Jump to content

வெண்டிக்காய் குழம்பை இனி இப்படி செய்து பாருங்கள்.சுவையும் வாசனையும் அற்புதமாக இருக்கும்.


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்குள்ள கருவாடு போட்டு சமைத்தால் இன்னும்  ருசிக்கும் ( கீரி / சூடை ) எனக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லாத்தான் இருக்கு பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி.அது சரி உங்களுக்கு வென்டிக்காய் சம்பல் தெரியுமோ.தெரிந்தால் அதையும் ஒருக்கா போடுங்கோ.இது சுவைப்பிரியன்.இல்லை நீங்கள் குழம்பாமல் இருக்க😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்ணெயில் வெண்டிக்காயை பொரித்து பிறகு குழம்பு வைப்பதும் நன்றாக உள்ளது.👌 

நாங்கள் வெண்டிக்காய் பிசுபிசுப்பு போக துண்டுகளாக நறுக்கிய பின் வெயிலில் சிறிது நேரம் காய வைத்து பிறகு ஆரம்பிப்பம் ..👍

பகிர்விற்கு நன்றி..💐
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக வந்திருக்கிறது பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்குள்ள கருவாடு போட்டு சமைத்தால் இன்னும்  ருசிக்கும் ( கீரி / சூடை ) எனக்கு 

இவையளுக்கு மரக்கறி எண்டாலும் கருவாட்டு வாசம் கட்டாயம் வேணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு மிகவும் விருப்பமான கறியில் இதுவும் அடக்கம். நன்றி (இ)ஞ்சி 😀

Posted
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்குள்ள கருவாடு போட்டு சமைத்தால் இன்னும்  ருசிக்கும் ( கீரி / சூடை ) எனக்கு 

தகவலுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா . கண்டிப்பாய் ஒருநாள் செய்து பார்க்கிறேன்

5 hours ago, suvy said:

நல்லாத்தான் இருக்கு பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!   😁

நன்றி suvy.

3 hours ago, சுவைப்பிரியன் said:

பகிர்வுக்கு நன்றி.அது சரி உங்களுக்கு வென்டிக்காய் சம்பல் தெரியுமோ.தெரிந்தால் அதையும் ஒருக்கா போடுங்கோ.இது சுவைப்பிரியன்.இல்லை நீங்கள் குழம்பாமல் இருக்க😁

Hi சுவைப்பிரியன்

பெயரை மாற்றியதற்கு மன்னித்து விடுங்கள். கண்டிப்பாய் வெண்டிக்காய் சம்பல் ஒரு நாள் பதிவிடுகின்றேன். கருத்து பகிர்வுக்கு நன்றி. இந்த முறை பெயரில குழப்பம் இல்லை....

Posted
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எண்ணெயில் வெண்டிக்காயை பொரித்து பிறகு குழம்பு வைப்பதும் நன்றாக உள்ளது.👌 

நாங்கள் வெண்டிக்காய் பிசுபிசுப்பு போக துண்டுகளாக நறுக்கிய பின் வெயிலில் சிறிது நேரம் காய வைத்து பிறகு ஆரம்பிப்பம் ..👍

பகிர்விற்கு நன்றி..💐
 

இது ஒரு புதிய தகவல்... கற்றுக் கொடுத்ததற்கு நன்றி...இந்த முறையில் ஒருமுறை செய்து பார்க்கிறேன்

3 hours ago, நிலாமதி said:

நன்றாக வந்திருக்கிறது பாராட்டுக்கள்

நன்றி அக்கா

2 hours ago, குமாரசாமி said:

இவையளுக்கு மரக்கறி எண்டாலும் கருவாட்டு வாசம் கட்டாயம் வேணும்.:cool:

உண்மைதான்... நவராத்திரி தொடங்க போகுது. அதனால்தான் மரக்கறி சமையலை பதிவிட தொடங்கியிருக்கிறேன்.நன்றி குமாரசாமி ..

55 minutes ago, Kapithan said:

எனக்கு மிகவும் விருப்பமான கறியில் இதுவும் அடக்கம். நன்றி (இ)ஞ்சி 😀

நன்றி Kapithan..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, சுவைப்பிரியன் said:

பகிர்வுக்கு நன்றி.அது சரி உங்களுக்கு வென்டிக்காய் சம்பல் தெரியுமோ.தெரிந்தால் அதையும் ஒருக்கா போடுங்கோ.இது சுவைப்பிரியன்.இல்லை நீங்கள் குழம்பாமல் இருக்க😁

உங்களின் கவனயீர்ப்பு போராட்டம் வெற்றியளித்திருக்கிறது ஈழப்பிரியன்.....இனி அவ உங்களின் பெயரை ஜென்மத்திலும் மறக்க மாட்டா .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, குமாரசாமி said:

இவையளுக்கு மரக்கறி எண்டாலும் கருவாட்டு வாசம் கட்டாயம் வேணும்.:cool:

மீனே பாடும் எங்க ஊரில் அப்ப கறிக்க கருவாடு பாயாதா மிஸ்டர் குமார சாமியார் 

 

16 hours ago, nige said:

தகவலுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா . கண்டிப்பாய் ஒருநாள் செய்து பார்க்கிறேன்

செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/10/2020 at 19:22, தனிக்காட்டு ராஜா said:

இதுக்குள்ள கருவாடு போட்டு சமைத்தால் இன்னும்  ருசிக்கும் ( கீரி / சூடை ) எனக்கு 

🍆 கத்தரிக்காய் கறிக்குள் கருவாடு போட்டு சமைப்பார்கள்.

ஆனால்.. வெண்டிக்காயுக்குள் கருவாடு போட்டு சமைப்பதை, இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, தமிழ் சிறி said:

🍆 கத்தரிக்காய் கறிக்குள் கருவாடு போட்டு சமைப்பார்கள்.

ஆனால்.. வெண்டிக்காயுக்குள் கருவாடு போட்டு சமைப்பதை, இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

ஊருக்கு ஊர் வித்தியாசம். சிலர் மாசிக் கருவாடு போடுவார்கள்.

எனக்கு பால் கறி பிடிக்கும்.

22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாங்கள் வெண்டிக்காய் பிசுபிசுப்பு போக துண்டுகளாக நறுக்கிய பின் வெயிலில் சிறிது நேரம் காய வைத்து பிறகு ஆரம்பிப்பம் ..👍
 

மழை காலத்தில்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பதான் வெண்டி நட்டிருக்கு, காய்த்தவுடன் தான் செய்து பார்க்கலாம்😁

 நன்றி பகிர்வுக்கு - பார்க்க நல்லாயிருக்கு👍

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, தமிழ் சிறி said:

🍆 கத்தரிக்காய் கறிக்குள் கருவாடு போட்டு சமைப்பார்கள்.

ஆனால்.. வெண்டிக்காயுக்குள் கருவாடு போட்டு சமைப்பதை, இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

எங்க வீட்டில் கீரி கருவாடு போட்டுத்தான் குழம்பு சிறியர் அருமையாக இருக்கும் 

Posted
On 4/10/2020 at 02:48, suvy said:

உங்களின் கவனயீர்ப்பு போராட்டம் வெற்றியளித்திருக்கிறது ஈழப்பிரியன்.....இனி அவ உங்களின் பெயரை ஜென்மத்திலும் மறக்க மாட்டா .....!  😂

இப்ப நீங்க குழம்பீற்றிங்க போல இருக்கு...இது சுவைப்பிரியன்...ஈழப்பிரியன் இல்லை 😀😀😀

15 hours ago, உடையார் said:

இப்பதான் வெண்டி நட்டிருக்கு, காய்த்தவுடன் தான் செய்து பார்க்கலாம்😁

 நன்றி பகிர்வுக்கு - பார்க்க நல்லாயிருக்கு👍

 

நாங்கள் மரக்கறி செடிகளை எல்லாம் பிடுங்கி கட்டுறம். நீங்க நடுறீங்கள்... கருத்து பகிர்வுக்கு நன்றி உடையார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு கறி.
பொரித்து வைத்தால் சுவை தான்.
இதுவே பால்கறி என்றால் விருப்பமாக சாப்பிடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/10/2020 at 20:48, Nathamuni said:

ஊருக்கு ஊர் வித்தியாசம். சிலர் மாசிக் கருவாடு போடுவார்கள்.

எனக்கு பால் கறி பிடிக்கும்.

மழை காலத்தில்? 😁

நான் பச்சையாகவும் சாப்பிடுவேன்.பொரிச்ச வத்தல் குழம்பு இன்னும் நல்லாயிருக்கும். :cool:

Posted
On 5/10/2020 at 15:16, ஈழப்பிரியன் said:

நல்லதொரு கறி.
பொரித்து வைத்தால் சுவை தான்.
இதுவே பால்கறி என்றால் விருப்பமாக சாப்பிடமாட்டார்கள்.

கருத்து பகிர்வுக்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.