Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருப்பதென்றால் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருங்கள்... அல்லது செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று தீர்வை கேளுங்கள்': தமிழர்களிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தினேஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

 சிங்களவரின் அமைப்புகள் புத்திசாலித்தனமானவை, தமிழர்களின் அமைப்புகள், குறைந்த பட்சம் புலத்தில், குறைந்த புத்திசாலித்தனமானவை என்ற என் புரிதலில் இருந்து வந்த கருத்து அது! 

எப்பொழுதும் எமது உடன் பிறப்புக்கள்

பிள்ளைகளின் புத்திசாலித்தனம் மற்றும்  திறமைகள்  எமக்கு  குறைவாகவே  தெரியும்

  • Replies 89
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நான் 79/80களிலேயே மட்டக்களப்பு தமிழர் பிரதேசமாகாது என்பதை உணர்ந்தேன்.
விடுதலைப்போராட்டங்கள் இல்லாதிருந்தால் இன்றைக்கு மட்டக்களப்பும் திருகோணமலையும்  முற்றுமுழுதான சிங்கள பிரதேசமாக இருந்திருக்கும்.

நீங்களெல்லாம் இப்போது இப்படித்தான் தமிழ் பேசியிருப்பீர்கள்.

கொழும்பில் உள்ள தமிழர்கள் தமிழர்களே இல்லை சொன்னவர்களும் உண்டு தமிழ் கதைக்காமல் சிங்களவர்களும் கதைத்தவர்களும் உண்டு இவர்கள் 

இவர்கள் பாகிஸ்த்தான்  நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்து இருக்கலாம் அது போல் தான் பல ஈழத்தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது புலத்தில் குமாரசாமியார் இது ஒரு சிலருக்குபெருமை ஒர் சிலருக்கு தங்கள் மொழியை மறந்த சோகமும் உண்டு.

எந்த மாற்றம் வந்தாலும் தமிழ் மொழி என் தாய் மொழி  மற்ற மொழிகளை நிட்சயமாக கற்றுக்கொள்வேன் மொழிப்பிரச்சினையால் தான் பல பிரச்சினைகள் எழுகிறது இங்கே 

20 hours ago, goshan_che said:

தனி,

நாம் வெளிநாட்டில் இருந்து சண்டிதனம் செய்யகூடாது இதனால் பாதிப்படைவது நீங்கள்தான் என்பதை முற்றாக ஏற்கிறேன்.

ஆனால் இப்படியே குட்ட குட்ட குனிந்தபடியேதான் காலம் முழுதும் இருக்க வேண்டுமா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதாக, ஓரணியில் நின்று, கிடைக்கும் வாய்புகள் அனைத்தையும் அது பரந்தன் ராஜன் மூலமகாவே வந்தாலும், பயன்படுத்தி  ஒரு கெளரவமான தீர்வை இலங்கைக்குள் பெற முயல்வதில் தப்பில்லையே?

இன்னும் நீங்கள் இலங்கை அரசை புரிந்து கொள்ளவில்லையென்பதையே நான் நினைக்கிறேன் . இலங்கை அரசு தமிழர்களை ஓரணியில் திரள விடாது அது இப்ப வரைக்கும் நாம் பார்க்கிறோம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் அதற்க்கான அடித்தளம் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அமைத்துவிட்டது  ஓர் அணியில் திரள்வதென்பது நடக்காத ஒன்று 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

அப்படி 72 வருடத்திற்கு முன்னர் நினைத்திருந்தால், பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்காது.

இப்போது அமைந்துள்ள அரசு, தமிழர்களின் வரப்பிரசாதம்.

கொரோன ஓய்வடைந்து, உலகம் வழமைக்கு திரும்பும் போது, உணரப்படும். 

72 வருடங்களுக்கு முன்னர் நடந்த்து வேறு தற்போது நடப்பது வேறு  சுதந்திரம் கிடைத்தும் அரசுக்களால் மக்கள் அடிமைகள்தான் அ ரசியல் வாதிகள் மட்டும் அச்சுதந்திரத்தை அனனுபவிக்கிறார்கள் கருத்து சுதந்திரம் இல்லை பல பத்திரிகையாளர்கள் காணாமல் போனதும் , சுட்டுக்கொல்லப்பட்டதும் சான்றுகள் இருக்கின்றன.

கொரோனோ ஒழிந்தாலும் நம்ம பிரச்சினைகள் தீர இன்னும் ஆண்டுகள் எடுக்கும் ஏன் யுகங்கள் கூட எடுக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வணக்கம் அண்ணா,

நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை.

ஆனால் நாம் இங்கே இருந்து செய்யும் ஊருக்கான அரசியல் அவர்களுக்கான பிரச்சனை பற்றியது.

நமக்கு இதில் இருக்கும் அக்கறையும், உணர்வுபூர்வ முதலீடும் (emotional investment) மறுக்க முடியாதது. 

எமது வதிவிடங்களில் எம்மை 100% பாதிக்கும், கல்வி சீர்திருத்தம், வரி, இலவச மருத்துவம், இன்னும் பல விடயங்களை இங்கும் வேறு தளங்களிலும் இலகுவாக கடந்து செல்லும் நாம், எம்மையோ எம் சந்ததிகளையோ 1% கூட பாதிக்காத ஊர் அரசியலுக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். குத்தி முறிகிறோம். இது எமது தனி நலன்களுக்கு உகந்ததா என்பதற்கப்பால், எமது அக்கறை போற்றபட வேண்டிய விடயமே.

ஆனால் - அவர்களுக்கான அரசியலை - அவர்கள் தீர்மானித்த திசைக்கு எதிர் திசையில் நாம் நடத்த விழைந்தால். இது வெளிநாட்டில் இருக்கும் டயாஸ்போராவின் சதி என்ற கூற்றை நாமே உண்மையாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை புலம் பெயர் சக்திகள் ஒருங்கிணைந்து, ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு கெளரவமான தீர்வு என்பதை நோக்கி நகர்ந்தால் ஊரில் வாழும் மக்கள் அதை வரவேற்பார்கள் என நினைக்கிறேன்.

அதற்கு முன் புலம் பெயர் நெல்லிகாய் மூட்டையை ஒன்றாக வேண்டும். அதை விட ஊரில் மேலே சொன்ன 3 பகுதியையும் இணைப்பது இலகுவாக இருக்கும்😩

பிகு:

நீங்கள் சொன்ன இயாலாமையின் வெளிப்பாடு என்பதை நான் முற்றாக ஏற்கிறேன். 

"நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை."

இதை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் எல்லோரும் பொருளாதார-அரசியல் புலம்பெயரிகள் 
எமது ஆணிவேர் என்பது தாய்நாடுதான் கிளைகளை எங்கு வேண்டுமானாலும் பரப்பி கொள்ளலாம் 
இனம் என்ற மரத்தை தாங்கும் வேரை  உறுதி செய்வது அந்த இனத்தின் ஒவ்வரு கிளைகளின் உடைய கடமை. 

இங்கு நாம் தாயகத்துக்கு சாதகமான ஒரு அரசியலை முன்னெடுக்க வழியிருக்கும் என்றால் 
அது பற்றி பேச வேண்டிய தேவையும் எமை அதை நோக்கி தள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் 
இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் கடமை எமக்கும் இருக்கிறது.

இன அழிப்பு என்பது முள்ளிவாய்க்காலுடன் முடியவில்லை 
பாலஸ்தீன அழிப்பு யாசீர் அரபாத்தின் உடன்படிக்கையுடன் முடியவில்லை 
எவ்வாறு தொடர்கிறது என்பதை பாருங்கள். இதே தமிழருக்கும் இன்னும் ஒரு 10 வருடத்தில் 
தொடரும். இன வன்வம் என்பது அவர்களிடையே ஓங்கி இருக்கும் ஒன்று பெரும்பாலான சிங்கள மக்கள் 
அதுக்கு ஆதரவு என்பதுக்கு கடந்த கால தேர்தல் முடிவுகளே சாடசி. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பில் உள்ள தமிழர்கள் இன்னும் நீங்கள் இலங்கை அரசை புரிந்து கொள்ளவில்லையென்பதையே நான் நினைக்கிறேன் . இலங்கை அரசு தமிழர்களை ஓரணியில் திரள விடாது அது இப்ப வரைக்கும் நாம் பார்க்கிறோம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் அதற்க்கான அடித்தளம் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அமைத்துவிட்டது  ஓர் அணியில் திரள்வதென்பது நடக்காத ஒன்று 

எனக்கு புரிகிறது தனி. மிக திட்டமிட்டே இந்த பகுப்புகள் உருவாக்கபட்டு, பேணவும் படுகிறன. அதனால் 3ம் வழியில் போவோருக்கு 1,2 உடன் சேர வாய்பில்லை என்று எழுதினேன். 

ஒன்றிணைய வேண்டும் என்பதை என் நப்பாசை என்று வைத்துக்கொள்வதே சரி.

9 minutes ago, Maruthankerny said:

"நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை."

இதை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் எல்லோரும் பொருளாதார-அரசியல் புலம்பெயரிகள் 
எமது ஆணிவேர் என்பது தாய்நாடுதான் கிளைகளை எங்கு வேண்டுமானாலும் பரப்பி கொள்ளலாம் 
இனம் என்ற மரத்தை தாங்கும் வேரை  உறுதி செய்வது அந்த இனத்தின் ஒவ்வரு கிளைகளின் உடைய கடமை. 

இங்கு நாம் தாயகத்துக்கு சாதகமான ஒரு அரசியலை முன்னெடுக்க வழியிருக்கும் என்றால் 
அது பற்றி பேச வேண்டிய தேவையும் எமை அதை நோக்கி தள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களிடம் 
இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் கடமை எமக்கும் இருக்கிறது.

இன அழிப்பு என்பது முள்ளிவாய்க்காலுடன் முடியவில்லை 
பாலஸ்தீன அழிப்பு யாசீர் அரபாத்தின் உடன்படிக்கையுடன் முடியவில்லை 
எவ்வாறு தொடர்கிறது என்பதை பாருங்கள். இதே தமிழருக்கும் இன்னும் ஒரு 10 வருடத்தில் 
தொடரும். இன வன்வம் என்பது அவர்களிடையே ஓங்கி இருக்கும் ஒன்று பெரும்பாலான சிங்கள மக்கள் 
அதுக்கு ஆதரவு என்பதுக்கு கடந்த கால தேர்தல் முடிவுகளே சாடசி. 

சொன்னது எதிலும் முரண்படவில்லை.

எமது நலனுக்காக இந்த அரசை நீங்கள் வதியும் நாட்டில் ஆதரியுங்கள் என அங்கே இருந்து மக்கள் கேட்டால், அப்படியே செய்யும் நிலையில்தான் நாம் பலர் இருக்கிறோம். 

ஆனால் இதே உணர்வை அடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்து கடத்துவது சவாலாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இயலாத்தனம் எப்படியெல்லாம் குனியும் என்பதனை  இங்கு வரும் கருத்துக்கள்   ஊடாக  காணமுடிகிறது

அண்மையில் ஒரு வீடியோ  பார்த்தேன்

ஒரு பெண் தனது சிநேகிதியிடம் 

அவன்  காதலிக்கச்சொல்லி அடிக்கிறான்  என்பார்

அவனுக்கு உன்  முடிவை  சொல்  என்பார்  நண்பி

அதுக்கு அவன்  உன்னை  காதலிக்கச்சொல்லி என்னை  அடிக்கிறான்  என்பார்  அந்தப்பெண்

அது  போலத்தான் இருக்கு

தாயகத்திலுள்ளவர்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று சொல்லும்  உரிமை  எமக்கில்லை

அதேபோல்

நாங்க  என்ன  செய்யணும்  செய்யாமல்  இருக்கணும்  என்ற உரிமை  தாயகத்திலுள்ளவர்களுக்கு  மட்டுமல்ல

உலகத்திலுள்ள  எவருக்கும் கிடையாது

முடியல்ல விசுகு அண்ணா:shocked: 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் பாகிஸ்த்தான்  நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்து இருக்கலாம் அது போல் தான் பல ஈழத்தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது புலத்தில் குமாரசாமியார் இது ஒரு சிலருக்குபெருமை

உண்மை தான்.

விடுதலைப்போராட்டங்கள் இல்லாதிருந்தால் இன்றைக்கு மட்டக்களப்பும் திருகோணமலையும் முற்றுமுழுதான சிங்கள பிரதேசமாக இருந்திருக்கும்.நீங்களெல்லாம் இப்போது இப்படித்தான் தமிழ் பேசியிருப்பீர்கள் என்று சொல்லிவிட்டு பாக்கிஸ்தானில் இந்திய தமிழர்கள் குடியேறி வாழ்கின்ற விடியோவை கொண்டு வந்து போட்டுள்ளார் 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல் வாதிகள் தம் பிழைப்புக்காக தமிழரை இரண்டாகப் பிரித்து, அதை பேணுவதற்காக அற்ப சலுகைகளை கொடுத்து அணிதிரட்டி வைத்துக்கொண்டு, அதேநேரம் சிங்கள மக்களுக்கு தமிழர் மேல் வெறுப்பையும் அப்பப்ப ஊற்றி, தமிழரையும் சிங்கள மக்களையும் ஒன்று சேராமல் வைத்திருக்கிறது. இதற்கு முடிவு வர வேண்டுமென்றால், சிங்கள மக்களுக்கு உண்மையை விளங்க வைக்கவேண்டும். வெளிப்படையாக செய்ய முடியாது. முகநூல் வழியாக செய்யலாம். அவர்கள் விழிப்படையாமல் பிரச்சனை தீராது. இன்று முன்னாள் நீதியரசருக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காரணம் இருபதாம் சட்ட திருத்தத்திற்கு  பலத்த எதிர்ப்பு உள்ளபடியால், இப்படியான பேச்சுக்கள் மூலம் மக்களை திசை திருப்பி, தங்கள் திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். இப்படியே தனது திட்டங்களை நிறைவேற்றுவான். சிங்களவர் தவறான வரலாறுகளால் வழிநடத்தப்பட்டு, அதுவே உண்மையென பலமாக நம்புகிறார்கள். அதை உடைக்க வேண்டுமென்றால், அவன் பொய்யான தமது  வரலாறுகளை உண்மையென புரட்டி  நிறுவ முதல், நாம் உண்மையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது? சிங்களம் தெரிந்த, தமிழ் உணர்வுள்ளவர்கள் செய்யலாம். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி பெரிதும் துணை செய்யும், மனம் உண்டானால்......  

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இவை அனைத்துமே நொடிப்பொழுதில் கடந்துபோகின்றன. உண்மையாகச் சொன்னால், நான் கிழக்கு மாகாண வாக்காளர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும், சிங்களப் பேரினவாத அரசின் பினாமிகளுக்குச் சார்பாகவும் தேர்தலில் வக்களித்ததை இன்றுவரை விளங்கிக்கொள்ள முடியாமலிருக்கிறேன்

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருந்திருப்பின் அந்த காரணம் இலகுவில் புரிந்திருக்கும்,
புலிகள் ராஜீவின் மீது கைவைத்தது எப்படி வரலாற்று தவறோ அப்படியொரு வரலாற்று தவறு கூத்தமைப்பு தேசிக்காய்கள் 11 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு 9 உறுப்பினர்கள் கொண்ட முஸ்லீம் காங்கிரசை முதலமைச்சர் நாற்காலியில் ஏற்றி அழகு பார்த்தது.  அதற்க்கு நன்றி தெரிவித்து கிழக்கு தமிழ்கிறிஸ்தவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட ஈஸ்டர் குண்டு 

Quote

பேரினவாதத்தினை ஆதரிப்பது எந்தவிதத்தில் தமிழர்களுக்கு நண்மையினைப் பெற்றுத்தரப்போகிறது?

சிங்கள ஆசி பெற்ற முஸ்லீம் அமைச்சரவை அமைச்சர்களுடனான சிங்கள பேரினவாதத்தை கூத்தமைப்பு தேசிக்காய்களை வைத்துக்கொண்டு  எதிர்ப்பது எவ்விதத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மையை தரப்போகிறது ....?  பத்தாண்டுகளாக எதிர்த்ததால் கிடைத்த  பலன்...?  பட்டும் திருந்தவில்லை என்றால் ...?

Quote

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தியாவை இவர்கள் எதிர்க்கவேண்டிய தேவை என்ன? இவர்கள் நியாயப்படுத்தும் உரிமைகள் /  தீர்வுகள களைந்த அபிவிருத்தி அரசியலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இந்தியாவால் ஈழத்தமிழர்ருக்கு  கிடைத்த புதையல் முள்ளிவாய்க்கால் , அதைவிட பெரும் புதையல் அதன் Proxy கூத்தமைப்பு தேசிக்காய்கள், இன்னுமொருமுறை இந்தியாவை நம்பி அம்மணமாவதற்கு ஈழத்தமிழர்கள் தயாரில்லை என்பதே இதன் மூலம் அவர்கள் சொல்லும் செய்தி, உண்மையில் இறுதி யுத்தத்தில் புலிகளதும் அப்பாவி தமிழர்களதும் உயிரை காப்பாற்ற போராடிய சந்திரநேரு இந்தியாவில் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுத்துக்கிடந்த கூத்தமைப்பு தேசிக்காய் தானைத்தலைவர்களை விட ஒரு சிறந்த மனிதன்.

Quote

இவர்கள் தவிர்ந்து வேறு எவருக்கு இந்தியாவின் தலையீடு சங்கடமாக இருக்கிறது? இலங்கையரசுக்குத்தானே

இது மலையேறி ரொம்ப நாள் ,இப்போ இலங்கைக்கு இந்திய பொன் முட்டையிடும் வாத்து சீன பூச்சாண்டியை காட்ட காட்ட வாத்து முட்டை போட்டுக்கின்னே இருக்கும், இந்தியாவாக ஓட நினைத்தாலும் இலங்கை விடாது, ரெண்டு சீன  நீர்மூழ்கிகளை ஹம்பாந்தோட்டை பக்கம் அங்கிட்டும் இங்கிட்டும் ஓட விட்டால் போதும், மூச்சாக்கு முடுக்கின மொண்டிசூரி பையன் போல நடுங்கிக்கொண்டே ஓடிவாருவார் Mr.வாத்து   

இங்கு எழுதிய பலபேர் (நானும் கூட) ஒரே புள்ளியில் ஒன்று சேர்க்கிறோம் அதுதான் நிதர்சனத்தால் ஏற்பட்ட  இயலாமை ,அனைத்துமே  பேஷ் ...பேஷ் நடந்தால் நன்னாயிருக்குமோன்னோ ரகம் தான் ,அப்படியிருக்க  அங்கு இதே நிதர்சனத்துடன் போராடும் மக்களின் நிலைமை எப்படியிருக்கும்,அதாவது  அவனவன் தனது வாழ்வாதாரத்தையே காப்பற்ற போராடும் நிலையில் ...?  எது உடனடி தீர்வை தந்து அவர்களுக்கு தங்களை  அசுவாசப்படுத்த ஓர் குறுகிய இடைவெளி தருகிறதோ அதை அவர்கள் தெரிவு செய்கிறார்கள், இது சரி இது பிழை என்று  சொல்ல நம்மில் பலருக்கு  தகுதியில்லை என்று நான் நினைக்கிறேன்  ஏனென்றால் நம்மில் பலர் அந்த இடத்திலிருக்கவில்லை இருந்திருந்தால் ஒருவேளை அவர்களது தெரிவின் காரண காரியங்கள் புரிந்திருக்கலாம்,ஏன் ஒரு படி மேலே போய் நாமே அவ்வாறான ஒரு முடிவெடுக்க தூண்டவும் பட்டிருக்கலாம்   

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருந்திருப்பின் அந்த காரணம் இலகுவில் புரிந்திருக்கும்,
புலிகள் ராஜீவின் மீது கைவைத்தது எப்படி வரலாற்று தவறோ அப்படியொரு வரலாற்று தவறு கூத்தமைப்பு தேசிக்காய்கள் 11 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு 9 உறுப்பினர்கள் கொண்ட முஸ்லீம் காங்கிரசை முதலமைச்சர் நாற்காலியில் ஏற்றி அழகு பார்த்தது.  அதற்க்கு நன்றி தெரிவித்து கிழக்கு தமிழ்கிறிஸ்தவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட ஈஸ்டர் குண்டு 

சிங்கள ஆசி பெற்ற முஸ்லீம் அமைச்சரவை அமைச்சர்களுடனான சிங்கள பேரினவாதத்தை கூத்தமைப்பு தேசிக்காய்களை வைத்துக்கொண்டு  எதிர்ப்பது எவ்விதத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மையை தரப்போகிறது ....?  பத்தாண்டுகளாக எதிர்த்ததால் கிடைத்த  பலன்...?  பட்டும் திருந்தவில்லை என்றால் ...?

இந்தியாவால் ஈழத்தமிழர்ருக்கு  கிடைத்த புதையல் முள்ளிவாய்க்கால் , அதைவிட பெரும் புதையல் அதன் Proxy கூத்தமைப்பு தேசிக்காய்கள், இன்னுமொருமுறை இந்தியாவை நம்பி அம்மணமாவதற்கு ஈழத்தமிழர்கள் தயாரில்லை என்பதே இதன் மூலம் அவர்கள் சொல்லும் செய்தி, உண்மையில் இறுதி யுத்தத்தில் புலிகளதும் அப்பாவி தமிழர்களதும் உயிரை காப்பாற்ற போராடிய சந்திரநேரு இந்தியாவில் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுத்துக்கிடந்த கூத்தமைப்பு தேசிக்காய் தானைத்தலைவர்களை விட ஒரு சிறந்த மனிதன்.

இது மலையேறி ரொம்ப நாள் ,இப்போ இலங்கைக்கு இந்திய பொன் முட்டையிடும் வாத்து சீன பூச்சாண்டியை காட்ட காட்ட வாத்து முட்டை போட்டுக்கின்னே இருக்கும், இந்தியாவாக ஓட நினைத்தாலும் இலங்கை விடாது, ரெண்டு சீன  நீர்மூழ்கிகளை ஹம்பாந்தோட்டை பக்கம் அங்கிட்டும் இங்கிட்டும் ஓட விட்டால் போதும், மூச்சாக்கு முடுக்கின மொண்டிசூரி பையன் போல நடுங்கிக்கொண்டே ஓடிவாருவார் Mr.வாத்து   

இங்கு எழுதிய பலபேர் (நானும் கூட) ஒரே புள்ளியில் ஒன்று சேர்க்கிறோம் அதுதான் நிதர்சனத்தால் ஏற்பட்ட  இயலாமை ,அனைத்துமே  பேஷ் ...பேஷ் நடந்தால் நன்னாயிருக்குமோன்னோ ரகம் தான் ,அப்படியிருக்க  அங்கு இதே நிதர்சனத்துடன் போராடும் மக்களின் நிலைமை எப்படியிருக்கும்,அதாவது  அவனவன் தனது வாழ்வாதாரத்தையே காப்பற்ற போராடும் நிலையில் ...?  எது உடனடி தீர்வை தந்து அவர்களுக்கு தங்களை  அசுவாசப்படுத்த ஓர் குறுகிய இடைவெளி தருகிறதோ அதை அவர்கள் தெரிவு செய்கிறார்கள், இது சரி இது பிழை என்று  சொல்ல நம்மில் பலருக்கு  தகுதியில்லை என்று நான் நினைக்கிறேன்  ஏனென்றால் நம்மில் பலர் அந்த இடத்திலிருக்கவில்லை இருந்திருந்தால் ஒருவேளை அவர்களது தெரிவின் காரண காரியங்கள் புரிந்திருக்கலாம்,ஏன் ஒரு படி மேலே போய் நாமே அவ்வாறான ஒரு முடிவெடுக்க தூண்டவும் பட்டிருக்கலாம்   

உங்களது  கருத்தோடு முரண்பாடில்லை

புலத்தில்

எனது அனுபவத்தில் ஒன்றை  சொல்லலாம்  என  நினைக்கின்றேன்

நான்  இதுவரை இங்கு  சந்தித்த அல்லது  அழைத்த அனைவரும் (நூற்றுக்கணக்கானவர்கள்)

அங்கிருக்கும்  போது இங்குள்ளவர்களை  பொத்திக்கொண்டிருங்கள் என்றும் புலிகள் தவறு  செய்தார்கள்  என்றும் தான் சொல்கிறார்கள்

ஆனால்  இங்கு  வந்தவுடன் வீட்டில்  தலைவர் படம்  மாவீரர்  மண்டபத்தில் முதலாவது ஆளாக இருக்கிறார்கள். புலிக்கொடி பிடிக்கிறார்கள்.

அப்படியாயின் அவர்களது தாயகத்திலிருந்த முடிவு தற்காலிகமானது  தானே????

தற்காலிகமான  ஒரு  முடிவுக்காக......?????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை கடுப்பேத்தாமல் உச்சி குளிர செய்வதன் மூலமே ஒர் தீர்வை பெற‌லாம். இப்படித்தான் முஸ்லீம்களும் கூறுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நான்  இதுவரை இங்கு  சந்தித்த அல்லது  அழைத்த அனைவரும் (நூற்றுக்கணக்கானவர்கள்)

அங்கிருக்கும்  போது இங்குள்ளவர்களை  பொத்திக்கொண்டிருங்கள் என்றும் புலிகள் தவறு  செய்தார்கள்  என்றும் தான் சொல்கிறார்கள்

ஆனால்  இங்கு  வந்தவுடன் வீட்டில்  தலைவர் படம்  மாவீரர்  மண்டபத்தில் முதலாவது ஆளாக இருக்கிறார்கள். புலிக்கொடி பிடிக்கிறார்கள்.

அப்படியாயின் அவர்களது தாயகத்திலிருந்த முடிவு தற்காலிகமானது  தானே????

தற்காலிகமான  ஒரு  முடிவுக்காக......?????

அவர்களது முடிவு இடம் சார்ந்த முடிவேயன்றி காலம் சார்ந்த தற்காலிகமான முடிவல்ல.

திரும்பவும் அவர்கள் தாயகம் திரும்பினால் அவர்களின் முடிவு பழையபடி மாறிவிடும். 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

அவர்களது முடிவு இடம் சார்ந்த முடிவேயன்றி காலம் சார்ந்த தற்காலிகமான முடிவல்ல.

திரும்பவும் அவர்கள் தாயகம் திரும்பினால் அவர்களின் முடிவு பழையபடி மாறிவிடும். 

நீங்க எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை

ஆட்கள் தான் இடம் மாறுகிறார்களே  தவிர பிரச்சினை  அப்படியே  தானே  உள்ளது??

அப்போ தீர்வு பிரச்சினைக்குத்தானே  தவிர தனிமனிதருக்கல்ல???

இது கூடவா  புரியமறுக்கிறது  உங்களுக்கு????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நீங்க எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை

ஆட்கள் தான் இடம் மாறுகிறார்களே  தவிர பிரச்சினை  அப்படியே  தானே  உள்ளது??

அப்போ தீர்வு பிரச்சினைக்குத்தானே  தவிர தனிமனிதருக்கல்ல???

இது கூடவா  புரியமறுக்கிறது  உங்களுக்கு????

நீங்கள் எழுதிய 

அங்கிருக்கும்  போது இங்குள்ளவர்களை  பொத்திக்கொண்டிருங்கள் என்றும் புலிகள் தவறு  செய்தார்கள்  என்றும் தான் சொல்கிறார்கள்

ஆனால்  இங்கு  வந்தவுடன் வீட்டில்  தலைவர் படம்  மாவீரர்  மண்டபத்தில் முதலாவது ஆளாக இருக்கிறார்கள். புலிக்கொடி பிடிக்கிறார்கள்.

அப்படியாயின் அவர்களது தாயகத்திலிருந்த முடிவு தற்காலிகமானது  தானே????

தற்காலிகமான  ஒரு  முடிவுக்காக......?????

என்ற கருத்தில், “வர்களது தாயகத்திலிருந்த முடிவு தற்காலிகமானது” என்பற்கான எனது பதிலே அது.

உங்களுடைய “அப்போ தீர்வு பிரச்சினைக்குத்தானே  தவிர தனிமனிதருக்கல்ல???” என்ற கருத்துக்கான பதில்,

  1. தீர்வு மக்களுக்கே தேவை,
  2. மக்களுக்கு பிரச்சினை இருப்பதாலேயே தீர்வு தேவை.
  3. மக்கள் பாதிக்கப்படும் போது அந்த மக்கள் மத்தியில் உள்ள தனிமனிதர்களே பாதிக்கப்படுகிறார்கள் - ஆகவே அந்த தனிமனிதர்களுக்கே தீர்வு தேவை.
  4. அந்த தனிமனிதர்கள் பாதிக்கப்படாவிட்டால்,அவர்களுக்கு பிரச்சினை இல்லை.
  5. பிரச்சினை இல்லாவிட்டால் தீர்வும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கற்பகதரு said:

உங்கள் கருத்துக்கள் மிக மிக அழகு.

உங்களிடம் ஒரு சில கேள்விகள்? முடிந்தால்/நேரமிருந்தால் பதிலளியுங்கள். இல்லையேல் வேண்டாம்.
நான் எழுதியதை முதலிருந்து வாசியுங்கள் , நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை என்ற வழக்கமான பாரம்பரிய பதில்கள் என்றால் எதுவுமே வேண்டாம்.

இலங்கை தமிழர்களின் பிரச்சனை தீர என்ன எப்படியான முயற்சிகளை யார் யாரெல்லாம் எடுக்க வேண்டும்?

இலங்கை தமிழர் விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் விலகியிருக்க வேண்டுமா? அதன் பொருள் அருகதை இல்லாதவர்கள் என பொருள் படும்.

புலிகள் இல்லாவிட்டால் சகல உரிமைகளும் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என ஒரு வாக்குறுதி சிங்கள தலைமைகளிடம் இருந்ததாமே உண்மையா?

அல்லது இலங்கை தமிழர்களுக்கு அபிவிருத்தி மட்டுமே போதுமானது என எண்ணுகின்றீர்களா?

இல்லையேல் பல சிங்கள ஊடகங்கள் வாசிப்பது போல் சிறிலங்காவில் இனப்பிரச்சனையும் உரிமைப்பிரச்சனைகளும் இல்லையென முடிவுரையாக  சொல்ல விரும்புகின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை யார் கோபப்படுத்துகிறார்கள்? இவர்கள்தான் தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, சீண்டி நாடு பத்தியெரிந்து அதில் குளிர் காய ஆசைப்படுகிறார்கள். நரமாமிசம் தின்ற நா கடுப்பெடுக்கிறது.  சர்வதேச அழுத்தங்களுக்கு பதில் நீங்கள் வற்புறுத்தினால், நாட்டில் வன்முறை ஏற்படும் ஆகவே வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்று எச்சரிப்பு. அப்படி ஒன்று ஏற்பட்டால் ஐ. நா. பாதுகாப்புப் படையை அனுப்பி நாமே தீர்வை கொடுத்து, சமாதானத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொன்னால், அடக்கி வாசிப்பினம். இதற்க்கு நம் தலைவர்கள் ஐ. நா. சபையை வற்புறுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2020 at 15:14, விசுகு said:

உங்களது  கருத்தோடு முரண்பாடில்லை

புலத்தில்

எனது அனுபவத்தில் ஒன்றை  சொல்லலாம்  என  நினைக்கின்றேன்

நான்  இதுவரை இங்கு  சந்தித்த அல்லது  அழைத்த அனைவரும் (நூற்றுக்கணக்கானவர்கள்)

அங்கிருக்கும்  போது இங்குள்ளவர்களை  பொத்திக்கொண்டிருங்கள் என்றும் புலிகள் தவறு  செய்தார்கள்  என்றும் தான் சொல்கிறார்கள்

ஆனால்  இங்கு  வந்தவுடன் வீட்டில்  தலைவர் படம்  மாவீரர்  மண்டபத்தில் முதலாவது ஆளாக இருக்கிறார்கள். புலிக்கொடி பிடிக்கிறார்கள்.

அப்படியாயின் அவர்களது தாயகத்திலிருந்த முடிவு தற்காலிகமானது  தானே????

தற்காலிகமான  ஒரு  முடிவுக்காக......?????

இதுக்கு ஒன்றை சொல்கிறேன் விசுகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை புரட்ட வெளிக்கிட்டு முடியாமல் திணறுகிறானுகள் அதனால் ஏற்பட்ட பயத்தினால் ஒவ்வொருவனும் உளறுகிறானுகள்.   

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கு ஒன்றை சொல்கிறேன் விசுகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே

அதே...

அப்போ அநீதிக்காக  குரல் கொடுப்பவனை சௌக்கியம் சார்ந்து  சிந்தித்து தடைசெய்யக்கூடாதல்லவா???

அதைத்தான் நானும் சொல்கின்றேன்

அவரவர்  தத்தமதால்  முடிந்தவற்றை செய்யட்டும்

ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்

எமத  தலைமுறை குரல் கொடுப்பது தடைபட்டால்

அல்லது ஒதுக்கப்பட்டால்

இனி எந்த  தலைமுறையும் எந்த அநீதிக்காகவும் குரல் கொடுக்காத  நிலைமையே வளர்ந்த கொள்ளும்.

என்னிடமிருந்தே எனது  மகனுக்கு  அது  கடத்தப்படும் 

இல்லாது  விட்டால்....??????

எனக்கு 100வீதம்  நன்றாக  தெரிகிறது

தாயகம்  எந்த  நேரமும்  கொடூரமான இன  ஒடுக்குமுறைக்கு ஆளாகலாம்

வெளியிலிருந்து தாயக  மக்களுக்கு குரல்கள் கட்டாயம்  வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நீங்கள் முடிவு எடுப்பது அங்குள்ளவர்கள் தொடர்பாக அது அவர்களை பாதித்தால்  கேள்வி கேட்டும் உரிமை அவர்களுக்கு  உண்டு .
மு. வாய்க்கால் நேரத்தில் சிலர் இப்படி போய் ஆர்ப்பாட்டம் செய்தால்  அங்குள்ளவர்களை கடுமையாய் பாதிக்கும் என்று சிலர் சொன்னார்கள் ...அந்த நேரம்  அதன் தீவிரம் புரியவில்லை ... தற்போது புரிகின்றது ... நாங்கள் ஆர்ப்பாட்டத்தை செய்யாது விட்டு இருந்தால் அல்லது இடையில் நிப்பாட்டி இருந்தால் இறந்தவர்கள் தொகை அரைவாசியாய் குறைந்து இருக்கும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் கருத்து புரிகிறது சகோதரி ஆனால் எனக்கு ஒரு வரலாற்று கடமை இருக்கிறது. அதை நான் செய்ய வேண்டும் செய்வேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/10/2020 at 19:00, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கு ஒன்றை சொல்கிறேன் விசுகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே

 கிழக்குவாசிகள் அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தான் கட்சிகள் சரியில்லை என்றுவிட்டு குத்துக்கரணம் அடித்து ஆளும் கட்சிகளுடன் இணைந்து அமைச்சர் பதவிகளும் பெற்று,உயர்பதவிகளும் பெற்று  கிழக்கு மண்ணுக்கு தொண்டாற்றியவர்கள். நல்ல விடயம்.
ஆனால் என்னவொன்று ஆட்சி அதிகாரங்களிலிருந்தும் இதுவரை உங்களவர்கள் எதுவுமே செய்யவில்லை போல் தெரிகின்றது. குத்துக்கரண அரசியல் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 வருடங்களாகின்றது.புத்த பிக்குகளிடமும் முஸ்லிம்களிடமும் இன்றும் அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.உங்கள் அரசியல் வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

தற்போது புரிகின்றது ... நாங்கள் ஆர்ப்பாட்டத்தை செய்யாது விட்டு இருந்தால் அல்லது இடையில் நிப்பாட்டி இருந்தால் இறந்தவர்கள் தொகை அரைவாசியாய் குறைந்து இருக்கும் 
 
உங்களோடு முரண்படவில்லை,

ஆனால் வெஸ்மினிஸ்டர் போராட்டம் போல் ஒரு நிகழ்வை நான் முன்பும் பின்பும் லண்டன் வாழ் தமிழர் மத்தியில் கண்டதில்லை. 

அடடே இவர்களும் வந்துள்ளார்களே என நினைக்கும் படி பலர் வந்தார்கள்.  நேர்முகத் தேர்வை தவறவிட்ட, சோதனையை தள்ளி வைத்த சிலரையும் தெரியும்.

இந்த போராட்டங்கள் எதுவும் சாதிக்கவில்லை என்பது சரியே.

ஆனால் இதை செய்யாமல் விட்டிருந்தால் இழப்பு குறைந்திருக்கும் என எதை வைத்து சொல்கிறீகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

மு. வாய்க்கால் நேரத்தில் சிலர் இப்படி போய் ஆர்ப்பாட்டம் செய்தால்  அங்குள்ளவர்களை கடுமையாய் பாதிக்கும் என்று சிலர் சொன்னார்கள் ...அந்த நேரம்  அதன் தீவிரம் புரியவில்லை ... தற்போது புரிகின்றது ... நாங்கள் ஆர்ப்பாட்டத்தை செய்யாது விட்டு இருந்தால் அல்லது இடையில் நிப்பாட்டி இருந்தால் இறந்தவர்கள் தொகை அரைவாசியாய் குறைந்து இருக்கும் 

விடுதலைப்புலிகளை கண்ணிலையும் காட்டக்கூடாது என சொல்லிக்கொண்டு திரிந்தவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இறுதிக்கட்ட நிதியுதவி கூட செய்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நாங்கள் ஆர்ப்பாட்டத்தை செய்யாது விட்டு இருந்தால் அல்லது இடையில் நிப்பாட்டி இருந்தால் இறந்தவர்கள் தொகை அரைவாசியாய் குறைந்து இருக்கும் 
 
தொண்டு நிறுவனங்களை வலுக்கட்டாயமாக அரசாங்கம் வெளியேற்றியதன் நோக்கமே, அகப்பட்ட அத்தனை மக்களையும் அழித்துவிட்டு,பழியை புலிகள் மேல் போடுவதே. நிறுவனங்கள் வெளியேற மறுத்த போது அரசாங்கம் கூறிய காரணம்: புலிகளின் தாக்குதலில் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்க முடியாது  என பயமுறுத்தி, வற்புறுத்தி அனுப்பினார்கள். மக்கள் எவ்வளவோ கெஞ்சி, மன்றாடியும் அவர்களால் முடிவை மாற்ற முடியவில்லை. சாட்சிகளில்லாமல் இன அழிப்பு செய்து  தப்புவதே அவன் நோக்கம். அதையே இப்பவும் சாதிக்கிறான். புலிகள் தான் மக்களை கொன்றார்கள்,  தாம் மக்களை காப்பாற்றவே போராடினோம்.  புலம்பெயர் செய்த போராட்டங்கள், அவர்களின் உழைப்பே இன்று எதிரி இழைத்த கொடுமைகளை வெளிக்கொணர வைத்தது. அதற்கு அவனை பதில் கூற வற்புறுத்தி நிற்கிறது. அதனாலேயே புலம்பெயர் மேல் அரசாங்கத்துக்கும், அது சார்ந்தோருக்கும் கோவமும், வெறுப்பும். தாயகத்துக்கும் புலம் பெயர்ந்தோருக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி தாம் தப்பிப்பதோடு அவர்களில்  குளிர் காய எத்தனை முயற்சி எடுக்கப்பட்டது, அதில் எத்தனைபேர் விழுந்தார்கள் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம், சிலர் அதை மறைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.