Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச மக்களால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

அத்தோடு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் மக்களின் தேவைகள் அதிகம் உள்ளது. இதற்கு முகம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் நிம்மதியினை குழப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

எனவே நாங்கள் அன்றாட தொழில் செய்து வரும் நிலையில் இவ்வாறு ஹர்த்தாலை போட்டு எங்களின் வயிற்றில் அடிக்காதீர்கள். இது தமிழ் அரசியல்வாதிகளின் இலாபத்திற்காக செய்வதால் எங்கள் இளைஞர்கள் இதில் திசை திருப்புவதற்கு வழிக்குக்கின்றது. இந்த அரசாங்கத்தின் மூலம் தாம் நிம்மதியாக வாழ்வதாகவும், எங்களுக்கு இந்த அரசாங்கம் பூரண ஆதரவாக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பூரண ஹர்த்தால் எதிர்ப்பு போராட்டத்தில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/90946

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக த.ம.வி.பு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் அரசை ஆதரித்து ஹர்த்தாலுக்கு எதிரவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலர் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாலை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் குறித்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் “பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் மக்களின் தேவைகள் அதிகம் உள்ளது. இதற்கு முகம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் நிம்மதியினை குழப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்த அரசாங்கத்தின் மூலம் தாம் நிம்மதியாக வாழ்வதாகவும், எங்களுக்கு இந்த அரசாங்கம் பூரண ஆதரவாக உள்ளதாகவும்” ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (150)

  • கருத்துக்கள உறவுகள்

01-7-3.jpg?189db0&189db0

பலிக்கடா ஆகாத அறிவு கொழுந்துகளை பார்க்க கிடைத்ததில் 
ஆனந்த கண்ணீர் ஆறுபோல ஓடுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

  • 01-11.jpg?189db0&189db0
  • 01-8-2.jpg?189db0&189db0
  • 01-7-3.jpg?189db0&189db0
  • 01-6-1.jpg?189db0&189db0
  • 01-5-3.jpg?189db0&189db0
  • 01-2-3.jpg?189db0&189db0
  • 01-1-4.jpg?189db0&189db0
  • 01-3-2.jpg?189db0&189db0

01-11.jpg?189db0

maxresdefault.jpg

இது ஒரு சரித்திரம் ..

அது ஒரு சகாப்தம் .. ☺️..😊

01-6-1.jpg?189db0 வீீட்டுக்கு போய் என்ன செய்ய போற.? வந்து கெல்மெட்டோட நில்லுயா.! ☺️..😊

எல்லாமே ஏமாற்று  இந்த நிகழ்வில்  ஜ.பி.சி  மைக்கும்  முன்னுக்கு  நீட்டி கொண்டு நிற்கிது. எப்ப்டி எல்லாம்  ஒரு சின்ன மூலைக்குள் நடந்ததை  பெரிதா காட்டுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்வாதிகாரியின் அடிமைகள் இதைக்கூட செய்யாவிட்டால், இவர்கள் செய்த  கொலைகளை மறைத்து, தேர்தலில் நிறுத்தி, வெற்றிவாகை அளித்ததன் பலன் என்ன? தனது குறிக்கோளை அடைய, அதை செயற்படுத்த, சிந்திக்க தெரியாத, இனவுணர்வில்லாத புண்ணாக்குகள் கிடைத்த சந்தோசம் எதிரிக்கு. சலுகை கிடைத்த திருப்தி இவர்களுக்கு. தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்தினாற்தானே இப்படிப்பட்டவர்களுக்கு பிழைப்பு. அல்லது வாளோடும், கத்தியோடுமல்லவா நடு ராத்திரியில் சுற்ற வேண்டும். இது பகல் நேரப் பிழைப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குக் கருத்தெழுத வேண்டாம். தேவையற்ற பிரதேசவாதக் கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. பேசாமல் கடந்துபோவதே மேல்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாலை எதிர்க்கின்றோம்,

இது 40 வருடங்களுக்கு முன்பு எங்கன்ட புரட்சிவாதிகளால் சொல்லப்பட்ட கருத்தாச்சே?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

இது 40 வருடங்களுக்கு முன்பு எங்கன்ட புரட்சிவாதிகளால் சொல்லப்பட்ட கருத்தாச்சே?

ஆர் அந்தப் புரட்சியாளர்கள் அண்ணை?
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழிலும் இவர்களுக்கு முண்டு கொடுத்து  வளர்க்க பாடுபடுபவர்கள் இருக்கிறார்கள்

இது குறித்து அவர்களின்  கருத்தறிய ஆவல்???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

யாழிலும் இவர்களுக்கு முண்டு கொடுத்து  வளர்க்க பாடுபடுபவர்கள் இருக்கிறார்கள்

இது குறித்து அவர்களின்  கருத்தறிய ஆவல்???

அண்ணை, என்ன சொல்வார்கள் எண்டு தெரிஞ்சுமா ஆவல்ப்படுகிறீர்கள்? இன்னொருமுறை இங்கே வந்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். சிலவேளை யாழ்ப்பாண மேட்டுக்குடியினருக்கெதிரான சில கருத்துக்களும் முன்வைக்கப்படும். ஆகவே, தயவுசெய்து அவர்களைக் கோபப்படுத்த வேண்டாம். இந்தக் கருத்தை இப்படியே விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இல்லை ரகு

இது திலீபன்  சார்ந்த போராட்டம்

இனி  இங்கே  வேசங்கள் வேண்டாம்

முகங்களை  களைவோம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

இதற்குக் கருத்தெழுத வேண்டாம். தேவையற்ற பிரதேசவாதக் கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. பேசாமல் கடந்துபோவதே மேல்.

7 hours ago, விசுகு said:

யாழிலும் இவர்களுக்கு முண்டு கொடுத்து  வளர்க்க பாடுபடுபவர்கள் இருக்கிறார்கள்

இது குறித்து அவர்களின்  கருத்தறிய ஆவல்???

7 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, என்ன சொல்வார்கள் எண்டு தெரிஞ்சுமா ஆவல்ப்படுகிறீர்கள்? இன்னொருமுறை இங்கே வந்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். சிலவேளை யாழ்ப்பாண மேட்டுக்குடியினருக்கெதிரான சில கருத்துக்களும் முன்வைக்கப்படும். ஆகவே, தயவுசெய்து அவர்களைக் கோபப்படுத்த வேண்டாம். இந்தக் கருத்தை இப்படியே விடுங்கோ.

திலிபனின் உண்ணாவிரத்தை கையில் எடுத்து இன்று மக்களை குழப்பியது யார் ? அப்படியானால் அன்னை பூபதிக்கும் அஞ்சலிகள்  போராட்டத்தில் பங்குகொண்ட இறந்து போன அத்தனை பேருக்கும் அஞ்சலிகள் நடத்த நாட் கள் கேட்பார்கள் போராளிகள் இறந்து போனாலும் மக்கள் மனதில் வாழ்கிரார்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் போராட்டத்தை வைத்து அரசியல் குளிர்காய யார் நினைக்கிறார்கள் ?? இந்த கர்த்தாலுக்கு அழைப்பு யார் விடுத்தது ? மக்களா இல்லையே  ஆனாலும் மக்கள் தெளிவாக உள்ளார்கள் வடக்கிலும், சரி கிழக்கிலும் ஒரு ஆர்ப்பாட்டம் , ஒரு தோட்டா கிடைத்தாலும் அங்கே கண்களுக்கு தெரியாமலும் , ஊடகங்களுக்கு தெரியாமலும் அழைக்கப்படுவது முன்னாள் போராளிகள்

மட்டக்களப்பில் ஓர் போராளிய சந்திச்சன் அதே கர்த்தால் நாளன்று எனக்கும் தேத்தண்ணி குடிக்க கடை இல்லை அதனால் அவரை சந்திக்க நேர்ந்தது உயிர் பிழச்சி இருக்கிறவனையும் வாழ விடமாட்டார்கள் போல் இருக்கிறது என்று சொன்னார் இங்கு கலந்து கொண்டவர்கள் யார் எவர் என தெரியவில்லை இப்ப செய்திக்காக யார் செய்தாலும் அவர் இவரின்ற ஆட் கள்  என செய்திகளை  போட்டு விட்டு ஓடிவிடுறார்கள் இதில் ஆர்ப்பாட்டம் பண்ணியவர்கள் எதற்க்காக ஆர்ப்பாட்டம் பண்ணினார்களோ தெரியாது .

டக்ளஸ் ஐயா சொல்லிட்டார் போராளிகளை கண்டுக்கொள்ளாத பலர் அடுத்த தேர்தலுக்காக எடுத்திருக்கும் அம்பு திலிபன் நினைவு நாள்

இதை நீங்கள் இருவரும் எப்படி  எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்பது எனக்கு தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு அரசியல்  பேசவரவில்லை சகோ

கர்த்தால்  செய்யுங்கோ என்றும்  கேட்கவில்லை

செய்யக்கூடாது என்று ஆர்ப்பாட்டம்  செய்வது எதற்காக??

நீங்கள் குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகளை விட இது வடிகட்டிய சுயநலம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

திலிபனின் உண்ணாவிரத்தை கையில் எடுத்து இன்று மக்களை குழப்பியது யார் ? அப்படியானால் அன்னை பூபதிக்கும் அஞ்சலிகள்  போராட்டத்தில் பங்குகொண்ட இறந்து போன அத்தனை பேருக்கும் அஞ்சலிகள் நடத்த நாட் கள் கேட்பார்கள் போராளிகள் இறந்து போனாலும் மக்கள் மனதில் வாழ்கிரார்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் போராட்டத்தை வைத்து அரசியல் குளிர்காய யார் நினைக்கிறார்கள் ?? இந்த கர்த்தாலுக்கு அழைப்பு யார் விடுத்தது ? மக்களா இல்லையே  ஆனாலும் மக்கள் தெளிவாக உள்ளார்கள் வடக்கிலும், சரி கிழக்கிலும் ஒரு ஆர்ப்பாட்டம் , ஒரு தோட்டா கிடைத்தாலும் அங்கே கண்களுக்கு தெரியாமலும் , ஊடகங்களுக்கு தெரியாமலும் அழைக்கப்படுவது முன்னாள் போராளிகள்

மட்டக்களப்பில் ஓர் போராளிய சந்திச்சன் அதே கர்த்தால் நாளன்று எனக்கும் தேத்தண்ணி குடிக்க கடை இல்லை அதனால் அவரை சந்திக்க நேர்ந்தது உயிர் பிழச்சி இருக்கிறவனையும் வாழ விடமாட்டார்கள் போல் இருக்கிறது என்று சொன்னார் இங்கு கலந்து கொண்டவர்கள் யார் எவர் என தெரியவில்லை இப்ப செய்திக்காக யார் செய்தாலும் அவர் இவரின்ற ஆட் கள்  என செய்திகளை  போட்டு விட்டு ஓடிவிடுறார்கள் இதில் ஆர்ப்பாட்டம் பண்ணியவர்கள் எதற்க்காக ஆர்ப்பாட்டம் பண்ணினார்களோ தெரியாது .

டக்ளஸ் ஐயா சொல்லிட்டார் போராளிகளை கண்டுக்கொள்ளாத பலர் அடுத்த தேர்தலுக்காக எடுத்திருக்கும் அம்பு திலிபன் நினைவு நாள்

இதை நீங்கள் இருவரும் எப்படி  எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள் என்பது எனக்கு தெரியாது 

தனி,

திலீபனுக்கும் அன்னை பூபதிக்கும் இருக்கும் இடம் ஏனையவர்களில் இருந்து சற்று மேலானது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஹர்த்தால் ஏன் நடக்கிறது?

நினைவு தினம் அனுஸ்டிப்பதை தடுத்த போது, அந்த தடையை எதிர்த்து நடக்கிறது.

அப்போ நினைவுதினம் அனுஸ்டிக்க விரும்புபவர்கள் என்னதான் செய்யமுடியும்?

யாரும் யாரையும் வலுகட்டயாமாக ஹர்தால் அனுஸ்டிக்குமாறு வற்புறுத்தவில்லையே?

ஹர்தால் என அறிவித்தார்கள் மக்கள் தன்னெழுச்சியாக அனுசரித்தார்கள்.

முன்னால் போராளிகள், பயப்படுபவர்கள் தாராளமாக இயல்பு படி இருக்கலாம்தானே?

கொரோனா என மாசக்கணக்கில் பூட்டிய போது பாதிக்கபடதா இயல்பு வாழ்கை இந்த ஒரு நாளில் பாதித்ததா?

இந்த ஆர்பாட்டத்தின் பின்னால் இருப்பது வெறும் கட்சி அரசியல் மட்டுமே. ஆனாலும் மிக லாவகமாக அந்த கட்சியின் பெரிய தலைகள் கூட வராமல் தவிர்த்து விட்டார்கள்😂

ஏனென்றால் திலீபனின் நினைவேந்தலை எதிர்ப்பது எவ்வளவு கீழ்தரமாக எம்மகளால் பார்க்கப்படும் என்பது அவர்களுக்கும் தெரியும்.

ஹர்தால் கடையை பூட்டு என மிரட்ட இப்போ புலி இல்லை ஆனால் யாழ்பாணம் முதல் மட்டகளப்பு வரை அத்தனை தமிழர் நகரமும் முடங்கியதா இல்லையா?

இதுதான் எமது மக்கள் மனதில் திலீபனுக்கும் அன்னை பூபதிக்கும் இருக்கும் இடம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நினைவ தினம் அனுஷ்ட்டிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு எதிராய் ஹர்த்தால் அனுஷ்ட்டித்தார்கள்...உண்மையிலேயே அவர்களுக்கு திலீபன் மேல் அக்கறை இருந்தால் கோட் உத்தரவு போட்டவுடனேயே அதற்கு எதிராய் ஆர்ப்பாட்டம்,ஹர்த்தால் செய்திருக்கலாம் ....ஏன் செய்யேல்ல?
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிள்ளையானுக்கு ,இதற்கும் தொடர்பு இருக்காது 
 
9 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, என்ன சொல்வார்கள் எண்டு தெரிஞ்சுமா ஆவல்ப்படுகிறீர்கள்? இன்னொருமுறை இங்கே வந்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். சிலவேளை யாழ்ப்பாண மேட்டுக்குடியினருக்கெதிரான சில கருத்துக்களும் முன்வைக்கப்படும். ஆகவே, தயவுசெய்து அவர்களைக் கோபப்படுத்த வேண்டாம். இந்தக் கருத்தை இப்படியே விடுங்கோ.

யார் அந்த யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் நீங்களோ? 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் வேண்டாம் ஹர்த்தாலை அனுஸ்டிக்க வேண்டாம் என்று தில்லாக அறிக்கைவிட எந்த பிள்ளையானுக்கும் துணிவு இல்லை, நாய்களை விட்டு குலைக்கவிடும் பழக்கம் இன்னும் விட்டுப்போகவில்லை.🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நினைவ தினம் அனுஷ்ட்டிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு எதிராய் ஹர்த்தால் அனுஷ்ட்டித்தார்கள்...உண்மையிலேயே அவர்களுக்கு திலீபன் மேல் அக்கறை இருந்தால் கோட் உத்தரவு போட்டவுடனேயே அதற்கு எதிராய் ஆர்ப்பாட்டம்,ஹர்த்தால் செய்திருக்கலாம் ....ஏன் செய்யேல்ல?
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிள்ளையானுக்கு ,இதற்கும் தொடர்பு இருக்காது 
 
1. திலீபனின் நினைவு நாளன்று ஹர்தால் செய்வதா? அல்லது கோர்ட் தீர்ப்பு வந்த ஏதோ ஒரு நாளில் செய்வதா பொருத்தமானது? நீங்கள் அனுஸ்டிக்கவிடாவிட்டால் அதே நாளில் நாம் ஹர்தால் செய்து அனுஸ்டிப்போம் என்ற செய்தி இதில் உள்ளது.

2. அவர்களின் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கலந்து கொண்டதாய் செய்தி சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

1. திலீபனின் நினைவு நாளன்று ஹர்தால் செய்வதா? அல்லது கோர்ட் தீர்ப்பு வந்த ஏதோ ஒரு நாளில் செய்வதா பொருத்தமானது? நீங்கள் அனுஸ்டிக்கவிடாவிட்டால் அதே நாளில் நாம் ஹர்தால் செய்து அனுஸ்டிப்போம் என்ற செய்தி இதில் உள்ளது.

2. அவர்களின் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கலந்து கொண்டதாய் செய்தி சொல்கிறது. 

திலீபனின் நினைவு நாளில் அவரது நினைவாக உண்ணா விரதம் இருந்தது சரியான செயல். அதில் பிழை இல்லை ...ஆனால் அதிலும் காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தான் சிலர் போயிருப்பார்கள்...காணாமல் போனோருக்காய் பெற்றோர்கள்,உறவுகள் ஆர்ப்பாட்டம் செய்யினம்...இதை போல ஏதாவது ஒரு தேவைக்காய் எல்லாக் கடசிகளும் சேர்ந்து ஹர்த்தால் ,ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் கூட ஒரு பிரயோசனமாய் இருந்திருக்கும்.நினைவ   தினம் எல்லாம் முடிந்த பிறகு இந்த ஹர்த்தால் என்பது தேவையற்றது

பிள்ளையான் இந்த ஹர்த்தாலை குழப்ப நினைத்தால் வாய் மூல அறிக்கை ஒன்றும் விட தேவையில்லை ...அவருடைய ஆட்களை தூண்டி விட்டு இருந்தாலே மட்டுவில் உள்ள கடைகள் எல்லாம் திறந்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மகிந்த செல்லப் பிள்ளைகளாக உலா வரனும் என்றால்.. இப்படி சொந்த இனத்துக்கு எதிராக சிங்களம் மனங்குளிர ஏதாவது செய்தால் தான் உண்டு.

நக்கிப் பிழைக்கத் தெரிந்த கூட்டம்..!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

பிள்ளையான் இந்த ஹர்த்தாலை குழப்ப நினைத்தால் வாய் மூல அறிக்கை ஒன்றும் விட தேவையில்லை ...அவருடைய ஆட்களை தூண்டி விட்டு இருந்தாலே மட்டுவில் உள்ள கடைகள் எல்லாம் திறந்திருக்கும் 

இதில் ஒரு லொஜிக் இருக்கிறது. வாழைச்சேனை மட்டத்தில் ஒரு சின்ன பகவதி இதை நடத்தியும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் அடியாளோட தான் இருக்கினம்.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யார் அந்த யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் நீங்களோ? 

எனக்குத் தெரியாது ரதி. சொல்பவர்களைத்தான் கேட்கவேண்டும். சிலவேளை அவர்கள் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி என்று அழைப்பது பொதுவாக எல்லா யாழ்ப்பாணத்தவரையும்தான் என்றும் தோன்றுகிறது. ஏன், அது உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். உங்களின் பூர்வீகமும் அதுதானே? 

3 hours ago, ரதி said:

ஆனால் பிள்ளையானுக்கு ,இதற்கும் தொடர்பு இருக்காது 

ஆனால், ஆர்ப்பாட்டத்தில் முன்னால் நின்று கலந்துகொண்டவர் அவரது கட்சியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் என்று சொல்லப்படுகிறதே? சிலவேளை பிள்ளையானுக்குத் தெரியாமல் இவர் அரசியல் செய்கிறாரோ? 

Edited by ரஞ்சித்
பந்தி சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

டக்ளஸ் ஐயா சொல்லிட்டார் போராளிகளை கண்டுக்கொள்ளாத பலர் அடுத்த தேர்தலுக்காக எடுத்திருக்கும் அம்பு திலிபன் நினைவு நாள்

இதை நீங்கள் நம்பி ஏற்றுக்கொள்கிறீர்களா? 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

திலிபனின் உண்ணாவிரத்தை கையில் எடுத்து இன்று மக்களை குழப்பியது யார் ?

இதில் என்ன சந்தேகம்? திலீபன் ஒரு பயங்கரவாதி, ஆகவே அவரது நினைவுநாளை அனுஷ்ட்டிப்பது பயங்கரவாதிகளை ஆதரிப்பது போன்றது என்று சொல்லி, நினைவுநாளை நடத்த விடாமல் தடுத்த சிங்களப் பேரினவாத அரசுதான் இதைக் கையில் எடுத்தது. இதற்கெதிராக மக்கள் போராடுவது தவறென்று சொல்கிறீர்களா? 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் ஓர் போராளிய சந்திச்சன் அதே கர்த்தால் நாளன்று எனக்கும் தேத்தண்ணி குடிக்க கடை இல்லை அதனால் அவரை சந்திக்க நேர்ந்தது உயிர் பிழச்சி இருக்கிறவனையும் வாழ விடமாட்டார்கள் போல் இருக்கிறது என்று சொன்னார்

ஒரு போராளியை மேற்கோள் காட்டி உங்கள் கருத்தினை முன்வைக்கிறீர்கள்? ஏன், உங்கள் கருத்திற்கு "போராளி" என்பவர் மூலம் வலுச்சேர்க்கவா? மக்கள் போராடவே கூடாதெனும் மனோநிலையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். அதுசரி, ஹர்த்தால் அனுஷ்ட்டிப்பது எப்படி அவரது வாழ்க்கையினைப் பாதிக்கும் என்று அவர் நினைக்கிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

தேவையற்ற பிரதேசவாதக் கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது.

பிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும்,  சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை  பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள்?  தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி  மக்களை இனபேதம் இன்றி  சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா? அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால்,  அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.