Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைகழக துணை வேந்தர் தாக்கினார்... சுடுவோம் என மிரட்டினார்: மாணவர்கள் போராட்டம், குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள், காவலாளி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன்,

துணைவேந்தர் மாணவன் மீது தாக்குதல் நடாத்தி கழுத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் கழுத்தில் காயத்தையும் காண்பித்ததார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில் பல்கலைகழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் என அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைகழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? காட்டுமிராண்டிகள்போல் மாணவர்களுடன் நடந்து கொண்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

பின்னர், நாளை மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் தவிர்ந்த பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் மூலம் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை  நடாத்துவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.   

https://www.pagetamil.com/149911/

  • Replies 59
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையில் பதற்றம்

1-23-696x392.jpg

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மூன்றாம்  அணி  மாணவர்களுக்கிடையில் இன்று மாலை ஏற்பட்டமோதலின் போது அதை தடுக்க சென்ற துணைவேந்தர் உட்பட்ட குழுவினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் பல்கலையில் பதற்ற நிலை ஏற்பட்டது

இன்று மாலை கலைப்பீட இரண்டாம் மூன்றாம் அணி மாணவர்களுக்கிடையில்  ஏற்பட்ட சிறு மோதலை தடுப்பதற்கு பல்கலை துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர் குழுவினர் சென்றுள்ளனர். அப்போது மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட விரிவுரையாளர் குழுவினருக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் இரண்டாம் அணி மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் அணி மாணவர்கள், தமக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதாவது துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் தம்மை தாக்கனார்கள் என்றும் திட்டமிட்டு தம்மை பழிவாங்குவதாகவும் தெரிவித்தனர். தம்மை தாக்கியவர்களை பணி நீக்கம் செய் வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக நாளை மாலை 3 மணியளவில் விசாரணை நடாத்துவதாக துணைவேந்தர் உறுதியளித்ததன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அவ் இடத்தை விட்டு சென்றனர்

https://www.ilakku.org/யாழ்-பல்கலையில்-பதற்றம்/

நீங்கள் கல்வி கற்க பல்கலைக்கழகம் சென்றீர்களா அல்லது சண்டித்தனம் பண்ணவா என்பதை தீர்மானியுங்கள். எத்தனையோயே பிள்ளைகள் பல்கலைக்கழகம் போக முயடர்ச்சித்தும் கிடைக்காமல் திரும்பவும் முயறசிக்கிறார்கள். நீங்கள் கிடைத்த வாய்ப்பை சண்டித்தனம், பகிடிவதை என்று செலவழிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சினைக்குள்... இவங்கள் வேறை, குறுக்க மறுக்க... ஓடித் திரியுறாங்கள். 😡

தம்பியவை...  அப்பிடி, ஓரமாய் போய்.... விளையாடுங்கோ.... 🙏🏽

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, தமிழ் சிறி said:

இருக்கிற பிரச்சினைக்குள்... இவங்கள் வேறை, குறுக்க மறுக்க... ஓடித் திரியுறாங்கள். 😡

தம்பியவை...  அப்பிடி, ஓரமாய் போய்.... விளையாடுங்கோ.... 🙏🏽

இள இரத்தமெல்லே...😁

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பல்கலைக்கழக துணைவேந்தரின் தகவல் காணொளியில் உள்ளது. அதன்படி இந்த பிரச்னை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மோட்டார்சைக்கிளில் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என்ற சட்டத்தை மீறி ஒருவர் சென்றதால் வந்ததாம். அவை ரெண்டு  பகுதியும் அருத்தரை ஒருத்தர் சுற்றிவளைக்க   நிலைமை மோசமாகபோக பல்கலைக்கழ பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாடுக்குள் கொண்டுவர முடியாமல் துணைவேந்தரை கூப்பிடவே அவரும் அங்கு சென்றுள்ளார். அவராலும் செய்யமுடியாமல் போகவே அவர்கள் மாணவர்களை நிர்பந்திக்க வழிகளை தேடியுள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க, இவர்கள் இதற்கு அடிபடுகின்றார்கள் -விளங்கமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை துணை வேந்தர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலின் போது, துணைவேந்தர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே நேற்று(வியாழக்கிழமை)) இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் மோதலைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, துணைவேந்தர் நிலத்தில் விழுந்துவிட்டார். அப்போது, விரிவுரையாளர் ஒருவர் தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வசந் என்ற மாணவன் நேற்று இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் தன்னை தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமித்து இன்று மாலை 3 மணிக்கு விசாரணை செய்யப்படுமென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழ்-பல்கலை-துணை-வேந்தர்/

5 minutes ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வசந் என்ற மாணவன் நேற்று இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் தன்னை தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல விடியோவில்  நிக்கிறவர்  இப்ப ஆசுபத்திரிலே? .இந்த கொரோன நேரம் இதுவுமா. 

எப்படி ஒரு விவகாரத்தை இன்னும் ஊதி பெருபிப்பதில் எங்களுக்கு நிகர் நாங்களே.அதனால் தான் எங்களுக்கு  ஏற்ற அரசியவாதிகளும் சட்டமும் 

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பொஸ் கொடுத்து இந்த உந்துருளி சீன்ஸ் காட்டலுக்கு முற்று புள்ளி வைக்க வேணும் .. 👍

என்னை கேட்டால் வேறுபாட்டை போக்க இஸ்கூல் புள்ளிங்கோ மாறி யூனிபொர்மும் கட்டாயம் ஆக்கலாம் .. 👌

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு!

October 9, 202000
 

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அதனை கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று (09) காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லாமல் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
 

https://newuthayan.com/யாழ்-பல்கலைக்கழக-விரிவுர/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் போராட்டம்

1-25-696x338.jpg

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. நண்பகல் 12 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நேற்று பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், சமரசப்படுத்த முனைந்த துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீட விரிவுரையாளர்களான எஸ்.ஜீவசுதன், எஸ். ரமணராஜா மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்ல மறுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை இடம்பெறவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் நேற்றைய சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கான சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று துணைவேந்தர் மாணவர்களுக்கு முன்னதாக வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

https://www.ilakku.org/யாழ்-பல்கலை-விரிவுரையாள/

  • கருத்துக்கள உறவுகள்

1. மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது - விதி

2. விதி-மீறல் சம்பந்தமாக 2ம், 3ம் ஆண்டு மாணவரிடையே மோதல் 

3. இடையில் நடுநிலை நியாயம் சொல்ல வேண்டிய துணைவேந்தர், விரிவுரையாளர்களே தாமும் சண்டையில் இறங்கியதா குற்றச்சாட்டு.

வர, வர யாழ் பல்கலைகழகம், யாழ் களம் போல ஆகிவருகிறது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களிற்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் வரை விரிவுரைகள் இல்லை: கலைப்பீட அவை அதிரடி தீர்மானம்!

By admin -

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நேற்று அட்டகாசத்தில் ஈடுபட்ட 3ஆம் வருட மாணவர்கள் இனம்காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்களின் அட்டகாசத்தினால் விரிவுரையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

கலைப்பீட அவை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இன்று ஊடகங்களிற்கு அவர் அறிவித்தார்.

இதன்போது, கலைப்பீட அவை சார்பில் வெளியிடப்பட்ட தீர்மானம் பின்வமாறு-

யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களிற்குள் நேற்று இடம்பெற்ற மோதலை தீர்த்து வைக்க முயன்ற துணைவேந்தர், பீடாதிபதி, விரிவுரையாளர்கள், பல்கலைகழக அதிகாரிகள் ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களினால் அவதூறிற்கும், தாக்குதலிற்கும் ஆளானமையை கலைப்பீட அவை கண்டிப்பதுடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல்கலைகழக நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறது.

கலைப்பீட 2ஆம் 3ஆம் வருட மாணவர்களிடையே நேற்று மாலை இடம்பெற்ற மோதல் தொடர்பில், கலைப்பீட அவை இன்று (9) காலை கூடி மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பில் கலைப்பீட அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கலைப்பீட மூன்றாம்வருட மாணவரொருவரால், இரண்டாம் வருட மாணவரொருவர் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் திறப்பு பலவந்தமாகப் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு சாராருக்கிடையே முறுகல் நிலை தோன்றியது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் வருட மாணவர்களும் மூன்றாம் வருட மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

நிலைமையின் தீவிரத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே மோதல்களைத் தவிர்ப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர் ஆலோசகர்களுடன் துணைவேந்தரும், பீடாதிபதியும் விரிவுரையாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவ ஒழுக்காற்று அதிகாரியிடம் முறையிடச் சென்றிருந்த இரண்டாம் வருட மாணவர்கள் மூன்றாம் வருட மாணவா்களால் தாக்கப்படும் ஆபத்து உணரப்பட்டிருந்தது. அதனைத் தடுப்பதில் துணைவேந்தரும், பீடாதிபதியும், விரிவுரையாளர்களும் அச்சத்தில் காணப்பட்ட இரண்டாம் வருட மாணவர்களை சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றபோது, மூன்றாம் வருட மாணவர்கள் துணைவேந்தரையும் விரிவுரையாளர்களையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அவதூறு செய்தும், பாதுகாப்பாக இரண்டாம் வருட மாணவர்களை வெளியேற்றும் முயற்சிகளைப் பலவந்தமாகத் தடுப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன் ஒரு கட்டத்தில், துணைவேந்தரும் சில விரிவுரையாளர்களும் மூன்றாம் வருட மாணவர்கள் சிலரால் தாக்கப்படக் கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமடைந்தது. இதன் விளைவாக, குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, மோதலில் ஈடுபட்ட மாணவர்களால் உண்மைக்கு மாறான செய்திகள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டன.

சில விரிவுரையாளர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும், சிலர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மாணவர்கள் மீது மேற்கொண்டார்கள் என்றும், மாணவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அவா்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்றும் ஊடகங்களுக்கு மாணவர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதனைக் கலைப்பீட அவை உறுதியாகத் தெரிவிக்கின்றது.

இதனால், மேற்படி மோதலில் உண்மை நிலவரத்தை எடுத்துரைக்க கலைப்பீட அவை தீர்மானம் மேற்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் குறிப்பாக கலைப்பீடத்திற்கும் ஏற்பட்ட களங்கத்தை நீக்குமுகமாகவும், சம்பவங்களைத் தெளிவுபடுத்துமுகமாகவும் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது.

அதேவேளை, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டு, அவா்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முதற்கட்டமாக உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்குத் தடை அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அதுவரை விரிவுரையாளர்கள் விரிவுரைகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் கலைப்பீட அவை ஏகமனதாகத் தீர்மான் மேற்கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.pagetamil.com/150031/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் தேவையில்லாமல் தலையிட்டதன்  விளைவு இந்தளவு கேவலத்தில் போயுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை குழப்பம்: மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி நடவடிக்கை.!

Screenshot-2020-10-09-23-34-04-593-com-a

யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது.

யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்கு காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்ப்பட்டிருந்த கலைப்பீட மாணவர்கள் 22 பேர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு வகுப்புத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய குறித்த அமைதியின்மை குறித்து யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் கூடி மேற்குறித்த தீர்மாகத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பேரவை உறுப்பினர் ஒருவர் அருவி இணையத்திற்கு தெரிவித்துள்ளர்.

விசாரணை நிறைவு பெறும் வரையில் மாணவர்களின் இடைநிறுத்தும் செயற்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பேரவையினால் முன்னாள் பீடாதிபதி ம.நடராஜசுந்தரம் அவர்களைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்களில் கணிசமானவர்கள் கடந்த காலங்களில் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு குழப்பகரமான சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருந்ததாக இன்றைய கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்படதாக தெரிய வருகிறது.

இதேவேளை இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தலைமையிலான சிரேஸ்ட்ட விரிவுரையாளர்கள் நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டதுடன் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/10/09/17743/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

1. மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது - விதி

2. விதி-மீறல் சம்பந்தமாக 2ம், 3ம் ஆண்டு மாணவரிடையே மோதல் 

3. இடையில் நடுநிலை நியாயம் சொல்ல வேண்டிய துணைவேந்தர், விரிவுரையாளர்களே தாமும் சண்டையில் இறங்கியதா குற்றச்சாட்டு.

வர, வர யாழ் பல்கலைகழகம், யாழ் களம் போல ஆகிவருகிறது 🤣

யாழ் (பல்கலைக்)கள(க)ம்........... 🤔

ஆக எழுத்தில மட்டும்தான் வித்தியாசம் எண்டு சொல்லுறீயள்...... ம்ம்ம்ம்🤥

அப்படியெண்டா...

அந்த முரட்டு மாணவர்கள் யார் யாராய் இருக்கும்... 😜

(தேவையில்லாம வாயக் குடுத்து மாட்டியாச்சோ 😀)

  • கருத்துக்கள உறவுகள்

பலகாலமாக திட்டமிட்டு தரப்படுத்தல் செய்த நம் மக்களின் கல்விக்கு நாமே சாவு மணி அடிக்கப்போகிறோம். பல்கலைகழகங்களில் இராணுவத்தை நாமே பாக்கு வெத்திலை வைத்து அழைக்கப்போகிறோமா? அல்லது இழுத்து மூடிப்போட்டு, வரும் சந்ததியை  தென் பகுதிக்கு அலைய வைக்கப்  போகிறோமா?  என்பதை நாளைய நம் தலைவர்களான இன்றைய பல்கலை மாணவர்களே முடிவு செய்யட்டும். 

7 minutes ago, satan said:

பலகாலமாக திட்டமிட்டு தரப்படுத்தல் செய்த நம் மக்களின் கல்விக்கு நாமே சாவு மணி அடிக்கப்போகிறோம். பல்கலைகழகங்களில் இராணுவத்தை நாமே பாக்கு வெத்திலை வைத்து அழைக்கப்போகிறோமா? அல்லது இழுத்து மூடிப்போட்டு, வரும் சந்ததியை  தென் பகுதிக்கு அலைய வைக்கப்  போகிறோமா?  என்பதை நாளைய நம் தலைவர்களான இன்றைய பல்கலை மாணவர்களே முடிவு செய்யட்டும். 

இது தான் எனது முழு ஆதங்கமும். இந்த இருதரப்பும் எங்கள் இளைஜர்கள். தனி நபர்களுக்குள் தகராறுகள் இருக்கலாம். ஆனால் இவர்கள் குழுக்களாக பிரிந்து முழுப்பல்கலைக்கழக சமூகத்தையும் ஸ்தம்பிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். மிகவும் கவலைக்குரிய செயல். 

தெளிவுடன் வருங்கால சமூகத்தை வழிநடத்த தம்மை தயார் பண்ணவேண்டிய சமூகத்தின் ஒருபகுதி இப்படி நடப்பது நியாயப்படுத்தக்கூடியதல்ல. இங்கு வந்துள்ள செய்திகள் உண்மையானால் கல்வியாளர்களை அவமதிப்பது, அவர்களின் வேண்டுதலுக்கு மேலால் நிபந்தனைகள் போடுவது எல்லாம் எங்கள் சிறிய சமூகத்தை மேலும் கீழ் கொண்டுசென்றுவிடும். இப்படியான செயல்பாடுகள் நாங்கள் வாழும் பல்கலைக்கழகங்களில் நடந்தால் பல்கலைக்கழகங்களில் இருந்து நீங்கியேவிடுவார்கள். அதன்பின்னர் வேறு பல்கலைக்கழகம் போவது கஷடம் ஏனென்றால் விண்ணப்பத்தில் எதாவது பல்கலைக்கழகத்தில் இருந்து தடை செய்யப்படீர்களா என்று கேள்வியே உள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்பம்; 22 மாணவர்களுக்குத் தடை விதித்தது பேரவை

jaffna-uni-300x175.jpgயாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்த குறித்த 22 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் நேற்றுக் கூடி மேற்குறித்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளனர்.

vc-jaffna.png

துணைவேந்தர்

விசாரணை நிறைவு பெறும் வரையில் மாணவர்களின் வகுப்புத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகப் பேரவையால் முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் ம.நடராஜசுந்தரத்தைக் கொண்ட தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களில் கணிசமானவர்கள் கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு குழப்பகரமான சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என்று நேற்றைய பேரவைக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/78447

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2020 at 06:28, குமாரசாமி said:

இள இரத்தமெல்லே...😁

நீங்களும் யூனியில இருந்த போல நான் மழைக்கும் அந்த பக்கம் போகல சாமியார்

என்னை பொறுத்த வரைக்கும் இந்த யுனில படிக்கிற பசங்களை கண்டால் கொஞ்சம் கடுப்பு தான் யுனிவசிற்றி   என்றால் கொம்பு முளைச்ச நினைப்பு அவர்களுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தனிப்பட 'கல்லூரிகள்' என்ற கட்டமைப்பே இல்லையா..?

பட்டம்(Degree)/பட்டயம்(Diploma) போன்ற படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் போய்தான் படிக்க வேண்டுமா..? 🤔

உதாரணமாக, தமிழ் நாட்டில் பல்கலைக்கழமென்றால் சில குறிப்பிட்ட நிபுணத்துவம்(Specialized) கொண்ட  மேற்படிப்புகள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்தினுள் இருக்கும். இவற்றில் சேர்ந்து படிக்க முதலில் அந்த துறை சார்ந்தவற்றில் மற்ற சிறு நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக எந்த துறையிலும் பட்டம் படிக்க, பக்கத்து நகரங்களில் கல்லூரிகள் பல (பொறியியல், கலை, மருத்துவம், வேளாண்மை என) இருக்கும்.

இந்தக் கல்லூரிகள், அருகேயுள்ள பெருநகரத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துடன் நிர்வாக ரீதியாக(Affiliation) இணைக்கப்பட்டிருக்கும்.

  • மதுரை காமராசர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • மனோண்மனியம் சுந்தரனார்
  • அண்ணாமலை
  • பெரியார்
  • சென்னை
  • திருவாரூர்
  • **
  • **

இப்படி தோராயமாக 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் உண்டு..!

  • கருத்துக்கள உறவுகள்

வாளோடை அலையப்போறானுகள் பழிவாங்க. பெத்ததுகள் என்ன பாவம் செய்தார்களோ? இந்த தறுதலையளை பெத்து தம்மை உருக்கி வளர்த்தத்துக்கு கொடுத்த சன்மானம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்களும் யூனியில இருந்த போல நான் மழைக்கும் அந்த பக்கம் போகல சாமியார்

என்னை பொறுத்த வரைக்கும் இந்த யுனில படிக்கிற பசங்களை கண்டால் கொஞ்சம் கடுப்பு தான் யுனிவசிற்றி   என்றால் கொம்பு முளைச்ச நினைப்பு அவர்களுக்கு 

நான் பள்ளிக்கூடமே போகேல்லை எண்டுறன்.....நீங்கள் என்னடாவெண்டால் யூனி கீனி எண்டு கொண்டு......🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.