ஈழத்தமிழர் அரசியல்
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
25
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்சிரியாவின் கிளர்ச்சியாளர்களிற்கு உக்ரைன் ஆளில்லா விமானங்களை வழங்கியது – வோசிங்டன் போஸ்ட் 13 DEC, 2024 | 08:11 AM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்கு முன்பாக உக்ரைன் அவர்களிற்கு 150 ஆளில்லா விமானங்களையும் அவற்றை இயக்குவதற்காக 20 பேரையும் வழங்கியிருந்தது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனின் இராணுவநடவடிக்கைகளுடன் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் இதனை தெரிவித்துள்ளது. மத்தியகிழக்கில் ரஸ்யாவையும் அதன் சிரிய சகாவையும் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியாக உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் நான்கு ஐந்து வாரங்களிற்கு முன்னர் ஆளில்லா விமானங்களை வழங்கியிருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனின் புலனாயவு பிரிவின் முகவர்கள் சிரியாவின் இட்லிப்பில் காணப்படுகின்றனர் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் செப்டம்பர் மாதம் சிரிய செய்தித்தாள் ஒன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் முகவர்கள் புதிய தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்,கிளர்ச்சிக்காரர்களை சேர்க்கின்றனர் என அவர் தெரிவித்திருந்தார். உக்ரைனின் பிரதான புலனாய்வு பிரிவு சிரியாவின் இட்லிப்பில் காணப்படுகின்றனர் என கடந்த மாதம் சிரியாவிற்கான ரஸ்யாவின் விசேட பிரதிநிதி தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/201126
-
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சபாநாயகரின் கூற்றினை கருத்திற் கொண்டு செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு இது பொருத்தமான காலம் கிடையாது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். இதன்படி, சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/313642
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தேங்காய் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது! நாட்டின் அண்மைக்காலமாக நிலவிவரும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளமையும் இதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ‘குறுகிய காலத்திற்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதென்றால் குரங்களுகளின் எண்ணிக்கையில் உடனடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியொரு உடனடி அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலை 27-28 சென்டிகிரேட் வெப்பநிலையாகும். ஆனால் 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது” இவ்வாறு பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார் இதேவேளை உலகிலேயே அதிக தேங்காய் பாவனையைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்வதாகவும், ஒருவர் வருடத்திற்கு 114 தேங்காய்களை உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412082
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts