺️..😊

ஒதுக்கினால் எதிரி ஆகுவார்கள் தோழர். நாம் ஏன் இலங்கைக்கு எதிரியானோம்? படிப்பில், வேலைவாய்ப்பில் ஒதுக்கியதால்தான் தோழர். அதுதான் ஆரம்பம்.

அதுவும் எப்படி ஒதுக்கிறோம் நீ தமிழனே இல்லை என்று. அவர்கள் சும்மா போவார்களா ? இல்லை. நான் தமிழன் இல்லை என்றால் அப்போ யார்? தெலுங்கன் என ஆந்திரா போக முடியாது. இந்தியன் என்பதைதான் பற்ற வேண்டும். இந்தியன் என்றால் - அடுத்து இந்துதுவா, அடுத்து? பாஜக தானே தோழர்? 

மானவாடு சாதிகள் பிரிப்பது போல தானே சகோ முன்னிலை தமிழ் சாதிகளும் பிரிகிறார்கள். ஒரு தேவர் இல்லை என்றால் அகமுடையார் இல்லை என்றால் கள்ளர். ஆகவே இதை ஏன் மானவடுகள் தமக்குள் பிரிக்கிறார்கள் என்று பார்கிறீகள்? இது ஆதிக்க சாதிகள் தமக்குள் பிரிப்பது அல்லவா?

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை தோழர். 

தோராயமாக தமிழ்நாட்டின் வாக்காளரில் எத்தனை சதவீதம் பேரை இந்த தமிழர் அல்லாதோர் பட்டியலில் இடுகிறீகள்?

இதை பற்றி கொஞ்சம் தெளிவு வேண்டும். எனக்கு 30-35% எனப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
1 hour ago, goshan_che said:

நீங்கள் இந்தியாவின் அங்கமாக இல்லாதவிடத்து, உள்ளே இருப்பவனை எல்லாம் தமிழாக்கி ஒரே குடையின் கீழ் கொண்டு வரமுடியும். ஆனால் இந்தியாவில் இருப்பதால் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது.

101 % உண்மை

இதை ஏன் தடுக்க முடியாது என்கிறீர்கள்?
மற்றைய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவனுக்கே 85-90 வேலைவாய்ப்பு என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் எல்லோருக்கும் திறந்து விட்டுள்ளார்களே ஏன்?
இதுக்கு தான் அந்தந்த மாநிலத்தவனே அவனை ஆழவேண்டுமென்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஒதுக்கினால் எதிரி ஆகுவார்கள் தோழர். நாம் ஏன் இலங்கைக்கு எதிரியானோம்? படிப்பில், வேலைவாய்ப்பில் ஒதுக்கியதால்தான் தோழர். அதுதான் ஆரம்பம்.

அதுவும் எப்படி ஒதுக்கிறோம் நீ தமிழனே இல்லை என்று. அவர்கள் சும்மா போவார்களா ? இல்லை. நான் தமிழன் இல்லை என்றால் அப்போ யார்? தெலுங்கன் என ஆந்திரா போக முடியாது. இந்தியன் என்பதைதான் பற்ற வேண்டும். இந்தியன் என்றால் - அடுத்து இந்துதுவா, அடுத்து? பாஜக தானே தோழர்? 

மானவாடு சாதிகள் பிரிப்பது போல தானே சகோ முன்னிலை தமிழ் சாதிகளும் பிரிகிறார்கள். ஒரு தேவர் இல்லை என்றால் அகமுடையார் இல்லை என்றால் கள்ளர். ஆகவே இதை ஏன் மானவடுகள் தமக்குள் பிரிக்கிறார்கள் என்று பார்கிறீகள்? இது ஆதிக்க சாதிகள் தமக்குள் பிரிப்பது அல்லவா?

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை தோழர். 

தோராயமாக தமிழ்நாட்டின் வாக்காளரில் எத்தனை சதவீதம் பேரை இந்த தமிழர் அல்லாதோர் பட்டியலில் இடுகிறீகள்?

இதை பற்றி கொஞ்சம் தெளிவு வேண்டும். எனக்கு 30-35% எனப்படுகிறது.

1.ஏன் ஆந்திரா போக வேண்டும். இங்கேயே ஆள நினைக்காமல் தொழில் செய்யலாம் அல்லவா.?

2.மனவாடுகள் தங்களுக்குள் பிரிந்து இருந்தாலும் மற்றுமோர் மனவாடுவைத்தான்  தேர்ந்தெடுக்க .. அவயள் காரியத்தில் கெட்டி (?)அவர்களை போய் நீ தமிழன் என்டு எமது வண்டியில் ஏன் ஏற்றுவானேன்.?

3.தமிழர் அல்லாதோர் பட்டியல் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடக்க வில்லை ..

ஆனால் அரசியல் விமர்சகர்கள், ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் ஏடுகளின் தொகுதி சர்வே  mp &  mla வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பனவற்றில் உள்ள புள்ளி விபரங்களை கூட்டி கழித்து ஒரு முடிவுக்கு வர இயலும்.👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி கோசான்
இப்போது நீங்கள் மட்டுமல்ல ஜஸ்ரின் துல்பன் எல்லோரும் என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?
உங்களது கொள்கைகள் தான் என்ன?நான் நாங்கள் போகும் பாதைகள் பிழை என்றால் சரியான பாதை தான் என்ன?
உங்கள் அரசியல் பின்புலம் தான் என்ன?
அல்லது எதுவுமே இல்லையா?
 இவைகளை தெளிவாக கூறினால்
உங்கள் பாதை நாம் போறதைவிட சரியான திடமான தமிழர்களுக்கு நல்ல பாதை என்றால் நாங்களும் உங்கள் வழியில் பயணிக்க உதவுமல்லவா!

நாங்கள் புதிதாக சொல்ல என்ன அண்ணை இருக்கு. செல்வா-பிரபாவின் மதச்சார்பற்ற, அகண்ட தமிழ் தேசியத்தை பின் பற்றுங்கள் என்பதே நாம் சொல்வது.

1. தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்ற குடையில் நான் மேலே சொன்ன வரையறையில் இயங்குங்கள். சீமானை முன்னிலை படுதுங்கள். திராவிடம் காலவதியாகிய கொள்கை என்பதை சொல்லி, ஆனால் பெரியாரிசத்தின் ஏனைய கொள்கைகளின் உயிர்பை உறுதி செய்யுங்கள். எப்படி இந்த திராவிட கட்சிகள் கொள்ளை அடித்ததார்கள் என்று சொல்லுங்கள். அதிகாரத்தை நோக்கி நகருங்கள். சீமான் தலைமையில், தமிழ் தேசிய சக்திகள் எல்லாவறையும் சேர்த்து அதிகாரத்தை கைபற்றுங்கள். அந்த ஆட்சி தமிழ் தேசிய ஆட்சியாக அமையும். அதிகாரம் கைவந்த பின், தேவையான சீர்திருத்தங்களை செய்து வாய்புக்களை பரவலாக்கி தமிழ் தேசியத்தை மேலும் வலுப்படுத்துங்கள். இது ஒன்றும் புதிதல்ல - நெல்சன் மண்டேலா செய்ததுதான்.

2. இலங்கையில் - தமிழ் தேசியசக்திகள் எல்லாம் ஒரு குடையில் வந்து, 13ஐ முழுமையாக அமல்படுத்த செய்யவேண்டிய சகலதையும் செய்யுங்கள்.

31 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை ஏன் தடுக்க முடியாது என்கிறீர்கள்?
மற்றைய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவனுக்கே 85-90 வேலைவாய்ப்பு என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் எல்லோருக்கும் திறந்து விட்டுள்ளார்களே ஏன்?
இதுக்கு தான் அந்தந்த மாநிலத்தவனே அவனை ஆழவேண்டுமென்கிறார்கள்.

இப்போ தமிழ்நாட்டை ஆள்பவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?

சீமானின் வரையறைப்படி ஜெ சீரங்கத்து தமிழ் பிராமின். பன்னீர் முக்குலம். எடப்பாடி கெளண்டர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நாங்கள் புதிதாக சொல்ல என்ன அண்ணை இருக்கு. செல்வா-பிரபாவின் மதச்சார்பற்ற, அகண்ட தமிழ் தேசியத்தை பின் பற்றுங்கள் என்பதே நாம் சொல்வது.

1. தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்ற குடையில் நான் மேலே சொன்ன வரையறையில் இயங்குங்கள். சீமானை முன்னிலை படுதுங்கள். திராவிடம் காலவதியாகிய கொள்கை என்பதை சொல்லி, ஆனால் பெரியாரிசத்தின் ஏனைய கொள்கைகளின் உயிர்பை உறுதி செய்யுங்கள். எப்படி இந்த திராவிட கட்சிகள் கொள்ளை அடித்ததார்கள் என்று சொல்லுங்கள். அதிகாரத்தை நோக்கி நகருங்கள். சீமான் தலைமையில், தமிழ் தேசிய சக்திகள் எல்லாவறையும் சேர்த்து அதிகாரத்தை கைபற்றுங்கள். அந்த ஆட்சி தமிழ் தேசிய ஆட்சியாக அமையும். அதிகாரம் கைவந்த பின், தேவையான சீர்திருத்தங்களை செய்து வாய்புக்களை பரவலாக்கி தமிழ் தேசியத்தை மேலும் வலுப்படுத்துங்கள். இது ஒன்றும் புதிதல்ல - நெல்சன் மண்டேலா செய்ததுதான்.

2. இலங்கையில் - தமிழ் தேசியசக்திகள் எல்லாம் ஒரு குடையில் வந்து, 13ஐ முழுமையாக அமல்படுத்த செய்யவேண்டிய சகலதையும் செய்யுங்கள்.

இப்போ தமிழ்நாட்டை ஆள்பவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?

சீமானின் வரையறைப்படி ஜெ சீரங்கத்து தமிழ் பிராமின். பன்னீர் முக்குலம். எடப்பாடி கெளண்டர்.

என்னப்பா இதைத் தானே இவ்வளவு நாளாக தொண்டை கிழிய கத்துக்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1.ஏன் ஆந்திரா போக வேண்டும். இங்கேயே ஆள நினைக்காமல் தொழில் செய்யலாம் அல்லவா.?

2.மனவாடுகள் தங்களுக்குள் பிரிந்து இருந்தாலும் மற்றுமோர் மனவாடுவைத்தான்  தேர்ந்தெடுக்க .. அவயள் காரியத்தில் கெட்டி (?)அவர்களை போய் நீ தமிழன் என்டு எமது வண்டியில் ஏன் ஏற்றுவானேன்.?

3.தமிழர் அல்லாதோர் பட்டியல் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடக்க வில்லை ..

ஆனால் அரசியல் விமர்சகர்கள், ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் ஏடுகளின் தொகுதி சர்வே  mp &  mla வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பனவற்றில் உள்ள புள்ளி விபரங்களை கூட்டி கழித்து ஒரு முடிவுக்கு வர இயலும்.👍

1. அப்படி எந்த சமுதாயமும் விட்டு விடாது. இலங்கையில் தமிழர்கள் விடவில்லையே? ஆகவே அவர்கள் பிஜேபி பக்கம் போயே தீருவார்கள். ஆகவேதான் சொல்கிறேன், சீமான் செய்வது பிஜேபி யின் B team வேலை என.

2. வேறு வழியில்லை. அவர்களை சாதியாக கருதி, தமிழ்-மயப்படுதுவதை செய்வதை தவிர வேறு வழியில்லை. (இலங்கை நீர்கொழும்பு தமிழர் உதாரணம்)

3. இதென்ன அரசியல் தோழர் - எத்தனை சதவீதம் தமிழர் அல்லாதவர் என தெரியாமலே, அவர்களை ஒதுங்க சொல்லும் அரசியல்? பார்த்து 80% தமிழர் அல்லாதோராய் இருக்க போறாங்க 😂

1 minute ago, விசுகு said:

என்னப்பா இதைத் தானே இவ்வளவு நாளாக தொண்டை கிழிய கத்துக்றோம்

உங்களை பற்றி தெரியாது அண்ணை. ஆனால் நான் மேலே எழுதியது அல்ல சீமான் செய்யும் அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு பேசும் மக்கள் 6,3வீதம் என்று எங்கோ படித்த ஞாபகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

என்னப்பா இதைத் தானே இவ்வளவு நாளாக தொண்டை கிழிய கத்துக்றோம்

விசுகர்! அவர் நக்கலுக்கு சொல்கிறார் என நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.