Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.!

Screenshot-2020-09-18-10-39-12-265-org-m

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இணையவழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவ சிரேஷ்ட ஆலோசகர்கள், பேரவை உறுப்பினர்கள், விரிவுரைரயாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

அண்மையில் நடைபெற்ற பகிடிவதை தொடர்பில் உத்தியோகப்பற்ற முறையில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் 10 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த பகிடி வதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவரும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இனங்காணப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

இதேவேளை எதிர்காலத்தில் பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பிலும் விளக்கமளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பகிடிவதைகளை கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தினதும் ஒத்துழைப்பினையும் கோரியுள்ளனர்.

http://aruvi.com/article/tam/2020/09/18/16894/

  • Replies 50
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல

BharatiSeptember 18, 2020

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது, அரசாங்கம் தேர்தல் காலங்களில் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு தெரிவித்திருந்தது. எனினும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் புதிய மாணவர்கள் மத்தியில் பகிடிவதை இடம்பெற்றுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அது தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதென கேள்வி எழுப்பினர்.

கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அது தொடர்பில் அரசாங்கம் தீவிரமான கவனம் செலுத்தி வருகின்றது புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பில் செயல்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/69570

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்பவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் – துணைவேந்தர் சிறிசற்குணராஜா Sep 18, 20200

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய இம்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.கொரோனாவிற்கு பின்னர் விரிவுரைகள் ஒன்லைனில் நடக்கிறது. ராகிங்கும் ஒன்லைனிற்கு சென்றுள்ளது. பலாலி இராணுவ முகாமில் லெப்டினனட் தர அதிகாரியாக உள்ள உளவியல் பெண் வைத்தியர் ஒருவரின் சகோதரனும் ராகிங் செய்யப்பட்டுள்ளார்.

அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை தெரிவித்தார். சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள். பொது இடத்தில் சொல்ல முடியாதது. சட்டையை கழற்றி உடம்பை காட்டுவது மாத்திரமல்ல. அதற்கு மேலாகவும் கேட்கப்பட்டது. அது கிட்டத்தட்ட “நீலவான நிகழ்வுகளை” எல்லாம் முழுக்க பார்ப்பதை போல உள்ளது.

அக்கா பலாலியில் இராணுவத்தில் இருக்கிறார் தானே என்றும் ராகிங்கில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை. ஏற்கனவே பல்கலகழகத்தில் நடந்த மோதல் ஒன்றில், அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டினேன். பல்கலைக்கழகத்திற்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளனர்.சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு பட்டங்கள் பெற முடியாது, 4ஆம் வருட கற்கையில் ஈடுபட முடியாது, சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்து கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு சிரேஸ்ட மாணவர்களால் புதுமுக மாணவர்களைப் பாலியல் ரீதியாக இம்சிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட “சைபர் ராக்கிங்” தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.இந்தச் சந்திப்பின் போது, துணைவேந்தருடன், வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன், சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ்உமேஸ், மாணவர் நலச்சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன் மற்றும் வணிக முகாமைத்துவ பீடத்தின் மாணவ ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை வணிக, முகாமைத்துவ பீட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் மிக வேகமாக ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அந்த விசாரணையின் அடிப்படையில் 10 மணித்தியால விசாரணையில் சந்தேகத்திற்குரிய 2ஆம் வருடத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வகுப்பு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிற்கு உதவியதற்காக விசாரணையில் நம்பக தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இந்த இம்சையில் ஈடுபட்டவர்களிற்கு சிறப்பு கற்கை நெறி வழங்கப்படாது, ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.(15
 
http://www.samakalam.com/uncategorized/யாழ்-பல்கலைக்கழகத்தில்-20/

பகிடிவதை விவகாரம்: 4 சிங்கள மாணவர்கள் உடனடியாக நிறுத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவர்களுக்கு இப்படி நடந்தால் இதேபோல் நடவடிக்கை பாயுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுமா..... அப்பிடி என்னபகிடிவதை செய்திருப்பாளுக? தமிழ் மாணவர்களை முடிஞ்சு விடாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Elugnajiru said:

தமிழ் மாணவர்களுக்கு இப்படி நடந்தால் இதேபோல் நடவடிக்கை பாயுமா? 

பாயாது. பகிடிவதை நடாத்தியர்களைப் பாதுகாத்து அவர்கள் பட்டம் பெற்றுவந்ததும், நாட்டு நிர்வாகத்தில் உயர்பதவிகள் வழங்கப்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளரும், கொள்ளைக்காரரும் ஆட்சி நடத்துற நாட்டில வேற எதை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

தமிழ் மாணவர்களுக்கு இப்படி நடந்தால் இதேபோல் நடவடிக்கை பாயுமா? 

வெளியேற்றப்பட்டவர்கள் சிங்களமாணவர்கள்  தானே??

4 hours ago, கிருபன் said:

யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு சிரேஸ்ட மாணவர்களால் புதுமுக மாணவர்களைப் பாலியல் ரீதியாக இம்சிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட “சைபர் ராக்கிங்” தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.இந்தச் சந்திப்பின் போது, துணைவேந்தருடன், வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன், சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ்உமேஸ், மாணவர் நலச்சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன் மற்றும் வணிக முகாமைத்துவ பீடத்தின் மாணவ ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

1 hour ago, satan said:

கள்ளரும், கொள்ளைக்காரரும் ஆட்சி நடத்துற நாட்டில வேற எதை எதிர்பார்க்க முடியும்?

அப்போ ராகிங் ஆதரிக்கிறீர்களா ?
 
2 hours ago, Paanch said:

பாயாது. பகிடிவதை நடாத்தியர்களைப் பாதுகாத்து அவர்கள் பட்டம் பெற்றுவந்ததும், நாட்டு நிர்வாகத்தில் உயர்பதவிகள் வழங்கப்படலாம். 

இன்று எமது சமுத்காயத்தில் பல வைதியர்களாக பொறியலாளர்களாக இருக்கும் பலர் மோசமான பகிடிவதையில் ஈடுபட்டவர்களே. என்ன அவர்கள் எவரும் பிடிபடவில்லை. இதில் எமது தமிழ் மாணவர்கள் 100% அடக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தமிழ் மாணவர்களை முடிஞ்சு விடாமல் இருந்தால் சரி.

தமிழ் மாணவர்கள் தமிழ் மாணவர்களை வைதைத்து எடுத்ததை பற்றி ஒருவரும் சாத்தானுக்கு சொல்லவில்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையும் இல்லை படிப்புவதையும் இல்லை.

ஆனால்.. நம்மாக்கள்.. சிங்களவனோட சேர்ந்துகிட்டு.. பகிடிவதை என்னே படிப்புக் காலத்தை வீணடிக்கிறாங்க. 

சிங்களவன் போற இடமெல்லாம்.. வேண்டாத ஆணி புடுங்கிறதே வேலை. திருந்துங்கடா.. உலகம் எங்கோ முன்னேறிப் போய்கிட்டு இருக்கு.. நீங்க மட்டும் பின்னோக்கிப் போய்க்கிட்டுருக்கீங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் மாணவர்கள் தமிழ் மாணவர்களை வைதைத்து எடுத்ததை பற்றி ஒருவரும் சாத்தானுக்கு சொல்லவில்லையோ

யாழ் களத்திலுள்ள பலர் பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் என்பது என் துணிபு. 😜

10 minutes ago, nedukkalapoovan said:

உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையும் இல்லை படிப்புவதையும் இல்லை.

ஆனால்.. நம்மாக்கள்.. சிங்களவனோட சேர்ந்துகிட்டு.. பகிடிவதை என்னே படிப்புக் காலத்தை வீணடிக்கிறாங்க. 

சிங்களவன் போற இடமெல்லாம்.. வேண்டாத ஆணி புடுங்கிறதே வேலை. திருந்துங்கடா.. உலகம் எங்கோ முன்னேறிப் போய்கிட்டு இருக்கு.. நீங்க மட்டும் பின்னோக்கிப் போய்க்கிட்டுருக்கீங்க. 

பகிடிவதைக்கும் இனங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு ? 

புரியவில்லை 🤥

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

யாழ் களத்திலுள்ள பலர் பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் என்பது என் துணிபு. 😜

பகிடிவதைக்கும் இனங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு ? 

புரியவில்லை 🤥

இருக்கிறது. அதேன் மேற்கு நாடுகளில் உள்ள நம்மவர்கள் இதனைச் செய்யவில்லை.

அதேன் சொறீலங்காவில் உள்ளவை மட்டும் செய்யினம். காரணம் சொறீலங்காவில் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் சிங்களவர்களே. மாதனமுத்தாக்களும்.... படிப்பறிவற்ற மனிதப் படுகொலைகளில் ஈடுபடும்.. சிங்கள.. இராணுவமும் நாட்டை ஆண்டால் இதுதான் கதி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

யாழ் களத்திலுள்ள பலர் பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் என்பது என் துணிபு. 😜

இருக்கும் இருக்கும். ஆனால் அப்படிச் செய்தது தவறு என்று இப்போதும் உணராவிட்டால் அவர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் என்னிடம் இருந்து வராது.

நெடுக்ஸ் சொன்னதுபோல உலகின் முன்னணிப் பல்கலைக் கழகங்களில் இப்படியான ராக்கிங் எல்லாம் கிடையாது.

நல்லவேளை இலங்கையில் இருந்து பத்தாம் வகுப்புடன் வெளியேறிவிட்டேன். உயர்தரம் படித்து பல்கலைக்கு தெரிவாகி இருந்திருந்தால் (கனவு இருந்தது), பூவரசம் இலையில் எடுத்துத் தா என்று கேட்கும் மனவிகாரம் பிடித்தவர்களிடம் சிக்கியிருக்கவேண்டி வந்திருக்கும்.😱

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

இருக்கிறது. அதேன் மேற்கு நாடுகளில் உள்ள நம்மவர்கள் இதனைச் செய்யவில்லை.

அதேன் சொறீலங்காவில் உள்ளவை மட்டும் செய்யினம். காரணம் சொறீலங்காவில் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் சிங்களவர்களே. மாதனமுத்தாக்களும்.... படிப்பறிவற்ற மனிதப் படுகொலைகளில் ஈடுபடும்.. சிங்கள.. இராணுவமும் நாட்டை ஆண்டால் இதுதான் கதி. 

நீங்கள் பகிடிவதையை இன முரண்பாட்டுடன் இணைப்பது பொருத்தமற்றதாகப்படுகிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இருக்கும் இருக்கும். ஆனால் அப்படிச் செய்தது தவறு என்று இப்போதும் உணராவிட்டால் அவர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் என்னிடம் இருந்து வராது.

நெடுக்ஸ் சொன்னதுபோல உலகின் முன்னணிப் பல்கலைக் கழகங்களில் இப்படியான ராக்கிங் எல்லாம் கிடையாது.

நல்லவேளை இலங்கையில் இருந்து பத்தாம் வகுப்புடன் வெளியேறிவிட்டேன். உயர்தரம் படித்து பல்கலைக்கு தெரிவாகி இருந்திருந்தால் (கனவு இருந்தது), பூவரசம் இலையில் எடுத்துத் தா என்று கேட்கும் மனவிகாரம் பிடித்தவர்களிடம் சிக்கியிருக்கவேண்டி வந்திருக்கும்.😱

Ragging உலகம் முழுவதும் உள்ள விடயங்கள்தான். ஆனால் அதன் தன்மை கடுமை,  முறைகளும் நோக்கங்களும் வேறுபடுகின்றன. பொதுவாக பொதுவெளியில் தெரியும், கதைக்கும், கேட்கும் பகிடிவதைக்கும்,  உண்மையில் நடைபெறும் பகடிவதைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளதுதான் உண்மை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

Ragging உலகம் முழுவதும் உள்ள விடயங்கள்தான்.

அப்படியா! பிரித்தானியாவில் இப்படி ஒரு மோசமான கலாச்சாரம் இல்லவே இல்லை. முதல் வாரம் freshers week என்று pub crawl எல்லோருடன் செய்வதுதான் உண்டு. சீனியர்கள் யாரையும் நோண்டுவது இல்லை. 

பல்வேறு society இருக்கும். அவற்றில் இணைந்து networking செய்யலாம். 

தென்னாசிய நாடுகளில்தான் இந்த ராக்கிங் மோசமான பாலியல் வதையாக இப்போதும் தொடர்கின்றது. இது ஆளுமையை வளர்க்க என்பதெல்லாம் பசப்புவார்த்தைகள். 

ஒரு கதை இருக்கு. படித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் சீனியர்களின்  உதவி  தேவைப்படுவது போல் 

புதியவர்களின் கற்கைநெறி  இருப்பதில்லை???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மேற்கு நாடுகளில் உள்ள நம்மவர்கள் இதனைச் செய்யவில்லை.

அதேன் சொறீலங்காவில் உள்ளவை மட்டும் செய்யினம்.

உண்மை.

தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் நாட்டில், இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளிலும் இந்த கொடுமைகள் இருக்கிறது.
மேற்கு நாடுகளில் சாதாரண பல்கலைக் கழகங்களிலும் இந்த கொடுமைகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

யாழ் களத்திலுள்ள பலர் பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் என்பது என் துணிபு. 😜

நாங்கள் anti-ragging குரூப்பாக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்கள் anti-ragging குரூப்பாக்கும்!!

நாங்கள் ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அப்படியா! பிரித்தானியாவில் இப்படி ஒரு மோசமான கலாச்சாரம் இல்லவே இல்லை. முதல் வாரம் freshers week என்று pub crawl எல்லோருடன் செய்வதுதான் உண்டு. சீனியர்கள் யாரையும் நோண்டுவது இல்லை. 

பல்வேறு society இருக்கும். அவற்றில் இணைந்து networking செய்யலாம். 

தென்னாசிய நாடுகளில்தான் இந்த ராக்கிங் மோசமான பாலியல் வதையாக இப்போதும் தொடர்கின்றது. இது ஆளுமையை வளர்க்க என்பதெல்லாம் பசப்புவார்த்தைகள். 

ஒரு கதை இருக்கு. படித்துப் பாருங்கள்.

நான் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.

எல்லாநாடுகளிளும் பகிடிவதை இருக்கிறது(?) அதன் தன்மையும் கடுமையின் அளவும் மாறுபடுகிறதே தவிர உள்ளடக்கம் ஒன்றுதான். பிரித்தானியாவில் இல்லை என்று கூறாதீர்கள். பிரசித்திபெற்ற Oxford, Cambridge பல்கலைக்கழகங்களில் கூட இந்தக் கலாச்சாரம் உண்டு. குறிப்பாக மாணவர் விடுதிகளில் இது உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரிகளின் மாணவ மாணவியர் விடுதிகளிலும் இது உண்டு. 

பெயர்கள்தான் வேறு வேறே தவிர உள்ளடக்கமும் நோக்கமும் ஒன்றுதான். அதுதவிர

பகிடிவதைக் கலாச்சாரம் என்பது பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல ஆயுதப்படைகளிலும் பரவலாக இருக்கிறது.

அகதிகளிடையேயும்புதிய குடிவரவாளரிடையேயும் இந்த மனநிலை உள்ளது.

பகிடிவதையிலுள்ள நன்மை தீமை பற்றியதல்ல என் கருத்து. இங்கே பலரது கருத்துக்கள் ""தென்னாசியாவில் மட்டும் உள்ளது"" என்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. அதனை நான் தெளிவாக மறுதலிக்கிறேன். 🙂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பிரசித்திபெற்ற Oxford, Cambridge பல்கலைக்கழகங்களில் கூட இந்தக் கலாச்சாரம் உண்டு. குறிப்பாக மாணவர் விடுதிகளில் இது உள்ளது.

சும்மா சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவேண்டாம்😃

எனக்கு கேம்பிரிட்ஜ் விடுதிகளில் இருந்தவர்கள், இப்போதும் இருப்பவர்கள் பலரையும் தெரியும். அத்துடன் அங்கு வசித்தபோது சில விடுதிகளுக்கும் போய் வந்தும் இருக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.